Showing posts with label Sahir Ludhianvi. Show all posts
Showing posts with label Sahir Ludhianvi. Show all posts

Saturday, 4 November 2017

97.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்! -7


97.வாழ்க்கையைக் கொண்டாடுவோம்!-7


இந்தியா ஏழைகள் மிகுந்த நாடு என்று மேலை நாட்டினர் கூச்சலிடுகின்றனர். அவர்கள்  நிலை என்ன? மதர் தெரசாக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்!
picture from:https://21stcenturychallenges.org.

வாழ்க்கைத் தரம்  உயர்ந்துவிட்டது என்கிறோம். முன்னேறி வருகிறோம் என்கிறோம். ஆனால் அடிப்படையில் இந்த ஒரு சாண் வயிற்றுக்கான கலாட்டா ஓய்ந்தபாடில்லை. உணவு, உடை, இருப்பிடம்- இதற்காகத்தான்  நம்மில் பெரும்பாலோர்  இன்றும் பாடுபட்டு வருகின்றனர். பணப்பெருக்கத்தின்-பணப்புழக்கத்தின்- பணவீக்கத்தின் காரணமாக 
ஒன்றுக்குப் பத்தாக  விலைவாசிகள் ஏறிவிட்டன.. சிலர்  ஈடுகொடுக்கின்றனர், பலர் பின் தங்கியே வருகின்றனர். தேசீய வருமானம் பெருகிவிட்டது 
என்கிறார்கள்  பொருளாதாரவாதிகள். இவர்கள்  முக்காலும் கிரிசைகெட்டவர்கள்.  : செல்வம் சிலரிடமே குவிகிறது, பலர் ஏழ்மை என்னும் குழியில் விழுகிறார்கள்; செல்வர்-வறியவரிடையேயான  இடைவெளி வளர்ந்தே வருகிறது. நடுத்தர வர்கத்தினரின் சிறு ஆசைகள் கூட நிறைவேறுவதில்லை! நவீன பொருளாதாரம் என்னும் மாயவலையின் உலகளாவிய நிலை இப்படி இருக்கிறது.


This is in  the USA. picture from: pewaukeeeconomics.blogspot.in


உணவு, உடை - நடுத்தர வர்கத்தினர்  எப்படியோ சமாளித்துக் கொள்கின்றனர். ஆனால் வீடு அவர்கள் கைக்கு எட்டாததாகவே இருக்கிறது! 60 வருஷங்களுக்குமுன்  ஸாஹிர் லுதியான்வி  பம்பாயில் இருந்த நிலை பற்றிப் பாடினார்:
जितनी भी बिल्डिंगें थीं, सेठों ने बाँट ली हैं
फ़ुटपाथ बम्बई के हैं आशियाँ हमारा
सोने को हम कलन्दर, आते हैं बोरी बन्दर
हर एक खोली यहाँ है राज़दाँ हमारा
चीन-ओ-अरब हमारा ..
ஜித்னீ பீ பில்டிங்கே தீ,
சேட்டோனே பா(ன்)ட் லீஹை
ஃபுட்பாத் பம்பயீகா ஹை ஆஷியா(ன்) ஹமாரா
ஸோனேகோ ஹம் கலந்தர்,
ஆதே ஹை  போரி பந்தர்
ஹர் ஏக் கூலீ யஹா(ன்) ஹை ராஃஜ்தா(ன்) ஹமாரா
சீன்-ஓ-அரப் ஹமாரா, 
ஹிந்துஸ்தான் ஹமாரா
ரஹனே கோ கர் நஹீ ஹை
ஸாரா ஜஹா(ன்) ஹமாரா.

இருந்த கட்டிடங்கள் எல்லாவற்றையும்  பணக்காரர்கள் வளைத்துப் போட்டுக் கொண்டார்கள்.
 தெருவோர நடைபாதையே நமது வீடாயிற்று! 
சாதுபோல் எங்கும் சுற்றிவிட்டு இரவில்  போரிபந்தர் ஸ்டேஷனில் படுப்போம்! இங்கு இருக்கும் ஒவ்வொரு கூலியும் நமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவனே!
சீனாவும் அரேபியாவும் நமதாக இருக்கலாம்!
ஹிந்துஸ்தானமே நமதாக இருக்கலாம்!
இருப்பதற்கு நமக்கு என்று ஒரு வீடில்லை -
இந்த உலகம் பூராவும் நமதுதானே !

( 1957ல் இந்தப் பாடலை தடை செய்ய நினத்தது நமது நேரு சர்க்கார் !)



பம்பாயில் குடிசைகள் .Photo: London School of Economics, 2017.


இன்று இது எல்லா ஊர்களுக்கும் பொதுவானதாகிவிட்டது! பண முதலைகள்  வீட்டுமனையில், ஃப்லாட்டில்  Flats முதலீடு செய்கிறார்கள். Speculation. விலை ஏறிக்கொண்டே போகிறது ! நம் கைக்கு எட்டாமலே போகிறது ! 
ஆனால்  நாம் கனவு காண்பதை யார் தடை செய்ய முடியும்? இதோ ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன் பாடுகிறான் :




பாடல் : சோடா ஸா கர் ஹோகா
படம் :   நௌகரீ  1954 Naukri
கவி : ஶைலேந்த்ரா
இசை : ஸலீல் சௌதுரி
பாடியது :கிஷோர் குமார்
fantastic photo on the right: Kishore-Shailendra- Salil Chowdhury




छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए
हम ही हम चमकेंगे तारों के उस गाँव में
आँखों की रौशनी हरदम ये समझाए


சோடா ஸா கர் ஹோகா பாதலோ)ன்) கீ சா(ன்)வ் மே

ஆஷாதீவானீ மன் மே பன்ஸுரீ பஜாய்
ஹம் ஹீ ஹம் சம்கேங்கே தாரோ(ன்) கே உஸ் கா(ன்)வ் மே
ஆங்கோ(ன்) கீ ரோஷ்னீ ஹர்தம் யே சம்ஜாய்!


இந்த மேகங்களின் நிழலில்  நமக்கென்று ஒரு  சிறு வீடு  இருக்கும்!
இந்த நம்பிக்கையில் என் மனமாகிய குழல் கீதமிசைக்கிறது!
அந்த நக்ஷத்திர உலகில் நாமும் சுடர்விட்டுப் பிராகாசிப்போம்!
நமது கண்களில் வீசும் ஒளி இதை  நமக்கு உணர்த்துகிறது !

