68. இரு புத்தகங்களின் கதை -1
thanks: imlostinbooks.blogspot.in
உலகில் மொத்தம் சுமார் 13 கோடி புத்தகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருஷந்தோறும் லக்ஷக்கணக்கில் புத்தகங்கள் வெளியிடப் படுகின்றன. சைனா 4,40,000 ; அமெரிக்கா 3,05.000; இங்கிலாந்து 1,84.000; இந்தியா 45,000- 90,000 வரை (எல்லா மொழிகளிலும் ) புத்தகம் வெளியிடுவதாக மதிப்பிடுகின்றனர். ஆனால், எத்தனை பேர் படிக்கிறார்கள்? உலகம் முழுவதும் சராசரியாக ஒரு நபர் சுமார் ஆறு புத்தகங்கள் படிப்பதாகக் கணக்கிடுகின்றனர். அமெரிக்கர்கள் வருஷத்தில் சராசரியாக 12 புத்தகங்கள் படிப்பதாக எண்ணப்படுகிறது. சுமார் 63% அமெரிக்கர்கள் 1914ம் ஆண்டில் ஒருபுத்தகமாவது படித்ததாகச் சொன்னார்கள். இது 2011ல் இருந்ததைவிட 6% குறைவாகும். நம் நாட்டைப்பற்றி எந்த விளக்கமும் இல்லை!
நஹி நஹி ரக்ஷதி !
இன்று கல்வியறிவு பரவலாகிவிட்டதன் காரணமாக, எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் தொகை நாளும் பெருகிவருகிறது. இந்தியாவில் பெரும்பாலும் பத்திரிகைகளைத்தான் படிக்கின்றனர். இன்று யாரும் எதைப்பற்றியும் எழுதலாம் என்ற நிலை உருவாகிவிட்டது ! இலக்கியம் என்றபெயரில் எதைவேண்டுமானாலும் எழுதலாம்! எதையும் இலக்கியம் என்று சொல்லலாம்! ஆனாலும் நம்மைப் பண்படுத்திய புத்தகங்கள் எவை, எத்தனை என்று பார்த்தால், ஓரிரண்டு சமயப் புத்தகங்களைத்தான் சொல்லமுடியும். வயதான காலத்தில் எந்த இலக்கியப் புத்தகமும் ஆறுதல் தராது! இதை ஆதி சங்கரர் " நஹி நஹி ரக்ஷதி டுக்ருங் கரணே " என்று சொன்னார்.
இந்தியாவில் அனைத்துமொழிகளிலும் உள்ள ஹிந்து மதப் புத்தகங்களுக்கு மூலம்- ஆணிவேர் சம்ஸ்க்ருதப் புத்தகங்களே. [ தமிழ் நாட்டு சைவ சிந்தாந்தத்திற்கும் இது பொருந்தும். ] ஆனால், மெக்காலே கல்விச் சூழ்ச்சியால் இன்று இந்தியர்கள் பெரும்பாலும் மூலத்தை அறியாதவர்களாகி விட்டார்கள். அபத்தமான மொழிபெயர்ப்பைப் படித்தே காலம் தள்ளுகிறார்கள் !
இரண்டு மகத்தான புத்தகங்கள்
இந்த நிலையில் இரண்டு மகத்தான புத்தகங்கள் நவீன இந்தியாவில் தோன்றின. ஒன்று, வங்காளி மொழியில் ஸ்ரீ மஹேந்த்ர நாத குப்தர் எழுதிய " ஸ்ரீ ஸ்ரீ ராமக்ருஷ்ண கதாம்ருதம் " என்ற ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கை வரலாறு-மற்றும் உபதேசங்கள் அடங்கிய நூல். மற்றது ஸ்ரீ முருகனார் எழுதிய தமிழ் நூல்: "குரு வாசகக் கோவை ". இது பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் உபதேசத் தொகுப்பாகும்.
முதல் புத்தகம் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் 1942ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் ஆஸ்திக வட்டாரத்தில் ப்ரபலமாகியது. முருகனாருடைய புத்தகமோ,
The Garland of Guru's Sayings என்ற பெயரில் ஆங்கிலத்தில் இருந்தாலும், ப்ரபலமடையவில்லை.தமிழிலும் அதிகம் பேருக்குத் தெரியாது. தீவிர ஆன்மிக நாட்டமுள்ளவர்கள் தான் இதை அறிவர். இந்த இரு புத்தகங்களின் பின்னணி அற்புதமானது. இவற்றை எழுதியவர்களும் அற்புத புருஷர்கள்.
