Showing posts with label தக்ஷிணாமூர்த்தி. Show all posts
Showing posts with label தக்ஷிணாமூர்த்தி. Show all posts

Saturday, 23 July 2016

52, மஹாகுரு ஸ்ரீ க்ருஷ்ணர்


52. மஹாகுரு ஸ்ரீ க்ருஷ்ணர் ! 




ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் பக்தி பற்றிச் சொன்ன விஷயங்களை  சென்ற 13 கட்டுரைகளில் பார்த்தோம். கீதையில் பகவான் இந்த ஒரு விஷயம் பற்றிதான் மிக அதிகமாகத், தொடர்ச்சியாகப் பேசியிருக்கிறார் ! அர்ஜுனனால் நம் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம் இது. அதுவரை நண்பனாக, உறவினனாக இருந்த க்ருஷ்ணரை குருவாக மாற்றிய பெருமை அர்ஜுனனுக்கு!  நாம் அர்ஜுனனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

ஸ்தோத்ரங்கள்  பலவிதம் !


ஆனால், இதையும் மிஞ்சிய இன்னொரு விஷயம் இருக்கிறது. நமது பக்தி இலக்கியத்தில் ப்ரார்த்தனைகளுக்குப் பஞ்சமில்லை. தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சாதுக்கள், பக்தர்கள், பண்டிதர்கள் என்று பலர் ப்ரார்த்தனைகள் எழுதிவைத்துள்ளனர். ஏன், ராவணன்  போன்ற ராக்ஷஸர்களும் ஸ்தோத்திரம் செய்துள்ளனர். இவற்றை ஸ்ரீமத் பாகவதம் முதலிய  புராணங்களில்  பார்க்கலாம்.










இவற்றில் பலவற்றைத் திரட்டி " ஸ்ரீ ஜய  மங்கள ஸ்தோத்ரம் " என்ற பெயரில் உரையுடன் புத்தகமாக  வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். 










பகவானுடைய விபூதிகளைக் கேட்டும் அவருடைய விஶ்வரூப தரிசனம் கண்டும்  அர்ஜுனனும் அடக்க முடியாமல் ஸ்தோத்திரம் செய்கிறான். இது கீதையில் 10,11வது அத்யாயங்களில் வருகிறது. அர்ஜுனன் செய்த இந்த ஸ்தோத்ரம் உத்தமமானது. ஏனெனில் அர்ஜுனன் சாதாரணமானவனல்ல. அவன் பகவானுக்குத் தோழனாக இருந்தவன். பகவானாலேயே  "அன்பன், ப்ரியமானவன் "  ( இஷ்டோஸி, ப்ரியோஸி ) என்றும், பாபமற்றவன் 
 (அனக ) என்றும், தெய்வ ஸம்பத் உள்ளவனென்றும்  [கீதை 16.5 ] புகழப்பட்டவன். மேலும், நர-நாராயண ரூபத்தில் என்றும் பகவானை விட்டுப் பிரியாதிருப்பவன். இவ்வளவு பெரியவன் ஒரு ஸ்தோத்ரம் செய்தால் அதன் மஹிமையைச்  சொல்லவா வேணும் ?

அர்ஜுனன் செய்த ஸ்தோத்ரத்தில் பகவானை  गुरुर्गरीयान्।
 " குருர் கரீயான் " = மிக உயர்ந்த குரு ( 11.43 ) என்று நமக்கு அறிமுகப் படுத்தினான்! குருவை ப்ரஹ்ம, விஷ்ணு, மஹேஶ்வரராகப் பார்ப்பது நமது மரபு. ஆனால் இங்கு பகவானே குருவாக வந்திருக்கிறார் ! இது எப்படிப்பட்ட பாக்யம் ! அர்ஜுனன் செய்த ஸ்தோத்ரத்தைப் பார்க்குமுன், குருவைப் பற்றிய சில கருத்துக்களைப் பார்ப்போம்.
பல குரு மரபுகள்


Adi Guru Dakshinamurti


நமது ஹிந்து மதத்தில் பல குரு மரபுகள் உள்ளன. ஸ்மார்த்தர்கள்  கொண்டாடும் சில :
  • ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. இவர் பேசாமலேயே ஞானம் புகட்டியவர். "மவுனமா உரையாற்காட்டும்  மாபிரம வஸ்து வாலன். "
  • ஸதாஶிவ ஸமாரம்பாம் ஶங்கராசார்ய மத்யமாம் அஸ்மத் ஆசார்ய  பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்
  • வஸுதேவ சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.
  • ஸ்ரீ தத்தாத்ரேயர் பாகவதத்தில் 24 குருமார்களைப் பற்றிச் சொன்னார்.
குரு என்ன செய்கிறார்? தீக்ஷை தருவது, மன்த்ரோபதேஶம் செய்வது, வித்தை கற்றுத் தருவது முதலிய பல குருமார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையான குருவின் உண்மையான செயல் இதுவல்ல. நமது ஜீவன் கடைத்தேற என்னவழி அவசியமோ அதைக்காட்டித்தருவதுடன், அதற்கான சாதனையை நாம் மேற்கொள்ள நம்மைத்தூண்டும் சக்தியையும் நமக்குத் தருபவரே குரு. அத்தகைய குரு நமது பாவங்களையும் ஏற்றுத் துடைத்துவிடுகிறார் . அதனால் தான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர், ஸ்ரீ ரமண பகவான்  போன்ற  ஞானிகளும்  மெய்வருந்தினார்கள்.
 The Guru does not merely inform. He transforms.


