Thursday, 25 February 2016

31, இரண்டும் கலந்த உலகம் !



31. இரண்டும் கலந்த உலகம்!


from: thegraphicsfairy.com

மலரும் முள்ளும்!


இந்த உலகம்  இன்பமயமானதா, துன்பமயமானதா?
இதற்கு இன்னமும் யாரும் சரியாக விடைசொல்லவில்லை! சொல்லப்போனால் எந்த மதமும் இந்த உலகை நமது நிரந்தர இடமாகவோ, இறுதி லக்ஷ்யமாகவோ கருதவில்லை. இது ஏதோ ரயில்வே பிளாட்ஃபாரம் மாதிரி- எவ்வளவு  நேரம் காத்திருந்தாலும் இதைவிட்டுக் கிளம்பியே தீரவேண்டும். இது ஒரு பாலம் மாதிரி-- இதைத் தாண்டிப் போகவேண்டும்- இங்கேயே குடியிருப்பதற்கில்லை!

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் இந்த உலகை துன்பமயமாகவே கருதுகிறது. ஆதிமனிதன் கடவுளின் கட்டளையை மீறியதால் இங்கு தள்ளப்பட்டான்; அவன் செய்த பாவத்திற்கு தண்டனையாக ஆண்டவன்  மரணத்தைக் விதித்தான் (Death is the wages of sin ) என்பது கிறிஸ்தவமதம்.  அதற்கு 600 வருஷங்களுக்கு முந்திய புத்தமதம்  உலகை "துக்கத்தின் உறைவிடம்" என்றே திட்டவட்டமாகச் சொல்கிறது- இதுதான் அம்மதத்தின்   அடைப்படைக் கொள்கைகளில் முதலாவது.

அதற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முற்பட்ட ஆதிமதமான  ஹிதுமதமோ, இந்த உலகை "மிஶ்ர லோகம் " = இன்ப-துன்பம் இரண்டும் கலந்ததுதான் என்கிறது. இது நமது மக்களின் மதியில் ஆழப்பதிந்துவிட்ட கருத்து.

ஊபர் நீசே-நீசே ஊபர்
லஹர் சலே ஜீவன் கி 
என்று பாடினார் ஹிந்தி திரைக் கவிஞர் ஷைலேந்த்ரா.[1955]








அதாவது, வாழ்க்கையில் உயர்வு, தாழ்வு ஆகியவை அலைபோன்று வருகின்றன. 









இதையே தமிழ் திரைக்கவிஞர் தஞ்சை ராமையதாஸ் பாடும்போது,
"உலகினில் சுக துக்க ஊஞ்சலிலே தினம்
 உனது மாயை விளையாடுதய்யா
உண்மையில் உந்தன் மாயாலீலையே 
உணர்ந்தவன் தானே தன்யனய்யா 
இந்தப் பாரோர் அறியார் உன் மாயா" 
என்று சொன்னார்! [1957]

கீதையில் ஸ்ரீ பகவான் இந்த உலகம் வியாதி, மூப்பு, மரணம் ஆகிய துன்பங்கள் நிறைந்தது என்கிறார். [உண்மையில், இந்த மூன்றையும் கண்டுதானே, புத்தர் உலகைத் துறந்தார் !]

து:க்காலயம் அஶாஸ்வதம்     8.15
  துக்கத்திற்கு இருப்பிடமானது, நிலையற்றது

ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி    9.3
  மரணமயமாகிய இந்த சம்சாரம்

அனித்யம் அஸுகம் லோகே    9.33
    நிலையில்லாததும் சுகமில்லாததுமான  இந்த உலகம்

ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்   12.7
  மரணமயமாகிய இந்த சம்சாரக் கடல்

ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி  து:க்க தோஷானு தர்ஶனம் 13.8
  பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, துக்கம் ஆகிய  தோஷங்களைக்                        காண்கிறோம்

ஜன்ம ம்ருத்யு  ஜரா து:க்கம்    14.20
  ஜன்மம், மரணம், மூப்பு ஆகிய துன்பங்கள்

இதெல்லாம் கீதையில் பகவான் கூறும் சொற்கள்.

