Showing posts with label Shailendra. Show all posts
Showing posts with label Shailendra. Show all posts

Sunday, 5 November 2017

98.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்!-8


98.வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ! -8



Kanchenjunga

உலகில் நமது வாழ்க்கையை இனிதாகச் செய்வது எது ?
இதை நாம் அனேகமாக யோசிப்பதில்லை! சிலருக்கு பாவம், வாழ்க்கை ஒரு சுமையாக, தண்டனையாக அமைந்துவிடுகிறது; சிலர் ஏதோ தூக்கத்தில் நடப்பவன் போல் இருக்கிறார்கள்; சிலருக்கு ஏதோ ஒன்றின் மீது மோகம் அல்லது மயக்கம் வந்து விடுகிறது ! நாட்கள் கழிந்துவிடுகின்றன. We are so busy living we don't examine how we live!

ஆனால் எல்லோருக்கும் ஏதோ ஒரு பிடிப்பு இருக்கிறது! பாட்டுப் பைத்தியம்,சீட்டுப் பைத்தியம், சினிமா பைத்தியம்,சீரியல் பைத்தியம், ஸ்போர்ட்ஸ் பைத்தியம், ஆஃபீஸ் பைத்தியம், அரசியல் பைத்தியம். புத்தகப் பைத்தியம்,டி.வி. பைத்தியம், கம்ப்யூடர்-மோபைல் பைத்தியம் என்று எப்படியோ காலம் ஓடிவிடுகிறது ! சிலர்  கோவில்-குளம்-சாமியார் என்றும் ஓடுகிறார்கள்!

சிறிது யோசித்துப் பார்த்தால் அடிப்படையில் மூன்றுவித பந்தங்கள் இருப்பது தெரியும். இயற்கையுடனான தொடர்பு முதலாவது. கிராமப்புறத்திலிருந்து வந்தவர்களிடம் இது இயல்பாக இருக்கும்.[ என எதிர்பார்க்கலாம்! ] We are part and parcel of nature, though 'modern' life obscures it!அடுத்தது  மனித சமூகத்துடனான  உறவு. சொந்த ஊர் என்று தொடங்கி, தன் குடும்பம், நட்பு வட்டாரம் என இது வளரும். Aristotle recognised it by saying man is a social animal. [ Ironically, modern man is not such a social being , naturally: he has to cultivate this aspect of his life, unlike some animals, like say, elephants, which are naturally social - more so than man can ever be!] மூன்றாவது இந்த உலகை நடத்தும் சக்தி. சாமி இல்லை என்பவர்கள் கூட இதை "இயற்கை " எனப் போற்றுவார்கள், 'காஸ்மோஸ்" என்பார்கள் ! இப்படி ஏதோ ஒரு விதத்தில் நாம் உலகுடன் நம்மை இணைத்துக்கொள்கிறோம் ! We are grandly related to some Great Power- as Paul Brunton once said.
 இத்தகைய தொடர்புகளே இந்த உலகின் கஷ்ட-நஷ்டங்களை  தாங்கிக்கொள்ளும் சக்தியை நமக்குத் தருகின்றன! நமது திரைக் கவிஞர்கள் இவற்றைப் பலவாறு பாடியிருக்கிறார்கள் !




from: actlearnlead.com


பாடல் : ஸுஹானா ஸஃபர்
படம் :மதுமதி 1958
கவி : ஶைலேந்த்ரா
இசை: ஸலீல் சௌத்ரி
பாடியது : முகேஷ்





सुहाना सफ़र और ये मौसम हसीं
हमें डर है हम खो न जाएँ कहीं

ஸுஹானா ஸஃபர் ஔர் யே மௌஸம் ஹஸீ(ன்)
ஹமே டர் ஹை ஹம் கோ ந ஜாயே(ன்) கஹீ(ன்)

இனிய பயணம், இனிய பருவகாலம் !
இங்கேயே எங்காவது என்னை மறந்து இருந்துவிடுவேனோ
என்று பயமாக இருக்கிறது!



ये कौन हँसता है फूलों में छुपकर
बहार बेचैन है किसकी धुन पर
कहीं गुनगुन, कहीं रुनझुन, कि जैसे नाचे ज़मीं
सुहाना सफ़र...

யே கௌன் ஹ(ன்)ஸ்தா ஹை ஃபூலோ(ன்) மே சுப் கர்
பஹார் பேசைன் ஹை கிஸ்கீ துன் பர்
கஹீ(ன்) குன்குன், கஹீ(ன்) ருன்ஃஜுன்
கீ ஜைஸே நாசே ஃஜமீன்
ஸுஹானா  ஸஃபர்..........

இந்த மலரில் ஒளிந்துகொண்டு சிரிப்பது யார் ?
இந்த அழகிய இயற்கை யாருடைய பாடலைக்கேட்டு
இப்படி பேதலித்து விட்டது?
இங்கே சில ஸ்வரம், அங்கே ஒரு தாளம் -
ஓ, பூமியே  நாட்டியமாடுவதுபோல் இருக்கிறதே !
எத்தனை இனிய பயணம் !



ये गोरी नदियों का चलना उछलकर
के जैसे अल्हड़ चले पी से मिलकर
प्यारे-प्यारे ये नज़ारे निखार है हर कहीं
सुहाना सफ़र...

யே கோரீ நதியோ(ன்) கா சல்னா உசல்கர்
கே ஜைஸே அல்ஹர் சலே பீ ஸே மில்கர்
ப்யாரே-ப்யாரே யே நஃஜாரே நிகார் ஹை ஹர் கஹீ(ன்)
ஸுஹானா ஸஃபர்......

இந்த நதி இப்படிச் சப்தித்துக்கொண்டு துள்ளி வருகிறது !
யாரோ நங்கை தன் காதலனைச் சந்திக்க ஒடுவதுபோல் இருக்கிறது !
இந்த அழகிய காட்சிகள் இப்படி எனக்கு நினைவூட்டுகின்றன !
எத்தனை இனிய பயணம் !

वो आसमां झुक रहा है ज़मीं पर
ये मिलन हमने देखा यहीं पर
मेरी दुनिया, मेरे सपने, मिलेंगे शायद यहीं
सुहाना सफ़र...

ஓ ஆஸ்மா(ன்) ஃஜுக் ரஹா ஹை ஃஜமீ(ன்) பர்
யே மிலன் ஹம்னே தேகா யஹீ(ன்) பர்
மேரீ துனியா, மேரீ ஸப்னே மிலேங்கே ஷாயத் யஹீ(ன்)
ஸுஹானா ஸஃபர்.....

ஓ, அங்கே பார் ! வானம் குனிந்து பூமியைத் தொடுகிறது !
இந்த சந்திப்பு- இதை இதே இடத்தில் நாம் பார்த்திருக்கிறோம் !
என் உலகம், என் கனவு இங்கேயே  நிஜமாகிவிடும் !
எத்தனை இனிய பயணம் !

இது இயற்கையுடன் முற்றும் ஒன்றிய நிலை!  இத்தகைய கனவு எல்லோருக்கும்  நிஜமாகிவிட்டால் உலகில் துன்பம், துயரம் ஏது?  இன்ப-துன்பம் கலந்தே வருகிறது !

பாடல் : யே ஜீவன் ஹை
படம் : பியா கா கர் 1972 Piya Ka Ghar
பாடல்: ஆனந்த் பக்ஷி Anand Bakshi
இசை : லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால்
பாடியது : கிஷோர்குமார்

ये जीवन है, इस जीवन का
यही है, यही है, यही है रंगरूप
थोड़े ग़म हैं, थोड़ी खुशियाँ
यही है, यही है, यही है छाँव धूप

யே ஜீவன் ஹை, இஸ் ஜீவன் கா
யஹீ ஹை, யஹீ ஹை ரங்க்-ரூப்
தோடீ கம் ஹை, தோடீ குஷியா(ன்)
யஹீ ஹை, யஹீ ஹை சா(ன்)வ் தூப்

இதுதான் வாழ்க்கை ! 
இதுதான் இந்த வாழ்க்கையின் நிறம், நியதி!
சிறிது துக்கம், சிறிது மகிழ்ச்சி -
சிறிது நிழல், சிறிது  சூரிய ஒளி -
இப்படித்தான் மாறிமாறி வருகிறது !
இதுதான் வாழ்க்கை !

