Sunday, 22 October 2017

92.வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -2



92. வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -2





 நமது சினிமாவில்  இசை முக்கிய  இடம் பெறுகிறது.  சினிமாவின் தரம் போல இசையின் தரமும் கீழே, கீழே போய்விட்டது.  இன்று குரல் வளம் உடைய பாடகர்கள் இல்லை; பல வருஷங்கள் மனதில் தங்கும்படி இசை அமைப்பவர்களும் இல்லை. எலக்டிரானிக் சாதனங்கள் வந்தபிறகு, அசல் வாத்யங்கள்  இல்லை;  சிறந்த பாடலாசிரியர்களும் இல்லை. இருந்தாலும் சினிமாவில் இசை என்று  ஏதோ இருக்கிறது.; பாட்டு என்று ஏதோ இருக்கிறது. 50களில் வந்த படங்களின் இசையைக் கேட்டவர்களுக்கு இன்றைய திரை இசை  சகிக்க முடியாததாக இருக்கிறது. இந்த சரிவு சினிமாவில் மட்டும் இல்லை- எல்லா துறைகளிலும் இருக்கிறது.

முன்பெல்லாம்  சினிமா பாடல்  ரேடியோ சிலோனில்தான் வரும்.. எந்தப் பாடல் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. பாடலின் வார்த்தைகள் சரியாகப் புரியாது; பாடலும் முழுதாக வராது. இருந்தாலும்  பிடித்த பாடல் வந்தால்  ஒரு த்ரில் வரும். இன்று யூ-ட்யூப் வந்த பிறகு, 1940 லிருந்து ஹிந்திப் பாடல்களைக் கேட்கலாம், அவற்றின் வார்த்தைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ளலாம். இதனால் பழைய பாடல்களை ரசிப்பவர்களின் தொகை லக்ஷக்கணக்கில் பெருகிவருகிறது. Old is gold  என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறோம்.

இன்று சினிமா வந்தால் அதன் பாடல்களுக்கு விளம்பரம்  வானைத் தொடுகிறது ; மூன்று மாதங்களுக்குப் பிறகு அப்பாடல்களைச்  சீண்டுவாரில்லை. ஆனால் 50,60 வருஷங்களுக்கு முன் வந்த படப் பாடல்கள் இன்றைக்கும்  விரும்பிக் கேட்கப்படுகின்றன, பாடப்படுகின்றன! இதற்கு எந்த விளம்பரமும் இல்லை ! இசையின் தரம், பாடலின்  சிறப்பு, பாடியவர்களின் குரல் வளம்  ஆகியவையே காரணம். காலத்தை வென்ற தன்மை இவற்றின் சிறப்பு. இதற்கு இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் முக்கிய காரணம்.  கருத்துள்ள  பாடல் நல்ல இசையுடன் கலந்து வருவது தேனும் பாலும் சேர்வது போல.  இது ஒரு  unparalleled historical phenomenon. It requires adequate appreciation.

காதல்  இல்லாத சினிமா இல்லை; பாட்டில் வடிக்காத காதல் இல்லை! இனிய இசையில் படியாத பாடல் இல்லை ! இதில் அருமையான கவிகள் அருமையான பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.  இவற்றில் சிலவற்றைப் பார்த்து வருகிறோம்.




டண்டீ ஹவாயே(ன்)
படம்: நௌஜவான் 1951 Naujawan
கவி: ஸாஹிர் லுதியான்வி.
இசை : எஸ்.டி பர்மன் S.D.Burman

ठंडी हवाएं, लहरा के आयें 
रुत है जवां
तुमको यहाँ, कैसे बुलाएँ
ठंडी हवाएं...


டண்டீ ஹவாயே(ன்), லஹரா கே ஆயே(ன்)
ருத் ஹை ஜவான்
தும் கோ யஹா(ன்) கைஸே புலாயே(ன்)
டண்டீ ஹவாயே(ன்)

இனிய தென்றல், அலைஅலையாக வீசுகிறது !
என்னைச் சுற்றிலும் எல்லாம் இனிமை, இளமை !
உம்மை இங்கு எப்படி அழைப்பேன் ?
இனிய தென்றல்........

