Sunday, 28 February 2016

34. கீதையில் இரண்டு முக்கிய இடங்கள்.



34. கீதையில் இரண்டு முக்கிய இடங்கள்.

நம்மில் பலரும் ஸ்ரீமத் பகவத் கீதையை  ஓரளவாவது படித்திருக்கிறோம். ஏதோ கொஞ்சமாவது தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதிலுள்ள சூக்ஷ்மங்களுக்கு எல்லையே இல்லை.  பெரியவர்கள், அநுபவஸ்தர்கள் விளக்கும்போது நாம் அடையும் வியப்புக்கும் அளவே இல்லை!

இதில் இரண்டு இடங்கள் மிகவும் ரஸமானவை.

அர்ஜுனனை  சஞ்சயர் நமக்கு இவ்வாறு அறிமுகம் செய்துவைக்கிறார்:


अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः।
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः॥२०॥
அத² வ்யவஸ்தி²தான்த்³ருஷ்ட்வா தா⁴ர்தராஷ்ட்ராந்கபித்⁴வஜ​:| 
ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ரஸம்பாதே த⁴நுருத்³யம்ய பாண்ட³வ​: ||1-20||

அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.



हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते।
अर्जुन उवाच
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत॥२१॥
ஹ்ருஷீகேஶம் ததா³ வாக்யமித³மாஹ மஹீபதே|
அர்ஜுன உவாச
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ரத²ம் ஸ்தா²பய மேऽச்யுத ||1-21||

அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக” என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)


இங்கு அர்ஜுனன்  எஜமானன்- க்ருஷ்ணன் ஸாரதி !  அர்ஜுனன் இப்படிச் சொன்னவுடன்  க்ருஷ்ணர் தேரை அவ்விவிதமே நகர்த்திக் கொண்டுபோய் நிறுத்துகிறார்.


सञ्जय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्॥२४॥
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஶோ கு³டா³கேஶேந பா⁴ரத| 
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ஸ்தா²பயித்வா ரதோ²த்தமம் ||1-24||

சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.


भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति॥२५॥
பீ⁴ஷ்மத்³ரோணப்ரமுக²த​: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்| 
உவாச பார்த² பஶ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி ||1-25||

பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.


அவர்களைப் பார்வையிட்ட அர்ஜுனன்  உற்சாகமிழந்து, சோகத்தினால் கலங்கி, வில்லையும் அம்பையும் எறிந்துவிட்டு தேர்த்தட்டில் உட்கார்ந்துவிட்டான்.

सञ्जय उवाच 
एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत्।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः॥४७॥
ஸஞ்ஜய உவாச 
ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்²யே ரதோ²பஸ்த² உபாவிஶத்| 
விஸ்ருஜ்ய ஸஶரம் சாபம் ஶோகஸம்விக்³நமாநஸ​: ||1-47||

சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.




இதன் பின்னர் அர்ஜுனன் சொல்கிறான்:

कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः। 
यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्॥७॥
கார்பண்யதோ³ஷோபஹதஸ்வபா⁴வ: 
ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்மஸம்மூட⁴சேதா:| 
யச்ச்²ரேய: ஸ்யாந்நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே 

ஶிஷ்யஸ்தேऽஹம் ஶாதி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம் ||2-7||

சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.










[இங்கு தமிழ் உரை, மஹாகவி பாரதியாருடையது! ]











'தேரைக்கொண்டுபோய் இருசேனைகளுக்கும் இடையே நிறுத்து' என்று  கம்பீரமாகச் சொன்ன அர்ஜுனன், இங்கு  ' நான் உன் சிஷ்யன். உன்னையே  சரண் அடைந்தேன். எனக்கு எது  நிச்சயமாக நன்மை தருமோ அதைச் சொல்லவேண்டும்' என்று வேண்டிக் கொள்கிறான் ! இந்த மாறுதல் எப்படி வந்தது ?

அர்ஜுனனும் க்ருஷ்ணனும்  நெருங்கிய தோழர்கள்.  இதை அர்ஜுனனே பின்னால் சொல்கிறான் :

सखेति मत्वा प्रसभं यदुक्तं
हे कृष्ण हे यादव हे सखेति ।
अजानता महिमानं तवेदं
मया प्रमादात्प्रणयेन वापि ॥११- ४१॥
ஸகே²தி மத்வா ப்ரஸப⁴ம் யது³க்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாத³வ ஹே ஸகே²தி |
அஜாநதா மஹிமாநம் தவேத³ம்
மயா ப்ரமாதா³த்ப்ரணயேந வாபி || 11- 41||

இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும்,


यच्चावहासार्थमसत्कृतोऽसि
विहारशय्यासनभोजनेषु ।
एकोऽथवाप्यच्युत तत्समक्षं
तत्क्षामये त्वामहमप्रमेयम् ॥११- ४२॥
யச்சாவஹாஸார்த²மஸத்க்ருதோऽஸி
விஹாரஶய்யாஸநபோ⁴ஜநேஷு | 
ஏகோऽத²வாப்யச்யுத தத்ஸமக்ஷம் 
தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் || 11- 42||
விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!

இப்படித் தோழமை பூண்டிருந்த  அர்ஜுனனுக்கு, ' க்ருஷ்ணன் பெரியவன், அவனே குரு, அவனையே சரணடைய வேண்டும் ' என்ற எண்ணம் எப்படி வந்தது ?

இதற்குமுன் நடந்த ஒரு சம்பவத்தையும் பார்க்கவேண்டும். யுத்தம் தொடங்குமுன் க்ருஷ்ணனின் உதவி வேண்டி  துர்யோதனன்,அர்ஜுனன் இருவருமே அவரை அணுகுகிறார்கள். அவர்கள் வந்த சமயம் க்ருஷ்ணன் சயனித்திருக்கிறார், முதலில் வந்த துர்யோதனன்  க்ருஷ்ணன் தலைப்பக்கம் அமருகிறான். பின்னால் வந்த அர்ஜுனன் கால்மாட்டில் உட்காருகிறான்.  கண்விழித்த க்ருஷ்ணன் முதலில் அர்ஜுனனைப் பார்க்கிறார். துர்யோதனன்  தான் முதலில் வந்ததைத் தெரிவிக்கிறான். உதவி கோரி வந்திருப்பதையும் சொல்கிறான். க்ருஷ்ணர்  தன் சேனை இருப்பதைச் சொல்கிறார். தானும் வருவாரென்றும் ஆனால் ஆயுதம் தாங்கிப் போர்புரியமாட்டாரென்றும் சொல்கிறார், மேலும் தான் அர்ஜுனனை முதலில் பார்த்ததாகவும்  அவன் வயதிலும் சிறியவனாதலால் அவனே முதலில் கேட்கவேண்டுமென்றும் சொல்கிறார். அர்ஜுனன் ஆயுதம் எடுக்காவிட்டலும் க்ருஷ்ணனே வேண்டுமென்கிறான்.. துர்யோதனனுக்கு சேனை கிடைத்ததே என்று பரம ஸந்தோஷம்! இங்கும், க்ருஷ்ணன் மட்டும் வந்தாலே  போதும் என்ற புத்தி அர்ஜுனனுக்கு எப்படி வந்தது ?

