Showing posts with label Shakespeare. Show all posts
Showing posts with label Shakespeare. Show all posts

Friday, 3 November 2017

96.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -6


96.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -6


Train- Bombay to Thana 1855.picture from:https://scroll.in

உலகில் எத்தனையோ நாடுகள், இனங்கள், மொழிகள் , பழக்க வழக்கங்கள் ! எத்தனையோ மதங்கள், தத்துவங்கள்! மனிதன்- மனித குலம்- மனித இயற்கை- என்று  பார்த்தால் அடைப்படைத் தேவைகள்  ஒன்றுதான் : உணவு, உடை, இருப்பிடம் ! இதைப்  பெறுவதற்கு ஆயிரம்  வகை முயற்சிகள், கொள்கைப் பூசல்கள், அரசியல் ஜாலங்கள், வியாபார தந்திரங்கள் ! ஆனாலும் உலகில் மூன்றில் ஒருவருக்கு அடிப்படைத் தேவைகள் கூட கிடைப்பதில்லை! இது இன்றைய விஞ்ஞான யுகத்தின் பரிதாப நிலை!

மக்களின் நடை, உடை, பாவனைகள் இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப மாறுகின்றன. ஆனால் ஒவ்வொரு சமுதாயத்திலும்  அதிலுள்ள சான்றோர்கள் சில அடிப்படை விஷயங்களைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்திருக்கிறார்கள். அறிவுரை கூறிச் சென்றிருக்கிறார்கள். இவையே கல்வி என்ற பெயரில் பயிலப்பட்டன.

உலகம் முழுவதிலும் இதன் அடிப்படை ஒன்றாகவே இருந்திருக்கிறது!  உலக வாழ்க்கை நிலையானதல்ல; இருக்கும் போது நல்லதை நினை, நல்லதையே  செய் என்பதே அடிப்படை அறிவுரை ! இதை சமயம் என்று சொல்லலாம், தத்துவம் என்று சொல்லலாம் ; ஆனால் விஷயம் இதுதான்.

இதைக் கவிஞர்கள் தங்களுக்கே உரிய நடையில் மனதில் படும்படிச் சொல்வார்கள்.  சமய வாதிகள் சண்டையிடுவார்கள். தத்துவ வாதிகள் குழப்புவார்கள்; அரசியல் வாதிகள் பிரிப்பார்கள். ஆனால் உலகம் முழுதும்  உள்ள சிறந்த கவிஞர்கள் ஒரே குரலில் பேசுவார்கள். இதைப் புரிந்துகொள்ள புத்தி மட்டும் போதாது; மனதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
"மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி " என்பார் நம் அருணகிரிநாதர்.
உத்தம மனதிற்கே உண்மை விளங்கும்.

இங்கு ஷேக்ஸ்பியர்  பாடிய ஒரு கவிதையைப் பார்ப்போம். ஸான்னெட் 55.







Sonnet 55
Not marble, nor gilded monuments









Not marble, nor the gilded monuments
Of princes, shall outlive this powerful rhyme;
But you shall shine more bright in these contents
Than unswept stone, besmear'd with sluttish time.
When wasteful war shall statues overturn,
And broils root out the work of masonry,
Nor Mars his sword, nor war's quick fire shall burn
The living record of your memory.
'Gainst death, and all oblivious enmity
Shall you pace forth; your praise shall still find room
Even in the eyes of all posterity
That wear this world out to the ending doom.
   So, till the judgment that yourself arise,
   You live in this, and dwell in lovers' eyes.




அரசர்கள், பிரபுக்கள் [ தற்காலத்தில் அரசியல் வாதிகள் ] தங்களுக்காக சிலைகள்,  நினைவுச் சின்னங்கள், மணி மண்டபங்கள் எழுப்புகிறார்கள். இவை காலப்போக்கில் பழுதடைந்து விழுந்துவிடுகின்றன. போர், இன்ன பிற காரணங்களால் அழிந்துவிடுகின்றன. மரணம் மனிதனை விழுங்கிவிடுகிறது.அவன் நினைவு அழிந்துவிடுகிறது. ஆனால் ஒரு சிறந்த கவிஞனின் கவிதை சொல்லாக இருந்தாலும் காலத்தை வென்று நிற்கிறது!
போரோ, இயற்கை உத்பாதங்களோ அதை அழிக்க இயலாது ! அதேபோல் நாம் அன்பர்களின் நினைவிலும் வாழ்வோம்!

