81.நாம் நாட்டுக்காக என்ன செய்கிறோம் ?
1961ல் ஜான் கென்னெடி அமெரிக்க நாட்டின் அதிபராகப் பதவியேற்றபோது கூறிய ஒரு வாக்கியம் மிகப் புகழ் பெற்றது:
Source : Brainy Quote. Thanks.
சர்க்கார் : அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே !
நாம் இந்தியர்கள் இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டு அவதிப்படுவதில்லை! லாப்-டாப், சைக்கிள், மிக்ஸி . டிவி என்று எல்லாமே சர்க்காரே தரவேண்டுமென எதிர்பார்க்கும் மன நிலையை அரசே வளர்த்துவிட்டது. குடி தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறோம். பல இடங்களில் சர்க்கார் தண்ணீருக்கு குழாய் போட்டிருக்கிறார்கள்; தண்ணீர் வருவதில்லை. ஆனால் அரசினரே தாராளமாக கள்ளு-சாராயம் -அதுவும் சீமைச் சரக்கு- விற்பார்கள்! அரசினர் பள்ளி, ஆஸ்பத்திரி என்று (பேருக்கு ) இருக்கிறது. வேறு இடங்களுக்குப் போக இயலாதவர்கள்தான் இங்கெல்லாம் போவார்கள். எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வதில்லை; தேர்தல் சமயத்தில் பல சலுகைகள் காட்டுவார்கள். ஜனங்களுக்கு இதே பழகிவிட்டது. ஹிந்தியில் மா-பாப் சர்க்கார் [ Maa- Baap sarkar ]என்பார்கள். அரசே அம்மா-அப்பா போல இருந்து எல்லாவற்றையும் இலவசமாகவே தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்துவிட்டது.
நாம் நாட்டுக்காக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்?
பிரிக்கப்பட்ட ஹிந்துக்கள்
நாடு அரசல்ல, அரசு மட்டுமல்ல. இது நமது மக்கள் சமுதாயம்; அதன் சரித்திரம், பண்பாடு, சமூக இயல் ஆகியவற்றின் தொகுதி. ஆனால் அரசியல் காரணங்களால் மக்கள் மொழி, ஜாதி, அரசியல் கட்சி , பெரும்பான்மை -சிறுபான்மை, முன்னேறியவர்-பின்தங்கியவர் என்றெல்லாம் பிரிக்கப்பட்டு விட்டனர். இந்தியா ஒரு நாடா என்பதே சந்தேகமாக இருக்கிறது,
மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டதுமுதல் இந்தியாவில் ஹிந்துக்களுக்கு மதிப்பில்லை. ஹிந்து என்றாலே ஏதோ தீவிரவாதி போல ஒரு நிலைமை உருவாகிறது. கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் மார்தட்டலாம்: ஏனெனில் அவர்கள் 'மைனாரிடிகள் '. அவர்கள் உரிமை பாதுகாக்கப் படும். ஹிந்துக்களுக்கு மதத்தின் அடிப்படையில் பாதுகாப்பு இல்லை! மசூதி, சர்ச்சு பக்கம் அரசு போகாது; ஆனால் ஹிந்துக் கோயில்களை அரசே நடத்தும்; அங்கு வரும் வருமானத்திலும் கை வைக்கும்! இதையெல்லாம் ஹிந்துக்கள் கண்டுகொள்வதில்லை! பாவம், வயிற்றுப்பாடே பெரும்பாலானவர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது.மீதி நேரத்தில் அரசியல், சினிமா, கிரிக்கெட் என்று எத்தனையோ அவசர ஜோலிகள் வேறு !
ஹிந்துக்கள் மற்ற மதத்தினர் போல இல்லை. இவர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு மத குரு கிடையாது; எல்லோரும் ஒருவர் சொல்வதைக் கேட்கமாட்டார்கள் ! தங்கள் மதத்தின் அடைப்படை, ஆணிவேர் எது என்பதே பலருக்கும் தெரியாது. தெரிந்தவர்களும் அதை பலவிதத்தில் விளக்குவார்கள்.
[ குழப்புவார்கள்.] அதன்மீது வேற்றுமையை வளர்ப்பார்கள்.
