Saturday, 4 November 2017

97.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -7


97.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்!-7


இந்தியா ஏழைகள் மிகுந்த நாடு என்று மேலை நாட்டினர் கூச்சலிடுகின்றனர். அவர்கள்  நிலை என்ன? மதர் தெரசாக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்!
picture from:https://21stcenturychallenges.org.

வாழ்க்கைத் தரம்  உயர்ந்துவிட்டது என்கிறோம். முன்னேறி வருகிறோம் என்கிறோம். ஆனால் அடிப்படையில் இந்த ஒரு சாண் வயிற்றுக்கான கலாட்டா ஓய்ந்தபாடில்லை. உணவு, உடை, இருப்பிடம்- இதற்காகத்தான்  நம்மில் பெரும்பாலோர்  இன்றும் பாடுபட்டு வருகின்றனர். பணப்பெருக்கத்தின்-பணப்புழக்கத்தின்- பணவீக்கத்தின் காரணமாக 
ஒன்றுக்குப் பத்தாக  விலைவாசிகள் ஏறிவிட்டன.. சிலர்  ஈடுகொடுக்கின்றனர், பலர் பின் தங்கியே வருகின்றனர். தேசீய வருமானம் பெருகிவிட்டது 
என்கிறார்கள்  பொருளாதாரவாதிகள். இவர்கள்  முக்காலும் கிரிசைகெட்டவர்கள்.  : செல்வம் சிலரிடமே குவிகிறது, பலர் ஏழ்மை என்னும் குழியில் விழுகிறார்கள்; செல்வர்-வறியவரிடையேயான  இடைவெளி வளர்ந்தே வருகிறது. நடுத்தர வர்கத்தினரின் சிறு ஆசைகள் கூட நிறைவேறுவதில்லை! நவீன பொருளாதாரம் என்னும் மாயவலையின் உலகளாவிய நிலை இப்படி இருக்கிறது.


This is in  the USA. picture from: pewaukeeeconomics.blogspot.in


உணவு, உடை - நடுத்தர வர்கத்தினர்  எப்படியோ சமாளித்துக் கொள்கின்றனர். ஆனால் வீடு அவர்கள் கைக்கு எட்டாததாகவே இருக்கிறது! 60 வருஷங்களுக்குமுன்  ஸாஹிர் லுதியான்வி  பம்பாயில் இருந்த நிலை பற்றிப் பாடினார்:
जितनी भी बिल्डिंगें थीं, सेठों ने बाँट ली हैं
फ़ुटपाथ बम्बई के हैं आशियाँ हमारा
सोने को हम कलन्दर, आते हैं बोरी बन्दर
हर एक खोली यहाँ है राज़दाँ हमारा
चीन-ओ-अरब हमारा ..
ஜித்னீ பீ பில்டிங்கே தீ,
சேட்டோனே பா(ன்)ட் லீஹை
ஃபுட்பாத் பம்பயீகா ஹை ஆஷியா(ன்) ஹமாரா
ஸோனேகோ ஹம் கலந்தர்,
ஆதே ஹை  போரி பந்தர்
ஹர் ஏக் கூலீ யஹா(ன்) ஹை ராஃஜ்தா(ன்) ஹமாரா
சீன்-ஓ-அரப் ஹமாரா, 
ஹிந்துஸ்தான் ஹமாரா
ரஹனே கோ கர் நஹீ ஹை
ஸாரா ஜஹா(ன்) ஹமாரா.

இருந்த கட்டிடங்கள் எல்லாவற்றையும்  பணக்காரர்கள் வளைத்துப் போட்டுக் கொண்டார்கள்.
 தெருவோர நடைபாதையே நமது வீடாயிற்று! 
சாதுபோல் எங்கும் சுற்றிவிட்டு இரவில்  போரிபந்தர் ஸ்டேஷனில் படுப்போம்! இங்கு இருக்கும் ஒவ்வொரு கூலியும் நமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவனே!
சீனாவும் அரேபியாவும் நமதாக இருக்கலாம்!
ஹிந்துஸ்தானமே நமதாக இருக்கலாம்!
இருப்பதற்கு நமக்கு என்று ஒரு வீடில்லை -
இந்த உலகம் பூராவும் நமதுதானே !

( 1957ல் இந்தப் பாடலை தடை செய்ய நினத்தது நமது நேரு சர்க்கார் !)



