84. உலகம் என்ன மயம்?
pexels.com
இந்த உலகம் எப்படிப்பட்டது?
இன்பமயமானதா, துன்பமயமானதா?
இதை விளக்க பல தத்துவங்கள் தோன்றியிருக்கின்றன. அவை போடும் பூசலில் கேள்வியே மறந்துவிட்டது!
இரண்டும் கலந்துதான் வருகிறது என்பது நமது நம்பிக்கை. ஹிந்து மதம் உலகை "மிஶ்ர லோகம் " என்கிறது. ஆத்மா ஆனந்தமயமானது; ஆனந்தம் வெளிப்பொருளில் இல்லை. நாம் நம்மை 'அறியும்' அளவு ஆனந்தத்தை அனுபவிக்கிறோம் என்பது நமது தத்துவம். ஆனால் இது பக்குவம் அடைந்த சாதகர்களுக்கே சாத்தியமாகும். நமக்கெல்லாம் எல்லாம் கலந்துதான் வரும்!
நமக்கு ஆனந்தம் தெரியாது - சந்தோஷத்தையே நாடுகிறோம் !
உலகில் பலரும் பலவிதமாகக் கஷ்டம் அனுபவிக்கிறார்கள். பிறப்பு, முதுமை, நோய், மரணம் என இதைப்பார்த்த சித்தார்த்தர், உலகம் துக்கம் என்றார். இதற்கான தீர்வை ஆராய்ந்தார். ஞானம் தான் வழி - ஆசையை ஒழி - எனத் தேர்ந்தார். புத்தரானார் !
கடவுள் நம்பிக்கையைப் பரப்பும் மதங்கள் இந்த இடத்தில் தடுமாறுகின்றன. இந்த உலகில் இன்பம் என்று தேடினால், துன்பமும் சேர்ந்துதான் வருகிறது! கருணைமயமான கடவுளின் ஆட்சியில் துன்பம் ஏன் இருக்கவேண்டும் ? இதுதான் கடவுள் போட்ட திட்டம் என்று சொல்வதைத்தவிர வேறு வழியில்லை. நாம் கர்மா என்கிறோம்.
ராபர்ட் ப்ரௌனிங் : நம்பிக்கை
ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரௌனிங் Robert Browning எழுதிய புகழ் பெற்ற இரு வரிகள் பரவலாகத் தெரிந்திருக்கும்.:
God's in His heaven -
All's right with the world.
இந்த வரிகள் இடம் பெறும் முழு கவிதையையும் பார்க்க வேண்டும்:
National Portrait Gallery
Pippa Passes
The year’s at the spring,
And day’s at the morn;
Morning’s at seven;
The hill-side’s dew-pearl’d;
The lark’s on the wing;
The snail’s on the thorn;
God’s in His heaven—
All’s right with the world.
இந்த வரிகளும் Pippa Passes என்ற பெரிய கவிதையின் (1841)சில வரிகள் தான். இதன் பின்னணி தெரிந்தால் தான் இந்த வரிகளின் முக்கியத்துவம் புரியும்.
பிப்பா 14 வயது அனாதைச் சிறுமி. பட்டு ஆலையில் வேலை செய்கிறாள். மிகவும் சிரமப்பட்டவள், கடினமான வாழ்க்கை. அவளுக்கு வருஷத்தில் ஒரே நாள் தான் விடுமுறை . அந்த விடுமுறை நாளில் தன் ஊரைச்சுற்றி கிராமப்புறத்தில் ஆனந்தமாக நடந்து போகிறாள். தன்னை மறந்து, சுற்றிலும் இருப்பதை, நடப்பதைப் பார்த்தபடியே, பாடிக்கொண்டு நடக்கிறாள். அவள் பாட்டைக் கேட்கும் ஒவ்வொருவரும் அதனால் மனதில் ஊக்கம் கொள்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஏதோ மாற்றம் வருகிறது. அவள் கடைசியில் இந்த வரிகளைப் பாடுகிறாள். [ Act I ]
இயற்கை அளிக்கும் நம்பிக்கை !
இதில் முதல் மூன்று அடிகளில் காலம் பற்றிச் சொல்கிறாள்: வசந்த காலம், பொழுது புலர்ந்தது, ஏழு மணி.- நல்ல பருவத்தில் நல்ல காலைப்பொழுது! அடுத்த மூன்று அடிகளில் இயற்கையைக் கவனிக்கிறாள் : மலைச்சரிவில் பனித்திவலைகள் ; பறவைகள் சிறகை விரித்துப் பறக்கின்றன, புழு பூச்சிகள் தத்தம் இயல்பில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இயற்கையில் எல்லாம் சீராக நடந்துகொண்டிருக்கிறது! இதைப்பார்த்ததும் பிப்பாவுக்கு நம்பிக்கை! ஆம், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார், உலகில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது!
