Friday, 13 October 2017

86.வாழ்க்கை -சில சிந்தனைகள்


86. வாழ்க்கை -சில சிந்தனைகள்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

என்கிறார் வள்ளுவர். பிறவி எடுத்தவன் புகழ் எய்த வேண்டும். இல்லையேல் பிறக்காமல் இருப்பதே நல்லது!

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
நல்ல பெயர் வாங்குவதை விட வேறு ஊதியம் இல்லை என்கிறார்.

ஆனால் நடுத்தர வர்கத்தில் மாட்டிக்கொண்ட நாம், ஏதோ படித்து, வேலை பெற்று மாத ஊதியம் பெறவே உழைக்கிறோம்! அதுவும் வீணருக்கு உழைத்து உடல் ஓய்கிறோம்! வேறு உயர்ந்த சிந்தனை இல்லை.

பெரிய பதவியில் இருப்பவர்கள், அரசியல் வாதிகள், சினிமா காரர்கள், விளையாட்டுக் காரர்கள் ,  ஏன்- சில போக்கிரிகளின் பெயர் கூட அடிக்கடி பேப்பரில் வருகிறது. இதெல்லாம் பெயராகுமா ? நாம் இருக்கும் நிலையிலேயே ஏதாவது  நற்செயல் செய்ய வேண்டும். அதனால்  நற்பெயர் வரவேண்டும். ஒரு கவிஞர் பாடுகிறார்:

காலம் நகர்கிறது,
நல்லது செய்!

भाई रे, गंगा और जमुना की गहरी है धार
आगे या पीछे सबको जाना है पार

धरती कहे पुकार के, बीज बिछा ले प्यार के
मौसम बीता जाये, मौसम बीता जाये
अपनी कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा
कौन कहे इस ओर, तू फिर आये न आये
मौसम बीता जाये …
பாயி ரே,
கங்கா ஔர் ஜமுனா கீ கஹரீ ஹை தார்
ஆகே யா பீசே ஸப்கோ ஜானா ஹை பார்

தர்தீ கஹே புகார் கே, பீச் பிசாலே ப்யார் கே
மௌஸம் பீதா ஜாயே, மௌஸம் பீதா ஜாயே
அப்னீ கஹானீ  சோட் ஜா,
குச் தோ நிஷானி சோட் ஜா,
கௌன் கஹே இஸ் ஓர், தூ ஃபிர் ஆயே ந ஆயே
மௌஸம் பீதா ஜாயே......

சகோதரனே !
கங்கை-யமுனையின் நீரோட்டம் ஆழமானது
(இருந்தாலும் ) முன்போ, பின்போ  அனைவரும்
ஒரு நாள்  கடந்துதான் தீரவேண்டும்!

பூமி உன்னை அழைத்துச் சொல்கிறது -
அன்பெனும் விதையைத் தூவிச் செல்!
காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது!
உன்னுடைய சரித்திரத்தை விட்டுச் செல்,
ஏதோ ஒரு அடையாளத்தை விட்டுச் செல்,
நீ இந்தப் பக்கம் மீண்டும் வருவாயோ, இல்லையோ
யாரே சொல்ல முடியும் ?

तेरी राह में कलियों ने, नैना बिछाये
डाली-डाली कोयल काली, तेरे गीत गाये
अपनी कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा
कौन कहे इस ओर, तू फिर आये न आये
मौसम बीता जाये …

தேரே ராஹ் மே கலியோ நே நைனா பிசாயே
டாலி-டாலி கோயல் காலி தேரே கீத் காயே
அப்னீ கஹானீ  சோட் ஜா, குச் தோ நிஷானி சோட் ஜா
கௌன்  கஹே இஸ் ஓர் தூ ஃபிர் ஆயே ந ஆயே
மௌஸம் பீதா ஜாயே.......

உன்னுடைய பாதையில் மொக்குகள் கண்விழித்து மலர்கின்றன!
ஒவ்வொரு கிளையிலும் கருங்குயில் உன் கீதம் இசைக்கிறது!
நீயும் உன் சரித்திரத்தை விட்டுச் செல்-
ஏதோ அடையாளத்தை விட்டுச் செல்,
நீ இந்தப் பக்கம் மீண்டும் வருவாயோ இல்லையோ
யாரே சொல்ல முடியும்?
காலம் சென்றுகொண்டிருக்கிறது !

