Showing posts with label நாரதர். Show all posts
Showing posts with label நாரதர். Show all posts

Friday, 5 August 2016

65. ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும்-5



65. ஸ்ரீமத் பாகவதமும்
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -5


Front cover of the book, published by Sri Ramakrishna Math, Chennai.
This is one of the best translations, with valuable introduction.


ஆன்மீகம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல நெறிகள், வழிகள் இருக்கின்றன.ஸாங்க்யம், யோகம், அனன்ய பக்தி என்று பகவத் கீதையில் வருகிறது. ஞான யோகம், ராஜயோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என்று யோகத்திலும் முக்கியமாக நான்கைச் சொல்வார்கள். த்யானம், யாக-யஜ்ஞங்கள், தவம், மந்திர ஜபம், கோவில் வழிபாடு, தீர்த்த யாத்திரை என்று பல வழிகள் இருக்கின்றன. இவற்றில் எது சுலபமானது ?

உண்மையான ஆன்மீக முயற்சி எதுவும் சுலபமானதல்ல. இது கூரிய கத்திமுனையில் நடப்பது போன்றது என்று உபனிஷதம் சொல்கிறது. வாழ்க்கையில் எதுதான் முயற்சியில்லாமல் வருகிறது ? ஆனால் ஒவ்வொரு முயற்சியிலும்  சாதக-பாதகங்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு வழியிலும் அதற்குண்டான சட்ட-திட்டங்கள் இருக்கின்றன. மன்த்ரம் சொல்வதில் தவறு நேர்ந்தால் பலன் விபரீதமாகிவிடும். க்ஷேத்ர யாத்திரை என்று போனால் அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றவேண்டும்; இல்லையேல் பாபம் தான் வரும். இத்யாதி.


பக்தி சுலபமானதா ?


இப்படிப் பார்த்தால், பக்திவழிதான் எளியது.
ஸ்ரீ நாரதர் தனது பக்தி ஸூத்ரத்தில் இதை தெளிவாகச் சொல்கிறார்:

அன்யஸ்மாத்  ஸௌலப்யம்  பக்தௌ    58


மற்ற மார்கங்களைக் காட்டிலும் பக்திமார்கத்தில் பகவானை அடைதல் எளிது.

எந்த  மார்கமானாலும் முயற்சி செய்துதான் தீரவேண்டும். பிற மார்கங்களில் இறுதிப்பலனை நிச்சயமெனச் சொல்ல முடியாது. பக்தி வழியில் இது நிச்சயம்.  அதனால் இது சுலபம். பகவான் கீதையில் சொல்கிறார்:

ராஜவித்யா ராஜகுஹ்யம்  பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம்  கர்துமவ்யயம்                9.2


பக்திவழி வித்தைகளுக்கு அரசு; ரகசியங்களுள் சிறந்தது; உத்தமமானது; பரிசுத்தமளிப்பது. நேரில் கண்டு அனுபவிக்கக் கூடியது. தர்மத்தினின்று தவறாதது. அனுஷ்டிப்பதற்கு மிகவும் எளியது. என்றும் அழியாதது.

இக்கலிகாலத்தில் இதுதான் நடைமுறையில் சாத்யமானது என்கிறது பாகவதம். இந்த பெரிய உண்மையை  நாம் எல்லோரும் அறியும்படிச் செய்தார் வ்யாச பகவான்.


வ்யாசர் செய்த உபகாரம்

परावरज्ञः स ऋषिः कालेनाव्यक्तरंहसा।
युगधर्मव्यतिकरं प्राप्तं भुवि युगे युगे॥१६॥


பராவரஞ : ஸ ருஷி: காலேனாவ்யக்த  ரம்ஹஸா
யுகதர்ம வ்யதிகரம் ப்ராப்தம் புவி யுகே யுகே

भौतिकानां च भावानां शक्तिह्रासं च तत्कृतम्।
अश्रद्दधानान्निःसत्त्वान्दुर्मेधान्ह्रसितायुषः॥१७॥



பௌதிகானாம் ச பாவானாம்  ஶக்தி ஹ்ராஸம் ச தத்க்ருதம்
அஶ்ரத்ததானான் நி:ஸத்வான் துர்மேதான்  ஹ்ரஸிதாயுஷ:

दुर्भगांश्च जनान्वीक्ष्य मुनिर्दिव्येन चक्षुषा।
सर्ववर्णाश्रमाणां यद्दध्यौ हितममोघदृक्॥१८॥



துர்பகாம்ஶ்ச ஜனான் வீக்ஷ்யமுனிர்  திவ்யேன சக்ஷுஷா
ஸர்வ வர்ணாஸ்ரமானாம் யத் தத்யௌ ஹிதமோகத்ருக்.

ஸ்ரீமத் பாகவதம் 1.4.16-18

கடந்த, நிகழ் காலங்களை அறிந்த அந்த வ்யாஸ பகவான், யாராலும் அறியமுடியாத காலத்தின் வேகத்தால் உண்டாகிய யுகதர்மங்களின் கலப்பையும், பௌதிக உடல்களின்  சக்தியற்ற தன்மையையும்  கண்டார். மக்களையும் சிரத்தையற்றவர்களாகவும்,  தைர்யமற்றவர்களாகவும், புத்தி கெட்டவர்களாகவும், அற்ப ஆயுளை உடையவராகவும், பாக்யம் குறைந்தவர்களாகவும் கண்டார்.  ஞான த்ருஷ்டியால், வீண்போகாத ஞானத்தை உடையவரான வ்யாச முனிவர் எது எல்லா வர்ணத்தார்க்கும், எல்லா ஆஶ்ரமிகளுக்கும் நன்மை தருமோ அதை த்யானித்தார்.



Bhagavan Vedavyasa- image worshipped by Yadavaraya.
Thanks: www.sumadhwaseva.com.


நாரதர் அறிவுரை

இந்த நிலையில் அங்குவந்த நாரதர், ஸ்ரீ பகவானின் கல்யாண குணங்களைக் கீர்த்தனம் செய்வதுதான் சிறந்தது என்று அவருக்கு உபதேசித்தார். அதன்படி வ்யாசர் பாகவதம் இயற்றினார்.

