Showing posts with label ஶைலேந்த்ரா. Show all posts
Showing posts with label ஶைலேந்த்ரா. Show all posts

Thursday, 12 October 2017

85.வாழ்க்கைத் தத்துவம்


85. வாழ்க்கைத் தத்துவம் 

உலகில் எப்படி வாழவேண்டும்?
இதை விளக்க பல சமயங்கள் தோன்றியிருக்கின்றன. பல தத்துவங்கள் பிறந்திருக்கின்றன. ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகள், விளக்கங்கள் என குட்டை குழம்புகிறது.

இந்திய மரபில் பொதுவாக இதை தர்மம்-அறம் என்று அழைக்கிறோம். தமிழ் இலக்கியத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இந்தப் பிரிவைச் சார்ந்தவையே. திருக்குறளும் நாலடியாரும்  இதில்  அடங்கியதே. அரசினர் கட்டுப் பாட்டில் தடுமாறும்  நமது கல்வி முறையில் இதையெல்லாம் இப்போது சரியாகச் சொல்லித் தருவதில்லை.

சிறு வயதில் பெற்றோர்கள் / பெரியவர்கள்  சிலவற்றைச்  சொல்லித் தருகிறார்கள். சில நல்ல ஆசிரியர்கள் நல்ல பண்புகளைப்  போதிக்கிறார்கள். சிலவற்றைப் புத்தகம் வாயிலாகதத் தெரிந்துகொள்கிறோம். மற்றபடி, செய்திப்பத்திரிகை, மீடியா ஆகியவற்றின் ஆதிக்கம் தான், 'பேச்சை மட்டும்  கேட்காதே - நடத்தையைக் கவனி , பண்புள்ள பெரியவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்களோ , அதைப் பின்பற்று ' என்பது வழிவழியாக வந்த அறிவுரை. ஆனால் மீடியாவின் ஆதிக்கமும், விளம்பரமும் வளர்ந்துவிட்ட இன்னாட்களில் யார் உண்மையிலேயே யோக்யமானவர் என்று எப்படித் தெளிவது ? வேஷதாரிகளே அதிகம். 

நல்ல நடத்தைக்கு அஸ்திவாரம், 'இந்த உலகை, நம் எல்லோரையும் ஏதோ ஒரு சக்தி / அமைப்பு  இயக்குகிறது, நாம் அதன்படி நடந்துகொள்ள வேண்டும். நேர்மையாக, நாணயமாக இருக்கவேண்டும் ' என்ற ஒரு நம்பிக்கைதான். இது திடமாக இருந்தால் ஒழுக்கம் தானாக வரும். இதை சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார்  அழகாகப் பாடினார்.


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தல் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)



எல்லா ஊர்களும் நமது ஊர்களே, எல்லா மக்களும் நமது உறவினரே.  நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை. நோயும்  அதிலிருந்து  நீங்குவதும்  அப்படியே. சாதல் என்பது புதுமையான தல்ல. (அதனால்) வாழ்க்கை இனியது என்று களிக்க மாட்டோம்; வெறுத்து,  தீயது என்று  சொல்லவும் மாட்டோம். மின்னலுடன் பெரிய மழைபெய்து, வெள்ளம் பெருகி, கல்லில் மோதியபடியே  பெரும் வலிவுடன் செல்லும் ஆற்று நீரில் படகு போவதுபோல, இந்த உயிர்கள் உலகில்  ஏதோ ஒரு நியதியின் வசப்பட்டு நடக்கின்றன என்பதை  ஞானிகளின்  காட்சியில் கண்டு  தெளிவடைந்தோம் அதனால் பெரியவர்களைக் கண்டு வியக்க மாட்டோம். சிறியவர்களை  இகழவும் மாட்டோம்.



Inverie river ( Great Britain) in spate.
Photo copyright by Patrick Vincent licensed under Creative commons.

இவர் "கணியன் ". எண்  ஜோதிடம் அல்லது வான சாஸ்திரத்தில் ( Astronomy)  சிறந்தவர். எல்லாவற்றையும்  நன்கு  ஆராய்ந்து பார்த்திருக்கிறார். பிறவி என்றால் இறப்பும்  இயற்கையே- வியப்பல்ல. எல்லாம் ஏதோ நியதிக்குக் கட்டுப் படுகிறது என்றால்  ( இதை சம்ஸ்க்ருதத்தில் ரிதம் Rta  என்பார்கள்,) நன்மை-தீமைகளுக்கு வேறு யார் காரணமாக முடியும்? நாம்-பிறர் என்று எப்படி பேதப்படுத்துவது? எல்லாரும் நம்மவரே, எல்லா ஊரும் நமதே. இந்த நியதியும் நம் வசத்தில் இல்லை என்பதை அருமையான உவமை மூலம் விளக்கிவிட்டார். இதையே வள்ளுவர்  "ஊழிற் பெருவலி யாவுள ?" என்று  கேட்டார் !

இவ்வளவு  இருந்தும்  பழைய இலக்கியத்தைப் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது. இது உலகெங்கிலும் இன்று நிலவும் நிலை. "ஷேக்ஸ்பியரைப்  படித்து  என்ன புண்ணியம்? அவர் எழுதியது புரியவில்லை. அந்த  சமூக நிலையும் முறையும் இன்று இல்லை;  இன்று  ஷேக்ஸ்பியரைப் படிக்க  என்ன அவசியம் வந்துவிட்டது?" என்று இங்கிலாந்து இளைஞர்கள் கேட்கிறார்கள் ! நம்மவர்களின் நிலையும் அதுதான். பாடத்தில் வந்தால் ஏதோ தீராது என்று படிக்கிறார்கள். 