இதற்கான  விடையை பகவானே  பின்னால்  [16வது அத்யாயத்தில் ]சொல்கிறார்.

दैवी संपद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
मा शुचः संपदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥१६- ५॥
தை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா | 
மா ஶுச: ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோऽஸி பாண்ட³வ || 16- 5||

தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே

द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
த்³வௌ பூ⁴தஸர்கௌ³ லோகேऽஸ்மிந்தை³வ ஆஸுர ஏவ ச | 16-6

இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. 

 அர்ஜுனன்  தெய்வ இயல்புடன் பிறந்திருப்பதை இங்கு பகவானே சொல்லிவிட்டார் !  இப்படிப்பட்ட பேறு முன் ஜன்மங்களில் செய்த புண்ணிய வசத்தால் வந்தது. அதனால்தானே ஸ்ரீ ஆண்டாள் ,

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு 
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை  நம்  காமங்கள் மாற்று

என்று பாடுகிறார் !
"அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்று பாடுகிறார் மாணிக்கவாசக ஸ்வாமிகள். க்ருஷ்ணன் தெய்வம், அவனே குரு என்று தெளிவதற்கும் அவன் அருள் வேண்டும்.

இன்னொரு ரசமான சம்பவம் இறுதியில் வருகிறது.
ஸ்ரீ க்ருஷ்ணர்  அர்ஜுனனுக்கு எல்லாஅறிவுரையும் கூறி முடித்துவிட்டார். 

इति ते ज्ञानमाख्यातं गुह्याद्‌गुह्यतरं मया ।
विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु ॥१८- ६३॥
இதி தே ஜ்ஞாநமாக்²யாதம் கு³ஹ்யாத்³கு³ஹ்யதரம் மயா | 
விம்ருஶ்யைதத³ஶேஷேண யதே²ச்ச²ஸி ததா² குரு || 18- 63||

இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.


 நான் சொல்லவேண்டியதை எல்லாம் - ரஹஸ்யத்திலும் உயர்ந்த ரஹஸ்யமானதை - உனக்குச் சொல்லிவிட்டேன். இதை நீ நன்கு யோசித்து எது இஷ்டமோ அப்படியே செய்துகொள் = எதேச்சஸி ததாகுரு  - என்று சொல்கிறார் !

ஆனால், அவருக்கே மனது கேட்கவில்லை  போலும்!  அர்ஜுனன் தனக்குப் ப்ரியமானவன் அல்லவா ? அவனிடம் மீண்டும் சொல்கிறார்.

सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः ।
इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥१८- ६४॥
ஸர்வகு³ஹ்யதமம் பூ⁴ய: ஶ்ருணு மே பரமம் வச: | 
இஷ்டோऽஸி மே த்³ருட⁴மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் || 18- 64||

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥१८- ६५॥
மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு | 
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே || 18- 65||

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையே யெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.



பக்தனுக்கு பகவானை விட்டால் கதியில்லை! பகவானுக்கோ பக்தனை விட்டால் வேறு  யாரும் இல்லை! அதனால் பகவானை  "பக்த பராதீனன் " =பக்தர்களுக்கு வசப்பட்டவன் என்று புராணங்கள் சொல்கின்றன. இங்கு அர்ஜுனன் விஷயத்தில் இதை ஸ்ரீ க்ருஷ்ணர் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.   " நீ எனக்கு ப்ரியமானவன்  உனக்குச் சத்தியமாக சபதமிட்டுச் சொல்கிறேன் " என்கிறார்.

அர்ஜுனன் எவ்வளவு பெரிய புண்யாத்மா ! அர்ஜுனன் என்ற கன்றினால்  அல்லவா நமக்கெல்லாம் கீதை யாகிய பால் கிடைத்தது! 
இந்த  ரஸமான விஷயங்களைத்  தெரிந்துகொள்ளும் நாமும் தன்யர்கள் தானே !

NOTE:

1. நம்மிடையே சில மஹாமேதாவிகள் இருக்கின்றனர்.  'இவ்வளவு பெரிய  சண்டையின் நடுவே இத்தகைய உரையாடல் நடப்பது சாத்தியமா? இதெல்லாம் சுத்த அபத்தம் '  dramatic absurdity என்பவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு  வின்த்ராப் சார்ஜென்ட்  Winthrop Sargeantஎன்பவர் பதில் கூறுகிறார்: 

When God speaks it is not illogical for time to stand still  when armies stand frozen  in their places. In fact, I consider this frozen moment a dramatic triumph.

[Bhagavad Gita: Translated by Winthrop Sargeant. Aleph Book Co, 2016.] 

2. ஸ்ரீ க்ருஷ்ணர் ஆயுதம் எடுக்கவில்லை. ஆனால் அவருடைய  அமுத மொழிகள்  அஞ்ஞான இருளை அகற்றும் மஹா பயங்கர ஆயுதமாக இருக்கின்றன. ஸ்ரீ ரமணர்  கீதை விஷயமாக ஒரு செய்யுள்  எழுதியிருக்கிறார். ஸ்ரீ க்ருஷ்ணரைப்பற்றி அவர் பாடிய பாடல் இது.

பார்த்தன்  தேரில்நல் வார்த்தை யாலவன்
ஆர்த்தி போக்கருள்  மூர்த்தி காக்கவே


Saturday, 27 February 2016

33.சில புனிதப் பறவைகள்



33.சில புனிதப் பறவைகள்





May your Soul take flight on the breath of the Great Spirit.
Eagle… Fly high, touch Great Spirit. Share your medicine, touch me, honor me. So that I may know you too.
From:doowansnewsandevents.wordpress.com

ஶ்ருஷ்டியில் ஒவ்வொரு பொருளிலும் உயிரிலும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. உலகில் உயிர்வாழ்க்கைக்கு அத்தனையும்  அவசியமாக இருக்கிறது. ஆனால் மனிதன் தன் அகந்தையினாலும் அறியாமையினாலும் தனக்கு நேரடியாக பயன்படாதவைக்கு மதிப்பளிப்பதில்லை.

