73. அவசியமான கல்வி !
கல்வியின் அவசியத்தைப் பற்றி யாருக்கும் சந்தேகமே இல்லை. ஆனால் எத்தகைய கல்வி அவசியம் என்பதைப் பற்றி எங்கும் கருத்தொருமை இல்லை!
பயனில்லாத கல்வி !
இன்று வயிற்றுப் பிழைப்புக்கு என்று ஒருவித கல்வி கற்கிறோம். பின்பு அது வாழ்க்கைக்கு உபயோகமாக இல்லை என்றும் சொல்கிறோம். இதை "bread-winning V. man-making education " என்று சுருக்கமாகச் சொன்னார் ஸ்வாமி விவேகானந்தர். இது மெக்காலே பிரபு நமக்கு விட்டுச் சென்ற சொத்து. இதை நமது சுதந்திர இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்! எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா நிலைகளிலும் இதையே பின்பற்றி வருகிறார்கள். கல்வி அரசினரால் கட்டுப்படுத்தப்பட்ட துறை என்பதால் இதில் நாம் எந்த மாற்றமும் செய்ய முடியாது ! சுதந்திர இந்தியாவில் பல கல்விக் கமிஷன்கள் வந்து அட்ரஸே இல்லாமல் போய்விட்டன ! சோறுக்காகக் கற்கும் கல்விமுறை மட்டும் நீடிக்கிறது. ஆனால், பரிதாபம்- அதன் சோறுபோடும் தன்மையும் குறைந்துவருகிறது. நமது பட்டதாரிகளில் பாதிக்குமேல் வேலைக்குத் தகுதியில்லை என்று ஆகிவிட்டது. This is the certificate of universal uselessness of our education system and general incompetence of our educated class!
ஆனால், இந்த சர்க்காருக்கு வாழ்க்கைப்பட்ட நாம், இந்த முருங்கை மரத்தில் ஏறமாட்டோம் என்று சொல்ல முடியுமா?
வாழ்க்கைக்குக் கல்வி !
வாழ்க்கைக்குக் கல்வி !
வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி என்பது என்ன? இதற்கு வாழ்க்கை என்பது என்ன, அதன் குறிக்கோள் என்ன , அதை அடையும் வழி என்ன போன்ற கேள்விகளுக்கு விடை காணவேண்டும். இதைத்தான் மதங்கள் செய்துவந்தன. இன்று இந்த நிலையைப் பொதுவாழ்க்கையில் ஆதரிப்பவர் இல்லை. பிறமதங்கள் தங்கள் கருத்தைத் தீவிரமாகப் பரப்பி வருகின்றன. அதற்கேற்ற நிதி மற்றும் பிற வசதிகளை அவை பெருக்கிக்கொண்டுள்ளன. நமது மதமோ சில சாமியார்களையும், சில மடங்களையும், குறுகிய கொள்கை வாதங்களையும் . புதிய இயக்கங்களையும் நம்பியே இருக்கிறது.
யார் எப்படி இருந்தாலும், வைதிக மரபில் வந்தவர்களுக்காவது சில அடிப்படை உண்மைகள் தெரியவேண்டும். அதைச் சொல்லும் நபர்களும் அதற்கான வசதிகளும் இருக்கவேண்டும். இதை நாம் செய்யவில்லை. ஹிந்து மதத்தின் எந்தப் பிரிவும் இதைச் சரியாகச் செய்யவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியே நிற்கின்றன.
நாம் இந்த விஷயத்தில் அரசினர் நடத்தும் கல்விக் கூத்தையோ, அன்றி சில சாமியார்களையுமோ அல்லது அமைப்புகளையுமோ நம்பிப் பயனில்லை. வேறு வழி தேடவேண்டும்.
அறத்திற்கு அரசன் ஆதரவு !
நாம் இந்த விஷயத்தில் அரசினர் நடத்தும் கல்விக் கூத்தையோ, அன்றி சில சாமியார்களையுமோ அல்லது அமைப்புகளையுமோ நம்பிப் பயனில்லை. வேறு வழி தேடவேண்டும்.