இந்த நிலையில் திரைக்கவிஞர்கள்  வாழ்க்கைக்கு அவசியமான சில கருத்துக்களை  எளிய இனிய பாடல்கள் வாயிலாக மக்களிடையே பரப்புகிறார்கள். அத்தகைய  இரு பாடல்களைப் பார்க்கலாம்.








1. கிஸீ கி முஸ்குராஹடோ (ன்)
படம்: அனாடி 1959  Anadi
கவிஞர் : ஶைலேந்த்ரா  Shailendra











किसी की मुस्कुराहटों पे हो निसार
किसीका दर्द मिल सके तो ले उधार
किसीके वास्ते हो तेरे दिल में प्यार
जीना इसी का नाम है
किसी की ...

கிஸீ கி முஸ்குராஹடோ(ன்)  பே ஹோ நிஸார்
கிஸீ கா தர்த் மில் ஸகே தோ லே  உதார்
கிஸீ கே வாஸ்தே  ஹோ தேரே தில் மே ப்யார்
ஜீனா இஸீ கா நாம்  ஹை 

பிறர் சந்தோஷத்தைக் கண்டு உன் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும்
பிறருக்கு துன்பம் வந்தால் அதை நீ இரவல் வாங்கிக்கொள் !
பிறருக்காக உன் மனதில் அன்பு ஊறட்டும்!
இதைத்தான் வாழ்க்கை என்று சொல்வோம்!


(माना अपनी जेब से फ़कीर हैं
फिर भी यारों दिल के हम अमीर हैं ) - (२)
मिटे जो प्यार के लिये वो ज़िन्दगी
जले बहार के लिये वो ज़िन्दगी
किसी को हो न हो हमें तो ऐतबार
जीना इसी का नाम है


மானா அப்னி ஜேப்  ஸே ஃபகீர் ஹை
ஃபிர் பீ யாரோ தில் கே ஹம் ஹமீர் ஹை
மிடே ஜோ ப்யார் கே லியே ஓ ஜிந்தகீ
ஜலே பஹார்  கே லியே ஓ ஜிந்தகீ
கிஸீ கோ ஹோ ந ஹோ ஹமே தோ ஐத்பார்
ஜீனா இஸீ கா  நாம் ஹை 


நம் பாக்கெட்டில் பணம் இல்லை- உண்மைதான்
ஆனால் மனதால் நாம் செல்வந்தர்களாக இருக்கிறோம் !
( நல்ல மனம் உள்ளவர்களாக இருக்கிறோம் )
அன்பிற்காக யார் உயிரையும் கொடுக்கிறார்களோ- 
நல்ல காலம் வரும் என்று யார் ஏங்குகிறார்களோ-
அவர்களே வாழ்கிறார்கள்.
யாருக்கு இருக்கிறதோ,இல்லையோ -
இது தான் வாழ்க்கை என  நாம் நம்புகிறோம்.


(रिश्ता दिल से दिल के ऐतबार का
ज़िन्दा है हमीं से नाम प्यार का ) - (२)
के मर के भी किसी को याद आयेंगे
किसी के आँसुओं में मुस्कुरायेंगे
कहेगा फूल हर कली से बार बार
जीना इसी का नाम है

ரிஶ்தா தில் ஸே தி கே ஐத்பார் கா
ஜிந்தா ஹை ஹமீ  ஸே நாம் ப்யார் கா
கே மர் கே பீ கிஸீ கோ யாத்  ஆயேங்கே
கிஸி கே  ஆ(ன்)ஸ்வோ மே முஸ்குராயேங்கே
கஹேகா ஃபூல் ஹர் கலீ ஸே பார் பார்
ஜீனா இஸீ கா நாம் ஹை.

நம்பிக்கையின் மீது இரு  மனங்களுக்கிடையே  அமையும் உறவு-
அன்பு என்பது இவர்களால் தான்  தழைக்கிறது !
அப்போது, இறந்தபின்பும் சிலருக்கு நினைவு வரும்- 
சிலருக்கு கண்ணீருக்கிடையிலும் புன்முறுவல் பூக்கும்!
மலர் ஒவ்வொரு மொக்கையும் பார்த்துச் சொல்லும் -
 இதற்குத் தான் வாழ்க்கை என்று  பெயர் !

பிற உயிர்கள் பால் அன்பில்லாத ஜன்மம் ஒரு ஜன்மமா? இதைத்தானே வள்ளுவர் சொன்னார் ? :

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு.

இக்கருத்தை எவ்வளவு அழகாக விளக்குகிறார்  ஶைலேந்த்ரா !


परोपकारं वहन्ति नद्या , परोपकारं दुहन्ति गाया |
 परोपकारं फलन्ति वृक्ष, परोपकारं इदं शरीरं ||


பரோபகாரம் வஹன்தி நதியா,
பரோபகாரம் துஹன்தி காயா,
பரோபகாரம் ஃபலன்தி வ்ருக்ஷா
பரோபகாரம் இதம் ஶரீரம்.

