Tuesday, 2 August 2016

62. ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -2


62.ஸ்ரீமத் பாகவதமும்
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -2



Sri Shuka narrating Srimad Bhagavatam to Parikshit.
Picture from ISKCON  sources. Thanks.

பகவானின் நேரடி உபதேசமாக நமக்குக் கிடைத்திருப்பவை இரண்டு கீதைகள் : பகவத் கீதையும் உத்தவ கீதையும். பகவானின் வாய்மொழியாக பல புராணங்களிலும் சில விஷயங்கள் வருகின்றன. ஆனால், கீதைகளைப் போன்று தொடர்ச்சியாக வருவதில்லை. 
இரு கீதைகள் : ஒரு உபதேசம்.

இந்த இருகீதைகளின் முக்கிய உபதேசம், நாம் மற்ற விஷயங்களை விட்டுவிட்டு பகவானையே சரணடைய வேண்டும் என்பதாகும். இதை பகவத்கீதை  ஸ்லோகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் சொல்கிறது :

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ
அஹம் மோக்ஷயிஷ்யாமி ஸர்வபாபேப்யோ மா ஶுச                 18.66

எல்லா  தர்மங்களையும் விட்டுவிட்டு  என் ஒருவனையே ஶரணமடைவாயாக. நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.


இங்கே தர்மம் என்பது என்ன ? தர்மங்களைத் த்யாகம் செய்வது என்றால் என்ன ? தர்மங்களை செய்யாமல் விட்டுவிடுவதா, அல்லது  அவற்றை பகவானின் ஆராதனையாகச் செய்து,  அவற்றின்  பலனை  பகவானுக்கு அர்ப்பணிப்பதா ? இப்படியெல்லாம் விவாதித்து பண்டிதர்கள் குழப்புகிறார்கள்.


ஒன்று மட்டும் நிச்சயம். இந்த ஶ்லோகம் புரட்சிகரமானது ! தர்மத்தைப் பற்றிய குழப்பத்தை ( 2.7 )விலக்க வந்த ஒரு ஶாஸ்திரம், தர்மங்களையே விலக்கு என்று சொல்லி முடிகிறது ! இதன் மர்மம் என்ன ?

தர்மமும் கர்மமும்

இதற்கு பண்டிதர்கள் பதில் சொல்ல முடியாது. ஆத்ம ஞானிகள்தான்  சொல்ல முடியும். இதை  ஸ்ரீ ராமக்ருஷ்ணர் விளக்கியிருக்கிறார்.






1884ம் வருஷம், அக்டோபர் 11ம்தேதி. மாலை நேரம். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் தம் அறையில் அமர்ந்து பக்தர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். விஷயம் கர்மம், தர்மம் பற்றித் திரும்புகிறது. குருதேவர் அவருக்குப் பிடித்த வங்காளி பக்தர் ராமப்ரஸாதரின் ஒரு பாடலிலிருந்து சில வரிகளைப் பாடுகிறார் :








"I bow my head, says Prasad, before desire and liberation;Knowing the secret that Kali is one with the highest Brahman,I have discarded, once for all, both dharma and adharma."


குருதேவர் மஹேந்த்ரநாத் குப்தரிடம்  விளக்குகிறார்:

" உனக்கு தர்மம், அதர்மம் என்றால் என்ன என்று தெரியுமா ?இங்கு  சாஸ்திரங்களில் சொல்லியுள்ள தானம், ஶ்ராத்தம், ஏழைகளுக்கு உணவு தருதல், போன்ற  தர்மங்கள் என்று பொருள்.

"இந்த தர்மங்களைச்  செய்வது கர்ம மார்கம் என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் கடினமான பாதை. எந்த நோக்கமும் ( சங்கல்பமும் ) இல்லாமல் கர்மம்  புரிவது என்பது மிகவும் சிரமமானது. அதனால் ஒருவன் பக்திவழியைப் பின்பற்றவேண்டும் என்று  சொல்லப்படுகிறது.

"ஒருவன் வீட்டில் ஶ்ராத்தம் செய்துகொண்டிருந்தான். பலபேருக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே ஒரு கசாப்புக்காரன் ஒருபசுவை கொல்வதற்காக  ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அந்த பசுவை அடக்கி ஓட்டுவது சுலபமாக இல்லை; அதனால் களைத்துவிட்டான். ' இந்த சிராத்த வீட்டில் போய் நன்றாக விருந்துசாப்பாடு சாப்பிட்டால், களைப்பெல்லாம் போய்விடும் ; பின் மாட்டை நன்றாக ஓட்டிச் செல்லலாம் '  என மனதில் நினைத்து , அவ்வாறே செய்தான்.ஆனால் அவன் பசுவைக் கொன்ற பாவம் சிராத்தம் செய்தவனுக்கும் வந்தது ! அதனால்தான் பக்திவழி, கர்ம வழியைவிட நல்லது என்று நான் சொல்கிறேன். "

