Wednesday, 25 October 2017

95. வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -5


95. வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ! -5

காலத்திற்கேற்ப  கலைகள் மாறுகின்றன. பழைய கலைகள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றைக் கற்கும்- கற்பிக்கும் முறையும் மாறுகிறது. முன்பு  அரசர்களும் பிரபுக்களும் கலையையும் கலைஞர்களையும் ஆதரித்தனர்; இன்று பொதுமக்களின் தயவை நம்பி அவை வாழ்கின்றன. Class V. Mass [ or Crass?]என்ற பேதம் வேறூன்றிவிட்டது. கலையின்  தரமும் அதற்கேற்ப மாறுகிறது. Playing to the gallery in the name of popularising!

பொதுமக்களின் ரசனை (ரசனையின்மை)க்கேற்ப புதிய கலைகள்  அல்லது கலையின் வடிவங்கள்  தோன்றுகின்றன.. பழைய கலைகளும் உருமாறுகின்றன. இன்று கர்னாடக சங்கீதமே உருமாறிவிட்டது- இது சபாக்களின் கைங்கர்யம். நல்லவேளை- ஹிந்துஸ்தானி இசை இன்னும் பசையோடுதான் இருக்கிறது. அவர்கள் சம்பிரதாயத்தை விடமாட்டார்கள். காலையில் பாடவேண்டிய ராகத்தை இரவில் பாடமாட்டார்கள்! ஒரு மணி நேரக் கச்சேரியில்  ஒன்பது பாடல் பாடமாட்டார்கள்! சரியான பயிற்சி இல்லாமல் மேடையேற/ ஏற்ற மாட்டார்கள். இப்படி இன்னும் எத்தனையோ அம்சங்கள்  சொல்லலாம்.

சினிமா வந்த புதிதில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது பல தேசீயக் கலைகளைக் கொன்றுவிடும் எனப் பயந்தார்கள் அதன்படியேதான் நடந்தது.  'கலை சினிமா ' [ art film ]என ஒரு பிரிவு  தோன்றியது- ஆனால் இது வக்ர புத்தியினர் சென்ஸாருக்கு டிமிக்கி கொடுக்கச் செய்த ஏற்பாடு. இன்று அத்தகைய  நிர்பந்தம் இல்லை . எதுவும் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது. யாரும் கலையைக் கொலை செய்யலாம்- பணம் வந்தால் போதும்! இன்று சினிமாவில் கலையம்சம் என்று அதிகம் இல்லை; எல்லாம் கம்ப்யூடர் யுக்திதான்.

Silver lining

ஆனால் இந்த மேகத்திலும் ஒரு ஒளிக்கீற்று இருக்கத்தான் செய்தது. நமது சினிமா,  சங்கீதத்திற்கும், அதற்கு ஆதாரமாக சாஹித்யத்திற்கும் சிறந்த இடம் கொடுத்தது.  பல சிறந்த கவிஞர்கள் பாடல் எழுதினார்கள். பல மேதைகள்  இசையமைத்தார்கள். ராகத்தின் அடிப்படையிலேயே இசை அமைத்தார்கள். ஒரே ராகத்தில் பல மெட்டுகள், பாட்டுகள்  அமைத்தார்கள். அவற்றின் கவிதை நயமும் சிறந்திருந்தது. ஆர்கெஸ்ட்ரா, பின்னணி இசை எனப் பலவற்றிலும் மேற்கத்திய சாயல் தோன்றினாலும் அடிப்படையாக இருப்பது நமது தேசீய சங்கீதமே. இதுதான் ஹிந்திப் பாடல்களின் வெற்றியின் ரகசியம். எத்தனை கம்ப்யூடர்  இசை, பாப்-கீப் என்று வந்தாலும் அவை ஈடுகொடுக்க முடியவில்லை! 50, 60 வருஷங்களுக்கு முந்தைய பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன. யுடியூப் வந்த பிறகு இளைய தலைமுறையினரும் இதை உணர்ந்து வருகின்றனர்.

இன்று சினிமா கலையாகவும் இல்லை, பொழுது போக்கு அம்சமாகவும் இல்லை -(அ)சுத்த வியாபாரமாகிவிட்டது. இது 1980லிருந்து நாம் காணும் நிலை.அதுவரை, எத்தனை வியாபார நிர்பந்தங்களுக் கிடையிலும்  சில நல்ல அம்சங்கள் இல்லாமலில்லை.

