71. இரு புத்தகங்களின் கதை-4
ஊனான அகந்தை ஒழித் தகமே
தானாவொளிர் தற்பர சிற்சொருபம்
மோனானு பவங்கிளர் முத்தியருள்
கோனாவளர் சற்குருதாள் பணிவாம்.
-ஸ்ரீ முருகனார்.
ஞானிகளுக்குள் பகவான் ஸ்ரீ ரமணர் சற்று வித்தியாசமானவர். 54 வருஷங்கள் அருணாசலத்தை விட்டு ஒருகணமும் நீங்காமல் அங்கேயே இருந்தார். ஆனால் யாரிடமும் தானே வலிந்து உபதேசம் என்று செய்ததில்லை. யாரையும் தன் வழிக்கு வா என்று சொன்னதில்லை. பொதுவான உபதேசமும் எதுவும் செய்ததில்லை.
இருந்தாலும் தெய்வ சங்கல்பம் வேறுவிதமாக இருந்தது! அவர் திருவண்ணாமலைக்கு வந்த நாளிலிருந்தே பழுத்த ஞானியாக இருந்தார். சாதனை, தபஸ் என்று எதுவும் செய்ததில்லை. ப்ரம்மானுபவத்தில் திளைத்திருந்தார்; எதுவும் பேசத் தோன்றவில்லை, பேசும் சக்தியையே கொஞ்ச காலம் இழந்திருந்தார்! ஆனால் சில புண்யசாலிகள் அப்போதே அவர் மஹிமையைத் தெரிந்துகொண்டார்கள். பெயரே தெரியாத அந்த நாட்களில் அவரை "ப்ராம்மண சுவாமி " என்றே அழைத்தார்கள். திருவிழா நாட்களில் அவரைக் காணவும் கூட்டம் வந்துவிடும்.
விசார ஸங்க்ரஹம்
இந்த நிலையில் அங்கு ஓவர்சீயராக இருந்த ஒரு அன்பர், வேதாந்தம் பயில்பவர், கம்பீரம் சேஷய்யர் என்பவர் பல சந்தேகங்களுடன் வந்தார். அந்த சமயம் பகவான் மவுனத்தில் இருந்தார். அதனால் அவர் எழுதிக்காட்டிய கேள்விகளுக்கு பகவான் விடை யெழுதினார். இவற்றை சேஷய்யர் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். இது சுமார் 1901 வாக்கில் நடந்தது. இதுதான் பகவான் முதலில் செய்த உபதேசம். சேஷய்யருடைய மறைவுக்குப்பின் இந்த நோட்டுப் புத்தகம் அவருடைய சகோதரரிடமிருந்து பெறப்பட்டு சாது நடனானந்தர் என்ற அடியவர் அதை கட்டுரை வடிவில் அமைத்தார். 'விசார சங்க்ரஹம் " என்ற பெயரில் இது வெளியானது. இதில் பகவானது நேர் உபதேசத்திலிருந்து மாறுபட்ட வேறுபல விஷயங்களும் வருகின்றன. அந்த சாதகர் அவற்றில் பரிச்சயமுடையவராக இருந்தார், அதனால் அதற்கேற்ப பகவானும் விடையளித்தார். நம் பகவானைப் பொறுத்தவரை இந்த விஷயத்தை நன்றாக நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.