ஸ்ரீ ராமக்ருஷ்ணர்
1836ல் வங்காளத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த கதாதர் சட்டோபாத்யாய், 1853ல் அன்றைய இந்தியாவின் தலை நகரான கல்கத்தாவிற்கு வந்தார். சந்தர்ப்ப வசத்தால் ராணி ராஸமணி தக்ஷிணேஶ்வரில் கட்டிய பவதாரிணி என்ற காளிகோயிலுக்கு 1855ல் வந்து பின்பு அர்ச்சகரானார். தீவிர பக்தியால் அன்னை காளியைபப் பிரத்யக்ஷமாகக்கண்டு , அவருடைய சான்னித்யத்தியத்தை நிரந்தரமாக அடைந்தார். பின்னர் அன்னையின் அருளால் ஹிந்து மதத்தின் ஒவ்வொரு பிரிவின் உண்மையையும் அனுபவத்தில் அறிந்து ஹிந்துமதமே உண்மையான "சனாதன தர்மம் " [என்றும் நிலைத்திருப்பது ] என்பதைக் கண்டுகொண்டார். இந்த சாதனைகள் 1872 வரை நீடித்தன. அதன் பிறகு அவருடைய ஆன்மீக மேன்மையை அறிந்துகொண்ட பக்தர்கள் அவரிடம் வரலாயினர். ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் அவர்களுக்கு உபதேசம் வழங்கினார்.
ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் முக்கிய உபதேசம் மிகவும் எளிமையானது. அதை இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம்:
கடவுள் ஒருவரே உண்மைப் பொருள். பிற எல்லாம் நிலையில்லாதவை, அதனால் மெய்த்தன்மை அற்றவை. ஒவ்வொருவரும் ஏதாவது சாதனையை மேற்கொண்டு, கடவுளை நாடி அனுபவத்தில் உணரவேண்டும். இதுவே மனித வாழ்வின் லக்ஷியம். இக் கலிகாலத்தில் பழைய வைதிக கர்மாக்களை சரியாகச் செய்ய முடியாது. ஞானமார்க்கமும் கலிகாலத்தில் கடினமாகும். தந்திர சாதனைகளும் அபாயமானவை; கலிகாலத்திற்கு ஏற்றவையல்ல. நாரதர் காட்டிய பக்திவழிதான் இக்காலத்திற்கு ஏற்றது. அவர் காட்டிய வழியில் சாதகர்கள் முயற்சி செய்யவேண்டும்.
இந்தியத் தலைநகரான கல்கத்தாவில் அந்த நாட்களில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் ஹிந்து மதத்தைப் பலவாறு மூர்கத்தனமாகத் தூஷித்து வந்தார்கள். 1836ல் அமுலுக்கு வந்த மெக்காலேயின் கல்வித்திட்டத்தால் நமது இளைஞர்கள் மேலை நாட்டு விஷயங்களையும், ஆங்கிலத்தையும் பயிலத்தொடங்கினர். நடை, உடை, பாவனைகளில் ஆங்கிலேயரையே பின்பற்றத் தொடங்கினர்- அரை துரை யாயினர்! நமது மதத்திலிருந்த பிடிப்பு குறையத் தொடங்கியது, நம்பிக்கையும் தளர்ந்தது. ராஜாராம் மோஹன் ராய் போன்ற சீர்திருத்த வாதிகள் 'ப்ரம்ம சமாஜம் ' போன்ற புதிய அமைப்புகளைத் தோற்றுவித்து படித்த இளைஞர்களை ஈர்க்கமுயன்றனர். க்றிஸ்துவ மதத்தின் பல அம்சங்களை பின்பற்ற முயன்றனர். ஹிந்துக்கள் பத்தாம் பசலிகள் என்ற கருத்து ஆங்கிலக்கல்வி கற்றவரிடையே பரவலாயிற்று. இந்த நிலையில் பள்ளிக்கல்வியே கற்காத, ஆங்கிலம் கொஞ்சமும் அறியாத ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் எளிய வங்காள க்ராமிய மொழியில் வந்த வார்த்தைகள் கேட்டவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கேசவ சந்த்ர சென் போன்ற சீர்திருத்த வாதிகளும். படித்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அவரிடம் வர ஆரம்பித்தனர். இது 1881-82ல் தொடங்கியது. பிற்காலத்தில் விவேகானந்தர் எனப் புகழ்பெற்ற நரேந்த்ர நாத தத்தரும், நமது மஹேந்த்ர நாத குப்தரும் இம்மாதிரி வந்தவர்கள் தாம்.. [ மஹேந்திரர் 'M'
(ம ) எனற பெயரிலேயே 'கதாம்ருதத்'தை எழுதி வெளியிட்டதால், இனி அவரை ம என்றே குறிப்போம்.]மஹேந்த்ர நாத குப்தர்- ம
ம 1854ல் பிறந்தவர். (விவேகானந்தருக்கு 9 வயது மூத்தவர்.) கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர். பள்ளி ஆசிரியராக இருந்தார். சிறுவயது முதலே காலையில் எழுந்ததும் தாய், தந்தைக்கு நமஸ்காரம் செய்யும் வழக்கமுள்ளவர்.
