Sunday, 25 December 2016

78. தலைமையிடத்தில் தனிமை

78. தலைமையிடத்தில் தனிமை


johnstahlwert.com


தமிழ் நாட்டின் முதலமைச்சர்  ஜயலலிதாவின் மரணம்  மக்களை உலுக்கிவிட்டது. பரிதாபகரமான அவர் மரணம் அவருடைய நீண்டகால விமர்சகர்களையும்  சிந்திக்க வைத்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து, 6 முறை முதலமைச்சராகி, லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்டிருந்தும்  இறுதியில் அனாதைபோல மரணமடைந்தார். கடைசி 75 நாட்களில்  ஆஸ்பத்திரியில் என்ன  நடந்தது என்பது தெரியவில்லை. யாரும் அவரைப்  பார்க்கவில்லை. எதோ நாடகம் போல எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.  அவருடைய நோய், அவருக்கு நடந்த சிகிச்சை முதலிய எதைப்பற்றியும் நம்பகமான தகவல் வெளிவரவில்லை. மருத்துவமனை சொன்னதை யாரும் நம்பவில்லை! ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்றே மக்கள் நம்புகிறார்கள். பலவித வதந்திகள்  தீவிரமாகப் பரவி வருகின்றன.

ஏன் தனிமை?

பொதுவாகவே தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும்  பலர் சூழ்ந்தே காணப்படுகிறார்கள். ஆனால் உண்மையில்- மனத்தளவில்-  தனிமையில் தான் இருக்கிறார்கள். பதவி உயர உயர, சுற்றியிருப்பவர்கள் மீது நம்பிக்கை குறைகிறது. அவர்கள் ஆதாயம் தேடியே வருகிறார்கள் என்ற எண்ணம் வலுக்கிறது.  ஆனால் யாரைத் துணையாகக் கொள்வது என்பதை தலைவர் தானே  முடிவுசெய்கிறார்?

www.slideshare.net


Management  துறையில்  டீமாகச் சேர்ந்து செயல்படவேண்டும் என்கிறார்கள். ஆனால் எந்த டீமிற்கும் ஜீவனாக இருப்பது ஓரிருவர்தான். மற்றவர்கள் குளிர்காய்பவர்களே. பெரிய நிறுவனங்களில்  தலைமை என்பது  ஒருவித  சிறைதான்.

ஜனாதிபதியும் பிரதமரும்

அரசியலில், அமெரிக்க ஜனாதிபதி முறையில்  எல்லாப் பொறுப்பும் இறுதியில் ஜனாதிபதி தலையில் தான் விழும். அவர் தான் மக்களுக்கு பதில்சொல்ல வேண்டியவர். கூட இருப்பவர்கள் அவரால் நியமிக்கப்பட்டு, ஓரளவிற்கு செனட் அங்கீகாரம் பெற்றாலும், பொறுப்பு ஜனாதிபதிக்குத்தான். யார் அறிவுரை வழங்கினாலும் முடிவு அவருடையதுதான். 




இங்கிலாந்தின் நிலை வேறு. இங்கு நடப்பது Cabinet Government.   இதன் ஜீவனாடியாக இருப்பது Collective Responsibility  என்னும் கொள்கை. முக்கியமான விஷயங்கள் மந்திரி சபையிலேயே தீர்மானிக்கப் படுகின்றன. இருந்தாலும் நடைமுறையில் பிரதமரே பொறுப்பேற்கிறார்.  அண்மையில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிப்பதா அல்லது அதைவிட்டு நீங்குவதா என்ற சர்ச்சை எழுந்தது. பிரதமர்  நீடிக்கவேண்டுமென்றார். அவர் மந்திரிகளில் பலரும், கட்சியினரில் பலரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சியிலும் இதே நிலைதான். நாடே பிரிந்து நின்றது. கட்சிகள் கடந்த இந்தப்பிரச்சினை மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டது. Referendum  என்ற நாடு தழுவிய வாக்கெடுப்பில் பிரதமரின் நிலையை மக்கள் ஆதரிக்கவில்லை.






Wikimedia Commons. OGL3 


உடனே பிரதமர் டேவிட் காமரோன் தானாகவே பதவி விலகினார். இத்தகைய சிறந்த மரபு அங்கு மட்டும்தான் காணமுடியும். மந்திரிசபை என்று இருந்தாலும் இறுதியில் பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்பது தான்  தார்மீக நிலை என்பது இதனால் தெரிகிறது. அங்கும் தனிமைதான்! Top Man is always alone!



இந்தியாவில் மத்தியிலோ மாநிலங்களிலோ இத்தகைய மரபுகள் இல்லை. இங்கு ஒவ்வொரு கட்சியிலும் ஒரு பெரிய தலைவர்; பல குட்டித் தேவதைகள். அவர்களைச் சுற்றி ஒரு கும்பல்! தலைவரை வைத்து ஓட்டு, பிறகு குட்டித்தேவதைகளின் பணவேட்டை! மேலிடம் தன் பங்கைப் பெறும். [இந்தியக் கட்சிகளில் மேலிடம் என்பது காங்கிரசிலும், சில மாநிலக் கட்சிகளிலும் ஒரு குடும்பத்தையே குறிக்கும்.]

ஜயலலிதாவுக்கு ஏமாற்றம்

ஜயலலிதா  கட்சித்தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் ஏமாற்றப்பட்டார் என்பது  வெளிச்சமாகிவிட்டது. அவர் பெயரில் பதவிக்கு வந்தவர்கள் இன்று வேறு ஒருவருக்கு சலாம் போட விழைகிறார்கள். எம்.எல்.ஏக்களும்,எம்.பிக்களும் (ஒருவர் தவிற ) ஜயலலிதாவின்  மரணத்திலுள்ள  சந்தேகங்களைப்பற்றி எதுவும் பேசவில்லை! யார் போனால் என்ன, இருப்பதைப் பகிர்வதே வேலை என்று இருக்கிறார்கள். நாய் கூட ஒருவேளை சோறுபோட்டவனுக்கும் வால் குழைக்கும். இவர்கள் அதைவிடக் கேவலமாக இருப்பது தெரிகிறது. நன்றி கொன்ற பதர்கள்! Ready to shift loyalty for the sake of filthy lucre!

எல்லாவற்றிற்கும் அடிப்படை கட்சியில் வளர்ந்த அணுகுமுறையும் தலைவரின் திறமையின்மையும் தான். தலைவர் விமர்சனத்திற்கும் கேள்விக்கும் அப்பாற்பட்டவர் என்ற நிலைதான் எல்லாக் கட்சிகளிலும் நிலவுகிறது. தலைவர்கள் விரும்புவதையே பேசவேண்டும் என்பதே விதி. அன்று கணக்குக் கேட்ட எம்.ஜி.ஆருக்கே கல்தா! இன்று யார் கேட்கத் துணிவார்கள்?

