Friday, 3 November 2017

96.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -6


96.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -6


Train- Bombay to Thana 1855.picture from:https://scroll.in

உலகில் எத்தனையோ நாடுகள், இனங்கள், மொழிகள் , பழக்க வழக்கங்கள் ! எத்தனையோ மதங்கள், தத்துவங்கள்! மனிதன்- மனித குலம்- மனித இயற்கை- என்று  பார்த்தால் அடைப்படைத் தேவைகள்  ஒன்றுதான் : உணவு, உடை, இருப்பிடம் ! இதைப்  பெறுவதற்கு ஆயிரம்  வகை முயற்சிகள், கொள்கைப் பூசல்கள், அரசியல் ஜாலங்கள், வியாபார தந்திரங்கள் ! ஆனாலும் உலகில் மூன்றில் ஒருவருக்கு அடிப்படைத் தேவைகள் கூட கிடைப்பதில்லை! இது இன்றைய விஞ்ஞான யுகத்தின் பரிதாப நிலை!

மக்களின் நடை, உடை, பாவனைகள் இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப மாறுகின்றன. ஆனால் ஒவ்வொரு சமுதாயத்திலும்  அதிலுள்ள சான்றோர்கள் சில அடிப்படை விஷயங்களைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்திருக்கிறார்கள். அறிவுரை கூறிச் சென்றிருக்கிறார்கள். இவையே கல்வி என்ற பெயரில் பயிலப்பட்டன.

உலகம் முழுவதிலும் இதன் அடிப்படை ஒன்றாகவே இருந்திருக்கிறது!  உலக வாழ்க்கை நிலையானதல்ல; இருக்கும் போது நல்லதை நினை, நல்லதையே  செய் என்பதே அடிப்படை அறிவுரை ! இதை சமயம் என்று சொல்லலாம், தத்துவம் என்று சொல்லலாம் ; ஆனால் விஷயம் இதுதான்.

இதைக் கவிஞர்கள் தங்களுக்கே உரிய நடையில் மனதில் படும்படிச் சொல்வார்கள்.  சமய வாதிகள் சண்டையிடுவார்கள். தத்துவ வாதிகள் குழப்புவார்கள்; அரசியல் வாதிகள் பிரிப்பார்கள். ஆனால் உலகம் முழுதும்  உள்ள சிறந்த கவிஞர்கள் ஒரே குரலில் பேசுவார்கள். இதைப் புரிந்துகொள்ள புத்தி மட்டும் போதாது; மனதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
"மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி " என்பார் நம் அருணகிரிநாதர்.
உத்தம மனதிற்கே உண்மை விளங்கும்.

இங்கு ஷேக்ஸ்பியர்  பாடிய ஒரு கவிதையைப் பார்ப்போம். ஸான்னெட் 55.







Sonnet 55
Not marble, nor gilded monuments









Not marble, nor the gilded monuments
Of princes, shall outlive this powerful rhyme;
But you shall shine more bright in these contents
Than unswept stone, besmear'd with sluttish time.
When wasteful war shall statues overturn,
And broils root out the work of masonry,
Nor Mars his sword, nor war's quick fire shall burn
The living record of your memory.
'Gainst death, and all oblivious enmity
Shall you pace forth; your praise shall still find room
Even in the eyes of all posterity
That wear this world out to the ending doom.
   So, till the judgment that yourself arise,
   You live in this, and dwell in lovers' eyes.




அரசர்கள், பிரபுக்கள் [ தற்காலத்தில் அரசியல் வாதிகள் ] தங்களுக்காக சிலைகள்,  நினைவுச் சின்னங்கள், மணி மண்டபங்கள் எழுப்புகிறார்கள். இவை காலப்போக்கில் பழுதடைந்து விழுந்துவிடுகின்றன. போர், இன்ன பிற காரணங்களால் அழிந்துவிடுகின்றன. மரணம் மனிதனை விழுங்கிவிடுகிறது.அவன் நினைவு அழிந்துவிடுகிறது. ஆனால் ஒரு சிறந்த கவிஞனின் கவிதை சொல்லாக இருந்தாலும் காலத்தை வென்று நிற்கிறது!
போரோ, இயற்கை உத்பாதங்களோ அதை அழிக்க இயலாது ! அதேபோல் நாம் அன்பர்களின் நினைவிலும் வாழ்வோம்!

இது  ஷேக்ஸ்பியர் 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய பாடல் . 
ஏறத்தாழ இதே கருத்தை நம் திரைக்கவிஞர் ஒருவர் 1975ல் பாடினார் என்பது வியப்பாக இல்லை ?




