28. ஸினிமாவில் ப்ரார்த்தனை !-1
ஸினிமா ஒரு பெரிய சமூக இயக்கமாகி விட்டது; தற்கால வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது என்பதை சொல்லத் தேவையில்லை. அதுவும் தமிழ் நாட்டில் ஸினிமா ஒரு வியாதிபோலப் பரவி விட்டது ! அரசியலையே ஆட்டிவைக்கும் சக்தியாகிவிட்டது!
மக்களின் கவனத்தை மிக எளிதில் ஈர்க்கும் மிகப்பெரிய சாதனமாக ஸினிமா இருக்கிறது. பொதுவாக வியாபார நோக்கில் தான் ஸினிமா எடுக்கிறார்கள். ஆனாலும் சில பெரியவர்கள் இதன் வாயிலாகவும் நல்ல விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கின்றனர்.
இந்திய ஸினிமாவில் சங்கீதம் ஆரம்பமுதலே ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கைதேர்ந்த இசையமைப்பாளர்கள் நமது நாட்டுக்கே உரிய இசையை பட்டிதொட்டிக ளையெல்லாம் சென்றடையுமாறு செய்தனர். பல கவிஞர்கள் சிறந்த பாடல்களை எழுதினர்.
ஒருகாலத்தில் சாமி படங்கள்- பக்திப் படங்கள் என்ற போர்வையில் பல அபத்தங்கள் வெளிவந்தன. இவற்றில் பல 'சாமி ' பாட்டுகள் இடம்பெற்றன, ஆனால் இவற்றில் சிலதான் இன்னும் மனதில் நிற்கின்றன. தமிழ் ஸினிமாவில், மீரா, சாவித்திரி முதலிய படங்களில் எம்.எஸ் பாடிய பாடல்களும், ஔவையாரில் கே.பி. சுந்தராம்பாள் பாடிய பாடல்களும் இன்னமும் நம் காதுகளில் ஒலிக்கின்றன! ஜாதகம் என்ற படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய இரண்டு பாடல்கள் அருமையானவை: 1. மதி குலவும் யாழிசையே கண்ணன் குழலிசை யாவாயோ 2. மாடுகள் மேய்த்திடும் பையன். இவற்றை இன்று யூ-ட்யூபில் கேட்கலாம்! #
https://youtu.be/xG0mbYOUqao
https://youtu.be/iBf39IuHvbM
. மாயா பஜார் படத்தில் (1957) சாத்யகி பாடுவதாக ஒரு பாட்டு வரும் : "பலே பலே பலே தேவா, இந்தப் பாரோர் அறியார் உன் மாயை " பொருள் பொதிந்த பாடல். இம்மாதிரி காலம்கடந்தும் கருத்தில் நின்ற பாடல்கள் அபூர்வமே.
நான் இங்கு 'சாமி ' படங்கள் என்ற பெயரில் வந்த பாடல்களைப் பற்றிச் சொல்லவரவில்லை. சில சமூகப் படங்களில் வந்த பொதுப்படையான சில பாடல்களைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம். அதுவும் சில ஹிந்தி பாடல்கள்!
तू प्यार का सागर है
तेरी इक बूँद के प्यासे हम
लौटा जो दिया तुमने
चले जायेंगे जहां से हम
तू प्यार का सागर...
घायल मन का पागल पंछी
उड़ने को बेक़रार
पंख हैं कोमल, आँख है धुँधली,
जाना है सागर पार
अब तू ही इसे समझा,
राह भूले थे कहाँ से हम
तू प्यार का सागर...
इधर झूम के गाये ज़िंदगी,
उधर है मौत खड़ी
कोई क्या जाने कहाँ है सीमा,
उलझन आन पड़ी
कानों में ज़रा कह दे,
कि आएँ कौन दिशा से हम
तू प्यार का सागर...
தூ ப்யார் கா ஸாகர் ஹை
தேரீ இக் பூந்த் கே ப்யாஸே ஹம்
லௌடா ஜோ தியா தும்நே
சலே ஜாயேங்கே ஜஹா ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை...........
பகவானே! நீ கருணைக் கடலாக இருக்கிறாய்
அந்தக் கருணையின் ஒரு துளிக்காக நாங்கள் வேட்கையால் தவிக்கிறோம் !
நீ எங்களை நிராகரித்து விட்டால்,
நாங்கள் இந்த உலகத்தைவிட்டே போய்விடுவோம்!
பகவானே ! நீ கருணைக் கடல் !