பரோபகாரத்திற்கே நதிகள் ஒடுகின்றன
பரோபகாரத்திற்கே பசுக்கள் பால் தருகின்றன
பரோபகாரத்திற்கே மரங்கள் பழங்களைத் தருகின்றன
பரோபகாரத்திற்கே இந்த உடல் வந்திருக்கிறது!





2. மை ஜிந்தகீ கா ஸாத்
படம் : ஹம் தோனோ  1961 Hum Dono
கவிஞர் : ஸாஹிர் லுதியான்வி

मैं ज़िन्दगी का साथ निभाता चला गया
हर फ़िक्र को धुएँ में उड़ाता चला गया

மை ஜிந்தகீ கா ஸாத் நிபாதா சலா கயா
ஹர் ஃபிக்ர் கோ துயே (ன்) மே உடாதா சலா கயா

நான் வாழ்க்கையின் போக்கை ஒட்டியே  காலத்தைக் கழித்தேன்
ஒவ்வொரு கவலையையும் காற்றில் பறக்க விட்டேன்


बरबादियों का सोग मनाना फ़जूल था
बरबादियों का जश्न मनाता चला गया
हर फ़िक्र को...


பர்பாதியோ(ன்) கா ஸோக் மனானா ஃபஜூல் தா
பர்பாதியோ (ன்) கா ஜஷ்ன் மனாதா சலா  கயா
ஹர் ஃபிக்ர் கோ ...........

வரும் துன்பங்களையே நினைத்துக் கொண்டிருப்பது  இழுக்கு
அதனால் அத்துன்பங்களையே கொண்டாடினேன் !
கவலையை காற்றில் விட்டேன் !

जो मिल गया उसी को मुकद्दर समझ लिया 
जो खो गया मैं उसको भुलाता चला गया
हर फ़िक्र को...


ஜோ மில் கயா உஸீ கோ முகத்தர் ஸமஜ்லியா
ஜோ கோ கயா மை உஸ்கோ புலாதா சலா கயா
ஹர் ஃபிக்ர் கோ ..........

எது கிடைத்ததோ, நமக்கு இதுதான் கொடுத்துவைத்தது
என நினைத்துக்கொண்டேன்
எதை இழந்தேனோ, அதை மறந்துவிட்டேன் !
ஒவ்வொரு கவலையையும் காற்றில் விட்டேன் !

ग़म और ख़ुशी में फ़र्क़ न महसूस हो जहाँ
मैं दिल को उस मुक़ाम पे लाता चला गया
मैं ज़िन्दगी का साथ...


கம் ஔர் குஷீ மே ஃபர்க் ந மஹஸூஸ்  ஹோ ஜஹா(ன்)
மை தில் கோ உஸ் மகாம் பே லாதா சலா கயா
மை  ஜிந்தகீ கா ஸாத் நிபாதா சலா கயா

துன்பத்திற்கும் இன்பத்திற்கும் வித்தியாசம் காணாத, 
கண்டு கலங்காத, அந்த நிலை -
நான் மனதை அந்த லக்ஷியத்திலேயே  நிறுத்தி வைத்தேன்!
நான் வாழ்க்கையின் போக்கிலேயே காலத்தைக் கழித்தேன்!



" Let Fate find us prepared and active. Here is the great soul - the one who surrenders to Fate. The opposite is the weak and degenerate one, who struggles with and has a poor regard for the order of the world, and seeks to correct the faults of the gods rather than their own. "  Seneca, Moral Letters. 



இந்தப் பாடலைப் படிக்கும் போது எவ்வளவு தமிழ்ப் பழமொழிகள்
நினைவுக்கு வருகின்றன ! வகுத்தான் வகுத்த வகை, கிட்டாதாயின் வெட்டென மற, இடுக்கண் வருங்கால் நகுக, என இப்படி எத்தனை ! சுக-துக்கம் இவற்றிடையே சமத்வம் காண்பதே யோகம் என்பது கீதை வாக்கல்லவா!
பாரத நாடு முழுவதும் இருக்கும் சிந்தனைப்போக்கு ஒன்றுதான். கயவர்கள் மொழி, இனம் எனப்பிரித்து தடுமாறுகிறார்கள்.

இந்த இரு பாடல்களும் நமது வாழ்க்கைத் தடத்திற்கு இரு தண்டவாளங்களாக அமைந்துள்ளன ! ஒன்று, சமூக இயலில், பொதுவாழ்வில் நாம் பின்பற்றவேண்டிய  அன்பு நெறி  பற்றிச் சொல்கிறது. மற்றது தனி வாழ்வில் நாம் பற்றியொழுக வேண்டிய மன நிலை பற்றிச் சொல்கிறது !  இரண்டும் சேர்ந்து  கணியன் பூங்குன்றனாரின் சங்கப் பாடலுக்கு அமைந்த நவீன விளக்கமாக இருக்கின்றன !

