78. தலைமையிடத்தில் தனிமை
johnstahlwert.com
johnstahlwert.com
தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜயலலிதாவின் மரணம் மக்களை உலுக்கிவிட்டது. பரிதாபகரமான அவர் மரணம் அவருடைய நீண்டகால விமர்சகர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து, 6 முறை முதலமைச்சராகி, லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்டிருந்தும் இறுதியில் அனாதைபோல மரணமடைந்தார். கடைசி 75 நாட்களில் ஆஸ்பத்திரியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. யாரும் அவரைப் பார்க்கவில்லை. எதோ நாடகம் போல எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. அவருடைய நோய், அவருக்கு நடந்த சிகிச்சை முதலிய எதைப்பற்றியும் நம்பகமான தகவல் வெளிவரவில்லை. மருத்துவமனை சொன்னதை யாரும் நம்பவில்லை! ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்றே மக்கள் நம்புகிறார்கள். பலவித வதந்திகள் தீவிரமாகப் பரவி வருகின்றன.
ஏன் தனிமை?
பொதுவாகவே தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும் பலர் சூழ்ந்தே காணப்படுகிறார்கள். ஆனால் உண்மையில்- மனத்தளவில்- தனிமையில் தான் இருக்கிறார்கள். பதவி உயர உயர, சுற்றியிருப்பவர்கள் மீது நம்பிக்கை குறைகிறது. அவர்கள் ஆதாயம் தேடியே வருகிறார்கள் என்ற எண்ணம் வலுக்கிறது. ஆனால் யாரைத் துணையாகக் கொள்வது என்பதை தலைவர் தானே முடிவுசெய்கிறார்?
www.slideshare.net
Management துறையில் டீமாகச் சேர்ந்து செயல்படவேண்டும் என்கிறார்கள். ஆனால் எந்த டீமிற்கும் ஜீவனாக இருப்பது ஓரிருவர்தான். மற்றவர்கள் குளிர்காய்பவர்களே. பெரிய நிறுவனங்களில் தலைமை என்பது ஒருவித சிறைதான்.
ஜனாதிபதியும் பிரதமரும்
அரசியலில், அமெரிக்க ஜனாதிபதி முறையில் எல்லாப் பொறுப்பும் இறுதியில் ஜனாதிபதி தலையில் தான் விழும். அவர் தான் மக்களுக்கு பதில்சொல்ல வேண்டியவர். கூட இருப்பவர்கள் அவரால் நியமிக்கப்பட்டு, ஓரளவிற்கு செனட் அங்கீகாரம் பெற்றாலும், பொறுப்பு ஜனாதிபதிக்குத்தான். யார் அறிவுரை வழங்கினாலும் முடிவு அவருடையதுதான்.
இங்கிலாந்தின் நிலை வேறு. இங்கு நடப்பது Cabinet Government. இதன் ஜீவனாடியாக இருப்பது Collective Responsibility என்னும் கொள்கை. முக்கியமான விஷயங்கள் மந்திரி சபையிலேயே தீர்மானிக்கப் படுகின்றன. இருந்தாலும் நடைமுறையில் பிரதமரே பொறுப்பேற்கிறார். அண்மையில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிப்பதா அல்லது அதைவிட்டு நீங்குவதா என்ற சர்ச்சை எழுந்தது. பிரதமர் நீடிக்கவேண்டுமென்றார். அவர் மந்திரிகளில் பலரும், கட்சியினரில் பலரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சியிலும் இதே நிலைதான். நாடே பிரிந்து நின்றது. கட்சிகள் கடந்த இந்தப்பிரச்சினை மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டது. Referendum என்ற நாடு தழுவிய வாக்கெடுப்பில் பிரதமரின் நிலையை மக்கள் ஆதரிக்கவில்லை.
Wikimedia Commons. OGL3
உடனே பிரதமர் டேவிட் காமரோன் தானாகவே பதவி விலகினார். இத்தகைய சிறந்த மரபு அங்கு மட்டும்தான் காணமுடியும். மந்திரிசபை என்று இருந்தாலும் இறுதியில் பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் தார்மீக நிலை என்பது இதனால் தெரிகிறது. அங்கும் தனிமைதான்! Top Man is always alone!