இது  ஷேக்ஸ்பியர் 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய பாடல் . 
ஏறத்தாழ இதே கருத்தை நம் திரைக்கவிஞர் ஒருவர் 1975ல் பாடினார் என்பது வியப்பாக இல்லை ?




பாடல் : இக் தின் பிக் ஜாயேகா
படம் : தரம் கரம்1975 Dharam Karam
கவி : மஜ்ரூ ஸுல்தான்புரி Majrooh Sultanpuri
இசை : ஆர்.டி பர்மன் R.D. Burman
பாடியது : முகேஷ் Mukesh





एक दिन बिक जायेगा, माटी के मोल
जग मे रह जायेगे प्यारे तेरे बोल
दूजे के होठो को देकर अपने गीत
कोई निशानी छोड़, फिर दुनिया से दोल
एक दिन.
..

ஏக் தின் பிக் ஜாயேகா, மாடீ கே மோல்
ஜக  மே ரஹ் ஜாயேங்கே ப்யாரே தேரே போல்
தூஜே கே ஹோடோ(ன்) கோ தேகர் அப்னே கீத்
கோயீ நிஷானீ  சோட், ஃபிர் துனியாஸே  டோல்
ஏக் தின்........

[ மனிதனே உன் விலை என்ன? ]
ஒரு நாள் ஒருபிடி மண்ணின் விலைதான் உனக்கு வரும்!
ஆனால் உன் சொல் இந்த உலகில் நிலைத்து நிற்கும்!
அதனால் உன்னுடைய பாடலைப் பிறர் பாடுமாறு  கொடு
ஏதாவது அடையாளம் விட்டுச் செல்- பிறகு உலகத்தை விட்டுச் செல்!
ஒரு நாள்.........

अनहोनी पथ मे काटे लाख बिछाये
होनी तो फिर भी बिछड़ा यार मिलाये
यह बिरहा, यह दूरी
दो पल की मजबूरी
फिर कोई दिलवाला कहे को घबराये
तरम पम...

धरा जो बहती है मिलके रहती है
बहती धारा बन जा फिर दुनिया से दोल
एक दिन...


அன்ஹோனீ பத் மே கா(ன்)டே லாக் பிசாயே
ஹோனீ தோ ஃபிர் பீ பிச்டா யார் மிலாயே
யஹ் பிர்ஹா, யஹ் தூரி
தோ பல் கீ மஜ்பூரீ
ஃபிர் கோயீ தில்வாலா காஹே கோ கப்ராயே
தரம் பம்.......
தாரா ஜோ பஹதீ ஹை மில்கே ரஹதீ  ஹை
பஹதீ தாரா பன் ஜா ஃபிர் துனியா ஸே  டோல்
ஏக் தின்...........

துரதிருஷ்டம் உன் பாதையில் அனேகம் தடைகளைத் தரலாம்
ஆனால் அதிருஷ்டம் ஒரு நாள் உன்னைப் பிரிந்த வேண்டியவர்களோடு  சேர்த்துவிடும்!
இந்தப் பிரிவின் துயரம், இந்த தொலைவு -
இந்த நிலை சில காலமே இருந்து மறைந்துவிடும்!
பின், தைரியசாலி ஏன் பயப்படவேண்டும்?
ஓடும் நதி, கடலை அடையுமுன்  நிற்பதில்லை!
நீயும் நதி போல் ஆகிவிடு ! பிறகு உலகை விட்டுச் செல் !

परदे के पीछे बैठी सावल गोरी
थाम के तेरे मेरे मन की डोरी
यह डोरी ना छूते, यह बंधन ना टूटे 
भोर होने वाली है अब रैना है थोड़ी
तरम पम...
सर को झुकाए तू बैठा क्या है यार 
गोरी से नैना जोड़ फिर दुनिया से दोल
एक दिन...