பாடல் : இக் தின் பிக் ஜாயேகா
படம் : தரம் கரம்1975 Dharam Karam
கவி : மஜ்ரூ ஸுல்தான்புரி Majrooh Sultanpuri
இசை : ஆர்.டி பர்மன் R.D. Burman
பாடியது : முகேஷ் Mukesh





एक दिन बिक जायेगा, माटी के मोल
जग मे रह जायेगे प्यारे तेरे बोल
दूजे के होठो को देकर अपने गीत
कोई निशानी छोड़, फिर दुनिया से दोल
एक दिन.
..

ஏக் தின் பிக் ஜாயேகா, மாடீ கே மோல்
ஜக  மே ரஹ் ஜாயேங்கே ப்யாரே தேரே போல்
தூஜே கே ஹோடோ(ன்) கோ தேகர் அப்னே கீத்
கோயீ நிஷானீ  சோட், ஃபிர் துனியாஸே  டோல்
ஏக் தின்........

[ மனிதனே உன் விலை என்ன? ]
ஒரு நாள் ஒருபிடி மண்ணின் விலைதான் உனக்கு வரும்!
ஆனால் உன் சொல் இந்த உலகில் நிலைத்து நிற்கும்!
அதனால் உன்னுடைய பாடலைப் பிறர் பாடுமாறு  கொடு
ஏதாவது அடையாளம் விட்டுச் செல்- பிறகு உலகத்தை விட்டுச் செல்!
ஒரு நாள்.........

अनहोनी पथ मे काटे लाख बिछाये
होनी तो फिर भी बिछड़ा यार मिलाये
यह बिरहा, यह दूरी
दो पल की मजबूरी
फिर कोई दिलवाला कहे को घबराये
तरम पम...

धरा जो बहती है मिलके रहती है
बहती धारा बन जा फिर दुनिया से दोल
एक दिन...


அன்ஹோனீ பத் மே கா(ன்)டே லாக் பிசாயே
ஹோனீ தோ ஃபிர் பீ பிச்டா யார் மிலாயே
யஹ் பிர்ஹா, யஹ் தூரி
தோ பல் கீ மஜ்பூரீ
ஃபிர் கோயீ தில்வாலா காஹே கோ கப்ராயே
தரம் பம்.......
தாரா ஜோ பஹதீ ஹை மில்கே ரஹதீ  ஹை
பஹதீ தாரா பன் ஜா ஃபிர் துனியா ஸே  டோல்
ஏக் தின்...........

துரதிருஷ்டம் உன் பாதையில் அனேகம் தடைகளைத் தரலாம்
ஆனால் அதிருஷ்டம் ஒரு நாள் உன்னைப் பிரிந்த வேண்டியவர்களோடு  சேர்த்துவிடும்!
இந்தப் பிரிவின் துயரம், இந்த தொலைவு -
இந்த நிலை சில காலமே இருந்து மறைந்துவிடும்!
பின், தைரியசாலி ஏன் பயப்படவேண்டும்?
ஓடும் நதி, கடலை அடையுமுன்  நிற்பதில்லை!
நீயும் நதி போல் ஆகிவிடு ! பிறகு உலகை விட்டுச் செல் !

परदे के पीछे बैठी सावल गोरी
थाम के तेरे मेरे मन की डोरी
यह डोरी ना छूते, यह बंधन ना टूटे 
भोर होने वाली है अब रैना है थोड़ी
तरम पम...
सर को झुकाए तू बैठा क्या है यार 
गोरी से नैना जोड़ फिर दुनिया से दोल
एक दिन...



பர்தே கே பீசே பைடீ ஸாவல் கோரீ
தாம் கே தேரே மேரே மன் கீ டோரீ
யஹ் தோரீ ந சூடே, யஹ் பந்தன் நா டூடே
போர் ஹோனே வாலீ ஹை அப் ரைனா ஹை தோடீ
தரம் பம்......
ஸர் கோ ஜுகாகே தூ பைடா ஹை யார்
கோரீ ஸே நைனா  ஜோட், ஃபிர் துனியா ஸே டோல்
ஏக் தின்......

அந்த உயர்ந்த அழகி திரையின் பின் அமர்ந்திருக்கிறாள் !
அவளே உனது, எனது இதய சூத்திரத்தைப் பிடித்திருக்கிறாள் !
இந்த சூத்திரக் கயிறு துண்டிக்கப்படாமல் இருக்குமாக
இந்த உறவு விட்டுப் போகாமல் இருக்குமாக
உதயம் ஆகும் நேரம் வந்துவிட்டது, இரவு சிறிதே பாக்கி!
ஏன் தலையைக்  கவிழ்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாய் ?
அந்த அழகியின் கண்களைப் பார், பின் இந்த உலகை விட்டுச் செல்!
ஒரு நாள்.......




This is not an ordinary film song. The meaning I have given above is superficial. This is a deeply philosophical reflection on life. Everything in the world is ephemeral. Only our words and love remain. The last stanza is just mystical.  This excellent poem was sung by Mukesh as only he could! 

No comments:

Post a Comment