விசார ஸங்க்ரஹம்
இந்த நிலையில் அங்கு ஓவர்சீயராக இருந்த ஒரு அன்பர், வேதாந்தம் பயில்பவர், கம்பீரம் சேஷய்யர் என்பவர் பல சந்தேகங்களுடன் வந்தார். அந்த சமயம் பகவான் மவுனத்தில் இருந்தார். அதனால் அவர் எழுதிக்காட்டிய கேள்விகளுக்கு பகவான் விடை யெழுதினார். இவற்றை சேஷய்யர் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். இது சுமார் 1901 வாக்கில் நடந்தது. இதுதான் பகவான் முதலில் செய்த உபதேசம். சேஷய்யருடைய மறைவுக்குப்பின் இந்த நோட்டுப் புத்தகம் அவருடைய சகோதரரிடமிருந்து பெறப்பட்டு சாது நடனானந்தர் என்ற அடியவர் அதை கட்டுரை வடிவில் அமைத்தார். 'விசார சங்க்ரஹம் " என்ற பெயரில் இது வெளியானது. இதில் பகவானது நேர் உபதேசத்திலிருந்து மாறுபட்ட வேறுபல விஷயங்களும் வருகின்றன. அந்த சாதகர் அவற்றில் பரிச்சயமுடையவராக இருந்தார், அதனால் அதற்கேற்ப பகவானும் விடையளித்தார். நம் பகவானைப் பொறுத்தவரை இந்த விஷயத்தை நன்றாக நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.
பகவானுடைய உபதேசம் என்றும் ஒன்றுதான். 54 வருஷங்களில் அதில் எந்த மாற்றமோ, வளர்ச்சியோ இல்லை.அதை சுருக்கமாக அவர் வாக்கிலேயே காணலாம்.
ஆத்ம சொரூபத்தை அடைவதற்கான மார்க்கங்கள் பலவாயினும் முடிவு ஒன்றே. ஏனெனில் கர்த்தாவை ஆச்ரயித்தே சாதனைகள் யாவும் உள்ளன.கர்த்தாவானவன் தன்னை யார் என்று அறிதலே உயர்ந்த சாதனோபாயம். ஆதலால் யார் எந்த மார்கத்தை அனுஷ்டித்தாலும் பயன் சொரூபப் பிராப்தியே .
இதையே வேறுவிதமாகச் சொன்னால், கர்மாவைச் செய்யும் கர்த்தா இருக்கிறான். இவன் யார்? உபாசனையைச் செய்பவன் உபாசகன். இவன் யார்? யோகம் செய்பவன் யோகி. இவன் யார்? [ யோகம் என்றால் சேருதல். பிரிந்ததுதான் ( வியோகம் ) சேரும்.. யார், எதிலிருந்து பிரிந்திருக்கிறார்கள்? ] விசார மார்கத்தில் ஈடுபடும் விசாரிப்பவன் யார்? இப்படி ஒவ்வொரு நிலையிலும் வழியிலும் கர்த்தாவை யாரென அறிந்து கொண்டால், பலன் சொரூபப் பிராப்தியே. இதுதான் உண்மை நிலை.
ஐன்ஸ்டீன் வந்தால் !
ஆனால் பகவானிடம் வந்தவர்கள் பகவான் என்ன வழியைச் சொல்கிறார் என்று கேட்கவில்லை! ஒரு வகையினர் தாங்கள் செய்வதைச் சொல்வார்கள்,அதில் சந்தேகங்களைக் கேட்பார்கள். பகவானும் அவர்களுக்குத் தகுந்தமாதிரியே பதில் சொல்லுவார். இறுதியில் தன் உண்மை நிலையில் கொண்டு சேர்ப்பதாகவே அவர் பதில் இருக்கும். இன்னொரு வகையினர் தாம் கற்றதை வைத்து கேள்விகேட்பார்கள். அது வெறும் வரட்டு வாதமாக இருந்தால் பகவான் பதில் சொல்ல மாட்டார். சாதனையில் கஷ்டம் என்று வந்தால் அதற்குதான் பதில்சொல்வார். எந்த சாதனையையும் குறைத்துச் சொல்லமாட்டார். ஆனால் எல்லா சாதனைக்கும் முடிவு ஆத்ம விசாரமே என்று விளக்குவார்.
ஐன்ஸ்டீன் வந்தால் !