इदं हि पुंसस्तपसः श्रुतस्य वा
 स्विष्टस्य सूक्तस्य च बुद्धिदत्तयोः।
अविच्युतोऽर्थः कविभिर्निरूपितो 

यदुत्तमश्लोकगुणानुवर्णनम्॥२२॥


இதம் ஹி பும்ஸஸ்தபஸ: ஶ்ருதஸ்ய வா  
ஸ்விஷ்டஸ்ய ஸூக்தஸ்ய ச புத்திதத்தயோ :
அவிச்யுதோர்த : கவிபிர்  நிரூபிதோ 
யதுத்தமஶ்லோக  குணானுவர்ணனம்                                1.5.22

இந்த உலகில் ஒருவன்  நன்கு செய்யும் தவம், வேத அத்யயனம், யஜ்ஞம், ஆசார-அனுஷ்டானங்கள், தானம், ஞானம் -ஆகிய இவை அனைத்திற்கும் அழிவில்லாத பலன் என்று ஒன்று இருக்குமாயின், அது பகவானின் கல்யாண குணங்களைப் பாடுவதுதான் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.
விபோ விக்ருதம் ப்ரக்யாஹி
க்லேஶ  நிர்வாணம் அன்யதா ந                                          1.5.40

பகவானது கீர்த்தியை நன்கு சொல்வீராக.
இதைத்தவிர துக்கம் போவதற்கு வேறு வழியில்லை.   

இவ்வாறு, கலியுகத்தில் அனைத்து ஜனங்களின்  நன்மையைக் கருதி
 [ ஸர்வ வர்ணாஶ்ரமானாம் ]   இந்த பக்தி நெறி உபதேசிக்கப்பட்டது. அதிலும், மந்திர-தந்திரங்கள், அதிக நியம-நிஷ்டைகள் போன்ற தகிடு-தத்தங்கள் இல்லாமல் பகவானின் குணங்களைக் கீர்த்தனம் செய்வது- கேட்பது என்ற இந்த எளிய முறையே விதிக்கப்பட்டது. இதுவே ராஜபாட்டை. ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் " பக்தியனே சக்கனி ராஜ மார்கமு " என்று பாடினார்.

நவவித பக்தி

சரி, பக்தியே வழி என்றால் என்ன செய்யவேண்டும் ? ஸாதுக்களானவர்கள் பகவானின்  நாமங்களை/குணங்களை கேட்பவர்களிருந்தால் சொல்வார்கள்; சொல்பவர்களிருந்தால் கேட்பார்கள்; யாரும் இல்லாதபோது தாங்களே கானம் செய்வார்கள் ! [ ஶ்ருண்வன்தி, க்ருணன்தி, காயன்தி  ஸாதவ : ஸ்ரீமத் பாகவதம் 1.5.11 ] நாமெல்லாம் ஸாதுக்கள் அல்லவே ! நாம் என்ன செய்ய வேண்டும் ? ஸாதுக்களாக முயலவேண்டும் ! சாதனைகள் பயிலவேன்டும் ! இதற்கான ஒன்பது வழிகளை ஸ்ரீ நாரதர் கூறுகிறார் :

ஶ்ரவணம் கீர்த்தனம் சாஸ்ய  ஸ்மரணம்  மஹதாம் கதே:
ஸேவேஜ்யாவனதிர்தாஸ்யம்  ஸக்யம் ஆத்ம ஸமர்பணம்.     7.11.11


பகவானது நாமங்கள்-குணங்கள் ஆகியவற்றை  ஶ்ரத்தையாகக் கேட்பது, வாயாரச் சொல்வது (பாடுவது ),மனதால் நினைப்பது, வேண்டிய சேவைகள் செய்வது, பூக்கள் கொண்டு பூஜிப்பது, தரையில் வீழ்ந்து  நமஸ்கரிப்பது, அவரை நம் எஜமானராக நினைப்பது, அவர் நமக்குற்ற தோழன் எனப்போற்றுவது, அவரிடமே சரணடைவது-  ஆகிய ஒன்பதும் பக்தியின் பக்தியின் ஒன்பது சாதனங்கள் . இவையே சாதுக்களின் புகலிடம்.

 நரஸிம்ஹ அவதாரம்.


பக்தர்களின் வரிசையில் முதலில் வைத்து எண்ணப்படும் ப்ரஹ்லாதர் நவவித பக்தி சாதனை அல்லது வழியைச் சொல்கிறார் :

ஶ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்
இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ  பக்திஸ்சேன் நவ லக்ஷணா
க்ரியதே பகவத் யத்தாதன்மன்யேதீத்தம் உத்தமம்              7.5.23-24


பகவானிடம் செய்யப்படவேண்டிய பக்தி ஒன்பது விதமானது.பகவானது மஹிமையை ஶ்ரத்தையுடன் கேட்பது;  அதை வாயாரச் சொல்வது; அவரை மனதில் நன்கு நினைப்பது; அவரது திருவடிகளில் சேவை செய்வது ; அவரை  அர்ச்சிப்பது; சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வது; செய்யும் கர்மாக்களை அவருக்கே அர்ப்பணம் செய்வது; அவரிடம் நட்புகொண்டாடுவது ;தன்னையே அர்ப்பணிப்பது. ( அவரையே சரணடைந்து தன்னைப்பற்றி கவலையில்லாமல் இருப்பது ). இம்மாதிரி இவ்வொன்பது விதமான பக்தி செய்யக்கூடிய மனிதனே  நன்கு கற்றவன் என்பது என் கருத்து. ( இது ப்ரஹ்லாதன் தன் தந்தைக்குச் சொன்னது ).