चाँद और तारे, हँसते नज़ारे
मिल के सभी, दिल में सखी, जादू जगाये
ठंडी हवाएं...

சாந்த் ஔர் தாரே, ஹ(ன்)ஸ்தே நஃஜாரே
மில் கே ஸபீ, தில் மே ஸகீ, ஜாதூ ஜகாயே
டண்டீ ஹவாயே(ன்)....

 நிலவு, நக்ஷத்திரங்கள், என்னைச் சூழ்ந்திருக்கும் இந்தக் களிப்பு,
இவை எல்லாம் சேர்ந்து என் மனதில் 
ஏதோ மாயவித்தை செய்கின்றன !
இனிய தென்றல்......


कहा भी न जाए, रहा भी न जाए
तुमसे अगर, मिले भी नज़र, हम झेंप जाए
ठंडी हवाएं...
.

கஹா பீ ந ஜாயே, ரஹா பீ ந ஜாயே
தும்ஸே அகர், மிலே பீ நஃஜர், ஹம் ஜோப் ஜாயே
டண்டீ ஹவாயே(ன்)........
எதையும் சொல்லவும் முடியவில்லை,
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை !
உம்மை நேரடியாகப் பார்த்தாலும் பேச்சற்று விடுவேன்!
இனிய தென்றல்.....

दिल के फ़साने, दिल भी न जाने
तुमको सजन, दिल की लगन, कैसे बताएँ
ठंडी हवाएं...


தில் கே ஃபஸானே, தில் பீ ந ஜானே
தும்கோ ஸஜன், தில் கீ லகன், கைஸே பதாயே(ன்)
டண்டீ ஹவாயே(ன்).........

மனதில் எழும் கதைகள் - இது மனதிற்கே தெரியவில்லை !
பின் அன்பரே, இதை உமக்கு எப்படித் தெரிவிப்பது?
இனிய தென்றல்.....

இந்தப் பாடல் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான பாடல்.இதை ஆதாரமாக வைத்து தமிழில் "தாய் உள்ளம் " படத்தில் 'கொஞ்சும் புறாவே ' என்ற பாடல் எம்.எல்.வசந்தகுமாரி பாடிப் பிரபலமானது. இதே மெட்டின் அடிப்படையில் ஹிந்தியிலேயே பல பாடல்கள் வந்துவிட்டன. This is a milestone song in Hindi film music.சினிமா பாட்டாக இருந்தாலும் அதன் கவிதை நயம் சொக்கவைக்கிறது.இசை அசத்துகிறது! சினிமா போய்விட்டது. பாடல்  நிலைத்து நிற்கிறது!

தும்ஸே அகர், மிலே பீ நஃஜர், ஹம் ஜோப் ஜாயே - இந்த வரி  நமது இலக்கியத்தில்  முக்கிய இடத்தைப்  பெற்றது.
 "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ " என்பது கம்ப ராமாயணம். இதை  நம் கவிகள் பிற பாடல்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.


देख हमें आवाज़ न देना 
- 'தேக் ஹமே ஆவாஃஜ் ந  தேனா '. ராஜேந்தர் க்ரிஷன்.  அமர்தீப், 1958

चुपके से मिले, प्यासे प्यासे कुछ हम कुछ तुम

- 'சுப் கே ஸே மிலே ப்யாஸே ப்யாஸே, குச் ஹம், குச் தும்' - மஜ்ரூ ஸுல்தான்புரி, மன்ஃஜில் , 1960











தில் கீ நஃஜர் ஸே
படம் : அனாடி 1959 Anadi
கவி : ஶைலேந்த்ரா
இசை: ஶங்கர் ஜய்கிஷன் ShankarJaikishan




दिल की नज़र से, नज़रों की दिल से 
ये बात क्या है, ये राज़ क्या है 
कोई हमें बता दे 

தில் கீ நஃஜர் ஸே, நஃஜ்ரோ (ன்) கீ தில் ஸே
யே பாத் க்யா ஹை, யே ராஃஜ்  க்யா ஹை
கோயீ ஹமே(ன்) பதா  தே

மனதிலிருந்து எழும் பார்வை- பார்வையிலிருந்து எழும் மனது -
இது என்ன விஷயம் ? இது என்ன ரகசியம் ? 
யாராவது நமக்குப் புரியவைப்பார்களா ?