Note : மை ஜிந்தகீ கா ஸாத் என்ற பாடலுடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைச்  சொல்லவேண்டும். இதை 1965ல் ஒரு நாள் தனியாக இருக்கும்போது  ஆபிஸில் முணுமுணுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த  நண்பன்  அனீஸ் அஹமத், " இதைப்பாடுகிறாயே, பொருள் தெரியுமா ?" என்றான். ஓரளவு தெரியும், வார்த்தைக்கு வார்த்தை தெரியாது என்றேன். அவன் உடனே என்   நோட்டில்  இந்தப் பாடலை எழுதி  ஆங்கிலத்தில்  அர்த்தத்தையும் எழுதினான். பிறகு நாங்கள் வெவ்வேறு இடத்திற்குப்  போய்விட்டோம். சில வருஷங்களுக்குப் பிறகு விசாரித்ததில் அனீஸ் அஹமத்  தற்கொலை செய்துகொண்டான் எனத் தெரிந்து ஷாக் ஆயிற்று ! இத்தகைய பாட்டிற்குப் பொருள் சொன்ன படித்த இளைஞன்  தற்கொலையா செய்துகொண்டான் ? இந்த ஷாக் இன்னமும் நீங்கவில்லை.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான புதிர் போடுகிறது. புரியவில்லை.


taken from: guyaneseonline.wordpress.com






Monday, 9 October 2017

82.காலமும் கவிஞர்களும்


82.காலமும் கவிஞர்களும்


Michael from Minnesota. Sunrise at Kauai. Wikimedia commons.

காலத்தின் அருமை பற்றி நமது  பெரியவர்கள்  பலவிதத்தில்  சொல்லியிருக்கிறார்கள். பொதுவாக காலம் பொன்னானது; சென்ற காலம் திரும்பாது; இழந்த செல்வத்தையாவது மீண்டும் பெறலாம், கடந்த காலம் கடந்ததுதான் ; காலத்தில் எதையும் செய்யவேண்டும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். காலம் அறிந்து செய்தால் ஞாலத்தையும் வெல்லலாம் என்பார் வள்ளுவர்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்.

ஞானிகளும் நாமும்

ஞானிகளின் நிலை வேறு. இவர்கள் காலம் 'கடந்தவர்கள் '. இவர்கள் முக்காலம் என்ற எல்லையைத் தாண்டியவர்கள் - எக்காலத்தையும் ஒருங்கே காண்பவர்கள். இவர்கள் இருப்பது  Eternal Present  என்பார்கள். இறந்தகாலம் என்பது நினைவுகளின் கூட்டம்; எதிர்காலம் என்பது எதிர்பார்ப்பு. எனவே நிகழ்காலம் என்பது தான் நிச்சயம் ; எதிர்காலம்  வரும்போது அதையும் நிகழ்காலமாகத்தானே அனுபவிக்கிறோம் என்பார் ஸ்ரீ ரமணர். 

ஐன்ஸ்டீன்  காலத்தைப் பற்றிய நமது பார்வையையே மாற்றிவிட்டார்! பௌதிக  விஞ்ஞானி நிலையிலிருந்து ஞானி நிலைக்கு உயர்ந்துவிட்டார்! காலமும் வெளியும் Time and Space பற்றிய இவர் கண்டுபிடிப்பு  பௌதிக விஞ்ஞானத்தையே புரட்டிப்போட்டுவிட்டது! இதன் முழுவிவரமும் விஞ்ஞானிகளுக்கே புரியவில்லை!

ஸ்டாய்க் தத்துவவாதி  ரோமாபுரிப் பேரரசர் மார்கஸ் அரேலியஸ் எழுதுகிறார் :


"Leave the past behind, let the grand design take care of the future, and instead only rightly guide the present to reverence and justice.Reverence so that you'll love what you've been allotted, for nature brought you both to each other.Justice so that you'll speak the truth freely and without evasion, and so that you'll act only as the law and value of things require." [Meditations 12.1. From 'The Daily Stoic'.]



நம் போன்றவர்களின் நிலை வேறு. நாம் பொதுவாக காலத்தை மதிப்பதில்லை. காலம் போவது தெரியாமல் பொழுது  'போக்குகிறோம் ' ! காலம் கழிக்க  என்னவெல்லாமோ  செய்கிறோம்! ஒரு நிமிஷம் போனால் திரும்பிவராது - நாம் நினைத்துப்பார்ப்பதில்லை. 'Lose an hour in the morning- you will spend all day looking for it'  என்பது ஆங்கில வசனம்.
ஒவ்வொரு கணமும் நம் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது !ஆனால் இதை நினைத்துப் பார்ப்பதில்லை ! வயதாக ஆக 'பிறந்த நாள் ' விழா கொண்டாடுகிறோம். இதன் பொருள் என்ன ?

காலத்தைக் கருது!

பெரியோர்கள் நம்மிடம் அனுதாபத்துடன் 'காலத்தைக் கருது' என்று சொல்கிறார்கள். சங்கர பகவத் பாதர் 'பஜ கோவிந்தத்தில்' பாடுகிறார் :


मा कुरु धनजनयौवनगर्वं
हरति निमेषात्कालः सर्वम् 

दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायु-
स्तदपि न मुञ्चत्याशावायुः ॥


மாகுரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி  நிமேஷாத் காலஸ்ஸர்வம்.


உன்னுடைய செல்வம், சுற்றம், இளமை பற்றியெல்லாம் கர்வம் கொள்ளாதே. காலம் இவற்றை நிமிஷத்தில் அழித்துவிடும்.


தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
ஶிஶிர வஸந்தௌ புனராயாத:
கால: க்ரீடதி கச்சத் ஆயு:
ததபின முஞ்சதி ஆஶா வாயு:


பகல் வெளிச்சம் -இருட்டு; மாலை-காலை; குளிர்காலம்-வசந்தம் என வந்து போய்க்கொண்டே இருக்கிறது. காலம் இப்படி விளையாடுகிறது' ஆயுள் குறைந்துகொண்டே போகிறது !. ஆனால் ஆசையின் வேகம் மட்டும் போவதில்லை!


"கலயதாம் அஹம் கால:" = அளப்பவர்களில் நான் காலமாக இருக்கிறேன்  என்று பகவான் கீதையில் சொல்கிறார். இது நமக்குப் புரிவதில்லை!

காலம் மாறிப் போச்சு!

இன்றைய நமது சமூகச் சூழலில் இத்தகைய சிந்தனைகள் இளைஞர்களிடம் பரவ வழியில்லை. வாழ்க்கையை கேளிக்கை மயமாகவே  அணுகவும் கழிக்கவும்  வழிவகுக்கிறார்கள். பொழுது போக்கிற்காக பலவற்றைக் கொண்டிருக்கிறோம். அரசியல்-சினிமா-விளையாட்டு என்பவை முக்கண்களாகிவிட்டன. இவை டி.வி வழியாக வீடுவீடாகச் சென்றடைகின்றன. 24 X 7 இந்த அலை ஓய்வதில்லை! [ டி.வி சாக்கடை போன்று ஆகிவிட்டது: குடிதண்ணீர் குழாயில் அரைமணி நேரம் ( வந்தால் ) வருகிறது, சாக்கடையோ ஓடிக்கொண்டே இருக்கிறது!.]

இவற்றில் தலையாய இடத்தைப் பெறுவது சினிமாவே எனலாம். பல கவர்ச்சிகர அம்சங்களைக்கொண்டு புதுப்புது உத்திகளுடன் மக்களைக் கவரும் விதத்தில் இது மலர்ந்துள்ளது. கலையம்சம் இல்லாமலில்லை; ஆனால் பண அம்சமே பிரதானம்.

 நமது சினிமாவில் இசைக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. இதில் வரும் பாடல்கள்  கதையின் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எழுதப்படுகின்றன. இருந்தாலும் சில கவிஞர்கள் சந்தர்ப்பத்தை மீறிய பொதுவான விஷயங்களையும் பாடியிருக்கிறார்கள். நான்கு  ஹிந்திக் கவிஞர்கள்  'காலம்' பற்றிப் பாடிய பாடல்களை நாம் இங்கு பார்க்கலாம்.

திரைக்கவிஞர்களும் காலமும்






1. கவிஞர்  ஶைலேந்த்ரா  
Shailendra
படம் : பூட் பாலிஷ், 1954 Boot Polish

  Note: I have also heard that this song was penned by Saraswati Kumar Deepak.
I couldn't get his picture.





रात गई फिर दिन आता है
इसी तरह आते-जाते ही,
ये सारा जीवन जाता है…

ராத் கயீ ஃபிர் தின் ஆதா ஹை
இஸீ தரஹ் ஆதே-ஜாதே ஹீ
யே சாரா ஜீவன் ஜாதா  ஹை......

இரவு கழிந்து விட்டது; பகல் வருகிறது
இப்படி வந்து-போகும் மயமாகவே
இந்த வாழ்க்கை முழுதும் போய்விடுகிறது......

कितना बड़ा सफ़र दुनिया का,
एक रोता, एक मुस्काता है,
कदम-कदम रखता ही राही
कितनी दूर चला जाता है
एक-एक तिनके-तिनके से
पंछी का घर बन जाता है

रात गई…

கித்னா படா ஸஃபர்  துனியா கா,
ஏக் ரோதா, ஏக் முஸ்காதா ஹை,
கதம்  கதம் ரக்தா  ஹீ ராஹீ
கித்னா தூர் சலா ஜாதா ஹை,
ஏக்- ஏக் தின்கே- தின்கே ஸே
பஞ்சீ கா கர் பன் ஜாதா ஹை.....
ராத் கயீ......

வாழ்க்கைப் பயணம் என்பது தான் எவ்வளவு  பெரியது !
ஒருவன் அழுகிறான், ஒருவன் சிரிக்கிறான் !
பயணி அடி அடியாக எடுத்து வைக்கிறான்
ஆனால் எவ்வளவு தூரம் கடந்து விடுகிறான்!
ஒவ்வொரு குச்சியாக எடுத்து  வைக்கிறது-
பறவையின் கூடு   முடிந்துவிடுகிறது!

कभी अँधेरा, कभी उजाला
फूल खिला, फिर मुरझाता है
खेला बचपन, हँसी जवानी
मगर बुढ़ापा तड़पाता  है
सुख-दुःख का पहिया चलता है,
वही नसीबा कहलाता है

கபீ அந்தேரா கபீ உஜாலா
ஃபூல் கிலா ஃபிர்  முர்ஜாதாஹை
கேலா பச்பன் ஹ (ன்)ஸீ ஜவானி
மகர் புடாபா தட்பாதா   ஹை
ஸுக்-துக் கா பஹியா சல்தா ஹை.
வஹீ நஸீபா கஹலாதா ஹை

சில சமயம் இருள், சில போது வெளிச்சம்,
பூ மலர்கிறது, பின்  வாடி விழுகிறது!
குழந்தையாக விளையாட்டு, இளமையில்  சிரிப்பு,
முதுமையில் தடுமாற்றம்!
இங்கு சுகம்-துக்கம்  ஆகிய சக்கரம்  ஓடுகிறது!
அதையே  விதி என்கின்றனர்!









