91. வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ! -1
By Steve Wilson CC BY -SA 2.0 Creative commons via Wikimedia Commons.
இதுவரை வந்த சில கட்டுரைகளைப் பார்த்து (82 - 90) நமது ஹிந்தி சினிமா ஏதோ தத்துவக் கூடாரம் என்று நினைத்துவிட வேண்டாம்! சினிமா வியாபார சாதனம் தான் . இதில் 'பல ' விஷயங்களும் இருக்கின்றன. எது இருந்தாலும் நமது சிறந்த கவிகள் சில தத்துவங்களைச் சொல்லாமல் இருந்ததில்லை., நூற்றுக்கணக்கான அத்தகைய பாடல்களிலிருந்து சிலவற்றையே பார்த்தோம். ஆனால் சினிமாவே தத்துவமயமாகிவிடாது!
இன்றைய சினிமா கவர்ச்சி என்ற அடிப்படையில் ஒடுகிறது, இதற்கு இரு முக்கிய சக்கரங்கள் : ஆண்-பெண் உறவு, அடி-தடி சண்டை ! இதுவும் கட்டுக் கடங்காமல் போகிறது. கதை, கிதை யென்றெல்லாம் நம்மவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.
ஆனால் நமது கவிஞர்கள் மிக அருமையான கவிதைகளையும் வாழ்வின் பல நிலைகளையும் பிரதிபலிப்பதாக எழுதியிருக்கிறார்கள்.. இவற்றில் மிக சுவாரஸ்யமானவை காதல் கவிதைகள், அதிலும் டூயட் பாடல்கள். இவை இந்திய சினிமாவிற்கே உரித்தானவை! உண்மையில் இசை அம்சத்தில் எந்த ஹாலிவுட்டும் கோலிகுண்டும் நம்முடன் போட்டி போட இயலாது!
சில நல்ல பாடல்களை இங்கே பார்க்கலாம்.
யே ராத் யே சாந்த்னீ
ये रात ये चाँदनी फिर कहाँ
सुन जा दिल की दास्ताँ
யே ராத் யே சாந்த்னீ ஃபிர் கஹா(ன்)
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)
இந்த இரவு,இந்த நிலவொளி -
இவற்றை மீண்டும் எங்கு காண்போம் ?
என் மனது கூறும் கதையைக் கேள்
पेड़ों की शाखों पे सोई-सोई चाँदनी
तेरे खयालों में खोई-खोई चाँदनी
और थोड़ी देर में, थक के लौट जाएगी
रात ये बहार की, फिर कभी न आएगी
दो एक पल और है ये समां
सुन जा दिल की...
பேடோன் கீ ஷாகோ(ன்) பே ஸோயீ ஸோயீ சாந்த்னீ
தேரே கயாலோ(ன்) மே கோயீ-கோயீ சாந்த்னீ
ஔர் தோடீ தேர் மே, தக் கே லௌட் ஜாயேகீ
ராத் யே பஹார் கீ, ஃபிர் கபீ ந ஆயேகீ
தோ ஏக் பல் ஔர் ஹை யே ஸமா
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)
ஹே ! இந்த மரக்கிளைகளின் மீது நிலவொளி உறங்குகிறது !
உனது நினைவுகளில் இந்த நிலவொளி அலைகிறது !
சிறிது நேரத்தில் அது களைப்படைந்து திரும்பிப் போய்விடும்!
இந்த வசந்த கால இரவு மீண்டும் திரும்பி வராது.
இந்த இனிய பொழுது இன்னும் சில க்ஷணங்கள்தான் இருக்கும்.
இப்பொழுதே என் மனதின் கதையைக் கேள்.
लहरों के होंठों पे धीमा-धीमा राग है
भीगी हवाओं में ठंडी-ठंडी आग है
इस हसीन आग में, तू भी जलके देख ले
ज़िंदगी के गीत की, धुन बदल के देख ले
खुलने दे अब धड़कनों की ज़बाँ
सुन जा दिल की...