ஸ்ரீ ராமக்ருஷ்ணரின்  அறிவுரை













இவ்வாறு பக்தியென்று பொதுவாகச் சொன்னாலும் ஏதாவது ஒரு வழியில் சாதனை செய்யவேண்டும். இக்கருத்துக்கள் அனைத்தையும்  ஸ்ரீ ராமக்ருஷ்ணர்  தன் அன்பர்களிடம் வற்புறுத்திச்  சொல்லியிருக்கிறார்.










One needs sadhana. Mere study of the scripture will not do. ...What will mere study accomplish ? The almanac may forecast twenty measures of rain; but you don't get a drop by squeezing its pages.

May 23, 1885


Repeat God's name and sing his glories, and keep holy company.

It is most necessary to go into solitude now and then and think of God.
And you should always discrininate between the Real and the unreal. God alone is Real, the Eternal substance; all else is unreal, that is, impermanent.

February, 1882


In order to realize God, one must assume one of these attitudes:


Santa : the serene attitude.The rishis of olden times had this attitude towards God'

Dasya, the attitude of a servant toward his master. Hanuman had this attitude toward Rama.
Sakhya, the attitude of friendship. Sridama and other friends sometimes fed Krishna with fruit, part of which they had already eaten.
Vatsalya, the attitude of a mother toward her child. This was Yasoda's attitude toward Krishna. 
Madhur, the attitude of a woman toward her paramour. Radha had this attitude toward Krishna.

August 13, 1882


One should constantly repeat the name of God. The name of God is highly effective in the Kaliyuga.  The practice of yoga is not possible in this age because the life of a man depends on food. Clap your hands while repeating God's name, and the birds of your sin will fly away.


June 10, 1883


Ramprasad achieved perfection through singing. One obtains the vision of God if one sings with yearning heart.

It is necessary to practice some spiritual discipline.
Through the practice of spiritual discipline one attains perfection by the grace of God. But one must also labour a little. 

December 24, 1883


For the householder, it is very good to look on God as the Master.


December 27, 1883


A man must practise some spiritual discipline in order to be able to lead a detached life in the world. It is necessary for him to spend some time in solitude. In that solitude he should fix his mind on God and pray with a longing heart for love of God.


October 22, 1885

ஸ்ரீ ராமக்ருஷ்ணருக்கு மேலாக இதை யாரும் இவ்வளவு எளிமையாகச் சொல்ல முடியாது. 


Note:


An anthology of slokas from the Bhagavatam covering these nine aspects or modes of Bhakti was compiled by Vishnu Puri, a contemporary of Chaitanya Mahaprabhu. A fine translation of this work ( with an excellent introduction and notes) has been done by Swami Tapasyananda and published under the title "Bhakti Ratnavali " by Sri Ramakrishna Math, Chennai. No student of Bhagavata or bhakti literature can afford to miss this gem of a book.



               

Tuesday, 2 August 2016

62. ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -2


62.ஸ்ரீமத் பாகவதமும்
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -2



Sri Shuka narrating Srimad Bhagavatam to Parikshit.
Picture from ISKCON  sources. Thanks.

பகவானின் நேரடி உபதேசமாக நமக்குக் கிடைத்திருப்பவை இரண்டு கீதைகள் : பகவத் கீதையும் உத்தவ கீதையும். பகவானின் வாய்மொழியாக பல புராணங்களிலும் சில விஷயங்கள் வருகின்றன. ஆனால், கீதைகளைப் போன்று தொடர்ச்சியாக வருவதில்லை. 
இரு கீதைகள் : ஒரு உபதேசம்.

இந்த இருகீதைகளின் முக்கிய உபதேசம், நாம் மற்ற விஷயங்களை விட்டுவிட்டு பகவானையே சரணடைய வேண்டும் என்பதாகும். இதை பகவத்கீதை  ஸ்லோகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் சொல்கிறது :

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ
அஹம் மோக்ஷயிஷ்யாமி ஸர்வபாபேப்யோ மா ஶுச                 18.66

எல்லா  தர்மங்களையும் விட்டுவிட்டு  என் ஒருவனையே ஶரணமடைவாயாக. நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.


இங்கே தர்மம் என்பது என்ன ? தர்மங்களைத் த்யாகம் செய்வது என்றால் என்ன ? தர்மங்களை செய்யாமல் விட்டுவிடுவதா, அல்லது  அவற்றை பகவானின் ஆராதனையாகச் செய்து,  அவற்றின்  பலனை  பகவானுக்கு அர்ப்பணிப்பதா ? இப்படியெல்லாம் விவாதித்து பண்டிதர்கள் குழப்புகிறார்கள்.


ஒன்று மட்டும் நிச்சயம். இந்த ஶ்லோகம் புரட்சிகரமானது ! தர்மத்தைப் பற்றிய குழப்பத்தை ( 2.7 )விலக்க வந்த ஒரு ஶாஸ்திரம், தர்மங்களையே விலக்கு என்று சொல்லி முடிகிறது ! இதன் மர்மம் என்ன ?

தர்மமும் கர்மமும்

இதற்கு பண்டிதர்கள் பதில் சொல்ல முடியாது. ஆத்ம ஞானிகள்தான்  சொல்ல முடியும். இதை  ஸ்ரீ ராமக்ருஷ்ணர் விளக்கியிருக்கிறார்.






1884ம் வருஷம், அக்டோபர் 11ம்தேதி. மாலை நேரம். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் தம் அறையில் அமர்ந்து பக்தர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். விஷயம் கர்மம், தர்மம் பற்றித் திரும்புகிறது. குருதேவர் அவருக்குப் பிடித்த வங்காளி பக்தர் ராமப்ரஸாதரின் ஒரு பாடலிலிருந்து சில வரிகளைப் பாடுகிறார் :








"I bow my head, says Prasad, before desire and liberation;Knowing the secret that Kali is one with the highest Brahman,I have discarded, once for all, both dharma and adharma."


குருதேவர் மஹேந்த்ரநாத் குப்தரிடம்  விளக்குகிறார்:

" உனக்கு தர்மம், அதர்மம் என்றால் என்ன என்று தெரியுமா ?இங்கு  சாஸ்திரங்களில் சொல்லியுள்ள தானம், ஶ்ராத்தம், ஏழைகளுக்கு உணவு தருதல், போன்ற  தர்மங்கள் என்று பொருள்.