2.கவிஞர் : ஸாஹிர் லுதியான்வி
Sahir Ludhianvi
படம் : வக்த்  1966  Waqt







आगे भी जाने न तू, पीछे भी जाने न तू
जो भी है, बस यही एक पल है

ஆகே பீ ஜானே ந தூ, பீசே பீ ஜானே ந தூ
ஜோ பீ ஹை, பஸ் யஹீ ஏக் பல் ஹை

உனக்கு எதிர்காலமும் தெரியாது, கடந்த காலமும் தெரியாது
இருப்பதெல்லாம் இந்த க்ஷணம் தான்!

अन्जाने सायों का राहों में डेरा है
अन्देखी बाहों ने हम सबको घेरा है
ये पल उजाला है बाक़ी अंधेरा है
ये पल गँवाना न ये पल ही तेरा है
जीनेवाले सोच ले यही वक़्त है कर ले पूरी आरज़ू
आगे भी…
அஞ்சானே ஸாயோ கா ராஹோ(ன்) மே டேரா ஹை
அன் தேகீ பாஹோ(ன்) நே ஹம் ஸப் கோ கேரா ஹை
யே பல் உஜாலா ஹை, பாகீ அந்தேரா ஹை
யே பல் கவானா ந யே பல் ஹீ தேரா ஹை
ஜீனே வாலே ஸோச் லே யஹீ வக்த் ஹை கர்லே
பூரி ஆர்ஜூ
ஆகே பீ..........


உன்னுடைய பாதையில் இனம் புரியாத நிழல்கள்  அமர்ந்து விட்டன!
கண்ணுக்குத் தெரியாத கரங்கள் நம்மைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கின்றன!
இந்த ஒரு க்ஷணத்தின் மீதுதான் வெளிச்சம் விழுகிறது! மற்றதெல்லாம் இருள் மயம்!
இந்த ஒரு க்ஷணம் தான் உனக்குச் சொந்தம், இதைத் தவற விடாதே !

மக்களே, சிந்தியுங்கள்!  உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்ய இதுதான் சமயம்.

इस पल की जलवों ने महफ़िल संवारी है
इस पल की गर्मी ने धड़कन उभारी है
इस पल के होने से दुनिया हमारी है
ये पल जो देखो तो सदियों पे वारि है
जीनेवाले सोच ले यही वक़्त है कर ले पूरी आरज़ू
आगे भी…

இஸ் பல் கி ஜல்வோ  நே மஹஃபில் ஸ(ன்)வாரீ ஹை
இஸ் பல் கி  கர்மீ  நே தட்கன் உபாரீஹை
இஸ் பல் கே ஹோனே ஸே துனியா ஹமாரீ ஹை
யே பல் ஜோ தேகே தோ  ஸதியோ (ன்) பே வாரீ ஹை
ஜீனேவாலே  ஸோச் லே..........

இந்த க்ஷணத்தின் மஹிமையால் தான்  இந்தக் கூட்டம் பெருமை பெறுகிறது
இந்த க்ஷணத்தின்  வெப்பம் இதயத்துடிப்பை முடுக்குகிறது!
இந்த க்ஷணம் இருப்பதால் தான் உலகம் நமதாகிறது!
பார்த்தால், இந்த க்ஷணம்   நூற்றாண்டுகளைத்   தாண்டுகிறது!
மக்களே சிந்தியுங்கள்.......

इस पल के साए में अपना ठिकाना है
इस पल की आगे की हर शय फ़साना है
कल किसने देखा है कल किसने जाना है
इस पल से पाएगा जो तुझको पाना है
जीनेवाले सोच ले यही वक़्त है कर ले पूरी आरज़ू
आगे भी…

இஸ் பல் கே  ஸாயே மே அப்னா டிகானா ஹை
இஸ் பல் கீ ஆகே  ஹீ  ஹர் ஶாய் ஃபஸானா ஹை
கல் கிஸ்னே  தேகா ஹை, கல் கிஸ்னே ஜானா ஹை
இஸ் பல் ஸே பாயேகா  ஜோ துஜ்கோ பானா ஹை
ஜீனே வாலே  ஸோச் லே........

நமது உறைவிடம் இந்த க்ஷணத்தின் நிழலில்தான் இருக்கிறது!
இந்த க்ஷணத்தை மீறி  நமது ஆசைகள்  (வெறும்) கதைகள் தான்
நாளை யார் கண்டார்கள், நாளை யார் அறிந்தார்கள்
விரும்புவதை யெல்லாம் இந்த க்ஷணத்தில் தான் அடையவேண்டும்
மக்களே  சிந்தியுங்கள்..........