லஹரோ(ன்) கீ ஹோடோ(ன்) பே தீமா-தீமா ராக் ஹை
பீகீ ஹவாவோ(ன்) மே டண்டீ-டண்டீ ஆக் ஹை
இஸ் ஹஸீன் ஆக் மே தூ பி ஜல்கே தேக் லே
ஜிந்தகீ கே கீத் கீ துன் பதல் கே தேக் லே
குல்னே தே அப் தட்கனோ(ன்) கீ ஃஜபா(ன்)
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)
இந்த அலைகளின் உதடுகளில் மெல்லிய இசை இனிதாகத் தவழ்ந்து வருகிறது!
ஈரத்துளிகள் நிறைந்த இந்தக் காற்றில் குளிர்ந்த நெருப்பு வீசுகிறது!
இந்த அழகிய நெருப்பில் நீயும் விழுந்து,
அது எப்படி இருக்கிறதென்று பார்!
வாழ்க்கையின் கீதம்- அதன் ராகத்தை மாற்றிப் பார் !
[ அந்த முயற்சியில் இறங்காதே!]
இதயத்துடிப்பின் குரல் வெளிவரட்டும்!
இப்பொழுதே மனதின் கதையைக் கேட்டுச் செல்.
जाती बहारें हैं, उठती जवानियाँ
तारों के छाँव में पेह्ले कहानियाँ
एक बार चल दिये, गर तुझे पुकार के
लौटकर न आएंगे, क़ाफ़िले बहार के
आजा अभी ज़िंदगी है जवाँ
सुन जा दिल की...
ஜாதீ பஹாரே(ன்) ஹை உட்தீ ஜவானியா(ன்)
தாரோ(ன்) கே சாவ்(ன்) மே பெஹ்லே கஹானியா
எக் பார் சல் தியே, கர் துஜே புகார் கே
லௌட் கர் ந ஆயேங்கே, காஃபிலே பஹார் கே
ஆஜா அபீ ஃஜிந்தகீ ஹை ஜவா(ன்)
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்).
வஸந்தம் மறைந்துகொண்டிருக்கிறது, இளமை பொங்குகிறது
நமது கதை இந்த நக்ஷத்திரங்களின் நிழலில் பொதிந்திருக்கிறது
வஸந்தத்தின் இந்த அணிவகுப்பு -
உன்னை அழைத்துவிட்டு, பின் விலகிவிட்டால்
மீண்டும் அது திரும்பி வராது !
வாழ்க்கை இளமையாக இருக்கிறது-
இப்பொழுதே நீ வந்துவிடு !
மனதின் கதையைக் கேட்டுச் செல்.
இந்தப் பாடலை எழுதியவர் ஸாஹிர் லுதியான்வி. படம்: ஜால் Jaal 1952.ஆயிரக்கணக்கான காதல் பாடல்கள் இருக்கின்றன. பல மிக அருமையானவை, அவற்றிலும் சிகரமாக அமைந்தது இப்பாடல். ஹிந்தி/உர்து கவிதையின் முழு அழகையும் பொழிபெயர்ப்பில் தர இயலாது. ஆனால், நிலவொளி, கடல் அலை, மரம், நக்ஷத்திரம், வசந்த காலம் என இயற்கையின் பல அம்சங்களையும் காதலுடன் இணைத்துப் பாடியது, இது ஒரு இயற்கைச் சக்தி என்பதை மிக அருமையாக விளக்குகிறது. இதுவே வாழ்வின் கீதம், இதற்கு எதிராகப் போகாதே என்கிறார் கவி. இது சங்க இலக்கியப் பாடல்களை நினைவுபடுத்துகிறது! இந்த அருமையான பாடலில் காதல், கீதல் என்ற சொல்லே இல்லை ! எவ்வளவு நாசூக்காகச் சொல்லிவிட்டார்!
இது தலைவன் பாடும் பாடலாக இருக்கிறது. இதையே ஒரு சோக கட்டத்தில் இருவரும் சேர்ந்து பாடும் நிலையிலும் பாடியிருக்கிறார்.