"இந்த தர்மங்களைச்  செய்வது கர்ம மார்கம் என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் கடினமான பாதை. எந்த நோக்கமும் ( சங்கல்பமும் ) இல்லாமல் கர்மம்  புரிவது என்பது மிகவும் சிரமமானது. அதனால் ஒருவன் பக்திவழியைப் பின்பற்றவேண்டும் என்று  சொல்லப்படுகிறது.

"ஒருவன் வீட்டில் ஶ்ராத்தம் செய்துகொண்டிருந்தான். பலபேருக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே ஒரு கசாப்புக்காரன் ஒருபசுவை கொல்வதற்காக  ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அந்த பசுவை அடக்கி ஓட்டுவது சுலபமாக இல்லை; அதனால் களைத்துவிட்டான். ' இந்த சிராத்த வீட்டில் போய் நன்றாக விருந்துசாப்பாடு சாப்பிட்டால், களைப்பெல்லாம் போய்விடும் ; பின் மாட்டை நன்றாக ஓட்டிச் செல்லலாம் '  என மனதில் நினைத்து , அவ்வாறே செய்தான்.ஆனால் அவன் பசுவைக் கொன்ற பாவம் சிராத்தம் செய்தவனுக்கும் வந்தது ! அதனால்தான் பக்திவழி, கர்ம வழியைவிட நல்லது என்று நான் சொல்கிறேன். "

தர்ம விஷயம் சூக்ஷ்மம் நிறைந்தது. கர்மத்தில் சிறு தவறு  நேர்ந்தாலும் விளைவுகள் மாறிவிடும். "கஹனா கர்மணோ கதி : " என்கிறார் பகவான், கீதையில் (4.17 )

யுகந்தோறும் மாறும் தர்மம்


நம் சாஸ்திரங்களின் படி, தர்மம் யுகந்தோறும் மாறுபடுகிறது. இதனால்தான், பல யுகங்களில் தோன்றிய பல புராணங்களில் பலவகையான  தர்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. க்ருத யுகத்தில் த்யானமும் தவமும் முக்கியமாக இருந்தன. சிறு பிள்ளையான த்ருவன்கூட தபஸ் செய்தான்! த்ரேதாயுகத்தில் யாக-யஜ்ஞங்கள் முக்கியமாயின. த்வாபரயுகத்தில் அர்ச்சாவதார மூர்த்திகளின் வழிபாடு, தீர்த்தயாத்திரை முதலியவை ப்ரதானமாயின.



இன்றும் இவையெல்லாம் பெயரளவில் இருக்கின்றன.ஆனால் நடப்பது என்ன ? முன்யுகத்தில் த்யானம் செய்து கடவுளை அறிய முற்பட்டார்கள். அசுரர்கள் தாம்  தவம் செய்து வரங்கள் பெற்றார்கள். இன்றோ, த்யானம் ( meditation )என்ற பெயரில் நாம் உலகாயத நன்மைகளையே கோருகிறோம் -பண்டைய அசுரர்களைப்போல ! இன்று, ஸ்தல சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, எஜமான சுத்தி என்று எதுவுமே இல்லை- பின் என்ன யஜ்ஞம் செய்து கிழிப்பது? நமது எல்லா நதிகளும் அசுத்தமாகிவிட்டன; கோவில்கள் வ்யாபாரத் தலங்களாகிவிட்டன ! அங்கு பயன்படும் அத்தனை பொருள்களும் கலப்படம் ! பால். தேன், சந்தனம், கல்பூரம்- எல்லாம் கலப்படம் ! அர்ச்சகர்கள் காசுக்குத் தகுந்த மாதிரி மந்திரம் சொல்கிறார்கள் ! பாடல் பெற்ற தலங்களின் நிலையைப் போய்ப்பாருங்கள் ! பல கோவில்களில் அர்ச்சகரே இல்லை ! பல அர்ச்சகர்களுக்கு மந்திரமே வருவதில்லை ! கோவில்கள் உள்ளும் வெளியும் அசுத்தம், குப்பை-கூளம்.அரசு நிர்வாகத்தில் உள்ள  கோவில்களில் ஆகம விதிகளைக்கூட சரிவர மதிப்பதில்லை. கோவில் சொத்தில் கைவைத்து ஏதேதோ செய்கிறார்கள்..பழநி கோவிலில் மூல விக்ரஹத்தையே சுரண்டிச் சுரண்டித் தேய்த்துவிட்டார்கள். இதன் பெயர்தான் வழிபாடா ? 

கலியுக தர்மம்

இந்தப் பழைய முறைகள் எல்லாம் கலியுகத்தில் செல்லாது என்பது நமது சாஸ்திரமே சொல்லும் விஷயம். இதை விளக்கத்தான் பாகவத புராணமே எழுந்தது. அதன் முதலிலும் ( மாஹாத்மியம் ) 12வது ஸகந்தத்திலும் கலியுகத்தின் தன்மை நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.






Narada instructs Vyasa to write Bhagavatam.
Copyright details not known. Used here for non-commercial, educational purpose. Thanks to the creator of the picture.


யதாமுகுந்தோ பகவான் க்ஷ்மாம் த்யக்த்வா ஸ்வபதம்கத:
தத்தினாத் கலிராயாத:  ஸர்வஸாதன பாதக :                          1.66

பகவான் முகுந்தர் என்றைக்கு மண்ணுலகை நீத்து தம் இடத்திற்கு ஏகினாரோ, அன்றே, நல்லவைகளுக்குத் தீங்கு செய்யும் கலியுகம் பிறந்துவிட்டது.

கலினாதர்ம மித்ரேண தரேயம் பாதிதாதுனா                            1.30
இப்போது, அதர்மத்திற்குத் துணையான கலியுகம் ப்ரபஞ்சம் முழுதையும் ஆட்டுவிக்கிறது.