ये ना सोचो, इसमें अपनी, हार है के जीत है
उसे अपना लो जो भी, जीवन की रीत है
ये जिद छोड़ो, यूं ना तोड़ो, हर पल इक दर्पण है
ये जीवन है, इस जीवन का...
யே நா ஸோசோ இஸ்மே அப்னீ,
ஹார் ஹை கே ஜீத் ஹை
உஸே அப்னா லோ ஜோ பீ, ஜீவன் கீ ரீத் ஹை
யே ஃஜித்  சோடோ, யூ(ன்) நா தோடோ
ஹர் பல் இக் தர்பண் ஹை
யே ஜீவன் ஹை.....

இதில் எதையாவது கண்டு இதில்தான் நமது  தோல்வி- வெற்றி
 இருக்கிறது என்று நினைத்து விடாதே 
வாழ்க்கை அதன் போக்கில் எதைத் தருகிறதோ -
அதையே உனது என்று எடுத்துக்கொள்.
இந்தப் பிடிவாதத்தை விடு.
இந்த சமயத்தை நழுவவிடாதே !
ஒவ்வொரு கணமும் வாழ்க்கை நமக்குக் காட்டும் கண்ணாடி !
(கண்ணாடி போல் நாசூக்கானது - இதை உடைக்காதே !)
இதுதான் வாழ்க்கை !


धन से ना दुनिया से, घर से ना द्वार से
साँसों की डोर बंधी है, प्रीतम के प्यार से
दुनिया छूटे, पर ना टूटे, ये कैसा बंधन है
ये जीवन है, इस जीवन का...
தன்  ஸே  நா துனியா ஸே, கர் ஸே நா த்வார் ஸே
ஸா(ன்) ஸோ கீ டோரீ பந்தீ ஹை-
ப்ரீதம் கே ப்யார் ஸே
துனியா சூடே, பர் நா டூடே, யே கைஸா பந்தன் ஹை
யே ஜீவன் ஹை .......

செல்வம், உலகம், வீடு, வாசல்- 
இவற்றுடன் நமது உயிருக்குள்ள தொடர்பு என்ன ?
நமக்கு வேண்டியவர்களின் அன்புடன் தான் நமக்கு தொடர்பு !
உலகமே விட்டுப் போகட்டுமே, அதனால் என்ன?
 நமக்கு வேண்டியவர்களின் தொடர்பு  விடாமல் இருக்கட்டும் !
இது அத்தகைய பந்தம் !
இதுதான் வாழ்க்கை !



picture from Indian Express

Amiable family and congenial social relations smoothen our days in the world. These are not necessarily based on wealth and position.

சங்கப் புலவர் பிசிராந்தையார் பாடுகிறார் :

‘’யாண்டு பலவாக நரையில ஆகுதல்
   யாங்காகியர் என வினவுதிராயின்
   மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
   யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
  அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
  ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
  சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’’

வீடும் சுற்றமும், மனைவியும் மக்களும், அரசனும் என்று இப்படி எல்லோரும் நன்றாக அமைந்து விட்டார்கள். அதனோடு ,கல்வியிலும் பண்பிலும் சிறந்த பெரியவர்களும் ஊரில் உள்ளனர். இவருக்குக் கவலையே இல்லை ! முதுமையும் சுமையாக இல்லை! எனவே, இவருக்கு வயதாகியும் நரை இல்லை ! நல்ல வாழ்க்கைக்கு குடும்ப- சமூகச் சூழ் நிலையும் பெருமளவு காரணமாகிறது! அதனால் வேண்டியவர்களின் உறவை விடாமல் போற்று என்கிறார் ஆனந்த் பக்ஷி !
ஆனால், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது! Means of communication have multiplied and improved, but meaningful communication between people has dwindled! People in the same apartment complex live like beings from alien planets.
"No man is an island " wrote John Donne in 1624.. But we have each become like islands with the march of civilization!
Matthew Arnold said in his poem " To Marguerite" (1852 ):


Yes! in the sea of life enisled, 
With echoing straits between us thrown, 
Dotting the shoreless watery wild, 
We mortal millions live alone. 

We talk to the phone, but cannot talk to each other!





Pindari Glacier, Himalayas

இயற்கை - நாம் எவ்வளவு கொண்டாடினாலும் இயற்கை தானாக முளைக்கவில்லை ! அதற்குப்பின் ஏதோ ஒரு சக்தி யிருக்கிறது ! விஞ்ஞானிகள் என்று பெயர்சொல்லித் திரிபவர்களுக்கு விழி பிதுங்குகிறது! அவர்களுக்கு எந்த விஷயமும் முழுதும் பிடிபடவில்லை ! ஏதோ ஒரு காலம் சொல்லி Big Bang என்கிறார்கள் ஆனால் அதற்குமுன் என்ன இருந்தது ? விஞ்ஞானிக்குத் தெரியாது, அவன் அப்பனுக்கும் தெரியாது ! ஆனால் நம் கவி-ஞானிகளுக்குத் தெரியும் ! கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 70 ஆண்டுகளுக்கு முன் எழுதினார்:

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?



இதையே திரைக் கவிஞர் பரத் வ்யாஸ் எழுதினார்:

பாடல் : கௌன் சித்ர கார்
படம்: பூந்த் ஜோ பன் கயீ மோதீ 1967
Boond Jo Ban Gayi Moti
கவி: பரத் வ்யாஸ் Bharat Vyas
இசை : ஸதீஷ் பாடியா Satish Bhatia
பாடியது: முகேஷ்


हरी  हरी वसुंधरा पे नीला नीला ये गगन
के जिसपे बादलों की पालकी उड़ा रहा पवन
दिशायें देखो रंगभरी, चमक रही उमंगभरी
ये किसने फूल फूल पे किया सिंगार है
ये कौन चित्रकार है, ये कौन चित्रकार
ये कौन चित्रकार है...
ஹரீ ஹரீ வஸுந்தரா பே நீலா நீலா யே ககன்
கே ஜிஸ்பே பாதலோ(ன்) கீ பால்கீ உடா ரஹா பவன்
திஶாயே(ன்) தேகோ ரங்க்பரீ, சமக் ரஹீ உமங்க்பரீ
யே கிஸ்னே ஃபூல் ஃபூல் பே கியா சிங்கார் ஹை
யே கௌன் சித்ரகார் ஹை, யே கௌன் சித்ரகார் ஹை
யே கௌன் சித்ரகார் ஹை.......

இந்த சைத்ரிகன் யார் ? இந்தக் கலைஞன் யார் ?
இந்தப் பசுமை பாய்ந்த நிலம் சூழ்ந்த மலைக்கு மேலே
இந்த அழகிய நீல வானம் !
காற்று மெல்ல வீசி, மேகங்களை பல்லக்குபோல் 
நகர்த்திச் செல்கிறது !
எல்லா திசைகளும் வண்ண மயம் ! ஒரே கோலாஹலம் !
ஒவ்வொரு மலரையும் அன்புடன் இப்படி அழகு படுத்தியது யார் ?
யார் அந்தச் சைத்ரிகன் ? யார் அந்தக் கலைஞன் ?




तपस्वीयों सी हैं अटल ये पर्वतों की चोटियाँ 
ये सर्प सी घूमेरदार, घेरदार घाटियाँ 
ध्वजा से ये खड़े हुये हैं वृक्ष देवदार के
गलीचे ये गुलाब के, बगीचे ये बहार के
ये किस कवि की कल्पना का चमत्कार है
ये कौन चित्रकार हैं
.




