87. வாழ்க்கையின் மீது வழக்கு!
Children at play, London 1920s Flickr.
பிறவி என்று வந்துவிட்டால் ஏதோ ஒருவிதத்தில் துன்பமும் வருகிறது. ஏமாற்றம். தோல்வி , வறுமை, நோய், என இதற்கு எத்தனையோ பெயர்கள், உருவங்கள்!
"இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே " = வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்தது என்பார் சங்கரர். புத்தரும் இதையே சொன்னார்.
மூன்று வழியில் துன்பங்கள் வருகின்றன என்பார்கள் பெரியோர்கள். ,ஆதி ஆத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தெய்விகம் = தன்னால் வருவது, இயற்கைச் சக்திகளால் வருவது, தெய்வத்தால் வருவது - இவற்றைத் தாபத் த்ரயங்கள் என்பர் நூலோர். எந்த ஊரில், எந்தமொழி பேசுபவர்களாக, எத்தகைய பெற்றோர்களுக்கு, எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. வேண்டிய பள்ளி கிடைக்கவில்லை, உரிய மார்க் வரவில்லை, விரும்பிய பிரிவு கிடைக்கவில்லை, வேண்டிய வேலை /ப தவி கிடைக்கவில்லை, வேண்டியபடி மணமாகவில்லை, குழந்தைகள் நாம் எதிர்பார்த்தபடி இல்லை-- இப்படி எவ்வளவோ அடுக்கலாம்!
கவிஞர் ஸாஹிர் லுதியான்வி மிக எளிமையாகப் பாடினார். படம் ஹம் தோனோ. 1961 Hum Dono.
कभी ख़ुद पे, कभी हालात पे रोना आया
बात निकली, तो हर इक बात पे रोना आया
बात निकली, तो हर इक बात पे रोना आया
கபீ குத் பே, கபீ ஹாலாத் பே ரோனா ஆயா
பாத் நிக்லீ, தோ ஹர் ஏக் பாத் பே ரோனா ஆயா
சில சமயம் நம்மையே நினைத்து,
சில சமயம் சூழ்நிலையை நினைத்து
சில சமயம் சூழ்நிலையை நினைத்து
அழுகை வருகிறது!
பேச்செடுத்தால், ஒவ்வொரு விஷயத்திற்கும் அழுகை வருகிறது!
किस लिये जीते हैं हम किसके लिये जीते हैं
बारहा ऐसे सवालात पे रोना आया
बारहा ऐसे सवालात पे रोना आया
கிஸ் லியே ஜீதே ஹை ஹம், கிஸ் கே லியே ஜீதே ஹை
பார்ஹா ஐஸே ஸவாலாத் பே ரோனா ஆயா
நாம் எதற்காக வாழ்கிறோம், யாருக்காக வாழ்கிறோம் -
இத்தகைய கேள்விகளைக் கேட்டு அழுகை வருகிறது!
कौन रोता है किसी और की ख़ातिर ऐ दोस्त
सबको अपनी ही किसी बात पे रोना आया
सबको अपनी ही किसी बात पे रोना आया
கௌன் ரோதா ஹை கிஸி ஔர் கீ காதிர் ஏ தோஸ்த்
ஸப்கோ அப்னே ஹீ கிஸீ பாத் பே ரோனா ஆயா
நண்பனே ! இங்கு மற்றவர் துன்பத்திற்காக யார் அழுகிறார்கள் ?
ஒவ்வொருவரும் அவரவர்கள் விஷயத்திலேயே
எதையோ நினைத்து அழுகிறார்கள் !
எதையோ நினைத்து அழுகிறார்கள் !
கவனித்துப் பார்த்தால் இன்ப-துன்பம் என்பது கலந்தே வருகிறது- விகிதாசாரம் தான் மாறுகிறது! இதையும் ஒரு கவிஞர் பாடினார்.