ஜயலலிதா பெரிய தலைவர் ?

ஆனால் இருந்ததையும் தக்கவைத்துக்கொள்ள ஜயலலிதாவால் இயலவில்லை. இவரை மாபெரும் தலைவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மை வேறாக இருக்கிறது. இவருடைய ஆளுமை வட்டம் குறுகியே வந்திருக்கிறது. 1991 தேர்தலில் அம்மையார் 59% வாக்குகள் பெற்றார் [ அன்று காங்கிரசுடன் கூட்டு+ ராஜீவ் காந்தி கொலையின்  அனுதாப அலை.] அண்மைத்தேர்தலில் இவர் பெற்ற வாக்குகள் 42% தான். இடையில் வந்த தேர்தல்களில்  இவர் பெற்றது 52-50% தான். இவர் பங்கு சரிந்தே வந்திருக்கிறது. இம்முறை  இவர் வந்தது எதிர்சாரி வாக்குகள் சிதறியதால் தானே தவிர, அம்மையாரின் ஆளுமையால் அல்ல! ஆனால் இது  இந்திய அரசியலில் சாதாரணமாக நடப்பதுதான்..

மூன்று  குறைகள்


மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் சிலை





மூன்று விஷயங்களில் அம்மையார் ஏமாந்துபோனார்.  இதை வள்ளுவர் கூறியபடி பார்ப்போம்.










1. பெரியாரைத் துணக்கோடல்.

அரசியல் செய்பவர்களுக்கு  அனுபவத்திலும் அறிவாற்றலிலும் சிறந்த பெரியவர்களின் துணை வேண்டும். இதைத் திருவள்ளுவர் ஒரு அதிகாரம் முழுதும் சொல்கிறார்.

441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

442. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

443. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

444. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.


447. இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

449. முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

450. பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.


2. சிற்றினம் சேராமை

முந்தையதற்கு அடுத்த அதிகாரத்திலேயே தகாதவர்களுடன் நட்பு கூடாது என்று பத்து குறள்களில் சொல்கிறார்!

451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

452. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

453. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

454. மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

455. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.


456. மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

457. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

458. மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

459. மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

460. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

3. நட்பாராய்தல்

நம்முடன் சேருபவர்கள் தகுதியுள்ளவர்களா என்பதை  சோதித்து அறியாமல் அவர்களை நண்பர்களாகக் கொள்வது தவறு. இதையும் ஒரு அதிகாரத்தில் சொல்கிறார் திருவள்ளுவர்.

791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

793. குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

795. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

796. கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

797. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

800. மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு


இப்பொழுது நாம்  சற்று யோசிப்போம்.  அவ்வளவு பெரிய தலைவராக மதிக்கப்பட்டவர் அவர் கூட இருந்தவர்களாலேயே  துன்பமடைந்தார். குடிப்பிறந்தவர்களை நீக்கி கூடா நட்பு கொண்டார். இது அவர் காலத்திலேயே பரவலாகப் பேசப்பட்ட விஷயம். ஆனால்  ஒரு சில வட்டாரத்தைத் தவிற வேறு யாரும்  அவரை நெருங்க முடியவில்லை.. ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் ஒரு சிறு கும்பலின் பிடியில் இருந்தார் என்பது  எவ்வளவு சோகம்!
" கெடுதி செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது " என்று பழைய தேவதாஸ் படத்தில் கேட்ட பாடல் நினைவுக்கு வருகிறது!

Thursday, 15 December 2016

77. அநாகரீகம், அராஜகத்தின் உச்ச நிலை!


77.அநாகரீகம்-அராஜகத்தின் உச்ச நிலை!

பதவியில் இருக்கும் அரசியல் தலைவர் உடல் நலம் குன்றி  மருத்துவமனையில் சேர்ந்தால், நிலையின் தீவிரம் பொறுத்து சில சிறப்பு ஏற்பாடுகள் செய்வது ஜனநாயக மரபு. பொதுவாக அவர் பார்த்து வந்த துறைகளின் நிர்வாகம் வேறு  நபர்களிடம் அளிக்கப்படும்.

உடல் நிலை- ரகசியம்? 


முன்பெல்லாம் அரசியல் தலைவர்களின் உடல் நிலை குறித்த செய்திகள் ரகசியமாகவே இருக்கும். ஆனால் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் எடுத்த முடிவுகள் சரியானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்துவந்தது. சில சமயங்களில் சுய நினைவுடன்தான் அவர்கள் இருந்தனரா, செயல்பட்டனரா என்பதும் சந்தேகமே. மேலும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் தீவிர மருந்துகளும் பின்விளைவுகளைத் தோற்றுவித்து, மனதையும், மூளையையும் செயல்திறன் குறையச் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. [சாதாரண இருமல்-சளிக்குக் கொடுக்கும் மருந்தே தூக்கத்தை வரவழக்கும்- அதனால் அந்த மருந்தைச் சாப்பிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்கிறார்கள்.] 


Roosevelt in wheelchair, 1941






அமெரிக்க அதிபர்களான உட்ரோ வில்சன், ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி ஆகியோர் பற்றி இத்தகைய சர்ச்சைகள் எழுந்தன.  










கென்னடிக்கு இருந்த  நோய்கள், அவற்றிற்கு அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை/மருந்துகள், அவற்றின் பக்க/பின் விளைவுகள் பற்றி இன்னமும் விவரங்கள் வந்துகொண்டிருக்கின்றன! சர்ச்சைகள் தொடர்கின்றன!






"When Kennedy ran for and won the presidency, he was essentially gambling that his health problems would not prevent him from handling the job. By hiding the extent of his ailments he denied voters the chance to decide whether they wanted to share this gamble. It is hard to believe that he could have been nominated, much less elected, if the public had known what we now know about his health." 
Robert Dallek, in Atlantic Monthly, December, 2002


சர்ச்சிலைத் துரத்திய கருப்பு நாய் !


இங்கிலாந்தில் புகழ்பெற்ற பிரதமர் சர்ச்சிலைப் பற்றியும் இத்தகைய வாதங்கள் எழுந்தன. அவர் மறைவுக்குப்பின் அவருடைய டாக்டர் லார்டு மொரான் [Lord Moran] சில விஷயங்களை வெளியிட்டார்.