தெய்வ சிந்தையும், சாதுக்களிடம் மரியாதையும் உடையவர். பள்ளி நாட்களிலேயே தினமும் 'டைரி' எழுதுவார். கூர்ந்த மதியும் தீவிர ஞாபகசக்தியும் கொண்டவர்.. 1882 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் மனச் சாந்திக்காக கல்கத்தாவில் சில தோட்டங்களைப் பார்க்கக் கிளம்பி, உறவினர் ஒருவருடன், தக்ஷிணேஶ்வரக் கோயிலுக்கும் வந்து எந்தவித முன்னேற்பாடுமின்றி . ஸ்ரீ ராமக்ருஷ்ணரைத் தரிசித்தார். அவரால் ஈர்க்கப்பட்ட மனத்தராகி, தொடர்ந்து நாலரை வருஷங்கள்- குருதேவரின் சமாதிவரை -அவருடன் இருந்தார்.
பள்ளியாசிரியரானதால் முக்காலும் விடுமுறை நாட்களில் தான் வருவார். குருதேவரின் இடத்தைவிட்டு (அவர் சொன்னால் தவிர ) நகர மாட்டார். யார்யார் வந்தார்கள். யார் எங்கு உட்கார்ந்தார்கள், யார் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள், குருதேவர் என்ன சொன்னார், என்ன செய்தார் போன்ற எல்லாவற்றையும் அன்றன்றே தன் நோட்டு புத்தகத்தில் குறித்து வைப்பார். ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் சொற்களை அவர் மொழியிலேயே குறித்துவைப்பார். ( [தனது சொந்த சரக்கு எதுவுமில்லாமல் ]. குருதேவரைப் பற்றி தானே நேரில் பார்க்காதது, கேட்காதது எதையும் அவர் எழுதவில்லை.
ம ஏப்ரல் 24, 1886 வரை குருதேவரை 174 முறை தரிசித்தார். அவருடைய டைரியில் அன்றுதான் அவர் எழுதிய கடைசி குறிப்பு இருக்கிறது. குருதேவர் 1886ம் வருஷம் ஆகஸ்டு 15 நள்ளிரவுக்குமேல் தான் சமாதியடைந்தார். ஏப்ரலுக்குப் பிறகும் ம பல முறை வந்தார்; பல நாட்களில் அவரே டாக்டரிடம் குருதேவரின் உடல் நிலையைப்பற்றிச் சொல்வார். ஆனால் குருதேவர் நோயால் மிகவும் வருந்திய அந்த நாட்களில் அவருக்கு எதுவும் எழுதத் தோன்றவில்லை போலும் !
Entries in the diary of M- a sample.
தெய்வீகப் பணி !
குருதேவரைப் பற்றி எழுதும் பணி மஹேந்திரருக்கென விதிக்கப்பட்டது ! இதை குருதேவரே பல விதத்தில் சூக்ஷ்மமாகத் தெரிவித்தார்.
பல சமயங்களில் ஒரு விஷயத்தை விளக்கும்போது, ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ம வைப்பார்த்து, "என்ன, புரிந்ததா" என்று கேட்பார். அதைத் திருப்பிச்சொல் என்பார். அவரைத் திருத்துவார், மேலும் விளக்குவார்.
ஒரு சமயம் வேறொரு இளைஞர்- பக்தர் தானும் குறிப்பெடுக்கத் தொடங்கினார். அதை அறிந்த குருதேவர் " இது உனக்கான வேலையல்ல" எனத் தடுத்துவிட்டார் ! அவரும் அதுவரை எழுதியதைக் கிழித்து கங்கையில் போட்டுவிட்டார். [ இவரே பிற்காலத்தில் சிவானந்தர் (மஹாபுருஷ் மஹராஜ் ) என்ற பெயரில் நேர் சிடர்களில் ஒருவரானார். ] ஆனால், ம சன்னியாசியாக விழைந்தபோது, குருதேவர் சம்மதிக்கவில்லை!
1885 மார்ச் மாதம் 7ம் தேதி. குருதேவர் அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ம வைக் கனிவுடன் பார்த்துச் சொன்னார்:
As for you, you are all right. Only a little remains yet to be done. When that is done, nothing will remain, neither duty, nor work, nor (worldly ) life. Is it good to get rid of everything?
God binds the Bhagavata Pandit to the world with one tie. If it was not so, who would explain the Bhagavata? He keeps the pundit bound for teaching man. That is why the Divine Mother has kept you in the world.
மஹேந்திர நாதர் எழுதப்போவது பாகவதத்திற்கு ஒப்பானது, அதுவே அவருடைய தெய்வீகப் பணி என்ற ரகசியத்தை இவ்வாறு குருதேவர் வெளிப்படுத்தினார் ! ஆனால் அன்று இது யாருக்கும் புரிந்திராது! ம டைரி எழுதிவந்தார் என்பதே யாருக்கும் தெரியாது!
Tim Ross. Public Domain via Wikimedia.
No comments:
Post a Comment