தர்ம விஷயம் சூக்ஷ்மம் நிறைந்தது. கர்மத்தில் சிறு தவறு  நேர்ந்தாலும் விளைவுகள் மாறிவிடும். "கஹனா கர்மணோ கதி : " என்கிறார் பகவான், கீதையில் (4.17 )

யுகந்தோறும் மாறும் தர்மம்


நம் சாஸ்திரங்களின் படி, தர்மம் யுகந்தோறும் மாறுபடுகிறது. இதனால்தான், பல யுகங்களில் தோன்றிய பல புராணங்களில் பலவகையான  தர்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. க்ருத யுகத்தில் த்யானமும் தவமும் முக்கியமாக இருந்தன. சிறு பிள்ளையான த்ருவன்கூட தபஸ் செய்தான்! த்ரேதாயுகத்தில் யாக-யஜ்ஞங்கள் முக்கியமாயின. த்வாபரயுகத்தில் அர்ச்சாவதார மூர்த்திகளின் வழிபாடு, தீர்த்தயாத்திரை முதலியவை ப்ரதானமாயின.



இன்றும் இவையெல்லாம் பெயரளவில் இருக்கின்றன.ஆனால் நடப்பது என்ன ? முன்யுகத்தில் த்யானம் செய்து கடவுளை அறிய முற்பட்டார்கள். அசுரர்கள் தாம்  தவம் செய்து வரங்கள் பெற்றார்கள். இன்றோ, த்யானம் ( meditation )என்ற பெயரில் நாம் உலகாயத நன்மைகளையே கோருகிறோம் -பண்டைய அசுரர்களைப்போல ! இன்று, ஸ்தல சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, எஜமான சுத்தி என்று எதுவுமே இல்லை- பின் என்ன யஜ்ஞம் செய்து கிழிப்பது? நமது எல்லா நதிகளும் அசுத்தமாகிவிட்டன; கோவில்கள் வ்யாபாரத் தலங்களாகிவிட்டன ! அங்கு பயன்படும் அத்தனை பொருள்களும் கலப்படம் ! பால். தேன், சந்தனம், கல்பூரம்- எல்லாம் கலப்படம் ! அர்ச்சகர்கள் காசுக்குத் தகுந்த மாதிரி மந்திரம் சொல்கிறார்கள் ! பாடல் பெற்ற தலங்களின் நிலையைப் போய்ப்பாருங்கள் ! பல கோவில்களில் அர்ச்சகரே இல்லை ! பல அர்ச்சகர்களுக்கு மந்திரமே வருவதில்லை ! கோவில்கள் உள்ளும் வெளியும் அசுத்தம், குப்பை-கூளம்.அரசு நிர்வாகத்தில் உள்ள  கோவில்களில் ஆகம விதிகளைக்கூட சரிவர மதிப்பதில்லை. கோவில் சொத்தில் கைவைத்து ஏதேதோ செய்கிறார்கள்..பழநி கோவிலில் மூல விக்ரஹத்தையே சுரண்டிச் சுரண்டித் தேய்த்துவிட்டார்கள். இதன் பெயர்தான் வழிபாடா ? 

கலியுக தர்மம்

இந்தப் பழைய முறைகள் எல்லாம் கலியுகத்தில் செல்லாது என்பது நமது சாஸ்திரமே சொல்லும் விஷயம். இதை விளக்கத்தான் பாகவத புராணமே எழுந்தது. அதன் முதலிலும் ( மாஹாத்மியம் ) 12வது ஸகந்தத்திலும் கலியுகத்தின் தன்மை நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.






Narada instructs Vyasa to write Bhagavatam.
Copyright details not known. Used here for non-commercial, educational purpose. Thanks to the creator of the picture.


யதாமுகுந்தோ பகவான் க்ஷ்மாம் த்யக்த்வா ஸ்வபதம்கத:
தத்தினாத் கலிராயாத:  ஸர்வஸாதன பாதக :                          1.66

பகவான் முகுந்தர் என்றைக்கு மண்ணுலகை நீத்து தம் இடத்திற்கு ஏகினாரோ, அன்றே, நல்லவைகளுக்குத் தீங்கு செய்யும் கலியுகம் பிறந்துவிட்டது.

கலினாதர்ம மித்ரேண தரேயம் பாதிதாதுனா                            1.30
இப்போது, அதர்மத்திற்குத் துணையான கலியுகம் ப்ரபஞ்சம் முழுதையும் ஆட்டுவிக்கிறது.