இதில் முக்கியமானது, சர்ச்சில் சில சமயம் மன அழுத்தத்திற்கு ( Depression) ஆளாவார், அச்சமயங்களில் அவரால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது; ஆனால் அதிலிருந்து மீண்டு திறமையுடன் செயல்படுவார் என்பது. [ இந்த சமயங்களில் தன்னை ஒரு கருப்பு நாய் துரத்துகிறது என்பாரம் சர்ச்சில்!] பல வருஷங்களுக்கு முன்பு ஃப்ராங்க் ரைட் (நைட்?) என்ற எழுத்தாளர்  உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த பலதலைவர்கள் எடுத்த தவறான முடிவுகள் பற்றி  எழுதிய தொடர் கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரசில் [ ஸன்டே ஸ்டாண்டர்ட்- 1964-65 ] வெளிவந்தது.   ["Unfit to Command " by Frank Wright (Knight?) ] தற்போது பெரிய தலைவர்களின் உடல் நிலை விஷயத்தை  ரகசியமாக வைப்பதை ஜனநாயக நாடுகளில் ஏற்பதில்லை. ஒருவர் பதவி வகிக்கத் தகுந்தவரா என்பதை நிச்சயிக்க அவர் உடல் நிலையும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.






80களில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன்  புற்றுநோயால் தாக்கப்பட்டார். உடனே இதை மக்களுக்குத் தெரிவித்தார். சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு போகும்முன், துணை ஜனாதிபதியிடம் அதிகாரபூர்வமாக பதிவிப்பொறுப்பை ஒப்படைத்தார். வெற்றிகரமான சிகிச்சைக்குப்பின் திரும்பிவந்து மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்!






தமிழ் நாட்டில் கூத்து!


இந்த நிலையில் இங்கே இப்பொழுது தமிழ் நாட்டில் நடந்த கூத்தைப் பாருங்கள்! ஒரு முதல்வரை திடீரென மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கிறார்கள் . காய்ச்சல்,  நீர்சத்துக் குறைவு  [ fever and dehydration] என்கிறார்கள். மருத்துவமனையும் முதலில் சில நாட்களுக்கு அறிக்கை விடுகிறது- எல்லாம் சரியாகி வருகிறது என்கிறார்கள். பிறகு லண்டனிலிருந்து  டாக்டர் வருகிறார். டில்லியிலிருந்து டாக்டர்கள் வருகிறார்கள். சிங்கப்பூர் கொண்டுசெல்வார்கள் என்றெல்லாம் செய்திகள் [வதந்திகள்] வருகின்றன. மருத்துவமனை மவுனம் சாதிக்கிறது. இடையில் முதல்வர் பார்த்துவந்த துறைகள் வேறு ஒரு மந்திரியிடம் ஒப்படைக்கப் படுகின்றன. இதில் மத்திய அரசின் தலையீடு இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆளுனர் நடுவில் மருத்துவமனைக்கு வந்தார், ஆனால் என்ன பார்த்தார், யாரைப் பார்த்தார் என்பது தெரியவில்லை! இவ்வாறு 75 நாள் கழிந்தபிறகு முதல்வர் உயிரிழக்கிறார். மாரடைப்பு  [ Cardiac arrest ]என்கிறார்கள். அன்று நடுஇரவிலேயே ஒருவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம்  செய்துவைக்கிறர்கள்!




www.johntfloyd.com


ஏன் இந்த ரகசியம்?
  • முதல்வருக்கு என்ன நோய் என்பது கடைசிவரை தெரியவில்லை
  • அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் விவரமும் தெரியவில்லை
  • இந்த 75 நாட்களில் அவரை யாரும் பார்க்கவில்லை!  யாரையும் பார்க்க  அனுமதிக்க வில்லை.
  • அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில் ஒரு புகைப்படம் கூட ஆதாரபூர்வமாக வெளிவரவில்லை. சோஷியல் மீடியாவில் வந்த படங்கள் உண்மையானவை என்று சொல்வதற்கில்லை. [ அங்கு படுத்த நிலையில் உள்ள நபர் ஜயலலிதாவே அல்ல என்று பலர் கருதுகிறார்கள்.]
  • அவர் இருந்த உடல் நிலையில் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு இருந்தே வந்தது என்று சொல்கிறார்கள். அப்படியெனில், அவர் இருந்த நிலை என்ன?
  • மருத்துவமனையோ, அரசினரோ அதிகாரபூர்வமாக எந்த விவரமும் சொல்லவில்லை.
  • இந்த நிலையில், அவசரமாக உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதில் முதல்வரின்  சமூகத்திற்கு ஒவ்வாதவகையில்   அவருக்கு ஈமக்கிரியை செய்யப்பட்டது. 

ரகசியம் கிளப்பும் சந்தேகம்

இந்த நிலையில், சோஷியல் மீடியாவிலும், இன்டர்னெட்டிலும் பலவிதமான செய்திகள்/வதந்திகள் உலவுகின்றன. இதில் முக்கியமானது, ஜயலலிதா பல நாட்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார், அவர் உடல்  embalming செய்யப்படிருந்தது என்பது. 75 நாட்களில் அவரைப் பார்க்க யாரையுமே அனுமதிக்கவில்லை, அவரை யாருமே பார்க்கவில்லை என்ற நிலையில், இம்மாதிரியான சந்தேகம் எழுவது இயல்புதானே! இந்த  விஷயத்தை எப்படி முடிவு செய்வது?

இறுதியில் மருத்துவமனையிலிருந்து வெளிவந்த உடல்,(முகம்) முன்பு இருந்த நிலையிலேயே இருந்தது! 75 நாட்கள் வார்டில் இருந்ததோ, பலவித தீவிர சிகிச்சைகளுக்கு ஆளானதோ ஆகிய எந்தவிதமான அறிகுறியும் இல்லை! ஒரு வாரமாவது தீவிர நோயாளியாக மருத்துவ மனையில் இருந்து, அங்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகளையும் உணவையும் தின்று  அனுபவப்பட்டவர்களுக்கே    இதன் உண்மை விளங்கும்.

முகத்தில், கன்னத்தில் இருந்த நான்கு ஓட்டைகள்  EMBALMING ஆனதற்கான  அறிகுறி என்கிறார்கள்.

அண்ணாதுரைக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த நோய், நடந்த சிகிச்சை பற்றி உலகமே அறியும். ஜயலலிதா விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை ரகசியம்?


அரசியல் வாதிகள் ஏதோ ஆட்டம் போட்டிருக்கிறார்கள், மருத்துவமனையும் அதற்குத் துணைபோயிருக்கிறது என்ற ஐயப்பாடு மக்களிடையே  தீவிரமாகப் பரவி  வருகிறது.

மக்கள் என்ன மடையர்களா ?

