29. ஸினிமாவில் ப்ரார்த்தனை- 2
ஸினிமா பொழுது போக்க ஒரு வழி- அவ்வளவுதான். இதை வைத்து பணம் ஈட்டுவதுதான் முக்கிய குறிக்கோள். கலை, கிலை என்பதெல்லாம் வெறும் பேச்சளவில்தான். ஏதோ இசை மட்டும் ஓரளவிற்கு சினிமா உலகில் .முக்கிய இடம் பெற்றிருந்தது. சென்ற 30 ஆண்டுகளில் அதன் தரமும் வீழ்ந்துவிட்டது.
கதை என்று வந்தால், முக்காலும் கற்பனைக் கதைதான். சில சமயங்களில் வாழ்க்கை வரலாறு போன்ற படங்கள் வந்திருக்கின்றன, அனால் மிகச் சிலவே.
ஹிந்தியில் பல சமூக விஷயங்களைப் பற்றித் துணிந்து படமெடுத்தவர் வி.ஶான்தாராம். இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்று சேவை செய்த டாக்டர். கோட்னீஸ் Dr.Kotnis என்பவரின் வாழ்க்கை வரலாற்றின் மீது ஒரு படம் எடுத்தார். பிறகு, சுதந்திரத்திற்கு முன் நமது சுதேச ஸமஸ்தானங்கள் ஒன்றில் (Aundh) நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றின் அடிப்படையில் ஒரு படமெடுத்தார்.
ஆறுபேர் கொலை குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . லக்ஷியவாதியான ஒரு இளம் போலீஸ் அதிகாரிக்கு அவர்களைத் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கை. மேலதிகாரிகளுடன் வாதாடி, அவர்களைச் சிறைலிருந்து பரோலில் வெளியே
கொண்டுவருகிறார். ஒரு பொட்டல் காட்டில் பண்ணை ஆரம்பித்து, காய்கறி விளைத்து, கௌரவமாக வாழக் கற்றுக் கொடுக்கிறார். வேண்டா வெறுப்பாகத் தொடங்கிய கைதிகள், நாளடைவில் மனம் மாறுகின்றனர். எல்லாம் கூடிவரும் நேரத்தில் , போலீஸ் அதிகாரி சந்தையில் காளையால் குத்தப்பட்டு , உள்ளூர் வியாபாரிகளின் கொடுமையினால் உயிரிழக்கிறார். இதுதான் கதை. தோ ஆங்கேன் பாரஹ் ஹாத்- Do Aankhen Barah Haath இரு கண்கள்-பன்னிரு கைகள் என்பது படம். இதில் வருவது நாம் இப்போது பார்க்கப்போகும் பாடல்.
முதல் நாள் புதிய இடத்தில் சாப்பிட அமருகிறார்கள்- போலீஸ் அதிகாரியே சமைக்கிறார், அவர்களுடன் ஒருவராகவே சாப்பிடவும் அமர்கிறார். கைதிகள் எல்லோரும் சாப்பிடத் துடிக்கிறார்கள். அப்பொழுது அவர்களுக்குச் சொல்வதாக வருவது இந்தப் ப்ரார்த்தனை.
இது படத்தில் பல இடங்களில் பகுதிபகுதியாக வருகிறது.
ऐ मालिक तेरे बन्दे हम
ऐसे हों हमारे करम
नेकी पर चलें और बदी से टलें
ताकि हंसते हुए निकले दम 1
ये अँधेरा घना छा रहा
तेरा इंसान घबरा रहा
हो रहा बेखबर, कुछ न आता नज़र
सुख का सूरज छुपा जा रहा
है तेरी रौशनी में जो दम
तू अमावास को कर दे पूनम
नेकी पर चलें और बदी से टलें
ताकि हंसते हुए निकले दम ... 2
जब जुल्मों का हो सामना
तब तू ही हमें थामना
वो बुराई करे हम भलाई भरें
नहीं बदले की हो कामना
बढ़ उठे प्यार का हर कदम
और मिटे बैर का ये भरम
नेकी पर चलें और बदी से टलें
ताकि हंसते हुए निकले दम ... 3
बड़ा कमज़ोर है आदमी,
अभी लाखों हैं इसमें कमी
पर तू जो खड़ा है दयालू बड़ा
तेरी किरपा से धरती थमी
दिया तूने हमे जब जनम
तू ही झेलेगा हम सबके ग़म
नेकी पर चलें और बदी से टलें
ஹே பகவானே! நாங்கள் உன்னைச் சேர்ந்தவர்கள்.
