69. இரு புத்தகங்களின் கதை-2
Sri M
டைரி எழுதியதன் நோக்கம்
மஹேந்த்ர நாதரின் அபூர்வ மன நிலை அவர் டைரி எழுதியதிலிருந்து தெரியவருகிறது. அவர் விடுமுறை நாட்களில்தான் ஸ்ரீ ராமக்ருஷ்ணரைக்காண வரமுடிந்தது. பிற நாட்களிலும் அவருடன் இருப்பது போன்ற ஒரு அனுபவத்தைப் பெறுவதற்காக, குருதேவரைச் சந்தித்தபோது நிகழ்ந்தவற்றை எழுதத்தொடங்கினார். இதைத் தனக்கான ஆத்ம சாதனையாகக் கருதினார். ஸ்ரீ ராமக்ருஷ்ணரைத் தவிர இந்த விஷயம் வேறு யாருக்கும் அப்போது தெரியாது..
ம இதைப்பற்றிச் சொன்னார்:
I would carry the nectar-like words of Thakur in my memory and would record them briefly in my diary on returning home. The book written out from these notes appeared much later. On every scene I had meditated a thousand times. Therefore I could recreate, relive those moments by Thakur's grace.
ஒரு நாள் நிகழ்ச்சியைப் பற்றி எழுத பல சமயங்களில் மூன்று நாள் கூட ஆகும். அடுத்த சந்திப்பு வரை இதையே திரும்பத் திரும்பப் படித்து, த்யானமும் செய்வார். அதனால் எப்போதும் குருதேவருடன் இருக்கும் உணர்வே நிறைந்திருக்கும் !
தெய்வ வாக்கு
தெய்வ வாக்கு
ஸ்ரீ ராமக்ருஷ்ணர் எந்தப் புத்தகமும் வைத்திருக்கவில்லை! 'இதைப்பற்றித்தான் இன்று பேசுவது' போன்ற தீர்மானமும் இல்லை ! நமது பழைய கால குருமார்களைப்போல அவரிடம் யாரும், எப்பொழுதும் வரலாம். ஆனால் அவர் பேசுவது அன்னை காளி அனுமதித்தால் மட்டுமே நடக்கும்! சிலரிடம் அவரால் பேசவே முடியாது . 'அன்னை என்னைத் தடுத்து விட்டாள் ' என்பார்.
அதனால், குருதேவர் பேசினாரென்றால், அது தெய்வீக வாக்காகவே இருக்கும். இதைப்பற்றி ம ஒருமுறை சொன்னார்:
Thakur used to speak from the summit. His realm was beyond the earth, in the domain where the world of God and the world of man meet.. Thakur saw the inside and the outside both....Thakur's insight was always rooted in that depth. That is the reason why the speech of Thakur, the words of Thakur are so attractive. That is where the charm of the Kathamrita lies.
வேறொரு முறை சொன்னார்:
...while talking, Thakur would give expression to a living feeling. I have tried my best to convey the same - by preserving the very words he spoke as far as possible. The feeling has been given primary importance, words or the language only secondary.
இதை நாம் இன்றும் உணர முடிகிறது ! கதாம்ருதத்தைப் படிக்கும் போது , நாம் அங்கு ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் சன்னிதியிலேயே அமர்ந்து, அவர் பேசுவதைக் கேட்பதாகவே உணர்கிறோம் ! இது ஏதோ ஒரு 130 வருஷங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியாகத் தோன்றுவதில்லை! சத்திய வார்த்தையின் மஹிமை இது! இந்த உலகத்தில் வேறு எந்தப் புத்தகம் படித்தாலும் வராத ஒரு பெரும் நிலை இது! இதை ஒவ்வொருவரும் அனுபவத்தில் உணரவேண்டும்.
குருதேவர் மலரடி
இவ்வாறு 35 ஆண்டுகள் ஸ்ரீ ம தன் டைரிக்குறிப்புகள் மீது இடைவிடாது த்யானம் செய்து 'கதாம்ருதம்" புத்தகத்தை வெளியிட்டார். முதல் நான்கு பாகங்கள் 1902- 1910க்கு இடைபட்ட ஆண்டுகளில் வெளிவந்தன. கடைசியான ஐந்தாவது பாகம் 1932ல் தான் வெளிவந்தது. அந்த வருஷம் ஜூன் மாதம் 3ம் தேதி இரவில் சகிக்க இயலாத நரம்பு வலியுடன் , ஹரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில் கடைசி ப்ரூஃப் ஃபாரங்களைத் திருத்தி முடித்தார். 4ம்தேதி அதிகாலை ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் மலரடி சேர்ந்தார்! அவர் பேசிய கடைசி வார்த்தைகள் :
"Gurudeva, Ma! Kole toole na-o" = Master, O Holy Mother, take me up in your lap .