चाँदी की कुर्सी पे बैठे मेरी छोटी बहना
सोने के सिंघासन पे बैठे मेरी प्यारी माँ
मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मीजी के पाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए


சாந்தீ கே குர்ஸீ பே பைடீ மேரீ சோடீ பஹனா
ஸோனே கே சிங்காஸன் பர் பைடீ மேரீ ப்யாரீ மா
மேரா கயாஹை மை படா ரஹூங்கா அம்மி ஜீ கே பாவ்(ன்) மே
ஆ ஆஆ ஆயிரே, ஆ ஆஆ ஆயிரே...
சோடா ஸா கர் ஹோகா .......

வெள்ளி நாற்காலியில் என் தங்கை உட்கார்ந்திருக்கிறாள்.
தங்கச் சிம்மாஸனத்தில் என் அம்மா அமர்ந்திருக்கிறார்
எனக்கென்ன, நான் என் தாயின் காலடியில் கிடப்பேன்!
ஆ ஆ ஆ.... இது எத்தனை சுகம்!
நமக்கென்று ஒரு சிறு வீடு இருக்கும் !


मेरी छोटी बहना नाज़ों की पाली शहज़ादी
जितनी-भी जल्दी हो मैं कर दूँगा उसकी शादी
अच्छा है ये बला हमारी जाए दूजे गाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए



மேரீ சோடீ பஹனா  நாஃஜோ கீ பாலி ஷஹ ஃஜாதீ
ஜித்னீ பீ ஜல்தீ ஹோ மை கர்தூங்கீ உஸ்கீ ஷாதீ
அச்சா ஹை யே பலா ஹமாரீ ஜாயே தூஜே கா(ன்) வ் மே
ஆ ஆ ஆ ஆயிரே, ஆ ஆ ஆ ஆயிரே....
சோடா ஸா கர் ஹோகா.........

என் தங்கை - ராஜகுமாரிபோல் வளர்ந்தவள் !
கூடிய சீக்கிரம் அவளுக்கு மணம் முடித்து வைப்பேன் !
நம் செல்லம் வேறொரு வீட்டிற்குப் போவது நல்லது தானே !
ஆ ஆ ஆ..... இதுதானே நல்லது!

कहेगी माँ, दुल्हन ला बेटा घर सूना-सूना है
मन में झूम कहूँगा मैं, माँ इतनी जल्दी क्या है
गली-गली में तेरे राजदुलारे की चर्चा है
आख़िर कोई तो आएगा इन नैनों के दाँव में
आ आ आ अई रे, आ आ आ अई रे
आ आ आ अई रे, आ आ आ अई रे
छोटा-सा घर होगा बादलों की छाँव में
आशा दीवानी मन में बँसुरी बजाए
हम ही हम चमकेंगे तारों के उस गाँव में
आँखों की रौशनी हरदम ये समझाए


கஹேகா மா, துல் ஹன் லா பேடா, கர் ஸூனா ஸூனா ஹை

மன் மே ஜூம் கஹூங்கா மை, மா இத்னீ ஜல்தீ க்யாஹை!
கலீ கலீ மே தேரே ராஜ்துலாரே கீ சர்ச்சா ஹை
ஆகிர்  கோயீ தோ ஆயேகா இன் நயனோ(ன்) கீ தா(ன்)வ் மே
ஆ ஆ ஆ ஆயிரே, ஆ ஆ ஆ ஆயிரே....
சோடா ஸா கர் ஹோகா........

ஒரு நாள் அம்மா சொல்வாள் : "மகனே, வீடு வெறிச்சோடிக்கிடக்கிறது
ஒரு மாற்றுப்பெண் அழைத்துவா ! "
மனம் பொங்கும் ! இருந்தாலும் நான் சொல்வேன் :
" அம்மா, இவ்வளவு அவசரம் ஏன் ?"
ஊர் முழுவதும் இந்த ராஜகுமாரனின் பேச்சாகவே இருக்கிறது!
கடைசியில் கண்ணின் மணியாக  ஒருத்தி வந்து  சேருவாள் !
ஆ ஆ ஆ.... எல்லாம் நல்லது தானே
நமக்கென்று ஒரு சிறு வீடு இருக்கும்
அந்த நம்பிக்கையில் கீதமிசைப்போம் !

60 வருஷங்களுக்கு முந்திய பாடல்! அன்றைய  சராசரி நடுத்தர வர்கத்துக் குடும்பத்தின்  ஆசா-பாசங்களை எவ்வளவு அழகாகச் சொல்லி யிருக்கிறார் ஶைலேந்த்ரா ! உடன் பிறந்தவர்களுடன் வளர்ந்தவர்களுக்கு இதன் அருமை புரியும்! Today, we have atomic,  nuclear families. Nobody feels he is his brother's keeper ! 

உலகில் எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு குழப்பம், பதட்டம் நிலவி வருகிறது. சீர்திருத்த வாதிகளும் புரட்சியாளர்களும் இதைச் செய்,, அதை மாற்று என்று ஆரவாரிக்கிறார்கள். கடந்த இரு நூறு ஆண்டுகளில் உலகமும் எவ்வளவோ  புரட்சிகளையும், மாற்றங்களையும் கண்டுவிட்டது ஆனாலும் நிலைமை சீராகவில்லை. அதிகார வர்கத்தின் பக்கம் சேராவிட்டால் கதியில்லை என்று ஆகிவிட்டது. சராசரி மனிதன்  நல்ல நிலையை கனவு காணவேண்டும், அல்லது கற்பனை செய்ய வேண்டும். அத்தகைய ஒரு அழகிய கற்பனை இது.











பாடல் : ஆ சல் கே துஜே
படம் : தூர் ககன் கீ சாவோ(ன்)  மே 1964
Door Gagan Ki Chaon  Mein
பாடலை இயற்றி, இசை அமைத்துப் 
பாடியவர் : கிஷோர்குமார்.









आ चल के तुझे, मैं ले के चलूं
इक ऐसे गगन के तले
जहाँ ग़म भी न हो, आँसू भी न हो
बस प्यार ही प्यार पले

ஆ சல் கே துஜே , மை லேகே சலூ(ன்)
இக் ஐஸே ககன் கே தலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ,  ஆ(ன்) ஸூ பீ ந ஹோ
பஸ் ப்யார் ஹீ ப்யார் பலே !

என்னுடன் வா, இந்தப் பரந்த வானத்தின் கீழ் 
அத்தகைய இடத்திற்குக் கூட்டிச் செல்கிறேன் -
அங்கு துயரம் இருக்காது, கண்ணீர் இருக்காது,
அன்பு மட்டுமே நிறைந்திருக்கும்.
வா, அத்தகைய இடத்திற்குச் செல்வோம் !


सूरज की पहली किरण से, आशा का सवेरा जागे
चंदा की किरण से धुल कर, घनघोर अंधेरा भागे
कभी धूप खिले, कभी छाँव मिले
लम्बी सी डगर न खले
जहाँ ग़म भी नो हो...