எங்கள் கரங்கள் இவ்வாறு விளங்கட்டும்--
நேரான வழியிலேயே செயல் படட்டும்
தீய வழிகளிலிருந்து விலகியிருக்கட்டும்.
இவ்வாறு வாழ்ந்து மகிழ்ச்சியுடனே ஆவி பிரியுமாக!
2. ஏ அந்தேரா கனா சா ரஹா
தேரா இன்ஸான் கப்ரா ரஹா
ஹோரஹா பேகபர், குச் ந ஆதா நஜர்
ஸுக் கா ஸூரஜ் சுபா ஜா ரஹா
ஹை தேரீ ரோஷனீ மே ஜோ தம்
தூ அமாவஸ் கோ கர்தே பூனம்
நேகீ பர் சலே ஔர் பதீ ஸே டலே
தாகி ஹன்ஸ்தே ஹுவே நிகலே தம்.
இதோ, அந்தகாரம் நம்மைச் சுற்றி வலுக்கிறது
உன் மனிதர்கள் பயந்துகொண்டு இருக்கிறார்கள்
ஒன்றும் புரியவில்லை, ஒன்றும் கண்ணுக்குப் புலனாகவில்லை.
சுகம் என்னும் சூரியன் மறைந்துகொண்டு வருகிறான்.
ஆனால், உன்னுடைய ஜோதியின் சக்தி அபாரமானது--அது
அமாவாஸையையும் பௌர்ணமியாக மாற்றக் கூடியது!
எங்கள் கரங்கள் நல்ல வழியிலேயே செயல்படட்டும்'
தீயவற்றினின்று விலகியிருக்கட்டும்.
இவ்வாறு வாழ்ந்து களிப்புடனே காலனை எதிர்கொள்வோமாக.
3.ஜப் ஜுல்மோ((ன்) கா ஹோ ஸாம்னா
தப் தூஹி ஹமே தாம்னா
ஓ புராயீ கரே (ன்), ஹம் பலாயீ பரே (ன்)
நஹி பத்லே கீ ஹோ காம்னா
பத் உடே ப்யார் கா ஹர் கதம்
ஔர் மிடே பைர் கா யே பரம்
நேகீ பர் சலே ஔர் பதீ ஸே டலே
தாகி ஹன்ஸ்தே ஹுவே நிகலே தம்.
தீய சக்திகள் எங்கள் எதிரில் வரும்போது
அக்காலத்தில் நீயே எங்களை நிதானப் படுத்துவாயாக !
அவர்கள் தீமையே செய்யட்டுமே-
நாங்கள் நல்லதையே செய்வோம் !
பழிவாங்கவேண்டும் என்ற இச்சை வராமலிருக்கட்டும்!
ஒவ்வொரு அடியையும் அன்புடனே எடுத்துவைப்போம்!
த்வேஷம் என்ற எண்ணமே இல்லாதிருக்கட்டும் !
நல்ல வழியிலேயே செல்வோம்-
தீச் செயலிலிருந்து விலகி நிற்போம்.
இவ்வாறு வாழ்ந்து, களிப்புடன் உயிர்விடுவோம்!