ஆனால் பகவானிடம் வந்தவர்கள் பகவான் என்ன வழியைச் சொல்கிறார் என்று கேட்கவில்லை! ஒரு வகையினர் தாங்கள் செய்வதைச் சொல்வார்கள்,அதில் சந்தேகங்களைக் கேட்பார்கள். பகவானும் அவர்களுக்குத் தகுந்தமாதிரியே பதில் சொல்லுவார். இறுதியில் தன் உண்மை நிலையில் கொண்டு சேர்ப்பதாகவே அவர் பதில் இருக்கும். இன்னொரு வகையினர் தாம் கற்றதை வைத்து கேள்விகேட்பார்கள். அது வெறும் வரட்டு வாதமாக இருந்தால் பகவான் பதில் சொல்ல மாட்டார். சாதனையில் கஷ்டம் என்று வந்தால் அதற்குதான் பதில்சொல்வார். எந்த சாதனையையும் குறைத்துச் சொல்லமாட்டார். ஆனால் எல்லா சாதனைக்கும் முடிவு ஆத்ம விசாரமே என்று விளக்குவார்.
ரமண சாஹித்யத்தைப் படித்தால் ஒரு உண்மை விளங்குகிறது. ரமண பகவானிடம் வந்தவர்கள் ஏதோ ஒரு சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தத்தம் சம்பிரதாயக் கண்கொண்டே பகவானையும் பார்த்தார்கள். வெகு சிலர்தான் பகவானின் உண்மை உபதேசத்தை உணர்ந்து கொண்டார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு பள்ளிக்கு ஐன்ஸ்டீன்
ஸர். ஸி.வி.ராமன் போன்ற பெரிய விஞ்ஞானி விஜயம் செய்தால், மாணவர்கள் அவரிடம் " ஐயா, நீங்கள் கண்டுபிடித்ததை எங்களுக்கு புரியும்படி விளக்கிச் சொல்லவேண்டும் " என்று கேட்கவேண்டும். அதைவிட்டு, " எங்களுக்கு டீச்சர் இந்த ஹோம் வர்க் கொடுத்தார்; அது விளங்கவில்லை. நீங்கள் இதை சொல்லித்தர முடியுமா ?" என்று கேட்பதைப் போன்றது இது. [இது சாது ஓம் சொன்ன உதாரணம். ]
சிவப்ரகாசமானார் !
சேஷய்யருக்குப்பின், அதே காலகட்டத்தில் வந்தவர் சிவப்ரகாசம் பிள்ளை என்ற அன்பர். இவர் கல்லூரியில் ஃபிலாஸஃபி படித்திருந்தார். ஆனால் அவர் படித்த மேலை நாட்டு தத்துவத்தில் அவர் மனதிலிருந்த ஒரு கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. நான் யார் என்பதே அந்தக் கேள்வி. இத்துடன் அவர் பகவானிடம் வந்தார். அவர் எழுதிக்கேட்ட வினாக்களுக்கு பகவான் அளித்த விடையைத் தொகுத்து கட்டுரை வடிவில் எழுதி பகவானிடமே காட்டித் திருத்திக்கொண்டார். இதுவே பகவானின் நிஜ உபதேசத்தைத் தாங்கி நிற்கும் " நான் யார் " என்ற சிறிய பிரசுரம். பலவருஷங்களுக்குப் பிறகு சிவப்ரகாசம் பிள்ளை காலமானசெய்தி கேட்டு, பகவான் " சிவப்ரகாசம் சிவப்ரகாசமானார் " என்று சொன்னார். இதிலிருந்து அவருடைய உயர்ந்த ஆத்மீக நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
இதன் பிறகு, ஒரு நாள் பகவானுக்கும் அன்பர்களுக்குமிடையே நடந்த உரையாடலை சாது நடனானந்தர் தொகுத்து பகவானிடம் காட்டினார். பின்னர் அது 'உபதேச மஞ்சரி' என்ற பெயரில் வெளிவந்தது.
அருணாசல ஸ்துதி பஞ்சகம்
இதன் பிறகு பகவான் அருணாசலத்தின் மீது அவ்வப்போது ஸ்தோத்திரப் பாடல்கள் எழுதினார். இவையும் பெரும்பாலும் அன்பர்களின் வேண்டுகோளின்படியே எழுதப்பட்டன. ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் ஒரு சரித்திரம் இருக்கிறது.