அரசியல் கட்சியினர் எப்படியோ போகட்டும்; அதில் நமக்கு அக்கறை இல்லை. முதல்வரின் அரசியலையும் ஆட்சியையும் நாம் விமர்சிக்க வரவில்லை. ஆனால் ஒரு மாநில முதல்வர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொறுப்பு வகிப்பவர். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவர் 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்; மக்கள் வரிப்பணத்திலிருந்து அவரது சிகிச்சைச் செலவு ஏற்கப்பட்டது என்ற நிலையில் உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது. இதைச் சொல்ல வேண்டிய கடமை அரசினருக்கும், மருத்துவ மனைக்கும் இருக்கிறது. ஆனால் யார் சொல்ல வைப்பது?

மருத்துவமனைகள் : தவறுகளும் பித்தலாட்டமும்



Hospitals are vulnerable to corruption. In the U.S., health care fraud has been estimated to cost $60 billion per year, or 3% of total health care expenditures—much of it in the hospital sector. Hospitals account for 50% or more of health care spending in many countries. Fraud and corruption in hospitals negatively affect access and quality, as public servants make off with resources which could have been used to reduce out-ofpocket expenditures for patients, or improve needed services.
From a brief by U4 Anticorruption Resource Centre
மத்திய அரசினரே இதில் தலையிட்டு ஏதோ குட்டை குழப்பியிருக்கின்றனர் என்ற சந்தேகமும் மக்களிடையே வலுத்து வருகிறது. இந்த நிலையில்  எது உண்மை, உண்மை வெளிவருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது!

ஒரு மாநில முதல்வருக்கே ஒரு பெரிய மருத்துவமனையில் இந்தக் கதி என்றால், சாமான்யருக்கு என்ன ஆகும் என்று நினைத்தே பார்க்கமுடியவில்லை!


www.slideshare.net

தட்டிக்கேட்க நாதியில்லை?

இது அரசியல் அநாகரீகத்தின் உச்ச நிலை என்பதுடன், அராஜகத்தின் உச்சமாகவும் இருக்கிறது!
நல்ல நிர்வாகத்திற்கும் அரசியல் பண்பாட்டிற்கும் பெயர்பெற்ற தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின்  ஆதிக்கத்தில் இந்த நிலை வந்ததே என்று தலைகுனிய வேண்டி இருக்கிறது!
 பிரதமர் நரேந்திர மோடி நேர்மையானவர் என்று நினைத்தோம். அவரையுமா சரிக்கட்டிவிட்டார்கள்? அட கடவுளே! நம்பமுடியவில்லை!
யாரை நம்புவது, எதை நம்புவது என்றே  தெரியவில்லை!

நாடகமெல்லாம் கண்டோம் இந்த அப்போலோ அரங்கிலே அப்போலோ அரங்கிலே சுத்த அயோக்யர் நடுவிலே உறவு கொண்டாடி ஒரு கும்பல்
அம்மா,,,,,,,,,,,, அக்கா
உறவு கொண்டாடி ஒரு கும்பல் ஆம்- காசுடனே அவர் உறவு பெயரால் வந்தது பதவி ஆயின் உயிர் போனதும் மாற்றுவார் வேஷம் போடுவார் பிறிதொரு கோஷம் கூழைக் கும்பிடு போடும் கூட்டம் நரியும் பேயும் ஆடிய ஆட்டம் பதவி பணம் இவர் நாட்டம் நிஜத் தொண்டரே திரண்டு வந்தால் பிடிப்பார் பார் இவர் ஓட்டம் ?
ஆனால் மக்களுக் கில்லையே காட்டம்.



முன்னாள் முதல்வர் ஜயலலிதா நற்கதி அடைவாராக!




Sunday, 13 November 2016

76. கருப்புப் பணத்திற்கு சிகப்புக் கொடி!


76. கருப்புப் பணத்திற்கு சிகப்புக் கொடி!


கருப்புப் பணம்- எவ்வளவு?

இந்திய பொருளாதாரத்தில் கருப்புப் பணம் விளையாடுவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கணக்கில் காட்டி முறையான வரி செலுத்தாது இருப்பது, சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் சேர்த்தது- இதுதான் கருப்புப்பணம். இந்தியர்களின் கருப்புப்பணம்  இங்கும்  இருக்கிறது, வெளி நாடுகளிலும் இருக்கிறது. எவ்வளவு என்பது ப்ரம்ம ரகசியம்! வெளி நாட்டில் வைத்துள்ள பணம் மட்டும் 500 பில்லியன் டாலர் வரை இருக்கும் என 2011ல் சுப்ரீம் கோர்ட்டில்  அரசினர் தரப்பில் ( CBI)சொன்னார்கள். இது எவ்வளவு தெரியுமா? இன்றைய மதிப்பில் சுமார் 340லட்சம் கோடி ரூபாய்= 34,00,00,00,00,00,000. 

[1 billion (or 1000 million) is equivalent to 100 crores. If converted to lakhs, 1 billion would be 10,000 lakhs.

500 billion (or 500000 million) is therefore equal to 50000 crores.]


கருப்புப் பணக் குபேரர்கள்

யார்யாரிடம் இது இருக்கிறது?  அரசியல்வாதிகள், டாக்டர்கள், வக்கீல்கள், அக்கவுன்டன்டுகள், பெரிய பாங்கர்கள், தொழிலதிபர்கள், வ்யாபாரிகள், அரசு அதிகார வர்கத்தினர், ரியல் எஸ்டேட் முதலாளிகள் (முதலைகள்), சினிமாகாரர்கள் , பள்ளிகள்,கல்லூரிகள் நடத்துவோர் என சமூகத்தின் மேல்மட்டத்தில் அனேகமாக எல்லா நிலைகளிலும் இது ஊடுருவியிருக்கிறது. அங்கிருந்து கீழேயும் பரவியிருக்கிறது. பல இடங்களிலிருந்து  வெளி நாட்டில் பணம் பதுக்கியிருக்கும் நபர்கள் யார் என்பது நமது அரசினருக்குத் தெரிந்தே இருக்கிறது.ஆனால் அதை வெளியிட மறுக்கிறார்கள். 2011ல் HSBCயில் 782 இந்தியர்கள் கணக்கு வைத்திருப்பதாக செய்தி வந்தது. அரசினர் வெளியிடவில்லை. அதையும் மீறி சில பெயர்கள் வெளிவந்தன. 




Indian Express. 9 February, 2015


இந்த வருட ஆரம்பத்தில் வெளியான Panama Papers Scandal மூலம் 500 இந்தியர்களின் பெயர்கள் இருப்பது தெரியவந்தது. அமிதாப் பச்சன், ஐஶ்வர்யா ராய், நீரா ராடியா (2ஜி புகழ்), கே.பி.சிங், கார்வாரே குடும்பம், ஹரிஷ் சால்வே ஆகியோரின் பெயர்கள் இதில் இருப்பதாக செய்தி அடிபட்டது.