கவிஞர்: ராஜிந்தர் க்ரிஷன் [ ராஜேந்த்ர க்ருஷ்ணா] Rajinder Krishan
பாடல்: ஓ பேடாஜீ
படம் : அல்பேலா 1951 Albela
कभी काली रतिया, कभी दिन सुहाने
किस्मत की बाते तो किस्मत ही जाने
ओ बेटा जी,
கபீ காலி ரதியா, கபீ தின் ஸுஹானே
கிஸ்மத் கீ பாதே தோ கிஸ்மத் ஹீ ஜானே
ஓ பேடா ஜீ
ஓ மகனே !
ஒரு சமயம் இரவு இருட்டில் கழிகிறது !
ஒரு நாள் இனிமையாகப் போகிறது!
தலைவிதி விஷயம் - அதை தலைவிதியே அறியும் !
अरे ओ बाबू जी, किस्मत की हव कभी नरम, कभी गरम
कभी नरम-नरम, कभी गरम-गरम,
कभी नरम-गरम नरम-गरम रे
ओ बेटा जी
कभी नरम-गरम नरम-गरम रे
ओ बेटा जी
அரே ஓ பாபூஜீ,
கிஸ்மத் கீ ஹவா கபீ நரம், கபீ கரம்
கபீ நரம்-ந்ரம், கபீ கரம்-கரம்
கபீ நரம்-கரம், நரம்-கரம்
ஓ பேடா ஜீ
ஓ மகனே, ஓ அப்பனே !
விதி ஒரு சமயம் மென்மையாக வீசுகிறது
ஒரு சமயம் சூடாக வருகிறது!
ஒரு சமயம் ஒரே மென்மை, ஒரு சமயம் ஓரே சூடு -
மென்மை-சூடு, மென்மை-சூடு
விதி என்னும் காற்று இப்படித்தான் கலந்து வீசுகிறது !
दुनिया के इस चिड़िया घर में तरह तरह का जलवा
मिले किसी को सूखी रोटी, किसी को पूरी हलवा
अरे भई किसी को पूरी हलवा
ओ बेटा जी, खिचड़ी का मज़ा कभी नरम, कभी गरम …
मिले किसी को सूखी रोटी, किसी को पूरी हलवा
अरे भई किसी को पूरी हलवा
ओ बेटा जी, खिचड़ी का मज़ा कभी नरम, कभी गरम …
துனியா கே இஸ் சிடியா கர் மே
தரஹ் தரஹ் கா ஜல்வா
மிலே கிஸீ கோ ஸூகீ ரோடி,
கிஸீ கோ பூரி ஹல்வா!
அரே பாய், கிஸீகோ பூரி ஹல்வா !
ஓ பேடா ஜீ, கிச்டீ க மஜா கபீ நரம், கபீ கரம்....
உலகம் என்னும் இந்த பறவைக் கூட்டில்
விதவித மான முகங்கள் !
சிலருக்கு காய்ந்த ரொட்டிதான் கிடைக்கிறது
சிலருக்கோ, பூரியுடன் ஹல்வாவும் கிடைக்கிறது!
அப்பனே, ஆம் சிலருக்கு பூரியுடன் ஹல்வா !
மகனே ! கிச்சடி சில சமயம் மென்மை , சில சமயம் சூடு!
அப்படித்தான் சுவைக்க வேண்டி இருக்கிறது!
दर्द दिया तो थोड़ा थोड़ा, खुशी भी थोड़ी थोड़ी
वाह रे मालिक, वाह रे मालिक, दुःख और सुख की खूब बनायी जोड़ी
अरे वाह खूब बनायी जोड़ी
ओ बेटा जी, जीवन का नशा कभी नरम, कभी गरम …
वाह रे मालिक, वाह रे मालिक, दुःख और सुख की खूब बनायी जोड़ी
अरे वाह खूब बनायी जोड़ी
ओ बेटा जी, जीवन का नशा कभी नरम, कभी गरम …
தர்த் தியா தோ தோடா தோடா,
குஷீ பீ தோடீ தோடீ
வாஹ் ரே மாலிக், வாஹ் ரே மாலிக்,
துக் ஔர் ஸுக் கீ கூப் பனயீ ஜோடீ
அரே வாஹ் கூ பனாயீ ஜோடீ
ஓ பேடாஜீ, ஜீவன் கா நஷா கபீ நரம், கபீ கரம்.....