த்யாகராஜரின் பார்வையில் குரு

painting by S.Rajam











நாம் ஸத்குரு எனக் கொண்டாடும் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்  குருவைப்பற்றி சில முக்கிய  விஷயங்களைச் சொல்கிறார்.









प. गुरु लेक(यॆ)टुवण्टि गुणिकि तॆलियग पोदु

अ. करुकैन हृ(द्रो)ग गहनमुनु कॊट्टनु सद्-(गुरु)

च. तनुवु सुत धन दार दा(या)दि बान्धवुलु
जनियिञ्चि चॆदरु जालिनि करुणतो
मनुसु(न)ण्टक सेयु म(न्द)नुचु तत्व
बोधन जेसि कापाडु त्यागरा(जा)प्तुडगु (गुरु)




குருலேக எடுவண்டி குணிகி தெலியகபோது

கருகைன ஹ்ருத ரோக  கஹனமுனு  கொட்டனு ஸத்.... குருலேக

தனுவு  ஸுத தன தார தாயாதி பாந்தவுலு
ஜனியிசி செதரு  ஜாலினி கருண தோ
மனஸு நண்டக ஸேயு  மந்தனுசு தத்வ
போதன ஜேஸி  காபாடு த்யாகராஜாப்துடகு.... குருலேக

தீவிரமான, மனதைப் பற்றிய ரோகங்கள் ( காமம்.க்ரோதம் முதலியவை ) என்னும் பெரும் காட்டை அழிப்பது  ஸத்குருவினுடைய அருளின்றி  (உதவியின்றி ) எத்தகைய குணவானுக்கும் சாத்தியமல்ல.

உடல், மக்கள், செல்வம், மனைவியர், உறவினர் போன்றவை தோன்றி  அவற்றின் மூலம்  பரவும் துக்கம் அண்டவிடாமல்  செய்யும் நல்ல மருந்து  தத்வ  போதனையாகும்.. 
அதனைக் கருணையுடன் செய்பவர் த்யாகராஜனுக்கு ஆப்தராகிய  ஸத்குரு ஆவார். 

ஸ்ரீ த்யாகராஜருக்கு குரு யார் ? ஒரு விதத்தில் அது ஸ்ரீ ராமரே. " புக்தி முக்தி கல்கு நனி கீர்த்தனமு போதிஞ்சேவாடு " என்று ஒரு இடத்தில் பாடுகிறார். இன்னொரு வகையில்  ஸ்ரீ நாரதரே அவருக்கு குரு.





प. नारद गुरु स्वामि(यि)कनैन
न(न्ना)दरिम्प(वे)मि ई कर(वे)मि

अ. सारॆकु संगीत योग नैगम
पारंगतुडैन परम पावन (ना)

च. इतिहास पुरा(णा)गम चरितमु-
(लॆ)वरि-वल्ल कलिगे
पतिनि दान(मि)व्व बुद्धि सत्य-
भाम(कॆ)टुल कलिगे
द्युति जित शर(द)भ्र निनु विना मुनि
यतुल(कॆ)वरु कलिगे
क्षितिनि त्यागराज विनुत नम्मिति
चिन्त तीर्चि प्रह्लादुनि ब्रोचिन (ना)



நாரத குருஸாமி இகனைன  
நன்னாதரிம்ப வேமிஈகற வேமி 

ஸாரெகு ஸங்கீத யோக நைகம
பாரங்கதுடை ன பரமபாவன

இதிஹாஸ புராணாகம  சரிதமு
லெவரிவல்ல கலிகெ
பதினி தானமிய்ய புத்தி  ஸத்யபாம
கெடுல கலிகெ
த்யுதி ஜித  சரதப்ர  நினுவினா முனி
யதுல கெவரு ஸலிகெ
க்ஷிதினி  த்யாகராஜவினுத  நம்மிதி
சிந்த தீர்ச்சி  ப்ரஹ்லாதுனி ப்ரோசின 
நாரத குருஸாமி

நாரத குருநாதரே ( ஞானத்தை அளிப்பவரே ) !இப்பொழுதாவது  என்னை ஆதரிக்கக்கூடாதா?உமது தயவுக்கு ஏன் இந்தப் பஞ்சம் ?ஸங்கீதம், யோக ஶாஸ்திரம், வேத வேதாங்கம்  முதலியவற்றைக்கரைகண்ட புனித மூர்த்தியே !