பம்பாயில் குடிசைகள் .Photo: London School of Economics, 2017.


இன்று இது எல்லா ஊர்களுக்கும் பொதுவானதாகிவிட்டது! பண முதலைகள்  வீட்டுமனையில், ஃப்லாட்டில்  Flats முதலீடு செய்கிறார்கள். Speculation. விலை ஏறிக்கொண்டே போகிறது ! நம் கைக்கு எட்டாமலே போகிறது ! 
ஆனால்  நாம் கனவு காண்பதை யார் தடை செய்ய முடியும்? இதோ ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன் பாடுகிறான் :




பாடல் : சோடா ஸா கர் ஹோகா
படம் :   நௌகரீ  1954 Naukri
கவி : ஶைலேந்த்ரா
இசை : ஸலீல் சௌதுரி
பாடியது :கிஷோர் குமார்
fantastic photo on the right: Kishore-Shailendra- Salil Chowdhury




छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए
हम ही हम चमकेंगे तारों के उस गाँव में
आँखों की रौशनी हरदम ये समझाए


சோடா ஸா கர் ஹோகா பாதலோ)ன்) கீ சா(ன்)வ் மே

ஆஷாதீவானீ மன் மே பன்ஸுரீ பஜாய்
ஹம் ஹீ ஹம் சம்கேங்கே தாரோ(ன்) கே உஸ் கா(ன்)வ் மே
ஆங்கோ(ன்) கீ ரோஷ்னீ ஹர்தம் யே சம்ஜாய்!


இந்த மேகங்களின் நிழலில்  நமக்கென்று ஒரு  சிறு வீடு  இருக்கும்!
இந்த நம்பிக்கையில் என் மனமாகிய குழல் கீதமிசைக்கிறது!
அந்த நக்ஷத்திர உலகில் நாமும் சுடர்விட்டுப் பிராகாசிப்போம்!
நமது கண்களில் வீசும் ஒளி இதை  நமக்கு உணர்த்துகிறது !

चाँदी की कुर्सी पे बैठे मेरी छोटी बहना
सोने के सिंघासन पे बैठे मेरी प्यारी माँ
मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मीजी के पाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए


சாந்தீ கே குர்ஸீ பே பைடீ மேரீ சோடீ பஹனா
ஸோனே கே சிங்காஸன் பர் பைடீ மேரீ ப்யாரீ மா
மேரா கயாஹை மை படா ரஹூங்கா அம்மி ஜீ கே பாவ்(ன்) மே
ஆ ஆஆ ஆயிரே, ஆ ஆஆ ஆயிரே...
சோடா ஸா கர் ஹோகா .......

வெள்ளி நாற்காலியில் என் தங்கை உட்கார்ந்திருக்கிறாள்.
தங்கச் சிம்மாஸனத்தில் என் அம்மா அமர்ந்திருக்கிறார்
எனக்கென்ன, நான் என் தாயின் காலடியில் கிடப்பேன்!
ஆ ஆ ஆ.... இது எத்தனை சுகம்!
நமக்கென்று ஒரு சிறு வீடு இருக்கும் !


मेरी छोटी बहना नाज़ों की पाली शहज़ादी
जितनी-भी जल्दी हो मैं कर दूँगा उसकी शादी
अच्छा है ये बला हमारी जाए दूजे गाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए



மேரீ சோடீ பஹனா  நாஃஜோ கீ பாலி ஷஹ ஃஜாதீ
ஜித்னீ பீ ஜல்தீ ஹோ மை கர்தூங்கீ உஸ்கீ ஷாதீ
அச்சா ஹை யே பலா ஹமாரீ ஜாயே தூஜே கா(ன்) வ் மே
ஆ ஆ ஆ ஆயிரே, ஆ ஆ ஆ ஆயிரே....
சோடா ஸா கர் ஹோகா.........

என் தங்கை - ராஜகுமாரிபோல் வளர்ந்தவள் !
கூடிய சீக்கிரம் அவளுக்கு மணம் முடித்து வைப்பேன் !
நம் செல்லம் வேறொரு வீட்டிற்குப் போவது நல்லது தானே !
ஆ ஆ ஆ..... இதுதானே நல்லது!