நமது மதத்தில் அநேகமாக ஒவ்வொரு விலங்கையும் பறவையையும்  ஒவ்வொரு தெய்வத்துடன் சம்பந்தப்  படுத்தியே வைத்திருக்கிறார்கள். அதனால் அவை புனிதமாகக் கருதப்படுகின்றன. ஆனால் நாம் அதற்குமேல் எதுவும் சிந்திப்பதில்லை. பசுவைவிட புனிதமான விலங்கு நமக்கு இல்லை. ஆனால் அதன் வதையைத் தடுக்க தீவிரமாக முயலவில்லை, தெருவில் அலைய விட்டுவிட்டோம். கங்கை புனிதம் என்கிறோம். காசியைவிட புனித க்ஷேத்ரம்  இல்லை யென்கிறோம். காசியில் மட்டும் 33 பெரிய கழிவுநீர்க் குழாய்கள்  கங்கையில் கலந்து அதை மேலும் புனிதப்படுத்துகின்றன! அதன் நீர் குடிப்பதற்கு தகுதியானதல்ல . ஆனால் கங்கைக்கு ஆரத்தி எடுப்பது மட்டும் நிற்கவில்லை! நமது ஒவ்வொரு விஷயமும் இப்படித்தான் இருக்கிறது.








கருட வாகனம்

பறவைகளிலே  உயர்ந்த நிலையில்  இருப்பது கருடன் . கருடன் விஷ்ணுவுக்கு வாகனம் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். நமக்கு சின்ன வயதில் கருடனைப் பார்த்தால் க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று சொல்லி கன்னத்தில் போட்டுக்கொள்ளவெண்டும் என்று பெரியவர்கள் சொல்லித்தந்தார்கள். பாம்பைப் பார்த்தாலோ, நினைத்து பயந்தாலோ "கருடக்குடி" என்று சொல்லுவோம். இன்று நகரங்களில் கருடனையே பார்க்க முடிவதில்லை! 
இது ராஜா ரவி வர்மா வரைந்த படம். நமக்கு சிறுவயது முதல் நன்கு பரிச்சயமானது.





உலகைப் பரிபாலனம் செய்யும்  சக்தி  ஸ்ரீ மஹாவிஷ்ணு. அவருக்கு வாகனம் கருடன் என்பது எவ்வளவு பெரிய பெருமை ! ஆனால் இதன் உண்மைப் பொருள் நமக்குத் தெரியாது. நடைமுறையில் பருந்து, கழுகு, கருடன் இவற்றையெல்லாம் நாம் ஒரே நோக்கில்  பார்க்கிறோம். இவை மாம்ஸ பக்ஷிணிகள்; எனவே, அதிக மதிப்பு தருவதில்லை. பெருமாள் கோவிலில் கருடாழ்வார் நிற்கிறார். அதுவே ஆரோக்ய சம்பந்தம் உடையது. கருடாழ்வார் நிற்கும்  நிலையை, சூர்ய நமஸ்காரப் பயிற்சியில் முதல் நிலைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். [இரு கைகளை  நிமிர்ந்த மார்புக்கு எதிரே கூப்பி நிற்கும் நிலை ] இதுவே இறுதி நிலையும் ஆகும்.



Bronze Garuda ; Mysore, 17th century. Hiart, public domain,Wikimedia Commons.




பரம்பொருள்
அமெரிக்க செவ்விந்தியர்கள்  இந்த விஷயத்தை நம்மைவிட நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.



Come join me and we will soar above all your troubles



அவர்கள்  கடவுளுக்கு உருவமோ, பெயரோ கற்பிக்கவில்லை. The Great Spirit or The Great Mystery என்று மட்டும்  சொல்கிறார்கள் . இது நமது ப்ரஹ்மம் என்பது போன்றது. பூமியைத் தாயென்கிறார்கள். The Mother Earth. இது நாம் பூமாதேவி என்பதைப்  போன்றது. 

Praying to The Great Spirit. Statue Outside Boston Museum. Cyrus E.Dallin is the sculptor.

அவர்களுக்கு கோவில் என்று இல்லை. ஆனால் மலை, கடல், மரம், காடு, நதி போன்றவை புனிதமானவை. ஒவ்வொரு விலங்கும் பறவையும் புனிதமானவை. நாம் இவற்றைக் கடவுளின் வாகனமாக வைத்திருக்கிறோம். அவர்களோ  இவை  கடவுளிடமிருந்து நமக்கு செய்தி கொண்டுவருகின்றன என்கிறார்கள். அச்செய்திகளில் மிக முக்கியமானது,  நமது ஆன்மீக முன்னேற்றம் பற்றியது. கடவுளை எப்படி அடைவது என்பதைக் காட்டுவது. இதுவே மிகப்பெரிய மருந்து என்கிறார்கள். அவர்களில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் இதை விளக்கிச் சொல்லக்கூடிய பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சில பயிற்சிகள்  மூலமாக மனதைக் கடந்த  ஒரு நிலையைத்
தொடுகிறார்கள். அந்நிலையில் அவர்கள் நேரடியாக உணர்வதை வைத்து  தமது  பிரிவை வழிநடத்திச் செல்கிறார்கள். எந்தப் ப்ரச்சினைக்கும் தீர்வு சொல்கிறார்கள்.

கருடன் சொல்லும் செய்தி

 நாம் கருடன் என்பதை அவர்கள் Great Eagle என்கிறார்கள்.இது நமக்குச் சொல்லும் செய்தியென்ன?

நாம் நமது எல்லைகளைக் கடந்து, சிறுமைகளைக் கடந்து உயர்ந்த லக்ஷியங்களைக்கொண்டு  ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும். இதை  ஆங்கிலத்தில் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.


Eagle is asking you to fiercely attack your personal fear of the unknown. Be assured that the wings of your soul will be supported by the ever-present breezes which are the breath of the Great Spirit. Feed your body, but more importantly feed your soul.
Within the realm of Mother Earth and Father Sky, the dance of life that leads to spiritual flight involves the conquering of fear and the willingness to join in the adventure that you are co-creating with the Divine. You are being put on notice to reconnect with the element of air... Air is of the mental plane.
If you are walking in the shadows of your former realities, the Eagle brings illumination. Eagle teaches you to look higher and to touch Grandfather Sun with your heart, to love the shadow as well as the light. See the beauty in both and you will take flight like the Eagle. 
By Doowansnewsandevents.wordpress.com.