ஸூரஜ் கீ பஹலீ கிரண் ஸே, ஆஶாகா ஸவேரா ஜாகே
சந்தா கீ கிரண் ஸே துல் கர், கன் கோர் அந்தேரா பாகே
கபீ தூப் மிலே, கபீ சா(ன்)வ் மிலே
லம்பீஸி டகர் ந கலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ......

உதிக்கும் சூரியனுடைய முதல் கிரணங்களுடன்
மனதில் ஆசையும் உதித்தெழுகிறது !
 நிலவின் ஒளியில் மூழ்கி. கனத்த இருட்டும்  ஒடிவிடுகிறது !
வாழ்க்கை என்பது  நீண்ட பாதை
சில சமயம் சூரிய ஒளி, சில சமயம் நிழல் வருகிறது
வா, நாம் துயரமற்ற அந்த இடத்திற்குப் போவோம்.


जहाँ दूर नज़र दौड़ाएं, आज़ाद गगन लहराए
जहाँ रंग बिरंगे पंछी, आशा का संदेसा लाएँ
सपनों में पली, हँसती हो कली
जहाँ शाम सुहानी ढले
जहाँ ग़म भी न हो...

ஜஹா(ன்) தூர் நஃஜர் தௌடாயே, ஆஃஜாத் ககன் லஹராயே
ஜஹா(ன்) ரங்க் பிரங்கீ பன்சீ, ஆஶா கா ஸந்தேஸா லாயே
ஸப்னோ(ன்) மே பலீ, ஹ(ன்)ஸ்தீ ஹோ கலீ
ஜஹா(ன்) ஶாம் ஸுஹானீ டலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ


தூரத்தில் பார்வையைச் செலுத்து !
அங்கு பார்- வானம் சுதந்திரமாக எழுகிறது !
வண்ண வண்ணப் பறவைகளின் சப்தங்கள்
நம்பிக்கை என்னும் செய்தியைத் தாங்கி வருகின்றன !
இன்பக் கனவில் மூழ்கிய மலர்கள்
சிரித்து மலர்கின்றன !
இப்படியே இனிய மாலைப்பொழுது வந்து சேருகிறது !
வா, துயரமில்லாத அந்த இடத்திற்குப் போவோம்!


pexels

सपनों के ऐसे जहां में, जहाँ प्यार ही प्यार खिला हो
हम जा के वहाँ खो जाएं, शिकवा न कोई गिला हो
कहीं बैर न हो, कोई गैर न हो
सब मिलके यूँ चलते चलें

जहाँ गम भी न हो...

ஸப்னோ(ன்) கே ஐஸே ஜஹா(ன்) மே,
ஜஹா(ன்) ப்யார் ஹீ ப்யார் கிலா ஹோ
ஹம்  ஜாகே வஹா கோ ஜாயே(ன்),
ஶிக்வா ந  கோயீ கிலா ஹோ
கஹீ பைர் ந ஹோ,கோயீ கைர் ந ஹோ
சப் மில்கே யூ(ன்) சல்தே சலே
ஜஹா(ன்) கம் பீ ந ஹோ.......

அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்த கனவு  உலகத்தில்
 நாம் சென்று காணாமல் போய்விடுவோம்!
எந்தக் குறையும் இல்லா  திருக்கட்டும்
எந்த கவலையும் இல்லா திருக்கட்டும்
எந்த வெறுப்பும் இல்லா திருக்கட்டும்
யாரும் அன்னியர் என்று இல்லா திருக்கட்டும் !
எல்லோரும் ஒன்றாக இணைந்து செல்லும் அந்த  உலகிற்கு -
துன்பம், கண்ணீர் இல்லாத அந்த உலகிற்கு  நாம் செல்வோம், வா !

ஆம், வெளியே எவ்வளவு இருட்டாக இருந்தாலும் மனதில் நம்பிக்கை என்னும் தீபத்தை ஏற்றி வைப்போம்!  நல்லதையே நினைப்போம்!






Can we only dream  here on earth, of perfection in some place else?
Yes, it seems so. As Robert Browning sang:
"On the earth the broken arcs;
in the heaven a perfect round." 
[ Abt Vogler]
pexels.


Sunday, 22 October 2017

92.வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -2



92. வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -2





 நமது சினிமாவில்  இசை முக்கிய  இடம் பெறுகிறது.  சினிமாவின் தரம் போல இசையின் தரமும் கீழே, கீழே போய்விட்டது.  இன்று குரல் வளம் உடைய பாடகர்கள் இல்லை; பல வருஷங்கள் மனதில் தங்கும்படி இசை அமைப்பவர்களும் இல்லை. எலக்டிரானிக் சாதனங்கள் வந்தபிறகு, அசல் வாத்யங்கள்  இல்லை;  சிறந்த பாடலாசிரியர்களும் இல்லை. இருந்தாலும் சினிமாவில் இசை என்று  ஏதோ இருக்கிறது.; பாட்டு என்று ஏதோ இருக்கிறது. 50களில் வந்த படங்களின் இசையைக் கேட்டவர்களுக்கு இன்றைய திரை இசை  சகிக்க முடியாததாக இருக்கிறது. இந்த சரிவு சினிமாவில் மட்டும் இல்லை- எல்லா துறைகளிலும் இருக்கிறது.

முன்பெல்லாம்  சினிமா பாடல்  ரேடியோ சிலோனில்தான் வரும்.. எந்தப் பாடல் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. பாடலின் வார்த்தைகள் சரியாகப் புரியாது; பாடலும் முழுதாக வராது. இருந்தாலும்  பிடித்த பாடல் வந்தால்  ஒரு த்ரில் வரும். இன்று யூ-ட்யூப் வந்த பிறகு, 1940 லிருந்து ஹிந்திப் பாடல்களைக் கேட்கலாம், அவற்றின் வார்த்தைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ளலாம். இதனால் பழைய பாடல்களை ரசிப்பவர்களின் தொகை லக்ஷக்கணக்கில் பெருகிவருகிறது. Old is gold  என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறோம்.

இன்று சினிமா வந்தால் அதன் பாடல்களுக்கு விளம்பரம்  வானைத் தொடுகிறது ; மூன்று மாதங்களுக்குப் பிறகு அப்பாடல்களைச்  சீண்டுவாரில்லை. ஆனால் 50,60 வருஷங்களுக்கு முன் வந்த படப் பாடல்கள் இன்றைக்கும்  விரும்பிக் கேட்கப்படுகின்றன, பாடப்படுகின்றன! இதற்கு எந்த விளம்பரமும் இல்லை ! இசையின் தரம், பாடலின்  சிறப்பு, பாடியவர்களின் குரல் வளம்  ஆகியவையே காரணம். காலத்தை வென்ற தன்மை இவற்றின் சிறப்பு. இதற்கு இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் முக்கிய காரணம்.  கருத்துள்ள  பாடல் நல்ல இசையுடன் கலந்து வருவது தேனும் பாலும் சேர்வது போல.  இது ஒரு  unparalleled historical phenomenon. It requires adequate appreciation.