4 படா கம்ஜோர்கஹை ஆத்மீ
அபீ லாகோ (ன்) ஹை இஸ் மே கமீ
பர் தூ ஜோ கடா ஔர் தயாலூ படா
தேரீ கிர்பா ஸே தர்தீ தமீ
தியா தூனே ஹமே ஜப் ஜனம்
து ஹீ ஜேலேகா ஹம் ஸப்கே கம்
நேகீ பர் சலே ஔர் பதீ ஸே டலே
தாகி ஹஸ்தே ஹுவே நிகலே தம்.
மனிதன் தான் எவ்வளவு பலஹீனமானவன்!
தவிர, லக்ஷக் கணக்கில் குற்றம் குறைகள்!
ஆனால், பரம தயாளுவாகிய நீ எங்கள் முன் நிற்கிறாய்!
உன்னுடைய கருணையினால்தான் இந்த உலகம் பிழைத்திருக்கிறது!
நீ தானே எங்களைப் படைத்தாய்~-
எங்கள் சுமைகள்- துன்பங்களைத் தாங்குவதும் உன் பொறுப்பேயல்லவா!
நாம் நல்லசெயல்களிலேயே ஈடுபடுவோம்
தீய செயல்களிலிருந்து விலகி நிற்போம்.
இவ்வாறு வாழ்ந்து ஆவி பிரியும் போதும் மகிழ்ச்சியுடன் இருப்போம்!
ஹே பகவானே, நாங்கள் உன்னைச் சேர்ந்தவர்கள்!
பொறுமையாக இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்!எவ்வளவு சீரிய கருத்துக்கள் ! அமாவாசையைப் பௌர்ணமியாக மாற்றும் சக்தி என்னும்போது, அபிராமி பட்டரின் நினைவு வராமல் போகாது! நேர் வழியில் போகவேண்டும் என்னும்போது, "அக்னே நய ஸுபதா " என்ற உபனிஷத் மந்த்ரம் நினைவுக்கு வரும்! நம் சுமையை கடவுளே ஏற்கவேண்டும் என்னும் பொழுது, "தன் கடன் அடியேனையும் தாங்குதல் " என்ற அப்பரின் திருவாக்கு~ என,இப்படி, ஒவ்வொன்றும் சொல்லப்போனால் எத்தனையோ!
from: grabhouse.com.
இந்தப் பாடல் வட இந்தியாவில் பல பள்ளிகளில் ப்ரார்த்தனையாகப் பாடப்பட்டு வந்தது! பாகிஸ்தானிலும் பாடிவந்தார்கள் !
கீதாஞ்சலியில் குருதேவர் தாகூர் எழுதிய வரிகளைப் பாருங்கள்:
THOU HAST given us to live.
Let us uphold this honour with all our strength and will;
For thy glory rests upon the glory that we are.
Therefore in thy name we oppose the power that would plant its
banner upon our soul.
Let us know that thy light grows dim in the heart that bears its
insult of bondage.
That the life, when it becomes feeble, timidly yields thy throne to untruth.
For weakness is the traitor who betrays our soul.
Let this be our prayer to thee
Give us power to resist pleasure where it enslaves us.
To lift our sorrow up to thee as the summer holds its midday sun.
Make us strong that our worship may flower in love, and bear
fruit in work.
மாலிக் தேரே பந்தே ஹம்- இதை எழுதியவர் பரத் வ்யாஸ்,
இசை அமைத்த மேதை
வஸன்த் தேசாய்.
இப்படம் இந்திய சினிமா வரலாற்றிலேயே இமயம் போன்று தனித்து, உயர்ந்து நிற்பது! கதை, பாடல், இசை ஆகிய முச்சிகரங்கள்! சாந்தாராமின் குரலில் இந்தப் பாடலை யூ-ட்யூபில் கேட்டுப் பாருங்கள்!
நந்த தேவி சிகரம்.
I have used three pictures from the film, taken from the Net for purely educational purposes as I felt the theme could be explained better with the pictures. There is no commercial motive, and I have no intention to violate copyright.
Dear Sir, You have given a great insight into one of the most memorable period in Indian cinema. May God bless you with long healthy life.
ReplyDelete