அறத்திற்கு அரசன் ஆதரவு !
நமது மரபில் "ஸ்வாத்யாயம் " என்ற கருத்து இருக்கிறது. ஒவ்வொருவரும் சுயமாகச் சிலவற்றைக் கற்கவேண்டும். சுயமாகச் சில முறைகளைப் பின்பற்றவேண்டும். இதை "பஞ்ச யஜ்ஞம் " என்பர். இந்த இரண்டும் முக்காலும் இன்று நடைமுறையில் இல்லை. இவற்றைச் செயல்படுத்தவோ,மேற்பார்வையிடவோ எந்த அதிகாரியோ அமைப்போ நம்மிடையே இல்லை! ஒருகாலத்தில் இதையெல்லாம் நமது ராஜாக்களின் செங்கோல் செய்தது ! திருவள்ளுவர் சொல்கிறார் :
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560.
இன்று இத்தகைய க்ஷத்ரிய ராஜாக்கள் இல்லை. நாமாகவே நம்மளவில் ஏதாவது செய்தால் தான் உண்டு.
ஸ்வாத்யாயம்
ஸ்வாத்யாயம்
நாம் ஒவ்வொருவரும் அவசியமாகக் கற்க வேண்டியதே "ஸ்வாத்யாயத்தில்" அடங்கும். இதன்படி, வைதிக மரபில் வந்தவர்கள் கற்கவேண்டியது / தினமும் பாராயணம் செய்யவேண்டியது என பெரியோர்கள் வகுத்தவை கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் ::
- புருஷ ஸூக்தம்
- ஸ்ரீ ருத்ரம்
- அவரவர் வேத ஶாகையிலுள்ள உபனிஷத்துக்கள்
- ஸ்ரீமத் பகவத் கீதை
- ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.
புருஷஸூக்தம்
புருஷ ஸூக்தம் எல்லா வேதங்களிலும் பயிலப்படுகிறது. எனவே இதை அனைத்து வேதங்களின் சாரம், அத்தியாவசியமான அம்ஸம் எனலாம். இது பகவானாகிய புருஷோத்தமனின் மஹிமையைச் சொல்கிறது. எப்படி இந்த ப்ரபஞ்சம் பகவானின் உருவமாக இருக்கிறது, இதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன. இந்த பகவானை எப்படி ஆராதிப்பது போன்ற விஷயங்களை மிகத் தெளிவாக விளக்குகிறது. நாமரூபமில்லாத பகவான் பலவித நாமரூபங்களுடன் இந்த உலகாக இருக்கிறார். இது நமக்காக அவர் செய்த த்யாகம் ; எனவே நாமும் அவரைத் தியாகத்தினால்தான் ஆராதிக்க வேண்டும்; நாம் செய்யும் யாக-யஜ்ஞங்களின் பொருளும் பயனும் இதுவே என்பவை இதன் முக்கியக் கருத்துக்கள். நாம் எந்த தெய்வத்தை பூஜித்தாலும் அதற்கான பொதுவான மந்திரங்கள் இங்கு வருகின்றன ! இதை முறையாகக் கற்றுக்கொண்டால். இதைவைத்தே நாம் எல்லா பூஜைகளையும் செய்யலாம் !
ஸ்ரீ ருத்ரம்
ஸ்ரீருத்ரம் யஜுர்வேதத்தின் ஹ்ருதயமாகக் கருதப்படுகிறது. இதை புருஷஸூக்தத்தின் விளக்கமாகக் கருதலாம். பகவான் எப்படி இந்த உலகில் எல்லாமாகவும் இருக்கிறார் என்பதை இது விளக்குகிறது. இப்படி இந்த உலகையே பகவான் மயமாகக் கருதுவதால், நமக்குப் பிறவற்றிலிருந்து வரும் பயமும், தீமையும்,, வெறுப்பும் நீங்கிவிடும்! இங்கு சிவபிரானின் முன்னூறு அழகான நாமங்கள் வருகின்றன . சிவ உபாஸனைக்கு ஆதாரமான பஞ்சாக்ஷரி மந்திரம் இங்குதான் வருகிறது. இதைத்தொடர்ந்து நாம் பகவானிடம் விடுக்கும் வேண்டுகோள் பகுதி வருகிறது. "இக பர ஸௌபாக்யம் " வேண்டாதார் யார் ? இதை வேண்டிப் பெறுவதற்கான மந்திரங்கள் இங்கு வருகின்றன !