[ஆனால் இதுவே நமது மதத்தின் இறுதி நிலையல்ல.  நமது உண்மையான இயல்பு  தெய்வீகமானது. "ஶ்ருண்வந்து விஶ்வே அம்ருதஸ்ய புத்ரா ! " = அமரத்தன்மை வாய்ந்த  உலக மக்களே, கேளுங்கள் " என்கிறது வேதம்.
நாம் நமது உண்மையான தெய்வத்தன்மையை - ஆத்மாவை-  அறியாமல்  வாழ்கிறோம். இந்த அறியாமையின் காரணமாக ஆத்மாவைவிட்டு, அகந்தையின் அடிப்படையில் செயல்படுகிறோம். அகந்தை முக்குணங்களின் வாயிலாக வெளிப்படுகிறது. முக்குணங்களின் வசப்படாமல், அவற்றை வெற்றிகொள்வதுதான்  யோகம். இதையே கீதையில் விளக்குகிறார்.  "நிஸ்த்ரைகுண்யோ பவ அர்ஜுன " = அர்ஜுனா ! நீ முக்குணங்களையும் கடந்தவனாக-குணாதீதனாக-  ஆகிவிடு என்கிறார் பகவான். இவ்வாறு இல்லாமல், குணதோஷங்களூகு வசப்பட்டவன் இவ்வுலகை இன்ப-துன்பங்கள் கலந்த கலவையாகவே காண்பான்.]

பொதுவாக உலகில் அனேகமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கஷ்டம் அனுபவிப்பதைக் காண்கிறோம்.. நாம் யாரைக் கெட்டவர்கள் என்று நினைக்கிறோமோ, அவர்கள் கஷ்டப்படுவதைக்கண்டு யாரும் ஆச்சரியப்படுவதில்லை; அனுதாபம் கொள்வதில்லை. ஆனால் நாம் நல்லவர் என்று கருதுபவர்கள் துன்பப்பட்டால், 'பாவம், இவன் நல்லவனாயிற்றே, இவனுக்கு ஏன் கஷ்டம் வந்தது; கடவுளுக்குக் கண்ணில்லை போலும்' என்றெல்லாம் சொல்கிறோம். 





கவிஞர்கள் இருவிதமாகவும் உலகைப் பார்க்கிறார்கள். சிலர் எல்லாம் இன்பமயம் என்கிறார்கள். சிலர் ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றானே என்று பாடுகிறார்கள்.






Portrait by Julia Cameron.
National Portrait Gallery, London.


ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரௌனிங்  எழுதினார்:



The year's at the spring,

And day's at the morn;


Morning's at seven;


The hill-side's dew-pearled;


The lark's on the wing;


The snail's on the thorn; 


God's in his Heaven --


All's right with the world!

[Pippa's Song]

ப்ரௌனிங்  இயற்கையைப் பார்க்கிறார்- நல்ல வஸந்த காலம்; காலைப்பொழுது; மலைச்சரிவில் பனிபெய்து முத்துமுத்தாகத் தெரிகிறது.பறவைகள் பறந்து திரிகின்றன.; பிற புழு பூச்சிகளும் அதனதன் செயலில் ஈடுபட்டிருக்கின்றன. இதைப்பார்த்த கவிஞருக்கு ஒரே குஷி ! இயற்கை எவ்வளவு நேர்த்தியாக இயங்குகிறது! ஆஹா! ஆண்டவன் சொர்க்கத்திலிருப்பது தெரிகிறது- அதனால்தானே உலகில் எல்லாம் சரியாக நடந்து வருகிறது என்று பாடுகிறார்.

God is in his Heaven --

All's right with the world !.











இங்கே நம் கவிஞர்  ஸாஹிர் லுதியான்வி  மனிதனைப் பார்க்கிறார்! அவருக்கு மகிழ்ச்சியில்லை! ஆம், மனிதன் தான் மாறிவிட்டதுமன்றி , உலகையே மாற்றிக்கொண்டு வருகிறான். நிலை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. எனவே அவர் பாடுகிறார்:






ஆஸ்மான் பே ஹை குதா, ஔர் ஜமீன் பே ஹம்
ஆஜ்கல் ஓ இஸ்தரஃப் தேக்தா ஹை கம்

கடவுள்- அவர் பாட்டுக்கு ஆகாசத்தில் இருக்கிறர்.
நாமெல்லாம் இங்கு பூமியில் இருக்கிறோம்.
 இப்பொழுதெல்லாம் அவர் நம்பக்கம் அதிகம் பார்ப்பதில்லை!