ये रात ये चाँदनी फिर कहाँ, सुन जा दिल की दास्तां
चाँदनी रातें प्यार की बातें खो गयी जाने कहाँ
யே ராத் யே சாந்த்னீ ஃபிர் கஹா(ன்),
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)
சாந்த்னீ ராதே(ன்) ப்யார் கீ பாதே(ன்)
கோ கயீ ஜானே கஹா(ன்)
இந்த இரவு, இந்த நிலவொளி இவற்றை மீண்டும் எங்கு காண்போம் ?
மனதின் கதையைக் கேட்டுச் செல்.
நிலவொளியில் மிதந்த அந்த இரவுகள், அந்த அன்பு மொழிகள்-
அவை எங்கே தொலைந்து போய்விட்டன ?
आती है सदा तेरी, टूटे हुए तारों से
आहट तेरी सुनती हूँ, खामोश नज़ारों से
भीगी हवा, उमड़ी घटा, कहती है तेरी कहानी
तेरे लिये, बेचैन है, शोलों में लिपटी जवानी
सीने मे बलखा रहा है धुआं
सुन जा दिल की...
ஆதீ ஹை ஸதா தேரீ, டூடே ஹுவே தாரோ(ன்) ஸே
ஆஹட் தேரீ ஸுன்தீ ஹூ(ன்), காமோஷ் நஃஜாரோ(ன்) ஸே
பீகீ ஹவா, உம்டீ கடா, கஹதீ ஹை தேரீ கஹானீ
தேரே லியே, பேசைன் ஹை, ஶோலோ(ன்) மே லிப்டீ ஜவானீ
ஸீனே மே பல்கா ரஹா ஹை துவா(ன்)
ஸுன் ஜா திக் கீ தாஸ்தான்
உடைந்து விழும் நக்ஷத்திரங்கள்-
அவற்றில் உன் இருப்பை நான் உணர்கிறேன்.
உன் காலடியோசையை நிசப்தமான பார்வையுடன் கேட்கிறேன்.
குளிர்ந்த காற்று, எழும்பும் மேகங்கள் உன் கதையைச் சொல்கின்றன
உனக்காக நான் அமைதியை இழந்துவிட்டேன்
புகை மார்பை அழுத்துகிறது
மனதின் கதையைக் கேட்டுச் செல்.
लहरों के लबों पर हैं, खोये हुए अफ़साने
गुलज़ार उम्मीदों के, सब हो गये वीराने
तेरा पता, पाऊं कहाँ, सूने हैं सारे ठिकाने
जाने कहाँ, गुम हो गये, जा के वो अगले ज़माने
बरबाद है आरज़ू का जहाँ, सुन जा दिल की दास्तां
லஹரோ(ன்) கே லபோ பர் ஹை,
கோயே ஹுவே அஃப்ஸானே
குல்ஃஜார் உம்மீதோ(ன்) கீ, ஸப் ஹோகயே வீரானே
தேரா பதா, பாவூ(ன்) கஹா(ன்), ஸூனே ஹை ஸாரே டிகானே
ஜானே கஹா)ன்), கும் ஹோகயே, ஜா கே ஓ அகலே ஃஜமானே
பர்பாத் ஹை ஆர் ஃஜூ கா ஜஹா(ன்).
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)
இந்த அலைகளின் இதழ்களில்
மறந்துபோன கதைகள் புதைந்துள்ளன
நம்பிக்கை என்னும் பூஞ்சோலை காலியாகிவிட்டது
உன்னை எங்கு என்று தேடுவது? எல்லா இடங்களும் காலியாக இருக்கின்றன.
நீ வேறு எந்த உலகத்தில் சென்று எங்கு மறைந்து விட்டாயோ தெரியவில்லை
ஆசை என்னும் உலகம் அழிந்துவிட்டது.
மனதின் கதையைக் கேட்டுச் செல்.