सीने से उठकर, होठों पे आया 
ये गीता कैसा, ये राज़ क्या है 
कोई हमें बता दे
दिल की नज़र से...


ஸீனே ஸே உட்கர், ஹொடோ(ன்) பே ஆயா
யே கீத் கைஸா, யே ராஃஜ் க்யா ஹை
கோயீ ஹமே(ன்) பதா தே
தில் கீ நஃஜர் ஸே.......

 நெஞ்சிலிருந்து கிளம்பி, உதடுகளில் வந்த
இந்தப் பாடல் என்ன ? இந்த ரகசியம் என்ன ?
இதை யாராவது நமக்குச் சொல்வார்களா ?

क्यों बेखबर, यूँ खिंची सी चली जा रही मैं 
ये कौन से बन्धनों में बंधी जा रही मैं
कुछ खो रहा है, कुछ मिल रहा है 
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से
...

க்யோ(ன்) பேகபர், யூ(ன்) கின்சீ ஸீ சலீ ஜா ரஹீ மை
யே கௌன் ஸே பந்தனோ(ன்) மே பந்தீ ஜா ரஹீ மை
குச் கோ ரஹா ஹை, குச் மில் ரஹா ஹை
யே பாத் க்யா ஹை, யே ராஃஜ் கயாஹை
கோயீ ஹமே பதா தே

தன் வசம் இழந்து, இது ஏன் இப்படி என்னை யாரோ இழுப்பது போல் போகிறேன் ?
இது என்ன, எந்தத் தளை  என்னை பந்தப்படுத்துகிறது !
 எதையோ இழக்கிறேன் , ஏதோ கிடைக்கிறது 
இது என்ன விஷயம் ? இது என்ன ரகசியம் ?
இதை யாராவது சொல்வார்களா ?


हम खो चले, चाँद है या कोई जादूगर है
या मदभरी, ये तुम्हारी नज़र का असर है
सब कुछ हमारा, अब है तुम्हारा
ये बात क्या है, ये राज़ क्या है 
कोई हमें बता दे
दिल की नज़र से...


ஹம் கோ சலே, சாந்த் ஹை யா கோயீ ஜாதுகர் ஹை
யா மத்பரீ, தும்ஹாரீ  நஃஜர் கா அஸர் ஹை
ஸப் குச் ஹமாரா, அப் ஹை தும்ஹாரா
யே பாத க்யா ஹை, யே ராஃஜ் கயா ஹை
கோயீ ஹமே பதா தே

இது என்ன - சந்திரனா, எதாவது மந்திரவாதியா ?
நான் என்னையே மறந்துவிட்டேன் !
இல்லையெனில், இது உன் போதை தரும் கண்களின்  வலிமையா?
இப்போது என்னுடையதெல்லாம் உனதாகிவிட்டது !
இது என்ன விஷயம், இது என்ன ரகசியம்,
யாராவது நமக்கு விளக்குவார்களா?


आकाश में, हो रहें हैं ये कैसे इशारे 
क्या, देखकर, आज हैं इतने खुश चाँद-तारे
क्यों तुम पराये, दिल में समाये 
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से...


ஆகாஷ் மே, ஹோ ரஹே  ஹை கைஸே இஷாரே
க்யா தேக்கர் ஆஜ் ஹை இத்னே குஷ் சாந்த் -தாரே
க்யோ(ன்) தும் பராயே, தில் மே ஸமாயே
யே பாத் க்யா ஐ, யே ராஃஜ் கயா ஹை
கோயீ ஹமே பதா தே

ஆகாயத்தில் என்ன ரகசிய   சங்கேதம் தோன்றுகிறது ?
எதைப்பார்த்து  நிலவும் நக்ஷத்திரங்களும் இன்று இவ்வளவு
சந்தோஷமடைந்திருக்கின்றன !
உன்னைப்போன்ற  வெளி நபர் இன்று என் மனதில் எப்படி நிறைந்தாய் !
இது என்ன விஷயம், இது என்ன ரகசியம் ?
யாராவது நமக்குச் சொல்வார்களா ?