அட்டஶூலா ஜனபதா: ஶிவஶூலா த்விஜாதய:                         1.36
தேசத்தில் அன்னத்தை கடைகளில் விற்கிறார்கள்.
ப்ராம்மணர்கள் கூலிக்கு வேதம் கற்றுத்  தருகிறார்கள்.

....... யுகோயம் தாருண: கலி:
தேன லுப்த: ஸதாசாரோ யோகமார்கஸ் தபாம்ஸி  ச              1.57
பல கோரமான தீங்குகளை விளைவிக்கும்  கலியுகம் இப்போது நடைபெறுகிறது. ஆகவே ஸதாசாரம் ( நல்லொழுக்கம் ), யோகமார்கம், தவம் ஆகிய அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன.

குகர்மாத்சரணாத் ஸார : ஸர்வதோ நிர்கதோதுனா 
பதார்த்தா: ஸம்ஸ்திதா பூமௌ பீஜஹினாஸ்துஷா  யதா        1.70

மக்கள் தவ நெறியைவிட்டு மற நெறி பிடித்தொழுகுவதால் , எல்லாப் பொருள்களின் ஸாரமும் அழிந்துவிட்டது. பொருள்கள் விதையற்ற பதர்போல் ஆகிவிட்டன. 

அத்யுக்ர பூரி கர்மாணோ  நாஸ்திகா ரௌரவா ஜனா: 
தேபி திஷ்டன்தி தீர்தேஷு தீர்த்த ஸாரஸ்ததோ கத :                1.72

நதி தீரங்களிலும், புண்ய இடங்களிலும் பலவித தீச்செயல்கள் புரிபவர்கள் , தெய்வமில்லை என்று சொல்லித் திரியும் நாஸ்திகர்கள், தீய ஒழுக்கத்தால் நரகம் புக இருப்பவர்கள் ஆகியோர் வசிப்பதால் தீர்த்தங்களின் மஹிமை குறைந்து பெருமை அழிந்தது.

இவ்வளவு தீமை இருந்தும், இதிலிருந்து தப்ப எளிய உபாயமும் இருக்கிறது:


யத் ஃபலம்  நாஸ்தி  தபஸா  ந யோகேன ஸமாதினா
தத் ஃபலம் லபதே ஸம்யக்கலௌ  கேஶவ கீர்தனாத்                    1.68

தவம், யோகம், சமாதி ஆகிய உபாயங்களால் பெறவியலாத உயர்ந்த பதவி கலியுகத்தில் பகவான் கேஶவனின் நாமங்களைப் பாடுவதாலேயே எளிதில்  பெறலாகும்.

ஏகாகாரம் கலிம் த்ருஷ்ட்வா ஸாரவத்  ஸாரனீரஸம்                  1.69

இந்தக் கலிகாலம் சாரமில்லாததானாலும்,  பகவான் நாம ஸங்கீர்த்தனத்தினாலேயே அனைத்து நன்மைகளையும் பெறலாம். [இதைக் கருதியே பரீக்ஷித் இதை விட்டுவைத்தான் .]


ஸத்யாதி த்ரியுகே  போத வைராக்யௌ முக்தி ஸாதகௌ
கலௌ து கேவலா பக்தி: பரஹ்ம ஸாயுஜ்ய காரிணி                   2. 4

ஸத்ய (த்ரேதா) யுகம், த்ரேதாயுகம், த்வாபர யுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் ஞானமும் வைராக்யமுமே முக்திக்கு சாதனங்கள். ஆனால் இந்தக் கலியுகத்தில் பக்தி யொன்றுதான் ப்ரஹ்ம சாக்ஷாத்காரத்திற்கான [ முக்திக்கான ]  காரணமாகும்.

ந தபோபிர் ந வேதைஶ்ச  ந ஞானேனாபி கர்மணா
ஹரிர் ஹி ஸாத்யதே பக்த்யா ப்ரமாணம் தத்ர கோபிகா              2.18

தவம், வேதாத்யயனம், ஞானம், கர்மயோகம், ஆகிய எந்த சாதனங்களாலும் பகவானை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பக்திக்கு மட்டுமே அவர் கட்டுண்டவர்.  இதற்கு கோபிகைகளே ப்ரமாணம்.

பக்திர் ஏகைவ முக்திதா                                                                  2.21

முக்தியை அடைய பக்தி ஒன்றே  போதும்.

[ இவையெல்லாம் தேவரிஷி நாரதர் கூற்றாக வருபவை. கலியுகம் பற்றிய விவரங்கள் பாகவதத்தில் நிறைய வருகின்றன. அன்பர்கள் மூலத்தைப் படித்து அறியவேண்டும். ப்ரவசனம் செய்பவர்களும் விவரங்களை முழுதும் சொல்வதில்லை. பலவற்றை மழுப்புகிறார்கள். மொழிபெயர்ப்பில் கூட எல்லாம் சரியாகக் கொடுப்பதில்லை. ]

இவ்வளவு இருந்தும் ஸ்ரீ ஶுக ப்ரஹ்மம், கலியே உயர்ந்தது என்கிறார் !


கலேர் தோஷனிதே ராஜன் நஸ்தி ஹ்யேகோ மஹத் குணான்
கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த ஸங்க பரம் வ்ரஜேத்           12. 51

பரீக்ஷித் ராஜனே ! தோஷங்கள் நிறைந்துள்ள இந்தக் கலியுகத்தில் ஒரே ஒரு நற்குணமும் உள்ளது. பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனது கீத்தனம்  ஒன்றினாலேயே , உலகியல் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது; முக்தியும் பெறலாம். பகவனது உயர்ந்த கதியும் கிடைக்கிறது.

க்ருதே யத் த்யாயதோ  விஷ்ணும்  த்ரேதாயாம் யஜதோ மகை:
த்வாபரே பரிசர்யாயாம் கலௌ தத்தரி கீர்தனாத்                          12.52


க்ருத  யுகத்தில் விஷ்ணுவை த்யானித்தலாலும், த்ரேதாயுகத்தில் அவருக்காக பெரிய யஜ்ஞங்கள் செய்வதாலும், த்வாபரயுகத்தில் அவரை முறைதவறாமல் பூஜித்ததாலும் பெறும் புண்யங்கள் யாவை உண்டோ, அவற்றை இக்கலியுகத்தில் பகவானது நாம ஸங்கீர்த்தனம் செய்வதாலேயே பெறலாம். 