ओ भाई रे,
नीला अम्बर मुस्काये, हर साँस तराने गाये
हाय, तेरा दिल क्यों मुरझाये
मन की बंसी पे, तू भी कोई धुन बजा ले
भाई तू भी मुस्कुरा ले
अपनी कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा
कौन कहे इस ओर, तू फिर आये न आये
मौसम बीता जाये …

ஓ பாயி ரே,
நீலா அம்பர் முஸ்காயே, ஹர் ஸா(ன்)ஸ் தரானே காயே
ஹாய், தேரா தில் க்யூ(ன்) முர்ஜாயே
மன் கீ பன்ஸீ பே தூ பீ கோயீ துன் பஜாலே
பாயி, தூ பீ முஸ்குராலே !
அப்னீ கஹானீ சோட் ஜா
குச் தோ நிஷானி  சோட் ஜா,
கௌன் கரே இஸ் ஓர், தூ ஃபிர் ஆயே ந ஆயே
மௌஸம் பீதா ஜாயே.....

ஓ சகோதரனே !
நீல வானம் களிப்பில்  புன்னகைக்கிறது!
ஒவ்வொரு மூச்சிலும் ஒரு பாடல் வருகிறது !
ஓ சகோதரனே ! உன் மனது மட்டும் ஏன் வாடியிருக்கிறது?
உன் மனமாகிய குழலில் நீயும் ஒரு பாடலை வாசி !
சகோதரா, நீயும்  சந்தோஷமாக  புன்னகைப்பாய் !
உன் சரித்திரத்தை விட்டுச் செல்,
ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்
நீ மீண்டும் இவ்வழியில் வருவாயோ மாட்டாயோ
யாரே சொல்ல முடியும்!
காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது !

நாம் பயனுள்ள வகையில் வாழவேண்டும் என்பதை எவ்வளவு உருக்கமாகப் பாடிவிட்டார் !

இயந்திர-ரசாயனமயமாகிவரும் நமது விவசாயம்!
Photo: indianmirror.com

பழையதையே பார்த்துக்கொண்டிருக்காதே!

வயதாக ஆக, நாம் பழைய நினைவுகளையே திரும்பத் திரும்ப அசைபோடுகிறோம் ! அவற்றிலேயே அமிழ்ந்துவிடுகிறோம்! நம்மில் பலரும் சுற்றம், நட்பு என பல வட்டங்கள் அமைத்துக்கொண்டிருக்கிறோம். அதில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் நல்லது; இல்லையெனில், அவர்கள் இழுக்கும் பக்கம் எங்கெல்லாமோ போகிறோம்! ஆனாலும் சமூகத்தில் தனியொருவனாக இருப்பது பலருக்கும் ஒத்துவராது! இதையெல்லாம் வைத்து கவிஞர் பாடுகிறார்.


मुड़-मुड़ के न देख, मुड़-मुड़ के
ज़िंदगानी के सफ़र में तू अकेला ही नहीं है
हम भी तेरे हमसफ़र हैं

முட்-முட் கே ந தேக் முட்-முட் கே

ஜிந்தகானி கே ஸஃபர் மே தூ அகேலா ஹீ நஹீஹை
ஹம் பீ தேரே ஹம்ஸஃபர் ஹை

பழையதையே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்காதே
வாழ்க்கைப் பயணத்தில் நீ மட்டும் தனியாக இல்லை
நாங்களும் உன்னோடு தான் பயணம் செய்கிறோம்!

आये गये मंज़िलों के निशाँ
लहरा के झूमा झुका आसमाँ
लेकिन रुकेगा न ये कारवाँ
मुड़-मुड़ के न देख...


ஆயே  கயே மஞ்ஜிலோ(ன்) கே நிஷான்
லஹராகே ஜூமா, ஜுகா ஆஸ்மான்
லேகின் ருகேகா ந யே கார்வான்
முட்-முட் கே ந தேக் ......