ஆண்டவனே, உனக்கு பெரிய சபாஷ் போடவேண்டும் !
துன்பம் கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அளந்து கொடுக்கிறாய்
சந்தோஷமும் அப்படியே சிறிது, சிறிதாகக் கொடுக்கிறாய்!
ஆண்டவனே ! சபாஷ்!
துக்கம்-ஸுகம் இவற்றை எவ்வளவு அருமையாக ஜோடி சேர்த்து விட்டாய்!
ஓ மகனே ! இதுதான் வாழ்க்கை தரும் போதை !
சில போது மென்மை, சிலபோது சூடு !
இந்த உலகத்தை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை. உலக வழக்கமும் விசித்திரமாக இருக்கிறது! பக்த கபீர் தாஸர் பாடுகிறார் :
"रंगी को नारंगी कहे, बने दूध को खोया ।
चलती को गाडी कहे, देख कबीरा रोया ॥"
ரங்கீ கோ நாரங்கீ கஹே,
பனே தூத் கோ கோயா
சல்தீ கோ காடீ கஹே
தேக் கபீரா ரோயா .
கபீர் தாஸர் இங்கு சொல்லை வைத்து ஜாலம் செய்கிறார்.
"வண்ணம் உள்ள பொருளை வண்ணமற்றது என்கின்றனர்.
பால் கோவாவை மறைந்துவிட்டது என்கின்றனர்;
நகர்ந்து போவதை நிற்கிறது என்கின்றனர்
இதைக்கண்டு கபீர் அழுகிறான் "
ரங் = கலர். நா -ரங்கீ = கலர் இல்லாதது.
ஹிந்தியில் ஆரஞ்சுப் பழத்திற்கு நாரங்கீ என்று பெயர்,
ஆக, வண்ணமுள்ள பொருள் வண்ணமற்றதாகி விட்டது.
பாலைக்காய்ச்சி வருவது கோவா. இதை கோயா என்பர் ஹிந்தியில்.
கோயா என்றால் தொலைந்துபோய் விட்டது என்றும் பொருள் !
ஆக, பால் தொலைந்து போய் விட்டது!
சல்தி என்றால் நகர்வது, நடப்பது. காடி = வண்டி.
ஆனால் காடி என்பதற்கு நிற்பது என்றும் பொருள் !
ஆக, நகரும் வஸ்து நிற்பதாகிவிட்டது!
இதை எல்லாம் பார்த்தால் அழுகை வராமல் என்ன செய்யும் ?
இப்படி உலகில் எல்லாம் தலைகீழாக இருக்கிறது! ஓரு பொருளை உள்ளபடி தெரிந்துகொள்ள முடியவில்லை. என்ன வழி ? தீர விசாரணை செய் என்பார் கபீர் தாசர். விசாரிப்பவனுக்கு துக்கமில்லை என்பார்.
நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள இயலாத விஷயத்தில் கோபப்பட்டோ, புகார் செய்தோ என்ன பயன்? உலகே, உன்னிடம் நான் வழக்காடவில்லை என்கிறார் கவிஞர் குல்ஜார் ஒரு பாட்டில். படம்: மாஸூம். 1983 Masoom
हैरान हूँ मैं
துஜ்ஸே நாராஜ் நஹீ ஜிந்தகீ
ஹைரான் ஹூ(ன்) மை
வாழ்க்கையே! உன்னிடம் எனக்கு வருத்தமில்லை -
ஆச்சரியமே- அதிர்ச்சியே அடைந்திருக்கிறேன்!
तेरे मासूम सवालों से
परेशान हूँ मैं
जीने के लिए सोचा ही नहीं
दर्द संभालने होंगे
मुस्कुराये तो मुस्कुराने के
क़र्ज़ उतारने होंगे
मुस्कुराऊं कभी तो लगता है
जैसे होंठों पे क़र्ज़ रखा है
तुझसे...