கவிதை வளம், இசை, படமாக்கிய விதம், காட்சிகள் என்று எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கும் இப்பாடல் 65 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறது. வி.கே மூர்த்தியின் படப்பிடிப்பு இப்பாடல் காட்சியின் மிகச்சிறந்த அம்சம். பார்த்து, கேட்டு மகிழவேண்டிய பாடல். One of the best of Hemant Kumar and Lata Mangeshkar, in their young voices. It has been a source of great pleasure for 60 years. இசை அமைத்தவர் எஸ்.டி பர்மன்.
இதோ, இன்னொரு அருமையான பாடல்.
ஓ மேரீ தரஃப்
वो मेरी तरफ़ यूँ चले आ रहे हैं कि अरमान धड़कन से टकरा रहे हैं वो मेरी तरफ़ यूँ उन्हें देखने को उठीं मेरी नज़रें मुझे देखते ही झुकी उन की पलकें न जाने वो क्यों हम से शरमा रहे हैं कि अरमान धड़कन से टकरा रहे हैं वो मेरी तरफ़ यूँ जो कलियाँ खिली हैं तो गुल भी खिलेंगे निगाहें मिली हैं तो दिल भी मिलेंगे कि साँसों से पैग़ाम आ-जा रहे हैं कि अरमान धड़कन से टकरा रहे हैं वो मेरी तरफ़ यूँ उन्हें देख कर दिल लगा रंग लाने है दिल क्या कहीं बात माने न माने कि हम दिल कि हरकत से घबरा रहे हैं कि अरमान धड़कन से टकरा रहे हैं वो मेरी तरफ़ यूँ
ஓ மேரீ தரஃப் யூ(ன்) சலே ஆரஹே ஹை
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை
ஓ மேரீ தரஃப் யூ(ன்)
அவள் என் பக்கம் நோக்கி நடந்து வருகிறாள்
இதயத்துடன் ஆசையும் துடிக்க ஆரம்பித்து விட்டது !
உன்ஹே தேக்னே கோ உடீ மேரீ நஃஜ்ரே (ன்)
முஜே தேக்தே ஹீ ஜுகே உன் கீ பல்கேன்
ந ஜானே ஓ க்யூ(ன்) ஹம்ஸே ஷர்மா ரஹே ஹை
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை
அவளைப் பார்ப்பதற்காக நான் கண்களை உயர்த்தினேன்
என்னைக் கண்டவுடனேயே அவள் இமைகள் தாழ்ந்துவிட்டன!
என்னைக் கண்டு ஏன் வெட்கம் வரவேண்டும்? தெரியவில்லை !
இதயத்துடன் ஆசையும் துடிக்க ஆரம்பித்து விட்டது !
ஜோ கலியா(ன்) கிலீ ஹை தோ குல் பீ கிலேங்கே
நிகாஹே(ன்) மிலீஹை தோ தில் பீ மிலேங்கே
கீ ஸாஸோ(ன்) மே பைகாம் ஆ-ஜா ரஹே ஹை
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை
ஓ மேரீ தரஃப் யூ(ன்).....
மொக்கு வந்து விட்டது, இனி மலரவும் செய்யும்!
கண்கள் சந்தித்து விட்டன, மனங்களும் சந்திக்கும்!
மூச்சுடன் செய்திகளும் வந்து போகின்றன !
இதயத்துடன் ஆசையும் துடிக்க ஆரம்பித்து விட்டது!
உன்ஹே தேக் கர் தில் லகா ரங்க் லானே
ஹை தில் க்யா கஹீ(ன்) பாத் மானே ந மானே
கீ ஹம் தில் கி ஹர்கத் ஸே கப்ரா ரஹே ஹை
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை
ஓ மேரீ தரஃப் யூ(ன்)........
அவளைப் பார்த்த பிறகு மனதில் புதிய எழுச்சி மலர்ந்தது!
மனது இனி என் வசம் இருக்குமா ? தெரியவில்லை !
