76. கருப்புப் பணத்திற்கு சிகப்புக் கொடி!
கருப்புப் பணம்- எவ்வளவு?
இந்திய பொருளாதாரத்தில் கருப்புப் பணம் விளையாடுவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கணக்கில் காட்டி முறையான வரி செலுத்தாது இருப்பது, சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் சேர்த்தது- இதுதான் கருப்புப்பணம். இந்தியர்களின் கருப்புப்பணம் இங்கும் இருக்கிறது, வெளி நாடுகளிலும் இருக்கிறது. எவ்வளவு என்பது ப்ரம்ம ரகசியம்! வெளி நாட்டில் வைத்துள்ள பணம் மட்டும் 500 பில்லியன் டாலர் வரை இருக்கும் என 2011ல் சுப்ரீம் கோர்ட்டில் அரசினர் தரப்பில் ( CBI)சொன்னார்கள். இது எவ்வளவு தெரியுமா? இன்றைய மதிப்பில் சுமார் 340லட்சம் கோடி ரூபாய்= 34,00,00,00,00,00,000.
[1 billion (or 1000 million) is equivalent to 100 crores. If converted to lakhs, 1 billion would be 10,000 lakhs.
500 billion (or 500000 million) is therefore equal to 50000 crores.]
கருப்புப் பணக் குபேரர்கள்
யார்யாரிடம் இது இருக்கிறது? அரசியல்வாதிகள், டாக்டர்கள், வக்கீல்கள், அக்கவுன்டன்டுகள், பெரிய பாங்கர்கள், தொழிலதிபர்கள், வ்யாபாரிகள், அரசு அதிகார வர்கத்தினர், ரியல் எஸ்டேட் முதலாளிகள் (முதலைகள்), சினிமாகாரர்கள் , பள்ளிகள்,கல்லூரிகள் நடத்துவோர் என சமூகத்தின் மேல்மட்டத்தில் அனேகமாக எல்லா நிலைகளிலும் இது ஊடுருவியிருக்கிறது. அங்கிருந்து கீழேயும் பரவியிருக்கிறது. பல இடங்களிலிருந்து வெளி நாட்டில் பணம் பதுக்கியிருக்கும் நபர்கள் யார் என்பது நமது அரசினருக்குத் தெரிந்தே இருக்கிறது.ஆனால் அதை வெளியிட மறுக்கிறார்கள். 2011ல் HSBCயில் 782 இந்தியர்கள் கணக்கு வைத்திருப்பதாக செய்தி வந்தது. அரசினர் வெளியிடவில்லை. அதையும் மீறி சில பெயர்கள் வெளிவந்தன.
Indian Express. 9 February, 2015
இந்த வருட ஆரம்பத்தில் வெளியான Panama Papers Scandal மூலம் 500 இந்தியர்களின் பெயர்கள் இருப்பது தெரியவந்தது. அமிதாப் பச்சன், ஐஶ்வர்யா ராய், நீரா ராடியா (2ஜி புகழ்), கே.பி.சிங், கார்வாரே குடும்பம், ஹரிஷ் சால்வே ஆகியோரின் பெயர்கள் இதில் இருப்பதாக செய்தி அடிபட்டது.
குறிப்பு: இத்தகைய செய்திகளை முற்றும் நம்புவது சரியல்ல. ஆனால், தெரிந்த பெயர்களை அரசு வெளியிட விரும்பாத நிலையில் , பொதுவாழ்வில் ஈடுபட்ட பலரின் பெயரும் அடிபடுவது சகஜம் தானே!
காங்கிரஸ் அரசினர் இதை என்றுமே லட்சியம் செய்ததில்லை. இந்திரா காந்தி, கருப்புப் பணத்திற்கு ஆதாரமான ஊழலை " இது உலக அளவிலான விவகாரம்" ( Universal Phenomenon) என்று ஒரே போடாகப் போட்டார். எங்கும் நடக்கிறது, இங்கும் நடக்கலாம் என்பதுதானே இதன் பொருள்? ஜனதா அரசு 1978ல் 1000, 5000, 10,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த நிலை.