பர்தே கே பீசே பைடீ ஸாவல் கோரீ
தாம் கே தேரே மேரே மன் கீ டோரீ
யஹ் தோரீ ந சூடே, யஹ் பந்தன் நா டூடே
போர் ஹோனே வாலீ ஹை அப் ரைனா ஹை தோடீ
தரம் பம்......
ஸர் கோ ஜுகாகே தூ பைடா ஹை யார்
கோரீ ஸே நைனா  ஜோட், ஃபிர் துனியா ஸே டோல்
ஏக் தின்......

அந்த உயர்ந்த அழகி திரையின் பின் அமர்ந்திருக்கிறாள் !
அவளே உனது, எனது இதய சூத்திரத்தைப் பிடித்திருக்கிறாள் !
இந்த சூத்திரக் கயிறு துண்டிக்கப்படாமல் இருக்குமாக
இந்த உறவு விட்டுப் போகாமல் இருக்குமாக
உதயம் ஆகும் நேரம் வந்துவிட்டது, இரவு சிறிதே பாக்கி!
ஏன் தலையைக்  கவிழ்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாய் ?
அந்த அழகியின் கண்களைப் பார், பின் இந்த உலகை விட்டுச் செல்!
ஒரு நாள்.......




This is not an ordinary film song. The meaning I have given above is superficial. This is a deeply philosophical reflection on life. Everything in the world is ephemeral. Only our words and love remain. The last stanza is just mystical.  This excellent poem was sung by Mukesh as only he could! 

Tuesday, 24 October 2017

94. வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -4


94. வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -4

உலகின் போக்கு விசித்திரமானது !
We always say " fall in love " - as if it is something like "falling sick " or to "fall into a trap "   or to fall victim! Why don't we say 'rise' in love? Or at least float or stand ?

We do say someone 'rose' in our estimation, but not with reference to what we call love! Some people say that this is because love- worldly love- has to do with the lower centres of the brain! So called scientists will relate it to some hormone or animal instinct. Psychologists will spin their own theories. But in human beings "love" encompasses a range of fine, refined feelings, as also down right vulgarity and baseness. It does not lend itself to lab analysis. In any case, "this falling in love routine is very bizarre.....it borders on the occult", says John Cleese.

காதலைப் பற்றிய இன்னொரு விஷயம், அது எதிலும் தொத்திக்கொண்டு விடும்! ஆனாலும் இசை, நாட்டியம் முதலிய "லலித" கலைகள்  அதனுடன் சிறப்பாகச்  சம்பந்த முடையவை.
"If music be the food of love, play on" 
என்பார்  நம் ஷேக்ஸ்பியர். P.B.Shelley எழுதுகிறார் :


Like a high-born maiden 
In a palace-tower, 
Soothing her love-laden 
Soul in secret hour 
With music sweet as love, which overflows her bower: 



இதுவே நமது சினிமா இசைக்கு இலக்கணம் வகுத்தது போல் இருக்கிறது!


Albert Schroder, 1885.
இத்தகைய காட்சி வராத நமது சினிமா உண்டா ?

இசை ஒரு மயக்கம்;  காதல் ஒரு போதை ! இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும்? சில பாடல்களில் பார்க்கலாம்.






அஜீப் தாஸ்தா(ன்) ஹை யே
படம்: தில் அப்னா ஔர் ப்ரீத் பராய் 1960 Dil Apna Aur Preet Parai
பாடல் : ஶைலேந்த்ரா
இசை: ஶங்கர் ஜெய்கிஷன்
Raag: Puria Dhanasri

ஶங்கர்-ஜய்கிஷனுடன் இடது கோடியில் ஶைலேந்த்ரா





अजीब दास्ताँ है ये
कहाँ शुरू कहाँ ख़तम
ये मंजिलें है कौन सी
न वो समझ सके न हम

அஜீப் தாஸ்தா(ன்) ஹை யே
கஹா(ன்) ஷுரூ கஹா(ன்) கதம்
யே மன்ஃஜிலே(ன்) ஹை கௌன் ஸீ
ந வோ ஸமஜ் ஸகே ந ஹம்

இது ஒரு விசித்திரமான கதை
எங்கு தொடங்கியதோ, எங்கு முடிகிறதோ
இதன் இலக்கு என்பது என்ன_
இது அவருக்கும் புரியவில்லை, எனக்கும் புரியவில்லை!

