64. ஸ்ரீமத் பாகவதமும்
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -4
நமது சனாதன மதத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளில் "அவதாரவாதம் " மிகவும் முக்கியமானது. [ மற்றவை, அதிகாரி பேதம், கர்மா'] நடைமுறையில் அவதாரமே நமது மதத்தின் ஜீவனாடியாக இருக்கிறது.
அவதாரம் என்னும் அற்புதம்
தசாவதாரம் என்று பத்து அவதாரங்களை பொதுவாகச் சொன்னாலும், அவதாரங்கள் எண்ணிறந்தவை. ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்கந்தத்தில் விராட்புருஷனிலிருந்து 22 அவதாரங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், ஹம்ஸாவதாரம், ஹயக்ரீவர் என்று பிற இடங்களில் வருகிறது. ஸனகாதிகள், நாரதர், கபிலர், நர-நாராயணர், தத்தாத்ரேயர் முதலியவரும் அவதாரங்களாகவே குறிப்பிடப்படுகின்றனர். விராட் ஸ்வரூபமே எல்லாஅவதாரங்களுக்குமான அழிவற்ற விதை என்கிறது பாகவதம்.
ஏதந் நானாவதாராணாம் நிதானம் பீஜம் அவ்யயம் 1.3.5
இந்த ஸ்வரூபமானது நானாவித அவதாரங்களுக்கும் அழிவற்ற இருப்பிடமும் காரணமுமாகும்.
ஸ ஏ வேதம் ஜகத்தாதா பகவான் தர்மரூபத்ருக்
புஷ்ணாதி ஸ்தாபயன் விஶ்வம் திர்யங் நர ஸுராத்மபி : 2.10.42
உலகங்களை ஶ்ருஷ்டித்த அந்த பகவானே விஷ்ணுவின் ரூபத்தைத் தரித்து, வராஹம் முதலிய திர்யக் அவதாரங்களாலும், ராம,க்ருஷ்ணர் முதலிய மனித அவதாரங்களாலும்,வாமனர் முதலிய தேவ அவதாரங்களாலும் இந்த ப்ரபஞ்சமனைத்தையும் நிலைத்திருக்கச் செய்து போகங்களால் வளரச்செய்கிறார்.(சோமசுந்தர தீக்ஷிதர் உரையைத் தழுவியது )
கலியுகமுடிவில், அரசர்களே ( அரசாங்கமே ) திருடர்கள் போல கொள்ளையர்களாக ஆகும்போது, கல்கியாக பகவான் அவதரிப்பார். ஆனாலும் பகவானின் அவதாரங்களுக்குக் கணக்கில்லை.
அவதாரா ஹ்யஸங்க்யேயோ ஹரே : ஸத்வனிதேர்த்விஜா :
யதாவிதாஸின: குல்யா : ஸரஸ: ஸ்யு : ஸஹஸ்ரஶ : 1.3.26
என்றும் வற்றாத ஒரு ஏரியிலிருந்து எண்ணற்ற வாய்க்கால்கள் தோண்டப்படுவதுபோல, ஸத்வ ஸ்வரூபியான ஸ்ரீஹரியின் அவதாரங்களும் எண்ணற்றவை யாகுமன்றோ !
ஆனால் பொதுவில் ஜனங்கள் அவதாரத்தை அறிவதில்லை! அதன் மஹிமையை உணருவதில்லை!