நாம் எந்த நிலையில் இருந்தாலும் , இந்த உலகும் அதிலுள்ள பொருள்களும் ஒருகாலத்தில் நம்மைவிட்டுப் பிரிந்துவிடும் ! அப்போது "நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே சென்று அடையவேண்டும் -[ பரா அயனம் = பராயணம் ] என்ற கேள்வி எழும் ! ஆனால் இதற்கு விடையை இங்கு வாழும் போதே [இஹைவ ] தெரிந்துகொள்ள வேண்டும். நாம் வாழும் உலக வாழ்க்கையே அதற்கும் வழிவகுக்க வேண்டும். இதைத்தெரிந்துகொள்ள உதவும் ஒரே சாதனம் உபனிஷதங்களே ! [ Knowing which we know everything worth knowing ]
"Paths of glory lead but to the grave" என்று எழுதினார் Thomas Gray. But is it the end or is there anything beyond it ? This is the crux of religion. The secret of life depends upon what comes after it! Alfred , Lord Tennyson wrote in "Crossing the Bar" :
But should we wait, till we cross the bar, to meet our Pilot? No, says Hinduism, in its Upanishads. We can meet Him here itself : ihaiva இஹைவ = இங்கேயே !
"Paths of glory lead but to the grave" என்று எழுதினார் Thomas Gray. But is it the end or is there anything beyond it ? This is the crux of religion. The secret of life depends upon what comes after it! Alfred , Lord Tennyson wrote in "Crossing the Bar" :
Twilight and evening bell,
And after that the dark!
And may there be no sadness of farewell,
When I embark;
For tho' from out our bourne of Time and Place
The flood may bear me far,
I hope to see my Pilot face to face
When I have crost the bar.
நமது மதம் நமக்கு அளிக்கும் மிகப் பெரிய நம்பிக்கை இதுதான்: நமது வாழ்க்கை பௌதிகமயமானது மட்டும் அல்ல. மனிதன் வெறும் மனிதனல்ல- உடலல்ல ! அவனுக்குள், இந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு உயர்ந்த பொருள் உறைந்திருக்கிறது! அதைக் கண்டுகொள்வதே வாழ்க்கையின் நோக்கம். இதை நமக்குத் தெளிவாகச் சொல்வது உபனிஷதம் ஒன்றுதான் !
உபனிஷதங்கள் 108 என்று ஒரு கணக்கு உண்டு. ஒவ்வொரு வேதத்திலும் உபனிஷதப் பகுதிகள் வருகின்றன. இவற்றில் பத்து முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன, அவற்றிற்கே ஆதி சங்கரர் உரை எழுதினார். ஆனால் வேறு சிலவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருக்கிறார். இவற்றையெல்லாம் கற்கவேண்டியதுதான் ! ஆனால் ஸ்வாத்யாயம் என்று வந்தால் முதலில் அவரவர் வேதத்திலுள்ள உபனிஷதங்களைப் பயிலவேண்டும். முறையாகப் பயில வசதியில்லாதவர்கள் அவற்றின் அர்த்தத்தையாவது தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு வெளிநாட்டினர் எழுதிய புத்தகங்களையோ, வேதமரபில் வராத பிறர் எழுதியவற்றையோ படிக்கலாகாது.
ஐந்து உபனிஷதங்கள்
தமிழ் நாட்டில் க்ருஷ்ண யஜுர்வேதம் பின்பற்றுபவர்களே அதிகம். இதில் வரும் உபனிஷதங்கள்:
- கதா
- கைவல்யம்
- தைத்திரியம்
- ஶ்வேதாஶ்வதரம்
- நாராயணம்,
உபனிஷத்துக்கள் ஜீவ- (ஆத்ம ) ப்ரஹ்ம ஐக்யத்தையே கூறுகின்றன. இதையே பல நிலைகளிலிருந்து விளக்குகின்றன. இதன் முடிந்த முடிவாக நான்கு மஹாவாக்யங்களைக் கொள்கிறோம். ஓவ்வொன்றும் ஒரு வேதத்திலிருந்து வந்தது.