எத்தகைய பேறு பெற்ற புண்ணிய புருஷர் !
கதாம்ருதத்தின் பெருமை
கதாம்ருதம் தேதிவாரியாக [ in chronological order ]வெளியிடப் படவில்லை, முதலில் சிறுசிறு பகுதிகளே வங்காள மொழியிலும், ம வே எழுதிய ஆங்கில மூலத்திலும் வெளிவந்தன. ஸ்ரீ ராமக்ருஷ்ணருடன் பழகி, அவருடைய பேச்சைக் கேட்டவர்களுக்கு ஸ்ரீ மவின் எழுத்துக்கள் அளவற்ற ஆச்சரியத்தை அளித்தன. 1889 ஃபிப்ரவரி 7ம்தேதி தன் டைரியிலிருந்து சில குறிப்புக்களை சாரதா தேவியாருக்கும் விவேகானந்தர் மற்றும் சில சீடர்களுக்கும் படித்துக் காட்டினார். அன்று மவுனத்தில் இருந்த நரேந்திரர் ஒரு சீட்டில் எழுதினார் :
"Thanks 100000. Master, you have hit Ramakristo in the right point. Few alas, few understand him !- Yours Narendra ".
ஆனால், சரியான அச்சுப் பதிப்பு 1897ல் தான் வந்தது. இதைப் படித்த விவேகானந்தர் எழுதினார்:
" Many many thanks for your second leaflet. It is indeed wonderful. The move is quite original....never was the life of a great teacher brought before the public untarnished by the writer's mind, as you are doing. ...
I cannot express in adequate terms how I have enjoyed them. I am really in a transport when I read them......
P.S. The Socratic dialogues are Plato all over; you are entirely hidden.Moreover, the dramatic part is infinitely beautiful. "
The highest praise came from Holy Mother herself. In a letter on 4 July 1897, she wrote:
" Dear child - Whatever you had heard from Him is nothing but the Truth...At one time it was He who had placed those words in your custody. And it is He who is now bringing them to the light of the day according to the needs of the times. Know it for certain that unless those words are brought out, man will not have his consciousness awakened. All the words of His that you have with you- every one of them is true. One day when you read them out to me I felt as if it was He who was speaking."
தாரக் [பின்னாளில் ஸ்வாமி சிவானந்தர் ( மஹாபுருஷ் மஹராஜ் )]. காளி (அபேதானந்தர் ), ராக்கால் (ப்ரஹ்மானந்தர் ) போன்றவர்களும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் உரைகளை குறிப்பெடுக்க முயன்றனர். ஆனால் குருதேவர் அதைத் தடைசெய்தார். ஸ்வாமி சிவானந்தரே ஒருமுறை சொன்னார்:
Whenever there was an interesting talk, the Master would call M if he was not in the room, and then draw his attention to the holy words spoken. We did not know then why the Master did so. Now we can realise that this action of the Master had an important significance, for it was reserved for M to give to the world at large the sayings of the Master.
மீண்டும் கிடைத்தது !
இவ்வளவு இருந்தும் இதன் ஒரு பகுதி நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும்! அது கிடைத்ததும் ஒரு அற்புத நிகழ்ச்சியே!