குறிப்பு: இத்தகைய செய்திகளை முற்றும் நம்புவது சரியல்ல. ஆனால், தெரிந்த பெயர்களை அரசு வெளியிட விரும்பாத நிலையில் , பொதுவாழ்வில் ஈடுபட்ட பலரின் பெயரும் அடிபடுவது சகஜம் தானே!





காங்கிரஸ் அரசினர் இதை என்றுமே லட்சியம் செய்ததில்லை. இந்திரா காந்தி, கருப்புப் பணத்திற்கு ஆதாரமான ஊழலை " இது உலக அளவிலான விவகாரம்" ( Universal Phenomenon) என்று ஒரே போடாகப் போட்டார். எங்கும் நடக்கிறது, இங்கும் நடக்கலாம் என்பதுதானே இதன் பொருள்? ஜனதா அரசு 1978ல் 1000, 5000, 10,000 ரூபாய் நோட்டுக்களை  செல்லாது என அறிவித்தது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த நிலை. 

மதிப்பிழந்த ரூபாய்

 இது  எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகமே.

இன்று ரூபாயின் மதிப்பு என்ன? 1950ல் இருந்த 100 ரூபாய்க்கு இன்றைய மதிப்பு சுமார் ₹5000. 1970ல் இருந்த 100 ரூபாய்க்கு இன்றைய மதிப்பு ₹ 2500. 1978ல் இருந்த 100 ரூபாய்க்கு இன்றைய மதிப்பு ₹.1250. இப்படி ரூபாயின் மதிப்பு குறைந்தே வந்திருப்பதால் இன்றைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்துவிட்டன. அதனால் மிகவும் சகஜமாக எல்லா இடத்திலும், எல்லாரிடத்திலும் புழங்குகிறது.அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில்  இவற்றின் பழக்கம் 33% உயர்ந்தது. காரணம்?


After the official announcement by Prime Minister Modi, the Governor of the Reserve Bank of IndiaUrjit Patel and Economic Affairs secretary, Shaktikanta Das explained in a press conference that while the supply of notes of all denomination  increased by 40% between 2011 and 2016, the ₹500 and ₹1000 banknotes increased by 76% and 109% respectively in this period owing to counterfeit money. This was then used to fund terrorist activities against India. As a result the step of eliminating the notes was taken.[


According to Madan Sabnavis, chief economist, CARE Ratings, the reason for the increase are two. "For one, the banks were mostly dispensing Rs 500 and Rs 1,000 notes due to the logistical issues related to Rs 100. Secondly, high inflation, especially in food items. Due to the higher prices, people were forced to use higher denominations. After all, what do you get for Rs 100?"


 புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் ₹.500, 1000  நோட்டின் பங்கு 86%க்கு மேல் எனச் சொல்கிறார்கள். 
இதை முடக்கியதால்,  சாதாரண, பொது ஜனங்களுக்குத்தான் கஷ்டமாகும். அதுவும் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு அதிகம் கஷ்டம். போலிப் பணம் ( Fake notes)  முடங்கிவிடும். ஆனால் எவ்வளவு கறுப்புப் பணம் சிக்கும் அல்லது மதிப்பிழந்து நிற்கும் எனச் சொல்லமுடியாது.

கருப்புப் பணத்தின் அளவே என்ன என்று தெரியாதபோது, எவ்வளவு முடங்கியது என்று எப்படிச் சொல்வது? கள்ளப்  பணம் கரன்ஸி நோட்டாகத்தான் இருக்கவேண்டுமா, என்ன?  இந்த முயற்சி மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போல ஆகலாம். People who deal in black money are much faster, much smarter than the establishment, which has many points of leakage. PAN கார்டு இல்லாமல் ₹2 லட்சம்வரை தங்க நகைகள் வாங்கலாம் என்பதே ஒரு ஓட்டை. அடுத்து தங்கத்திற்கு தலைவலியோ? அதுவும் சாதாரண நடுத்தர வர்கத்தையே பாதிக்கும். நோய் எங்கோ இருக்கிறது- யார் யாரோ மருந்து சாப்பிடுகிறார்கள்!

கருப்பு- எப்போதும் கருப்பல்ல!



While there are certain criminal activities (such as smuggling, drug peddling, gun running, etc.) that follow this pattern, they collectively account for a minuscule fraction of what is commonly understood as “black money”. The really big bucks come from two other activities—corruption and tax evasion.
In both these cases, “black money” is a recurring income, and the recipients use the funds as all of us do our incomes—either consume it or invest it for future consumption. In either case, the cash does not stay with them for long and moves along an ever-widening ripple of transactions, most of which are perfectly legal.
- Livemint, 14 November, 2016

அடிப்படைக் காரணம்: அரசியல்

கருப்புப் பணம் தீமைதான், சுமைதான்,  நோய்தான். ஆனால் அதன் அடிப்படைக்  காரணத்தை நீக்காமல் அதை ஒழிக்க முடியாது. அந்த அடிப்படைக் காரணங்களை எந்த அரசாலும் தொட முடியாது! கருப்புப் பணம் இல்லாமல் தேர்தல் நடக்குமா? எந்த ஆபீசில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலை நடக்கிறது? எத்தனை டாக்டர்களும் வக்கீல்களும் வருமானத்தைச் சரியாகக் காட்டி வரி செலுத்துகிறார்கள்? இதைப் பாருங்கள்:


  1. The two major national parties (an apparent reference to Indian National Congress, BJP) claim to have incomes of merely ₹5 billion (US$74 million) and ₹2 billion (US$30 million). But this isn't "even a fraction" of their expenses. These parties spend between ₹100 billion (US$1.5 billion) and ₹150 billion (US$2.2 billion) annually on election expenses alone.