மதிப்பிழந்த ரூபாய்
இது எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகமே.
இன்று ரூபாயின் மதிப்பு என்ன? 1950ல் இருந்த 100 ரூபாய்க்கு இன்றைய மதிப்பு சுமார் ₹5000. 1970ல் இருந்த 100 ரூபாய்க்கு இன்றைய மதிப்பு ₹ 2500. 1978ல் இருந்த 100 ரூபாய்க்கு இன்றைய மதிப்பு ₹.1250. இப்படி ரூபாயின் மதிப்பு குறைந்தே வந்திருப்பதால் இன்றைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்துவிட்டன. அதனால் மிகவும் சகஜமாக எல்லா இடத்திலும், எல்லாரிடத்திலும் புழங்குகிறது.அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவற்றின் பழக்கம் 33% உயர்ந்தது. காரணம்?
After the official announcement by Prime Minister Modi, the Governor of the Reserve Bank of India, Urjit Patel and Economic Affairs secretary, Shaktikanta Das explained in a press conference that while the supply of notes of all denomination increased by 40% between 2011 and 2016, the ₹500 and ₹1000 banknotes increased by 76% and 109% respectively in this period owing to counterfeit money. This was then used to fund terrorist activities against India. As a result the step of eliminating the notes was taken.[
According to Madan Sabnavis, chief economist, CARE Ratings, the reason for the increase are two. "For one, the banks were mostly dispensing Rs 500 and Rs 1,000 notes due to the logistical issues related to Rs 100. Secondly, high inflation, especially in food items. Due to the higher prices, people were forced to use higher denominations. After all, what do you get for Rs 100?"
புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் ₹.500, 1000 நோட்டின் பங்கு 86%க்கு மேல் எனச் சொல்கிறார்கள்.
இதை முடக்கியதால், சாதாரண, பொது ஜனங்களுக்குத்தான் கஷ்டமாகும். அதுவும் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு அதிகம் கஷ்டம். போலிப் பணம் ( Fake notes) முடங்கிவிடும். ஆனால் எவ்வளவு கறுப்புப் பணம் சிக்கும் அல்லது மதிப்பிழந்து நிற்கும் எனச் சொல்லமுடியாது.
கருப்புப் பணத்தின் அளவே என்ன என்று தெரியாதபோது, எவ்வளவு முடங்கியது என்று எப்படிச் சொல்வது? கள்ளப் பணம் கரன்ஸி நோட்டாகத்தான் இருக்கவேண்டுமா, என்ன? இந்த முயற்சி மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போல ஆகலாம். People who deal in black money are much faster, much smarter than the establishment, which has many points of leakage. PAN கார்டு இல்லாமல் ₹2 லட்சம்வரை தங்க நகைகள் வாங்கலாம் என்பதே ஒரு ஓட்டை. அடுத்து தங்கத்திற்கு தலைவலியோ? அதுவும் சாதாரண நடுத்தர வர்கத்தையே பாதிக்கும். நோய் எங்கோ இருக்கிறது- யார் யாரோ மருந்து சாப்பிடுகிறார்கள்!
கருப்பு- எப்போதும் கருப்பல்ல!
While there are certain criminal activities (such as smuggling, drug peddling, gun running, etc.) that follow this pattern, they collectively account for a minuscule fraction of what is commonly understood as “black money”. The really big bucks come from two other activities—corruption and tax evasion.
In both these cases, “black money” is a recurring income, and the recipients use the funds as all of us do our incomes—either consume it or invest it for future consumption. In either case, the cash does not stay with them for long and moves along an ever-widening ripple of transactions, most of which are perfectly legal.