-
प्रज्ञानम् ब्रह्म
ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம - ஐதரேய உபனிஷத்- ருக்வேதம். अहम् ब्रह्मास्मि
அஹம் ப்ரஹ்மாஸ்மி - ப்ருஹதாரண்ய உபனிஷத்- ஶுக்ல யஜுர்வேதம்तत् त्वम् असि
தத் த்வம் அஸி - சாந்தோக்ய உபனிஷதம்- சாமவேதம்अयम् आत्मा ब्रह्म
அயம் ஆத்ம ப்ரஹ்ம - மாண்டூக்யம் - அதர்வண வேதம்.
இவற்றை மந்திரம் போல உருப்போடுவதால் ஒருபயனுமில்லை! இவற்றைப் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்து, அதற்கான ஒழுக்கங்களையும் பயிற்சிகளையும் தகுந்த ஆசார்யரின் துணையுடன் மேற்கொண்டு இவற்றின் உண்மையை சொந்தமாக அநுபவத்தில் உணர்ந்து ( அபரோக்ஷ அனுபூதி )
அதன் படி ஒழுகவேண்டும் இதுவே ஞானம் என்பது- புத்தக அறிவோ, கேள்வி விளக்கமோ அல்ல!
இவ்வாறு உபனிஷதங்களைப் பயில நாம் ஒரு பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும். அதனால் தான் இதை வேதத்தின் இறுதிப் பகுதியாக [ வேதாந்தம் ] வைத்தார்கள். சும்மா பொழுதுபோக்கிற்காக ஏ/சி ரூமில் ஸோஃபாவில் சாய்ந்து படிப்பது அல்ல ! ஆயிரம் லெக்சர் கேட்பதால் இந்த ஞானம் வராது : ந அயம் ஆத்மா ப்ரவசனேன லப்ய: ந பஹுதா ஶ்ருதேன .
இவ்வாறு உபனிஷதங்களைப் பயில நாம் ஒரு பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும். அதனால் தான் இதை வேதத்தின் இறுதிப் பகுதியாக [ வேதாந்தம் ] வைத்தார்கள். சும்மா பொழுதுபோக்கிற்காக ஏ/சி ரூமில் ஸோஃபாவில் சாய்ந்து படிப்பது அல்ல ! ஆயிரம் லெக்சர் கேட்பதால் இந்த ஞானம் வராது : ந அயம் ஆத்மா ப்ரவசனேன லப்ய: ந பஹுதா ஶ்ருதேன .
ஆனாலும் இதில் என்ன இருக்கிறது என்பதை இந்த மரபில் வந்த நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம். ஒரு பத்து மந்திரமாவது தகுந்தவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். இந்த மந்திரத்தால் மாங்காய் எதுவும் விழாது; மனது செம்மைப்படும்.
பகவத் கீதை : வைதிக "பை பாஸ் " !
பகவத் கீதையைப் பற்றி புதிதாக என்ன சொல்ல முடியும்? நமது வைதிக மதத்தின் திரண்ட சாரமாக இருப்பது கீதை. பொதுவாக உபனிஷதங்களையே வேதாந்தம் என்று சொல்லுவர். ஆனால் அதற்கும் மேலே இருப்பது கீதை.
விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.
manuscript cover- 1690 AD
சிவ- விஷ்ணு அபேதம்
இவை எல்லாவற்றிலுமே தமிழில் வந்த பதிப்புக்களில் உரையுடன் கூடிய "அண்ணா " சுப்ரமண்ய ஐயரின் புத்தகங்கள் சிறந்தவை.[ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம், சென்னை ] விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு சி.வே ராதாக்ருஷ்ண சாஸ்திரிகள் உரை சிறந்தது. [அகஸ்தியர் புத்தகசாலை, திருச்சி ]
பொதுவாக காஞ்சி மஹாபெரியவரின் "தெய்வத்தின் குரல் " இவை எல்லாவற்றையும் பற்றிய சரியான விளக்கம் தரும் அரிய பொக்கிஷமாக உள்ளது.