3. கவிஞர் : ஆனந்த் பக்ஷி  Anand Bakshi
படம் : ஆப் கி கஸம்  1974 Aap Ki Kasam
இசை : ஆர்,டி,பர்மன்  R.D.Burman
ராகம்: ஹிந்துஸ்தானி பிஹாக்
பாடியது: கிஷோர் குமார்






ज़िन्दगी के सफ़र में गुज़र जाते हैं जो मकाम
वो फिर नहीं आते, वो फिर नहीं आते

ஜிந்தகீ கே ஸஃபர் மே குஜர் ஜாதே ஹை ஜோ மகாம்
ஓ ஃபிர் நஹீ ஆதே, ஓ ஃபிர் நஹீ ஆதே

வாழ்க்கைப் பயணத்தில் நீ  தாண்டிய இடங்கள்-
அவை மீண்டும் வருவதில்லை, அவை மீண்டும் வருவதில்லை


फूल खिलते हैं, लोग मिलते हैं
फूल खिलते हैं, लोग मिलते हैं मगर
पतझड़ में जो फूल मुरझा जाते हैं
वो बहारों के आने से खिलते नहीं
कुछ लोग एक रोज़ जो बिछड़ जाते हैं
वो हजारों के आने से मिलते नहीं
उम्र भर चाहे कोई पुकारा करे उनका नाम
वो फिर नहीं आते...


ஃபூல் கில்தே ஹை, லோக் மில்தே ஹை
ஃபூல் கில்தேஹை, லோக் மில்தே ஹை மகர்
பத்ஜட் மே ஜோ ஃபூல் முர்ஜாதே ஹை
ஓ பஹாரோ  கே ஆனே ஸே கில்தே நஹி
குச் லோக் ஏக் ரோஜ் ஜோ பிசட்  ஜாதே ஹை
ஓ ஹஜாரோ கே ஆனே ஸே  மில்தே நஹீ
உம்ரு பர் சாஹே கோயீ புகாரா கரே உன்கா நாம்
ஓ ஃபிர் நஹீ ஆதே, ஓ ஃபிர் நஹீ ஆதே

பூக்கள் மலர்கின்றன, மக்கள்  சந்திக்கிறார்கள்
பூக்கள் மலர்கின்றன, மக்கள் சந்திக்கிறார்கள்,  ஆனால்
இலையுதிர் காலத்தில் வாடி விழும் அந்த மலர்- 
அது வசந்தம் வரும்போது மலர்வதில்லை.
உன்னை விட்டு   ஒரு நாள் பிரிந்து போகும் சிலர்-
ஆயிரம் பேர்  வந்தாலும் அவர்கள் வருவதில்லை!
நீ வாழ்நாள் முழுதும் அவர்கள் பெயரைச் சொல்லி அழைத்தாலும்
அவர்கள் திரும்பி வருவதில்லை, திரும்பி வருவதில்லை.



आँख धोखा है, क्या भरोसा है
आँख धोखा है, क्या भरोसा है सुनो
दोस्तों शक दोस्ती का दुश्मन है
अपने दिल में इसे घर बनाने न दो
कल तड़पना पड़े याद में जिनकी
रोक लो रूठ कर उनको जाने न दो
बाद में प्यार के चाहे भेजो हजारों सलाम
वो फिर नहीं आते...

ஆங்க் தோகா ஹை, க்யா பரோஸா ஹை,
ஆங்க் தோகா ஹை, க்யா பரோஸா ஹை, ஸுனோ
தோஸ்தோ (ன்) ஷக் தோஸ்தீகா துஷ்மன் ஹை
அப்னே தில் மே இஸே கர் பனானே ந  தோ
கல் தடப்னா படே யாத் மே ஜின் கீ
ரோக் லோ ரூட் கர் உன்கோ ஜானே ந தோ
பாத் மே ப்யார் கே சாஹே பேஜோ ஹஜாரோ ஸலாம்
ஓ ஃபிர் நஹீ ஆதே................

கண்கள் ஏமாற்றுகின்றன,  எதை நிஜமென்று எப்படி  நம்புவது?
கண்கள் ஏமாற்றுகின்றன, எதை நிஜமென்று எப்படி நம்புவது ? 
நண்பர்களே  கேளுங்கள்-   சந்தேகம் என்பது   நட்பின்  விரோதி
அதற்கு உன் மனதில் இடம் கொடுக்காதே
அவர்களுடைய நினைவு உன்னை நாளை வருத்தினால் (என்ன செய்வாய் ?)
அவர்கள் மனம் பிரிந்து போக விடாதே, அவர்கள் போவதை  நிறுத்து.
பின்னால் நீ  அன்போடு ஆயிரம் முறை  அவர்களை அழைத்தாலும்
அவர்கள் வருவதில்லை, அவர்கள் வருவதில்லை.

सुबहो आती है, रात जाती है
सुबहो आती है, रात जाती है यूँ ही
वक़्त चलता ही रहता है रुकता नहीं
एक पल में ये आगे निकल जाता है
आदमी ठीक से देख पाता नहीं
और परदे पे मंज़र बदल जाता है
एक बार चले जाते हैं जो दिन-रात, सुबहो-शाम
वो फिर नहीं आते...


ஸுபஹ்ஆதீ ஹை, ராத் ஜாதீ ஹை
ஸுபஹ் ஆதீ ஹை, ராத் ஜாதீ ஹை யூ ஹி
வக்த் சல்தா ஹீ ரஹ்தா ஹை ருக்தா நஹீ
ஏக் பல் மே யே ஆகே நிகல் ஜாதா ஹை
ஆத்மீ டீக் ஸே தேக் பாதா நஹீ
ஔர் பர்தே மே  மஞ்சர் பதல் ஜாதா ஹை
ஏக் பார் சலே ஜாதே ஹை ஜோ தின் -ராத், ஸுபஹ் ஶாம்
ஓ ஃபிர் நஹி ஆதே.......