 நாம் சேர வேண்டிய லக்ஷியத்தின் குறி - அது வந்து-போகிறது
( நிலையாக இருப்பதில்லை )
வானமும் ( நம்பிக்கை) அலைபோல் உயர்ந்தும் தாழ்ந்தும் போகிறது
ஆனால் இந்த  பயணிகளின் அணி- இது நிற்காது!
நீ திரும்பித் திரும்பிப் பார்க்காதே !

नैनों से नैना जो मिला के देखे
मौसम के साथ मुस्कुरा के देखे
दुनिया उसी की है जो आगे देखे
मुड़-मुड़ के न देख...


நைனோ (ன்) ஸே நைனா ஜோ மிலா கே தேகே

மௌஸம் கே ஸாத் முஸ்குரா கே  தேகே
துனியா உஸீ கீ ஹை ஜோ ஆகே தேகே
முட்-முட் கே ந தேக் ..........

மற்றவர்களுடன் கலந்து ஓன்றாகக் கண்டு
காலத்தின் போக்கில் களித்து மகிழ்ந்து
யார்  எதிர்காலத்தைப் பார்க்கிறார்களோ -
உலகம் அவர்கள் வசமாகும்!

दुनिया के साथ जो बदलता जाये
जो इसके साँचे में ही ढलता जाये
दुनिया उसी की है जो चलता जाये
मुड़-मुड़ के न देख...



துனியா கே ஸாத்  ஜோ  பதல்தா ஜாயே
ஜோ இஸ்கே  ஸாத் மே ஹீ தல்தா ஜாயே
துனியா உஸீ கீ ஹை ஜோ சல்தா ஜாயே
முட்-முட் கே ந தேக்............

உலகின் போக்கிற்குத் தக யார் மாறுகிறார்களோ
யார் இதை அனுசரித்துப் போகிறார்களோ
யார்  நகர்ந்துகொண்டே இருக்கிறார்களோ -
உலகம் அவர்கள் வசமாகும்!

From: Live MInt மாறி வரும் இந்தியா!

 இந்தப் பாடல் இருபக்கக் கத்தி போன்றது ! எப்படியும்  பொருள் சொல்லலாம் !
நாம் சமூக நியதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறோம். இன்றைய சமுதாயத்தில் எல்லாவற்றிலும் மாறுதல் வந்து விட்டது ! நல்லது-கெட்டது, சரி-தவறு -- இவற்றுக்கிடையேயான எல்லை மறைந்து வருகிறது. எதுவும் செய்யலாம் என்ற  கருத்து  [ Permissiveness]   ஓங்கி வருகிறது.  எதையும் கட்டுப்படுத்த, ஒழுங்கு செய்ய எந்த சக்தியும் இல்லை! எல்லா துறைகளிலும் மாறுதல் ஓயாமல் வந்துகொண்டிருக்கிறது. लेकिन रुकेगा न ये कारवाँ இந்த நிலையில் எந்த அளவு உலகத்துடன் ஒத்துப் போவது?

உலகத்தோ டொட்டொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
என்றார் வள்ளுவர். ஆனால் உலகம் என்பது எது ?

"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" எனபது இந்தியப் பண்பாட்டு மரபு.
பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினதாக இருந்தாலும், இதன் நன்மை தீமைகளைக் கவனித்து தீர்வுசெய்வது பெரியோர்களாக இருக்கவேண்டும். அதனால் பொதுவாக சமுதாயத்தின் நிலை எதுவானாலும், நமது வட்டத்தில் அத்தகையோர் இருக்கவேண்டும்.  அப்போது இக்கருத்துக்கள் நமக்கும் பொருந்தும்! நல்ல விஷயங்களையும் காலத்திற்கேற்ப  நடைமுறைப் படுத்தலாம்!

இந்த இரு பாடல்களையும் எழுதியவர் ஶைலேந்த்ரா. காலத்தால் அழியாத பாடல்கள்.
With the collapse of the joint family, and absence of social security, old people are getting committed to old age homes! This is a scene in Kerala.Is this "Progress'?
Picture:homesinabox.us.

