Wednesday, 3 August 2016

63, ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -3



63. ஸ்ரீமத் பாகவதமும் 
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -3



Ancestral house of Sri Ramakrishna Old view, as it was.

இந்த உலகம் உண்மையா அல்லது வெறும் தோற்றமா ?


இந்த சர்ச்சை நமது மதத்தில் முடிவில்லாமல் நடந்துகொண்டிருப்பது. பண்டிதர்களும் தத்துவவாதிகளும் அளிக்கும் விளக்கங்களுக்கு எல்லையே இல்லை. பொதுவாக, அத்வைதக் கருத்தைப் பின்பற்றுபவர்கள் [ஞான மார்கத்தைப் பின்பற்றுபவர்களாகத்  தங்களைக் கருதிக் கொள்பவர்கள் ] இந்த உலகம் மாயை என்பார்கள். பிற சித்தாத்தங்களைப் பின்பற்றுபவர்கள்  [ பொதுவாக பக்திக்கு முக்யத்வம் கொடுப்பவர்கள் ] இந்த உலகம் நிஜம் என்பார்கள். இந்த விவாதத்திற்கு  தர்க்கரீதியாக முடிவு காணமுடியாது.

உள்ளது ஒன்றே : "ஏகம் ஸத் " என்பது ஹிந்து மதத்தின் அனைத்துப்பிரிவினரும் ஏற்றுகொண்ட அடிப்படை நிலையாகும். ஆனால் இந்த ஒரு பரம்பொருள் எப்படி இந்த உலகமாக, பலவாக, உரு எடுத்தது என்பதில்தான் கருத்து வேறுபாடு வருகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் வழியில், " இது நமது சிந்தனைக்கு எட்டாதது " [ அசிந்த்ய பேதாபேதம் ] என்று சொல்கிறார்கள். ஒரு விதத்தில் பார்த்தால், இதுவே சரி என்று  தோன்றுகிறது. ஸ்ரீ சைதன்யரும் அவதாரமல்லவா !

ஸ்ரீமத் பாகவதம் தத்துவவழியில் அத்வைதத்தை ஏற்றுக்கொள்வது. ஆனால் சாதனை வழியில் பக்தியையே ப்ரதானமாகக் கொண்டது. பக்தியினால் முக்தியடையலாம் என்பதுமட்டுமல்ல, பக்தியே முக்தி என்பது அதன் கொள்கை! ஞானம் வேண்டியதுதான், ஆனால் அது பக்தியினாலேயே வரும், பகவானே தருவார் என்பது பாகவதம். ப்ரஹ்மமே பகவானாக வந்தது; அதனால் பகவானை ஆராதிப்பதே ப்ரஹ்மத்தை ஆசிரயிப்பதாகும் என்பது அதன் நிலை. அதனால் ஸ்ரீமத் பாகவதம் பக்தி- ஞானத்தின் ஒருமித்த சங்கமமாக இருக்கிறது. Bhagavata is fried in the butter of Jnana and soaked in the honey of Bhakti , says Sri Ramakrishna.

[ அத்வைதம் என்பது ஒரு முடிவான அனுபவ  நிலை. உலகவாழ்க்கையில்  ஈடுபட்டவர்கள் - உடல் என்ற ப்ரக்ஞை உள்ளவர்கள் - தங்களை அத்வைதிகளாகக் கருதிக்கொள்வது பொருத்தமற்றது. சுத்த அபத்தமானது. அத்வைத அனுபவத்தை எய்தியவர்கள் - நிர்விகல்ப ஸமாதியை  அடைந்தவர்கள் -  21 நாட்களுக்குமேல் இவ்வுடலைத் தரிக்க முடியாது என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ணர். நாரதர், ஸ்ரீ ஶுகர், சங்கரர் போன்றவர்கள் பகவான் ஆணையால் உலகிற்கு உபதேசம் செய்வதற்காக,  சமாதி நிலையை அடைந்தபிறகும்  உலகில் வாழ்ந்தார்கள். நமது காலத்தில் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும்  பகவான் ஸ்ரீ ரமணரும் இந்த நிலையில் இருந்தார்கள்.  அத்வைதத்தை இலக்காகக் கொள்ளலாமே தவிர, அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது பொதுவாக  சாத்தியமில்லை. பகவான் ஸ்ரீ ரமணர் சொல்கிறார் :

அத்துவிதம் என்றும் அகத்துறுக ஓர்போதும்
அத்துவிதம் செய்கையில் ஆற்றற்க.