தபஸ்வியோ(ன்) ஸே ஹை அடல்
 யே பர்வதோ(ன்) கீ  சோடியா(ன்)
யே ஸர்ப ஸீ கூமேர்தார், கேர்தார் காடியா(ன்)
த்வஜா ஸே யே கடே ஹுயே ஹை(ன்) வ்ருக்ஷ தேவ்தார் கே
கலீசே யே குலாப் கே, பகீசே யே பஹார் கே
யே கிஸ் கவீ கி கல்பனா கா சமத்கார் ஹை
யே கௌன் சித்ரகார் ஹை.....

மலைகளின் சிகரத்தைப் பார் !
தபஸ்விக்கள் போன்று அசையாமல் அமர்ந்திருக்கின்றன !
பாம்புபோல் சுற்றிச் செல்லும் இந்த ஆழ்ந்த பள்ளத்தாக்குகளைப் பார் ! கொடி போல் நீண்டு உயர்ந்து நிற்கும் இந்த  தேவதாரு மரங்களைப் பார் இங்கு ரோஜாக்களின் கம்பளம் விரித்திருக்கிறது!
வஸந்த  காலத்தில் பொழில்கள் அழகில் மிளிர்கின்றன !
இது எந்தக் கவிஞனின் கற்பனைச் சக்தியால் எழுந்த மாயம் !
அந்தச் சைத்ரிகன் யார் ? அந்தக் கவிஞன் யார் ?
..


कुदरत की इस पवित्रता को तुम निहार लो
इसके गुणों को अपने मन में तुम उतार लो
चमका लो आज लालिमा, अपने ललाट की
कण-कण से झाँकती तुम्हें, छबि विराट की
अपनी तो आँख एक है, उसकी हज़ार है
ये कौन चित्रकार है...

குத்ரத் கீ இஸ் பவித்ரதா கோ தும் நிஹார் லோ
இஸ்கே குணோ(ன்) கோ அப்னே மன் மே தும் உதார் லோ
சம்கா தோ ஆஜ் லாலிமா, அப்னே லலாட் கீ
கண்-கண் ஸே ஃஜாங்க்தீ துமே, சபீ விராட் கீ
அப்னீ தோ ஆங்க் ஏக் ஹை, உஸ்கீ ஹஃஜார் ஹை
யே கௌன் சித்ரகார் ஹை.......

ஆண்டவனின் கைவண்ணமாகிய இந்தப் புனிதத்தை ஏற்றுக்கொள் !
அதன் குணத்தை உன் மனதில் ஏற்றிக்கொள் !
உன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையில் ஆழ்ந்து உன்னை பரவசனாக்கிக்கொள் !
இந்த விராட் ஸ்வரூபத்தின் சாயல் உன்னுடைய ஒவ்வொரு அணுவிலும்
உறைந்திருக்கிறது !
 நமக்கு இரண்டே கண்கள் ! விராட்புருஷனுக்கோ  எண்ணற்ற கண்கள் !
இந்த சைத்ரிகன் யார் ? இந்த கலைஞன் யார் ?

இது ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய 
கேள்வி ! இதற்கு விடை தெரிந்தால் வாழ்க்கைப் புதிர் விடுபடும் !
ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது! நாமே சாதித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொள்கிறோம் !

If the breaking day sees someone proud,
The ending day sees them brought low;
No one should put too much trust in triumph,
No one should give up hopes of trials improving.
Clotho mixes one with the other and stops
Fortune from resting, spinning every fate around.
No one has had so much divine favour
That they could guarantee themselves tomorrow.
God keeps our lives hurtling on,
Spinning in a whirlwind.

-- Seneca. [ From: The Daily Stoic.]

இதில்  கடைசி இரு வரிகளின் கருத்தை கீதை அழகாகச் சொல்கிறது:

ஈஶ்வர: ஸர்வ பூதானாம்  ஹ்ருத்தேஶே
அர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் ஸர்வபூதானி
யந்த்ராரூடானி மாயயா.    18.61

ஓ அர்ஜுனா! பகவான் எல்லா பிராணிகளுடைய இதயத்திலும் வீற்றிருக்கிறார். உடல் என்கிற இயந்திரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட அனைத்து பிராணிகளையும் பகவான் தன்னுடைய மாயையினால்
[அவரவர்கள் கர்ம வினைக்கேற்ப ] சுழலச் செய்கிறார் .

மாயை என்றால் என்னவோ, ஏதோ என்று நினைக்கவேண்டாம் -  நமக்குப் புரியவில்லை, இந்த உலகின் போக்கை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை என்பது தான்  பொருள். உடம்பினுள்ளே உத்தமன் உறைகிறான் என்பதாவது  நாம் அறிந்தால் சரி!




  

Saturday, 4 November 2017

97.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -7


97.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்!-7


இந்தியா ஏழைகள் மிகுந்த நாடு என்று மேலை நாட்டினர் கூச்சலிடுகின்றனர். அவர்கள்  நிலை என்ன? மதர் தெரசாக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்!
picture from:https://21stcenturychallenges.org.

வாழ்க்கைத் தரம்  உயர்ந்துவிட்டது என்கிறோம். முன்னேறி வருகிறோம் என்கிறோம். ஆனால் அடிப்படையில் இந்த ஒரு சாண் வயிற்றுக்கான கலாட்டா ஓய்ந்தபாடில்லை. உணவு, உடை, இருப்பிடம்- இதற்காகத்தான்  நம்மில் பெரும்பாலோர்  இன்றும் பாடுபட்டு வருகின்றனர். பணப்பெருக்கத்தின்-பணப்புழக்கத்தின்- பணவீக்கத்தின் காரணமாக 
ஒன்றுக்குப் பத்தாக  விலைவாசிகள் ஏறிவிட்டன.. சிலர்  ஈடுகொடுக்கின்றனர், பலர் பின் தங்கியே வருகின்றனர். தேசீய வருமானம் பெருகிவிட்டது 
என்கிறார்கள்  பொருளாதாரவாதிகள். இவர்கள்  முக்காலும் கிரிசைகெட்டவர்கள்.  : செல்வம் சிலரிடமே குவிகிறது, பலர் ஏழ்மை என்னும் குழியில் விழுகிறார்கள்; செல்வர்-வறியவரிடையேயான  இடைவெளி வளர்ந்தே வருகிறது. நடுத்தர வர்கத்தினரின் சிறு ஆசைகள் கூட நிறைவேறுவதில்லை! நவீன பொருளாதாரம் என்னும் மாயவலையின் உலகளாவிய நிலை இப்படி இருக்கிறது.


This is in  the USA. picture from: pewaukeeeconomics.blogspot.in


உணவு, உடை - நடுத்தர வர்கத்தினர்  எப்படியோ சமாளித்துக் கொள்கின்றனர். ஆனால் வீடு அவர்கள் கைக்கு எட்டாததாகவே இருக்கிறது! 60 வருஷங்களுக்குமுன்  ஸாஹிர் லுதியான்வி  பம்பாயில் இருந்த நிலை பற்றிப் பாடினார்:
जितनी भी बिल्डिंगें थीं, सेठों ने बाँट ली हैं
फ़ुटपाथ बम्बई के हैं आशियाँ हमारा
सोने को हम कलन्दर, आते हैं बोरी बन्दर
हर एक खोली यहाँ है राज़दाँ हमारा
चीन-ओ-अरब हमारा ..
ஜித்னீ பீ பில்டிங்கே தீ,
சேட்டோனே பா(ன்)ட் லீஹை
ஃபுட்பாத் பம்பயீகா ஹை ஆஷியா(ன்) ஹமாரா
ஸோனேகோ ஹம் கலந்தர்,
ஆதே ஹை  போரி பந்தர்
ஹர் ஏக் கூலீ யஹா(ன்) ஹை ராஃஜ்தா(ன்) ஹமாரா
சீன்-ஓ-அரப் ஹமாரா, 
ஹிந்துஸ்தான் ஹமாரா
ரஹனே கோ கர் நஹீ ஹை
ஸாரா ஜஹா(ன்) ஹமாரா.