லக்ஷ்யத்தில் உறுதி

எடுத்த  லக்ஷ்யத்தை அடைவதில் எத்தனை தடை வந்தாலும் தாண்டி முயற்சி செய்யவேண்டும் என்பது  பொதுவான அறிவுரை. தடைகளைக் கண்டு தயங்கக்கூடாது. இதையும் சுவை படச் சொல்கிறார்கள் கவிஞர்கள்.

रुक जाना नहीं तू कहीं हार के
काँटों पे चल के मिलेंगे साये बहार के
ओ राही, ओ राही

ருக் ஜானா நஹீ தூ கஹீ (ன்) ஹார்கே
கா(ன்)டோ பே சல் கே மிலேங்கே ஸாயே பஹார் கே
ஓ ராஹீ, ஓ ராஹீ

தோல்வியைக்கண்டு   நீ எங்கும்  நின்றுவிடாதே -
முள் மேல் நடந்தபின் தான் மலர்கள் வரும்!
ஓ பயணி....


सूरज देख रुक गया है
तेरे आगे झुक गया है
जब कभी ऐसे कोई मस्ताना
निकले है अपनी धुन में दीवाना
शाम सुहानी बन जाते हैं दिन इंतज़ार के
ओ राही, ओ राही...

ஸூரஜ் தேகா ருக் கயா ஹை
தேரே ஆகே ஜுக் கயா ஹை
ஜப் கபீ ஐஸே கோயீ மஸ்தானா
நிக்லே ஹை அப்னீ துன் மே தீவானா
ஶாம் ஸுஹானீ பன் ஜாதே ஹை தின் இன்தஜார் கே
ஓ ராஹீ, ஓ ராஹீ

சூர்யன் கூட உன்னைக் கண்டு நின்றுவிட்டது
உன் எதிரில்  தலை குனிந்து விட்டது
உன்னைப்போன்ற கனவுகள் நிறைந்த ஒருவன் -
தன் லக்ஷ்யத்தை நோக்கிச் செல்லும் போது
துன்பம் நிறைந்த நாள் கூட நன்மையே பயக்கிறது!
ஓ பயணியே .........

साथी न कारवां है
ये तेरा इम्तिहां है
यूँ ही चला चल दिल के सहारे
करती है मंज़िल तुझको इशारे
देख कहीं कोई रोक नहीं ले तुझको पुकार के
ओ राही, ओ राही...

ஸாதீ ந கார்வா(ன்) ஹை
யே தேரா இம்திஹா (ன்) ஹை
யூ ஹீ சலா சல் தில் கே ஸஹாரே
கர்தீ ஹை மன்ஜில்  துஜ்கோ இஷாரே
தேக் கஹீ (ன்) கோயீ ரோக் நஹீ (ன்) லே 
துஜ்கோ புகார் கே
ஓ ராஹீ ஓ ராஹீ

உன்னுடன் யாரும் இல்லை, எந்த அணியும் இல்லை
இதுதான் உனக்கு வந்த சோதனை!
உன்னுடைய நம்பிக்கையின் மீது நீ  சென்றுகொண்டே இரு !
உன்னுடைய லக்ஷ்யம் உனக்கு சைகை காட்டுகிறது!
எந்தக் குரலும் உன்னை நிறுத்திவிடாமல் கவனமாக இரு !
ஓ பயணியே .....

नैन आँसू जो लिये हैं
ये राहों के दीये हैं
लोगों को उनका सब कुछ दे के
तू तो चला था सपने ही ले के
कोई नहीं तो तेरे अपने हैं सपने ये प्यार के
ओ राही, ओ राही...

  நைன் ஆ(ன்)ஸூ  ஜோ லியே ஹை
யே  ராஹோ(ன்)  கே தீயே ஹை
லோகோ  கோ உன்கா ஸப்  குச் தே கே
தூ தோ  சலா தா ஸப்னே ஹீ லேகே
கோயீ நஹீ தோ தேரே அப்னே ஹை ஸப்னே யே ப்யார் கே
ஓ ராஹீ, ஓ ராஹீ

உன் கண்ணில் பொங்கும் நீர் -
அது உனக்கு வழியில் விளக்காகும்!
யார் எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்துவிட்டு
நீ உன் கனவை மறக்காமல் தாங்கிச் செல்!
உனக்கு யாரும் இல்லையென்றாலும் உன் அன்பான கனவு இருக்கிறது- 
அதை விடாதே !
ஓ பயணியே ............