காலை வருகிறது, இரவு கழிந்து போகிறது
காலை வருகிறது, இரவு கழிந்து போகிறது- இப்படியே
காலம் சென்றுகொண்டே இருக்கிறது, நிற்பதில்லை.
ஓரு க்ஷணத்தில் இது மேலே நகர்ந்துபோய் விடுகிறது!
மனிதன் இதை சரியாக உணர்ந்துகொள்வதில்லை!
திரையில் காட்சி மாறிக்கொண்டே  இருக்கிறது!
ஒரு முறை கழிந்துவிட்ட அந்த பகல்-இரவு.  காலை-மாலை-
அவை திரும்புவதில்லை, அவை திரும்புவதில்லை!



pexels.com Sunset






4, கவிஞர் : குல்ஜார்   Gulzar
 படம்: கோல்மால்  1979 Golmaal
photo: lyricsmasti.com
இசை : ஆர்.டி.பர்மன்  R.D.Burman
ராகம் ; ஹிந்துஸ்தானி கீர்வாணி
பாடியது: கிஷோர்  குமார்






आने वाला पल जाने वाला है
हो सके तो इस में
ज़िंदगी बिता दो
पल जो ये जाने वाला है
ஆனே வாலா பல் ஜானே வாலா ஹை
ஹோ ஸகே தோ இஸ்மே
ஜிந்தகீ  பிதா தோ
பல் ஜோ யே ஜானே வாலா ஹை

வரப்போகும் இந்த க்ஷணம், மறைந்துவிடப் போகிறது!
முடிந்தால் இதில் உன் வாழ்க்கையை நடத்து!
ஏனெனில் இந்த க்ஷணம் மறைந்துவிடும்!

एक बार यूँ मिली, मासूम सी कली (2)
खिलते हुए कहा    खुश पाश मैं चली

देखा तो यहीं हैं
ढूँढा तो नहीं हैं
पल जो ये जाने वाला हैं
ஏக் பார் யூ மிலி, மாஸூம் ஸீ கலி
கில்தே ஹுயே கஹா , குஷ் பாஷ் மை சலீ
தேகா தோ யஹீ ஹை, 
டூண்டா தோ நஹீ ஹை
பல் ஜோ யே ஜானா வாலா ஹை

ஒரு நாள் ஒரு தூய மலரைப் பார்த்தேன்
அது மலர்ந்தவாறே என்னிடம் சொல்லியது-
 நான்  மகிழ்ச்சியாகப் போகிறேன்!
பார்த்தால் இங்கேயே இருக்கிறது,
தேடினால் காணவில்லை!
இந்த க்ஷணமும் போய்விடும்!

एक बार वक़्त से, लमहा गिरा कहीं (2)
वहाँ दास्तां मिली     लमहा कहीं नहीं
थोड़ा सा हँसाके
थोड़ा सा रुलाके
पल ये भी जाने वाला हैं

ஏக் பார் வக்த்  ஸே, லம்ஹா  கிரா கஹீ
வஹா தாஸ்தா மிலீ, லம்ஹா கஹீ நஹீ
தோடா ஸா ஹஸாகே
தோடா ஸா  ருலாகே
பல் யே பி ஜானே வாலா ஹை

ஒரு முறை- காலத்தின் ஒரு துளி எங்கோ விழுந்தது
அங்கு கிடைத்தது ஒரு  சரித்திரம்- அந்த மணித்துளி எங்கும் இல்லை!
சிறிது சிரிக்கவிட்டு,
சிறிது அழவைத்து-
இந்த க்ஷணமும் போகத்தான் போகிறது !





ஒரே  விஷயத்தை எப்படியெல்லாம் பாடியிருக்கிறார்கள் ! என்ன  கற்பனை வளம் ! எத்தகைய தத்துவக் கருத்துக்கள் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையச் செய்திருக்கிறார்கள் ! 
பாண்டித்யம் புத்தகத்தில்  முடங்கிவிடுகிறது ; பாடலோ பாமரனைச் சென்றடைகிறது ! 
 இதையெல்லாம் வெறும் சினிமா பாட்டு என்று ஒதுக்கிவிட முடியுமா?
நாம் சினிமாவில் பார்ப்பதால் கதையுடன் தொடர்புபடுத்தியே  பார்க்கிறோம்; பாடலின் மெட்டும், பாடுவோர் குரலும் நமக்குப் பிடித்தாலும், ஆட்டத்திலேயே நாட்டம் இருப்பதால், கருத்தை ஊன்றிக் கவனிப்பதில்லை. படம் பார்க்காமல் பாடலை மட்டும் கேட்டால்தான்  கவிதையின்  மணம் தெரியும்!
 உயர்ந்த பாடல்கள் இப்படித்தான் காலம் கடந்து   நிற்கின்றன. 


pxhere.com

..Note :1.I have not attempted a literary translation of these great songs, which are fine poems, but only tried to convey their meaning. Pardon me for the imperfect language.
2. All these songs are hit songs with wonderful music. Time has only enhanced their value. Please enjoy them on YouTube.