कहेगी माँ, दुल्हन ला बेटा घर सूना-सूना है
मन में झूम कहूँगा मैं, माँ इतनी जल्दी क्या है
गली-गली में तेरे राजदुलारे की चर्चा है
आख़िर कोई तो आएगा इन नैनों के दाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए
हम ही हम चमकेंगे तारों के उस गाँव में
आँखों की रौशनी हरदम ये समझाए


கஹேகா மா, துல் ஹன் லா பேடா, கர் ஸூனா ஸூனா ஹை

மன் மே ஜூம் கஹூங்கா மை, மா இத்னீ ஜல்தீ க்யாஹை!
கலீ கலீ மே தேரே ராஜ்துலாரே கீ சர்ச்சா ஹை
ஆகிர்  கோயீ தோ ஆயேகா இன் நயனோ(ன்) கீ தா(ன்)வ் மே
ஆ ஆ ஆ ஆயிரே, ஆ ஆ ஆ ஆயிரே....
சோடா ஸா கர் ஹோகா........

ஒரு நாள் அம்மா சொல்வாள் : "மகனே, வீடு வெறிச்சோடிக்கிடக்கிறது
ஒரு மாற்றுப்பெண் அழைத்துவா ! "
மனம் பொங்கும் ! இருந்தாலும் நான் சொல்வேன் :
" அம்மா, இவ்வளவு அவசரம் ஏன் ?"
ஊர் முழுவதும் இந்த ராஜகுமாரனின் பேச்சாகவே இருக்கிறது!
கடைசியில் கண்ணின் மணியாக  ஒருத்தி வந்து  சேருவாள் !
ஆ ஆ ஆ.... எல்லாம் நல்லது தானே
நமக்கென்று ஒரு சிறு வீடு இருக்கும்
அந்த நம்பிக்கையில் கீதமிசைப்போம் !

60 வருஷங்களுக்கு முந்திய பாடல்! அன்றைய  சராசரி நடுத்தர வர்கத்துக் குடும்பத்தின்  ஆசா-பாசங்களை எவ்வளவு அழகாகச் சொல்லி யிருக்கிறார் ஶைலேந்த்ரா ! உடன் பிறந்தவர்களுடன் வளர்ந்தவர்களுக்கு இதன் அருமை புரியும்! Today, we have atomic,  nuclear families. Nobody feels he is his brother's keeper ! 

உலகில் எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு குழப்பம், பதட்டம் நிலவி வருகிறது. சீர்திருத்த வாதிகளும் புரட்சியாளர்களும் இதைச் செய்,, அதை மாற்று என்று ஆரவாரிக்கிறார்கள். கடந்த இரு நூறு ஆண்டுகளில் உலகமும் எவ்வளவோ  புரட்சிகளையும், மாற்றங்களையும் கண்டுவிட்டது ஆனாலும் நிலைமை சீராகவில்லை. அதிகார வர்கத்தின் பக்கம் சேராவிட்டால் கதியில்லை என்று ஆகிவிட்டது. சராசரி மனிதன்  நல்ல நிலையை கனவு காணவேண்டும், அல்லது கற்பனை செய்ய வேண்டும். அத்தகைய ஒரு அழகிய கற்பனை இது.











பாடல் : ஆ சல் கே துஜே
படம் : தூர் ககன் கீ சாவோ(ன்)  மே 1964
Door Gagan Ki Chaon  Mein
பாடலை இயற்றி, இசை அமைத்துப் 
பாடியவர் : கிஷோர்குமார்.









आ चल के तुझे, मैं ले के चलूं
इक ऐसे गगन के तले
जहाँ ग़म भी न हो, आँसू भी न हो
बस प्यार ही प्यार पले

ஆ சல் கே துஜே , மை லேகே சலூ(ன்)
இக் ஐஸே ககன் கே தலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ,  ஆ(ன்) ஸூ பீ ந ஹோ
பஸ் ப்யார் ஹீ ப்யார் பலே !

என்னுடன் வா, இந்தப் பரந்த வானத்தின் கீழ் 
அத்தகைய இடத்திற்குக் கூட்டிச் செல்கிறேன் -
அங்கு துயரம் இருக்காது, கண்ணீர் இருக்காது,
அன்பு மட்டுமே நிறைந்திருக்கும்.
வா, அத்தகைய இடத்திற்குச் செல்வோம் !