கருட புராணம்

இதே விஷயங்கள் நமது கருட புராணத்தில் வருகின்றன. இன்னும் விரிவாக ஆனால் எதிர்மறையாக இவை விளக்கப் படுகின்றன.பாவச் செயல்களுக்கு நிச்சயமாகத் தண்டனை உண்டு; அதனால் பயந்தாவது  புண்ணியம் செய்து நற்கதி பெறவேண்டும் என்று இதில் வருகிறது. இது கருடனுக்கும் ஸ்ரீ விஷ்ணுவுக்கும் நடந்த உரையாடலாக  அமைந்துள்ளது. [இதில் வேறு பல விஷயங்களும் வருகின்றன.]  ஆனால் இதைப் பலரும் படிப்பதில்லை!

 எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது இறப்பது நிச்சயம் என்பதை யாரும் நினைப்பதில்லை. உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றுவன்என்றும் விடமாட்டான் என்ற உண்மையை உணர்ந்த மனிதன் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி அறநெறிப்படி வாழ்வான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும்


பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்கள் உள்ளன. அவை அண்டஜம், உத்பிஜம், ஜராயுதம், சுவேதஜம் என்று நான்கு வகையில் உள்ளன.


கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசியும் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை .

 Vishnu and Lakshmi on Garuda, National Museum, New Delhi.
By G4m8 (Own Work) CC BY-SA 4.0 creativecommons via Wikimedia Commons.

செவ்விந்தியர்கள் வாழ்க்கைமுறை மிக எளிதானது.முற்றிலும் இயற்கையோடு இணைந்தது. அதனால் அவர்கள் ஆன்மீகத்தை அணுகிய முறையும் நேரடியானது. ஆனால் நமது   நிலை வேறு. அதற்கேற்ப நமது புராணங்களில் வரும்  விஷயங்களும் விளக்குமுறையும் வித்தியாசப்படும். ஆனால்  பொருளும் இலக்கும் ஒன்றே என்பதில் சந்தேகமில்லை.






கருடன் வாகனமாக மட்டும் அமையாமல், விஷ்ணுவின் தூதன் போலச் செயல்படுகிறான். அர்ஜுனன் க்ருஷ்ணரிடம்  வாதம் செய்து கீதையைப் பெற்றது போல்.கருடன்  நல்வாழ்வுக்கான வழியை விஷ்ணுவிடமே கேட்டு நமக்கு நன்மைசெய்தான். அவன் பெயரில் ஒரு புராணம் இருப்பதே அவன் பெருமைக்கு ஒரு சான்றாகும் ! அடுத்தமுறை நாம் கோவிலில் கருடாழ்வாரைத் தரிசனம் செய்யும்போது, கருடபுராணத்தில் வரும் அற நெறிகளையும்  நினைவு கூறுவோம்.

NOTE:

சிறிது ஆங்கிலப் படிப்பு படித்தவர்களிடமும், நமது புராணங்களை அலக்ஷியமாக நினைக்கும் போக்கு  காணப்படுகிறது. அதை ஏதோ கட்டுக்கதை என்று நினைக்கிறார்கள். பிரபல  அறிஞர்  ஸ்ரீமதி பிரேமா நந்தகுமார்  அவர்கள் எழுதுகிறார்:

"The teachings imbedded in the Puranas are a natural consequence of  the Classical Age in Sanskrit which revelled in sense-induced pleasures leading to a certain degeneration in public morality.

...contrary to the Western assault on our psyche about the Puranas being nothing more than  a bundle of old wives' tales, they are shown as cleansing and transformatory agents as man struggles forward in his spiritual journey. .....As Sri Aurobindo says:


"......the Puranas carried forward this appeal to the intellect and imagination and made it living to the psychic experience, the emotions, the aesthetic feeling and the senses. A constant attempt to make the spiritual truths discovered by the yogin and the rishi integrally expressive, appealing, effective to the whole nature of man and to provide outward means by which the ordinary mind, the mind of a whole people, might be drawn to a first approach to them is the sense of the religio-philosophic evolution of Indian culture." "

[From: 'SRIMAD BHAGAVATAM- At Each Step a Luminous World' by Prema Nandakumar.Auropublications, 2014.]

These remarks are particularly apt in the context of  Garuda Purana which harps on strict morality and ethics as the foundation of spiritual well-being.




Thursday, 25 February 2016

32. நல்லவர்களுக்கு ஏன் துன்பம் வருகிறது?



32. நல்லவர்களுக்கு ஏன் துன்பம் வருகிறது ?


இன்ப- துன்பம் கலந்ததுதான் உலகம் என்று தத்துவம் பேசலாம். ஆனால் கஷ்டம் என்று வந்தால் , "எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வரவேண்டும் ? " என்றுதான்  நாம் எல்லோரும் நினக்கிறோம் !

கடவுள் கருணைக் கடல் என்றுதான் எல்லா மதங்களும்  கோஷமிடுகின்றன.
அப்படிப்பட்ட கடவுள் ஏன் உலகில் துன்பத்தைப் படைக்கவேண்டும்? இங்கு ஏன் தீமை என்று இருக்கவேண்டும் ?இதற்கு மேலை மதத்தினரிடையே எந்த பதிலும் இல்லை. விடை காண இயலாத ஒரு சவாலாகவே இது கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறது. 

1978ல் ஒரு புத்தகம் அமெரிக்காவில் வெளிவந்தது. When Bad Things Happen To Good People என்பது அதன் பெயர். ஹெரால்டு குஷ்னர் என்ற யூத மத போதகர் எழுதிய புத்தகம்.





 மிகப் பரபரப்பாக விற்பனையானது. அவர் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அவர் எழுதிய புத்தகம். ஆனால், நல்லவர்களுக்கு ஏன் கஷ்டம் வருகிறது என்பதற்கு அவரால் பதில்சொல்ல முடியவில்லை! நல்லவர்கள் இருப்பது உண்மை. அவர்களுக்குத் துன்பம் நேர்வதும் உண்மை.பலர்  கடவுளிடம் வேண்டுகிறார்கள். ஆனால்  இது கடவுளையும் மீறிய செயல் என்கிற மாதிரி அவர் எழுதியிருக்கிறார்.


[Published by Knopf Doubleday, 2007.Cover shown here for purely educational purpose.]
Kushner addresses in the book one of the principal problems of theodicy, the conundrum of why, if the universe was created and is governed by a God who is of a good and loving nature, there is nonetheless so much suffering and pain in it - essentially, the evidential problem of evil.

Kushner seeks to offer comfort to grieving people. His answer to the philosophical problem is that God does his best and is with people in their suffering, but is not fully able to prevent it.



இவ்வாறு விக்கிபீடியா எழுதுகிறது!
இது யூத மதத்தினருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மிகுந்த சங்கடத்தை உண்டாக்குக்கும் விஷயம். இது கடவுளையும் மீறிய விஷயம் என்றால் , அவரது கடவுள்தன்மைக்கே களங்கமாகிறதல்லவா ?