ந சாஸ்ய கஶ்சின் நிபுணேன தாது:
அவைதி ஜந்து:குமனீஷ ஊதீ :
நாமானி ரூபாணி மனோவசோபி:
ஸந்தன்வதோ நடசர்யாமிவாக்ஞ : 1.3.37
விஷய ஞானமில்லாத ஒருவன் எவ்வாறு நாட்டிய சாஸ்திரத்தின் நயங்களை அறியவியலாதோ, அதேபோல் வெறும் தர்க்க அறிவால் (ஞானமில்லாதவன் ) விஸ்தாரமான ரூபங்களையும் பெயர்களையும் உடைய பகவானது லீலைகளை அறியமுடியாது.பகவத் கீதையில் அவதார தத்துவம்
ஸ்ரீ பகவான் பகவத் கீதையில் அவதார தத்துவத்தை நன்றாக ஆனால் சுருக்கமாக விளக்கியிருக்கிறார்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம் யஹம். 4.7
பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே 4.8
பாரதா ! எப்பொழுதெல்லாம் தர்மத்திற்குக் குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றதோ. அப்போதெல்லாம் நான் என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன். ஸாதுக்களைக் கடைத்தேற்றுவதற்காகவும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நன்கு ஸ்தாபிக்கவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்.
[ சில சமயம், தீமை செய்பவர்கள் அழியாமல் தீமை ஒழியாது. ]
ஜன்ம கர்ம ச மே திவ்யம் 4.9
என்னுடைய பிறப்பும் செயலும் திவ்யமானவை [ ப்ரக்ருதிக்குக் கட்டுப்படாதவை ]
இருந்தாலும், இந்த உலகம் பகவானைத் தெரிந்துகொள்வதில்லை.
அவ்யக்தம் வ்யக்திமாபன்னம் மன்யந்தே மாம் அபுத்தய :
பரம் பாவமஜானன்தோ மமாவ்யயம் அனுத்தமம் 7.24
புத்தி இல்லாதவர்கள் என்னுடைய இணையில்லாததும், அழிவற்றதும், மேலானதுமான தன்மையை அறியாமல் , இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்ட என்னை (மனிதர்கள் போல் ) கண்ணால் காணக்கூடியவனாக நினைக்கிறார்கள்.
அவஜானன்தி மாம்மூடா மானுஷீம் தனும் ஆஶ்ரிதம்
பரம் பாவம் அஜானன்தோ மம பூத மஹேஶ்வரம் 9.11
மூடர்கள், என்னுடைய மேலான இயல்பை அறியாதவர்களாகி, மனித உடலைத் தாங்கியிருக்கும் உயிரினங்களுக்கெல்லாம் தலைவனான என்னை, அற்பமாக நினைக்கிறார்கள்.
தெய்வீக இயல்புடைய மஹாத்மாக்கள்தாம் அவதாரத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஸ்ரீ ராமர் அவதாரமென்பதை பன்னிரண்டு ரிஷிகளே அறிந்திருந்தனர் என்பார்கள்.
அவதாரம்- பலவித கருத்துக்கள்
நம்மவர்களிடையே அவதாரத்தைப் பற்றிப் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் 'ஏதோ அவதாரம் தானே' என்பார்கள்- எதோ தாம் பரம்பொருளையே அடைந்துவிட்டவர்கள் போல. சிலர், அவதாரம் பகவானது ஒரு அம்சம்தானே என்பார்கள். சிலர் எங்கள் சாமி 'அவதாரம், கிவதாரம் ' எல்லாம் எடுப்பதில்லை என்பார்கள் ! ஆனாலும் இவர்கள் சாமி மனித உருவில் வந்து லீலை செய்ததாகச் சொல்வார்கள் ! சிலர் விஷ்ணுதான் அவதாரங்கள் எடுப்பார் என்பார்கள். சைதன்ய மஹாப்ரபுவைச் சார்ந்தவர்கள் "ஸ்ரீ க்ருஷ்ணர்தான் பரம்பொருள் ; எல்லா அவதாரமும் அவருடையதே" என்பார்கள்.இதற்கு ஆதாரமாக " க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் " என்ற பாகவத வசனத்தைக் ( 1.3.28 ) காட்டுவார்கள். தேவி உபாஸகர்கள் அவதாரங்கள் தேவியின் அம்சம் ( கராங்குலி நகோத்பன்ன - ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்) என்பார்கள்! அருணகிரிநாதர்கூட நரசிம்மரை தேவியின் அம்சமாகவே பாடியிருக்கிறார் : தரணியில் அரணிய முரண் இரணியனுடல் தனை நகனுதிகொடு சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி !
ஸ்ரீ ராமக்ருஷ்ணர் வாக்கு
இப்படியெல்லாம் இருந்தாலும். பாகவதத்தையும் கீதையையும் பயிலும் நமக்கு ப்ரஹ்மம், பரம்பொருள், புருஷோத்தமன், எல்லாம் அவதாரமே என்பதில் சந்தேஹமில்லை. ஸ்ரீ ராமக்ருஷ்ணர் இதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் கூற்று சொல்லுக்குச்சொல் பாகவதக் கருத்துக்களே யாகும்.
However great and infinite God may be, His Essence can and does manifest itself through man by His mere will. God's incarnation as a man cannot be explained by analogy. One must feel it for oneself and realize it by direct perception. ...
By touching the horns, legs, or tail of a cow, we in fact touch the cow herself; but for us the essential thing about a cow is her milk, which comes through the udder. The Divine incarnation is like the udder.
God incarnates Himself as man from time to time in order to teach people devotion and divine love.
What need is there to know everything about God ? It is enough if we only realize Him. And we see God Himself if we but see His Incarnation. Suppose a person goes to the Ganges and touches its water. He will then say, ' Yes, I have seen and touched the Ganges.' To say this it is not necessary for him to touch the whole length of the river from Hardwar to Gangasagar.
The greatest manifestation of His Power is through an Incarnation.....
It is Sakti, the Power of God, that is born as an Incarnation.
March 11, 1885
Can all comprehend the Indivisible Satchidananda ? Only twelve rishis could recognise Ramachandra. All cannot recognize an incarnation of God.April 12, 1885
The Incarnation is the play of the Absolute as man. Do you know how the Absolute plays as man ? It is like the rushing down of water from a big roof through a pipe; the power of Satchidananda, -nay, Satchidananda Itself - descends through the conduit of a human form as water descends through the pipe. Only twelve sages, Bharadvaja and the others, recognised Rama as an Incarnation of God. Not everyone can recognise an Incarnation.
December 24, 1883
Seeing an Incarnation of God is the same as seeing God Himself. God is born on earth as man in every age.
March 9, 1883
God has different forms, and He sports in different ways. He sports as Isvara, deva, man, and the universe. In every age He descends to earth in human form , as an Incarnation, to teach people love and devotion. There is the instance of Chaitanya. One can taste devotion and love of God only through His Incarnations. Infinite are the ways of God's play, but what I need is love and devotion. I want only the milk. And the milk comes through the udder of the cow. The Incarnation is the udder.
June 25, 1883
In an incarnation of God, one sees at the same time, the sun of Knowledge and the moon of Love.
December 18, 1883
If you seek God, you must seek Him in the Incarnations.
December 21, 1883
Whoever salutes an Incarnation, even once, obtains liberation.
March 7, 1885.
ஸ்ரீ ராமக்ருஷ்ணர் அவதாரத்தைப் பற்றி அதிகம் பேசியிருக்கிறார்; பல ரகசியங்களைச் சொல்லியிருக்கிறார். அவதாரம், பக்தர்களுக்காக,மனித உருவில் வந்து மனிதர்களிடையே வாழும் ஒரு அற்புத நிகழ்ச்சி. அவதாரங்களைப் பற்றி ரிஷிகள்- ஞானிகள்- மஹாத்மாக்கள் தான் சொல்லமுடியும். அதற்குதான் ஸாதுஜன ஸத்சங்கம் தேவை. ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் நேரடி உபதேசங்களடங்கிய " The Gospel of Sri Ramakrishna " - இந்த ஒரு புத்தகமே நமக்கு சிறந்த சத்சங்கமாகும்.
No comments:
Post a Comment