1. இதிஹாஸம், புராணம் , ஆகமம், திவ்ய ஶாஸ்திரங்கள் முதலியவை உம்மைத்தவிர வேறு யாரால் ப்ரகாஸம் அடைந்திருக்க முடியும் ?2.பதியையே தானம் செய்யும் புத்தியை  ஸத்யபாமைக்குவேறு யார் கொடுத்திருக்க முடியும் ?3.தேக  கான்தியில் ஶரத்காலத்து மேகத்தை வென்றவரே ! முனிவர்களுக்கும் யதிகளுக்கும் உம்மையன்றி  வேறு யார் கதி ?4. இவ்வுலகில் நான் உம்மையே நம்பினேன்.  ப்ரஹ்லாதனின் மனக் கவலையைத்  தீர்த்து அவனைக் காத்தருளிய நாரத குரு ஸ்வாமி !


இந்த சரணத்தில் வரும் செய்திகளை விளக்கினால் நீளும். வேறு  தக்க புத்தகங்களைப்  பார்க்கவும்.






प. नी चित्तमु निश्चलमु
निर्मल(म)नि निन्ने नम्मिनानु

अ. ना चित्तमु वञ्चन चञ्चल(म)नि
नन्नु विड(ना)डकुमि श्री राम (नी)

च. गुरुवु चिल्ल गिञ्ज गुरुवे भ्रमरमु
गुरुडे भास्करुडु गुरुडे भद्रुडु
गुरुडे उत्तम गति गुरुवु नी(व)नुकॊण्टि
धरनु दासुनि ब्रोव त्यागराज नुत (नी)



நீ சித்தமு  நிர்மலமு  நிஶ்சலமனி
நின்னே நம்மினானு

நாசித்தமு வஞ்சன சஞ்சலமனி
நன்னுவிட நாடகுமி ஸ்ரீராம

குருவு சில்லகிஞ்சு குரவே  ப்ரமரமு
குருடே பாஸ்கருடு
குருடே பத்ருடகு  குருவே  நீவனுகொண்டி
தரனு தாசுனி ப்ரோவ  த்யாகராஜனுத

நீ சித்தமு.......


இங்கு ராமரையே குருவாக நினைத்துப் பாடுகிறார்.

ஸ்ரீ ராம ! உன் உள்ளம் நிர்மலமானது, சஞ்சல மற்றது என்று  அறிந்து  உன்னையே நம்பியிருக்கிறேன்,என மனது வஞ்சனையும்  சலனமும் நிரம்பியது  என்பதற்காக  நீ என்னை விட்டுவிடலாகாது,
குருவே  சேற்று நீரைத் தெளியவைக்கும் தேத்தாங்கொட்டை.அவனே புழுவை வண்டாக மாற்றும் தேன் வண்டு,அவனே அஞ்ஞானத்தை விலக்கும் (ஞான ) சூர்யன்.மங்களம் தருபவனும் அவனே.அத்ததைய குரு நீயே என்பதை உணர்ந்தேன்.உன் அடியவனான என்னைக் காத்தருள்.







இந்தப் பாடலில் குரு எத்தகைய மாற்றத்தை transformation
தோற்றுவிக்கிறார் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்.
 இந்த தேத்தாங்கொட்டை உதாரணம் ஆதி சங்கரரும் ஆன்மபோதத்தில் சொல்லியிருக்கிறார். இதை பகவான் ஸ்ரீ ரமணர் தமிழ் வெண்பாவாக்கித் தந்துள்ளார்.









அறியாமை யாங்கலக்க  மாருமுயிர்  தூய்தா
மறிவுப் பயிற்சியி  னாலவ்-  வறிவு
மகற்றி யறியாமை யழியுமே நீர்மா
சகற்றுந் தேற்றாம் பொடியொப் பாய்.  (5 )

[ஸ்ரீ த்யாகராஜ கீர்த்தனைகளின் தமிழ் வடிவம் ஸ்ரீ டி. எஸ். பார்த்தஸாரதி அவர்களின் பதிப்பிலிருந்து  எடுத்தது. கருத்தும் அவர் வழியே. தேவ நாகரி வடிவம் இன்டர்னெட்டிலிருந்து எடுத்தது. இதில் சில மாற்றங்கள் தேவை ]

இந்த மூன்று  கீர்த்தனைகளிலும் ஸ்ரீ ஸ்வாமிகள் குருவின் செயலை நன்கு விளக்கியுள்ளார். இதைப் படித்தபின் கீதையில் பகவான் குருவாக இருந்து இது அத்தனையும் செய்ததை நாம் நன்குணரலாம். அர்ஜுனன் பகவானை மிக உயர்ந்த குரு என்று சொன்னதில் ஆச்சரியமில்லை யல்லவா ?

அவன் செய்த ஸ்தோத்திரத்தை  இனிப் பார்ப்போம்.



from Gardeners Hertfordshire blog. Gratefully acknowledged.