இருந்த கட்டிடங்கள் எல்லாவற்றையும்  பணக்காரர்கள் வளைத்துப் போட்டுக் கொண்டார்கள்.
 தெருவோர நடைபாதையே நமது வீடாயிற்று! 
சாதுபோல் எங்கும் சுற்றிவிட்டு இரவில்  போரிபந்தர் ஸ்டேஷனில் படுப்போம்! இங்கு இருக்கும் ஒவ்வொரு கூலியும் நமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவனே!
சீனாவும் அரேபியாவும் நமதாக இருக்கலாம்!
ஹிந்துஸ்தானமே நமதாக இருக்கலாம்!
இருப்பதற்கு நமக்கு என்று ஒரு வீடில்லை -
இந்த உலகம் பூராவும் நமதுதானே !

( 1957ல் இந்தப் பாடலை தடை செய்ய நினத்தது நமது நேரு சர்க்கார் !)



பம்பாயில் குடிசைகள் .Photo: London School of Economics, 2017.


இன்று இது எல்லா ஊர்களுக்கும் பொதுவானதாகிவிட்டது! பண முதலைகள்  வீட்டுமனையில், ஃப்லாட்டில்  Flats முதலீடு செய்கிறார்கள். Speculation. விலை ஏறிக்கொண்டே போகிறது ! நம் கைக்கு எட்டாமலே போகிறது ! 
ஆனால்  நாம் கனவு காண்பதை யார் தடை செய்ய முடியும்? இதோ ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன் பாடுகிறான் :




பாடல் : சோடா ஸா கர் ஹோகா
படம் :   நௌகரீ  1954 Naukri
கவி : ஶைலேந்த்ரா
இசை : ஸலீல் சௌதுரி
பாடியது :கிஷோர் குமார்
fantastic photo on the right: Kishore-Shailendra- Salil Chowdhury




छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए
हम ही हम चमकेंगे तारों के उस गाँव में
आँखों की रौशनी हरदम ये समझाए


சோடா ஸா கர் ஹோகா பாதலோ)ன்) கீ சா(ன்)வ் மே

ஆஷாதீவானீ மன் மே பன்ஸுரீ பஜாய்
ஹம் ஹீ ஹம் சம்கேங்கே தாரோ(ன்) கே உஸ் கா(ன்)வ் மே
ஆங்கோ(ன்) கீ ரோஷ்னீ ஹர்தம் யே சம்ஜாய்!


இந்த மேகங்களின் நிழலில்  நமக்கென்று ஒரு  சிறு வீடு  இருக்கும்!
இந்த நம்பிக்கையில் என் மனமாகிய குழல் கீதமிசைக்கிறது!
அந்த நக்ஷத்திர உலகில் நாமும் சுடர்விட்டுப் பிராகாசிப்போம்!
நமது கண்களில் வீசும் ஒளி இதை  நமக்கு உணர்த்துகிறது !

चाँदी की कुर्सी पे बैठे मेरी छोटी बहना
सोने के सिंघासन पे बैठे मेरी प्यारी माँ
मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मीजी के पाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए


சாந்தீ கே குர்ஸீ பே பைடீ மேரீ சோடீ பஹனா
ஸோனே கே சிங்காஸன் பர் பைடீ மேரீ ப்யாரீ மா
மேரா கயாஹை மை படா ரஹூங்கா அம்மி ஜீ கே பாவ்(ன்) மே
ஆ ஆஆ ஆயிரே, ஆ ஆஆ ஆயிரே...
சோடா ஸா கர் ஹோகா .......

வெள்ளி நாற்காலியில் என் தங்கை உட்கார்ந்திருக்கிறாள்.
தங்கச் சிம்மாஸனத்தில் என் அம்மா அமர்ந்திருக்கிறார்
எனக்கென்ன, நான் என் தாயின் காலடியில் கிடப்பேன்!
ஆ ஆ ஆ.... இது எத்தனை சுகம்!
நமக்கென்று ஒரு சிறு வீடு இருக்கும் !


मेरी छोटी बहना नाज़ों की पाली शहज़ादी
जितनी-भी जल्दी हो मैं कर दूँगा उसकी शादी
अच्छा है ये बला हमारी जाए दूजे गाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए



மேரீ சோடீ பஹனா  நாஃஜோ கீ பாலி ஷஹ ஃஜாதீ
ஜித்னீ பீ ஜல்தீ ஹோ மை கர்தூங்கீ உஸ்கீ ஷாதீ
அச்சா ஹை யே பலா ஹமாரீ ஜாயே தூஜே கா(ன்) வ் மே
ஆ ஆ ஆ ஆயிரே, ஆ ஆ ஆ ஆயிரே....
சோடா ஸா கர் ஹோகா.........

என் தங்கை - ராஜகுமாரிபோல் வளர்ந்தவள் !
கூடிய சீக்கிரம் அவளுக்கு மணம் முடித்து வைப்பேன் !
நம் செல்லம் வேறொரு வீட்டிற்குப் போவது நல்லது தானே !
ஆ ஆ ஆ..... இதுதானே நல்லது!

कहेगी माँ, दुल्हन ला बेटा घर सूना-सूना है
मन में झूम कहूँगा मैं, माँ इतनी जल्दी क्या है
गली-गली में तेरे राजदुलारे की चर्चा है
आख़िर कोई तो आएगा इन नैनों के दाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए
हम ही हम चमकेंगे तारों के उस गाँव में
आँखों की रौशनी हरदम ये समझाए


கஹேகா மா, துல் ஹன் லா பேடா, கர் ஸூனா ஸூனா ஹை

மன் மே ஜூம் கஹூங்கா மை, மா இத்னீ ஜல்தீ க்யாஹை!
கலீ கலீ மே தேரே ராஜ்துலாரே கீ சர்ச்சா ஹை
ஆகிர்  கோயீ தோ ஆயேகா இன் நயனோ(ன்) கீ தா(ன்)வ் மே
ஆ ஆ ஆ ஆயிரே, ஆ ஆ ஆ ஆயிரே....
சோடா ஸா கர் ஹோகா........

ஒரு நாள் அம்மா சொல்வாள் : "மகனே, வீடு வெறிச்சோடிக்கிடக்கிறது
ஒரு மாற்றுப்பெண் அழைத்துவா ! "
மனம் பொங்கும் ! இருந்தாலும் நான் சொல்வேன் :
" அம்மா, இவ்வளவு அவசரம் ஏன் ?"
ஊர் முழுவதும் இந்த ராஜகுமாரனின் பேச்சாகவே இருக்கிறது!
கடைசியில் கண்ணின் மணியாக  ஒருத்தி வந்து  சேருவாள் !
ஆ ஆ ஆ.... எல்லாம் நல்லது தானே
நமக்கென்று ஒரு சிறு வீடு இருக்கும்
அந்த நம்பிக்கையில் கீதமிசைப்போம் !

60 வருஷங்களுக்கு முந்திய பாடல்! அன்றைய  சராசரி நடுத்தர வர்கத்துக் குடும்பத்தின்  ஆசா-பாசங்களை எவ்வளவு அழகாகச் சொல்லி யிருக்கிறார் ஶைலேந்த்ரா ! உடன் பிறந்தவர்களுடன் வளர்ந்தவர்களுக்கு இதன் அருமை புரியும்! Today, we have atomic,  nuclear families. Nobody feels he is his brother's keeper ! 

உலகில் எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு குழப்பம், பதட்டம் நிலவி வருகிறது. சீர்திருத்த வாதிகளும் புரட்சியாளர்களும் இதைச் செய்,, அதை மாற்று என்று ஆரவாரிக்கிறார்கள். கடந்த இரு நூறு ஆண்டுகளில் உலகமும் எவ்வளவோ  புரட்சிகளையும், மாற்றங்களையும் கண்டுவிட்டது ஆனாலும் நிலைமை சீராகவில்லை. அதிகார வர்கத்தின் பக்கம் சேராவிட்டால் கதியில்லை என்று ஆகிவிட்டது. சராசரி மனிதன்  நல்ல நிலையை கனவு காணவேண்டும், அல்லது கற்பனை செய்ய வேண்டும். அத்தகைய ஒரு அழகிய கற்பனை இது.