அடியவர்கள் டவுனில் பிக்ஷை எடுத்துவந்த அந்த நாட்களில் அவர்கள் பாடிச்செல்வதற்கு வசதியாக ஒரு பாடல் எழுதும்படிக் கேட்டனர். பல பெரியவர்கள் எழுதிய பாடல்கள் இருக்க நாம் வேறு ஏன் புதிதாக எழுதவேண்டுமென்று இருந்தார். ஆனால் ஒரு நாள் கிரிப்ரதக்ஷிணத்தின்போது பாடல் அருவியாய்வர, உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு நீண்ட பாடலை எழுதினார் . அதுதான " அருணாசலசிவ" என்ற அவருடைய முத்திரை மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை' என்னும் உயர்ந்த ஸ்துதியாகும். இவை அனைத்தும் அருணாசல ஸ்துதி பஞ்சகம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
முருகனார் பகவானிடம் வந்தபோது இருந்த ஸ்ரீ ரமண சாஹித்யம் இவ்வளவுதான்.
முருகனார் தூண்டிய தெய்வீக இலக்கியம்
உபதேச உந்தியார்
பகவானின் அருளால் முருகனாரின் கவிதையூற்று பொங்கிப் பெருகலாயிற்று. முருகனார் முதலில் சந்நிதிமுறை நூலில் வந்த பாடல்களை எழுதிவந்தார். அதில் ஒருபகுதியில்- திருவுந்தியார்- பகவானையே பல அவதாரங்களாகவும் கருதிப் பாடினார். இங்கு சிவபெருமானுடைய லீலைகளை வர்ணிக்கும் பகுதியில் தாருகவனத்து ரிஷிகள் கர்மகாண்டிகளாகி ( பூர்வமீமாம்சை) பகவானைப் பழித்து கர்மத்தையே பற்றிய வன்னெஞ்சத்தர் ஆயினர்; பகவானிடம் தங்கள் திறமை பலிக்கவில்லை என்று கண்டு அவரைச் சரணடைந்தனர். பகவான் அவர்களுக்கு உபதேசம் செய்தார் என்று வருகிறது. இந்த இடத்தில், பகவானது உபதேசம் வரும் இடம் வரை எழுதிய முருகனார். சிவபிரானின் உபதேசத்தை நான் எப்படி எழுதுவது, இதை பகவானேதான் எழுதவேண்டும் என்று கருதி, பேப்பரையும் பென்சிலையும் பகவானிடம் வைத்துவிட்டார். பகவானும் சிவபெருமானின் உபதேசத்தை 29 பாடல்களில் எழுதினார்.
தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர்
பூருவ கன்மத்தா லுந்தீபற
போக்கறை போயின ருந்தீபற.
கன்மத்தை யன்றிக் கடவு ளிலையென்னும்
வன்மத்த ராயின ருந்தீபற
வஞ்சச் செருக்கினா லுந்தீபற ..............
கன்ம பலந்தருங் கர்த்தற் பழித்துச் செய்
கன்ம பலங்கண்டா ருந்தீபற
கர்வ மகன்றன ருந்தீபற
காத்தரு ளென்று கரையக் கருணைக்கண்
சேர்த்தருள் செய்தன நுந்தீபற
சிவனுப தேசமி துந்தீபற.
என்று முருகனார் எழுதினார். பின்னர் ஸ்ரீ பகவான்
கன்மம் பயன் றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதாலுந்தீபற.
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்திபற
வீடு தரலிலை யுந்தீபற
எனத் தொடங்கி,
தனாதியல் யாதெனத் தான்றெரி கிற்பின்
அனாதி யனந்தசத் துந்தீபற
அகண்ட சிதானந்த முந்தீ பற
பந்த வீடற்ற பரசுக முற்றவா
றிந்த நிலைநிற்ற லுந்தீ பற
இறைபணி நிற்றலா முந்தீபற.
என்று முடித்தார்.