இந்தப் பாட்டை முழுதும் பார்க்கலாம்:



aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aajkal wo is taraf dekhtaa hai kam
aasmaan pe hai Khudaa aur zameen pe ham

aajkal kisi ko wo toktaa nahin,
chaahe kuchh bhi kijiye roktaa nahin
aajkal kisi ko wo toktaa nahin,
chaahe kuchh bhi kijiye roktaa nahin
ho rahi hai loot maar phat rahe hain bomb
aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aajkal wo is taraf dekhtaa hai kam
aasmaan pe hai Khudaa aur zameen pe ham



kisko bheje wo yahaan khaaq chhaanane
is tamaam bheed kaa haal jaanane
kisko bheje wo yahaan haath thaamne
is tamaam bheed kaa haal jaanane
aadmi hain anginat devtaa hain kam
aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aajkal wo is taraf dekhtaa hai kam
aasmaan pe hai Khudaa aur zameen pe ham


jo bhi hai wo theek hai zikr kyun karen
ham hi sab jahaan ki fikr kyun karen
jo bhi hai wo theek hai zikr kyun karen
ham hi sab jahaan ki fikr kyun karen
jab use hi gham nahin to kyun hamen ho gham
aasmaan pe hai Khudaa aur zameen pe ham
aajkal wo is taraf dekhtaa hai kam

aasmaan pe hai Khudaa aur zameen pe ham



கடவுள்- அவருக்கென்ன ! தன்பாட்டுக்கு ஆகாயத்தில் [சொர்கத்தில்]இருக்கிறார்.  நாம் இங்கே பூமியில் தவிக்கிறோம். இப்போதெல்லாம்  அவர் நம்மைப்பற்றி அதிகம் அக்கறை காட்டுவதில்லை!


ஆஜ்கல் கிஸி கோ வோ டோக்தா நஹீ (ன்)
சாஹே குச் பீ கீஜியே ரோக்தா நஹீ (ன்)
ஹோ ரஹீ ஹை லூட் மார் ஃபட் ரஹீ ஹை  பாம்
ஆஸ்மான் பே ஹை குதா......

இப்போதெல்லாம் யாரையும் அவர் தண்டிப்பதில்லை. யார் எதைச்செய்தாலும்  தடுப்பதில்லை. இங்கே அடிதடி, கொள்ளை என்று நடந்துகொண்டிருக்கிறது.  குண்டுகள் வெடித்துக்
கொண்டிருக்கின்றன.கடவுள் தன்பாட்டுக்கு ஆகாயத்தில் இருக்கிறார்; நம் பக்கம் அதிகம் கண்டுகொள்வதில்லை!

கிஸ்கோ பேஜே ஒ யஹா(ன்) காக் சானனே
இஸ் தமாம் பீட் கா ஹால் ஜானே
கிஸ்கோ பேஜே ஓ யஹா(ன்) ஹாத் தாம்னே
ஆத்மீ  ஹை  அன்கினத்  தேவ்தா ஹை கம்
ஆஸ்மான்  பே ஹை குதா.....

இங்கிருக்கும் மணலைப் பிரித்தெடுக்க அவர் யாரைத்தான் அனுப்புவார் ?
இங்கிருக்கும் கும்பலின் நிலையை அறிந்துவர யாரை அனுப்புவார்?
நமக்கு நிதானத்தைப் புகட்ட [தீச்செயலில் ஈடுபடும் நம் கையைத் தடுக்க] யாரைத்தான் அனுப்புவார்? இங்கு மனிதர்கள் எண்ணி முடியாத அளவுக்கு பெருகிவிட்டார்கள்- தேவர்கள் அருகிவிட்டார்கள்! அவர்பாட்டுக்கு ஆகாயத்தில் இருக்கிறர். நம்மை இங்கு பூமியில் விட்டுவிட்டார். நம் பக்கம் அதிகம் பார்ப்பதில்லை !


ஜோ பீ ஹை ஓ டீக் ஹை ஃஜிக்ர் க்யூ(ன்) கரே(ன்)
ஹம் ஹீ  ஸப் ஜஹா(ன்) கீ ஃபிக்ர் க்யூ(ன்) கரே(ன்)
ஜப் உஸே ஹி கம் நஹீ  தோ க்யூ(ன்) ஹமே ஹோ கம்
ஆஸ்மான் பே ஹை குதா........


ஏதோ நடப்பது நடக்கட்டும்! இதைப்பற்றி  நாம் ஏன் அக்கறை கொள்ளவேண்டும்?
இதைப்பற்றியெல்லாம்  நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரே இதைப்பற்றி வருத்தப்படவில்லை. பின், நாம் ஏன் வருந்தவேண்டும்?

கடவுள் தன் போக்கில் ஆகாயத்தில் இருக்கிறார்.
நாம் இங்கு பூமியில் கிடக்கிறோம்.
இந்தப் பக்கம் அவர் இப்போதெல்லாம் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை!








இந்தப் பாடல் 1958ல் எழுதியது!  
ஃபிர்  சுபா ஹோகி  Phir Subah Hogi 
(फिर सुबह होगी )  என்ற படத்தில் இடம் பெற்றது. முகேஷின் குரலில் இதை யூட்யூபில் கேட்டுப் பாருங்கள்.

