67. தேரும் படகும்
வாழ்க்கையில் நடத்தை முக்கியமானது என்பர் பெரியோர். யார் எந்தக் கொள்கை வேண்டுமானாலும் பேசலாம்; என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம். "கற்றபின் நிற்க அதற்குத் தக " என்பார் வள்ளுவர். இன்று பொதுவாக "Walk the talk " என்கிறார்கள். ஆனால் பொதுவாழ்வில் இதை இன்று நாம் பார்க்கமுடிவதில்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுமட்டும் இல்லை; சொல் ஒன்றும் செயல் வேறாகவும் இருக்கிறது.
தர்மம்- ஆசாரம்
சமய-ஆன்மீக வாழ்வில் கொள்கையை விட நடத்தைக்கே முக்கியத்வம் கொடுத்தனர் பெரியோர். நம் சமயத்திற்கு பெரியோர் வழங்கிய பெயர் "தர்மம்" என்பதே. புத்தரும் அவர் காட்டிய வழியை " தர்மம் " என்றே சொன்னார். அதாவது, நடத்தை. நமது மதத்தின் எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அங்கு நடத்தையே ப்ரதானமாக இருந்து வந்திருக்கிறது. இதன் அடிப்படையாக இருப்பது "யமம், நியமம் " என்ற இரண்டுமே. இதையே மத ஆசாரியர்கள் தங்கள் கருத்துக்கு ஏற்றபடி வெவ்வேறு பெயரில் வழங்கினார்கள். இதை பொதுவாக ஆசாரம் என்கிறோம். மேலாகப் பார்த்தால் வித்தியாசப்படுவதாகத் தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றுதான்.
வைதீக நெறியில் வந்தவர்களுக்கு வைதீக கர்மாக்களே ஆசாரத்தின் அடிப்படையாக இருந்தது. வேறு எண்ணங்களுக்கோ, செயல்களுக்கோ இடம்-நேரம் தராமல் மனதையும் உடலையும் ஸதா சத்கர்மாவில் ஈடுபடுத்தி அதன் மூலம் சித்த சுத்தி பெறவேண்டும் என்பது இதன் நோக்கம்
இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்? கர்மாவில் ஈடுபடாமல் இதைச் சாதிக்க முடியாதா? உடலெடுத்தவன் கர்மத்தில் ஈடுபட்டே தீரவேண்டும் என்பது இயற்கை (ப்ரக்ருதி )யின் விதி. (கீதை 3.5,8) இங்குதான் ஸாங்க்ய அறிவு பயன்படுகிறது! சதாகாலமும் கர்மாவிலேயே ஈடுபட்டால், அதன் நோக்கத்தையே மறந்துவிடக் கூடும் ! கர்மா வெறும் இயந்திர கதியில் நடைபெறும் ! ஆகவே, இதன் அடிப்படை நுட்பத்தைத் தெரிந்துகொள்ள வேணும்.
மனிதன் ப்ரக்ருதி வயப்பட்டவன். ஐம்பொறிகள். ஐம்புலன்கள், மனம் அஹங்காரம், முக்குணங்கள் ஆகியவற்றால் ப்ரக்ருதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறான். அதன் வழியே செயல்கள் செய்கிறான். சாஸ்திரங்கள் இவற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன. பல கட்டு-திட்டங்களை வகுத்திருக்கின்றன. அனால் , தான் ஆத்மா - இந்த உடலோ, அதனுள் இயங்கும் அன்தக்கரணங்களோ அல்லது அஹந்தையோ அல்ல என்ற நினைப்பு ( ஆத்ம-அனாத்ம விவேகம் ) வராதவரை, மனதை முழுதும் அடக்க முடியாது. இதை கீதை சுருக்கமாகச் சொல்கிறது.
इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः।
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः।।3.42।।
இந்த்ரியாணி பராண் யாஹு: இந்த்ரியேப்ய :பரம் மன :
மனஸ்து பரா புத்தி : ய: புத்தே பரத: து ஸ: 3.42
புலன்கள் (உடலைவிட ) மேலானவை என்பார்கள். இந்தப் புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது ( நுண்ணீயது ). மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. புத்தியைக் காட்டிலும் எது மிகவும் மேலானதோ அதுவே அது (ஆத்மா ).
एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना ।
ஏவம் புத்தே : பரம் புத்த்வா ஸம்ஸ்தப்ய ஆத்மானம் ஆத்மனா 3.43
இவ்வாறு புத்திக்கும் மேலானதை அறிந்து, நிச்சய புத்தியால் மனதையும் இந்த்ரியங்களையும் கட்டுப்படுத்தவேண்டும்.
சரீரம் = ரதம்!
ரோமானிய ரதம்
etc.usf.edu./clipart
இந்த ஆத்ம தத்துவத்தை அறியாதவன் எவ்வளவு கர்மா செய்தாலும் கடைசியில் கோட்டைவிடுவான் ! இதை கட உபநிஷதம் ஒரு உபமானத்தின் மூலம் விளக்குகிறது.
आत्मानँ रथितं विद्धि शरीरँ रथमेव तु ।
बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च ॥ ३॥
ஆத்மானம் ரதினம் வித்தி ஶரீரம் ரதமேவது
புத்திம் து ஸாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹமேவ ச
இந்த உடல் தேர் ஆகும். மனது கடிவாளம் ; புத்தி சாரதி. ஆத்மா தேரில் வீற்றிருப்பவன் ( சவாரி செய்பவன் ). இவ்விதம் அறியவேண்டும்.
इन्द्रियाणि हयानाहुर्विषयाँ स्तेषु गोचरान् ।
आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः ॥ ४॥
இந்த்ரியாணி ஹயானாஹு: விஷயாம்ஸ் தேசு கோசரான்
ஆத்மேந்த்ரிய மனோயுக்தம் போக்தேத் யாஹுர் மனீஷிண :
இந்திரியங்களைக் குதிரைகள் என்றும் விஷயங்கள் அவை செல்லும் பாதை யென்றும் கூறுவர். உடல். மனம் புலன்கள் ஆகியவற்றுடன் கூடிய ஜீவன் அனுபவிப்பவன் என ஞானிகள் கூறுகின்றனர்.
यस्त्वविज्ञानवान्भवत्ययुक्तेन मनसा सदा ।
तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टाश्वा इव सारथेः ॥ ५॥
யஸ்த்வ விஞ்ஞானவான் பவதி அயுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி அவஶ்யாணி துஷ்டாஶ்வா இவ ஸாரதே :
மனம் அடங்காமலும், விவேகமில்லாத புத்தியுடனும் இருப்பவன் எவனோ அவனுக்கு, சாரதிக்கு அடங்காத துஷ்டக் குதிரைகள்போல். இந்த்ரியங்கள் வசப்படமாட்டா.
यस्तु विज्ञानवान्भवति युक्तेन मनसा सदा ।
तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथेः ॥ ६॥
யஸ்து விஞ்ஞானவான் பவதி யுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி வஶ்யானி ஸதஶ்வா இவ ஸாரதே :
மனதை அடக்கி, விவேகமுள்ள புத்தியுடன் கூடியவன் எவனோ அவனுக்கு , சாரதிக்கு அடங்கிய நல்ல குதிரைகள் போல இந்த்ரியங்கள் வசப்பட்டவையாகும்.
यस्त्वविज्ञानवान्भवत्यमनस्कः सदाऽशुचिः ।
न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति ॥ ७॥
யஸ்த்வவிஞ்ஞானவான் பவதி அமனஸ்க : ஸதா அ ஶுசி :
ந ஸ தத் பதமாப்னோதி ஸம்ஸாரம் ச அதிகச்சதி
எப்போதும் விவேகமில்லாதவனாகவும், மனம் அடங்காதவனாகவும், தூய்மை இல்லாதவனாகவும் இருப்பவன் எவனோ அவன் பரமபதமாகிய இலக்கை அடையமாட்டான். (திரும்பத் திரும்ப ) பிறவிப்பாதையிலேயே சென்றுகொண்டிருப்பான்.