சினிமாவில் சாமி !

இத்தகைய அம்சங்களில் ஒன்று, சினிமாவில் வரும் பஜன், பிரார்த்தனைப் பாடல்கள். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சமூகப் படம் என்று வந்த வரையில், இத்தகைய பாடல்கள்  ஏராளமாக இருந்தன. அவற்றில் பல காலத்தால் அழியாதவை.  அத்தகைய பாடல்களில், எந்த சாமியையும் குறிப்பாகச் சொல்லாமல், பொதுவாக கடவுள் என்ற நிலையில் பாடிய  நான்கு பாடல்களை இப்போது பார்க்கலாம்.






தூ ப்யார் கா ஸாகர் ஹை
படம்: ஸீமா 1955 Seema
கவிஞர் : ஶைலேந்த்ரா
இசை: ஶங்கர் ஜய்கிஷன்
பாடியவர் : மன்னா டே
Manna Dey


,तू प्यार का सागर है
தூ ப்யார் கா ஸாகர் ஹை
பகவானே ! நீ கருணைக் கடல்

तेरी इक बूँद के प्यासे हम
लौटा जो दिया तुमने, चले जायेंगे जहाँ से हम
तू प्यार का सागर है …
தேரீ இக் பூந்த் கே ப்யாஸே ஹம்
லௌடா  ஜோ தியா தும்னே, 
சலே ஜாயேங்கே ஜஹா(ன்) ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை......

உன் கருணையின் ஒரு திவலைக்காக நாங்கள் ஏங்கி நிற்கிறோம்!
நீ எங்களைத் திருப்பி அனுப்பிவிட்டால்
நாங்கள் இந்த உலகத்தை விட்டே போய்விடுவோம்!
பகவானே ! நீ கருணைக் கடல் !

घायल मन का, पागल पंछी उड़ने को बेक़रार
पंख हैं कोमल, आँख है धुँधली, जाना है सागर पार
जाना है सागर पार
अब तू हि इसे समझा, राह भूले थे कहान से हम
तू प्यार का सागर है.......
காயல் மன் கா, பாகல் பஞ்சீ உட்னே கோ பேகரார்
பங்க் ஹை கோமல், ஆங்க் ஹை துந்த்லீ, 
ஜானா ஹை ஸாகர் பார், ஜானாஹை ஸாகர் பார்
அப் தூ ஹி இஸே சம்ஜா, 
ராஹ் பூலேதே கஹா(ன்) ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை......

இந்த மனம் என்னும் அடிபட்ட பறவை
ஓரு பைத்தியம் ! பறப்பதற்காகத் துடிக்கிறது !
இதன் இறகுகள் வலுவற்றவை, கண்களோ  நிலையின்றி அலைகின்றன
ஆனால் கடலைக் கடந்து போகவேண்டும் !
கடலைக் கடந்து போகவேண்டும் !
 நாங்கள் எங்கே பாதையிலிருந்து  தவறினோம் என்பதை
இப்போது நீயே எங்களுக்குச் சொல்வாயாக!
பகவானே ! நீ கருணைக் கடல்!


इधर झूमती गाये ज़िंदगी, उधर है मौत खड़ी
कोई क्या जाने कहाँ है सीमा, उलझन आन पड़ी
उलझन आन पड़ी
कानों में ज़रा कह दे, कि आये कौन दिशा से हम
तू प्यार का सागर है …
இதர் ஜூம் கே காயே ஃஜிந்தகீ,
உதர் ஹை மௌத் கடீ
கோயீ க்யா ஜானே கஹா(ன்) ஹை ஸீமா,
உல்ஜன் ஆன் படீ
உல்ஜன் ஆன் படீ
கானோ மே ஜரா கஹ தே, கி ஆயே கௌன் திஶா ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை.....

இந்தப் பக்கம் வாழ்க்கை ஒரே களிப்பும்
 கொண்டாட்டமுமாகச் செல்கிறது!
அந்தப் பக்கமோ மரணம் நிற்கிறது!
இவற்றின் இடையிலான எல்லை எங்கே இருக்கிறது ?
இது யாருக்கும் தெரியாது !
மனம் தவிக்கிறது, மனம் தவிக்கிறது !
நாங்கள் உன்னை எந்த வழியில் அடையலாம்
என்பதை நீயே எங்கள் காதுகளில் சொல்லிவிடு !
பகவானே ! நீ கருணைக் கடல் அல்லவா!