இந்த விஷயத்தில் இந்திய மதங்கள்தான் ஆணித்தரமாக பதில்சொல்கின்றன. சுக-துக்கங்கள் அவரவர் கர்மவினைப்படியே வருகின்றன. வந்த கஷ்டத்தை நீக்கிக்கொள்ள இறையருளை நாடவேண்டும். இனி கஷ்டம் வராமலிருக்க நல்லபடி வாழவேண்டும் என்பதே அவை போதிக்கும் பாடம். இதை நமது பெரியவர்கள் அனைவரும் ஒரேமாதிரி சொல்லியிருக்கிறார்கள்.

அறத்தாறு இதுவென வேண்டா; சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.         


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது



ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும். 



-- திருவள்ளூவர்


இங்கு முதல் குறளில் ஒரு காட்சியைக் காட்டுகிறார். ஒருவன் பல்லக்கில் உட்கார்ந்து போகிறான். பலர் அதனைத் தூக்கிச் செல்கிறார்கள்! இதிலேயே அவர்கள் செய்த பாவ-புண்ணியம் தெரிகிற தல்லவா எனக் கேட்கிறார் !



என் செயலாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே 
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த

 பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
 முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே 

-- பட்டினத்தார் 




செய்த தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் 
எய்த வருமோ இருநிதியம்? - வையத்து 
அறம் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று 
வெறும் பானை பொங்குமோ மேல்! 


--ஔவையார்.


நல்ல கர்மம் பெற தர்மவழியில் வாழ்க்கை நடத்தவேண்டும். "தர்மம் சர " = தர்மத்தைச் செய் என வேதம் கட்டளையிடுகிறது. எது தர்மம்= எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதை ஸ்ம்ருதி நூல்கள் விளக்குகின்றன.
அதன்படி வாழ்ந்தவர்களின் வரலாறுகளை  இதிஹாசங்கள்  விளக்குகின்றன. வேத சாஸ்திரங்களைப் படிக்க இயலாதவர்களையு,ம் இதிஹாசங்கள் சென்றடைகின்றன. அதனாலேயே மஹாபாரதத்திற்கு ஐந்தாவது வேதம் எனப் பெயர் வந்தது.

நம் நாட்டில் சாதாரண மக்களும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு இதிஹாசங்களே முக்கிய  காரணம். எழுத்தறிவில்லாதவர்களும் இவற்றை அறிந்திருந்தார்கள். பௌராணிகர்கள் ஊர் ஊராக, பட்டிதொட்டிகளுக்கெல்லாம் சென்று  இவற்றை விவரித்தர்கள். இது  சென்ற தலைமுறை வரையில்- சினிமாவும், டி,.வி.யும் விஸ்வரூபம் எடுக்கும் வரையில் --நடந்தது!

உலக வரலாற்றில்  ஏறக்குறைய இதேமாதிரி நிலையை நாம் புராதன கிரேக்க நாட்டில் பார்க்கிறோம்.


Mask of Dionysus stored at the Louvre.


அங்கும்  மிகவும் புராதனமான சம்ப்ரதாயம் இருந்தது. கடவுள்கள், தேவர்கள் பற்றிய  பல வரலாறுகளும் செய்திகளும் பாட்டாகவும் கதையாகவும், செவிவழியாகவும்  மக்களிடையே பரவியிருந்தன.  அங்கு கிரேக்க கடவுள் டயோனிஸஸுக்கு  Dionysusஆண்டுதோறும் பெரிய விழா எடுப்பார்கள்.  இது அரசாங்கத்தின் ஆதரவுடன் மிகப்பெரிய அளவில் நடக்கும். இது ஒரு புனித விழா. சிறந்த இடத்தில், திறந்த வெளியில் நடக்கும். இதில் கலந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் தேசீயக் கடமையாகக் கருதப்பட்டது. 


Dionisos Theatre , Accropolis, where the tragedies were enacted.
By JarekPT-Own work, DFDL, https://www.gnu.org/copyleft/sdl.html. CC BY-SA 4 0 3 0.
creativecommons via Wikimedia Commons.

அவ்விழாவின்போது, சில நாடகங்களை நடத்துவார்கள். இதில் உயர்ந்த பாத்திரங்களும்  தேவதேவியரும்  தோன்றுவார்கள். இவை துன்ப இயல் நாடகங்கள்.Tragedy. வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள், எப்படி விதிவசப்பட்டு, மதியிழந்து தேவ-தேவியரின் கைப்பாவையாகி, தங்கள் உயர் நிலையிலிருந்து விழுகிறார்கள் அல்லது மரணம் அடைகிறார்கள் என்பதே முக்கிய கருத்து. அதேசமயம், அவர்கள் தங்கள் புத்திசாமர்த்தியத்தால் ஏதோ தகிடுதத்தம் செய்யலாமென்றால், , அவர்களுடைய கடவுளர்கள் அதையும் அனுமதிக்க மாட்டார்கள்! அதை அவர்களின்  ஆணவம் என்று கருதி அதற்கும் தண்டனை தருவார்கள். இவ்வாறு மனிதனை ஆட்டிப்படைப்பது  தேவர்களுக்கு விளையாட்டு போன்றது! இதையே ஷேக்ஸ்பியர் மொழியில் சொல்வதென்றால்:


I' th' last night's storm I such a fellow saw,
Which made me think a man a worm.......
 I have heard more since.
As flies to wanton boys are we to th' gods,
They kill us for their sport.
King Lear Act 4, scene 1.




மனிதன் அடக்கமாக வாழவேண்டும், புராதன  விதிகளுக்குக் கட்டுப்பட்டு, தெய்வங்களுக்கு  அடங்கி நடக்கவேண்டும் என்பதே இவை கற்பித்த முக்கிய பாடமாகும்.  இதை ஆராய்ந்த அறிஞர்கள்  இரண்டு விஷயங்களை முக்கிய மாகக் குறிப்பிடுகிறார்கள்.

  • இந்த நாடகங்கள் நம் மனதில் தோற்றுவிக்கும் முக்கியமான உணர்ச்சிகள் இரண்டு : 1. பாத்திரங்கள்  படும் துன்பத்தைக் கண்டு மனதில் தோன்றும் இரக்கம்.2,பெரிய நிலையில் உள்ள இவர்களுக்கே இந்தக் கதியென்றால், நமக்கு என்ன நேரும் என்ற பயம் ! [இவை இரண்டுமே நமது நவரசத்தில் அடங்கியவை.]


a picture of Dionysus.



  • இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நாம் நமது வாழ்வில் இத்தகைய  கொடிய அனுபவங்களை   நேரடியாக அடையாமல், இந்த நாடகத்தின் வாயிலாகவே  இந்த  மன நிலைகளில்  பங்கு பெறுகிறோம் ! இது நமது மனதிலும், நமது குணங்களிலும் வியத்தகு மாற்றங்களைச் செய்கிறது ! நாம் நல்லவர்களாகவேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது ! இதை ஆங்கிலத்தில்   katharsis-  a type of transformation .என்கிறார்கள்.

நாடகங்கள் சோகமயமாக இருந்தாலும் அவற்றின் பயன்  மனித சிந்தனையையும் வாழ்வையும்  பண்படுத்துவதாகவே இருந்தது. குடிமக்கள் இத்தகைய  பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் - அது நாட்டுக்கு நல்லது என்ற கருத்தில்தான்  இவற்றை  நடத்த அரசாங்கமே பெரும் ஆதரவு அளித்தது.


கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே  இந்த நாடகங்கள் மிக உன்னத நிலையை அடைந்திருந்தன.  ஏஸ்கிலஸ், ஸோஃபோக்லெஸ், யூரிபைடிஸ்   [Aeschylus. Sophocles, Euripides ] ;என்ற மூன்று நாடகாசிரியர்கள்  மும்மணிகளாகத் திகழ்ந்தார்கள். 




 Left: Bust of Aeschylus.



ஆக, வாழ்க்கையில் நமக்குப் புரியாத, பிடிபடாத , கட்டுப்படாத அம்சங்கள் எத்தனையோ இருக்கின்றன,  ஏட்டுக் கல்வியால் மட்டுமே அவற்றைத் தெரிந்துகொள்ள முடியாது. அறநெறிகளுக்குக் கட்டுப்பட்டு பெரியோர் சொல்படி நடக்கவேண்டும்.  மூத்தோர் சொல்லும் முதி நெல்லியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பது முதுமொழி .


31, இரண்டும் கலந்த உலகம் !



31. இரண்டும் கலந்த உலகம்!


from: thegraphicsfairy.com

மலரும் முள்ளும்!


இந்த உலகம்  இன்பமயமானதா, துன்பமயமானதா?
இதற்கு இன்னமும் யாரும் சரியாக விடைசொல்லவில்லை! சொல்லப்போனால் எந்த மதமும் இந்த உலகை நமது நிரந்தர இடமாகவோ, இறுதி லக்ஷ்யமாகவோ கருதவில்லை. இது ஏதோ ரயில்வே பிளாட்ஃபாரம் மாதிரி- எவ்வளவு  நேரம் காத்திருந்தாலும் இதைவிட்டுக் கிளம்பியே தீரவேண்டும். இது ஒரு பாலம் மாதிரி-- இதைத் தாண்டிப் போகவேண்டும்- இங்கேயே குடியிருப்பதற்கில்லை!

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் இந்த உலகை துன்பமயமாகவே கருதுகிறது. ஆதிமனிதன் கடவுளின் கட்டளையை மீறியதால் இங்கு தள்ளப்பட்டான்; அவன் செய்த பாவத்திற்கு தண்டனையாக ஆண்டவன்  மரணத்தைக் விதித்தான் (Death is the wages of sin ) என்பது கிறிஸ்தவமதம்.  அதற்கு 600 வருஷங்களுக்கு முந்திய புத்தமதம்  உலகை "துக்கத்தின் உறைவிடம்" என்றே திட்டவட்டமாகச் சொல்கிறது- இதுதான் அம்மதத்தின்   அடைப்படைக் கொள்கைகளில் முதலாவது.

அதற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முற்பட்ட ஆதிமதமான  ஹிதுமதமோ, இந்த உலகை "மிஶ்ர லோகம் " = இன்ப-துன்பம் இரண்டும் கலந்ததுதான் என்கிறது. இது நமது மக்களின் மதியில் ஆழப்பதிந்துவிட்ட கருத்து.

ஊபர் நீசே-நீசே ஊபர்
லஹர் சலே ஜீவன் கி 
என்று பாடினார் ஹிந்தி திரைக் கவிஞர் ஷைலேந்த்ரா.[1955]








அதாவது, வாழ்க்கையில் உயர்வு, தாழ்வு ஆகியவை அலைபோன்று வருகின்றன. 









இதையே தமிழ் திரைக்கவிஞர் தஞ்சை ராமையதாஸ் பாடும்போது,
"உலகினில் சுக துக்க ஊஞ்சலிலே தினம்
 உனது மாயை விளையாடுதய்யா
உண்மையில் உந்தன் மாயாலீலையே 
உணர்ந்தவன் தானே தன்யனய்யா 
இந்தப் பாரோர் அறியார் உன் மாயா" 
என்று சொன்னார்! [1957]

கீதையில் ஸ்ரீ பகவான் இந்த உலகம் வியாதி, மூப்பு, மரணம் ஆகிய துன்பங்கள் நிறைந்தது என்கிறார். [உண்மையில், இந்த மூன்றையும் கண்டுதானே, புத்தர் உலகைத் துறந்தார் !]

து:க்காலயம் அஶாஸ்வதம்     8.15
  துக்கத்திற்கு இருப்பிடமானது, நிலையற்றது

ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி    9.3
  மரணமயமாகிய இந்த சம்சாரம்

அனித்யம் அஸுகம் லோகே    9.33
    நிலையில்லாததும் சுகமில்லாததுமான  இந்த உலகம்

ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்   12.7
  மரணமயமாகிய இந்த சம்சாரக் கடல்

ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி  து:க்க தோஷானு தர்ஶனம் 13.8
  பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, துக்கம் ஆகிய  தோஷங்களைக்                        காண்கிறோம்

ஜன்ம ம்ருத்யு  ஜரா து:க்கம்    14.20
  ஜன்மம், மரணம், மூப்பு ஆகிய துன்பங்கள்

இதெல்லாம் கீதையில் பகவான் கூறும் சொற்கள்.

[ஆனால் இதுவே நமது மதத்தின் இறுதி நிலையல்ல.  நமது உண்மையான இயல்பு  தெய்வீகமானது. "ஶ்ருண்வந்து விஶ்வே அம்ருதஸ்ய புத்ரா ! " = அமரத்தன்மை வாய்ந்த  உலக மக்களே, கேளுங்கள் " என்கிறது வேதம்.
நாம் நமது உண்மையான தெய்வத்தன்மையை - ஆத்மாவை-  அறியாமல்  வாழ்கிறோம். இந்த அறியாமையின் காரணமாக ஆத்மாவைவிட்டு, அகந்தையின் அடிப்படையில் செயல்படுகிறோம். அகந்தை முக்குணங்களின் வாயிலாக வெளிப்படுகிறது. முக்குணங்களின் வசப்படாமல், அவற்றை வெற்றிகொள்வதுதான்  யோகம். இதையே கீதையில் விளக்குகிறார்.  "நிஸ்த்ரைகுண்யோ பவ அர்ஜுன " = அர்ஜுனா ! நீ முக்குணங்களையும் கடந்தவனாக-குணாதீதனாக-  ஆகிவிடு என்கிறார் பகவான். இவ்வாறு இல்லாமல், குணதோஷங்களூகு வசப்பட்டவன் இவ்வுலகை இன்ப-துன்பங்கள் கலந்த கலவையாகவே காண்பான்.]