ये रौशनी के साथ क्यूँ
धुंआ उठा चिराग से
ये ख्वाब देखती हूँ मैं
के जग पड़ी हूँ ख्वाब से
अजीब..

யே ரோஷனீ கே ஸாத் க்யூ
துவா உடா சிராக் ஸே
யே  கவாப் தேக்தீ ஹூ(ன்) மை
கே ஜக் படீ ஹூ(ன்) க்வாப் ஸே

விளக்கு எரிகின்றபோதே அதன் ஒளியுடன் 
புகையும் சேர்ந்து வருகிறதே, அது ஏன் ?
நான் கண்டுகொண்டிருக்கும் கனவிலிருந்து
விழித்துக் கொள்வதாகக் கனவு காண்கிறேன் !
मुबारके तुम्हें के तुम
किसी के नूर हो गए
किसी के इतने पास हो
के सबसे दूर हो गए
अजीब..


முபாரகே தும்ஹே கே தும்
கிஸீ கே நூர் ஹோ கயே
கிஸீ கே இத்னே பாஸ் ஹோ
கே ஸப் ஸே தூர் ஹோகயே

 நீ யாருக்கோ வேண்டியவராகி விட்டாய்
உனக்கு வாழ்த்துக்கள் !
ஒருவருக்கு இத்தனை நெருக்கமாகி விட்டாய் -
அனைவரிடமிருந்தும் தூர விலகிவிட்டாய் !


किसी का प्यार ले के तुम
नया जहां बसाओगे
ये शाम जब भी आएगी
तुम हमको याद आओगे
अजीब..

கிஸீ கா ப்யார் லேகே தும்
நயா ஜஹா(ன்) பஸாவோகே
யே ஷாம் ஜப் பீ ஆயேகீ
தும் ஹம் கோ யாத் ஆவோகே

ஒருவருடைய அன்புடன் கூடி
நீ புதிய உலகம் அமைத்துக் கொள்வாய் !
இந்த மாலை நேரம் வரும்போதெல்லாம்
எனக்கு உன் நினைவு வரும் !

அஜீப் தாஸ்தா(ன்) ஹை யே
இந்தக் கதை விசித்திரமானது!

எளிய சொற்களில் எத்தகைய கவிதையைத் தந்துவிட்டார்  ஶைலேந்த்ரா !
இங்கு சோகத்தின் ஒரு சாயல் தெரிகிறது! But it does bring out the bizarre nature of love!

காதலின் தீவிரத்தைக் காட்டும் இன்னொரு பாடல் -









மை பாகல்
படம்: ஆஷியானா 1952
கவி : ராஜேந்தர் க்ருஷ்ணா
இசை : மதன் மோஹன்
Raag : Kedar

Talat Mehmood & Madan Mohan





मैं पागल मेरा मनवा पागल 
पागल मेरी प्रीत रे 
पगले-पन की पीड़ वो जाने 
बिछड़े जिसका मीत रे 
मैं पागल मेरा मनवा पागल ...

कहे ये दुनिया मैं दीवाना 
दिन में देखूँ सपने 
दीवानी दुनिया क्या जाने - २
ये सपने हैं अपने - २ 
घायल मन की हंसी उड़ाये 
ये दुनिया की रीत रे, मैं पागल ...
छुपी हुई मेरी काया में 
राख किसी परवाने की  
ये मेरा दुखिया जीवन है
रूह किसी दीवाने की 
मन के टूटे तार बजाकर 
गाऊँ अपने गीत रे 

मैं पागल मेरा मनवा पागल 
पागल मेरी प्रीत रे, मैं पागल ...
மை பாகல் மேரா மன்வா பாகல்
பாகல் மேரீ ப்ரீத் ரே
பாகல்-பன் கீ பீட் ஓ ஜானே
பிச்டே ஜின் கீ மீத் ரே
மை பாகல்......
 நான் ஒரு பைத்தியம், 
என மனதும் பைத்தியமாகிவிட்டது !
என்னுடைய காதலும் பைத்தியமாகிவிட்டது !
யாருடைய அன்பர் பிரிந்து போனார்களோ 
அவர்களுக்கே இந்தப் பைத்தியத்தின் தாக்கம் புரியும்!