- Livemint, 14 November, 2016அடிப்படைக் காரணம்: அரசியல்
கருப்புப் பணம் தீமைதான், சுமைதான், நோய்தான். ஆனால் அதன் அடிப்படைக் காரணத்தை நீக்காமல் அதை ஒழிக்க முடியாது. அந்த அடிப்படைக் காரணங்களை எந்த அரசாலும் தொட முடியாது! கருப்புப் பணம் இல்லாமல் தேர்தல் நடக்குமா? எந்த ஆபீசில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலை நடக்கிறது? எத்தனை டாக்டர்களும் வக்கீல்களும் வருமானத்தைச் சரியாகக் காட்டி வரி செலுத்துகிறார்கள்? இதைப் பாருங்கள்:
- The two major national parties (an apparent reference to Indian National Congress, BJP) claim to have incomes of merely ₹5 billion (US$74 million) and ₹2 billion (US$30 million). But this isn't "even a fraction" of their expenses. These parties spend between ₹100 billion (US$1.5 billion) and ₹150 billion (US$2.2 billion) annually on election expenses alone.
[ From: M.C. Joshi Committee Report, January, 2012]
காங்கிரஸ் வளர்த்த கருப்புப் பணம்
காங்கிரஸ் வளர்த்த கருப்புப் பணம்
கருப்புப் பணத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம்,
சுதந்திரத்திற்குப்பின் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய சோஷலிச
ராஜ்யம் என்னும் கூத்தாகும். பர்மிட், லைஸென்ஸ், கன்ட்ரோல், முறைகளால்
இரண்டு தலைமுறை இந்தியர்கள் லஞ்சத்திலும், கருப்புப் பணத்திலும் நன்கு
பயிற்சி பெற்றனர். இன்று இது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிவிட்டது. ஊழல்
சகஜமாகிவிட்டது. இதேசமயம் அமலிலிருந்த அந்நியச் செலாவணி
கட்டுப்பாடு, இந்தியப் பணத்தை எப்படி வெளி நாடுகளில் பதுக்குவது,
அதை எப்படி மீண்டும் கொண்டுவருவது என்பதையும் கற்றுக்கொடுத்தது.
இத்துடன் இங்கு நிலவிய ராட்சஸ வரிவிதிப்பு முறையும் கருப்புப் பணத்தை
ஊக்குவித்தது. கருப்புப் பணத்தின் மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் '
அரை நூற்றாண்டிற்கும் மேல் நிலவிய இந்த நிலையை
அவ்வளவு சுலபமாக சரிசெய்ய முடியாது..
ஊருக்கு இளைத்தவர்கள்
Eventually, the bulk of the cash finds its way into the informal sector, where it provides a part of the essential liquidity for virtually all transactions within the informal sector and between the informal and formal sectors.
Considering the fact that the informal sector in India accounts for about 45% of gross domestic product (GDP) and nearly 80% of employment, disruption of this liquidity can be very costly indeed, both in terms of growth and equity.
[ From Livemint ]\
அரசின் முயற்சி வெற்றிபெற வேண்டும் எனவே விரும்புகிறோம். இதுவரை
எந்த முயற்சியும் அதிகப் பலனைத் தரவில்லை.
From: Slideshare
குறிப்பு:
1.இன்று எல்லா எதிர்கட்சிகளும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்கின்றன.
இதுவே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போன்றதல்லவா ?
2. Tax avoidance or tax evasion is not necessarily a moral issue,. It is an issue of good
citizenship, if the rates are rational or reasonable, and not arbitrary, especially in a true
democracy..
Tax rates are not subject to any holy writ or even rational standard. 93% tax rate as it
prevailed in the time of Indira Gandhi is not only savage, it is devilish; no one would be
rational if he did not beat it.
Predatory tax rates are counter-productive and create intelligent tax evaders and black money
holders, as even England is experiencing at present.
எந்த முயற்சியும் அதிகப் பலனைத் தரவில்லை.
From: Slideshare
குறிப்பு:
1.இன்று எல்லா எதிர்கட்சிகளும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்கின்றன.
இதுவே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போன்றதல்லவா ?
2. Tax avoidance or tax evasion is not necessarily a moral issue,. It is an issue of good
citizenship, if the rates are rational or reasonable, and not arbitrary, especially in a true
democracy..
Tax rates are not subject to any holy writ or even rational standard. 93% tax rate as it
prevailed in the time of Indira Gandhi is not only savage, it is devilish; no one would be
rational if he did not beat it.
Predatory tax rates are counter-productive and create intelligent tax evaders and black money
holders, as even England is experiencing at present.