கவிதை மழை பொழிந்த ஶைலேந்த்ராவின் கைவண்ணம் இது! 60 ஆண்டுகள் ஆகியும் இமாலயம் போல் நிற்கிறது!
இந்தப் பாடல் ஹிந்துஸ்தானி பைரவி ராகத்தில் அமைந்தது.[ சிலர் 'தர்பாரி கானடா' என்பர்,] கர்னாடக இசையில் 'ஹனுமதோடி' எனச் சிலர் சொல்கிறார்கள்.




ஹே மாலிக் தேரே பந்தே ஹம்
படம்: தோ ஆங்கே(ன்) பாரஹ் ஹாத்  1957
Do Ankhen Barah Haath
கவிஞர்: பரத் வ்யாஸ்
Bharat Vyas
இசை: வஸந்த் தேசாய்
Vasant Desai
பாடியது : மன்னாடே & கோரஸ்



ऐ मालिक तेरे बन्दे हम
ऐसे हों हमारे करम
नेकी पर चलें और बदी से टलें
ताकि हंसते हुए निकले दम
ஹே மாலிக், தேரே பந்தே ஹம்
ஐஸே ஹோ ஹமாரே கரம்
நேகீ பர் சலே ஔர் பதீ  ஸே டலே
தாகி ஹஸ்தே ஹுவே நிக்லே தம்

ஆண்டவனே ! நாங்கள் உன்னுடைய அடிமைகள்
எங்களுடைய கரங்கள் நல்லதையே செய்யவும்
தீய வழியிலிருந்து விலகவும் அருள்புரிவாய்!
அப்போது சிரித்துக்கொண்டே உயிரை விடுவோம்!

ये अंधेरा घना छा रहा
तेरा इंसान घबरा रहा
हो रहा बेखबर, कुछ न आता नज़र
सुख का सूरज छुपा जा रहा
है तेरी रोशनी में जो दम
तो अमावस को कर दे पूनम
नेकी पर... 
யே அந்தேரா கனாசா ரஹா
தேரா இன்ஸான் கப்ரா ரஹா
ஹோ ரஹா பேகபர், குச் ந ஆதா நஃஜர்
ஸுக் கா ஸூரஜ்  சுபா ஜா ரஹா
ஹை தேரீ ரோஷ்னீ மே ஜோ தம்
தோ அமாவஸ் கோ கர்தே பூனம்
நேகீ பர் சலே...

கனத்த இருள் உலகைச் சூழ்கிறது
நீ சிருஷ்டித்த மனிதன் பயப்படுகிறான்
இவன்  பேச்சற்றுப் போகிறான்,
இவன் கண்ணுக்கு எதுவும் புலனாகவில்லை!
ஸுகம் என்னும் சூரியன்  மறைந்து வருகிறான்
உன்னிடம் இருக்கும் ஒளியின் சக்தி
அமாவாஸையையும் பவுர்ணமியாகச் செய்துவிடும்!
நாங்கள் நல்ல வழியிலேயே செல்வோமாக....

जब ज़ुल्मों का हो सामना
तब तू ही हमें थामना
वो बुराई करें, हम भलाई भरें
नहीं बदले की हो कामना
बढ़ उठे प्यार का हर कदम
और मिटे बैर का ये भरम
नेकी पर...
ஜப் ஜுல்மோ கா ஹோ ஸாம்னா
தம் தூ ஹி ஹமே தாம்னா
வோ புராயீ கரே(ன்), ஹம் பலாயீ பரே(ன்)
நஹீ பத்லே கீ ஹோ காம்னா
பத் உடே ப்யார் கா ஹர் கதம்
ஔர் மிடே பைர் கா யே பரம்
நேகீ பர் சலே ......

நாங்கள் கொடுமைகளைச் சந்திக்கும் போது
நீ எங்கள் கரங்களை நிதானிக்கச் செய்வாயாக
அவர்கள் கெடுதலே செய்தாலும்
நாங்கள் நல்லதாகவே எடுத்துக்கொள்வோம், நல்லதே செய்வோம்
பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் வராமலிருக்கட்டும்
அன்புடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம்
எதிர்ப்பு என்ற எண்ணம் இல்லாமல் போகட்டும்!
நாங்கள் நல்லவழியிலேயே செல்வோம்!