கஹே யே துனியா மை தீவானா
தின் மே தேகூ(ன்) ஸப்னே
தீவானீ துனியா க்யா ஜானே
யே ஸப்னே ஹை அப்னே...
காயல் மன் கீ ஹ(ன்)ஸீ உடாயே
யே துனியா கீ ரீத் ரே
மை  பாகல்....

 நான் பித்துப் பிடித்தவன்,
பகலில் கனவு காண்கிறேன் என இந்த உலகம் சொல்கிறது!
இந்த உலகத்திற்கு இந்த பைத்தியம் எப்படிப் புரியும்!
என் கனவைப் பற்றி என்ன தெரியும்!
ஒருவரின் புண்பட்ட மனதைப் பார்த்துச் சிரிப்பது -
இதுதானே உலகில் நடக்கிறது!
நான் பைத்தியம் ......

சுபீ ஹுயீ மேரீ காயா மே
ராக் கிஸீ பர்வானே கீ
யே மேரா துகியா ஜீவன் ஹை
ரூஹ் கிசீ தீவானே கீ
மன் கே டூடே தார் பஜா கர்
காவூ அப்னே கீத் ரே
மை பாகல்.......

[அன்பு என்னும் விளக்கில் விழுந்து எரிந்துவிட்ட ஒரு பைத்திய மாகிய]
விட்டிற் பூச்சியின் சாம்பல்  இந்த உடலில் நிறைந்திருக்கிறது !
இதுவே என்னுடைய துக்ககரமான வாழ்க்கை !
இந்தப் பைத்தியத்தின் ஜீவன் இங்குதான் இருக்கிறது.
ஒடிந்த உள்ளமாகிய தந்தியிலிருந்து நான் கீதம் இசைக்கிறேன்!
நான் பைத்தியம், என் மனமும் பைத்தியம்......


நாம் சாதாரணமாக மனிதக் காதலைப் பற்றியே பேசுகிறோம். ஆனால் இதையே பக்தியின் ஒரு நிலையாக உலகின் எல்லா மதங்களும் பேசுகின்றன. முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான ஸூஃபிக்கள் இந்த தெய்வீகக் காதலில் ஏழு நிலைகளைச் சொல்கிறார்கள். இதில் இந்தப் பாடல் ஏழாவது இடத்தைச் சார்ந்தது. இதற்கு Ghazal வடிவில் கேதார் ராகத்தில் அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் மதன் மோஹன். தலத் முஹம்மத் தன் தேன் குரலில் இதைப் பாடியிருக்கிறார். காலத்தால் அழியாத பாடல் !

காதல் பாடல்களில் ஏன் சோகம் இருக்கவேண்டும் ? இதை ஷெல்லி சொல்கிறார் :





We look before and after, 
And pine for what is not: 
Our sincerest laughter 
With some pain is fraught; 
Our sweetest songs are those that tell of saddest thought. 

[ To A Skylark ]







இதன் இறுதி வரியை  ஶைலேந்த்ரா மொழிபெயர்ப்பில் கீழே தருகிறேன்:

हैं सबसे मधुर वो गीत जिन्हें
हम दर्द के सुर में गाते हैं 

Hain sabse madhur woh geet jinhe
Hain sabse madhur woh geet jinhe
Ham dard ke sur me gate hai

இதோ,  இன்னொரு Landmark  பாடல்.