[ From: M.C. Joshi Committee Report, January, 2012]

காங்கிரஸ் வளர்த்த கருப்புப் பணம்


கருப்புப் பணத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம், 
சுதந்திரத்திற்குப்பின் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய  சோஷலிச 
ராஜ்யம் என்னும் கூத்தாகும். பர்மிட், லைஸென்ஸ், கன்ட்ரோல், முறைகளால்
இரண்டு தலைமுறை இந்தியர்கள் லஞ்சத்திலும், கருப்புப்  பணத்திலும் நன்கு
பயிற்சி பெற்றனர். இன்று இது இந்தியர்களின் ரத்தத்தில்  ஊறிவிட்டது. ஊழல்
சகஜமாகிவிட்டது. இதேசமயம் அமலிலிருந்த  அந்நியச் செலாவணி
 கட்டுப்பாடு, இந்தியப் பணத்தை எப்படி வெளி நாடுகளில் பதுக்குவது, 
அதை எப்படி மீண்டும் கொண்டுவருவது என்பதையும் கற்றுக்கொடுத்தது. 
இத்துடன் இங்கு நிலவிய ராட்சஸ வரிவிதிப்பு முறையும் கருப்புப் பணத்தை
 ஊக்குவித்தது. கருப்புப் பணத்தின் மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் '
காங்கிரஸ் கட்சியே! இதை காந்திஜியே 1939லேயே சொன்னார்:



1939 நியூஸ்பேபரிலிருந்து செய்தி.

 அரை நூற்றாண்டிற்கும் மேல் நிலவிய இந்த நிலையை  
அவ்வளவு சுலபமாக சரிசெய்ய முடியாது..

ஊருக்கு இளைத்தவர்கள் 

 Eventually, the bulk of the cash finds its way into the informal sector, where it provides a part of the essential liquidity for virtually all transactions within the informal sector and between the informal and formal sectors.
Considering the fact that the informal sector in India accounts for about 45% of gross domestic product (GDP) and nearly 80% of employment, disruption of this liquidity can be very costly indeed, both in terms of growth and equity.
[ From Livemint ]\

அரசின் முயற்சி வெற்றிபெற வேண்டும் எனவே விரும்புகிறோம். இதுவரை
 எந்த முயற்சியும் அதிகப் பலனைத் தரவில்லை.


From: Slideshare

குறிப்பு:
1.இன்று  எல்லா எதிர்கட்சிகளும்  மோடி அரசின் திட்டத்தை எதிர்க்கின்றன.
 இதுவே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போன்றதல்லவா ?

2. Tax avoidance or tax evasion is not necessarily a moral issue,. It is an issue of good
 citizenship, if the rates are rational or reasonable, and not arbitrary, especially in a true 
democracy..
Tax rates are not subject to any holy writ or even rational standard. 93% tax rate as it
 prevailed in the time of Indira Gandhi is not only savage, it is devilish; no one would be 
rational if he did not beat it.
Predatory tax rates are counter-productive and create intelligent tax evaders and black money 
holders, as even England is experiencing at present.

Saturday, 8 October 2016

75. எப்படி நன்றி சொல்வது ?


75. எப்படி நன்றி சொல்வது ?


ஒருவர்  நமக்குச் செய்த உபகாரத்திற்கு நன்றி பாராட்டுவது, நாம் ஒருவருக்கு  [தெரிந்தோ தெரியாமலோ ] செய்த  தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது - இவை எல்லா சமூகத்திலும் பண்பட்ட மக்களிடையே பரவலாக இருக்கும் நல்ல குணங்கள்.  "Oh, I am sorry " , 'Oh, thank you "-  இவை சொல்லாத ஆங்கிலம் பயின்றவர்கள் பண்பட்டவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.  நாம் பொதுவாக  "நன்றி" என்று சொல்வதில்லை- பெரும்பாலும் "சந்தோஷம்" என்றே சொல்கிறோம்; அதன் அடிப்படை நன்றி உணர்ச்சிதான். "சாரி" சொல்வது அவ்வளவு எளிதாக வருவதில்லை!

செய்த நன்றி திரும்பிவரும்


ஒருவருக்கு நாம் செய்த நல்லது நமக்கே திரும்பி வரும் என்பது -உண்மையில் அது நமக்கே நாம் செய்துகொள்வதுதான் என்பது -நமது மதத்தின் கொள்கை. இதை ஔவையார்  மூதுரையில் அழகாகச் சொன்னார்:




நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்..



ஆனால் எல்லோரும் நன்றிபாராட்டும் இயல்புடையவர்களாக இருப்பதில்லை! இதையும் ஔவையாரே சொல்கிறார்:

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர்.

மனிதனும் மிருகமும்

வீட்டில் செல்லப் பிராணி வளர்த்தவர்களுக்குத் தெரியும்- நாய், பூனை, மாடு, குதிரை என எதுவானாலும் செய்த நன்றி மறக்காத குணமுடையவை. யானை, சிம்பான்ஃஜி போன்ற விலங்குகளும் நன்றி மறக்காதவை. ஏன், சிங்கம் போன்ற காட்டு விலங்குகளும் நன்றி பாராட்டுகின்ற நிகழ்ச்சிகளை நாம் அறிவோம்.



அனாதையாக விடப்பட்ட சிறு சிங்கக்குட்டியை இந்த   ஜெர்மன் வெடரினரி டாக்டர் Val Gruener வளர்த்தார்! இது காட்டும் நன்றியைப் பாருங்கள் ! Daily Mail.




  நன்றி மறப்பது மனிதனுக்கே உரிய குணம் போலும். அதனால்தான் 
வள்ளுவப் பெருமான்  "செய்ந்நன்றி அறிதல் " என்று ஒரு அதிகாரமே வகுத்தார். அதன் இறுதியில் ஆணித்தரமாகச் சொல்கிறார்:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

மனித வாழ்க்கைக்கு எவ்வளவோ பேர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும்  ஆதாரமாக இருக்கிறது. இயற்கையில் உள்ள எவ்வளவோ சக்திகள் ஆதாரமாக இருக்கின்றன, இதற்கெல்லாம் எப்படி நன்றி சொல்வது? 

நன்றி சொல்லமுடியாத விஷயங்கள்

சில விஷயங்களுக்கு நன்றி சொல்லவே முடியாது, தாய் சிசுவுக்கு ஆற்றும் நன்மைக்கு எப்படி  நன்றி சொல்வது? தாயைப் போற்றுவதோடு சரி. அதற்குமேல் தாய்மையையே போற்றுகிறோம்.



யாதேவீ  ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண  ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை
நமோ நம :
என்று தாய்மைத் தத்துவத்தையே வணங்குகிறோம். 

Yourekaheartbeats.blogspot.com




நீரின்றி அமையாது உலகு. அதுவே அசல் அமுதம். ஆனால் அதைத் தரும் மழைக்கு நாம் எப்படி நன்றி சொல்வது ?  "மாரிமாட்டு என்னாற்றுங்கொல்லோ உலகு "  என்று கேட்கிறார் வள்ளுவர். வரும் மழை நீரை சரியானபடி சேகரித்து சிக்கனமாக, சரியான முறையில் பயன்படுத்துவதே நாம் அதற்குச் செய்யும்  கைம்மாறாகும். நாகரீகம் முற்றிய இக்காலத்தில் இதைக்கூட நாம் செய்வதில்லை !