லக்ஷ்யத்தில் உறுதியாக இருப்பவனுக்கு இயற்கையும் துணைசெய்யும் என்பதை கவி  அழகாகச் சொல்கிறார். இது மஜ்ரூ சுல்தான்புரி எழுதிய பாடல். 

pexels



 இவர் எழுதிய மற்றொரு பாடலைப் பார்ப்போம்.

कभी तो मिलेगी, कहीं तो मिलेगी
बहारों की मंज़िल राही
बहारों की मंज़िल राही…

கபீ தோ மிலேகீ, கஹீ தோ மிலேகீ
பஹாரோ (ன்) கீ மன்ஜில் ராஹீ
பஹாரோ (ன்) கீ மன்ஜில் ராஹீ....

அந்த அழகிய  லக்ஷ்யம் -
அது என்றோ கிடைக்கும், எங்கோ கிடைக்கும்
ஓ பயணியே


लम्बी सही दर्द की राहें
दिल की लगन से काम ले
आँखों के इस तूफ़ाँ को पी जा
आहों के बादल थाम ले
दूर तो है पर, दूर नहीं है
नज़ारों की मंज़िल राहि
बहारों की मंज़िल राही…

லம்பீ  ஸஹீ தர்த் கீ ராஹே(ன்)
தில் கீ லகன் ஸே காம் லே
ஆங்கோ கே இஸ்  தூஃபான் கோ பீ ஜா
ஆஹோ(ன்) கா பாதல் தாம் லே
தூர் தோ ஹை, பர் தூர் நஹீ ஹை
நஜாரோ(ன்) கீ மன்ஜில் ராஹீ
பஹாரோ (ன்) கீ மன்ஜில் ராஹீ

துயரத்தின் பாதை  நீண்டது - உண்மைதான்
ஆனால் மனதை வசப்படுத்தி இதை வெற்றிகொள்
கண்ணின்  ஒளி என்னும் இந்தப்  புயலைப் பருகு
கவலை எனும் மேகத்தைத் தடுத்து நிறுத்து
 ஓ பயணியே ! நக்ஷத்திரங்கள்  கூடிய அந்த இடம்-
அழகான அந்த  லக்ஷ்யம் -
தூரத்தில் இருக்கிறது, ஆனால் உண்மையில் அவ்வளவு தூரமில்லை! 


माना कि है गहरा अन्धेरा
गुम है डगर की चाँदनी
मैली न हो धुँधली पड़े न
देख नज़र की चाँदनी
डाले हुए है, रात की चादर
सितारों की मंज़िल राही
बहारों की मंज़िल राही…

மானாகீ ஹை கஹரா அந்தேரா
கும் ஹை டகர் கீ சாந்த்னீ
மைலீ ந ஹோ, துந்த்லீ படே ந
தேக் நஜர் கீ சாந்த்னீ
டாலே ஹுவே ஹை, ராத் கீ சாதர்
ஸிதாரோ கீ மன்ஜில் ராஹீ
பஹாரோ(ன்) கீ மன்ஜில் ராஹீ

இருள் அடர்ந்து மண்டியிருக்கிறது - உண்மைதான்
நிலவொளி  மறைந்துவிட்டது
ஆனால் கண்ணின் ஒளி -
அதில் தூசி படியாதிருக்கட்டும், அது மழுங்காமல் இருக்கட்டும்
அதன் ஒளியில் பார்!
இங்கு இரவு என்னும்  கனமான போர்வை மூடியிருக்கிறது!
ஆனாலும் நக்ஷத்திரங்கள் நிறைந்த அழகிய அந்த லக்ஷியம்-
எங்கோ, என்றோ கிடைத்தே தீரும்!