ஃஜிந்தகீ உஸீ கி ஹை
படம் : அனார்கலி 1953 
கவி : ராஜேந்த்ர க்ருஷ்ணா
இசை : ஸி.ராம்சந்த்ரா
Raag: Bhimpalasi

C.Ramchandra





ये ज़िन्दगी उसी की है, जो किसी का हो गया
प्यार ही में खो गया
ये ज़िन्दगी उसी...
யே ஃஜிந்த கீ உஸீ கி ஹை,
ஜோ கிஸீ கா ஹோ  கயா
ப்யார் ஹீ மே கோ கயா
யே ஃஜிந்தகீ.....

யாரொருவர்  வேறொருவருடையவராக ஆகிவிட்டார்களோ -
  ஒருவருடைய அன்பில்  கரைந்து போகிறார்களோ -
இந்த வாழ்க்கை அவர்களுக்கே சொந்தம் 
[ அவர்களே உண்மையில் வாழ்கிறார்கள்.]

ये बहार, ये समा, कह रहा है प्यार कर
किसी की आरज़ू में अपने दिल को बेक़रार कर
ज़िन्दगी है बेवफ़ा, लूट प्यार का मज़ा
ये ज़िन्दगी उसी की है.

யே பஹார், யே ஸமா, கஹ் ரஹா ஹை ப்யார் கர்
கிஸீ  கீ ஆர்ஃஜூ மே அப்னே தில் கோ பேகரார் கர்
ஜிந்தகீ ஹை பேவஃபா, லூட் ப்யார் கா மஃஜா
யே  ஃஜிந்தகீ ..........

இந்த வஸந்த காலம், இந்த  அழகிய இயற்கைச் சூழ் நிலை-
இது காதலுக்குகந்த நேரம் !
யாருடைய அன்பிலாவது உன் மனதை இழந்துவிடு!
இந்த வாழ்க்கை நன்றி இல்லாதது ( எதுவும் நிச்சயமில்லை )
அன்பில் ஆழ்ந்து  மகிழ்ச்சி யடைவாய் !
..



धड़क रहा है दिल तो क्या, दिल की धड़कनें ना गिन
फिर कहाँ ये फ़ुर्सतें, फिर कहाँ ये रात-दिन
आ रही है ये सदा, मस्तियों में झूम जा
ये ज़िन्दगी उसी की है...

தடக் ரஹா ஹை  தோ தில் ஹை க்யா.
தில் கீ தட்கனே நா கின் !
ஃபிர் கஹா(ன்) யே  ஃபுர்ஸதே(ன்),
ஃபிர் கஹா(ன்) யே ராத் -தின்
ஆ ரஹீ ஹை ஏ ஸதா, மஸ்தியோ(ன்) மே ஜூம் ஜா
யே ஃஜிந்த கீ உஸீ கீ ஹை.....

 நெஞ்சு படபடக்கிறதா? அதனால் என்ன ?
இதயத் துடிப்பை எண்ணாதே !
இந்த பொழுது திரும்பி வருமா ?
இந்த இரவும்-பகலும்  திரும்பி வருமா ?
வரும் இந்த  சந்திப்பு-மகிழ்ச்சி  அலையில் சேர்ந்துவிடு !
வேறு ஒருவருடையவராக யார் ஆகிவிட்டார்களோ -
இந்த வாழ்க்கை அவர்களுக்கே சொந்தம், அவர்களே வாழ்கிறார்கள்.

ஆயிரம் சினிமா வரலாம், ஆயிரம் பேர் எழுதலாம் , இசை அமைக்கலாம். இது மாதிரிப் பாடல் மீண்டும் இந்த உலகில் வரவே வராது!

 இதே கருத்தில் ராஜேந்த்ர க்ருஷ்ணாவே வேறொரு பாடலும் எழுதியிருக்கிறார் !






