33.சில புனிதப் பறவைகள்
Eagle… Fly high, touch Great Spirit. Share your medicine, touch me, honor me. So that I may know you too.
From:doowansnewsandevents.wordpress.comஶ்ருஷ்டியில் ஒவ்வொரு பொருளிலும் உயிரிலும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. உலகில் உயிர்வாழ்க்கைக்கு அத்தனையும் அவசியமாக இருக்கிறது. ஆனால் மனிதன் தன் அகந்தையினாலும் அறியாமையினாலும் தனக்கு நேரடியாக பயன்படாதவைக்கு மதிப்பளிப்பதில்லை.
நமது மதத்தில் அநேகமாக ஒவ்வொரு விலங்கையும் பறவையையும் ஒவ்வொரு தெய்வத்துடன் சம்பந்தப் படுத்தியே வைத்திருக்கிறார்கள். அதனால் அவை புனிதமாகக் கருதப்படுகின்றன. ஆனால் நாம் அதற்குமேல் எதுவும் சிந்திப்பதில்லை. பசுவைவிட புனிதமான விலங்கு நமக்கு இல்லை. ஆனால் அதன் வதையைத் தடுக்க தீவிரமாக முயலவில்லை, தெருவில் அலைய விட்டுவிட்டோம். கங்கை புனிதம் என்கிறோம். காசியைவிட புனித க்ஷேத்ரம் இல்லை யென்கிறோம். காசியில் மட்டும் 33 பெரிய கழிவுநீர்க் குழாய்கள் கங்கையில் கலந்து அதை மேலும் புனிதப்படுத்துகின்றன! அதன் நீர் குடிப்பதற்கு தகுதியானதல்ல . ஆனால் கங்கைக்கு ஆரத்தி எடுப்பது மட்டும் நிற்கவில்லை! நமது ஒவ்வொரு விஷயமும் இப்படித்தான் இருக்கிறது.
கருட வாகனம்
பறவைகளிலே உயர்ந்த நிலையில் இருப்பது கருடன் . கருடன் விஷ்ணுவுக்கு வாகனம் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். நமக்கு சின்ன வயதில் கருடனைப் பார்த்தால் க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று சொல்லி கன்னத்தில் போட்டுக்கொள்ளவெண்டும் என்று பெரியவர்கள் சொல்லித்தந்தார்கள். பாம்பைப் பார்த்தாலோ, நினைத்து பயந்தாலோ "கருடக்குடி" என்று சொல்லுவோம். இன்று நகரங்களில் கருடனையே பார்க்க முடிவதில்லை!
உலகைப் பரிபாலனம் செய்யும் சக்தி ஸ்ரீ மஹாவிஷ்ணு. அவருக்கு வாகனம் கருடன் என்பது எவ்வளவு பெரிய பெருமை ! ஆனால் இதன் உண்மைப் பொருள் நமக்குத் தெரியாது. நடைமுறையில் பருந்து, கழுகு, கருடன் இவற்றையெல்லாம் நாம் ஒரே நோக்கில் பார்க்கிறோம். இவை மாம்ஸ பக்ஷிணிகள்; எனவே, அதிக மதிப்பு தருவதில்லை. பெருமாள் கோவிலில் கருடாழ்வார் நிற்கிறார். அதுவே ஆரோக்ய சம்பந்தம் உடையது. கருடாழ்வார் நிற்கும் நிலையை, சூர்ய நமஸ்காரப் பயிற்சியில் முதல் நிலைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். [இரு கைகளை நிமிர்ந்த மார்புக்கு எதிரே கூப்பி நிற்கும் நிலை ] இதுவே இறுதி நிலையும் ஆகும்.
Bronze Garuda ; Mysore, 17th century. Hiart, public domain,Wikimedia Commons.
அமெரிக்க செவ்விந்தியர்கள் இந்த விஷயத்தை நம்மைவிட நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
Come join me and we will soar above all your troubles
அவர்கள் கடவுளுக்கு உருவமோ, பெயரோ கற்பிக்கவில்லை. The Great Spirit or The Great Mystery என்று மட்டும் சொல்கிறார்கள் . இது நமது ப்ரஹ்மம் என்பது போன்றது. பூமியைத் தாயென்கிறார்கள். The Mother Earth. இது நாம் பூமாதேவி என்பதைப் போன்றது.
Praying to The Great Spirit. Statue Outside Boston Museum. Cyrus E.Dallin is the sculptor.
அவர்களுக்கு கோவில் என்று இல்லை. ஆனால் மலை, கடல், மரம், காடு, நதி போன்றவை புனிதமானவை. ஒவ்வொரு விலங்கும் பறவையும் புனிதமானவை. நாம் இவற்றைக் கடவுளின் வாகனமாக வைத்திருக்கிறோம். அவர்களோ இவை கடவுளிடமிருந்து நமக்கு செய்தி கொண்டுவருகின்றன என்கிறார்கள். அச்செய்திகளில் மிக முக்கியமானது, நமது ஆன்மீக முன்னேற்றம் பற்றியது. கடவுளை எப்படி அடைவது என்பதைக் காட்டுவது. இதுவே மிகப்பெரிய மருந்து என்கிறார்கள். அவர்களில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் இதை விளக்கிச் சொல்லக்கூடிய பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சில பயிற்சிகள் மூலமாக மனதைக் கடந்த ஒரு நிலையைத்
தொடுகிறார்கள். அந்நிலையில் அவர்கள் நேரடியாக உணர்வதை வைத்து தமது பிரிவை வழிநடத்திச் செல்கிறார்கள். எந்தப் ப்ரச்சினைக்கும் தீர்வு சொல்கிறார்கள்.