அட்டஶூலா ஜனபதா: ஶிவஶூலா த்விஜாதய:                         1.36
தேசத்தில் அன்னத்தை கடைகளில் விற்கிறார்கள்.
ப்ராம்மணர்கள் கூலிக்கு வேதம் கற்றுத்  தருகிறார்கள்.

....... யுகோயம் தாருண: கலி:
தேன லுப்த: ஸதாசாரோ யோகமார்கஸ் தபாம்ஸி  ச              1.57
பல கோரமான தீங்குகளை விளைவிக்கும்  கலியுகம் இப்போது நடைபெறுகிறது. ஆகவே ஸதாசாரம் ( நல்லொழுக்கம் ), யோகமார்கம், தவம் ஆகிய அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன.

குகர்மாத்சரணாத் ஸார : ஸர்வதோ நிர்கதோதுனா 
பதார்த்தா: ஸம்ஸ்திதா பூமௌ பீஜஹினாஸ்துஷா  யதா        1.70

மக்கள் தவ நெறியைவிட்டு மற நெறி பிடித்தொழுகுவதால் , எல்லாப் பொருள்களின் ஸாரமும் அழிந்துவிட்டது. பொருள்கள் விதையற்ற பதர்போல் ஆகிவிட்டன. 

அத்யுக்ர பூரி கர்மாணோ  நாஸ்திகா ரௌரவா ஜனா: 
தேபி திஷ்டன்தி தீர்தேஷு தீர்த்த ஸாரஸ்ததோ கத :                1.72

நதி தீரங்களிலும், புண்ய இடங்களிலும் பலவித தீச்செயல்கள் புரிபவர்கள் , தெய்வமில்லை என்று சொல்லித் திரியும் நாஸ்திகர்கள், தீய ஒழுக்கத்தால் நரகம் புக இருப்பவர்கள் ஆகியோர் வசிப்பதால் தீர்த்தங்களின் மஹிமை குறைந்து பெருமை அழிந்தது.

இவ்வளவு தீமை இருந்தும், இதிலிருந்து தப்ப எளிய உபாயமும் இருக்கிறது:


யத் ஃபலம்  நாஸ்தி  தபஸா  ந யோகேன ஸமாதினா
தத் ஃபலம் லபதே ஸம்யக்கலௌ  கேஶவ கீர்தனாத்                    1.68

தவம், யோகம், சமாதி ஆகிய உபாயங்களால் பெறவியலாத உயர்ந்த பதவி கலியுகத்தில் பகவான் கேஶவனின் நாமங்களைப் பாடுவதாலேயே எளிதில்  பெறலாகும்.

ஏகாகாரம் கலிம் த்ருஷ்ட்வா ஸாரவத்  ஸாரனீரஸம்                  1.69

இந்தக் கலிகாலம் சாரமில்லாததானாலும்,  பகவான் நாம ஸங்கீர்த்தனத்தினாலேயே அனைத்து நன்மைகளையும் பெறலாம். [இதைக் கருதியே பரீக்ஷித் இதை விட்டுவைத்தான் .]


ஸத்யாதி த்ரியுகே  போத வைராக்யௌ முக்தி ஸாதகௌ
கலௌ து கேவலா பக்தி: பரஹ்ம ஸாயுஜ்ய காரிணி                   2. 4

ஸத்ய (த்ரேதா) யுகம், த்ரேதாயுகம், த்வாபர யுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் ஞானமும் வைராக்யமுமே முக்திக்கு சாதனங்கள். ஆனால் இந்தக் கலியுகத்தில் பக்தி யொன்றுதான் ப்ரஹ்ம சாக்ஷாத்காரத்திற்கான [ முக்திக்கான ]  காரணமாகும்.

ந தபோபிர் ந வேதைஶ்ச  ந ஞானேனாபி கர்மணா
ஹரிர் ஹி ஸாத்யதே பக்த்யா ப்ரமாணம் தத்ர கோபிகா              2.18

தவம், வேதாத்யயனம், ஞானம், கர்மயோகம், ஆகிய எந்த சாதனங்களாலும் பகவானை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பக்திக்கு மட்டுமே அவர் கட்டுண்டவர்.  இதற்கு கோபிகைகளே ப்ரமாணம்.

பக்திர் ஏகைவ முக்திதா                                                                  2.21

முக்தியை அடைய பக்தி ஒன்றே  போதும்.

[ இவையெல்லாம் தேவரிஷி நாரதர் கூற்றாக வருபவை. கலியுகம் பற்றிய விவரங்கள் பாகவதத்தில் நிறைய வருகின்றன. அன்பர்கள் மூலத்தைப் படித்து அறியவேண்டும். ப்ரவசனம் செய்பவர்களும் விவரங்களை முழுதும் சொல்வதில்லை. பலவற்றை மழுப்புகிறார்கள். மொழிபெயர்ப்பில் கூட எல்லாம் சரியாகக் கொடுப்பதில்லை. ]

இவ்வளவு இருந்தும் ஸ்ரீ ஶுக ப்ரஹ்மம், கலியே உயர்ந்தது என்கிறார் !