ஹிந்துமதம் காட்டும் வழி
ஆனால் நமது  மதத்தில் இதெற்கெல்லாம் வழிவகுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஒவ்வொரு இல்லறத்தானுக்கும்  உரிய கடமையாக வைத்தார்கள். இதைச் செய்வதால் புண்ணியம் வராது; செய்யாவிட்டால் பாபம் வரும் என்றார்கள். இதை பஞ்ச யஜ்ஞம் அல்லது ஐந்து வேள்விகள் என்றார்கள். இதன்படி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாத நன்மையைச் செய்யும் ஐந்து பேருக்கு நாம்  ஐந்து வகையில் நன்றி தெரிவிக்க வேணும். இதைத் தினமும் செய்யவேண்டும். இருக்கும் பொருளைக்கொண்டு இருந்த இடத்திலேயே செய்யவேண்டும்.- காடு, கீடு என்று ஓடவேண்டியதில்லை. இதை "கடன் " என்று சொன்னார்கள் !இந்த ஐந்து பேருக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம். அதைத் தீர்க்கவேண்டும் !

1 ரிஷி / ப்ரஹ்ம யஜ்ஞம்:

உலகத்தில் எவ்வளவோ ஜீவராசிகள் இருக்கின்றன. எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதம் என்பார்கள். இதில் மனிதன் மட்டுமே தன்னைப்பற்றி அறியும் நிலையில் இருக்கிறான். [ Self-conscious }.  மனிதன் யார், எங்கிருந்து  எதற்காக வந்தான், என்ன செய்யவேண்டும் என்பதை நமது ரிஷிகள்  ஞானதிருஷ்டியினால் கண்டு சொன்னார்கள்.-இதை "திறவோர் காட்சி " எனலாம். நாம் இந்த உடலல்ல; இந்த உடல் அழிவதால் "நாம்" அழிவதில்லை.  நாம் அமரத்தன்மை உடையவர்கள் --அந்த அறிவை/ நினைவை மறந்துவிட்டோம்; ; அதை மீண்டும் பெற்று நம் உண்மை நிலையை அறிவதே வாழ்க்கையின் லக்ஷ்யம்  என்று நமது ரிஷிகள் சொன்னார்கள். "ஶ்ருண்வந்து விஶ்வே அம்ருதஸ்ய புத்ரா: " உலக மக்களே கேளுங்கள்- நீங்கள் அமரத்தன்மையின் குழந்தைகள் என்று முழங்கினார்கள். இவற்றை உபனிஷதம் என்று ஆக்கித் தந்தார்கள்.

இதை அறிவதற்கு பக்குவம் வரவேண்டும்- மனம் செம்மைப்பட வேண்டும். அதற்காக சில கடமைகளை-கர்மாக்களை விதித்தார்கள். இவ்வாறு, கர்மம் செய்து மனம் தூய்மை பெற்று நமது உண்மையான இயல்பை அறிய வழி வகுத்தார்கள் இப்படி நமது ஞானக்கண்ணை- அறிவுக்கண்ணைத் திறந்தார்கள். நமது முதல் நன்றி இவர்களுக்கே உரியது. ஆனால்  உண்மையில் இதன் மூலம்  நாம் நமக்கேதான்  நன்மை செய்து கொள்கிறோம்! தேவர் உலகத்திலும் இது நடக்காது! மனித வாழ்க்கையில் தான் நடக்கும்.  அதனால் தான் ஆபுத்திரன்  இந்திரனை எள்ளி நகையாடி " ஐயா பெரியவரே! போய்வாருங்கள் ! அறஞ்செய் மாக்கள் புறங்காத்தோம்புனர், நற்றவஞ்செய்வோர், பற்றற முயல்வோர் , யாவரும் இல்லாத் தேவர்  நன்னாட்டுக்கு இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே " என்று சொன்னான். 
நமது அறிவுக்கண்ணைத்திறந்து, விலங்கு நிலையிலிருந்து, மனித நிலையிலிருந்து நம்மை மேலேற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து,  ஆத்ம லாபம் பெற  வழிவகுத்த  ரிஷிகளுக்கே முதல் நன்றி  உரித்தாகும்.

அவர்கள் காட்டிய  நெறிகளைக் கடைப்பிடித்து, அவர்கள் சொன்னதைக் கற்று அதன்படி நடந்து, அதைப் பிறருக்கும்  போதிப்பதே  அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி, இதுவே    ரிஷி யஜ்ஞமாகும்.


2. தேவ யஜ்ஞம் :

இந்த உலகை பலவித இயற்கைச் சக்திகள் இயக்குகின்றன. இவை தானே இயங்குவதில்லை. இவற்றுக்குபின் தேவர்கள் இருக்கிறார்கள் . இது ஈஶ்வர நியதி. இவர்கள் போஷணையால் நாம் ஜீவிப்பதால், இவர்களைப் போஷிப்பது நமது கடமையாகிறது, இவ்வாறு போஷிப்பதே இவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

இதை கீதை மிகத் தெளிவாகச் சொல்கிறது.

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।

यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः।।3.14।।



அன்னாத் பவந்தி பூதானி  பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ:
யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ  யஜ்ஞ: கர்ம சமுத்பவ:

உயிரினங்கள் அனைத்தும் உணவிலிருந்து உண்டாகின்றன. மழையிலிருந்து உணவின் உற்பத்தி ஏற்படுகிறது. மழை வேள்வியிலிருந்து உண்டாகிறது. வேள்வி விதிக்கப்பட்ட கர்மங்களிலிருந்து உண்டாகிறது.

कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।

तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्।।3.15।।



கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்ம அக்ஷர ஸமுத்பவம்
தஸ்மாத் ஸர்வகதம்  ப்ரஹ்ம  நித்யம் யஜ்ஞோ ப்ரதிஷ்டிதம்

கர்மங்கள் வேதத்திலிருந்து உண்டாகின்றன, வேதம் அழிவற்ற பரமாத்மாவிடமிருந்து வந்தது என்று தெரிந்துகொள். எனவே எங்கும் நிறைந்த அழிவற்ற பரமாத்மா  எப்பொழுதும் வேள்வியில் நிலைபெற்றிருக்கிறார் எனத் தெளிவாயாக.

एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।

अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति।।3.16।।



ஏவம் ப்ரவர்த்திதம் சக்ரம்  நானுவர்த்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ  மோகம் பார்த்த ஸ ஜீவதி.

பார்த்தா! எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு பரம்பரையாகத் தொடங்கி  நடந்துவரும் படைப்புச் சக்கரத்திற்கு அனுகூலமாக பின்பற்றி நடக்கவில்லையோ - தன் கடமையைச் செய்யவில்லையோ- புலன்கள் வழியாக போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவவாழ்க்கை வாழ்பவன் வீணே வாழ்கிறான்.