(உள்ளது நாற்பது அனுபந்தம்-39 )  ]


இந்த நிலையை தமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர். அவர் அவதாரமாகக் கருதப்படுபவர்; சைதன்யரின் மறுபதிப்பாகவே சிலர் கொள்வர். அதே சமயம் ஆதி சங்கரரின் அத்வைதப் பரம்பரையில் வந்த தோதாபுரியை குருவாகக் கொண்டு  அத்வைத அனுபவம் பெற்றவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அன்னை காளியின் உபாஸகர்- சதா காலமும் அன்னையின் சான்னித்தியத்திலேயே இருந்தவர், அவரைக் கண்டு,கேட்டு, அவருடன் உரையாடியவர்! இவ்வாறு, பக்தி, ஞானம், தந்திரம் ஆகிய  முப்பெரும் கடல்களின் மஹா சங்கமமாக இருந்தவர் .




 Sri Ramakrishna's room in Dakshineswar. Old view.



ஸ்ரீ ராமக்ருஷ்ணர் இந்த உலகின் உண்மையைப் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஒரு நிலையில், "கடவுள் ஒருவரே  சத்தியம், இந்த உலகம் அசத்யம் " என்று திடமாகக் கூறுவார். பின்னர் அதையே விளக்கிச் சொல்லுவார்.

He who is called Brahman by the jnanis is known as Atman by the yogis and as Bhagavan by the bhaktas. 
The same brahmin is called priest, when worshipping in the temple, and cook, when preparing a meal in the kitchen.
The jnani, sticking to the path of knowledge, always reasons about the Reality, saying, 'Not this, not this'. Brahman is neither 'this' nor 'that'; it is neither the universe nor its living beings. Reasoning in this way, the mind becomes steady. Then it disappears and the aspirant goes into samadhi. This is the knowledge of Brahman. It is the unwavering conviction of the jnani that Brahman alone is real and the world  illusory. All these names and forms are illusory, like a dream. What Brahman is cannot be described. One cannot even say that Brahman is a person. This is the opinion of jnanis, the followers of Vedanta philosophy.

But the bhaktas accept all the states of consciousness. They take the waking state to be real also. They don't think the world to be illusory, like a dream. They say the universe is a manifestation of God's power and glory. God has created all these- sky, stars, moon,sun, mountains,ocean, men, animals. They constitute His glory. He is within us, in our hearts. Again, He is outside. The most advanced devotees say that He Himself has become all this -the twenty-four cosmic principles, the universe, and all living beings. The devotee of God wants to eat sugar, not to become sugar.

October 27, 1882.

Buttermilk is made from the same substance as butter. One who realizes this knows that butter goes with buttermilk and buttermilk with butter. After separating the butter with great effort - that is to say, after attaining Brahmajnana - you will realize that as long as butter exists, buttermilk must also exist. Wherever there is butter, there is buttermilk as well. As long as one feels that Brahman exists, one must also be aware that the universe, living beings, and the twenty-four cosmic principles exist as well.

December 16, 1883.





அதே நாளில், அன்பர் மஹேந்த்ர நாத குப்தர் கேட்டார்:
 Is the world unreal ?

Sri Ramakrishna replied :

Why should it be unreal? What you are asking is a matter for philosophical discussion.
In the beginning, when a man reasons following the Vedantic method of  'Not this, not this', he realizes that Brahman is not the living beings,  not the universe, not the twenty-four cosmic principles. All these things become like dreams to him. Then comes the affirmation of what has been denied, and he feels that God Himself has become the universe and all living beings.
Suppose you are climbing to the roof by the stairs. As long as you are aware of the roof, you are also aware of the stairs. He who is aware of the high is also aware of the low. But after reaching the roof, you realize that the stairs are also made of the same materials - brick, lime and brick-dust - as the roof.

Both changeability and unchangeability belong to the same Reality.