மன் மே கிஸீ கீ 
படம்: ஆராம் 1951 Aaram
கவி : ராஜேந்த்ர க்ருஷ்ணா
இசை : அனில் பிஸ்வாஸ்



मन में किसी की प्रीत बसाले
ओ मतवाले ओ मतवाले
मन में किसी की प्रीत बसाले
किसी को मन का मीत बनाले
मीत बनाले, ओ मतवाले ओ मतवाले
मन में किसी की प्रीत बसाले



மன் மே  கிஸீ கி ப்ரீத் பஸாலே
ஓ மத்வாலே, ஓ மத்வாலே
மன் மே கிஸீ கி ப்ரீத் பஸாலே
கிஸீ கோ மன் கா மீத் பனாலே
மீத் பனாலே, ஓ மத்வாலே, ஓ மத்வாலே
மன் மே கிஸீ கீ ப்ரீத் பஸாலே

 ஓ இளைஞனே !
மனதில்  யாருக்காகவாவது  அன்பை நிறைத்துக்கொள் !
யாரையாவது அன்பராக ஏற்றுக்கொள் !
மனதில் அன்பை  இருத்திக்கொள்! 



इस दुनियाँ में किसी का होजा
किसी को कर ले अपना
प्रीत बनाले ये जीवन को एक सुहाना सपना
एक सुहाना सपना
जीवन में ये ज्योत जगाले
ओ मतवाले ओ मतवाले
मन में किसी की प्रीत बसाले

இஸ் துனியா மே கிஸீ கா  ஹோ ஜா
கிஸீ கோ கர்லே அப்னா
ப்ரீத் பனாலே, ஏ ஜீவன் கோ ஏக் ஸுஹானி ஸப்னா
ஏக் ஸுஹானீ ஸப்னா
ஜீவன் மே ஏ ஜ்யோத் ஜகாயே
ஓ மத்வாலே, ஓ மத்வாலே
மன் மே கிஸி கீ .......

இந்த உலகில் யாருடையவராகவாவது ஆகிவிடு !
யாரையாவது உன்னுடையவராக ஏற்றுக்கொள் !
அன்பை வளர்த்துக்கொள் !
இது இந்த  வாழ்க்கையில் ஒரு இனிய கனவாக இருக்கும்!
இனிய கனவாக இருக்கும்!
வாழ்க்கையில் தீபமாக ஒளிரும்!
இளைஞனே! மனதில் அன்பை வளர்த்துக்கொள் !



प्रीत सताए प्रीत रुलाए
जिया में आग लगाए
जलनेवाला हँसते हँसते फिर भी जलता जाए
फिर भी जलता जाए
प्रीत के हैं अन्दाज़ निराले
ओ मतवाले ओ मतवाले
मन में किसी की प्रीत बसाले
ப்ரீத் ஸதாயே, ப்ரீத் ருலாயே
ஜியா மே ஆக் லகாயே
ஜல்னே வாலா  ஹ(ன்)ஸ்தே ஹ(ன்)ஸ்தே
ஃபிர் பீ ஜல்தா ஜாயே !, ஃபிர் பீ ஜல்தா ஜாயே
ப்ரீத் கே ஹை அந்தாஃஜ் நிராலே
ஓ மத்வாலே, ஓ மத்வாலே
மன் மே கிஸீ கீ ப்யார் பஸாலே

அன்பு சதாய்க்கும், அன்பு அழவைக்கும் !
இதயத்தில் கனலை மூட்டும்!
ஆனாலும் என்ன ? இந்தக் கனலில் எரிபவர்கள்
சிரித்துக்கொண்டே எரிவார்கள் !
சிரித்துக்கொண்டே எரிவார்கள் !
அன்பு என்பது விசித்திரமானது ! ஒப்பில்லாதது !
இளைஞனே ! மனதில் யாருக்காவது அன்பை  நிறைத்துக்கொள் !








இன்று ராஜேந்த்ர க்ருஷ்ணாவின் மூன்று பாடல்கள் இடம்பெற்றுவிட்டன! அதுவும் ஒரே விஷயம் பற்றி ! இது  தற்செயலாக அமைந்தது! இந்தக் கவிஞருக்கு சபாஷ் போடுவோம்!







இந்த பாடல்களெல்லாம் நமது பொற்காலத்தைச் சேர்ந்தவை ! கவிதையும் இசையும் பூவும் மணமும் போல! ஆனால் இவை பொன்மலர்கள் ! என்றும் இருக்கும் !