காதல்  இல்லாத சினிமா இல்லை; பாட்டில் வடிக்காத காதல் இல்லை! இனிய இசையில் படியாத பாடல் இல்லை ! இதில் அருமையான கவிகள் அருமையான பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.  இவற்றில் சிலவற்றைப் பார்த்து வருகிறோம்.




டண்டீ ஹவாயே(ன்)
படம்: நௌஜவான் 1951 Naujawan
கவி: ஸாஹிர் லுதியான்வி.
இசை : எஸ்.டி பர்மன் S.D.Burman

ठंडी हवाएं, लहरा के आयें 
रुत है जवां
तुमको यहाँ, कैसे बुलाएँ
ठंडी हवाएं...


டண்டீ ஹவாயே(ன்), லஹரா கே ஆயே(ன்)
ருத் ஹை ஜவான்
தும் கோ யஹா(ன்) கைஸே புலாயே(ன்)
டண்டீ ஹவாயே(ன்)

இனிய தென்றல், அலைஅலையாக வீசுகிறது !
என்னைச் சுற்றிலும் எல்லாம் இனிமை, இளமை !
உம்மை இங்கு எப்படி அழைப்பேன் ?
இனிய தென்றல்........

चाँद और तारे, हँसते नज़ारे
मिल के सभी, दिल में सखी, जादू जगाये
ठंडी हवाएं...

சாந்த் ஔர் தாரே, ஹ(ன்)ஸ்தே நஃஜாரே
மில் கே ஸபீ, தில் மே ஸகீ, ஜாதூ ஜகாயே
டண்டீ ஹவாயே(ன்)....

 நிலவு, நக்ஷத்திரங்கள், என்னைச் சூழ்ந்திருக்கும் இந்தக் களிப்பு,
இவை எல்லாம் சேர்ந்து என் மனதில் 
ஏதோ மாயவித்தை செய்கின்றன !
இனிய தென்றல்......


कहा भी न जाए, रहा भी न जाए
तुमसे अगर, मिले भी नज़र, हम झेंप जाए
ठंडी हवाएं...
.

கஹா பீ ந ஜாயே, ரஹா பீ ந ஜாயே
தும்ஸே அகர், மிலே பீ நஃஜர், ஹம் ஜோப் ஜாயே
டண்டீ ஹவாயே(ன்)........
எதையும் சொல்லவும் முடியவில்லை,
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை !
உம்மை நேரடியாகப் பார்த்தாலும் பேச்சற்று விடுவேன்!
இனிய தென்றல்.....

दिल के फ़साने, दिल भी न जाने
तुमको सजन, दिल की लगन, कैसे बताएँ
ठंडी हवाएं...


தில் கே ஃபஸானே, தில் பீ ந ஜானே
தும்கோ ஸஜன், தில் கீ லகன், கைஸே பதாயே(ன்)
டண்டீ ஹவாயே(ன்).........

மனதில் எழும் கதைகள் - இது மனதிற்கே தெரியவில்லை !
பின் அன்பரே, இதை உமக்கு எப்படித் தெரிவிப்பது?
இனிய தென்றல்.....

இந்தப் பாடல் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான பாடல்.இதை ஆதாரமாக வைத்து தமிழில் "தாய் உள்ளம் " படத்தில் 'கொஞ்சும் புறாவே ' என்ற பாடல் எம்.எல்.வசந்தகுமாரி பாடிப் பிரபலமானது. இதே மெட்டின் அடிப்படையில் ஹிந்தியிலேயே பல பாடல்கள் வந்துவிட்டன. This is a milestone song in Hindi film music.சினிமா பாட்டாக இருந்தாலும் அதன் கவிதை நயம் சொக்கவைக்கிறது.இசை அசத்துகிறது! சினிமா போய்விட்டது. பாடல்  நிலைத்து நிற்கிறது!

தும்ஸே அகர், மிலே பீ நஃஜர், ஹம் ஜோப் ஜாயே - இந்த வரி  நமது இலக்கியத்தில்  முக்கிய இடத்தைப்  பெற்றது.
 "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ " என்பது கம்ப ராமாயணம். இதை  நம் கவிகள் பிற பாடல்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.


देख हमें आवाज़ न देना 
- 'தேக் ஹமே ஆவாஃஜ் ந  தேனா '. ராஜேந்தர் க்ரிஷன்.  அமர்தீப், 1958

चुपके से मिले, प्यासे प्यासे कुछ हम कुछ तुम

- 'சுப் கே ஸே மிலே ப்யாஸே ப்யாஸே, குச் ஹம், குச் தும்' - மஜ்ரூ ஸுல்தான்புரி, மன்ஃஜில் , 1960











தில் கீ நஃஜர் ஸே
படம் : அனாடி 1959 Anadi
கவி : ஶைலேந்த்ரா
இசை: ஶங்கர் ஜய்கிஷன் ShankarJaikishan




दिल की नज़र से, नज़रों की दिल से 
ये बात क्या है, ये राज़ क्या है 
कोई हमें बता दे 

தில் கீ நஃஜர் ஸே, நஃஜ்ரோ (ன்) கீ தில் ஸே
யே பாத் க்யா ஹை, யே ராஃஜ்  க்யா ஹை
கோயீ ஹமே(ன்) பதா  தே

மனதிலிருந்து எழும் பார்வை- பார்வையிலிருந்து எழும் மனது -
இது என்ன விஷயம் ? இது என்ன ரகசியம் ? 
யாராவது நமக்குப் புரியவைப்பார்களா ?

सीने से उठकर, होठों पे आया 
ये गीता कैसा, ये राज़ क्या है 
कोई हमें बता दे
दिल की नज़र से...


ஸீனே ஸே உட்கர், ஹொடோ(ன்) பே ஆயா
யே கீத் கைஸா, யே ராஃஜ் க்யா ஹை
கோயீ ஹமே(ன்) பதா தே
தில் கீ நஃஜர் ஸே.......

 நெஞ்சிலிருந்து கிளம்பி, உதடுகளில் வந்த
இந்தப் பாடல் என்ன ? இந்த ரகசியம் என்ன ?
இதை யாராவது நமக்குச் சொல்வார்களா ?

क्यों बेखबर, यूँ खिंची सी चली जा रही मैं 
ये कौन से बन्धनों में बंधी जा रही मैं
कुछ खो रहा है, कुछ मिल रहा है 
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से
...