பாடல் : ஆ சல் கே துஜே
படம் : தூர் ககன் கீ சாவோ(ன்)  மே 1964
Door Gagan Ki Chaon  Mein
பாடலை இயற்றி, இசை அமைத்துப் 
பாடியவர் : கிஷோர்குமார்.









आ चल के तुझे, मैं ले के चलूं
इक ऐसे गगन के तले
जहाँ ग़म भी न हो, आँसू भी न हो
बस प्यार ही प्यार पले

ஆ சல் கே துஜே , மை லேகே சலூ(ன்)
இக் ஐஸே ககன் கே தலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ,  ஆ(ன்) ஸூ பீ ந ஹோ
பஸ் ப்யார் ஹீ ப்யார் பலே !

என்னுடன் வா, இந்தப் பரந்த வானத்தின் கீழ் 
அத்தகைய இடத்திற்குக் கூட்டிச் செல்கிறேன் -
அங்கு துயரம் இருக்காது, கண்ணீர் இருக்காது,
அன்பு மட்டுமே நிறைந்திருக்கும்.
வா, அத்தகைய இடத்திற்குச் செல்வோம் !


सूरज की पहली किरण से, आशा का सवेरा जागे
चंदा की किरण से धुल कर, घनघोर अंधेरा भागे
कभी धूप खिले, कभी छाँव मिले
लम्बी सी डगर न खले
जहाँ ग़म भी नो हो...

ஸூரஜ் கீ பஹலீ கிரண் ஸே, ஆஶாகா ஸவேரா ஜாகே
சந்தா கீ கிரண் ஸே துல் கர், கன் கோர் அந்தேரா பாகே
கபீ தூப் மிலே, கபீ சா(ன்)வ் மிலே
லம்பீஸி டகர் ந கலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ......

உதிக்கும் சூரியனுடைய முதல் கிரணங்களுடன்
மனதில் ஆசையும் உதித்தெழுகிறது !
 நிலவின் ஒளியில் மூழ்கி. கனத்த இருட்டும்  ஒடிவிடுகிறது !
வாழ்க்கை என்பது  நீண்ட பாதை
சில சமயம் சூரிய ஒளி, சில சமயம் நிழல் வருகிறது
வா, நாம் துயரமற்ற அந்த இடத்திற்குப் போவோம்.


जहाँ दूर नज़र दौड़ाएं, आज़ाद गगन लहराए
जहाँ रंग बिरंगे पंछी, आशा का संदेसा लाएँ
सपनों में पली, हँसती हो कली
जहाँ शाम सुहानी ढले
जहाँ ग़म भी न हो...

ஜஹா(ன்) தூர் நஃஜர் தௌடாயே, ஆஃஜாத் ககன் லஹராயே
ஜஹா(ன்) ரங்க் பிரங்கீ பன்சீ, ஆஶா கா ஸந்தேஸா லாயே
ஸப்னோ(ன்) மே பலீ, ஹ(ன்)ஸ்தீ ஹோ கலீ
ஜஹா(ன்) ஶாம் ஸுஹானீ டலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ


தூரத்தில் பார்வையைச் செலுத்து !
அங்கு பார்- வானம் சுதந்திரமாக எழுகிறது !
வண்ண வண்ணப் பறவைகளின் சப்தங்கள்
நம்பிக்கை என்னும் செய்தியைத் தாங்கி வருகின்றன !
இன்பக் கனவில் மூழ்கிய மலர்கள்
சிரித்து மலர்கின்றன !
இப்படியே இனிய மாலைப்பொழுது வந்து சேருகிறது !
வா, துயரமில்லாத அந்த இடத்திற்குப் போவோம்!


pexels

सपनों के ऐसे जहां में, जहाँ प्यार ही प्यार खिला हो
हम जा के वहाँ खो जाएं, शिकवा न कोई गिला हो
कहीं बैर न हो, कोई गैर न हो
सब मिलके यूँ चलते चलें

जहाँ गम भी न हो...

ஸப்னோ(ன்) கே ஐஸே ஜஹா(ன்) மே,
ஜஹா(ன்) ப்யார் ஹீ ப்யார் கிலா ஹோ
ஹம்  ஜாகே வஹா கோ ஜாயே(ன்),
ஶிக்வா ந  கோயீ கிலா ஹோ
கஹீ பைர் ந ஹோ,கோயீ கைர் ந ஹோ
சப் மில்கே யூ(ன்) சல்தே சலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ.......

அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்த கனவு  உலகத்தில்
 நாம் சென்று காணாமல் போய்விடுவோம்!
எந்தக் குறையும் இல்லா  திருக்கட்டும்
எந்த கவலையும் இல்லா திருக்கட்டும்
எந்த வெறுப்பும் இல்லா திருக்கட்டும்
யாரும் அன்னியர் என்று இல்லா திருக்கட்டும் !
எல்லோரும் ஒன்றாக இணைந்து செல்லும் அந்த  உலகிற்கு -
துன்பம், கண்ணீர் இல்லாத அந்த உலகிற்கு  நாம் செல்வோம், வா !

ஆம், வெளியே எவ்வளவு இருட்டாக இருந்தாலும் மனதில் நம்பிக்கை என்னும் தீபத்தை ஏற்றி வைப்போம்!  நல்லதையே நினைப்போம்!






Can we only dream  here on earth, of perfection in some place else?
Yes, it seems so. As Robert Browning sang:
"On the earth the broken arcs;
in the heaven a perfect round." 
[ Abt Vogler]
pexels.


Wednesday, 25 October 2017

95. வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -5


95. வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ! -5

காலத்திற்கேற்ப  கலைகள் மாறுகின்றன. பழைய கலைகள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றைக் கற்கும்- கற்பிக்கும் முறையும் மாறுகிறது. முன்பு  அரசர்களும் பிரபுக்களும் கலையையும் கலைஞர்களையும் ஆதரித்தனர்; இன்று பொதுமக்களின் தயவை நம்பி அவை வாழ்கின்றன. Class V. Mass [ or Crass?]என்ற பேதம் வேறூன்றிவிட்டது. கலையின்  தரமும் அதற்கேற்ப மாறுகிறது. Playing to the gallery in the name of popularising!

பொதுமக்களின் ரசனை (ரசனையின்மை)க்கேற்ப புதிய கலைகள்  அல்லது கலையின் வடிவங்கள்  தோன்றுகின்றன.. பழைய கலைகளும் உருமாறுகின்றன. இன்று கர்னாடக சங்கீதமே உருமாறிவிட்டது- இது சபாக்களின் கைங்கர்யம். நல்லவேளை- ஹிந்துஸ்தானி இசை இன்னும் பசையோடுதான் இருக்கிறது. அவர்கள் சம்பிரதாயத்தை விடமாட்டார்கள். காலையில் பாடவேண்டிய ராகத்தை இரவில் பாடமாட்டார்கள்! ஒரு மணி நேரக் கச்சேரியில்  ஒன்பது பாடல் பாடமாட்டார்கள்! சரியான பயிற்சி இல்லாமல் மேடையேற/ ஏற்ற மாட்டார்கள். இப்படி இன்னும் எத்தனையோ அம்சங்கள்  சொல்லலாம்.

சினிமா வந்த புதிதில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது பல தேசீயக் கலைகளைக் கொன்றுவிடும் எனப் பயந்தார்கள் அதன்படியேதான் நடந்தது.  'கலை சினிமா ' [ art film ]என ஒரு பிரிவு  தோன்றியது- ஆனால் இது வக்ர புத்தியினர் சென்ஸாருக்கு டிமிக்கி கொடுக்கச் செய்த ஏற்பாடு. இன்று அத்தகைய  நிர்பந்தம் இல்லை . எதுவும் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது. யாரும் கலையைக் கொலை செய்யலாம்- பணம் வந்தால் போதும்! இன்று சினிமாவில் கலையம்சம் என்று அதிகம் இல்லை; எல்லாம் கம்ப்யூடர் யுக்திதான்.