இங்கிலாந்தின் நிலை வேறு. இங்கு நடப்பது Cabinet Government. இதன் ஜீவனாடியாக இருப்பது Collective Responsibility என்னும் கொள்கை. முக்கியமான விஷயங்கள் மந்திரி சபையிலேயே தீர்மானிக்கப் படுகின்றன. இருந்தாலும் நடைமுறையில் பிரதமரே பொறுப்பேற்கிறார். அண்மையில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிப்பதா அல்லது அதைவிட்டு நீங்குவதா என்ற சர்ச்சை எழுந்தது. பிரதமர் நீடிக்கவேண்டுமென்றார். அவர் மந்திரிகளில் பலரும், கட்சியினரில் பலரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சியிலும் இதே நிலைதான். நாடே பிரிந்து நின்றது. கட்சிகள் கடந்த இந்தப்பிரச்சினை மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டது. Referendum என்ற நாடு தழுவிய வாக்கெடுப்பில் பிரதமரின் நிலையை மக்கள் ஆதரிக்கவில்லை.
Wikimedia Commons. OGL3
உடனே பிரதமர் டேவிட் காமரோன் தானாகவே பதவி விலகினார். இத்தகைய சிறந்த மரபு அங்கு மட்டும்தான் காணமுடியும். மந்திரிசபை என்று இருந்தாலும் இறுதியில் பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் தார்மீக நிலை என்பது இதனால் தெரிகிறது. அங்கும் தனிமைதான்! Top Man is always alone!
இந்தியாவில் மத்தியிலோ மாநிலங்களிலோ இத்தகைய மரபுகள் இல்லை. இங்கு ஒவ்வொரு கட்சியிலும் ஒரு பெரிய தலைவர்; பல குட்டித் தேவதைகள். அவர்களைச் சுற்றி ஒரு கும்பல்! தலைவரை வைத்து ஓட்டு, பிறகு குட்டித்தேவதைகளின் பணவேட்டை! மேலிடம் தன் பங்கைப் பெறும். [இந்தியக் கட்சிகளில் மேலிடம் என்பது காங்கிரசிலும், சில மாநிலக் கட்சிகளிலும் ஒரு குடும்பத்தையே குறிக்கும்.]
ஜயலலிதாவுக்கு ஏமாற்றம்
ஜயலலிதா கட்சித்தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் ஏமாற்றப்பட்டார் என்பது வெளிச்சமாகிவிட்டது. அவர் பெயரில் பதவிக்கு வந்தவர்கள் இன்று வேறு ஒருவருக்கு சலாம் போட விழைகிறார்கள். எம்.எல்.ஏக்களும்,எம்.பிக்களும் (ஒருவர் தவிற ) ஜயலலிதாவின் மரணத்திலுள்ள சந்தேகங்களைப்பற்றி எதுவும் பேசவில்லை! யார் போனால் என்ன, இருப்பதைப் பகிர்வதே வேலை என்று இருக்கிறார்கள். நாய் கூட ஒருவேளை சோறுபோட்டவனுக்கும் வால் குழைக்கும். இவர்கள் அதைவிடக் கேவலமாக இருப்பது தெரிகிறது. நன்றி கொன்ற பதர்கள்! Ready to shift loyalty for the sake of filthy lucre!
எல்லாவற்றிற்கும் அடிப்படை கட்சியில் வளர்ந்த அணுகுமுறையும் தலைவரின் திறமையின்மையும் தான். தலைவர் விமர்சனத்திற்கும் கேள்விக்கும் அப்பாற்பட்டவர் என்ற நிலைதான் எல்லாக் கட்சிகளிலும் நிலவுகிறது. தலைவர்கள் விரும்புவதையே பேசவேண்டும் என்பதே விதி. அன்று கணக்குக் கேட்ட எம்.ஜி.ஆருக்கே கல்தா! இன்று யார் கேட்கத் துணிவார்கள்?
ஜயலலிதா பெரிய தலைவர் ?
ஆனால் இருந்ததையும் தக்கவைத்துக்கொள்ள ஜயலலிதாவால் இயலவில்லை. இவரை மாபெரும் தலைவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மை வேறாக இருக்கிறது. இவருடைய ஆளுமை வட்டம் குறுகியே வந்திருக்கிறது. 1991 தேர்தலில் அம்மையார் 59% வாக்குகள் பெற்றார் [ அன்று காங்கிரசுடன் கூட்டு+ ராஜீவ் காந்தி கொலையின் அனுதாப அலை.] அண்மைத்தேர்தலில் இவர் பெற்ற வாக்குகள் 42% தான். இடையில் வந்த தேர்தல்களில் இவர் பெற்றது 52-50% தான். இவர் பங்கு சரிந்தே வந்திருக்கிறது. இம்முறை இவர் வந்தது எதிர்சாரி வாக்குகள் சிதறியதால் தானே தவிர, அம்மையாரின் ஆளுமையால் அல்ல! ஆனால் இது இந்திய அரசியலில் சாதாரணமாக நடப்பதுதான்..