பகவத் கீதை : வைதிக "பை பாஸ் " !
பகவத் கீதையைப் பற்றி புதிதாக என்ன சொல்ல முடியும்? நமது வைதிக மதத்தின் திரண்ட சாரமாக இருப்பது கீதை. பொதுவாக உபனிஷதங்களையே வேதாந்தம் என்று சொல்லுவர். ஆனால் அதற்கும் மேலே இருப்பது கீதை.
வேதத்தின் முதல் பகுதியில் கர்ம யோகம் வருகிறது. இதன்வாயிலாக ஒருவன் சித்தசுத்தி பெறவேண்டும். இந்த நிலையில் ( சித்த சுத்தி பெற்றபின் ) அவன் ஞானயோகத்திற்குத் தகுதிபெறுகிறான். இதற்கான வழியைச் சொல்வது வேதத்தின் பின் பகுதியாகிய உபனிஷதம். காலப்போக்கில் இந்த முறை தவறிப்போனது. அதனால் பகவான் கீதையில் புதிய வழியைக் காட்டினார். கர்மம். ஞானம் ஆகியவற்றை "யோகம். சாங்க்யம் " என்ற பெயரில் பகவான் கீதையில் சொல்கிறார். இவை பழைய வழிகள் "புரா ப்ரோக்தா " என்று பகவானே சொல்கிறார். உடலெடுத்தவன் கர்மம் செய்வதைத் தவிற்க முடியாது; ஞானமும் அவசியம்- ஞானமில்லாமல் செய்யும் கர்மம் அனர்த்தம் விளைக்கும்.. ஆனால் எது உண்மையான கர்மம், எது ஞானம் என்பதை விளக்கியபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு பகவானையே சரணமடைவாயாக என்ற அனன்ய பக்தியை இறுதி உபதேசமாகக் கூறுகிறார். இது பகவான் புரிந்த "வைதிக பைபாஸ் " ஆபரேஷனாகும். வைதிக மதத்தின் சாரத்தை இங்கே பிழிந்து தந்திருக்கிறார். அதனாலேயே கீதை "உபனிஷதம், ப்ரஹ்ம வித்தை, யோக ஶாஸ்திரம் " என மதிக்கப்படுகிறது. கீதையை உபதேசித்தது கி.மு.3100க்குமுன். பிறகு வந்த 5000 ஆண்டுகளில் கீதைக்கு மேலாகவோ அல்லது அதில் இல்லாததையோ உலகில் யாரும் எங்கும் சொல்லமுடியவில்லை !
விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.
manuscript cover- 1690 AD
புருஷ ஸூக்தம், ஸ்ரீ ருத்ரம் ஆகியவற்றில் வருவது போலவே கீதையிலும் பகவான், தானே இந்த உலகமாக ஆகியிருக்கிறார், இந்த உலகை வ்யாபித்திருக்கிறார், ஆனால் இந்த உலகில் எதிலும் அவர் அடங்கவில்லை என்பதை விளக்குகிறார். இப்படி உள்ள மஹத்தான பொருளை நாம் எப்படி மனதால் கிரஹிக்க முடியும் ? இந்த மஹத்தான ப்ரஹ்மம் நமக்காக பகவானாக- அவதாரமாக வந்தது ! ஒரு நாமம், ஒர் உருவம் இல்லாத பரம்பொருள் நாம் மனதினால் சிந்திக்கவும் வாயினால் பாடவும் வசதியாக ஆயிரம் நாமங்கள் கொண்டு விளங்குகிறது ! இதை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் விளக்குகிறது.