Silver lining

ஆனால் இந்த மேகத்திலும் ஒரு ஒளிக்கீற்று இருக்கத்தான் செய்தது. நமது சினிமா,  சங்கீதத்திற்கும், அதற்கு ஆதாரமாக சாஹித்யத்திற்கும் சிறந்த இடம் கொடுத்தது.  பல சிறந்த கவிஞர்கள் பாடல் எழுதினார்கள். பல மேதைகள்  இசையமைத்தார்கள். ராகத்தின் அடிப்படையிலேயே இசை அமைத்தார்கள். ஒரே ராகத்தில் பல மெட்டுகள், பாட்டுகள்  அமைத்தார்கள். அவற்றின் கவிதை நயமும் சிறந்திருந்தது. ஆர்கெஸ்ட்ரா, பின்னணி இசை எனப் பலவற்றிலும் மேற்கத்திய சாயல் தோன்றினாலும் அடிப்படையாக இருப்பது நமது தேசீய சங்கீதமே. இதுதான் ஹிந்திப் பாடல்களின் வெற்றியின் ரகசியம். எத்தனை கம்ப்யூடர்  இசை, பாப்-கீப் என்று வந்தாலும் அவை ஈடுகொடுக்க முடியவில்லை! 50, 60 வருஷங்களுக்கு முந்தைய பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன. யுடியூப் வந்த பிறகு இளைய தலைமுறையினரும் இதை உணர்ந்து வருகின்றனர்.

இன்று சினிமா கலையாகவும் இல்லை, பொழுது போக்கு அம்சமாகவும் இல்லை -(அ)சுத்த வியாபாரமாகிவிட்டது. இது 1980லிருந்து நாம் காணும் நிலை.அதுவரை, எத்தனை வியாபார நிர்பந்தங்களுக் கிடையிலும்  சில நல்ல அம்சங்கள் இல்லாமலில்லை.

சினிமாவில் சாமி !

இத்தகைய அம்சங்களில் ஒன்று, சினிமாவில் வரும் பஜன், பிரார்த்தனைப் பாடல்கள். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சமூகப் படம் என்று வந்த வரையில், இத்தகைய பாடல்கள்  ஏராளமாக இருந்தன. அவற்றில் பல காலத்தால் அழியாதவை.  அத்தகைய பாடல்களில், எந்த சாமியையும் குறிப்பாகச் சொல்லாமல், பொதுவாக கடவுள் என்ற நிலையில் பாடிய  நான்கு பாடல்களை இப்போது பார்க்கலாம்.






தூ ப்யார் கா ஸாகர் ஹை
படம்: ஸீமா 1955 Seema
கவிஞர் : ஶைலேந்த்ரா
இசை: ஶங்கர் ஜய்கிஷன்
பாடியவர் : மன்னா டே
Manna Dey


,तू प्यार का सागर है
தூ ப்யார் கா ஸாகர் ஹை
பகவானே ! நீ கருணைக் கடல்

तेरी इक बूँद के प्यासे हम
लौटा जो दिया तुमने, चले जायेंगे जहाँ से हम
तू प्यार का सागर है …
தேரீ இக் பூந்த் கே ப்யாஸே ஹம்
லௌடா  ஜோ தியா தும்னே, 
சலே ஜாயேங்கே ஜஹா(ன்) ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை......

உன் கருணையின் ஒரு திவலைக்காக நாங்கள் ஏங்கி நிற்கிறோம்!
நீ எங்களைத் திருப்பி அனுப்பிவிட்டால்
நாங்கள் இந்த உலகத்தை விட்டே போய்விடுவோம்!
பகவானே ! நீ கருணைக் கடல் !

घायल मन का, पागल पंछी उड़ने को बेक़रार
पंख हैं कोमल, आँख है धुँधली, जाना है सागर पार
जाना है सागर पार
अब तू हि इसे समझा, राह भूले थे कहान से हम
तू प्यार का सागर है.......
காயல் மன் கா, பாகல் பஞ்சீ உட்னே கோ பேகரார்
பங்க் ஹை கோமல், ஆங்க் ஹை துந்த்லீ, 
ஜானா ஹை ஸாகர் பார், ஜானாஹை ஸாகர் பார்
அப் தூ ஹி இஸே சம்ஜா, 
ராஹ் பூலேதே கஹா(ன்) ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை......

இந்த மனம் என்னும் அடிபட்ட பறவை
ஓரு பைத்தியம் ! பறப்பதற்காகத் துடிக்கிறது !
இதன் இறகுகள் வலுவற்றவை, கண்களோ  நிலையின்றி அலைகின்றன
ஆனால் கடலைக் கடந்து போகவேண்டும் !
கடலைக் கடந்து போகவேண்டும் !
 நாங்கள் எங்கே பாதையிலிருந்து  தவறினோம் என்பதை
இப்போது நீயே எங்களுக்குச் சொல்வாயாக!
பகவானே ! நீ கருணைக் கடல்!


इधर झूमती गाये ज़िंदगी, उधर है मौत खड़ी
कोई क्या जाने कहाँ है सीमा, उलझन आन पड़ी
उलझन आन पड़ी
कानों में ज़रा कह दे, कि आये कौन दिशा से हम
तू प्यार का सागर है …
இதர் ஜூம் கே காயே ஃஜிந்தகீ,
உதர் ஹை மௌத் கடீ
கோயீ க்யா ஜானே கஹா(ன்) ஹை ஸீமா,
உல்ஜன் ஆன் படீ
உல்ஜன் ஆன் படீ
கானோ மே ஜரா கஹ தே, கி ஆயே கௌன் திஶா ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை.....

இந்தப் பக்கம் வாழ்க்கை ஒரே களிப்பும்
 கொண்டாட்டமுமாகச் செல்கிறது!
அந்தப் பக்கமோ மரணம் நிற்கிறது!
இவற்றின் இடையிலான எல்லை எங்கே இருக்கிறது ?
இது யாருக்கும் தெரியாது !
மனம் தவிக்கிறது, மனம் தவிக்கிறது !
நாங்கள் உன்னை எந்த வழியில் அடையலாம்
என்பதை நீயே எங்கள் காதுகளில் சொல்லிவிடு !
பகவானே ! நீ கருணைக் கடல் அல்லவா!



கவிதை மழை பொழிந்த ஶைலேந்த்ராவின் கைவண்ணம் இது! 60 ஆண்டுகள் ஆகியும் இமாலயம் போல் நிற்கிறது!
இந்தப் பாடல் ஹிந்துஸ்தானி பைரவி ராகத்தில் அமைந்தது.[ சிலர் 'தர்பாரி கானடா' என்பர்,] கர்னாடக இசையில் 'ஹனுமதோடி' எனச் சிலர் சொல்கிறார்கள்.




ஹே மாலிக் தேரே பந்தே ஹம்
படம்: தோ ஆங்கே(ன்) பாரஹ் ஹாத்  1957
Do Ankhen Barah Haath
கவிஞர்: பரத் வ்யாஸ்
Bharat Vyas
இசை: வஸந்த் தேசாய்
Vasant Desai
பாடியது : மன்னாடே & கோரஸ்



ऐ मालिक तेरे बन्दे हम
ऐसे हों हमारे करम
नेकी पर चलें और बदी से टलें
ताकि हंसते हुए निकले दम
ஹே மாலிக், தேரே பந்தே ஹம்
ஐஸே ஹோ ஹமாரே கரம்
நேகீ பர் சலே ஔர் பதீ  ஸே டலே
தாகி ஹஸ்தே ஹுவே நிக்லே தம்

ஆண்டவனே ! நாங்கள் உன்னுடைய அடிமைகள்
எங்களுடைய கரங்கள் நல்லதையே செய்யவும்
தீய வழியிலிருந்து விலகவும் அருள்புரிவாய்!
அப்போது சிரித்துக்கொண்டே உயிரை விடுவோம்!