 



கடந்த 60 வருஷங்களில் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு  என்று என்னென்னவோ பிதற்றுகிறார்கள். ஆனால் எங்கும் அமைதியில்லை,சந்தோஷமில்லை. பெண்கள் பயமில்லாமல் வெளியில் போய்வர முடியவில்லை. பள்ளியையோ, ஆசிரியர்களையோ நம்பி குழந்தைகளை அனுப்பமுடியவில்லை. வயதானவர்கள் தனியே வீட்டில் இருக்க முடியவில்லை. சர்க்கார் நடத்தும் கோவில்களில் சாமியைப் பார்க்கக்கூட காசு  கொடுக்கவேண்டும் !

சாதாரணமாக, ஜனங்கள்  தம் சொந்த அனுபவத்தை  வைத்து உலகை விமர்சிக்கிறார்கள். கவிஞர்களோ உலகை வேறுவிதமாகப் பார்க்கிறர்கள். இன்ப-துன்பம் இரண்டும் கலந்துதான் இருக்கிறது! இதையும் ஒரு ஹிந்திக் கவிஞர் பாடினார்:



kabhi kaali ratiyaa, kabhi din suhaane
kismat ki baate to kismat hi jaane

o beta jee,
are o baabu jee, kismat ki hava kabhi naram, kabhi garam
kabhi naram-naram, kabhi garam-garam,
kabhi naram-garam naram-garam re
o beta ji


duniya ke is chidiya ghar mein tarah tarah ka jalava
mile kisi ko sookhi rotee, kisi ko poori halava
are bhai kisi ko poori halava
o beta jee, khichadi ka maza kabhi naram, kabhi garam ...

dard diya to thoda thodaa, khushi bhi thodi thodi
vaah re maalik, vaah re maalik, duhkh aur sukh ki khoob banaayi jodi
are vaah khoob banaayi jodi
o beta jee, jeevan ka nasha kabhi naram, kabhi garam ...


ஓ  பேடாஜீ ! அரே ஓ பாபூஜீ !
கிஸ்மத் கி ஹவா கபி கரம், கபி நரம்!


 சில நாட்கள்  வெட்டியாகக் கழிகின்றன, சில நாட்கள் இனிமையாக இருக்கின்றன. 
ஓ மகனே! ஓ அப்பா! 
விதியில் என்ன எழுதியிருக்கிறது என்பது அந்த விதிக்கே வெளிச்சம்!

சிலமயம் விதி  குளிர்ந்தகாற்று வீசுவதுபோல் இருக்கிறது. சில சமயம்  ஒரே சூடு! அப்பனே, இப்படித்தான் குளிரும் சூடும் மாறி மாறி வருகின்றன!

இந்த உலகம் ஒரு பறவைக்கூடு மாதிரி   இருக்கிறது! இங்குதான் எந்தனை விதவிதமான முகங்கள்!
சிலருக்குச் சாப்பிட காய்ந்துபோன ரொட்டி! சிலருக்கு பூரியுடன் ஹல்வா!
சில சமயம் ஆறிப்போன  கிச்சடி! சில சமயம் அதுவே சூடாக வரும்! இரண்டையும் பழகிக்கொள்ள வேணும்!

கஷ்டம் கொஞ்சம் வந்தால்  சந்தோஷமும் கொஞ்சம்  வருகிறது! 
ஓ பகவானே நீ  சரியான கில்லாடி ! இந்த இரண்டையும் அழகாகத்தான்  ஜோடி சேர்த்து  வைத்திருக்கிறாய்! 
சில சமயம்  தண்மை- சில பொழுது வெம்மை ! அப்பனே, இதுதான் வாழ்க்கை! இரண்டையும்  கலந்துதான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது!









ராஜேந்த்ர க்ருஷன் என்ற கவிஞர் எழுதியபாடல்- 1951ல் வந்த அல்பேலா  Albela என்ற படத்தில் வந்தது! இன்றும் இதன் பொருள் மனதைத் தொடுவதாக இருக்கிறது! 

















आजकल वह इस तरफ़ देखता है कम

आजकल किसी को वह टोकता नहीं
चाहे कुछ भी कीजिए रोकता नहींஆம், இங்கு என்னவெல்லாம் நடக்கிறது! கடவுள் எல்லாவற்ரையும் நடக்கவிட்டுவிட்டு  தான்பாட்டுக்கு சொர்கத்தில் இருக்கிறாறே என்கிறார் நம் கவிஞர்! 



No comments:

Post a Comment