Habeeb, Flickr. Thanks
ஜீவனத்திற்குக் கஷ்டப்படும் ஒரு அனாதைச் சிறுமி இயற்கையைக் கண்டு இத்தகைய நம்பிக்கையுடன் பாடுகிறாள் ! இதன் வாயிலாக ப்ரௌனிங் தனது நம்பிக்கையைத் தெளிவாக்குகிறார் ! Optimism : எதிர்காலத்தில், பொதுவாக வாழ்க்கையில் நம்பிக்கை- இதுவே ப்ரௌனிங்கின் முத்திரை. ஆனால் அவர் நடை மிகவும் கடினமானது. இதை Obscurity என்பார்கள். பொருள் விளங்கிக்கொள்வது கடினம். ஆனால் இந்தப் பாடலில் எளிமையாகவே, நேரடியாகவே சொல்லியிருக்கிறார்.
சமூக நிலை: தூங்கும் ஆண்டவன் ?
நமது கவிஞர்களுக்கு இந்தமாதிரி விஷயங்கள் கிடைத்தால் விடுவார்களா?
60 வருஷங்களுக்கு முன் வந்த ஒரு தமிழ்ப்படத்தில்,
"ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றாரே-
தினம் தூங்குகின்றாரே "
என்று ஒரு கவிஞர் பாடினார். பெயர் தெரியவில்லை; பாடலும் என்ன தேடியும் கிடைக்கவில்லை.
இதை நாம் அதிகம் ஆராயக்கூடாது! ஸ்ரீ க்ருபானந்த வாரியார் அவர்கள் சொல்வார்: ஒரு பஸ்ஸில் பலர் போகிறோம், இரவில் தூங்குகிறோம்; டிரைவர் தூங்காமல் ஓட்டுகிறார். அவர் தூங்காததனால் நாம் தூங்குகிறோம்; ஒரு வினாடி அவர் கண் அசந்தால் நம் கதி என்னவாகும் ? இந்த உலகத்தையே இயக்கும் கடவுள் 'தூங்கினால்' உலகம் என்னவாகும் ? ப்ரம்மாவின் இரவு நமக்கு ப்ரளயமாகிறது, சிருஷ்டி ஒடுங்குகிறது ! இது தினம் நடப்பதல்ல! எனவே, இந்த வரிகளுக்கு, 'உலகில் ஏதேதோ நடக்கிறதே ! ஏன் இப்படி ? ' என்று பொதுவாக பொருள் கொள்ளவேண்டும்.
ஆண்டவன் -அவர் எங்கோ தொலைவில் இருக்கிறார் !
ஹிந்திக் கவிஞர் ஸாஹிர் லுதியான்வி ப்ரௌனிங்கின் இந்தக் கருத்தை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டார் ! ஆம், ஆண்டவன் ஆகாயத்தில் இருக்கிறார் - ஆனால் நம் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை என்கிறார்.
आसमाँ पे है खुदा और ज़मीं पे हम आजकल वो इस तरफ़ देखता है कम
आजकल किसी को वो टोकता नहीं,
चाहे कुछ भी किजीये रोकता नहीं
हो रही है लुट मार फट रहे हैं बम
आसमाँ पे है खुदा और ज़मीं पे हम
आजकल वो इस तरफ़ देखता है कम
ஆஸ்மா(ன்) பே ஹை குதா ஔர் ஜமீன் பே ஹம்
ஆஜ்கல் ஓ இஸ்தரஃப் தேக்தா ஹை கம்
ஆஜ்கல் கிஸீகோ ஓ டோக்தா நஹீ,
சாஹே குச் பீ கீஜியே ரோக்தா நஹீ
ஹோ ரஹீஹை லூட் மார், ஃபட் ரஹீ ஹை பம்
ஆஸ்மா(ன்) பே ஹை குதா'........
ஆண்டவன் - அவர் ( தன் போக்கில் )ஆகாயத்தில் இருக்கிறார்
நாம் இங்கு பூமியில் இருக்கிறோம்
இந்த நாட்களில் அவர் இந்தப் பக்கம் அதிகம் பார்ப்பதில்லை!
இப்போதெல்லாம் அவர் யாரையும் தட்டிக்கேட்பதில்லை,
யார் எது செய்தாலும் தடுப்பதில்லை
கொலை கொள்ளைகள் மலிந்துவிட்டன
எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கிறது
ஆனால் ஆண்டவன் ஆகாயத்திலிருக்கிறார்-
இப்போதெல்லாம் நம் பக்கம் அதிகம் பார்ப்பதில்லை.
किसको भेजे वो यहाँ हाथ थामने
इस तमाम भीड़ का हाल जानने
आदमी हैं अनगीनत देवता हैं कम
आसमाँ पे है खुदा और ज़मीं पे हम
आजकल वो इस तरफ़ देखता है कम
கிஸ் கோ பேஜே ஓ யஹா ஹாத் தாம் நே
இஸ் தமாம் பீட் கா ஹால் ஜான்னே
ஆத்மீ ஹை அன்கினத் தேவ்தா ஹை கம்
ஆஸ்மா பே ஹை குதா ..........