மொழிவாரியாக மாநிலங்கள் கேட்டது ஹிந்துக்களே ( அதுவும் காந்தி ஊக்குவித்தது ) அவ்வாறு பிரிக்கப்பட்டதில் ஹிந்துக்களே அடிவாங்கினார்கள். எல்லைத் தகறாறு, நதி நீர் சண்டை என்று புதிய மஹாபாரதம் தொடர்கிறது. நாம் ஹிந்து , இந்தியன் என்பதைவிட, நான் தமிழன், மலையாளி, கன்னடியன் தெலுங்கன் என்பதில் தான் அதிகம் பெருமைப் படுகிறார்கள் ! [இன்று தெலுங்கர்களுக்கிடையிலும் ஆந்திரர்கள்- தெலிங்கானாக்காரர்கள் என்ற பிரிவினை வேறு! ]வட மாநிலங்களிலும் இப்படி எத்தனையோ பிரிவுகள்!
அரசியல் சக்திகள் பிளவிலேயே ஆதாயம் கண்டுவிட்டன. தேசியக் கட்சிகள் என்று தம்மைக் கூறிக்கொள்வனவும் , ஏதாவது பிரச்சினை என்று வந்தால் மாநிலத்திற்குத் தகுந்தபடி ஆட்டம் போடுகின்றன! தேசியக் கண்ணோட்டம் என்பது மருந்துக்குக்கூட இல்லை! தேசீய எண்ணமும் அணுகுமுறையும் உள்ள அரசியல் வாதிகள் எந்த மாநிலத்திலும் அனேகமாக இல்லை.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் !
சுதந்திர தினம், குடியரசு தினம் என விடுமுறை கொண்டாடுகிறோம். யாராவது தேசத்தைப்பற்றி ஒரு நிமிஷமாவது நினைக்கிறோமா? இந்த சுதந்திரத்திற்காக எத்தனைபேர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பதை நினைக்கிறோமா ? கொடியேற்றியாவது நம் தேசபக்தியைக் காட்டுகிறோமா? பள்ளிக்குழந்தைகள் தான் இதில் கட்டாயமாக பங்குபெற வைக்கிறார்கள். தேசீய கீதம் எத்தனைபேருக்குத் தெரியும் ? எங்காவது வாய்திறந்து பாடுகிறோமா ? இன்று அதைப்பற்றியும் சர்ச்சை ! சிலர் மத அடிப்படையில் அதைப் பாடமாட்டோம் என்கிறார்கள்.
ஆங்கிலேய அரசிடமிருந்து சலுகைகள் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டது இந்திய தேசீய காங்கிரஸ். அரசுக்கு விசுவாசமாக இருந்து, சிறிது சிறிதாக சலுகைகள் பெறுவதற்கு ஆங்கிலக் கல்வி பெற்றவர்களின் நலனுக்காக இது தொடங்கப்பட்டது. பணிவுடன் விண்ணப்பம் செய்வதே இவர்கள் வேலை. 1905 வரை இந்த நிலை நீடித்தது. திலகர், ஸ்ரீ அரவிந்தர் , பிபின் சந்த்ர பால், லாலா லாஜ்பத ராய் ஆகியோருக்கு இந்த அடிமைத்தனம் பிடிக்கவில்லை. இந்தியா பூரண சுதந்திரம் பெறவேண்டும் என்றார்கள் [ இது காந்தி இதைச் சொல்வதற்கு 25 வருஷங்களுக்கு முன்பு.]; அது நமது பிறப்புரிமை; ஏன் கெஞ்சவேண்டும், போராடிப் பெறுவோம் என்று பாய்ந்தார்கள். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில் புதிய எழுச்சியை உருவாக்கினார்கள்.