Why should the universe be unreal ? This is a speculation of the philosophers. After realizing God, one sees that  it is God Himself who has become the universe and all living beings.
The Divine Mother revealed to me in the Kali temple that it was she who has become everything.  She showed me that everything was full of Consciousness.
ஒரு நிலையில் 'ப்ரஹ்மம்' ஒன்றே சத்தியம் என்கிறோம். இன்னொரு நிலையில்  இந்தப் பிரபஞ்சமும் ப்ரஹ்மத்திலிருந்தே தோன்றியது என்பதையும் உணர்கிறோம். ஆனால் இந்த ப்ரபஞ்சம் நிலையாக இல்லை - தோன்றி மறையும் தன்மை கொண்டது. அதனால் அது  சத்தியமில்லை என்பது சிலர் வாதம். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் இரண்டு நிலைகளையும் ஏற்றுக்கொள்கிறார். ஞானி என்ற நிலையில், ப்ரஹ்மம் ஒன்றே சத்யம்  [ ப்ரஹ்மைவ  ஸத்யம் ] என்பார். ஆனால் பக்தன் என்ற நிலையில், இந்த உலகம் கடவுளின் வெளிப்பாடே, அதனால் அதுவும் உண்மையே என்பார். இந்த இரு நிலைகளுக்கிடையிலும் அவருக்கு எந்த பிரச்சினையும் தோன்றியதில்லை.  1883ம் வருஷம் ஜுன் 18ம் தேதியன்று  அன்பர்களிடம் சொன்னார்:


The Divine Mother has revealed to me the essence of the Vedanta. It is that Brahman alone is real and the world  illusory.


 The manifold has come from the One alone, the relative from the Absolute. There is a state of consciousness where the many disappears, and the One, as well; for the many must exist as long as the One exists.
 October 16, 1883.

அதே ஆண்டு ஜுன் 25ம் தேதியன்று சொன்னார் :

A man should reach the Nitya, the Absolute , by following the trail of the Lila, the Relative. It is like reaching the roof by the stairs. After realizing the Absolute, he should climb down to the Relative  and live on that plane in the company of devotees, charging his mind with the love of God. This is my final and most mature opinion.


இதுவே ஸ்ரீமத் பாகவதத்தின் நிலையாகும். இது மாஹாத்மியத்தில் தொடங்குகிறது, அதன் முதல் ஶ்லோகம் கீழ்வருமாறு:




Edition by Sri Bhagavan Nama  Publications, Chennai-33




ஸச்சிதானந்த ரூபாய  விஶ்வோத்பத்யாதி ஹேதவே
தாபத்ரய வினாஶாய ஸ்ரீ க்ருஷ்ணாய வயம் நும:


ஸத், சித், ஆனந்த வடிவினரும், உலகத்தின் தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகியவற்றின் காரணமும்.  [ஆதி ஆத்மிகம், ஆதி தைவிகம், ஆதி பௌதிகம் ஆகிய ] முத்தாபங்களையும் அழிப்பவருமான ஸ்ரீ க்ருஷ்ணருக்கு நமஸ்காரம்.


இதிலிருந்து ஸ்ரீ க்ருஷ்ணர்தான்  சத்தியம் என்பது தெரிகிறது, ஆனால் இந்த உலகமும் அந்த சத்தியத்திலிருந்தே தோன்றி, அதிலேயே நிலைத்து, அதிலேயே லயமடைகிறது ! ஆகவே, இதை வெறும் பொய் என்று தள்ளமுடியாது. 

ஆபாஸஶ் ச நிரோதஶ்ச  யதஶ்சாத்யவஸீயதே
ஸ ஆஸ்ரய: பரம் ப்ரஹ்ம பரமாத்மேதி ஶப்த்யதே


தோற்றமும் ஒடுக்கமும் எங்கு முடிவடைகிறதோ  அதுவே ஆஶ்ரயம். அதையே பரப்ரஹ்மம்  என்கின்றனர்.


ஸ்ரீமத் பாகவதம். 2.10.7

இந்த உலகம் முழுப்பொய்யாயிருந்தால் , அதன் தோற்றம், ஒடுக்கம் பற்றிய பேச்சு ஏன் எழவேண்டும் ? அதற்கு ப்ரஹ்மமே புகலிடம் ( ஆஶ்ரயம் ) என ஏன் சொல்லவேண்டும்? எனவே, ப்ரஹ்மத்திற்கும் இந்த உலகிற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு  உண்டு. இதை  ஆன்மீக அனுபவ வாயிலாகவே உணரவேண்டும். தர்க்க வாதம் பயன்படாது.