बड़ा कमज़ोर है आदमी
अभी लाखों हैं इसमें कमी
पर तू जो खड़ा, है दयालू बड़ा
तेरी किरपा से धरती थमी
दिया तूने हमें जब जनम
तू ही झेलेगा हम सबके ग़म
नेकी पर...
படா கம்ஃஜோர் ஹை ஆத்மீ
அபீ லாகோ(ன்) ஹை இஸ்மே கமீ
பர் தூ ஜோ கடா ஔர் தயாலு படா
தேரீ  கிர்பா ஸே தர்தீ தமீ
தியா தூ நே ஹமே ஜப் ஜனம்
தூ ஹி ஜேலேங்கே ஹம் ஸப்கே கம்
நேகீ பர் சலே.......

மனிதன்  வலுவற்றவன்
இதில் லக்ஷக்கணக்கான குற்றம் குறைகள் வேறு!
ஆனால் பெரிய தயாளுவாக  நீ இருக்கிறாய்
உன்னுடைய கிருபையே இந்த உலகத்தைத் தாங்குகிறது
நீ  தானே எங்களைப் பிறப்பித்தாய் !
நீயே எங்கள் கஷ்டச் சுமையையும் தாங்குவாய் !
நாங்கள் நல்ல வழியிலேயே நடப்போமாக !
தீயவற்றிலிருந்து விலகி நிற்போமாக !
அப்போது  சந்தோஷமாகவே எங்கள் உயிர் பிரியும்!







பரத் வ்யாஸ் எழுதிய இப்பாடல் வஸந்த் தேசாயின் இசையில் இதயம் தொடும் ப்ரார்த்தனையாக அமைந்தது ! ஹிந்துஸ்தானி 
"பைரவ் " ராகத்தில் இருக்கிறது.
 பல பள்ளிகளில் இது பிரார்த்தனையாகப் பாடப்பட்டது!




ஹம் கோ மன் கீ ஶக்தி தேனா
படம்: குட்டி 1971 Guddi
கவி: குல்ஃஜார்  Gulzar
இசை : வஸந்த்  தேஸாய்
Vasant Desai
பாடியது: வாணி ஜயராம் & கோரஸ்

हम को मन की शक्ति देना, मन विजय करें 
दूसरों की जय से पहले, खुद को जय करें 

ஹம் கோ மன் கீ ஶக்தி தேனா, 
மன் விஜய் கரே(ன்)
தூஸ்ரோ (ன்) கீ ஜய் ஸே பஹலே
குத் கோ ஜய் கரே !

பகவானே ! எங்கள் மனதிற்கு சக்தி யளிப்பாயாக
மனதை வெற்றியடையச் செய்வாயாக !
மற்றவர்களை வெற்றிகொள்வதற்குமுன்,
எங்களையே நாங்கள் வெற்றிகொள்வோமாக!
[எங்கள் மனதையே அடக்கி ஆள்வோமாக ]

भेदभाव अपने दिल से साफ़ कर सकें
दोस्तों से भूल हो तो माफ़ कर सकें 
जूठ से बचे रहे, सच का दम भरें 
दूसरों की जय से पहले, खुद को जय करें 

பேத் பாவ் அப்னே தில் ஸே ஸாஃப் கர் ஸகே(ன்)
தோஸ்தோ(ன்) ஸே பூல் ஹோ தோ மாஃப் கர் ஸகே(ன்)
ஜூட்  ஸே பசே ரஹே, ஸச் கா தம் பரே(ன்)
தூஸ்ரோ(ன்) கீ ஜய் ஸே பஹலே, குத் கோ ஜய் கரே(ன்)

எங்கள் மனதில் எந்தவித வேற்றுமை உணர்வும் இல்லாமல் இருக்கட்டும்
நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்துவிடும் குணம் இருக்கட்டும்
பொய்யிலிருந்து விலகி இருப்போம்,  சத்தியத்தில் உறுதியாக இருப்போம்
மற்றவர்களை வெற்றிகொள்ள முயல்வதன்  முன்
எங்கள் மனதையே நாங்கள் அடக்கிவைப்போமாக!