सूरज की पहली किरण से, आशा का सवेरा जागे
चंदा की किरण से धुल कर, घनघोर अंधेरा भागे
कभी धूप खिले, कभी छाँव मिले
लम्बी सी डगर न खले
जहाँ ग़म भी नो हो...

ஸூரஜ் கீ பஹலீ கிரண் ஸே, ஆஶாகா ஸவேரா ஜாகே
சந்தா கீ கிரண் ஸே துல் கர், கன் கோர் அந்தேரா பாகே
கபீ தூப் மிலே, கபீ சா(ன்)வ் மிலே
லம்பீஸி டகர் ந கலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ......

உதிக்கும் சூரியனுடைய முதல் கிரணங்களுடன்
மனதில் ஆசையும் உதித்தெழுகிறது !
 நிலவின் ஒளியில் மூழ்கி. கனத்த இருட்டும்  ஒடிவிடுகிறது !
வாழ்க்கை என்பது  நீண்ட பாதை
சில சமயம் சூரிய ஒளி, சில சமயம் நிழல் வருகிறது
வா, நாம் துயரமற்ற அந்த இடத்திற்குப் போவோம்.


जहाँ दूर नज़र दौड़ाएं, आज़ाद गगन लहराए
जहाँ रंग बिरंगे पंछी, आशा का संदेसा लाएँ
सपनों में पली, हँसती हो कली
जहाँ शाम सुहानी ढले
जहाँ ग़म भी न हो...

ஜஹா(ன்) தூர் நஃஜர் தௌடாயே, ஆஃஜாத் ககன் லஹராயே
ஜஹா(ன்) ரங்க் பிரங்கீ பன்சீ, ஆஶா கா ஸந்தேஸா லாயே
ஸப்னோ(ன்) மே பலீ, ஹ(ன்)ஸ்தீ ஹோ கலீ
ஜஹா(ன்) ஶாம் ஸுஹானீ டலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ


தூரத்தில் பார்வையைச் செலுத்து !
அங்கு பார்- வானம் சுதந்திரமாக எழுகிறது !
வண்ண வண்ணப் பறவைகளின் சப்தங்கள்
நம்பிக்கை என்னும் செய்தியைத் தாங்கி வருகின்றன !
இன்பக் கனவில் மூழ்கிய மலர்கள்
சிரித்து மலர்கின்றன !
இப்படியே இனிய மாலைப்பொழுது வந்து சேருகிறது !
வா, துயரமில்லாத அந்த இடத்திற்குப் போவோம்!


pexels

सपनों के ऐसे जहां में, जहाँ प्यार ही प्यार खिला हो
हम जा के वहाँ खो जाएं, शिकवा न कोई गिला हो
कहीं बैर न हो, कोई गैर न हो
सब मिलके यूँ चलते चलें

जहाँ गम भी न हो...

ஸப்னோ(ன்) கே ஐஸே ஜஹா(ன்) மே,
ஜஹா(ன்) ப்யார் ஹீ ப்யார் கிலா ஹோ
ஹம்  ஜாகே வஹா கோ ஜாயே(ன்),
ஶிக்வா ந  கோயீ கிலா ஹோ
கஹீ பைர் ந ஹோ,கோயீ கைர் ந ஹோ
சப் மில்கே யூ(ன்) சல்தே சலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ.......

அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்த கனவு  உலகத்தில்
 நாம் சென்று காணாமல் போய்விடுவோம்!
எந்தக் குறையும் இல்லா  திருக்கட்டும்
எந்த கவலையும் இல்லா திருக்கட்டும்
எந்த வெறுப்பும் இல்லா திருக்கட்டும்
யாரும் அன்னியர் என்று இல்லா திருக்கட்டும் !
எல்லோரும் ஒன்றாக இணைந்து செல்லும் அந்த  உலகிற்கு -
துன்பம், கண்ணீர் இல்லாத அந்த உலகிற்கு  நாம் செல்வோம், வா !

ஆம், வெளியே எவ்வளவு இருட்டாக இருந்தாலும் மனதில் நம்பிக்கை என்னும் தீபத்தை ஏற்றி வைப்போம்!  நல்லதையே நினைப்போம்!






Can we only dream  here on earth, of perfection in some place else?
Yes, it seems so. As Robert Browning sang:
"On the earth the broken arcs;
in the heaven a perfect round." 
[ Abt Vogler]
pexels.


No comments:

Post a Comment