பொதுவாக உலகில் அனேகமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கஷ்டம் அனுபவிப்பதைக் காண்கிறோம்.. நாம் யாரைக் கெட்டவர்கள் என்று நினைக்கிறோமோ, அவர்கள் கஷ்டப்படுவதைக்கண்டு யாரும் ஆச்சரியப்படுவதில்லை; அனுதாபம் கொள்வதில்லை. ஆனால் நாம் நல்லவர் என்று கருதுபவர்கள் துன்பப்பட்டால், 'பாவம், இவன் நல்லவனாயிற்றே, இவனுக்கு ஏன் கஷ்டம் வந்தது; கடவுளுக்குக் கண்ணில்லை போலும்' என்றெல்லாம் சொல்கிறோம். 





கவிஞர்கள் இருவிதமாகவும் உலகைப் பார்க்கிறார்கள். சிலர் எல்லாம் இன்பமயம் என்கிறார்கள். சிலர் ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றானே என்று பாடுகிறார்கள்.






Portrait by Julia Cameron.
National Portrait Gallery, London.


ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரௌனிங்  எழுதினார்:



The year's at the spring,

And day's at the morn;


Morning's at seven;


The hill-side's dew-pearled;


The lark's on the wing;


The snail's on the thorn; 


God's in his Heaven --


All's right with the world!

[Pippa's Song]

ப்ரௌனிங்  இயற்கையைப் பார்க்கிறார்- நல்ல வஸந்த காலம்; காலைப்பொழுது; மலைச்சரிவில் பனிபெய்து முத்துமுத்தாகத் தெரிகிறது.பறவைகள் பறந்து திரிகின்றன.; பிற புழு பூச்சிகளும் அதனதன் செயலில் ஈடுபட்டிருக்கின்றன. இதைப்பார்த்த கவிஞருக்கு ஒரே குஷி ! இயற்கை எவ்வளவு நேர்த்தியாக இயங்குகிறது! ஆஹா! ஆண்டவன் சொர்க்கத்திலிருப்பது தெரிகிறது- அதனால்தானே உலகில் எல்லாம் சரியாக நடந்து வருகிறது என்று பாடுகிறார்.

God is in his Heaven --

All's right with the world !.











இங்கே நம் கவிஞர்  ஸாஹிர் லுதியான்வி  மனிதனைப் பார்க்கிறார்! அவருக்கு மகிழ்ச்சியில்லை! ஆம், மனிதன் தான் மாறிவிட்டதுமன்றி , உலகையே மாற்றிக்கொண்டு வருகிறான். நிலை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. எனவே அவர் பாடுகிறார்:






ஆஸ்மான் பே ஹை குதா, ஔர் ஜமீன் பே ஹம்
ஆஜ்கல் ஓ இஸ்தரஃப் தேக்தா ஹை கம்

கடவுள்- அவர் பாட்டுக்கு ஆகாசத்தில் இருக்கிறர்.
நாமெல்லாம் இங்கு பூமியில் இருக்கிறோம்.
 இப்பொழுதெல்லாம் அவர் நம்பக்கம் அதிகம் பார்ப்பதில்லை!

இந்தப் பாட்டை முழுதும் பார்க்கலாம்:



aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aajkal wo is taraf dekhtaa hai kam
aasmaan pe hai Khudaa aur zameen pe ham

aajkal kisi ko wo toktaa nahin,
chaahe kuchh bhi kijiye roktaa nahin
aajkal kisi ko wo toktaa nahin,
chaahe kuchh bhi kijiye roktaa nahin
ho rahi hai loot maar phat rahe hain bomb
aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aajkal wo is taraf dekhtaa hai kam
aasmaan pe hai Khudaa aur zameen pe ham



kisko bheje wo yahaan khaaq chhaanane
is tamaam bheed kaa haal jaanane
kisko bheje wo yahaan haath thaamne
is tamaam bheed kaa haal jaanane
aadmi hain anginat devtaa hain kam
aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aajkal wo is taraf dekhtaa hai kam
aasmaan pe hai Khudaa aur zameen pe ham


jo bhi hai wo theek hai zikr kyun karen
ham hi sab jahaan ki fikr kyun karen
jo bhi hai wo theek hai zikr kyun karen
ham hi sab jahaan ki fikr kyun karen
jab use hi gham nahin to kyun hamen ho gham
aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aajkal wo is taraf dekhtaa hai kam

aasmaan pe hai Khudaa aur zameen pe ham



கடவுள்- அவருக்கென்ன ! தன்பாட்டுக்கு ஆகாயத்தில் [சொர்கத்தில்]இருக்கிறார்.  நாம் இங்கே பூமியில் தவிக்கிறோம். இப்போதெல்லாம்  அவர் நம்மைப்பற்றி அதிகம் அக்கறை காட்டுவதில்லை!


ஆஜ்கல் கிஸி கோ வோ டோக்தா நஹீ (ன்)
சாஹே குச் பீ கீஜியே ரோக்தா நஹீ (ன்)
ஹோ ரஹீ ஹை லூட் மார் ஃபட் ரஹீ ஹை  பாம்
ஆஸ்மான் பே ஹை குதா......

இப்போதெல்லாம் யாரையும் அவர் தண்டிப்பதில்லை. யார் எதைச்செய்தாலும்  தடுப்பதில்லை. இங்கே அடிதடி, கொள்ளை என்று நடந்துகொண்டிருக்கிறது.  குண்டுகள் வெடித்துக்
கொண்டிருக்கின்றன.கடவுள் தன்பாட்டுக்கு ஆகாயத்தில் இருக்கிறார்; நம் பக்கம் அதிகம் கண்டுகொள்வதில்லை!

கிஸ்கோ பேஜே ஒ யஹா(ன்) காக் சானனே
இஸ் தமாம் பீட் கா ஹால் ஜானே
கிஸ்கோ பேஜே ஓ யஹா(ன்) ஹாத் தாம்னே
ஆத்மீ  ஹை  அன்கினத்  தேவ்தா ஹை கம்
ஆஸ்மான்  பே ஹை குதா.....