க்யோ(ன்) பேகபர், யூ(ன்) கின்சீ ஸீ சலீ ஜா ரஹீ மை
யே கௌன் ஸே பந்தனோ(ன்) மே பந்தீ ஜா ரஹீ மை
குச் கோ ரஹா ஹை, குச் மில் ரஹா ஹை
யே பாத் க்யா ஹை, யே ராஃஜ் கயாஹை
கோயீ ஹமே பதா தே

தன் வசம் இழந்து, இது ஏன் இப்படி என்னை யாரோ இழுப்பது போல் போகிறேன் ?
இது என்ன, எந்தத் தளை  என்னை பந்தப்படுத்துகிறது !
 எதையோ இழக்கிறேன் , ஏதோ கிடைக்கிறது 
இது என்ன விஷயம் ? இது என்ன ரகசியம் ?
இதை யாராவது சொல்வார்களா ?


हम खो चले, चाँद है या कोई जादूगर है
या मदभरी, ये तुम्हारी नज़र का असर है
सब कुछ हमारा, अब है तुम्हारा
ये बात क्या है, ये राज़ क्या है 
कोई हमें बता दे
दिल की नज़र से...


ஹம் கோ சலே, சாந்த் ஹை யா கோயீ ஜாதுகர் ஹை
யா மத்பரீ, தும்ஹாரீ  நஃஜர் கா அஸர் ஹை
ஸப் குச் ஹமாரா, அப் ஹை தும்ஹாரா
யே பாத க்யா ஹை, யே ராஃஜ் கயா ஹை
கோயீ ஹமே பதா தே

இது என்ன - சந்திரனா, எதாவது மந்திரவாதியா ?
நான் என்னையே மறந்துவிட்டேன் !
இல்லையெனில், இது உன் போதை தரும் கண்களின்  வலிமையா?
இப்போது என்னுடையதெல்லாம் உனதாகிவிட்டது !
இது என்ன விஷயம், இது என்ன ரகசியம்,
யாராவது நமக்கு விளக்குவார்களா?


आकाश में, हो रहें हैं ये कैसे इशारे 
क्या, देखकर, आज हैं इतने खुश चाँद-तारे
क्यों तुम पराये, दिल में समाये 
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से...


ஆகாஷ் மே, ஹோ ரஹே  ஹை கைஸே இஷாரே
க்யா தேக்கர் ஆஜ் ஹை இத்னே குஷ் சாந்த் -தாரே
க்யோ(ன்) தும் பராயே, தில் மே ஸமாயே
யே பாத் க்யா ஐ, யே ராஃஜ் கயா ஹை
கோயீ ஹமே பதா தே

ஆகாயத்தில் என்ன ரகசிய   சங்கேதம் தோன்றுகிறது ?
எதைப்பார்த்து  நிலவும் நக்ஷத்திரங்களும் இன்று இவ்வளவு
சந்தோஷமடைந்திருக்கின்றன !
உன்னைப்போன்ற  வெளி நபர் இன்று என் மனதில் எப்படி நிறைந்தாய் !
இது என்ன விஷயம், இது என்ன ரகசியம் ?
யாராவது நமக்குச் சொல்வார்களா ?

உண்மையான கவி எழுதிய பாடல், காவிய மணம் தவழ்கிறது. "தில் கீ நஃஜர் ஸே, நஃஜ்ரோ(ன்) கீ தில் ஸே " என்ற இந்த முதல் வரியை  மொழிபெயர்ப்பது இயலாது ! அற்புதமான வாக்கு!

இப் பாடல்களில்  வரும் நிலவு, நக்ஷத்திரம், தென்றல் போன்றவை நமக்கு சங்கப் பாடல்களை நினைவூட்டுகின்றன. இவற்றை வைத்துப் பாடாத கவிஞரே இல்லை எனலாம். இன்னொரு பாடல்.
















ஸா(ன்)வ்லே ஸலோனீ  ஆயே
படம் : ஏக் ஹீ ராஸ்தா 1957 Ek Hi Rasta
கவி : மஜ்ரூ ஸுல்தான்புரி
இசை : ஹேமந்த் குமார்    Hemant Kumar

 साँवले सलोने आये दिन बहार के
झूमते नज़ारे झूमे रंग उगार के
 नदी किनारे
 कोय्ल पुकारे
 आया ज़माना गाओ गीत प्यार के …
झूउम के पवन देखो चली चली
प्यार के नशे में खिली कली कली
 फूलों के दर से ये भँवरा पुकारे
आये दीवाने तेरे इंतज़ार के …

 डोलती घटा के संग डोले जिया
बाग में पपीहा बोले पिया पिया
 ऋत रंगीली कहे करके इशारे
छेड़ो फ़साने दिल-ए-बेक़रार के

ஸா(ன்)வ்லே ஸலோனே ஆயே தின் பஹார் கே
ஜூம்தே நஃஜாரே ஜூமே ரங்க்  உகார் கே
நதீ கினாரே
கோயல் புகாரே
ஆயா  ஃஜமானா  காவோ கீத் ப்யார் கே

வஸந்த காலம் வந்துவிட்டது; மனதில் மகிழ்ச்சி பிறந்துவிட்டது
சுற்றிலும் இயற்கை வண்ணமயமாக  மாறிவிட்டது!
நதியின் கரையில் குயில் கூவுகிறது:
அன்பான நாட்கள் வந்துவிட்டன, கீதமிசைப்போம்!



ஜூம்கே பவன் தேகோ சலீ  சலீ
ப்யார் கே நஷே மே கில் கலீ கலீ
பூலோ(ன்) கே டர் ஸே ஏ பவ்ரா புகாரே
ஆயே தீவானே தேரே இந்த ஃஜார் கே.......

மெல்லிய பூங்காற்று இனிமையாக வீசுகிறது
அன்பின் போதையில் மொக்குகள் மலர்கின்றன!
வண்டுகள் மலர்களை முத்தமிடுகின்றன !
காத்திருந்த நாட்கள் ஒடிவிட்டன!

டோல்தீ கடா கே ஸங்க் டோலே ஜியா
பாக் மே பபீஹா போலே பியா பியா
ருத் ரங்கீலி கஹே கர்கே இஷாரே
சோடோ ஃபஸானே தில்-ஏ-பேகரார் கே
ஓடும் மேகங்களுடன் மனதும் ஒடுகிறது !
சோலையில் பறவைகள் இனிய மொழிகளில் கொஞ்சுகின்றன!
இந்த ரம்யமான சூழ்நிலை ஏதோ  சங்கேத மொழியில் சொல்கிறது -
நாமும் அன்பில் திளைக்கும்  நாட்கள் வந்துவிட்டன !



flowers-gardens.net

இங்கும் இயற்கையுடன் சம்பந்தப் படுத்தியே பாடுகிறார் ! இதுவும் நமது பழைய இலக்கியத்தை நினைவூட்டுகிறது.
இத்தகைய பாடல்கள் நிறைந்த 50களை  பொன்னான நாட்கள்   the golden period of film music என்று சொல்வது பொருத்தம் தானே !


