77.அநாகரீகம்-அராஜகத்தின் உச்ச நிலை!
பதவியில் இருக்கும் அரசியல் தலைவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்ந்தால், நிலையின் தீவிரம் பொறுத்து சில சிறப்பு ஏற்பாடுகள் செய்வது ஜனநாயக மரபு. பொதுவாக அவர் பார்த்து வந்த துறைகளின் நிர்வாகம் வேறு நபர்களிடம் அளிக்கப்படும்.
உடல் நிலை- ரகசியம்?
முன்பெல்லாம் அரசியல் தலைவர்களின் உடல் நிலை குறித்த செய்திகள் ரகசியமாகவே இருக்கும். ஆனால் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் எடுத்த முடிவுகள் சரியானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்துவந்தது. சில சமயங்களில் சுய நினைவுடன்தான் அவர்கள் இருந்தனரா, செயல்பட்டனரா என்பதும் சந்தேகமே. மேலும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் தீவிர மருந்துகளும் பின்விளைவுகளைத் தோற்றுவித்து, மனதையும், மூளையையும் செயல்திறன் குறையச் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. [சாதாரண இருமல்-சளிக்குக் கொடுக்கும் மருந்தே தூக்கத்தை வரவழக்கும்- அதனால் அந்த மருந்தைச் சாப்பிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்கிறார்கள்.]
Roosevelt in wheelchair, 1941
அமெரிக்க அதிபர்களான உட்ரோ வில்சன், ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி ஆகியோர் பற்றி இத்தகைய சர்ச்சைகள் எழுந்தன.
கென்னடிக்கு இருந்த நோய்கள், அவற்றிற்கு அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை/மருந்துகள், அவற்றின் பக்க/பின் விளைவுகள் பற்றி இன்னமும் விவரங்கள் வந்துகொண்டிருக்கின்றன! சர்ச்சைகள் தொடர்கின்றன!
Robert Dallek, in Atlantic Monthly, December, 2002
"When Kennedy ran for and won the presidency, he was essentially gambling that his health problems would not prevent him from handling the job. By hiding the extent of his ailments he denied voters the chance to decide whether they wanted to share this gamble. It is hard to believe that he could have been nominated, much less elected, if the public had known what we now know about his health."
சர்ச்சிலைத் துரத்திய கருப்பு நாய் !
இங்கிலாந்தில் புகழ்பெற்ற பிரதமர் சர்ச்சிலைப் பற்றியும் இத்தகைய வாதங்கள் எழுந்தன. அவர் மறைவுக்குப்பின் அவருடைய டாக்டர் லார்டு மொரான் [Lord Moran] சில விஷயங்களை வெளியிட்டார்.
இதில் முக்கியமானது, சர்ச்சில் சில சமயம் மன அழுத்தத்திற்கு ( Depression) ஆளாவார், அச்சமயங்களில் அவரால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது; ஆனால் அதிலிருந்து மீண்டு திறமையுடன் செயல்படுவார் என்பது. [ இந்த சமயங்களில் தன்னை ஒரு கருப்பு நாய் துரத்துகிறது என்பாரம் சர்ச்சில்!] பல வருஷங்களுக்கு முன்பு ஃப்ராங்க் ரைட் (நைட்?) என்ற எழுத்தாளர் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த பலதலைவர்கள் எடுத்த தவறான முடிவுகள் பற்றி எழுதிய தொடர் கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரசில் [ ஸன்டே ஸ்டாண்டர்ட்- 1964-65 ] வெளிவந்தது. ["Unfit to Command " by Frank Wright (Knight?) ] தற்போது பெரிய தலைவர்களின் உடல் நிலை விஷயத்தை ரகசியமாக வைப்பதை ஜனநாயக நாடுகளில் ஏற்பதில்லை. ஒருவர் பதவி வகிக்கத் தகுந்தவரா என்பதை நிச்சயிக்க அவர் உடல் நிலையும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.
80களில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் புற்றுநோயால் தாக்கப்பட்டார். உடனே இதை மக்களுக்குத் தெரிவித்தார். சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு போகும்முன், துணை ஜனாதிபதியிடம் அதிகாரபூர்வமாக பதிவிப்பொறுப்பை ஒப்படைத்தார். வெற்றிகரமான சிகிச்சைக்குப்பின் திரும்பிவந்து மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்!
தமிழ் நாட்டில் கூத்து!