த்யாயன்  க்ருதே யஜன் யஜ்ஞை : த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன்
யதாப்னோதி ததாப்னோதி  கலௌ ஸங்கீர்த்ய கேஶவம்  


க்ருத யுகத்தில் த்யானத்தின் மூலமும், த்ரேதாயுகத்தில் ய்ஜ்ஞங்களாலும், த்வாபர யுகத்தில் அர்ச்சனையினாலும் எதை அடையலாமோ அதை, கலியுகத்தில் பகவான் கேஶவனின் ஸங்கீர்தனத்தால் அடையலாம்.

[ இது 7வது ஸ்கந்தத்தில் ப்ரஹ்லாதன் சொல்வது .]

ஆக, கலிகாலத்தில் நன்மை தருவது பக்தி ஒன்றுதான் !





ஸ்ரீ ராமக்ருஷ்ணர் காட்டும் வழி





ஆகவே, இக்கலியுகத்தில் பக்தி ஒன்றுதான் முக்திக்கு நேர் சாதனம் என்பது  ஸ்ரீமத் பாகவதத்தின்  முடிவு. இதை தற்காலத்தில் தயங்காது சொன்னவர் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர். இதை அவர்  மீண்டும் மீண்டும் சொன்னார். அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறேன்.



The injunction is that the path of bhakti described by Narada is best suited to the Kaliyuga.   June 30, 1884


According to Narada, the devotees should sing the names and glories of God. The path of karma is not the right one for the Kaliyuga. Bhaktiyoga is the right path. ...The singing of the name and glories of God destroys the effect of past action.  October,2. 1884



Innumerable are the ways that lead to God.

What is Bhaktiyoga ? It is to keep the mind on God by chanting His name and glories. For the Kaliyuga the path of devotion is the easiest.This is indeed the path for this age.
The path of karma is very difficult.
To follow jnanayoga in this age is also very difficult.
Therefore Bhaktiyoga is prescribed for this age.
Bhaktiyoga is the religion for this age.
June 25, 1884 (this is detailed discussion )

care : 'to keep the mind on God ' ! This is ' मन्मना भव  ' மன் மனா பவ  as the Gita says !


The best path for this age is bhaktiyoga, the path of Bhakti prescribed by Narada : to sing the name and glories of God and pray to Him with a longing heart.

June 15,1884


இதைப்பற்றி அவர் மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் எவ்வளவு தீவிரமாகவும் சரியாகவும் ஸ்ரீமத் பாகவதத்தின் கருத்தைப் பிரதிபலிக்கிறார் என்பது பாகவதத்தையும், ஸ்ரீ ராமக்ருஷ்ணர் வாக்குகளையும் படித்தவர்களுக்கு எளிதில் விளங்கும். ஸ்ரீமத் பாகவதமே மனித உருவில் வந்து பேசுவதுபோலிருக்கிறது! நமது ஆன்மீக வாழ்வுக்கு இதைவிட ஆணித்தரமாக யார்  என்ன சொல்ல முடியும் ?



Note: 
All quotations from Sri Ramakrishna are from that greatest of great books: The Gospel of Sri Ramakrishna, Sri RK Math, Chennai. 

Saturday, 23 July 2016

52, மஹாகுரு ஸ்ரீ க்ருஷ்ணர்


52. மஹாகுரு ஸ்ரீ க்ருஷ்ணர் ! 




ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் பக்தி பற்றிச் சொன்ன விஷயங்களை  சென்ற 13 கட்டுரைகளில் பார்த்தோம். கீதையில் பகவான் இந்த ஒரு விஷயம் பற்றிதான் மிக அதிகமாகத், தொடர்ச்சியாகப் பேசியிருக்கிறார் ! அர்ஜுனனால் நம் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம் இது. அதுவரை நண்பனாக, உறவினனாக இருந்த க்ருஷ்ணரை குருவாக மாற்றிய பெருமை அர்ஜுனனுக்கு!  நாம் அர்ஜுனனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

ஸ்தோத்ரங்கள்  பலவிதம் !


ஆனால், இதையும் மிஞ்சிய இன்னொரு விஷயம் இருக்கிறது. நமது பக்தி இலக்கியத்தில் ப்ரார்த்தனைகளுக்குப் பஞ்சமில்லை. தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சாதுக்கள், பக்தர்கள், பண்டிதர்கள் என்று பலர் ப்ரார்த்தனைகள் எழுதிவைத்துள்ளனர். ஏன், ராவணன்  போன்ற ராக்ஷஸர்களும் ஸ்தோத்திரம் செய்துள்ளனர். இவற்றை ஸ்ரீமத் பாகவதம் முதலிய  புராணங்களில்  பார்க்கலாம்.










இவற்றில் பலவற்றைத் திரட்டி " ஸ்ரீ ஜய  மங்கள ஸ்தோத்ரம் " என்ற பெயரில் உரையுடன் புத்தகமாக  வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். 










பகவானுடைய விபூதிகளைக் கேட்டும் அவருடைய விஶ்வரூப தரிசனம் கண்டும்  அர்ஜுனனும் அடக்க முடியாமல் ஸ்தோத்திரம் செய்கிறான். இது கீதையில் 10,11வது அத்யாயங்களில் வருகிறது. அர்ஜுனன் செய்த இந்த ஸ்தோத்ரம் உத்தமமானது. ஏனெனில் அர்ஜுனன் சாதாரணமானவனல்ல. அவன் பகவானுக்குத் தோழனாக இருந்தவன். பகவானாலேயே  "அன்பன், ப்ரியமானவன் "  ( இஷ்டோஸி, ப்ரியோஸி ) என்றும், பாபமற்றவன் 
 (அனக ) என்றும், தெய்வ ஸம்பத் உள்ளவனென்றும்  [கீதை 16.5 ] புகழப்பட்டவன். மேலும், நர-நாராயண ரூபத்தில் என்றும் பகவானை விட்டுப் பிரியாதிருப்பவன். இவ்வளவு பெரியவன் ஒரு ஸ்தோத்ரம் செய்தால் அதன் மஹிமையைச்  சொல்லவா வேணும் ?