Saturday, 21 October 2017

91.வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ! -1


91. வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ! -1
By Steve Wilson CC BY -SA 2.0 Creative commons via Wikimedia Commons.

இதுவரை வந்த சில கட்டுரைகளைப் பார்த்து (82 - 90) நமது ஹிந்தி  சினிமா ஏதோ  தத்துவக் கூடாரம் என்று நினைத்துவிட வேண்டாம்! சினிமா வியாபார சாதனம் தான் . இதில் 'பல ' விஷயங்களும் இருக்கின்றன. எது இருந்தாலும்  நமது சிறந்த கவிகள்  சில தத்துவங்களைச் சொல்லாமல் இருந்ததில்லை., நூற்றுக்கணக்கான அத்தகைய பாடல்களிலிருந்து சிலவற்றையே  பார்த்தோம். ஆனால் சினிமாவே தத்துவமயமாகிவிடாது!
இன்றைய சினிமா  கவர்ச்சி  என்ற  அடிப்படையில் ஒடுகிறது, இதற்கு இரு முக்கிய சக்கரங்கள் : ஆண்-பெண் உறவு, அடி-தடி சண்டை ! இதுவும் கட்டுக் கடங்காமல் போகிறது. கதை, கிதை யென்றெல்லாம் நம்மவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.

ஆனால் நமது கவிஞர்கள்  மிக அருமையான  கவிதைகளையும் வாழ்வின் பல நிலைகளையும் பிரதிபலிப்பதாக  எழுதியிருக்கிறார்கள்.. இவற்றில் மிக சுவாரஸ்யமானவை  காதல்  கவிதைகள், அதிலும்  டூயட் பாடல்கள். இவை இந்திய சினிமாவிற்கே உரித்தானவை! உண்மையில் இசை அம்சத்தில் எந்த ஹாலிவுட்டும் கோலிகுண்டும் நம்முடன் போட்டி போட  இயலாது!
 சில  நல்ல பாடல்களை இங்கே பார்க்கலாம்.

யே ராத் யே சாந்த்னீ

ये रात ये चाँदनी फिर कहाँ
सुन जा दिल की दास्ताँ

யே ராத் யே சாந்த்னீ ஃபிர் கஹா(ன்)
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)
இந்த இரவு,இந்த நிலவொளி -
இவற்றை மீண்டும் எங்கு காண்போம் ?
என் மனது கூறும் கதையைக் கேள்

पेड़ों की शाखों पे सोई-सोई चाँदनी
तेरे खयालों में खोई-खोई चाँदनी
और थोड़ी देर में, थक के लौट जाएगी
रात ये बहार की, फिर कभी न आएगी
दो एक पल और है ये समां 
सुन जा दिल की...



பேடோன் கீ ஷாகோ(ன்) பே ஸோயீ ஸோயீ  சாந்த்னீ
தேரே கயாலோ(ன்) மே கோயீ-கோயீ சாந்த்னீ
ஔர் தோடீ தேர் மே, தக் கே லௌட் ஜாயேகீ
ராத் யே பஹார் கீ, ஃபிர் கபீ ந ஆயேகீ
தோ ஏக் பல் ஔர்  ஹை யே  ஸமா
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)

ஹே ! இந்த மரக்கிளைகளின் மீது நிலவொளி  உறங்குகிறது !
உனது நினைவுகளில் இந்த நிலவொளி  அலைகிறது !
சிறிது நேரத்தில்  அது களைப்படைந்து திரும்பிப்  போய்விடும்!
இந்த வசந்த கால இரவு மீண்டும் திரும்பி வராது.
இந்த இனிய பொழுது இன்னும் சில க்ஷணங்கள்தான் இருக்கும்.
இப்பொழுதே என் மனதின் கதையைக் கேள்.


लहरों के होंठों पे धीमा-धीमा राग है
भीगी हवाओं में ठंडी-ठंडी आग है
इस हसीन आग में, तू भी जलके देख ले
ज़िंदगी के गीत की, धुन बदल के देख ले
खुलने दे अब धड़कनों की ज़बाँ
सुन जा दिल की...


லஹரோ(ன்) கீ ஹோடோ(ன்) பே தீமா-தீமா ராக் ஹை
பீகீ ஹவாவோ(ன்) மே டண்டீ-டண்டீ  ஆக் ஹை
இஸ் ஹஸீன் ஆக் மே தூ பி ஜல்கே தேக் லே
ஜிந்தகீ கே கீத் கீ துன் பதல் கே தேக் லே
குல்னே தே அப் தட்கனோ(ன்) கீ ஃஜபா(ன்)
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)

இந்த அலைகளின் உதடுகளில் மெல்லிய  இசை இனிதாகத் தவழ்ந்து வருகிறது!
ஈரத்துளிகள்  நிறைந்த இந்தக் காற்றில் குளிர்ந்த நெருப்பு வீசுகிறது!
இந்த அழகிய நெருப்பில் நீயும் விழுந்து, 
அது எப்படி இருக்கிறதென்று பார்!
வாழ்க்கையின் கீதம்- அதன் ராகத்தை மாற்றிப் பார் !
[ அந்த முயற்சியில் இறங்காதே!]
இதயத்துடிப்பின்  குரல் வெளிவரட்டும்!
இப்பொழுதே மனதின் கதையைக் கேட்டுச் செல்.


जाती बहारें हैं, उठती जवानियाँ
तारों के छाँव में पेह्ले कहानियाँ
एक बार चल दिये, गर तुझे पुकार के
लौटकर न आएंगे, क़ाफ़िले बहार के
आजा अभी ज़िंदगी है जवाँ
सुन जा दिल की...


ஜாதீ பஹாரே(ன்) ஹை உட்தீ ஜவானியா(ன்)
தாரோ(ன்) கே சாவ்(ன்) மே பெஹ்லே கஹானியா
எக் பார் சல் தியே, கர் துஜே புகார் கே
லௌட் கர் ந ஆயேங்கே, காஃபிலே பஹார் கே
ஆஜா அபீ ஃஜிந்தகீ ஹை ஜவா(ன்)
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்).

வஸந்தம் மறைந்துகொண்டிருக்கிறது, இளமை பொங்குகிறது
நமது கதை இந்த நக்ஷத்திரங்களின் நிழலில் பொதிந்திருக்கிறது
வஸந்தத்தின் இந்த அணிவகுப்பு -
உன்னை அழைத்துவிட்டு, பின்  விலகிவிட்டால்
மீண்டும் அது திரும்பி வராது !
வாழ்க்கை இளமையாக இருக்கிறது- 
இப்பொழுதே நீ வந்துவிடு !
மனதின் கதையைக் கேட்டுச் செல்.