1924ம் வருஷம் ஜனவரி 15ம்தேதி ம ட்ராம் வண்டியிலிருந்து இறங்கும்போது எஸ்பிளனேடு ஸ்டாப்பில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வண்டியிலேயே விட்டுவிட்டார். வீட்டுக்கு வந்ததும் தான் இது தெரியவந்தது. உடனே அவர் காலையில் தரிசனத்திற்குச் சென்ற தான்தானியா காளிகோயிலில் மீண்டும் சென்று தேடினார், நோட்டு கிடைக்கவில்லை. பிறகு தான் கிழித்துப் போட்டிருந்த ட்ராம் டிக்கட்டின் துண்டுகளைத் தேடி எடுத்து அவற்றை ஒட்டி டிக்கட் நம்பரைக் கண்டுபிடித்தார். அதைக்கொண்டு ட்ராம் தலைமை ஆஃபிஸில் கொடுக்க, அதை வைத்து அவர்கள் அந்த டிக்கட் வழங்கிய கண்டக்டரை அடையாளம் கண்டனர். அவர். அந்த நோட்டுப்புத்தகத்தைப் பார்த்து எடுத்து தனது மேலதிகாரியிடம் கொடுத்திருந்தார். அந்த மேலதிகாரி ஒரு ராமக்ருஷ்ண பக்தர்! "ஜயராம்பாடி" ( அன்னை சாரதாதேவியாரின் ஊர்) என்று எழுதியிருந்ததைப் பார்த்து அதைப் பத்திரமாக வைத்திருந்தார்! இவ்விதம் இரண்டு நாட்களுக்குப் பிறகு காணாமல் போன டைரி நோட்டு திரும்பக் கிடைத்தது! இதைப்பற்றி ம சொன்னது:
...when the Kathamrita was lost, oh , what a catastrophe! 'Bhakta-Bhagavata-Bhagavan are one' : this is his saying. His Kathamrita, His Bhagavata had been lost. So very eager I had been for a single word of his , and this lost book contained so many of his words! For all these days I have been thinking of this Bhagavata, which I worshipped, always kept with me and so very closely lived with. God exists also as Shabda Brahman. So Bhagavata and Bhagavan are one- Bhagavata means his Kathamrita.
கதாம்ருதம் புத்தகமாக வந்தபோது அதன் சமர்ப்பண வாசகத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகாகீதத்தில் "கதாம்ருதம்" என்று வரும் ஒரு ஶ்லோகத்தையே எடுத்தாண்டிருந்தார்.
தவகதாம்ருதம் தப்த ஜீவனம் கவிபிரீடிதம் கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்கலம் ஸ்ரீமதாததம் புவிக்ருணன்தி தே பூரிதா ஜனா:
சீடர்கள் பலவிதம் !
ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் அத்யந்த பக்தர்களில்- சீடர்களில் ம துறவியாவதை ஸ்ரீ ராமக்ருஷ்ணர் அனுமதிக்கவில்லை. துறவியான இளைஞர்களில் விவேகானதர் உலக அரங்கில் புகழடைந்தார். அவர் செய்த ப்ரசங்கங்களும் பெரும்புகழ் பெற்றன. ஆனால் விவேகானந்தர் ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் வாழ்க்கை பற்றி அதிகம் பேசவில்லை, அவர் வேதாந்தக் கருத்துக்களைத்தான் பரப்பினார். இந்தியாவில் பேசும் பொழுது சில சமூக விஷயங்களைப் பற்றியும் பேசினார். தனக்கே உரிய விளக்கங்களை அளித்தார். கூர்ந்து கவனித்தால், இது ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் வழியிலிருந்து மாறுபட்டது என்பது தெரியும். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் வேதாந்த விசாரத்திற்கோ சமூக சர்ச்சைகளுக்கோ அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை; ஆன்மீக சாதனையையே வற்புறுத்தினார். விவேகானந்தரின் எழுத்துக்களில் ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் உபதேசங்கள் நேரடியாக இல்லை! [The works of Swami Vivekananda are an intellectual treat. The Gospel of Sri Ramakrishna embodies spiritual experience.The former delights you;the latter transforms you.]
இன்னொரு துறவிச் சீடரான சாரதானந்தர் ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதினார்.. இது ஒரு பெரிய புத்தகம். வங்காள மொழியில் 1909-19 ம் ஆண்டுகளில் வெளிவந்தது., இதன் ஆங்கிலப் பதிப்பு Sri Ramakrishna The Great Master 1952ல் வெளிவந்தது. இந்தப் புத்தகத்திற்காக சாரதானந்தர் குருதேவருடன் தொடர்புகொண்ட பலரையும் கண்டு , பேசி விஷயம் திரட்டினார். ஆனாலும், பல இடங்களில் தன்னுடைய வ்யாக்யானங்களையும் Interpretations தருகிறார்!
தனித்து நிற்கும் ம
ம இவர்கள் இருவரிலுமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்! இவர் கதாம்ருதத்தில் எழுதியது அத்தனையும் குருதேவரிடமே நேரில் கண்டதும் கேட்டதும் ஆகும். ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் சொற்களுக்கு விளக்கமோ வ்யாக்யானமோ- தன் சொந்தக் கருத்தைப் புகுத்தவில்லை! தன் வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்ச்சிகளையும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரே சொல்லியிருக்கிறார். ஆகவே ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் வாழ்வுக்கும் வாக்கிற்கும் ஆதாரமாக, முற்றிலும் நம்பத்தகுந்த ஆதாரமான நூலாக இருப்பது ம எழுதிய கதாம்ருதம் ஒன்றே, எழுதினார் என்பதைவிட, "பதிவு செய்தார் " என்று சொல்வதே பொருத்தமானது!