ஸ்ரீ அரவிந்தர். 1907
"வந்தே மாதரம் " என்பது இவர்களின் தாரக மந்திரமாக இருந்தது. இதன் அடிப்படையில் நாடு ஒன்று சேர்ந்தது. ஆங்கில அரசுக்கு குலை நடுக்கம் கண்டது. மூர்கத்தனமாக அடக்குமுறையில் ஈடுபட்டனர். திலகரை பர்மாவில் சிறையில் அடைத்தனர். ஸ்ரீ அரவிந்தர் அலிபூர் சிறையில் தனிக்காவலில் அடைக்கப்பட்டார். சரியான தலைமை இல்லாமல் போனது. கோகலே போன்ற சாமியார் [ மிதவாதிகள். பாரதியார் அப்படித்தான் பாடியிருக்கிறார் ] கோஷ்டியின் கையே ஓங்கியது. நடிப்புச் சுதேசிகள் பெருகினர். வந்தே மாதரம் மறந்துபோனது. பிறகு காந்தி வந்தார், மாஹாத்மா காந்திஜிக்கு ஜே என்று கோஷம் தொடங்கியது. ஆளைக்கொண்டாடும் அவலம் ஆரம்பித்தது. நாடு மறந்துபோய் விட்டது. இன்றுவரை இந்த நிலை நீடிக்கிறது.
Lal-Bal-Pal. Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak, Bepin Chandra Pal.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே என்பது ஹிந்துக்கள் கொள்கை. நமது நாடு தாய்நாடு. இது ஒரு தெய்வ சக்தி-வெறும் நிலப்பரப்பல்ல. இங்குள்ள மலையும் காடும், கடலும் நதியும் , ஏரி - குளம் என எல்லாமே தெய்வ அம்சம் பொருந்தியதாகக் கருதப்படுகின்றன. நாடெங்கும் புனிதத் தலங்கள் - சாரிசாரியாக மக்கள் யாத்திரை செல்வது தொன்று தொட்டு நிகழ்வது. இப்படிப் புனிதத்தன்மை வாய்ந்த நமது நாட்டின் பெருமையை "வந்தே மாதரம் " என்ற மந்திரச் சொற்கள் அழகாகக் காட்டின. இதுவே இந்திய மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும் மந்திரக்கோல் ஆனது. இப்படிப்பட்ட உண்மையான தியாகிகள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் இன்றைய அரசியல் வாதிகள் வந்தே மாதரம் எனச் சொல்லக் கூசுகின்றனர்! கேடுகெட்ட, நன்றிகெட்ட நடைப்பிண்டங்கள் !
எல்லா அரசியல் கட்சிகளும் நாட்டிற்காக, மக்களுக்காகப் பாடுபடுவதாகத்தான் சொல்லிக்கொள்கின்றன. உண்மையில் அரசிடமிருந்து என்ன ஆதாயம் தேடலாம் என்பதே இவர்கள் இலக்காக இருக்கிறது.. 'நேர்மையாக உழையுங்கள்; அதற்கான நியாயமான பலன் உங்களுக்கு வரும்; இதை அரசு நிச்சயம் நிறைவேற்றும் " என எந்தக்கட்சியும் சொல்வதில்லை. உழைப்பில்லாமலேயே, எந்த அரசியல்-பொருளாதார சலுகையை எப்படிப் பெறலாம், அதற்கு என்ன ஆரவாரம், ஆர்பாட்டம் செய்யலாம் என்பதே அவர்கள் அணுகுமுறை. நாட்டுக்காக நாம் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும் ?
மஹாத்மா கொடுத்த சூத்திரம்
மஹாத்மா காந்தி அரசியலில் பல தவறுகள் / குளறுபடிகள் செய்தார். ஆனால் மக்கள் சர்க்காரின் வலைக்குள் விழாமல், எப்படி பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கலாம் என்பதைச் செய்து காட்டினார். இத்தனைக்கும் அவர் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை; அவரிடம் எந்த அதிகாரமும் இல்லை. அவர் நம் ஏழை மக்களுக்கு உதவ ஒரு தந்திரம் அல்லது மந்திரம் சொன்னார்..
"I will give you a talisman. Whenever you are in doubt, or when the self becomes too much with you, apply the following test. Recall the face of the poorest and the weakest man [woman] whom you may have seen, and ask yourself, if the step you contemplate is going to be of any use to him [her]. Will he [she] gain anything by it? Will it restore him [her] to a control over his [her] own life and destiny? In other words, will it lead to swaraj [freedom] for the hungry and spiritually starving millions?