இதில் நமது மதத்தில் அனுஷ்டானத்தில் உள்ள அனைத்து சாதனைகளையும் வகைப்படுத்தி, பகவானது சொந்த உபதேசமாகிய தன்னை அறிதலில் கொண்டு வந்து நிறுத்தினார். இவ்வாறு பகவான் முமையான நூல் வடிவில் தம் உபதேசங்களைத் தர வழிசெய்தார் முருகனார்.
உள்ளது நாற்பது
பகவான் அவ்வப்போது தனித்தனியாக சில பாடல்களை எழுதிவருவார். இவை அவ்வாறே கிடந்தன. இவற்றைப் பார்த்த முருகனாருக்கு ஒரு எண்ணம் உதித்தது. தமிழிலக்கியத்தில் ஊறிய முருகனாருக்கு இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்ற மரபு தெரியும். அதனால் பகவானின் பாடல்களையும் நாற்பதாகத் தொகுக்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதனால் பகவானிடமே, "மெய்யின் இயல்பும் அதை மேவுந்திறனும் நாம் உய்யும் படிக்கு அருளவேண்டும்; நாற்பது பாடல்களாக ஆக்கித் தரவேண்டும்' என்று விண்ணப்பித்தார். பகவானும் பாடல்களை எழுதுவதும் முருகனார் அவற்றைக் கருத்தொருமை பற்றி விலக்குவதும் சேர்ப்பதுமாக 40 பாடல்களைத் திரட்டி, இரு மங்களப் பாடல்களுடன் "உள்ளது நாற்பது " என்றபெயரில் தொகுத்தார். இது 1931ம் வருஷம் ஆசிரமத்தால் வெளியிடப் பட்டது. இதுவே ரமணோபனிஷதம் எனத் தக்கது. இது உருவான விதத்தை பாயிரமாக முருகனாரே எழுதினார்.
மெய்யின் இயல்பும் அதை மேவும் திறனும் எமக்கு
உய்யும் படி முருகன் ஓதுகெனப்- பொய்யுலகின்
கள்ளமறு மாற்றாற் கனரமணன் கட்டுரைத்தான்
உள்ளது நாற்பது உவந்து.
பிறகு, முன்பு விலக்கிய பாடல்களுடன் சில புதிய பாடல்களையும் சேர்த்து மேலும் 40 பாடல்கள் கிடைக்கவே, அவை "உள்ளது நாற்பது- அனுபந்தம்" என 1940ல் வெளிவந்தது.
உள்ளது நாற்பதின் கருத்துச் செறிவும் மொழிச் சிறப்பும் ப்ரமிக்க வைக்கும். முதல் மங்கலச் செய்யுளைப் பாருங்கள்:
உள்ளதலது உள்ள உணர்வு உள்ளதோ உள்ள பொருள்
உள்ளலற உள்ளத்தே உள்ளதால் - உள்ளமெனும்
உள்ளபொருள் உள்ளல் எவன் உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல் உணர்.
முதல் பாடல்:
நாமுலகம் காண்டலால் நானாவாம் சத்தியுள
ஓர்முதலை ஒப்பல் ஒருதலையே- நாமவுருச்
சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமும் ஆரொளியும்
அத்தனையும் தானாம் அவன்.
[பாடல்கள் எளிமைப் படுத்தப் பட்டுள்ளன ]
ஸ்ரீ முருகனார்.
இவ்வாறு இருபெரும் ஆன்மீக பொக்கிஷங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஸ்ரீ முருகனார். இவை இரண்டும் பகவானின் நேரடி உபதேசங்களைத் தாங்கி நிற்கின்றன. ஆனால் இவற்றின் பொருளை வெறும் மொழியறிவினால் தெரிந்துகொள்ள முடியாது. மொழியறிவு வெறும் வாதப்பிரதிவாதங்களுக்கே இடம்தரும். உண்மைப் பொருளை யறிய ஆத்ம சாதனை அவசியம். அப்போது உண்மை மனதில் விளங்கும்.
இத்தனை விஷயங்களையும் தெரிந்துகொண்டால்தான் முருகனாரின் குருவாசகக் கோவையின் உண்மையான மஹத்வம் புரியும்.
No comments:
Post a Comment