ये अंधेरा घना छा रहा
तेरा इंसान घबरा रहा
हो रहा बेखबर, कुछ न आता नज़र
सुख का सूरज छुपा जा रहा
है तेरी रोशनी में जो दम
तो अमावस को कर दे पूनम
नेकी पर... 
யே அந்தேரா கனாசா ரஹா
தேரா இன்ஸான் கப்ரா ரஹா
ஹோ ரஹா பேகபர், குச் ந ஆதா நஃஜர்
ஸுக் கா ஸூரஜ்  சுபா ஜா ரஹா
ஹை தேரீ ரோஷ்னீ மே ஜோ தம்
தோ அமாவஸ் கோ கர்தே பூனம்
நேகீ பர் சலே...

கனத்த இருள் உலகைச் சூழ்கிறது
நீ சிருஷ்டித்த மனிதன் பயப்படுகிறான்
இவன்  பேச்சற்றுப் போகிறான்,
இவன் கண்ணுக்கு எதுவும் புலனாகவில்லை!
ஸுகம் என்னும் சூரியன்  மறைந்து வருகிறான்
உன்னிடம் இருக்கும் ஒளியின் சக்தி
அமாவாஸையையும் பவுர்ணமியாகச் செய்துவிடும்!
நாங்கள் நல்ல வழியிலேயே செல்வோமாக....

जब ज़ुल्मों का हो सामना
तब तू ही हमें थामना
वो बुराई करें, हम भलाई भरें
नहीं बदले की हो कामना
बढ़ उठे प्यार का हर कदम
और मिटे बैर का ये भरम
नेकी पर...
ஜப் ஜுல்மோ கா ஹோ ஸாம்னா
தம் தூ ஹி ஹமே தாம்னா
வோ புராயீ கரே(ன்), ஹம் பலாயீ பரே(ன்)
நஹீ பத்லே கீ ஹோ காம்னா
பத் உடே ப்யார் கா ஹர் கதம்
ஔர் மிடே பைர் கா யே பரம்
நேகீ பர் சலே ......

நாங்கள் கொடுமைகளைச் சந்திக்கும் போது
நீ எங்கள் கரங்களை நிதானிக்கச் செய்வாயாக
அவர்கள் கெடுதலே செய்தாலும்
நாங்கள் நல்லதாகவே எடுத்துக்கொள்வோம், நல்லதே செய்வோம்
பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் வராமலிருக்கட்டும்
அன்புடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம்
எதிர்ப்பு என்ற எண்ணம் இல்லாமல் போகட்டும்!
நாங்கள் நல்லவழியிலேயே செல்வோம்!

बड़ा कमज़ोर है आदमी
अभी लाखों हैं इसमें कमी
पर तू जो खड़ा, है दयालू बड़ा
तेरी किरपा से धरती थमी
दिया तूने हमें जब जनम
तू ही झेलेगा हम सबके ग़म
नेकी पर...
படா கம்ஃஜோர் ஹை ஆத்மீ
அபீ லாகோ(ன்) ஹை இஸ்மே கமீ
பர் தூ ஜோ கடா ஔர் தயாலு படா
தேரீ  கிர்பா ஸே தர்தீ தமீ
தியா தூ நே ஹமே ஜப் ஜனம்
தூ ஹி ஜேலேங்கே ஹம் ஸப்கே கம்
நேகீ பர் சலே.......

மனிதன்  வலுவற்றவன்
இதில் லக்ஷக்கணக்கான குற்றம் குறைகள் வேறு!
ஆனால் பெரிய தயாளுவாக  நீ இருக்கிறாய்
உன்னுடைய கிருபையே இந்த உலகத்தைத் தாங்குகிறது
நீ  தானே எங்களைப் பிறப்பித்தாய் !
நீயே எங்கள் கஷ்டச் சுமையையும் தாங்குவாய் !
நாங்கள் நல்ல வழியிலேயே நடப்போமாக !
தீயவற்றிலிருந்து விலகி நிற்போமாக !
அப்போது  சந்தோஷமாகவே எங்கள் உயிர் பிரியும்!







பரத் வ்யாஸ் எழுதிய இப்பாடல் வஸந்த் தேசாயின் இசையில் இதயம் தொடும் ப்ரார்த்தனையாக அமைந்தது ! ஹிந்துஸ்தானி 
"பைரவ் " ராகத்தில் இருக்கிறது.
 பல பள்ளிகளில் இது பிரார்த்தனையாகப் பாடப்பட்டது!




ஹம் கோ மன் கீ ஶக்தி தேனா
படம்: குட்டி 1971 Guddi
கவி: குல்ஃஜார்  Gulzar
இசை : வஸந்த்  தேஸாய்
Vasant Desai
பாடியது: வாணி ஜயராம் & கோரஸ்

हम को मन की शक्ति देना, मन विजय करें 
दूसरों की जय से पहले, खुद को जय करें 

ஹம் கோ மன் கீ ஶக்தி தேனா, 
மன் விஜய் கரே(ன்)
தூஸ்ரோ (ன்) கீ ஜய் ஸே பஹலே
குத் கோ ஜய் கரே !

பகவானே ! எங்கள் மனதிற்கு சக்தி யளிப்பாயாக
மனதை வெற்றியடையச் செய்வாயாக !
மற்றவர்களை வெற்றிகொள்வதற்குமுன்,
எங்களையே நாங்கள் வெற்றிகொள்வோமாக!
[எங்கள் மனதையே அடக்கி ஆள்வோமாக ]

भेदभाव अपने दिल से साफ़ कर सकें
दोस्तों से भूल हो तो माफ़ कर सकें 
जूठ से बचे रहे, सच का दम भरें 
दूसरों की जय से पहले, खुद को जय करें 

பேத் பாவ் அப்னே தில் ஸே ஸாஃப் கர் ஸகே(ன்)
தோஸ்தோ(ன்) ஸே பூல் ஹோ தோ மாஃப் கர் ஸகே(ன்)
ஜூட்  ஸே பசே ரஹே, ஸச் கா தம் பரே(ன்)
தூஸ்ரோ(ன்) கீ ஜய் ஸே பஹலே, குத் கோ ஜய் கரே(ன்)

எங்கள் மனதில் எந்தவித வேற்றுமை உணர்வும் இல்லாமல் இருக்கட்டும்
நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்துவிடும் குணம் இருக்கட்டும்
பொய்யிலிருந்து விலகி இருப்போம்,  சத்தியத்தில் உறுதியாக இருப்போம்
மற்றவர்களை வெற்றிகொள்ள முயல்வதன்  முன்
எங்கள் மனதையே நாங்கள் அடக்கிவைப்போமாக!

मुश्किलें पड़े तो हम पे इतना कर्म कर
साथ दें तो धर्म का, चलें तो धर्म पर
खुद पे हौसला रहे, बड़ी से ना डरे
दूसरों की जय से पहले, खुद को जय करें 

முஷ்கிலே(ன்) படே தோ ஹம் பே இத்னா கர்ம் கர்
ஸாத் தே(ன்) தோ தர்ம் கா, சலே(ன்) தோ தர்ம் பர்
குத் பே ஹௌஸலா ரஹே, படீ ஸே நா டரே
தூஸ்ரோ(ன்) கீ ஜய் ஸே பஹலே. குத் கோ ஜய் கரே(ன்)

 நாங்கள் கஷ்டங்களைச் சந்திக்க நேர்ந்தால் -
எங்கள் மீது இத்தனை தயவு செய்வாய் -
நாங்கள்  தர்மத்தை விடாமல் இருக்கவும்,
தர்மவழியிலேயே நடக்கவும் தயவு செய்வாய்
நம்பிக்கை இழக்காம லிருக்கவும்,
தீமையைக் கண்டு அஞ்சாமலிருக்கவும் அருள் செய்வாய்!
மற்றவர்களை வெற்றிகொள்ள  நினைக்கும் முன்பு
எங்கள் மனதையே நாங்கள் வெற்றி கொள்வோமாக !








