Thursday, 25 February 2016

32. நல்லவர்களுக்கு ஏன் துன்பம் வருகிறது?



32. நல்லவர்களுக்கு ஏன் துன்பம் வருகிறது ?


இன்ப- துன்பம் கலந்ததுதான் உலகம் என்று தத்துவம் பேசலாம். ஆனால் கஷ்டம் என்று வந்தால் , "எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வரவேண்டும் ? " என்றுதான்  நாம் எல்லோரும் நினக்கிறோம் !

கடவுள் கருணைக் கடல் என்றுதான் எல்லா மதங்களும்  கோஷமிடுகின்றன.
அப்படிப்பட்ட கடவுள் ஏன் உலகில் துன்பத்தைப் படைக்கவேண்டும்? இங்கு ஏன் தீமை என்று இருக்கவேண்டும் ?இதற்கு மேலை மதத்தினரிடையே எந்த பதிலும் இல்லை. விடை காண இயலாத ஒரு சவாலாகவே இது கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறது. 

1978ல் ஒரு புத்தகம் அமெரிக்காவில் வெளிவந்தது. When Bad Things Happen To Good People என்பது அதன் பெயர். ஹெரால்டு குஷ்னர் என்ற யூத மத போதகர் எழுதிய புத்தகம்.





 மிகப் பரபரப்பாக விற்பனையானது. அவர் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அவர் எழுதிய புத்தகம். ஆனால், நல்லவர்களுக்கு ஏன் கஷ்டம் வருகிறது என்பதற்கு அவரால் பதில்சொல்ல முடியவில்லை! நல்லவர்கள் இருப்பது உண்மை. அவர்களுக்குத் துன்பம் நேர்வதும் உண்மை.பலர்  கடவுளிடம் வேண்டுகிறார்கள். ஆனால்  இது கடவுளையும் மீறிய செயல் என்கிற மாதிரி அவர் எழுதியிருக்கிறார்.


[Published by Knopf Doubleday, 2007.Cover shown here for purely educational purpose.]
Kushner addresses in the book one of the principal problems of theodicy, the conundrum of why, if the universe was created and is governed by a God who is of a good and loving nature, there is nonetheless so much suffering and pain in it - essentially, the evidential problem of evil.

Kushner seeks to offer comfort to grieving people. His answer to the philosophical problem is that God does his best and is with people in their suffering, but is not fully able to prevent it.



இவ்வாறு விக்கிபீடியா எழுதுகிறது!
இது யூத மதத்தினருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மிகுந்த சங்கடத்தை உண்டாக்குக்கும் விஷயம். இது கடவுளையும் மீறிய விஷயம் என்றால் , அவரது கடவுள்தன்மைக்கே களங்கமாகிறதல்லவா ?

இந்த விஷயத்தில் இந்திய மதங்கள்தான் ஆணித்தரமாக பதில்சொல்கின்றன. சுக-துக்கங்கள் அவரவர் கர்மவினைப்படியே வருகின்றன. வந்த கஷ்டத்தை நீக்கிக்கொள்ள இறையருளை நாடவேண்டும். இனி கஷ்டம் வராமலிருக்க நல்லபடி வாழவேண்டும் என்பதே அவை போதிக்கும் பாடம். இதை நமது பெரியவர்கள் அனைவரும் ஒரேமாதிரி சொல்லியிருக்கிறார்கள்.

அறத்தாறு இதுவென வேண்டா; சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.         


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது



ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும். 



-- திருவள்ளூவர்


இங்கு முதல் குறளில் ஒரு காட்சியைக் காட்டுகிறார். ஒருவன் பல்லக்கில் உட்கார்ந்து போகிறான். பலர் அதனைத் தூக்கிச் செல்கிறார்கள்! இதிலேயே அவர்கள் செய்த பாவ-புண்ணியம் தெரிகிற தல்லவா எனக் கேட்கிறார் !



என் செயலாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே 
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த

 பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
 முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே 

-- பட்டினத்தார் 




செய்த தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் 
எய்த வருமோ இருநிதியம்? - வையத்து 
அறம் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று 
வெறும் பானை பொங்குமோ மேல்! 


--ஔவையார்.


நல்ல கர்மம் பெற தர்மவழியில் வாழ்க்கை நடத்தவேண்டும். "தர்மம் சர " = தர்மத்தைச் செய் என வேதம் கட்டளையிடுகிறது. எது தர்மம்= எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதை ஸ்ம்ருதி நூல்கள் விளக்குகின்றன.
அதன்படி வாழ்ந்தவர்களின் வரலாறுகளை  இதிஹாசங்கள்  விளக்குகின்றன. வேத சாஸ்திரங்களைப் படிக்க இயலாதவர்களையு,ம் இதிஹாசங்கள் சென்றடைகின்றன. அதனாலேயே மஹாபாரதத்திற்கு ஐந்தாவது வேதம் எனப் பெயர் வந்தது.

நம் நாட்டில் சாதாரண மக்களும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு இதிஹாசங்களே முக்கிய  காரணம். எழுத்தறிவில்லாதவர்களும் இவற்றை அறிந்திருந்தார்கள். பௌராணிகர்கள் ஊர் ஊராக, பட்டிதொட்டிகளுக்கெல்லாம் சென்று  இவற்றை விவரித்தர்கள். இது  சென்ற தலைமுறை வரையில்- சினிமாவும், டி,.வி.யும் விஸ்வரூபம் எடுக்கும் வரையில் --நடந்தது!

உலக வரலாற்றில்  ஏறக்குறைய இதேமாதிரி நிலையை நாம் புராதன கிரேக்க நாட்டில் பார்க்கிறோம்.


Mask of Dionysus stored at the Louvre.


அங்கும்  மிகவும் புராதனமான சம்ப்ரதாயம் இருந்தது. கடவுள்கள், தேவர்கள் பற்றிய  பல வரலாறுகளும் செய்திகளும் பாட்டாகவும் கதையாகவும், செவிவழியாகவும்  மக்களிடையே பரவியிருந்தன.  அங்கு கிரேக்க கடவுள் டயோனிஸஸுக்கு  Dionysusஆண்டுதோறும் பெரிய விழா எடுப்பார்கள்.  இது அரசாங்கத்தின் ஆதரவுடன் மிகப்பெரிய அளவில் நடக்கும். இது ஒரு புனித விழா. சிறந்த இடத்தில், திறந்த வெளியில் நடக்கும். இதில் கலந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் தேசீயக் கடமையாகக் கருதப்பட்டது. 


Dionisos Theatre , Accropolis, where the tragedies were enacted.
By JarekPT-Own work, DFDL, https://www.gnu.org/copyleft/sdl.html. CC BY-SA 4 0 3 0.
creativecommons via Wikimedia Commons.

அவ்விழாவின்போது, சில நாடகங்களை நடத்துவார்கள். இதில் உயர்ந்த பாத்திரங்களும்  தேவதேவியரும்  தோன்றுவார்கள். இவை துன்ப இயல் நாடகங்கள்.Tragedy. வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள், எப்படி விதிவசப்பட்டு, மதியிழந்து தேவ-தேவியரின் கைப்பாவையாகி, தங்கள் உயர் நிலையிலிருந்து விழுகிறார்கள் அல்லது மரணம் அடைகிறார்கள் என்பதே முக்கிய கருத்து. அதேசமயம், அவர்கள் தங்கள் புத்திசாமர்த்தியத்தால் ஏதோ தகிடுதத்தம் செய்யலாமென்றால், , அவர்களுடைய கடவுளர்கள் அதையும் அனுமதிக்க மாட்டார்கள்! அதை அவர்களின்  ஆணவம் என்று கருதி அதற்கும் தண்டனை தருவார்கள். இவ்வாறு மனிதனை ஆட்டிப்படைப்பது  தேவர்களுக்கு விளையாட்டு போன்றது! இதையே ஷேக்ஸ்பியர் மொழியில் சொல்வதென்றால்:


I' th' last night's storm I such a fellow saw,
Which made me think a man a worm.......
 I have heard more since.
As flies to wanton boys are we to th' gods,
They kill us for their sport.
King Lear Act 4, scene 1.