மூன்று குறைகள்
மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் சிலை
மூன்று விஷயங்களில் அம்மையார் ஏமாந்துபோனார். இதை வள்ளுவர் கூறியபடி பார்ப்போம்.
1. பெரியாரைத் துணக்கோடல்.
அரசியல் செய்பவர்களுக்கு அனுபவத்திலும் அறிவாற்றலிலும் சிறந்த பெரியவர்களின் துணை வேண்டும். இதைத் திருவள்ளுவர் ஒரு அதிகாரம் முழுதும் சொல்கிறார்.
- 441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
- திறனறிந்து தேர்ந்து கொளல்.
- 442. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
- பெற்றியார்ப் பேணிக் கொளல்.
- 443. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
- பேணித் தமராக் கொளல்.
- 444. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
- வன்மையு ளெல்லாந் தலை.
- 445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
- சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
- 446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
- செற்றார் செயக்கிடந்த தில்.
-
- 447. இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
- கெடுக்குந் தகைமை யவர்.
- 448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
- கெடுப்பா ரிலானுங் கெடும்.
- 449. முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
- சார்பிலார்க் கில்லை நிலை.
- 450. பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
- நல்லார் தொடர்கை விடல்.
- 447. இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
- 2. சிற்றினம் சேராமை
- முந்தையதற்கு அடுத்த அதிகாரத்திலேயே தகாதவர்களுடன் நட்பு கூடாது என்று பத்து குறள்களில் சொல்கிறார்!
-
- 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
- சுற்றமாச் சூழ்ந்து விடும்.
- 452. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
- இனத்தியல்ப தாகும் அறிவு.
- 453. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
- இன்னான் எனப்படுஞ் சொல்.
- 454. மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
- இனத்துள தாகும் அறிவு.
- 455. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
- இனந்தூய்மை தூவா வரும்.
-
- 456. மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
- இல்லைநன் றாகா வினை.
- 457. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
- எல்லாப் புகழும் தரும்.
- 458. மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
- இனநலம் ஏமாப் புடைத்து.
- 459. மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
- இனநலத்தின் ஏமாப் புடைத்து.
- 460. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
- அல்லற் படுப்பதூஉம் இல்.
- 456. மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
- 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
- 3. நட்பாராய்தல்
- நம்முடன் சேருபவர்கள் தகுதியுள்ளவர்களா என்பதை சோதித்து அறியாமல் அவர்களை நண்பர்களாகக் கொள்வது தவறு. இதையும் ஒரு அதிகாரத்தில் சொல்கிறார் திருவள்ளுவர்.
- 791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
- வீடில்லை நட்பாள் பவர்க்கு.
- 792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
- தான்சாம் துயரம் தரும்.
- 793. குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
- இனனும் அறிந்தியாக்க நட்பு.
- 794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
- கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
- 795. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
- வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
- 796. கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை
- நீட்டி அளப்பதோர் கோல்.
- 797. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
- கேண்மை ஒரீஇ விடல்.
- 798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
- அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
- 799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
- உள்ளினும் உள்ளஞ் சுடும்.
- 800. மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
- ஒருவுக ஒப்பிலார் நட்பு
- 791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
-
- இப்பொழுது நாம் சற்று யோசிப்போம். அவ்வளவு பெரிய தலைவராக மதிக்கப்பட்டவர் அவர் கூட இருந்தவர்களாலேயே துன்பமடைந்தார். குடிப்பிறந்தவர்களை நீக்கி கூடா நட்பு கொண்டார். இது அவர் காலத்திலேயே பரவலாகப் பேசப்பட்ட விஷயம். ஆனால் ஒரு சில வட்டாரத்தைத் தவிற வேறு யாரும் அவரை நெருங்க முடியவில்லை.. ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் ஒரு சிறு கும்பலின் பிடியில் இருந்தார் என்பது எவ்வளவு சோகம்!
- " கெடுதி செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது " என்று பழைய தேவதாஸ் படத்தில் கேட்ட பாடல் நினைவுக்கு வருகிறது!