தமிழில் மாதம் மும்மாரி என்பது மரபு. இதில் ஒன்று, அந்தணர்களின் வேள்வியினால் வருவது.
இது தவிற, ஒவ்வொருவரும் தம் குல ஆசாரப்படி தம் குலதெய்வம், இஷ்ட தெய்வம், கிராம தேவதை ஆகியவர்களுக்கு உரிய வழிபாடு செய்யவேண்டும். இது பொது நன்மையைக் கருதிச் செய்வது.

இப்படி தேவ யஜ்ஞம் நம்மை வாழவைக்கும் சக்திகளுக்கு நாம் பாராட்டும் நன்றியாகும்.

3. பித்ரு யஜ்ஞம் :

நாம் எந்த தர்மத்தைச் செய்தாலும் இந்த உடலை வைத்தே செய்யவேண்டும். ஶரீர மாத்யம் கலு தர்ம ஸாதனம். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே [ஏனெனில் ஊனுக்குள் ஈசன் உறைகிறான் ] என்பார் திருமூலர். இந்த உடல் நமது பெற்றோர்களால் வருவது. இப்படி பரம்பரையாக நமது மூதாதையர்கள் வழி நாம் உடல்பெற்று  ஆன்மீக  முயற்சியில் ஈடுபட்டு மேன்மை அடைகிறோம். அவர்கள் இருக்கும் இடம் பித்ருலோகம். அவர்களை நினைத்து நாம்செய்யும் நன்றியே பிதிர்க்கடனாகும். இதன் நன்மை அவர்கள் இன்று எந்த உலகில், உடலில் இருந்தாலும் அவர்களைத் தவறாது அடையும்.

4. நர யஜ்ஞம் :

நமது வாழ்வுக்கு எவ்வளவோபேர் எத்தனையோ விதத்தில் உழைக்கிறார்கள். அவர்களை நாம் அறியோம். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது? நம் காட்சிக்கு வருபவர்களுக்கு நாம் உதவவேண்டும். அதிதிகளுக்கு உணவிடுதல், அனாதைகளுக்கு உதவுதல்,  எல்லாருக்கும் பயன்படும் பொதுத்தொண்டு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

5, பூத யஜ்ஞம் :




இது எல்லாவகை உயிரினங்களுக்காகவும் செய்வது. நமக்கு  உணவு தானியங்கள்,  காய்கறி பழங்கள்  வர எவ்வளவு ஜீவராசிகள் உழைக்கின்றன! யாரோ என்றோ போட்ட  விதை இன்று நமக்குப் பூவும் காயும் பழமும் நிழலும் தருகிறது! வண்ணத்துபூச்சியும், வண்டும் மலரில் அமர்ந்து பூ காய், பழம் ஆக வழிசெய்கிறது! இவற்றுக்கு நாம் எப்படி  நன்றி சொல்வது? காக்கைக்கு சாதம் வைப்பது, எறும்புக்கு உணவாகுமாறு அரிசிமாவினால் கோலம் போடுவது என்பவை நாம் இதற்காக ஒரு அடையாளமாகச்   Symbolic செய்கிறோம். இதை யாவரும் செய்யலாம். திருமூலர் சொல்கிறார்:

யாவர்க்குமாம் இறைவற்கொரு  பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறற்கின்னுரை தானே.


வள்ளுவர் சொல்வது

இவ்வளவு விஷயங்களையும் தமக்கே உரிய வழியில் மிக எளிமையாகவும் தெளிவாகவும்  "இல்வாழ்க்கை " என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர். சொல்லிவிட்டார். குறிப்பாக ஐந்து வேள்விகளைப்பற்றிச் சொல்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை. 

இங்கு தென்புலத்தார் என்பது பித்ருக்கள். அவர்களுக்கு உரிய திசை தெற்கு. என்பது நமது நாட்டு நம்பிக்கை.  பிறற்குரிய கடனைச் செய்துவிட்டு கடைசியில் 'தான் ' என்கிறார்.  இங்கு தன்னை ஓம்புவது  என்பது என்ன?  உடலை எப்படி ஓம்பினாலும் அது ஒரு நாள் அழிந்துவிடும். எனவே, இங்கு அழியும் உடலை மட்டுமே குறிக்கவில்லை. இந்த உடலை வைத்து  ஆற்றவேண்டிய  கடனை,  அடையவேண்டிய  உயர்ந்த லக்ஷியத்தைச் சொல்கிறார். அதுதான் ஆன்ம வித்தை, இதையே நாம் ப்ரஹ்ம யஜ்ஞம் அல்லது ரிஷி யஜ்ஞம் என்கிறோம்.

பண்டிகைகள்: விரதமும் விழாவும்

நமது பண்டிகைகளில் சிலவற்றை விரதமாக ஏற்கிறோம்; சிலவற்றை விழாவாக கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். தீபாவளி, பொங்கல்  இரண்டும் மிகக் கோலகலமாகக் கொண்டாடப் படுகின்றன. இவற்றின் போது நாம் நம்முடன் தொடர்புடைய அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் தந்து நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொங்கல் சூரியனுக்கு நாம் செலுத்தும் நன்றியின் உருவம்தான்.

இது உலகம் முழுவதும் பரவியிருந்த புராதன வழக்கம். கிறிஸ்தவ மதமும் இஸ்லாமும்  தோன்றி இதை அழித்துவிட்டன, ஆனாலும் முழுதும் அழியவில்லை. ஏசு நாதர் பிறந்த நாள் யாருக்கும் தெரியாது ! அவர்கள் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுவது இத்தகைய சூரிய வழிபாடே  Harvest Festival  என்பது பல அறிஞர்களின் கருத்து. இன்றுகூட கனடாவிலும் அமெரிக்காவிலும்  Thanksgiving Day  என்று விடுமுறைவிட்டு கொண்டாடுகிறார்கள்! கனடாவில் அக்டோபரிலும் ஐக்கிய அமெரிக்காவில்  நவம்பரிலும் தடபுடலாகக் கொண்டாடுகிறார்கள் ! சமய அளவில் அறுவடை சார்ந்த விழாவாக இருந்த இது இன்று  சமூக அளவில்  Secular  விழாவாக மாறிவிட்டது. ஆனால் அடிப்படை, நன்றி தெரிவித்தல் தான் !


Harvest Festival Flowers at united Reformed Church, Shrewsbury, UK.
Marion Haworth, CC  BY-SA 2.0 Creativecommons  via Wikimedia Commons.