மனிதன் அடக்கமாக வாழவேண்டும், புராதன  விதிகளுக்குக் கட்டுப்பட்டு, தெய்வங்களுக்கு  அடங்கி நடக்கவேண்டும் என்பதே இவை கற்பித்த முக்கிய பாடமாகும்.  இதை ஆராய்ந்த அறிஞர்கள்  இரண்டு விஷயங்களை முக்கிய மாகக் குறிப்பிடுகிறார்கள்.

  • இந்த நாடகங்கள் நம் மனதில் தோற்றுவிக்கும் முக்கியமான உணர்ச்சிகள் இரண்டு : 1. பாத்திரங்கள்  படும் துன்பத்தைக் கண்டு மனதில் தோன்றும் இரக்கம்.2,பெரிய நிலையில் உள்ள இவர்களுக்கே இந்தக் கதியென்றால், நமக்கு என்ன நேரும் என்ற பயம் ! [இவை இரண்டுமே நமது நவரசத்தில் அடங்கியவை.]


a picture of Dionysus.



  • இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நாம் நமது வாழ்வில் இத்தகைய  கொடிய அனுபவங்களை   நேரடியாக அடையாமல், இந்த நாடகத்தின் வாயிலாகவே  இந்த  மன நிலைகளில்  பங்கு பெறுகிறோம் ! இது நமது மனதிலும், நமது குணங்களிலும் வியத்தகு மாற்றங்களைச் செய்கிறது ! நாம் நல்லவர்களாகவேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது ! இதை ஆங்கிலத்தில்   katharsis-  a type of transformation .என்கிறார்கள்.

நாடகங்கள் சோகமயமாக இருந்தாலும் அவற்றின் பயன்  மனித சிந்தனையையும் வாழ்வையும்  பண்படுத்துவதாகவே இருந்தது. குடிமக்கள் இத்தகைய  பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் - அது நாட்டுக்கு நல்லது என்ற கருத்தில்தான்  இவற்றை  நடத்த அரசாங்கமே பெரும் ஆதரவு அளித்தது.


கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே  இந்த நாடகங்கள் மிக உன்னத நிலையை அடைந்திருந்தன.  ஏஸ்கிலஸ், ஸோஃபோக்லெஸ், யூரிபைடிஸ்   [Aeschylus. Sophocles, Euripides ] ;என்ற மூன்று நாடகாசிரியர்கள்  மும்மணிகளாகத் திகழ்ந்தார்கள். 




 Left: Bust of Aeschylus.



ஆக, வாழ்க்கையில் நமக்குப் புரியாத, பிடிபடாத , கட்டுப்படாத அம்சங்கள் எத்தனையோ இருக்கின்றன,  ஏட்டுக் கல்வியால் மட்டுமே அவற்றைத் தெரிந்துகொள்ள முடியாது. அறநெறிகளுக்குக் கட்டுப்பட்டு பெரியோர் சொல்படி நடக்கவேண்டும்.  மூத்தோர் சொல்லும் முதி நெல்லியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பது முதுமொழி .


1 comment:

  1. Play The Real Money Slot Machines - Trick-Taking Game - Trick-Taking
    How to Play. Play casino-roll.com The Real https://tricktactoe.com/ Money Slot Machine. https://deccasino.com/review/merit-casino/ If you are searching for a fun, exciting game to play online, we septcasino have you covered. casinosites.one

    ReplyDelete