அர்ஜுனன் செய்த ஸ்தோத்ரத்தில் பகவானை  गुरुर्गरीयान्।
 " குருர் கரீயான் " = மிக உயர்ந்த குரு ( 11.43 ) என்று நமக்கு அறிமுகப் படுத்தினான்! குருவை ப்ரஹ்ம, விஷ்ணு, மஹேஶ்வரராகப் பார்ப்பது நமது மரபு. ஆனால் இங்கு பகவானே குருவாக வந்திருக்கிறார் ! இது எப்படிப்பட்ட பாக்யம் ! அர்ஜுனன் செய்த ஸ்தோத்ரத்தைப் பார்க்குமுன், குருவைப் பற்றிய சில கருத்துக்களைப் பார்ப்போம்.
பல குரு மரபுகள்


Adi Guru Dakshinamurti


நமது ஹிந்து மதத்தில் பல குரு மரபுகள் உள்ளன. ஸ்மார்த்தர்கள்  கொண்டாடும் சில :
  • ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. இவர் பேசாமலேயே ஞானம் புகட்டியவர். "மவுனமா உரையாற்காட்டும்  மாபிரம வஸ்து வாலன். "
  • ஸதாஶிவ ஸமாரம்பாம் ஶங்கராசார்ய மத்யமாம் அஸ்மத் ஆசார்ய  பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்
  • வஸுதேவ சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.
  • ஸ்ரீ தத்தாத்ரேயர் பாகவதத்தில் 24 குருமார்களைப் பற்றிச் சொன்னார்.
குரு என்ன செய்கிறார்? தீக்ஷை தருவது, மன்த்ரோபதேஶம் செய்வது, வித்தை கற்றுத் தருவது முதலிய பல குருமார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையான குருவின் உண்மையான செயல் இதுவல்ல. நமது ஜீவன் கடைத்தேற என்னவழி அவசியமோ அதைக்காட்டித்தருவதுடன், அதற்கான சாதனையை நாம் மேற்கொள்ள நம்மைத்தூண்டும் சக்தியையும் நமக்குத் தருபவரே குரு. அத்தகைய குரு நமது பாவங்களையும் ஏற்றுத் துடைத்துவிடுகிறார் . அதனால் தான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர், ஸ்ரீ ரமண பகவான்  போன்ற  ஞானிகளும்  மெய்வருந்தினார்கள்.
 The Guru does not merely inform. He transforms.


த்யாகராஜரின் பார்வையில் குரு

painting by S.Rajam











நாம் ஸத்குரு எனக் கொண்டாடும் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்  குருவைப்பற்றி சில முக்கிய  விஷயங்களைச் சொல்கிறார்.









प. गुरु लेक(यॆ)टुवण्टि गुणिकि तॆलियग पोदु

अ. करुकैन हृ(द्रो)ग गहनमुनु कॊट्टनु सद्-(गुरु)

च. तनुवु सुत धन दार दा(या)दि बान्धवुलु
जनियिञ्चि चॆदरु जालिनि करुणतो
मनुसु(न)ण्टक सेयु म(न्द)नुचु तत्व
बोधन जेसि कापाडु त्यागरा(जा)प्तुडगु (गुरु)




குருலேக எடுவண்டி குணிகி தெலியகபோது

கருகைன ஹ்ருத ரோக  கஹனமுனு  கொட்டனு ஸத்.... குருலேக

தனுவு  ஸுத தன தார தாயாதி பாந்தவுலு
ஜனியிசி செதரு  ஜாலினி கருண தோ
மனஸு நண்டக ஸேயு  மந்தனுசு தத்வ
போதன ஜேஸி  காபாடு த்யாகராஜாப்துடகு.... குருலேக

தீவிரமான, மனதைப் பற்றிய ரோகங்கள் ( காமம்.க்ரோதம் முதலியவை ) என்னும் பெரும் காட்டை அழிப்பது  ஸத்குருவினுடைய அருளின்றி  (உதவியின்றி ) எத்தகைய குணவானுக்கும் சாத்தியமல்ல.

உடல், மக்கள், செல்வம், மனைவியர், உறவினர் போன்றவை தோன்றி  அவற்றின் மூலம்  பரவும் துக்கம் அண்டவிடாமல்  செய்யும் நல்ல மருந்து  தத்வ  போதனையாகும்.. 
அதனைக் கருணையுடன் செய்பவர் த்யாகராஜனுக்கு ஆப்தராகிய  ஸத்குரு ஆவார். 

ஸ்ரீ த்யாகராஜருக்கு குரு யார் ? ஒரு விதத்தில் அது ஸ்ரீ ராமரே. " புக்தி முக்தி கல்கு நனி கீர்த்தனமு போதிஞ்சேவாடு " என்று ஒரு இடத்தில் பாடுகிறார். இன்னொரு வகையில்  ஸ்ரீ நாரதரே அவருக்கு குரு.