Then you will find your doubts and your self melt away."- One of the last notes left behind by Gandhi in 1948, expressing his deepest social thought.
Source: Mahatma Gandhi [Last Phase, Vol. II (1958), P. 65]
நாம் ஒவ்வொருவரும் இதன்படிச் செய்தால், நாட்டில் வறுமை இருக்குமா ? பஞ்சம், பசிக் கொடுமை இருக்குமா ? முட்டாள் சர்க்கார் திட்டம் என்றபெயரில் மக்களைச் சுரண்டுவது இருக்குமா ? இன்று இங்கு நடப்பது சுரண்டல் தொழில், சுயராஜ்யம் அல்ல !
இந்த மாதிரிச் செயல்களுக்கு ஆதாரமாக முதலில் நாட்டைப் பற்றி நல்ல, உயர்ந்த சிந்தனை இருக்கவேண்டும். நமது நாட்டின் தனித்தன்மையில் நம்பிக்கையும் பற்றும் இருக்கவேண்டும்.
ஹிந்துக்களின் பிரத்யேகப் பொறுப்பு
ஹிந்துக்களின் பிரத்யேகப் பொறுப்பு
இந்த நாடு அடிப்படையில் ஹிந்து நாடு. இது ஹிந்துக்களின் தாயகம். இது நன்றாக இருக்கவேண்டும் என்பதில் பிறரைவிட ஹிந்துக்களுக்கே அதிக அக்கறை, ஆர்வம் இருக்கவேண்டும். இந்த நாட்டின் உயிர் மூச்சு ஆன்மீகமே. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருப்பது, ஆனால் அது சாதுக்களின் சொத்தல்ல. அது உலக வாழ்க்கைக்கு எதிரானதல்ல. ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்றாக நினைக்கவேண்டும். அரசியல் கொள்கைகள், திட்டங்கள் வேறுபட்டாலும், நாம் ஹிந்துக்கள், இது நமது தாயகம், இது நன்றாக இருக்கவேண்டும் என்பதில் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது. இதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கோ, வாரத்திற்கோ சில நிமிஷங்களாவது ஒதுக்கி, வேறு விஷயங்களை விட்டுவிட்டு, நாட்டைப்பற்றி நினைக்கவேண்டும். நாட்டை வாழ்த்த வேண்டும்.
சகோதரி நிவேதிதை காட்டிய காயத்ரி !
சகோதரி நிவேதிதை காட்டிய காயத்ரி !
ஒருமுறை சகோதரி நிவேதிதை சொன்னார் :
"If the whole of India could agree to give, say, ten minutes every evening, at the oncoming of darkness to thinking a single thought,
" we are one,we are one nothing can prevail against us to make us think we are divided. We are one, and all antagonisms amongst us are illusions " - the power that would be generated can hardly be measured."
இது ஒரு புதிய காயத்ரி ! இது நாட்டுக்காக நாம் அனைவரும் செய்யவேண்டியது. மற்றவர்கள் வருகிறார்களோ இல்லையோ, ஹிந்துக்கள் அனைவரும் கட்சி வித்தியாசம் பாராமல் நாட்டிற்காக இப்படி நல்லதை நினைக்கவேண்டும். குறைந்த பட்சம் இதையாவது செய்யவேண்டும்.
காந்திஜி சொன்னபடி செய்தால் தனி வாழ்க்கையில் தூய்மை வரும்; செய்வதெல்லாம் பரோபகாரமாகப் பரிணமிக்கும். சகோதரி நிவேதிதை சொன்னபடி செய்தால் நமது பொதுவாழ்விலிருந்து நம்பிக்கையின்மை அகலும். நாடு புதிய எழுச்சிபெறும்.
காந்திஜி சொன்னபடி செய்தால் தனி வாழ்க்கையில் தூய்மை வரும்; செய்வதெல்லாம் பரோபகாரமாகப் பரிணமிக்கும். சகோதரி நிவேதிதை சொன்னபடி செய்தால் நமது பொதுவாழ்விலிருந்து நம்பிக்கையின்மை அகலும். நாடு புதிய எழுச்சிபெறும்.
No comments:
Post a Comment