यस्तु विज्ञानवान्भवति समनस्कः सदा शुचिः ।
स तु तत्पदमाप्नोति यस्माद्भूयो न जायते ॥ ८॥
யஸ்து விஞ்ஞானவான் பவதி ஸமனஸ்க: ஸதா ஶுசி :
ஸ து தத் பதம் ஆப்னோதி யஸ்மாத் பூயோ ந ஜாயதே
எப்போதும் விவேகமுள்ளவனாகவும். மனம் அடங்கியவனாகவும், பரிசுத்தமானவனாகவும் இருப்பவன் எவனோ அவன், எங்கிருந்து மீண்டும் பிறப்பதில்லையோ அந்த பெரும் நிலையை எய்துகிறான்.
विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान्नरः ।
सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम् ॥ ९॥
விஞ்ஞான ஸாரதிர் யஸ்து மன: ப்ரக்ரஹவான் நர:
ஸ: அதவன : பரம் ஆப்னோதி தத் விஷ்ணோ: பரமம் பதம்
எந்த மனிதன் விவேகமுள்ள புத்தியை சாரதியாகவும் , அடக்கப்பட்ட மனதைக் கடிவாளமாகவும் உடையவனோ அவன் ஸம்சாரமாகிய கடுவழியின் எல்லையை அடைகிறான். அதுவே எங்கும் நிறைந்த பரம்பொருளுடன் ஒன்றுபட்ட பரமபதம் என்னும் நிலையாம்.
इन्द्रियेभ्यः परा ह्यर्था अर्थेभ्यश्च परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्बुद्धेरात्मा महान्परः ॥ १०॥
இந்திரியேப்ய: பராஹ்யர்தா, அர்தேப்யஶ்ச பரம் மன :
மனஸஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான் பர :
இந்த்ரியங்களைவிட மேலானவை ( அவைகளுக்குக் காரணமான ) சூக்ஷ்ம பூதங்கள்; அவற்றைவிட மேலானது மனம்; மனத்தைக்காட்டிலும் மேலானது புத்தி; புத்தியைக்காட்டிலும் மேலானது ஆத்மா. அதுவே மஹிமை வாய்ந்தது.
महतः परमव्यक्तमव्यक्तात्पुरुषः परः ।
पुरुषान्न परं किंचित्सा काष्ठा सा परा गतिः ॥ ११
மஹத: பரமவ்யக்தம், அவ்யக்தாத் புருஷ: பர :
ப்ருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பராகதி :
மஹத்தான ஆத்மாவைவிட மேலானது அவ்யக்தம்; அதற்கும் மேலானவன் புருஷன் ( பகவான் ); இந்த பகவானுக்கு மேலானது ஒன்றுமில்லை. அவர்தான் எல்லை ;அவர்தான் கடைசி புகலிடம்.
[கட உப நிஷதம் 3.3- 11 ]
எனவே, உபநிஷதம் சொல்கிறது :
விழித்துக்கொள்ளுங்கள் !
उत्तिष्ठत जाग्रत
प्राप्य वरान्निबोधत ।
क्षुरस्य धारा निशिता दुरत्यया
दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४॥
உத்திஷ்டத ஜாக்ரத
ப்ராப்யவரான் நிபோதத
க்ஷுரஸ்ய தாரா நிஶிதா துரத்யயா
துர்கம் பதஸ்தத கவயோ வதன்தி 3.14
எழுந்திருங்கள். விழித்துக்கொள்ளுங்கள். சிறந்த ஆசார்யர்களை அடைந்து ஞானம் பெறுங்கள். அந்த மார்கம் கத்தியின் நுனிபோல் கூர்மையானது. நடப்பதற்கும் கடப்பதற்கும் அரியது என ஞானிகள் கூறுகின்றனர்.
இது உபநிஷதத்தில் யமதர்மராஜன் நசிகேதஸுக்கு கூறும் அறிவுரை, இதையே பகவான் கீதையில் பல இடங்களில் விளக்கிச்சொல்லியிருக்கிறார்.
இங்கு ஒரு நுண்ணிய விஷயம் புலனாகிறது. நாம் பேச்சுவழக்கில் "எல்லாம் மனசாக்ஷிப்படிதான் செய்தோம் " என்று சொல்லுகிறோம். மனம் சாக்ஷியாகுமே தவிர, நல்லது-கெட்டது, தர்மம் - அதர்மம் என்பதை அது முடிவுசெய்யாது. மனதிற்கு மேல் புத்தி; அதற்குமேல் ஆத்மா. அதனால்தான், ஆத்மஞானிகள் வகுத்த தர்ம, நீதி சாஸ்திரங்களே தர்மத்திற்குப் ப்ரமாணமாகின்றன. கீதையிலும் பகவான் இதையே சொல்லியிருக்கிறார்.
तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ।
தஸ்மாத் ஶாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ
16.24
ஆகவே உனக்கு இவ்வுலகில் செய்யத்தக்கது= தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே ப்ரமாணமாகும்.
[ ஆசை வசப்பட்டு காம்ய கர்மங்களைச் செய்யக்கூடாது. அவசியமான கர்மங்களை - நியதம் கர்ம, கார்யம் கர்ம - சாஸ்திரம் வகுத்த வழியிலேயே செய்யவேண்டும் என்பது கீதையின் நிலை. ]
வெளி நாட்டமுடைய பொறி, புலன்கள்
நமது பொறி,புலன்கள் வெளியுலகத்தையே நாடுகின்றன,
"பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ ; "
पराञ्चि खानि व्यतृणत् स्वयम्भू-
= புலன்களை புற நோக்குடன் பகவான் அமைத்துள்ளார் என்பது கட உபனிஷதம். இதை உள் நோக்கித் திருப்புவதற்கே யோகம், ஆன்மீக சாதனை, என்றெல்லாம் சொல்கிறோம்! ஆமை தன் அவயவங்களை உள்ளே இழுத்துக்கொள்வது போல, புலன்களை அவற்றின் விஷயங்களில் செல்லவிடாது இழுத்துக்கொள்ள வேணும் என்று கீதையில் (2.58 ) பகவான் சொல்கிறார். சரீரமாகிய ரதம் நன்கு செல்வதற்கு ஆத்மாவை அறியவேண்டும். அதற்கு அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள வேண்டும், ஞானிகளாகிய ஆசார்யர்களை நாடவேண்டும். [ " அனன்ய ப்ரோக்தே கதிரத்ர நாஸ்தி " =
अनन्यप्रोक्ते गतिरत्र नास्ति
அனுபூதி பெற்றவரின் உபதேசத்தைப் பின்பற்றினால் குழப்பம் இல்லை என்கிறது கட உபனிஷத் ].இந்த விஷயத்தை குருதேவர் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் வேறு விதமாக விளக்குகிறார்.
உலகியலில் மூழ்கும் ஓடம்
1882ம் வருஷம், நவம்பர் 15ம் தேதி மாலை நேரம். குருதேவர் அன்பர் பலராம் போசின் வீட்டில் அமர்ந்து அன்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். உலகியலில் உழலும் மக்கள் உய்வதற்கு என்ன வழி என்று விளக்கிக்கொண்டிருந்தார்.
Man may be likened to grain. He has fallen between the millstones and is about to be crushed. Only the few grains that stay near the peg escape. Therefore man should take refuge at the peg, that is to say, in God. Call on Him. Sing His name. Then you will be free. Otherwise you will be crushed by the King of Death.
Then the Master sang a song.
Mother ! Mother ! My boat is sinking, here in the ocean of this world.
Fiercely the hurricane of delusion rages on every side!
Clumsy is my helmsman, the mind; stubborn my six oarsmen, the passions ;
Into a pitiless wind I sailed my boat, and now it is sinking!
Split is the rudder of devotion; tattered is the sail of faith;
Into my boat the waters are pouring!
Tell me, what shall I do ?
With may failing eyes, alas! nothing but darkness do I see.
Here in the waves I will swim,O Mother, and cling to the raft of Thy name!
அங்கே உபனிஷதம் நம்மை ரதத்துக்கு ஒப்பிடுகிறது; இங்கே, நாம் கடலில் தத்தளிக்கும் படகு போல் இருக்கிறோம். அங்கே, மனமும் புத்தியும் இந்த்ரியங்களைச் சரியாகச் செலுத்தவில்லை; இங்கே, மனதாகிய மாலுமி சரியில்லை! உபனிஷதம் நம்மை குருவை நாடச் சொல்கிறது; இங்கே குருதேவர் நம்மை நேரே இறைவனை வேண்டச் சொல்கிறார் !
உலகியலைத் தாண்டுவிக்கும் ஓடம் !
உலகியலைத் தாண்டுவிக்கும் ஓடம் !