கலேர் தோஷனிதே ராஜன் நஸ்தி ஹ்யேகோ மஹத் குணான்
கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த ஸங்க பரம் வ்ரஜேத்           12. 51

பரீக்ஷித் ராஜனே ! தோஷங்கள் நிறைந்துள்ள இந்தக் கலியுகத்தில் ஒரே ஒரு நற்குணமும் உள்ளது. பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனது கீத்தனம்  ஒன்றினாலேயே , உலகியல் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது; முக்தியும் பெறலாம். பகவனது உயர்ந்த கதியும் கிடைக்கிறது.

க்ருதே யத் த்யாயதோ  விஷ்ணும்  த்ரேதாயாம் யஜதோ மகை:
த்வாபரே பரிசர்யாயாம் கலௌ தத்தரி கீர்தனாத்                          12.52


க்ருத  யுகத்தில் விஷ்ணுவை த்யானித்தலாலும், த்ரேதாயுகத்தில் அவருக்காக பெரிய யஜ்ஞங்கள் செய்வதாலும், த்வாபரயுகத்தில் அவரை முறைதவறாமல் பூஜித்ததாலும் பெறும் புண்யங்கள் யாவை உண்டோ, அவற்றை இக்கலியுகத்தில் பகவானது நாம ஸங்கீர்த்தனம் செய்வதாலேயே பெறலாம். 


த்யாயன்  க்ருதே யஜன் யஜ்ஞை : த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன்
யதாப்னோதி ததாப்னோதி  கலௌ ஸங்கீர்த்ய கேஶவம்  


க்ருத யுகத்தில் த்யானத்தின் மூலமும், த்ரேதாயுகத்தில் ய்ஜ்ஞங்களாலும், த்வாபர யுகத்தில் அர்ச்சனையினாலும் எதை அடையலாமோ அதை, கலியுகத்தில் பகவான் கேஶவனின் ஸங்கீர்தனத்தால் அடையலாம்.

[ இது 7வது ஸ்கந்தத்தில் ப்ரஹ்லாதன் சொல்வது .]

ஆக, கலிகாலத்தில் நன்மை தருவது பக்தி ஒன்றுதான் !





ஸ்ரீ ராமக்ருஷ்ணர் காட்டும் வழி





ஆகவே, இக்கலியுகத்தில் பக்தி ஒன்றுதான் முக்திக்கு நேர் சாதனம் என்பது  ஸ்ரீமத் பாகவதத்தின்  முடிவு. இதை தற்காலத்தில் தயங்காது சொன்னவர் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர். இதை அவர்  மீண்டும் மீண்டும் சொன்னார். அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறேன்.



The injunction is that the path of bhakti described by Narada is best suited to the Kaliyuga.   June 30, 1884


According to Narada, the devotees should sing the names and glories of God. The path of karma is not the right one for the Kaliyuga. Bhaktiyoga is the right path. ...The singing of the name and glories of God destroys the effect of past action.  October,2. 1884



Innumerable are the ways that lead to God.

What is Bhaktiyoga ? It is to keep the mind on God by chanting His name and glories. For the Kaliyuga the path of devotion is the easiest.This is indeed the path for this age.
The path of karma is very difficult.
To follow jnanayoga in this age is also very difficult.
Therefore Bhaktiyoga is prescribed for this age.
Bhaktiyoga is the religion for this age.
June 25, 1884 (this is detailed discussion )

care : 'to keep the mind on God ' ! This is ' मन्मना भव  ' மன் மனா பவ  as the Gita says !


The best path for this age is bhaktiyoga, the path of Bhakti prescribed by Narada : to sing the name and glories of God and pray to Him with a longing heart.

June 15,1884


இதைப்பற்றி அவர் மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் எவ்வளவு தீவிரமாகவும் சரியாகவும் ஸ்ரீமத் பாகவதத்தின் கருத்தைப் பிரதிபலிக்கிறார் என்பது பாகவதத்தையும், ஸ்ரீ ராமக்ருஷ்ணர் வாக்குகளையும் படித்தவர்களுக்கு எளிதில் விளங்கும். ஸ்ரீமத் பாகவதமே மனித உருவில் வந்து பேசுவதுபோலிருக்கிறது! நமது ஆன்மீக வாழ்வுக்கு இதைவிட ஆணித்தரமாக யார்  என்ன சொல்ல முடியும் ?



Note: 
All quotations from Sri Ramakrishna are from that greatest of great books: The Gospel of Sri Ramakrishna, Sri RK Math, Chennai. 

No comments:

Post a Comment