காயல் மன் கா பாகல் பஞ்சீ
உட்னே கோ பேகரார்
பங்க் ஹை கோமல், ஆங்க் ஹை டுண்ட்லீ ,
ஜானாஹை ஸாகர் பார்
அடிபட்டுள்ள மனம் என்னும் இந்தப் பறவை,
பறந்து போகத் துடித்துக்கொண்டிருக்கிறது!
சிறகுகள் மென்மையானவை,
பார்வையோ,தெளிவாக இல்லை!
ஆனால் இந்தக் கடலைக் கடந்து போயாகவேண்டும்!
அப் தூஹி இஸே சம்ஜா,
ராஹ பூலேதே கஹா ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை.......
இப்பொழுது நீதான் புரியவைக்கவேண்டும்--
நாங்கள் எங்கு பாதையை மறந்துவிட்டோம் என்று !
நீ கருணைக் கடல் (அல்லவா) !
இதர் ஜூம் கே காயே ஜிந்தகீ,
உதர் ஹை மௌத் கடீ
கோயீ க்யா ஜானே கஹா ஹை ஸீமா
உல்ஜன் ஆன் படீ
இந்தப் பக்கம், வாழ்க்கை ஒரே பாட்டும் கூத்துமாக இருக்கிறது!
அந்தப் பக்கமோ, மரணம் காத்துக் கொண்டிருக்கிறது!
இரண்டிற்கும் இடையில் எல்லைக் கோடு எங்கே இருக்கிறது-
இது யாருக்குத் தெரியும் ?
மனது குழம்பிப் போயிருக்கிறது!
கானோ மே ஜரா கஹ் தே,
கீ ஆயே கௌன் திஶா ஸே ஹம்
தூ ப்யார் கா ஸாகர் ஹை
பகவானே ! நீ என் காதில் சொல்லிவிடு!
நாங்கள் எத்திசையிலிருந்து வந்திருக்கிறோம் ?
நீ கருணைக் கடல்
அதன் ஒரு துளிக்காக நாங்கள் தவிக்கிறோம் !
[ மொழி பெயர்ப்பு கவிதையல்ல. கருத்தை மட்டும் சொல்வதே நோக்கம்.]
இதை சினிமாவில் வந்த பாட்டென்று யாராவது சொல்ல முடியுமா?
நமது தத்துவக் கருத்துக்கள் அத்தனையும் இங்கே வந்துவிட்டது!
நமது நிலை தெரியாமல் நாம் குழம்பிப் போயிருக்கிறோம், நமது தெய்வீக இயல்பை மறந்து விட்டோம், இந்த சம்சாரக் கடலைக் கடந்தாக வேண்டும், அதற்கு தெய்வத்துணை தேவை- என்ற வேதாந்தக் கருத்துக்கள் இங்கே எவ்வளவு அருமையாக விளக்கப்படுகின்றன! ஆனால் எந்த குறிப்பிட்ட தெய்வத்தைப் பற்றியும் இது அமையவில்லை! இதுதான் சமயத்தை மீறிய ஆன்மீகமென்பது!
இதை எழுதியவர் ஷைலேந்த்ரா என்ற கவிஞர். இது 1955ல் வந்த ஸீமா என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். பாடியது மன்னா டே, இசை ஶங்கர் -ஜெய்கிஷன். இதைக் கீழ் கண்ட யூ-ட்யூப் சேனலில் கேட்கலாம்!
https://youtu.be/e2D-kjOMNF0
இதோ சுத்தானந்த பாரதியார் எழுதிய பாடல் ஒன்று. ஒப்பிட்டுப் பாருங்கள்!
அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமரவாழ்வு பெறவே
அருள் புரிவாய்.........
பரிபூர்ண சதானந்த வாரியே
பக்த ரக்ஷகனே பரமாத்மனே
அருள் புரிவாய்.........
அருணோதயம்போல் ஆத்ம சாந்தியும்
அறிவுண்மை இன்பும் திருவும் தருவாய்
தருமப்பயிர் வாழும் தருணமாமழையே
தங்குலகெங்கிலும் மங்கலம் பொங்கவே
அருள் புரிவாய் கருணைக் கடலே !
र है, तेरी एक बूँद के प्यासे हम
लौटा जो दिया तूने, चले जायेंगे जहां से हम
घायल मन का पागल पंछी उड़ने को बेकरार
पंख हैं कोमल, आँख है धुंदली, जाना है सागर पार
अब तू ही इसे समझा, राह भूले थे कहाँ से हम
इधर झूम के गाए जिन्दगी, उधर है मौत खडी
कोई क्या जाने कहाँ है सीमा, उलझन आन पडी
कानों में ज़रा कह दे के आए कौन दिशा से हम
A superb account. Congrats, Sir.
ReplyDelete