मुश्किलें पड़े तो हम पे इतना कर्म कर
साथ दें तो धर्म का, चलें तो धर्म पर
खुद पे हौसला रहे, बड़ी से ना डरे
दूसरों की जय से पहले, खुद को जय करें 

முஷ்கிலே(ன்) படே தோ ஹம் பே இத்னா கர்ம் கர்
ஸாத் தே(ன்) தோ தர்ம் கா, சலே(ன்) தோ தர்ம் பர்
குத் பே ஹௌஸலா ரஹே, படீ ஸே நா டரே
தூஸ்ரோ(ன்) கீ ஜய் ஸே பஹலே. குத் கோ ஜய் கரே(ன்)

 நாங்கள் கஷ்டங்களைச் சந்திக்க நேர்ந்தால் -
எங்கள் மீது இத்தனை தயவு செய்வாய் -
நாங்கள்  தர்மத்தை விடாமல் இருக்கவும்,
தர்மவழியிலேயே நடக்கவும் தயவு செய்வாய்
நம்பிக்கை இழக்காம லிருக்கவும்,
தீமையைக் கண்டு அஞ்சாமலிருக்கவும் அருள் செய்வாய்!
மற்றவர்களை வெற்றிகொள்ள  நினைக்கும் முன்பு
எங்கள் மனதையே நாங்கள் வெற்றி கொள்வோமாக !








இது ஒரு பள்ளிக்கூடப்  பிரார்த்தனையாகவே எழுதப்பட்ட பாடல். குல்ஃஜாரின் கவிதை நடை சற்று கடினமானது. வஸந்த் தேஸாய்  கேதார் ராகத்தில் அருமையாக இசையமைத்தார் ! இதைப்  பல பள்ளிகளிலும் காலையில் பாடிவந்தார்கள். 

 Smt. Vani Jairam
foto:http://tfmpage.com






[ வஸந்த் தேஸாய்  நமது தேசீய இசையை மையமாக வைத்தே இசையமைத்தவர். காஞ்சிப் பெரியவர் எழுதி, M.S, அவர்கள் ஐ. நா சபையில் பாடிய "மைத்ரீம் பஜத "  பாடலுக்கு இசை அமைத்தவரும் வஸந்த் தேசாய்தான்! ]

இன்னொரு  அருமையான பாடல்-




இன்ஸாஃப் கா மந்திர் ஹை
படம்: அமர் 1954 Amar
கவி : ஷகீல் பதாயுனி Shakeel Badayuni
இசை: நௌஷாத் Naushad
பாடியது: முஹம்மத் ரஃபி
Mohammad Rafi
ராகம்: பைரவி (ஹிந்துஸ்தானி )
Naushad & Rafi in the picture







इन्साफ का मंदिर है ये भगवान का घर है
कहना है जो कह दे तुझे किस बात का डर है
இன்ஸாஃப் கா மந்திர் ஹை யே பகவான் கா கர் ஹை
கஹனா ஹை ஜோ கஹ தே துஜே கிஸ் பாத் கா டர் ஹை

இது நீதியின்  கோவில், பகவானின்  வீடு!
எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல் -
எதற்காக பயப்படுகிறாய் ?

है खोट तेरे मन मे जो भगवान से है दूर
है पाँव तेरे फिर भी तू आने से है मजबूर
हिम्मत है तो आजा, ये भलाई की डगर है
इन्साफ का मंदिर है...
ஹை  கோட் தேரே மன் மே ஜோ பகவான் ஸே ஹை தூர்
ஹை பாஸ் தேரே ஃபிர் பி தூ ஆனே ஸே ஹை மஜ்பூர்
ஹிம்மத் ஹை தோ ஆஜா, யே பலாயி கீ டகர் ஹை
இன்ஸாஃப் கா மந்திர் ஹை.......

உன் மனதில் ஏதோ களங்கம் - அதுதான் உன்னை
பகவானிடமிருந்து விலக்கியிருக்கிறது !
இங்கு அருகில் தான் இருக்கிறாய் -ஆனாலும்
உள்ளே வரத் தயங்குகிறாய் !
தைரியம் இருந்தால் இங்கே வா -
இது நன்மையின் பாதை!
இது நீதியின் கோவில் !
दुःख दे के जो दुखिया से ना इन्साफ करेगा
भगवान भी उसको ना कभी माफ़ करेगा
ये सोच ले हर बात की दाता को खबर है
हिम्मत है तो आजा, ये भलाई की डगर है
इन्साफ का मंदिर है...
துக்  தே கே ஜோ துகியா ஸே நா இன்ஸாஃப் கரேகா
பகவான் பீ உஸ்கோ நா கபீ மாஃப் கரேகா
யே ஸோச் லே ஹர் பாத் கீ தாதா கோ கபர் ஹை
ஹிம்மத் ஹை தோ ஆஜா, ஏ பலாயீ கீ டகர் ஹை
இன்ஸாஃப் கா மந்திர் ஹை.......