இந்த நிலையில் இங்கே இப்பொழுது தமிழ் நாட்டில் நடந்த கூத்தைப் பாருங்கள்! ஒரு முதல்வரை திடீரென மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கிறார்கள் . காய்ச்சல், நீர்சத்துக் குறைவு [ fever and dehydration] என்கிறார்கள். மருத்துவமனையும் முதலில் சில நாட்களுக்கு அறிக்கை விடுகிறது- எல்லாம் சரியாகி வருகிறது என்கிறார்கள். பிறகு லண்டனிலிருந்து டாக்டர் வருகிறார். டில்லியிலிருந்து டாக்டர்கள் வருகிறார்கள். சிங்கப்பூர் கொண்டுசெல்வார்கள் என்றெல்லாம் செய்திகள் [வதந்திகள்] வருகின்றன. மருத்துவமனை மவுனம் சாதிக்கிறது. இடையில் முதல்வர் பார்த்துவந்த துறைகள் வேறு ஒரு மந்திரியிடம் ஒப்படைக்கப் படுகின்றன. இதில் மத்திய அரசின் தலையீடு இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆளுனர் நடுவில் மருத்துவமனைக்கு வந்தார், ஆனால் என்ன பார்த்தார், யாரைப் பார்த்தார் என்பது தெரியவில்லை! இவ்வாறு 75 நாள் கழிந்தபிறகு முதல்வர் உயிரிழக்கிறார். மாரடைப்பு [ Cardiac arrest ]என்கிறார்கள். அன்று நடுஇரவிலேயே ஒருவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறர்கள்!
www.johntfloyd.com
ஏன் இந்த ரகசியம்?
- முதல்வருக்கு என்ன நோய் என்பது கடைசிவரை தெரியவில்லை
- அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் விவரமும் தெரியவில்லை
- இந்த 75 நாட்களில் அவரை யாரும் பார்க்கவில்லை! யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை.
- அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில் ஒரு புகைப்படம் கூட ஆதாரபூர்வமாக வெளிவரவில்லை. சோஷியல் மீடியாவில் வந்த படங்கள் உண்மையானவை என்று சொல்வதற்கில்லை. [ அங்கு படுத்த நிலையில் உள்ள நபர் ஜயலலிதாவே அல்ல என்று பலர் கருதுகிறார்கள்.]
- அவர் இருந்த உடல் நிலையில் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு இருந்தே வந்தது என்று சொல்கிறார்கள். அப்படியெனில், அவர் இருந்த நிலை என்ன?
- மருத்துவமனையோ, அரசினரோ அதிகாரபூர்வமாக எந்த விவரமும் சொல்லவில்லை.
- இந்த நிலையில், அவசரமாக உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதில் முதல்வரின் சமூகத்திற்கு ஒவ்வாதவகையில் அவருக்கு ஈமக்கிரியை செய்யப்பட்டது.
ரகசியம் கிளப்பும் சந்தேகம்
இந்த நிலையில், சோஷியல் மீடியாவிலும், இன்டர்னெட்டிலும் பலவிதமான செய்திகள்/வதந்திகள் உலவுகின்றன. இதில் முக்கியமானது, ஜயலலிதா பல நாட்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார், அவர் உடல் embalming செய்யப்படிருந்தது என்பது. 75 நாட்களில் அவரைப் பார்க்க யாரையுமே அனுமதிக்கவில்லை, அவரை யாருமே பார்க்கவில்லை என்ற நிலையில், இம்மாதிரியான சந்தேகம் எழுவது இயல்புதானே! இந்த விஷயத்தை எப்படி முடிவு செய்வது?
இறுதியில் மருத்துவமனையிலிருந்து வெளிவந்த உடல்,(முகம்) முன்பு இருந்த நிலையிலேயே இருந்தது! 75 நாட்கள் வார்டில் இருந்ததோ, பலவித தீவிர சிகிச்சைகளுக்கு ஆளானதோ ஆகிய எந்தவிதமான அறிகுறியும் இல்லை! ஒரு வாரமாவது தீவிர நோயாளியாக மருத்துவ மனையில் இருந்து, அங்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகளையும் உணவையும் தின்று அனுபவப்பட்டவர்களுக்கே இதன் உண்மை விளங்கும்.
முகத்தில், கன்னத்தில் இருந்த நான்கு ஓட்டைகள் EMBALMING ஆனதற்கான அறிகுறி என்கிறார்கள்.
அண்ணாதுரைக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த நோய், நடந்த சிகிச்சை பற்றி உலகமே அறியும். ஜயலலிதா விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை ரகசியம்?
அண்ணாதுரைக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த நோய், நடந்த சிகிச்சை பற்றி உலகமே அறியும். ஜயலலிதா விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை ரகசியம்?
அரசியல் வாதிகள் ஏதோ ஆட்டம் போட்டிருக்கிறார்கள், மருத்துவமனையும் அதற்குத் துணைபோயிருக்கிறது என்ற ஐயப்பாடு மக்களிடையே தீவிரமாகப் பரவி வருகிறது.
மக்கள் என்ன மடையர்களா ?
மக்கள் என்ன மடையர்களா ?