இது ஒரு பள்ளிக்கூடப்  பிரார்த்தனையாகவே எழுதப்பட்ட பாடல். குல்ஃஜாரின் கவிதை நடை சற்று கடினமானது. வஸந்த் தேஸாய்  கேதார் ராகத்தில் அருமையாக இசையமைத்தார் ! இதைப்  பல பள்ளிகளிலும் காலையில் பாடிவந்தார்கள். 

 Smt. Vani Jairam
foto:http://tfmpage.com






[ வஸந்த் தேஸாய்  நமது தேசீய இசையை மையமாக வைத்தே இசையமைத்தவர். காஞ்சிப் பெரியவர் எழுதி, M.S, அவர்கள் ஐ. நா சபையில் பாடிய "மைத்ரீம் பஜத "  பாடலுக்கு இசை அமைத்தவரும் வஸந்த் தேசாய்தான்! ]

இன்னொரு  அருமையான பாடல்-




இன்ஸாஃப் கா மந்திர் ஹை
படம்: அமர் 1954 Amar
கவி : ஷகீல் பதாயுனி Shakeel Badayuni
இசை: நௌஷாத் Naushad
பாடியது: முஹம்மத் ரஃபி
Mohammad Rafi
ராகம்: பைரவி (ஹிந்துஸ்தானி )
Naushad & Rafi in the picture







इन्साफ का मंदिर है ये भगवान का घर है
कहना है जो कह दे तुझे किस बात का डर है
இன்ஸாஃப் கா மந்திர் ஹை யே பகவான் கா கர் ஹை
கஹனா ஹை ஜோ கஹ தே துஜே கிஸ் பாத் கா டர் ஹை

இது நீதியின்  கோவில், பகவானின்  வீடு!
எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல் -
எதற்காக பயப்படுகிறாய் ?

है खोट तेरे मन मे जो भगवान से है दूर
है पाँव तेरे फिर भी तू आने से है मजबूर
हिम्मत है तो आजा, ये भलाई की डगर है
इन्साफ का मंदिर है...
ஹை  கோட் தேரே மன் மே ஜோ பகவான் ஸே ஹை தூர்
ஹை பாஸ் தேரே ஃபிர் பி தூ ஆனே ஸே ஹை மஜ்பூர்
ஹிம்மத் ஹை தோ ஆஜா, யே பலாயி கீ டகர் ஹை
இன்ஸாஃப் கா மந்திர் ஹை.......

உன் மனதில் ஏதோ களங்கம் - அதுதான் உன்னை
பகவானிடமிருந்து விலக்கியிருக்கிறது !
இங்கு அருகில் தான் இருக்கிறாய் -ஆனாலும்
உள்ளே வரத் தயங்குகிறாய் !
தைரியம் இருந்தால் இங்கே வா -
இது நன்மையின் பாதை!
இது நீதியின் கோவில் !
दुःख दे के जो दुखिया से ना इन्साफ करेगा
भगवान भी उसको ना कभी माफ़ करेगा
ये सोच ले हर बात की दाता को खबर है
हिम्मत है तो आजा, ये भलाई की डगर है
इन्साफ का मंदिर है...
துக்  தே கே ஜோ துகியா ஸே நா இன்ஸாஃப் கரேகா
பகவான் பீ உஸ்கோ நா கபீ மாஃப் கரேகா
யே ஸோச் லே ஹர் பாத் கீ தாதா கோ கபர் ஹை
ஹிம்மத் ஹை தோ ஆஜா, ஏ பலாயீ கீ டகர் ஹை
இன்ஸாஃப் கா மந்திர் ஹை.......

ஒருவருக்கு துன்பம் தந்துவிட்டு அதை சரிசெய்யாதவன் -
பகவான்  கூட அவனை மன்னிக்கமாட்டார் !
அந்தப் பெரியவருக்கு எல்லாம் தெரியும் - இதை நினைத்துப் பார் !
இது நன்மை தரும் பாதை- தைரியமிருந்தால் இங்கே வா !
இது நீதியின்  கோவில் !

है पास तेरे जिसकी अमानत उसे दे दे
निर्धन भी है इंसान, मोहब्बत उसे दे दे
जिस दर पे सभी एक हैं बन्दे, ये वो दर है
इन्साफ का मंदिर है...

ஹை பாஸ் தேரே ஜிஸ்கீ அமானத்  உஸே தே தே
நிர்தன் பீ ஹை இன்ஸான், மோஹப்பத் உஸே தே தே
ஜிஸ் டர் பே ஸபீ ஏக் ஹை பந்தே, யே ஓ டர் ஹை
இன்ஸாஃப் கா மந்திர் ஹை..........

யாருடைய நம்பிக்கையைப் பெற்றாயோ -
அதைப் பூர்த்தி செய்
மனிதன்  ஏழை - அவனிடம் அன்பு செலுத்து
அன்பனே ! எந்த வாசலின் முன் அனைவரும் சமமோ, 
அந்த வாசல் இதுதான் !
இது நீதியின் கோவில் !

मायूस ना हो हार के तक़दीर की बाज़ी
प्यारा है वो गम जिसमें हो भगवान भी राज़ी
दुःख दर्द मिले जिसमें, वही प्यार अमर है
ये सोच ले हर बात की दाता को खबर है
इन्साफ का मंदिर है...
மாயூஸ் நா ஹோ ஹார் கே தக்தீர் கீ பாஜீ
ப்யாரா ஹை ஓ கம் ஜிஸ்மே ஹோ பகவான் பீ ராஜீ
துக் தர்த் மிலே ஜிஸ்மே, ஒஹீ ப்யார் அமர் ஹை
யே ஸோச் லே ஹர் பாத் கீ தாதா கோ கபர் ஹை
இன்ஸாஃப் கா மந்திர் ஹை.........

விதியின் விளையாட்டில் தோற்று மனம் நொந்து விடாதே !
அந்த துயரம்  பகவானிடம் நெருங்கச் செய்யும்!
துயரமும் துன்பமும் இருந்தும் யார் அன்பு செலுத்துகிறார்களோ
அத்தகைய அன்பே அமரத்தன்மை வாய்ந்தது !
பகவானுக்கு எல்லாம் தெரியும் - இதை நினைத்துப் பார் !
இது நீதியின்  கோவில் - பகவானின் வீடு
தைரியமிருந்தால் இங்கு வா !



ஷகீல் பதாயுனியின்  அருமையான கவிதை ! கோவிலுக்குப்  போகிறவர்கள் சுத்தமாகப் போகவேண்டும் என்போம். உடலும் உடையும் சுத்தமாக இருந்தால் போதுமா ? மனதும் சுத்தமாக இருக்கவேண்டும் !  'புறத்தூய்மை நீரால்  அமையும், அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் ' என்பார் வள்ளுவர். இங்கு வாய்மையையும் விட ஒரு படி மேலே போகிறார் ஷகீல்.

சேற்றில் செந்தாமரை மலர்கிறது ! சினிமா சகதியிலும் இத்தகைய அருமையான பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. நமது பழைய இலக்கியம் படித்தவர்களுக்கு இக்கவிதைகள் எந்த அளவுக்கு நம் மரபை ஒட்டியே இருக்கின்றன என்பது விளங்கும். இத்தகைய கவிதைகளை எழுதிய கவிஞர்களையும், அவற்றிற்கு இசை வடிவம் கொடுத்து நமது மனதில் இருத்திய இசை மேதைகளுக்கும் நாம்  இதயபூர்வமாக  நன்றி சொல்ல வேண்டும். அந்த நாளும் மீண்டும் வந்திடாதோ என்று  எண்ணத்    தோன்றுகிறது ! பாடல்களை யூடியூபில் கேட்டு மகிழலாம்.