இந்தப் பாடலை எழுதியவர் ஸாஹிர் லுதியான்வி. படம்: ஜால்  Jaal 1952.ஆயிரக்கணக்கான காதல் பாடல்கள் இருக்கின்றன. பல மிக அருமையானவை, அவற்றிலும் சிகரமாக அமைந்தது இப்பாடல். ஹிந்தி/உர்து கவிதையின் முழு அழகையும் பொழிபெயர்ப்பில் தர இயலாது. ஆனால், நிலவொளி, கடல் அலை, மரம், நக்ஷத்திரம், வசந்த காலம் என இயற்கையின் பல அம்சங்களையும் காதலுடன் இணைத்துப் பாடியது, இது ஒரு இயற்கைச் சக்தி என்பதை மிக அருமையாக விளக்குகிறது. இதுவே வாழ்வின் கீதம், இதற்கு எதிராகப் போகாதே என்கிறார் கவி. இது சங்க இலக்கியப் பாடல்களை நினைவுபடுத்துகிறது!  இந்த அருமையான பாடலில் காதல், கீதல் என்ற சொல்லே இல்லை ! எவ்வளவு நாசூக்காகச் சொல்லிவிட்டார்! 


இது தலைவன் பாடும் பாடலாக இருக்கிறது.  இதையே ஒரு சோக கட்டத்தில் இருவரும் சேர்ந்து பாடும் நிலையிலும் பாடியிருக்கிறார்.


ये रात ये चाँदनी फिर कहाँ, सुन जा दिल की दास्तां
चाँदनी रातें प्यार की बातें खो गयी जाने कहाँ
யே ராத் யே சாந்த்னீ ஃபிர் கஹா(ன்),
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)
சாந்த்னீ  ராதே(ன்) ப்யார் கீ பாதே(ன்)
கோ கயீ ஜானே கஹா(ன்)

இந்த இரவு, இந்த நிலவொளி இவற்றை மீண்டும் எங்கு காண்போம் ?
மனதின் கதையைக் கேட்டுச் செல்.
நிலவொளியில் மிதந்த அந்த இரவுகள்,  அந்த அன்பு மொழிகள்-
அவை எங்கே தொலைந்து போய்விட்டன ?

आती है सदा तेरी, टूटे हुए तारों से
आहट तेरी सुनती हूँ, खामोश नज़ारों से
भीगी हवा, उमड़ी घटा, कहती है तेरी कहानी
तेरे लिये, बेचैन है, शोलों में लिपटी जवानी
सीने मे बलखा रहा है धुआं
सुन जा दिल की...

ஆதீ ஹை ஸதா தேரீ, டூடே ஹுவே தாரோ(ன்) ஸே
ஆஹட் தேரீ ஸுன்தீ ஹூ(ன்), காமோஷ் நஃஜாரோ(ன்) ஸே
பீகீ ஹவா, உம்டீ கடா, கஹதீ ஹை தேரீ கஹானீ
தேரே லியே, பேசைன் ஹை, ஶோலோ(ன்) மே லிப்டீ ஜவானீ
ஸீனே  மே பல்கா ரஹா ஹை துவா(ன்)
ஸுன் ஜா திக் கீ தாஸ்தான்
உடைந்து விழும் நக்ஷத்திரங்கள்- 
அவற்றில் உன் இருப்பை நான் உணர்கிறேன்.
உன் காலடியோசையை  நிசப்தமான பார்வையுடன் கேட்கிறேன்.
குளிர்ந்த காற்று, எழும்பும் மேகங்கள்  உன் கதையைச் சொல்கின்றன
உனக்காக நான்  அமைதியை இழந்துவிட்டேன்
புகை மார்பை அழுத்துகிறது
மனதின்  கதையைக்  கேட்டுச் செல்.


लहरों के लबों पर हैं, खोये हुए अफ़साने
गुलज़ार उम्मीदों के, सब हो गये वीराने
तेरा पता, पाऊं कहाँ, सूने हैं सारे ठिकाने
जाने कहाँ, गुम हो गये, जा के वो अगले ज़माने
बरबाद है आरज़ू का जहाँ, सुन जा दिल की दास्तां

லஹரோ(ன்) கே லபோ பர் ஹை,
கோயே  ஹுவே அஃப்ஸானே
குல்ஃஜார் உம்மீதோ(ன்) கீ,  ஸப் ஹோகயே வீரானே
தேரா பதா, பாவூ(ன்) கஹா(ன்), ஸூனே ஹை ஸாரே டிகானே
ஜானே கஹா)ன்), கும் ஹோகயே, ஜா கே ஓ அகலே ஃஜமானே
பர்பாத் ஹை ஆர் ஃஜூ கா ஜஹா(ன்).
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)

இந்த அலைகளின் இதழ்களில்
மறந்துபோன கதைகள் புதைந்துள்ளன
நம்பிக்கை என்னும்  பூஞ்சோலை காலியாகிவிட்டது
உன்னை எங்கு என்று தேடுவது? எல்லா இடங்களும் காலியாக இருக்கின்றன.
நீ வேறு எந்த உலகத்தில்  சென்று எங்கு மறைந்து விட்டாயோ தெரியவில்லை
ஆசை என்னும் உலகம் அழிந்துவிட்டது. 
மனதின் கதையைக் கேட்டுச் செல்.

கவிதை வளம், இசை, படமாக்கிய விதம், காட்சிகள் என்று எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கும் இப்பாடல் 65 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறது. வி.கே மூர்த்தியின் படப்பிடிப்பு இப்பாடல் காட்சியின் மிகச்சிறந்த அம்சம்.  பார்த்து, கேட்டு மகிழவேண்டிய பாடல். One of the best of Hemant Kumar and Lata Mangeshkar, in their  young voices. It has been a source of great pleasure for 60 years. இசை அமைத்தவர் எஸ்.டி பர்மன்.





இதோ, இன்னொரு அருமையான பாடல். 