ஒருவருக்கு துன்பம் தந்துவிட்டு அதை சரிசெய்யாதவன் -
பகவான்  கூட அவனை மன்னிக்கமாட்டார் !
அந்தப் பெரியவருக்கு எல்லாம் தெரியும் - இதை நினைத்துப் பார் !
இது நன்மை தரும் பாதை- தைரியமிருந்தால் இங்கே வா !
இது நீதியின்  கோவில் !

है पास तेरे जिसकी अमानत उसे दे दे
निर्धन भी है इंसान, मोहब्बत उसे दे दे
जिस दर पे सभी एक हैं बन्दे, ये वो दर है
इन्साफ का मंदिर है...

ஹை பாஸ் தேரே ஜிஸ்கீ அமானத்  உஸே தே தே
நிர்தன் பீ ஹை இன்ஸான், மோஹப்பத் உஸே தே தே
ஜிஸ் டர் பே ஸபீ ஏக் ஹை பந்தே, யே ஓ டர் ஹை
இன்ஸாஃப் கா மந்திர் ஹை..........

யாருடைய நம்பிக்கையைப் பெற்றாயோ -
அதைப் பூர்த்தி செய்
மனிதன்  ஏழை - அவனிடம் அன்பு செலுத்து
அன்பனே ! எந்த வாசலின் முன் அனைவரும் சமமோ, 
அந்த வாசல் இதுதான் !
இது நீதியின் கோவில் !

मायूस ना हो हार के तक़दीर की बाज़ी
प्यारा है वो गम जिसमें हो भगवान भी राज़ी
दुःख दर्द मिले जिसमें, वही प्यार अमर है
ये सोच ले हर बात की दाता को खबर है
इन्साफ का मंदिर है...
மாயூஸ் நா ஹோ ஹார் கே தக்தீர் கீ பாஜீ
ப்யாரா ஹை ஓ கம் ஜிஸ்மே ஹோ பகவான் பீ ராஜீ
துக் தர்த் மிலே ஜிஸ்மே, ஒஹீ ப்யார் அமர் ஹை
யே ஸோச் லே ஹர் பாத் கீ தாதா கோ கபர் ஹை
இன்ஸாஃப் கா மந்திர் ஹை.........

விதியின் விளையாட்டில் தோற்று மனம் நொந்து விடாதே !
அந்த துயரம்  பகவானிடம் நெருங்கச் செய்யும்!
துயரமும் துன்பமும் இருந்தும் யார் அன்பு செலுத்துகிறார்களோ
அத்தகைய அன்பே அமரத்தன்மை வாய்ந்தது !
பகவானுக்கு எல்லாம் தெரியும் - இதை நினைத்துப் பார் !
இது நீதியின்  கோவில் - பகவானின் வீடு
தைரியமிருந்தால் இங்கு வா !



ஷகீல் பதாயுனியின்  அருமையான கவிதை ! கோவிலுக்குப்  போகிறவர்கள் சுத்தமாகப் போகவேண்டும் என்போம். உடலும் உடையும் சுத்தமாக இருந்தால் போதுமா ? மனதும் சுத்தமாக இருக்கவேண்டும் !  'புறத்தூய்மை நீரால்  அமையும், அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் ' என்பார் வள்ளுவர். இங்கு வாய்மையையும் விட ஒரு படி மேலே போகிறார் ஷகீல்.

சேற்றில் செந்தாமரை மலர்கிறது ! சினிமா சகதியிலும் இத்தகைய அருமையான பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. நமது பழைய இலக்கியம் படித்தவர்களுக்கு இக்கவிதைகள் எந்த அளவுக்கு நம் மரபை ஒட்டியே இருக்கின்றன என்பது விளங்கும். இத்தகைய கவிதைகளை எழுதிய கவிஞர்களையும், அவற்றிற்கு இசை வடிவம் கொடுத்து நமது மனதில் இருத்திய இசை மேதைகளுக்கும் நாம்  இதயபூர்வமாக  நன்றி சொல்ல வேண்டும். அந்த நாளும் மீண்டும் வந்திடாதோ என்று  எண்ணத்    தோன்றுகிறது ! பாடல்களை யூடியூபில் கேட்டு மகிழலாம்.




No comments:

Post a Comment