இது கற்பனை வளம் நிறைந்த பாடல். பொருள் எழுதுவது சுலபமல்ல. எத்தனை இருளுக்கு மத்தியிலும் ஏதோ ஒரு வெளிச்சம் இருக்கும், வழி காட்டவே செய்யும் என்னும் நம்பிக்கை அளிக்கும் பாடல்!


இதே கருத்தை  ஶைலேந்த்ரா பாடுவதையும் பார்ப்போம்.

राही तू मत रुक जाना, तूफ़ां से मत घबराना
कभी तो मिलेगी तेरी मंज़िल
कहीं दूर गगन की छाओं में


ராஹீ தூ மத் ருக் ஜானா,
தூஃபா(ன்) ஸே மத் கப்ரானா
கபீதோ மிலேகீ தேரி மன்ஜில்
கஹீ தூர் ககன் கீ சாவோ (ன்) மே

பயணியே, நீ எங்கும் நின்றுவிடாதே !
புயல் என்று பயப்படாதே !
உன்னுடைய  லக்ஷ்யம்  ஒருசமயம்  நிறைவேறும் -
இந்தப்  பரந்த  ஆகாயத்தின் கீழே!


माना कि गहरी है धारा
पर है कहीं तो किनारा
तू भी मिला आशा के सुर में
मन का ये एकतारा
कभी तो मिलेगी तेरी मंज़िल
कहीं दूर गगन की छाओं में


மானா கி கஹரீ ஹை தாரா
பர் ஹை கஹீ தோ கினாரா
தூ பீ மிலா  ஆஶா கே ஸுர் மே
மன் கா யே ஏக்தாரா
கபீ தோ மிலேகீ தேரீ மன்ஜில்
கஹீ தூர் ககன் கீ சாவோ(ன்) மே

இந்த நதியின் நீர் ஆழமானது என்பது தெரியும்!
ஆனால் கரை என்று ஒன்று இருக்கிறதல்லவா!
( எனவே, நம்பிக்கை இழக்காமல்)
மனம் என்னும் இந்த ஒரு தந்தி வாத்யத்தில்
நம்பிக்கை என்னும் ஸ்வரத்தை இசைப்பாயாக!
உன் லக்ஷ்யம் இந்தப் பரந்த வானத்தின் கீழ் எங்காவது ,
 என்றோ ஒரு நாள்  நிச்சயம் நிறைவேறும் !



सबका है ऊपरवाला
सबको उसी ने सम्भाला
जब भी घिरे ग़म का अंधेरा
उसने किया उजियाला
कभी तो मिलेगी तेरी मंज़िल
कहीं दूर गगन की छाओं में

ஸப் கா ஹை ஊபர்வாலா
ஸப்கோ உஸீனே ஸம்பாலா
ஜப்  பீ கிரே கம் கா அந்தேரா
உஸ்னே கியா உஜுயாலா
கபீ தோ மிலேகீ தேரீ மன்ஜில்
கஹீ தூர் ககன் கீ சாவோ (ன்) மே

நம் எல்லோருக்குமாக மேலே ஒருவன் இருக்கிறான்!
நம் எல்லோரையும் அவன் தானே காப்பாற்றி  வந்திருக்கிறான்!
எப்பொழுதெல்லாம் துயரம் என்னும் நிழல் படிந்ததோ-
அப்போதெல்லாம் அவன் தானே ஒளியை வழங்கினான்!
இந்தப் பரந்த வானத்தின் கீழ், எங்காவது
என்றாவது ஒரு நாள் உன் லக்ஷ்யம் நிச்சயம் நிறைவேறும்!

राही तू मत रुक जाना, तूफ़ां से मत घबराना
कभी तो मिलेगी तेरी मंज़िल
ராஹீ தூ மத் ருக் ஜானா...........
 பயணியே, நீ நின்றுவிடாதே .......

நம் கவிகள் போட்டி போட்டது போல் உயர்ந்த கருத்துக்களைச் சொல்கிறார்கள் ! மஜ்ரூ தன்னம்பிக்கை மீது பாடினார்; இங்கு ஶைலேந்த்ரா தெய்வ நம்பிக்கை மீது பாடுகிறார் ! இரண்டும் நமக்கு இரு கண்களல்லவா!

pexels



No comments:

Post a Comment