இங்கிருக்கும் மணலைப் பிரித்தெடுக்க அவர் யாரைத்தான் அனுப்புவார் ?
இங்கிருக்கும் கும்பலின் நிலையை அறிந்துவர யாரை அனுப்புவார்?
நமக்கு நிதானத்தைப் புகட்ட [தீச்செயலில் ஈடுபடும் நம் கையைத் தடுக்க] யாரைத்தான் அனுப்புவார்? இங்கு மனிதர்கள் எண்ணி முடியாத அளவுக்கு பெருகிவிட்டார்கள்- தேவர்கள் அருகிவிட்டார்கள்! அவர்பாட்டுக்கு ஆகாயத்தில் இருக்கிறர். நம்மை இங்கு பூமியில் விட்டுவிட்டார். நம் பக்கம் அதிகம் பார்ப்பதில்லை !


ஜோ பீ ஹை ஓ டீக் ஹை ஃஜிக்ர் க்யூ(ன்) கரே(ன்)
ஹம் ஹீ  ஸப் ஜஹா(ன்) கீ ஃபிக்ர் க்யூ(ன்) கரே(ன்)
ஜப் உஸே ஹி கம் நஹீ  தோ க்யூ(ன்) ஹமே ஹோ கம்
ஆஸ்மான் பே ஹை குதா........


ஏதோ நடப்பது நடக்கட்டும்! இதைப்பற்றி  நாம் ஏன் அக்கறை கொள்ளவேண்டும்?
இதைப்பற்றியெல்லாம்  நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரே இதைப்பற்றி வருத்தப்படவில்லை. பின், நாம் ஏன் வருந்தவேண்டும்?

கடவுள் தன் போக்கில் ஆகாயத்தில் இருக்கிறார்.
நாம் இங்கு பூமியில் கிடக்கிறோம்.
இந்தப் பக்கம் அவர் இப்போதெல்லாம் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை!








இந்தப் பாடல் 1958ல் எழுதியது!  
ஃபிர்  சுபா ஹோகி  Phir Subah Hogi 
(फिर सुबह होगी )  என்ற படத்தில் இடம் பெற்றது. முகேஷின் குரலில் இதை யூட்யூபில் கேட்டுப் பாருங்கள்.

 



கடந்த 60 வருஷங்களில் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு  என்று என்னென்னவோ பிதற்றுகிறார்கள். ஆனால் எங்கும் அமைதியில்லை,சந்தோஷமில்லை. பெண்கள் பயமில்லாமல் வெளியில் போய்வர முடியவில்லை. பள்ளியையோ, ஆசிரியர்களையோ நம்பி குழந்தைகளை அனுப்பமுடியவில்லை. வயதானவர்கள் தனியே வீட்டில் இருக்க முடியவில்லை. சர்க்கார் நடத்தும் கோவில்களில் சாமியைப் பார்க்கக்கூட காசு  கொடுக்கவேண்டும் !

சாதாரணமாக, ஜனங்கள்  தம் சொந்த அனுபவத்தை  வைத்து உலகை விமர்சிக்கிறார்கள். கவிஞர்களோ உலகை வேறுவிதமாகப் பார்க்கிறர்கள். இன்ப-துன்பம் இரண்டும் கலந்துதான் இருக்கிறது! இதையும் ஒரு ஹிந்திக் கவிஞர் பாடினார்:



kabhi kaali ratiyaa, kabhi din suhaane
kismat ki baate to kismat hi jaane

o beta jee,
are o baabu jee, kismat ki hava kabhi naram, kabhi garam
kabhi naram-naram, kabhi garam-garam,
kabhi naram-garam naram-garam re
o beta ji


duniya ke is chidiya ghar mein tarah tarah ka jalava
mile kisi ko sookhi rotee, kisi ko poori halava
are bhai kisi ko poori halava
o beta jee, khichadi ka maza kabhi naram, kabhi garam ...

dard diya to thoda thodaa, khushi bhi thodi thodi
vaah re maalik, vaah re maalik, duhkh aur sukh ki khoob banaayi jodi
are vaah khoob banaayi jodi
o beta jee, jeevan ka nasha kabhi naram, kabhi garam ...


ஓ  பேடாஜீ ! அரே ஓ பாபூஜீ !
கிஸ்மத் கி ஹவா கபி கரம், கபி நரம்!


 சில நாட்கள்  வெட்டியாகக் கழிகின்றன, சில நாட்கள் இனிமையாக இருக்கின்றன. 
ஓ மகனே! ஓ அப்பா! 
விதியில் என்ன எழுதியிருக்கிறது என்பது அந்த விதிக்கே வெளிச்சம்!

சிலமயம் விதி  குளிர்ந்தகாற்று வீசுவதுபோல் இருக்கிறது. சில சமயம்  ஒரே சூடு! அப்பனே, இப்படித்தான் குளிரும் சூடும் மாறி மாறி வருகின்றன!

இந்த உலகம் ஒரு பறவைக்கூடு மாதிரி   இருக்கிறது! இங்குதான் எந்தனை விதவிதமான முகங்கள்!
சிலருக்குச் சாப்பிட காய்ந்துபோன ரொட்டி! சிலருக்கு பூரியுடன் ஹல்வா!
சில சமயம் ஆறிப்போன  கிச்சடி! சில சமயம் அதுவே சூடாக வரும்! இரண்டையும் பழகிக்கொள்ள வேணும்!

கஷ்டம் கொஞ்சம் வந்தால்  சந்தோஷமும் கொஞ்சம்  வருகிறது! 
ஓ பகவானே நீ  சரியான கில்லாடி ! இந்த இரண்டையும் அழகாகத்தான்  ஜோடி சேர்த்து  வைத்திருக்கிறாய்! 
சில சமயம்  தண்மை- சில பொழுது வெம்மை ! அப்பனே, இதுதான் வாழ்க்கை! இரண்டையும்  கலந்துதான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது!









ராஜேந்த்ர க்ருஷன் என்ற கவிஞர் எழுதியபாடல்- 1951ல் வந்த அல்பேலா  Albela என்ற படத்தில் வந்தது! இன்றும் இதன் பொருள் மனதைத் தொடுவதாக இருக்கிறது! 

















आजकल वह इस तरफ़ देखता है कम

आजकल किसी को वह टोकता नहीं
चाहे कुछ भी कीजिए रोकता नहींஆம், இங்கு என்னவெல்லாம் நடக்கிறது! கடவுள் எல்லாவற்ரையும் நடக்கவிட்டுவிட்டு  தான்பாட்டுக்கு சொர்கத்தில் இருக்கிறாறே என்கிறார் நம் கவிஞர்!