ம வின் டைரியிலிருந்து ஒரு பக்கம்.
துறவிகளும் இல்லறச் சீடர்களும்
ம வின் டைரியிலிருந்து ஒரு பக்கம்.
துறவிகளும் இல்லறச் சீடர்களும்
ராமக்ருஷ்ண மடம் துறவிகளால் நடத்தப் படுவது. அதனால் அவர்கள் இல்லறச் சீடரான ம வுக்கு உரிய இடத்தைத் தரவில்லை என்றே தோன்றுகிறது.
விவேகானந்தரின் எழுத்துக்களை நீக்கிவிட்டுப் பாருங்கள்: ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் பெருமை சிறிதும் மாறுபடாது,
கதாம்ருதத்தை நீக்கிவிட்டுப் பாருங்கள் ! ஸ்ரீ ராமக்ருஷ்ணரைப் பற்றி ஆதாரபூர்வமாக எதுவும் தெரியாது!
வங்காள மொழியில் கதாம்ருதம்- 5 பாகங்கள்
ஸ்ரீ ராமக்ருஷ்ணர் மடங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரைப்பற்றி அறிய கதாம்ருதத்தைத் தவிர சிறந்த சாதனம் எதுவும் இல்லை.
கதாம்ருதத்தைப் போன்ற இன்னொரு புத்தகமும் ஆன்மீக உலகில் இல்லை !
Note:
ஸ்ரீ மவின் வரலாறும் கதாம்ருதத்தின் தொடர்பான விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. வெளியிட்டவர்கள்:Sri Ma Trust, Sector 18-B, Chandigarh. First edition 1988
2, ஸ்ரீ ம ஸ்ரீ ராமக்ருஷ்ணரைப்பற்றி மட்டும் பேசுவதையே தன் ஒரே பணியாகச் செய்துவந்தார். ஆசிரியர் பணியில் இருந்தபோது ஓய்வு நேரத்தில் இதைச் செய்தார். 1905ல் ஓய்வுபெற்று தானே பள்ளிக்கூடம் நடத்தினார். அடுத்த 27 வருஷங்களில் குருதேவரின் வாழ்க்கையையும் வாக்கையும் விளக்குவதையே தன் ஒரே தொழிலாகக் கொண்டார். அவர் பள்ளியில் கதாம்ருதம் பாடமாக வைக்கப்பட்டது! கதாம்ருதத்தை எழுதியவர் என்பதுடன் அதை ஆதாரமாகக் கொண்டு குருதேவரின் வாழ்க்கையையும் 1897 முதல் விளக்கிவந்தார் என்பதும் அவரது முக்கிய அம்சமாகும். இதைப் பற்றிய விரிவான புத்தகம் 16 பாகங்களாக வந்திருக்கிறது..
வ்யாசர் பாகவத்தை எழுதினார். நாரதரோ உலகெங்கிலும் சஞ்சரித்து பகவன் நாமாவையும் புகழையும் பரப்பினார். ம இந்த இரண்டு பணிகளையும் தான் ஒருவராகவே செய்தார் !
3. ஸ்ரீ ராமக்ருஷ்ணர் 1886ல் நோயினால் மிக வருந்திய நிலையில் ஒரு நாள் மவை புரி ஜகன்னாத்திற்கு செல்லுமாறு பணித்தார். அங்கு சென்று ஸ்வாமியை ஆலிங்கனம் செய்யவேண்டும் என்றும் சொன்னார். அதன்படி அங்கு சென்ற ம, அங்கிருந்த பூசாரிகளுக்கு எப்படியோ போக்குக்காட்டிவிட்டு , ஸ்வாமி விக்ரஹத்தை ஆலிங்கனம் செய்துகொண்டார். திரும்பி வந்ததும் இதைக்கேட்டுத் தெரிந்துகொண்ட ஸ்ரீ ராமக்ருஷ்ணர், மவைக் கட்டித் தழுவிக்கொண்டார்! தான் ஜகன்னாதரையே தழுவியதாகவும் அறிவித்தார்! இதிலிருந்து ம வின் உயர்ந்த நிலையை நாம் ஊகிக்கலாம்!
No comments:
Post a Comment