கருடன் சொல்லும் செய்தி
நாம் நமது எல்லைகளைக் கடந்து, சிறுமைகளைக் கடந்து உயர்ந்த லக்ஷியங்களைக்கொண்டு ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும். இதை ஆங்கிலத்தில் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.
Eagle is asking you to fiercely attack your personal fear of the unknown. Be assured that the wings of your soul will be supported by the ever-present breezes which are the breath of the Great Spirit. Feed your body, but more importantly feed your soul.
Within the realm of Mother Earth and Father Sky, the dance of life that leads to spiritual flight involves the conquering of fear and the willingness to join in the adventure that you are co-creating with the Divine. You are being put on notice to reconnect with the element of air... Air is of the mental plane.
If you are walking in the shadows of your former realities, the Eagle brings illumination. Eagle teaches you to look higher and to touch Grandfather Sun with your heart, to love the shadow as well as the light. See the beauty in both and you will take flight like the Eagle.
By Doowansnewsandevents.wordpress.com.
கருட புராணம்
இதே விஷயங்கள் நமது கருட புராணத்தில் வருகின்றன. இன்னும் விரிவாக ஆனால் எதிர்மறையாக இவை விளக்கப் படுகின்றன.பாவச் செயல்களுக்கு நிச்சயமாகத் தண்டனை உண்டு; அதனால் பயந்தாவது புண்ணியம் செய்து நற்கதி பெறவேண்டும் என்று இதில் வருகிறது. இது கருடனுக்கும் ஸ்ரீ விஷ்ணுவுக்கும் நடந்த உரையாடலாக அமைந்துள்ளது. [இதில் வேறு பல விஷயங்களும் வருகின்றன.] ஆனால் இதைப் பலரும் படிப்பதில்லை!
எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது இறப்பது நிச்சயம் என்பதை யாரும் நினைப்பதில்லை. உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றுவன்என்றும் விடமாட்டான் என்ற உண்மையை உணர்ந்த மனிதன் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி அறநெறிப்படி வாழ்வான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும்
பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்கள் உள்ளன. அவை அண்டஜம், உத்பிஜம், ஜராயுதம், சுவேதஜம் என்று நான்கு வகையில் உள்ளன.
கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசியும் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை .
Vishnu and Lakshmi on Garuda, National Museum, New Delhi.
By G4m8 (Own Work) CC BY-SA 4.0 creativecommons via Wikimedia Commons.
செவ்விந்தியர்கள் வாழ்க்கைமுறை மிக எளிதானது.முற்றிலும் இயற்கையோடு இணைந்தது. அதனால் அவர்கள் ஆன்மீகத்தை அணுகிய முறையும் நேரடியானது. ஆனால் நமது நிலை வேறு. அதற்கேற்ப நமது புராணங்களில் வரும் விஷயங்களும் விளக்குமுறையும் வித்தியாசப்படும். ஆனால் பொருளும் இலக்கும் ஒன்றே என்பதில் சந்தேகமில்லை.
கருடன் வாகனமாக மட்டும் அமையாமல், விஷ்ணுவின் தூதன் போலச் செயல்படுகிறான். அர்ஜுனன் க்ருஷ்ணரிடம் வாதம் செய்து கீதையைப் பெற்றது போல்.கருடன் நல்வாழ்வுக்கான வழியை விஷ்ணுவிடமே கேட்டு நமக்கு நன்மைசெய்தான். அவன் பெயரில் ஒரு புராணம் இருப்பதே அவன் பெருமைக்கு ஒரு சான்றாகும் ! அடுத்தமுறை நாம் கோவிலில் கருடாழ்வாரைத் தரிசனம் செய்யும்போது, கருடபுராணத்தில் வரும் அற நெறிகளையும் நினைவு கூறுவோம்.
NOTE:
சிறிது ஆங்கிலப் படிப்பு படித்தவர்களிடமும், நமது புராணங்களை அலக்ஷியமாக நினைக்கும் போக்கு காணப்படுகிறது. அதை ஏதோ கட்டுக்கதை என்று நினைக்கிறார்கள். பிரபல அறிஞர் ஸ்ரீமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் எழுதுகிறார்:
"The teachings imbedded in the Puranas are a natural consequence of the Classical Age in Sanskrit which revelled in sense-induced pleasures leading to a certain degeneration in public morality.
...contrary to the Western assault on our psyche about the Puranas being nothing more than a bundle of old wives' tales, they are shown as cleansing and transformatory agents as man struggles forward in his spiritual journey. .....As Sri Aurobindo says:
"......the Puranas carried forward this appeal to the intellect and imagination and made it living to the psychic experience, the emotions, the aesthetic feeling and the senses. A constant attempt to make the spiritual truths discovered by the yogin and the rishi integrally expressive, appealing, effective to the whole nature of man and to provide outward means by which the ordinary mind, the mind of a whole people, might be drawn to a first approach to them is the sense of the religio-philosophic evolution of Indian culture." "
[From: 'SRIMAD BHAGAVATAM- At Each Step a Luminous World' by Prema Nandakumar.Auropublications, 2014.]
These remarks are particularly apt in the context of Garuda Purana which harps on strict morality and ethics as the foundation of spiritual well-being.
No comments:
Post a Comment