தேரே மாஸூம் ஸவாலோ(ன்) ஸே
பரேஷான் ஹூ(ன்) மை
ஜீனே கே லியே ஸோசா ஹீ நஹீ
தர்த் ஸம்பால்னே ஹோங்கே
முஸ்குராயே தோ முஸ்குரானே கே
கர்ஜ் உத்தார்னே ஹோங்கே
முஸ்குராவூ(ன்) கபீ தோ லக்தா ஹை
ஜைஸே ஹோடோ(ன்) பே கர்ஜ் ரகா ஹை
துஜ்ஸே.............
நீ கேட்கும் தூய கேள்விகளினால்
நான் தொந்தரவே அடைந்தேன்!
வாழவேண்டும் என்றால் துன்பத்துடன்
ஈடு கொடுக்கவேண்டும் என்று நினைத்தும் பார்க்கவில்லை!
சிரித்தாலும் அதற்காக ஏதோ சுமையை
இறக்கி வைக்கவேண்டும் என்று நினைக்கவும் இல்லை!
எப்போதாவது சிரிக்கவேண்டும் என்று தோன்றினால்
உதடுகளின் மீது ஏதோ சுமை அழுத்துவது போல் உணர்கிறேன் !
வாழ்க்கையே உன்னிடம்.........
तुझसे...
आज अगर भर आई है
बूंदे बरस जाएगी
कल क्या पता किनके लिए
आँखें तरस जाएगी
जाने कब गुम हुआ, कहाँ खोया
इक आंसू छुपा के रखा था
तुझसे...
आज अगर भर आई है
बूंदे बरस जाएगी
कल क्या पता किनके लिए
आँखें तरस जाएगी
जाने कब गुम हुआ, कहाँ खोया
इक आंसू छुपा के रखा था
तुझसे...
துஜ்ஸே.......
ஆஜ் அகர் பர் ஆயீ ஹை
பூந்தே பரஸ் ஜாயேகீ
கல் க்யா பதா கின்கே லியே
ஆ(ன்)கே தரஸ் ஜாயேகீ
ஜானே கப் கும் ஹுவா, கஹா(ன்)கோயா
இக் ஆ(ன்) ஸூ சுபா கே ரக்கா தா
துஜ்ஸே..........
வாழ்க்கையே.....
இன்று கண்ணில் பொங்கும் நீர் -
இந்தத் துளிகள் வடிந்துவிடும்!
நாளை யாருக்காக இந்தக் கண்கள் ஏங்கும்
என எப்படிச் சொல்வது ?
நான் மறைத்து வைத்திருந்த அந்த ஒரு துளிக் கண்ணீர்-
அது எங்கே தொலைந்ததோ, எப்போது தொலைந்தது -
யாருக்குத் தெரியும் ?
zindagi tere gham ne hume rishte naye samjhaye
ஜிந்தகீ தேரே கம் நே ஹமே(ன்) ரிஷ்தே நயே சம்ஜாயே
வாழ்க்கையே, நீ கொடுத்த துயரங்கள் எங்களுக்கு
புதிய உறவுகளை சொல்லித்தந்தன !
.
dhoop mein mile jo bhi mile pyar ke thande saaye...
தூப் மே மிலே ஜோ பீ மிலே ப்யார் கே தண்டே ஸாயே......
சூரிய ஒளியில் யாருடன் சந்திக்கிறோமோ -
அன்பென்னும் அந்த இனிய நிழலை
அங்கு உணர்வோம் !
இப்படி நம் கவிஞர்கள் வாழ்க்கையின் பல கோணங்களைப் பாடியிருக்கிறார்கள். அன்பு என்னும் அந்த அரிய சக்திதான் உலகில் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது!
best games resource.
कभी काली रतिया, कभी दिन सुहाने
किस्मत की बाते तो किस्मत ही जाने
किस्मत की बाते तो किस्मत ही जाने
ओ बेटा जी,
अरे ओ बाबू जी, किस्मत की हव कभी नरम, कभी गरम
कभी नरम-नरम, कभी गरम-गरम,
कभी नरम-गरम नरम-गरम रे
ओ बेटा जी
अरे ओ बाबू जी, किस्मत की हव कभी नरम, कभी गरम
कभी नरम-नरम, कभी गरम-गरम,
कभी नरम-गरम नरम-गरम रे
ओ बेटा जी
No comments:
Post a Comment