உண்மையான கவி எழுதிய பாடல், காவிய மணம் தவழ்கிறது. "தில் கீ நஃஜர் ஸே, நஃஜ்ரோ(ன்) கீ தில் ஸே " என்ற இந்த முதல் வரியை  மொழிபெயர்ப்பது இயலாது ! அற்புதமான வாக்கு!

இப் பாடல்களில்  வரும் நிலவு, நக்ஷத்திரம், தென்றல் போன்றவை நமக்கு சங்கப் பாடல்களை நினைவூட்டுகின்றன. இவற்றை வைத்துப் பாடாத கவிஞரே இல்லை எனலாம். இன்னொரு பாடல்.
















ஸா(ன்)வ்லே ஸலோனீ  ஆயே
படம் : ஏக் ஹீ ராஸ்தா 1957 Ek Hi Rasta
கவி : மஜ்ரூ ஸுல்தான்புரி
இசை : ஹேமந்த் குமார்    Hemant Kumar

 साँवले सलोने आये दिन बहार के
झूमते नज़ारे झूमे रंग उगार के
 नदी किनारे
 कोय्ल पुकारे
 आया ज़माना गाओ गीत प्यार के …
झूउम के पवन देखो चली चली
प्यार के नशे में खिली कली कली
 फूलों के दर से ये भँवरा पुकारे
आये दीवाने तेरे इंतज़ार के …

 डोलती घटा के संग डोले जिया
बाग में पपीहा बोले पिया पिया
 ऋत रंगीली कहे करके इशारे
छेड़ो फ़साने दिल-ए-बेक़रार के

ஸா(ன்)வ்லே ஸலோனே ஆயே தின் பஹார் கே
ஜூம்தே நஃஜாரே ஜூமே ரங்க்  உகார் கே
நதீ கினாரே
கோயல் புகாரே
ஆயா  ஃஜமானா  காவோ கீத் ப்யார் கே

வஸந்த காலம் வந்துவிட்டது; மனதில் மகிழ்ச்சி பிறந்துவிட்டது
சுற்றிலும் இயற்கை வண்ணமயமாக  மாறிவிட்டது!
நதியின் கரையில் குயில் கூவுகிறது:
அன்பான நாட்கள் வந்துவிட்டன, கீதமிசைப்போம்!



ஜூம்கே பவன் தேகோ சலீ  சலீ
ப்யார் கே நஷே மே கில் கலீ கலீ
பூலோ(ன்) கே டர் ஸே ஏ பவ்ரா புகாரே
ஆயே தீவானே தேரே இந்த ஃஜார் கே.......

மெல்லிய பூங்காற்று இனிமையாக வீசுகிறது
அன்பின் போதையில் மொக்குகள் மலர்கின்றன!
வண்டுகள் மலர்களை முத்தமிடுகின்றன !
காத்திருந்த நாட்கள் ஒடிவிட்டன!

டோல்தீ கடா கே ஸங்க் டோலே ஜியா
பாக் மே பபீஹா போலே பியா பியா
ருத் ரங்கீலி கஹே கர்கே இஷாரே
சோடோ ஃபஸானே தில்-ஏ-பேகரார் கே
ஓடும் மேகங்களுடன் மனதும் ஒடுகிறது !
சோலையில் பறவைகள் இனிய மொழிகளில் கொஞ்சுகின்றன!
இந்த ரம்யமான சூழ்நிலை ஏதோ  சங்கேத மொழியில் சொல்கிறது -
நாமும் அன்பில் திளைக்கும்  நாட்கள் வந்துவிட்டன !



flowers-gardens.net

இங்கும் இயற்கையுடன் சம்பந்தப் படுத்தியே பாடுகிறார் ! இதுவும் நமது பழைய இலக்கியத்தை நினைவூட்டுகிறது.
இத்தகைய பாடல்கள் நிறைந்த 50களை  பொன்னான நாட்கள்   the golden period of film music என்று சொல்வது பொருத்தம் தானே !


No comments:

Post a Comment