இங்கு நம் கைகளைத் தொட்டு , நிதானிக்கச்செய்ய /ஆறுதல்சொல்ல
அவர் யாரை அனுப்புவார்?
இந்த மக்கள் கும்பலின் நிலையை அறிந்துவர
யாரை அனுப்புவார்?
ஜனங்கள் கணக்கற்றவர்கள், தேவதைகளோ குறைவு !
ஆம், ஆண்டவன் ஆகாயத்திலிருக்கிறார் ..........
जो भी है वो ठीक है ज़िक्र क्यों करें
हम ही सब जहाँ की फ़िक्र क्यों करें
जब उसे ही ग़म नहीं तो क्यों हमें हो ग़म
आसमाँ पे है खुदा और ज़मीं पे हम
आजकल वो इस तरफ़ देखता है कम
ஜோ பீ ஹை ஓ டீக் ஹை ஜிக்ர் க்யூ கரே (ன்)
ஹம் ஹீ ஸப் ஜஹா(ன்) கீ ஃபிக்ர் க்யூ கரே(ன்)
ஜப் உஸே ஹீ கம் நஹீ தோ க்யூ ஹமே ஹோ கம்
ஆஸ்மா(ன்) பே ஹை குதா ...........
எது நடக்கிறதோ அது சரியாகவே இருக்கிறது,
ஏன் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கவேண்டும்??
உலகம் முழுமையும் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
அவருக்கே இதைப் பற்றிய வருத்தம் இல்லை என்னும்போது,
நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்?
ஆம், ஆண்டவன் ஆகாயத்திலிருக்கிறார்.........
இது 1958ல் வந்த படத்தின் பாட்டு! அன்றைய நிலையைவிட, 60 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று இன்னும் பொருத்தமாக இருக்கிறது.
There is biting sarcasm here, but it is worth pondering on.
லக்ஷியம்-யதார்த்தம் இரண்டின் இடைப்பட்டதுதான் உலகம் !
செய்வது திரும்பி வரும் !
நாம் கர்மா என்று சொல்வதையும் திரைக் கவிஞர் மஜ்ரூ சுல்தான்புரி சுவைபடப் பாடிவிட்டார்:
बुरा दुनिया को है कहता, ऐसा भोला तो ना बन
जो है करता, वो है भरता, है यहाँ का ये चलन
दादागिरी नहीं चलने की यहाँ
जो है करता, वो है भरता, है यहाँ का ये चलन
दादागिरी नहीं चलने की यहाँ
ஐஸா போலா தோ நா பன்
ஜோ ஹை கர்தா, ஓ ஹை பர்தா,
ஹை யஹா(ன்) கா யே சலன்
தாதாகிரி நஹீ சல்னே கீ யஹா(ன்)
இந்த உலகம் கெட்டது என்று சொல்லும் அத்தகைய
முட்டாளாக நீ இருக்காதே !
நாம் எதைச் செய்கிறோமோ
அதுவே திரும்பி வருகிறது!
இதுதான் இங்கு நியதி !
போக்கிரித் தனம் இங்கு செல்லாது!
கவிஞர்களின் பார்வையே தனிதான் !
இங்கு ஒன்று புரிகிறது. கடவுள் படைத்த இயற்கை - இதில் மனிதன் புகுந்து தன் கை வரிசையைக் காட்டுகிறான் ! இயற்கையின் நியதி தவறாமல் நடந்துகொண்டிருக்கிறது- இடி, புயல், சுனாமி, பூகம்பம்- இவையும் இயற்கையின் அம்சங்களே. இதில் மனிதன் தன் நியதியைப் புகுத்துகிறான்- அரசியல், சமுதாயம், பொருளாதாரம், விஞ்ஞானம் என பலவற்றிலும் தானே பல நியதிகளத் தோற்றுவிக்கிறான்; அவற்றையும் மாற்றிகொண்டே இருக்கிறான். இதனால் மனிதனுக்கும் பாதிப்பு, இயற்கைக்கும் பாதிப்பு ! ஆனால் மனிதன் கண்டுகொள்வதில்லை! சமூகப் பிரச்சினைகள் பற்றி- மனிதன் தனக்குத் தானே செய்துகொள்ளும் தீமை பற்றி- திரைக்கவிஞர்கள் நிறையவே பாடியிருக்கிறார்கள்; ஆனால் இயற்கைக்கு நடக்கும் கொடுமை பற்றி இதுவரை யாரும் பாடவில்லை !
" Heraclitus would shed tears whenever he went out in public - Democritus laughed. One saw the whole as a parade of miseries, the other of follies. And so, we should take a lighter view of things and bear them with an easy spirit, for it is more human to laugh at life than to lament it." - Seneca.
pexels.com larch-conifer-cone-branch-tree
No comments:
Post a Comment