ருத்ரன், விஷ்ணு என்ற பெயர்களால் இவை ஏதோ குட்டி தெய்வங்கள், மும்மூர்த்திகளின் அம்சம் என்று நினைக்கக் கூடாது. இவை பரம்பொருளின் பெயர்கள். இரண்டும் ஒன்றே. வேறுபாடுகள் பின்னால் கற்பிக்கப்பட்டவை. வேதத்தில் நாம் காண்பது பல பெயர்களில் வரும் ஒரே பரம்பொருள் : ஏகம் ஸத்; விப்ரா பஹுதா வதந்தி.
சிவ- விஷ்ணு அபேதம்
வைதிக வழியில் வந்த ஸ்மார்த்தர்களுக்கு சிவ-விஷ்ணு பேதம் இல்லை. விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் முதல் நாமமே "விஶ்வம் " என்பது. இது காசியில் சிவனின் பெயர். எந்த ஸ்ரீவைஷ்ணவராவது 'விஶ்வனாதன் ' என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறாரா? பின்னால் ஶிவ, ஸ்தாணு என்றெல்லாம நாமங்கள் வருகின்றன. இவை சிவனுக்கே உரிய பெயர்கள். எனவே, விஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்றவுடன் , இது ஏதோ வேறு தெய்வத்தைப் பற்றியது என்று எண்ணவேண்டாம். குருவாயூரப்பனைப் பற்றி ஆயிரம் ஶ்லோகங்களுக்குமேல் உள்ள ஸ்ரீமந் நாராயணீயத்தில், கடைசி ஶ்லோகத்தில் ஸ்ரீ நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனை "விஶ்வனாதா" என்றே அழைக்கிறார். [ "அஞ்ஞாத்வா தே மஹத்வம் .......விஶ்வனாத க்ஷமேதா : " ] அவரும் ஸ்மார்த்தரே !
நம்மில் பலரும் நமது மதவிஷயங்களைப் பற்றி பல புத்தகங்கள் படித்திருக்கலாம். ஆனால் இங்கு சொன்ன ஐந்து புத்தகங்களே நமக்கு ஆதாரமானவை. இவற்றில் இல்லாதது வேறு எதிலும் இல்லை. அறிந்துகொள்ளவேண்டிய அவசியமான விஷயங்கள், அவற்றை நடைமுறையில் அனுசரிக்கும் முறை ஆகிய இரண்டையும் இந்த ஐந்து புத்தகங்களிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். இவற்றை அர்த்தத்துடன் நன்றாகத் தெரிந்துகொண்டால் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களைக் கண்டு நாம் மயங்கமாட்டோம். Astrophysics, Time-Space, Quantum/ particle physics, evolution ஆகிய எந்தத் துறையும் நமக்கு மலைப்பைத் தராது.
இவை எல்லாவற்றிலுமே தமிழில் வந்த பதிப்புக்களில் உரையுடன் கூடிய "அண்ணா " சுப்ரமண்ய ஐயரின் புத்தகங்கள் சிறந்தவை.[ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம், சென்னை ] விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு சி.வே ராதாக்ருஷ்ண சாஸ்திரிகள் உரை சிறந்தது. [அகஸ்தியர் புத்தகசாலை, திருச்சி ]
பொதுவாக காஞ்சி மஹாபெரியவரின் "தெய்வத்தின் குரல் " இவை எல்லாவற்றையும் பற்றிய சரியான விளக்கம் தரும் அரிய பொக்கிஷமாக உள்ளது.
குறிப்பு :
'சோறு ' என்பது சாப்பாட்டை மட்டுமே குறிக்கவில்லை. "சோழ வள நாடு சோறுடைத்து " என்பது சோழ நாட்டின் [அன்றைய ] நீர் வளம், நில வளம் ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடவில்லை.. அங்கு காவிரியின் இருமருங்கிலும் இருந்த சிவ-விஷ்ணு ஆலயங்கள் மக்களின் ஆன்மீக நலத்திற்கு வழிவகுத்தன. இங்கு சோறு என்பது மோக்ஷத்திற்கு வழி என்னும் பொருளில் வந்தது ! இன்றைய கல்வியில் இந்த இரண்டுவித சோற்றுக்குமே கஷ்டம் தான் !
No comments:
Post a Comment