ஸம்ஸாரம் பெரிய கடல்; நாம் இதைத் தாண்டுவதற்கு அன்னை துர்கையே ஓடமாக இருக்கிறார் என்ற கருத்து துர்கா ஸூக்தத்தில் வருகிறது !
दु॒र्गां दे॒विꣳ शर॑णम॒हं
प्रप॑द्ये सु॒तर॑सि तरसे॒ नमः॑ ॥ २॥
துர்காம் தேவீம் ஶரணமஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம :
துர்கா தேவியை நான் சரணடைகிறேன். துன்பக் ( ஸம்ஸாரக் ) கடலிலிருந்து கரைசேர்ப்பவளே ! எங்களைக் காப்பாய் ! உனக்கு நமஸ்காரம்.
இதை அக்னிதேவனுக்கும் உகந்த ஸூக்தமாகச் சொல்வார்கள்:
स नः॑ पर्ष॒दति॑ दु॒र्गाणि॒ विश्वा॑ ना॒वेव॒ सिन्धुं॑ दुरि॒ताऽत्य॒ग्निः ॥
ஸ ந; பர்ஷததி துர்காணி விஶ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி:
படகின் மூலம் கடலைக் கடத்துவிப்பதுபோல், எங்களை எல்லாத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் அக்னிதேவன் காக்கட்டும் !
இதே கருத்து நாம் சொல்லும் மன்த்ர புஷ்பத்திலும் 9ம் மந்த்ரத்தில் வருகிறது:
ऽप्सु नावं॒ प्रति॑ष्ठितां॒ वेद॑ । प्रत्ये॒व ति॑ष्ठति ॥ ८॥
யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத: ப்ரத்யேவ திஷ்ட்டதி
யார் தண்ணீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ அவன் அதிலேயே நிலைபெறுகிறான்.
பூஜை முடிவில், இந்த மந்திரத்தைச் சொல்லி, பகவானுக்கு பூ சமர்ப்பித்து நமஸ்காரம் செய்கிறோம். இங்கு பகவானே ஓடமாக இருந்து நம்மை கரை சேர்ப்பதற்குத் தயாராக இருக்கிறார். நாம் இதை அறிந்து ( வேத ) அந்த ஓடத்தில் நிலைபெற வேண்டும். [ இந்த ஓடத்தில் ஏறாதவன் தண்ணீரில் மூழ்கிவிடுவான் .] இங்கு தண்ணீர் உலகின் உருவகமாக இருக்கிறது. இதையே ஸம்ஸார ஸாகரம் என்கிறோம். இதைக் கடக்கும் சாதனமாக பகவான் நாமத்தைக் கொள்ளவேண்டும். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் சொன்ன ஒரு உவமையில் எவ்வளவு சாஸ்திரக் கருத்துக்கள் வருகின்றன !
குறிப்பு:
1.ஸ்ரீமந் நாராயணீயத்தில் 32வது தசகத்தில் மத்ஸ்யாவதாரம் பற்றிச் சொல்கிறார் ஸ்ரீ பட்டத்திரி. இதில் 7வது ஶ்லோகத்தில் இந்த உலகையே படகாகச் சொல்கிறார்! இதன் ஆங்கிலப் பதிப்பில் ஸ்ரீ.எஸ்,என். சாஸ்திரி அளிக்கும் அருமையான விளக்கம் :
The earth is depicted as a boat because only by being born on the earth as a human being can a jiva obtain realisation of identity with Brahman and thereby cross the ocean of Samsara. The earth is the boat which takes one across this ocean. [ Book published by Chinmaya Mission.]ஆனால் இங்கு, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேணும்!
2. இங்கு கொடுத்திருக்கும் உபனிஷத உரை, 'அண்ணா' சுப்ரமண்ய ஐயர் கருத்தைத் தழுவியது.
3. வேத, உபனிஷத மன்த்ரங்களை புத்தகத்திலிருந்து படிப்பது தவறாகும். வேதாத்யயனம் செய்த பெரியவர்களிடமிருந்து தான் தெரிந்துகொள்ள வேணும்.
4.The Ten Yamas and Ten Niyamas
YAMAS — The 10 Vedic Restraints
No comments:
Post a Comment