மனதின் இந்தப் புதிய நிலை அச்சமாகவும் இருக்கிறது !
இதயத்துடன் ஆசையும் துடிக்க ஆரம்பித்து விட்டது!
இந்தப் பாடலை எழுதியவர் வ்ரஜேந்த்ர கௌர், Brajendra Gaud. படம் : காஃபிலா, 1952. Kaafila.
இங்கும் பாருங்கள் , எத்தனை ரசனையுடன், நாசூக்காக எழுதியிருக்கிறார். கிஷோர்குமாரின் அருமையான குரலில் இந்தப் பாடல் fantastic. This has been my favourite for 60 years. இசை அமைத்தவர்கள் ஹுஸன்லால்-பகத்ராம்.
மற்றொரு எளிய, இனிய பாடல்: கதாநாயகி பாடுவது.
ஸோகயா ஸாரா ஃஜமானா
सो गया सारा ज़माना नींद क्यों आती नहीं
ऐ हवा जाकर उसे तू साथ क्यों लाती नहीं
चाँद पहले भी निकलता था मगर ऐसा न था
आज ऐसी बात क्यों है ये समझ आती नहीं
चाँदनी कुछ चाँद से कह कर ज़मीं पे आ गई
जाने क्या देखा यहाँ अब लौट कर जाती नहीं
ஸோ கயா ஸாரா ஃஜமானா, நீந்த் க்யூ(ன்) ஆதீ நஹீ
யே ஹவா ஜாகர் உஸே தூ ஸாத் க்யூ(ன்) லாதீ நஹீ
உலகம் முழுதும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது,
எனக்கு மட்டும் ஏன் நித்திரை வரவில்லை ?
யே பூங்காற்றே ! நீ போய் ஏன் அவரைக்
கையோடு அழைத்துவரலாகாது ?
சாந்த் பஹ்லே பீ நிகல்தா தா மகர் ஐஸா ந தா
ஆஜ் ஐஸீ பாத் க்யூ(ன்) ஹை யே ஸமஜ் ஆதீ நஹீ
சந்திரன் முன்பும் வந்துகொண்டுதான் இருந்தது -
ஆனால் இப்படி இருந்ததில்லை !
இன்று அதற்கு என்ன வந்துவிட்டது ? ஏதோ ஒரு மாறுதல்
ஓன்றும் புரியவில்லை !
சாந்த்னீ குச் சாந்த் ஸே கஹ் கர் ஃஜமீன் பே ஆகயி
ஜானே க்யா தேகா யஹா(ன்) அப் லௌட் கர் ஜாதீ நஹீ
நிலவொளி நிலவினிடம் ஏதோ சொல்லிவிட்டு
பூமியில் இறங்கிவிட்டது !
இங்கு அப்படி என்ன கண்டதோ தெரியவில்லை !
திரும்பிப்போக மறுக்கிறது !
ஸோகயா ஸாரா ஃஜமானா .....
உலகம் முழுதும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது !
இது 1957ல் வந்த மிஸ்மேரி Miss Mary படத்தில் வந்த பாட்டு. (தமிழில் மிஸ்ஸியம்மா )
எழுதியவர் ராஜேந்த்ர க்ருஷ்ணா. Rajinder Krishan. இசை : ஹேமந்த் குமார்.
இங்கும் காதல், கீதல் என்று கொச்சையாகச் சொல்லாமல் எவ்வளவு நளினமாக, நாசூக்காக எழுதியிருக்கிறார் ! அன்றைய ரசனை வேறுதான் !
இத்தகைய பாடல்களைக் கேட்டு மகிழ்வதே இக்கலைஞர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்!
[கம்பதாசன் என்று ஒரு கவிஞர் இருந்தார், பல ஹிந்திப் பாடல்களை இலக்கிய வளம் குன்றாமல் தமிழில் தந்தார். இந்தப் பாடல்களை அவரைப் போன்றவர்கள் தமிழில் தரவேண்டும்.]
No comments:
Post a Comment