பாகவத்தில் பலவித ஶ்ருஷ்டிகள், ப்ரளயங்கள் பற்றி  வருகிறது, சூர்ய வம்சம், சந்திர வம்ஸம். மனுக்கள்,மன்வன்தரங்கள் பற்றியெல்லாம் விரிவாக வருகிறது. ஆனால், இறுதியில்  இவையெல்லாம் அழிந்துபடுகின்றன; எதுவும் நிலைப்பதில்லை. நிலைப்பவர் பகவான் ஒருவரே ! ஆகவே இந்த வரலாறுகளைச் சொல்வதன் நோக்கம் நிலையாமையை எடுத்துக் காட்டி , மக்கள் அதில் வெறுப்படையவைத்து, பரம்பொருளாகிய பகவானைக் காட்டுவதே யாகும். இதை ஸ்ரீ ஶுக பரஹ்மம் விளக்குகிறார்.

கதா இமாஸ்தே கதிதா மஹீயஸாம்
விதாய லோகேஷு யஶ : பரேயுஷாம்
விஞ்ஞான வைராக்ய விவக்ஷயாவிபோ
வஶோவிபூதீர்ன  து பாரமார்த்யம்.

யஸ்தூத் தமஸ்லோக குணானுவாத 
ஸங்கீயதேஅபீக்ஷ்ணமமங்கலக்ன:
தமேவ நித்யம் ஶ்ருணுயாத பீக்ஷ்ணம்
க்ருஷ்ணேஅமலாம் பக்திமபீப்ஸமான :           பாகவதம்  12. 3.14,15



பரீக்ஷித் ராஜனே ! உலகில் புகழுடன் திகழும் இவ்வரசர்களது கதைகளைக்கூறியது  ஏனெனில்,  உலகியல் இன்பம்  சுவை இல்லாதது என்கிற  அறிவைப் புகட்டி. , வைராக்யத்தை உணர்த்த வேண்டியே யன்றி, இவர்களது கதைகளே முக்திதரும் என்பதால் அல்ல.  பற்றற்ற, குற்றமற்ற பக்தியைப் பெற விரும்புபவன், அமங்கலங்களை அழிக்கும் பகவானது கல்யாண குணங்களை  விளக்கும் கதைகளை தினமும் , நிமிஷம்தோறும் காதினால் கேட்டு இன்புறவேண்டும். 


இந்த பாகவதம் பூராவுமே இத்தகைய அமுத ரஸம்தான். "கதாம்ருதம் ". இதை முதலிலேயே சொல்கிறார் பௌராணிகர்.

 நிகம கல்பதரோர் களிதம் ஃபலம் 
ஶுகமுகாத் அம்ருதத்ரவஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம் 
முஹுரஹோ  ரஸிகா புவிபாவுகா                 பாகவதம் 1.1.3


உண்மையான பரம்பொருளைச் சுவைப்பதில் சிறந்தவர்களே ! புண்ணியத்தால் பிறவி பெற்றவர்களே ! இந்த ஸ்ரீமத் பாகவதம் என்னும் புராணம் வேதமாகிய கற்பகத் தருவிலிருந்து நன்கு பழுத்து  விழுந்த பழமாகும்.  ஸ்ரீ ஸுகருடைய திருவாக்கிலிருந்து வந்ததால் மேலும் ருசி கூடியது. மரண பயத்தைப் போக்கும் அமுதமயமானது. அமுத ரஸமே முழுதும் நிரம்பியது.  இதை இடைவிடாது முக்திபெறும் வரையில் பருகுவீர்களாக.


 ஆம், பகவானின் கல்யாண குணங்களாகிய இந்த அமுத பானத்தை காதினால் தான் பருகவேண்டும்! ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ஒவ்வொரு நாளும் அன்பர்களுடன் பகவான் விஷயமாகவே பேசினார் ! உலகம் உண்மையா, பொய்யா என்ற உதவாக்கரை சர்ச்சைகளை விட்டு, பகவான் ஒருவரே ஸத்யம் ; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றே சொல்லிவந்தார் !











No comments:

Post a Comment