प. नारद गुरु स्वामि(यि)कनैन
न(न्ना)दरिम्प(वे)मि ई कर(वे)मि

अ. सारॆकु संगीत योग नैगम
पारंगतुडैन परम पावन (ना)

च. इतिहास पुरा(णा)गम चरितमु-
(लॆ)वरि-वल्ल कलिगे
पतिनि दान(मि)व्व बुद्धि सत्य-
भाम(कॆ)टुल कलिगे
द्युति जित शर(द)भ्र निनु विना मुनि
यतुल(कॆ)वरु कलिगे
क्षितिनि त्यागराज विनुत नम्मिति
चिन्त तीर्चि प्रह्लादुनि ब्रोचिन (ना)



நாரத குருஸாமி இகனைன  
நன்னாதரிம்ப வேமிஈகற வேமி 

ஸாரெகு ஸங்கீத யோக நைகம
பாரங்கதுடை ன பரமபாவன

இதிஹாஸ புராணாகம  சரிதமு
லெவரிவல்ல கலிகெ
பதினி தானமிய்ய புத்தி  ஸத்யபாம
கெடுல கலிகெ
த்யுதி ஜித  சரதப்ர  நினுவினா முனி
யதுல கெவரு ஸலிகெ
க்ஷிதினி  த்யாகராஜவினுத  நம்மிதி
சிந்த தீர்ச்சி  ப்ரஹ்லாதுனி ப்ரோசின 
நாரத குருஸாமி

நாரத குருநாதரே ( ஞானத்தை அளிப்பவரே ) !இப்பொழுதாவது  என்னை ஆதரிக்கக்கூடாதா?உமது தயவுக்கு ஏன் இந்தப் பஞ்சம் ?ஸங்கீதம், யோக ஶாஸ்திரம், வேத வேதாங்கம்  முதலியவற்றைக்கரைகண்ட புனித மூர்த்தியே !

1. இதிஹாஸம், புராணம் , ஆகமம், திவ்ய ஶாஸ்திரங்கள் முதலியவை உம்மைத்தவிர வேறு யாரால் ப்ரகாஸம் அடைந்திருக்க முடியும் ?2.பதியையே தானம் செய்யும் புத்தியை  ஸத்யபாமைக்குவேறு யார் கொடுத்திருக்க முடியும் ?3.தேக  கான்தியில் ஶரத்காலத்து மேகத்தை வென்றவரே ! முனிவர்களுக்கும் யதிகளுக்கும் உம்மையன்றி  வேறு யார் கதி ?4. இவ்வுலகில் நான் உம்மையே நம்பினேன்.  ப்ரஹ்லாதனின் மனக் கவலையைத்  தீர்த்து அவனைக் காத்தருளிய நாரத குரு ஸ்வாமி !


இந்த சரணத்தில் வரும் செய்திகளை விளக்கினால் நீளும். வேறு  தக்க புத்தகங்களைப்  பார்க்கவும்.






प. नी चित्तमु निश्चलमु
निर्मल(म)नि निन्ने नम्मिनानु

अ. ना चित्तमु वञ्चन चञ्चल(म)नि
नन्नु विड(ना)डकुमि श्री राम (नी)

च. गुरुवु चिल्ल गिञ्ज गुरुवे भ्रमरमु
गुरुडे भास्करुडु गुरुडे भद्रुडु
गुरुडे उत्तम गति गुरुवु नी(व)नुकॊण्टि
धरनु दासुनि ब्रोव त्यागराज नुत (नी)



நீ சித்தமு  நிர்மலமு  நிஶ்சலமனி
நின்னே நம்மினானு

நாசித்தமு வஞ்சன சஞ்சலமனி
நன்னுவிட நாடகுமி ஸ்ரீராம

குருவு சில்லகிஞ்சு குரவே  ப்ரமரமு
குருடே பாஸ்கருடு
குருடே பத்ருடகு  குருவே  நீவனுகொண்டி
தரனு தாசுனி ப்ரோவ  த்யாகராஜனுத

நீ சித்தமு.......


இங்கு ராமரையே குருவாக நினைத்துப் பாடுகிறார்.

ஸ்ரீ ராம ! உன் உள்ளம் நிர்மலமானது, சஞ்சல மற்றது என்று  அறிந்து  உன்னையே நம்பியிருக்கிறேன்,என மனது வஞ்சனையும்  சலனமும் நிரம்பியது  என்பதற்காக  நீ என்னை விட்டுவிடலாகாது,
குருவே  சேற்று நீரைத் தெளியவைக்கும் தேத்தாங்கொட்டை.அவனே புழுவை வண்டாக மாற்றும் தேன் வண்டு,அவனே அஞ்ஞானத்தை விலக்கும் (ஞான ) சூர்யன்.மங்களம் தருபவனும் அவனே.அத்ததைய குரு நீயே என்பதை உணர்ந்தேன்.உன் அடியவனான என்னைக் காத்தருள்.







இந்தப் பாடலில் குரு எத்தகைய மாற்றத்தை transformation
தோற்றுவிக்கிறார் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்.
 இந்த தேத்தாங்கொட்டை உதாரணம் ஆதி சங்கரரும் ஆன்மபோதத்தில் சொல்லியிருக்கிறார். இதை பகவான் ஸ்ரீ ரமணர் தமிழ் வெண்பாவாக்கித் தந்துள்ளார்.









அறியாமை யாங்கலக்க  மாருமுயிர்  தூய்தா
மறிவுப் பயிற்சியி  னாலவ்-  வறிவு
மகற்றி யறியாமை யழியுமே நீர்மா
சகற்றுந் தேற்றாம் பொடியொப் பாய்.  (5 )

[ஸ்ரீ த்யாகராஜ கீர்த்தனைகளின் தமிழ் வடிவம் ஸ்ரீ டி. எஸ். பார்த்தஸாரதி அவர்களின் பதிப்பிலிருந்து  எடுத்தது. கருத்தும் அவர் வழியே. தேவ நாகரி வடிவம் இன்டர்னெட்டிலிருந்து எடுத்தது. இதில் சில மாற்றங்கள் தேவை ]

இந்த மூன்று  கீர்த்தனைகளிலும் ஸ்ரீ ஸ்வாமிகள் குருவின் செயலை நன்கு விளக்கியுள்ளார். இதைப் படித்தபின் கீதையில் பகவான் குருவாக இருந்து இது அத்தனையும் செய்ததை நாம் நன்குணரலாம். அர்ஜுனன் பகவானை மிக உயர்ந்த குரு என்று சொன்னதில் ஆச்சரியமில்லை யல்லவா ?

அவன் செய்த ஸ்தோத்திரத்தை  இனிப் பார்ப்போம்.



from Gardeners Hertfordshire blog. Gratefully acknowledged.