ஓ மேரீ தரஃப்


वो मेरी तरफ़ यूँ चले आ रहे हैं
कि अरमान धड़कन से टकरा रहे हैं
वो मेरी तरफ़ यूँ

उन्हें देखने को उठीं मेरी नज़रें
मुझे देखते ही झुकी  उन की पलकें
न जाने वो क्यों हम से शरमा रहे हैं
कि अरमान धड़कन से टकरा रहे हैं
वो मेरी तरफ़ यूँ

जो कलियाँ खिली हैं तो गुल भी खिलेंगे
निगाहें मिली हैं तो दिल भी मिलेंगे
कि साँसों से पैग़ाम आ-जा रहे हैं
कि अरमान धड़कन से टकरा रहे हैं
वो मेरी तरफ़ यूँ

उन्हें देख कर दिल लगा रंग लाने
है दिल क्या कहीं बात माने न माने
कि हम दिल कि हरकत से घबरा रहे हैं
कि अरमान धड़कन से टकरा रहे हैं
वो मेरी तरफ़ यूँ

ஓ மேரீ தரஃப் யூ(ன்) சலே ஆரஹே ஹை
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை
ஓ மேரீ தரஃப் யூ(ன்)

அவள்  என் பக்கம் நோக்கி  நடந்து வருகிறாள்
இதயத்துடன்  ஆசையும் துடிக்க  ஆரம்பித்து விட்டது !

உன்ஹே தேக்னே கோ உடீ மேரீ நஃஜ்ரே (ன்)
முஜே தேக்தே ஹீ ஜுகே உன் கீ பல்கேன்
ந ஜானே ஓ க்யூ(ன்) ஹம்ஸே ஷர்மா ரஹே ஹை
கீ அர்மான் தட்கன்  ஸே டக்ரா ரஹே ஹை

அவளைப் பார்ப்பதற்காக நான்  கண்களை உயர்த்தினேன்
என்னைக் கண்டவுடனேயே அவள்  இமைகள் தாழ்ந்துவிட்டன!
என்னைக் கண்டு ஏன் வெட்கம் வரவேண்டும்? தெரியவில்லை !
இதயத்துடன் ஆசையும் துடிக்க ஆரம்பித்து விட்டது !

ஜோ கலியா(ன்) கிலீ ஹை தோ குல் பீ கிலேங்கே
நிகாஹே(ன்) மிலீஹை தோ தில் பீ மிலேங்கே
கீ ஸாஸோ(ன்) மே பைகாம் ஆ-ஜா ரஹே ஹை
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா  ரஹே ஹை
ஓ மேரீ தரஃப் யூ(ன்).....

மொக்கு வந்து விட்டது, இனி மலரவும் செய்யும்!
கண்கள் சந்தித்து விட்டன, மனங்களும் சந்திக்கும்!
மூச்சுடன்  செய்திகளும் வந்து போகின்றன !
இதயத்துடன் ஆசையும் துடிக்க ஆரம்பித்து விட்டது!

உன்ஹே தேக் கர் தில் லகா ரங்க் லானே
ஹை தில் க்யா கஹீ(ன்) பாத் மானே ந மானே
கீ ஹம் தில் கி ஹர்கத் ஸே கப்ரா ரஹே ஹை
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை
ஓ மேரீ தரஃப் யூ(ன்)........

அவளைப்  பார்த்த  பிறகு மனதில் புதிய  எழுச்சி மலர்ந்தது!
மனது இனி என் வசம் இருக்குமா ? தெரியவில்லை !
மனதின்  இந்தப் புதிய நிலை  அச்சமாகவும் இருக்கிறது !
இதயத்துடன் ஆசையும் துடிக்க ஆரம்பித்து விட்டது!


இந்தப் பாடலை எழுதியவர் வ்ரஜேந்த்ர கௌர்,   Brajendra Gaud.  படம் : காஃபிலா, 1952. Kaafila.

 இங்கும் பாருங்கள் , எத்தனை ரசனையுடன், நாசூக்காக எழுதியிருக்கிறார். கிஷோர்குமாரின் அருமையான குரலில் இந்தப் பாடல் fantastic. This has been my favourite for 60 years. இசை அமைத்தவர்கள் ஹுஸன்லால்-பகத்ராம்.


மற்றொரு எளிய, இனிய பாடல்: கதாநாயகி பாடுவது.

ஸோகயா ஸாரா ஃஜமானா



सो गया सारा ज़माना नींद क्यों आती नहीं
ऐ हवा जाकर उसे तू साथ क्यों लाती नहीं

चाँद पहले भी निकलता था मगर ऐसा न था
आज ऐसी बात क्यों है ये समझ आती नहीं

चाँदनी कुछ चाँद से कह कर ज़मीं पे आ गई
जाने क्या देखा यहाँ अब लौट कर जाती नहीं



ஸோ கயா ஸாரா ஃஜமானா, நீந்த் க்யூ(ன்) ஆதீ நஹீ
யே ஹவா ஜாகர் உஸே தூ ஸாத் க்யூ(ன்) லாதீ நஹீ

உலகம் முழுதும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது,
எனக்கு மட்டும் ஏன்  நித்திரை வரவில்லை ?
யே பூங்காற்றே ! நீ  போய் ஏன் அவரைக்
கையோடு அழைத்துவரலாகாது ?

சாந்த் பஹ்லே பீ நிகல்தா தா மகர் ஐஸா ந தா
ஆஜ் ஐஸீ பாத் க்யூ(ன்) ஹை யே ஸமஜ் ஆதீ நஹீ

சந்திரன் முன்பும் வந்துகொண்டுதான் இருந்தது -
ஆனால் இப்படி இருந்ததில்லை !
இன்று அதற்கு என்ன வந்துவிட்டது ? ஏதோ ஒரு மாறுதல்
ஓன்றும் புரியவில்லை !

சாந்த்னீ குச் சாந்த் ஸே கஹ் கர் ஃஜமீன் பே ஆகயி
ஜானே க்யா தேகா யஹா(ன்) அப் லௌட் கர் ஜாதீ நஹீ

நிலவொளி  நிலவினிடம் ஏதோ சொல்லிவிட்டு
பூமியில் இறங்கிவிட்டது !
இங்கு  அப்படி என்ன  கண்டதோ  தெரியவில்லை !
திரும்பிப்போக   மறுக்கிறது !

ஸோகயா ஸாரா ஃஜமானா .....
உலகம் முழுதும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது !







இது 1957ல் வந்த மிஸ்மேரி Miss Mary படத்தில் வந்த பாட்டு. (தமிழில் மிஸ்ஸியம்மா )
எழுதியவர் ராஜேந்த்ர க்ருஷ்ணா. Rajinder Krishan. இசை : ஹேமந்த் குமார்.
இங்கும் காதல், கீதல் என்று கொச்சையாகச் சொல்லாமல் எவ்வளவு  நளினமாக, நாசூக்காக எழுதியிருக்கிறார் ! அன்றைய ரசனை வேறுதான் !




இத்தகைய பாடல்களைக் கேட்டு மகிழ்வதே இக்கலைஞர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்!

[கம்பதாசன் என்று ஒரு கவிஞர் இருந்தார், பல ஹிந்திப் பாடல்களை இலக்கிய வளம் குன்றாமல் தமிழில் தந்தார். இந்தப் பாடல்களை அவரைப் போன்றவர்கள் தமிழில் தரவேண்டும்.]