அரசியல் கட்சியினர் எப்படியோ போகட்டும்; அதில் நமக்கு அக்கறை இல்லை. முதல்வரின் அரசியலையும் ஆட்சியையும் நாம் விமர்சிக்க வரவில்லை. ஆனால் ஒரு மாநில முதல்வர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொறுப்பு வகிப்பவர். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவர் 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்; மக்கள் வரிப்பணத்திலிருந்து அவரது சிகிச்சைச் செலவு ஏற்கப்பட்டது என்ற நிலையில் உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது. இதைச் சொல்ல வேண்டிய கடமை அரசினருக்கும், மருத்துவ மனைக்கும் இருக்கிறது. ஆனால் யார் சொல்ல வைப்பது?
மருத்துவமனைகள் : தவறுகளும் பித்தலாட்டமும்
மருத்துவமனைகள் : தவறுகளும் பித்தலாட்டமும்
Hospitals are vulnerable to corruption. In the U.S., health care fraud has been estimated to cost $60 billion per year, or 3% of total health care expenditures—much of it in the hospital sector. Hospitals account for 50% or more of health care spending in many countries. Fraud and corruption in hospitals negatively affect access and quality, as public servants make off with resources which could have been used to reduce out-ofpocket expenditures for patients, or improve needed services.From a brief by U4 Anticorruption Resource Centre
மத்திய அரசினரே இதில் தலையிட்டு ஏதோ குட்டை குழப்பியிருக்கின்றனர் என்ற சந்தேகமும் மக்களிடையே வலுத்து வருகிறது. இந்த நிலையில் எது உண்மை, உண்மை வெளிவருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது!
ஒரு மாநில முதல்வருக்கே ஒரு பெரிய மருத்துவமனையில் இந்தக் கதி என்றால், சாமான்யருக்கு என்ன ஆகும் என்று நினைத்தே பார்க்கமுடியவில்லை!
www.slideshare.net
தட்டிக்கேட்க நாதியில்லை?
ஒரு மாநில முதல்வருக்கே ஒரு பெரிய மருத்துவமனையில் இந்தக் கதி என்றால், சாமான்யருக்கு என்ன ஆகும் என்று நினைத்தே பார்க்கமுடியவில்லை!
www.slideshare.net
தட்டிக்கேட்க நாதியில்லை?
இது அரசியல் அநாகரீகத்தின் உச்ச நிலை என்பதுடன், அராஜகத்தின் உச்சமாகவும் இருக்கிறது!
நல்ல நிர்வாகத்திற்கும் அரசியல் பண்பாட்டிற்கும் பெயர்பெற்ற தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இந்த நிலை வந்ததே என்று தலைகுனிய வேண்டி இருக்கிறது!
பிரதமர் நரேந்திர மோடி நேர்மையானவர் என்று நினைத்தோம். அவரையுமா சரிக்கட்டிவிட்டார்கள்? அட கடவுளே! நம்பமுடியவில்லை!
யாரை நம்புவது, எதை நம்புவது என்றே தெரியவில்லை!
நாடகமெல்லாம் கண்டோம் இந்த அப்போலோ அரங்கிலே அப்போலோ அரங்கிலே சுத்த அயோக்யர் நடுவிலே உறவு கொண்டாடி ஒரு கும்பல்
அம்மா,,,,,,,,,,,, அக்கா
உறவு கொண்டாடி ஒரு கும்பல் ஆம்- காசுடனே அவர் உறவு பெயரால் வந்தது பதவி ஆயின் உயிர் போனதும் மாற்றுவார் வேஷம் போடுவார் பிறிதொரு கோஷம் கூழைக் கும்பிடு போடும் கூட்டம் நரியும் பேயும் ஆடிய ஆட்டம் பதவி பணம் இவர் நாட்டம் நிஜத் தொண்டரே திரண்டு வந்தால் பிடிப்பார் பார் இவர் ஓட்டம் ?
ஆனால் மக்களுக் கில்லையே காட்டம்.
யாரை நம்புவது, எதை நம்புவது என்றே தெரியவில்லை!
நாடகமெல்லாம் கண்டோம் இந்த அப்போலோ அரங்கிலே அப்போலோ அரங்கிலே சுத்த அயோக்யர் நடுவிலே உறவு கொண்டாடி ஒரு கும்பல்
அம்மா,,,,,,,,,,,, அக்கா
உறவு கொண்டாடி ஒரு கும்பல் ஆம்- காசுடனே அவர் உறவு பெயரால் வந்தது பதவி ஆயின் உயிர் போனதும் மாற்றுவார் வேஷம் போடுவார் பிறிதொரு கோஷம் கூழைக் கும்பிடு போடும் கூட்டம் நரியும் பேயும் ஆடிய ஆட்டம் பதவி பணம் இவர் நாட்டம் நிஜத் தொண்டரே திரண்டு வந்தால் பிடிப்பார் பார் இவர் ஓட்டம் ?
ஆனால் மக்களுக் கில்லையே காட்டம்.
முன்னாள் முதல்வர் ஜயலலிதா நற்கதி அடைவாராக!
எல்லாம் அந்த ஈசனுக்கே வெளிச்சம்
ReplyDelete