90. வாழ்க்கை என்னும் புதிர்
ஞானிகளும் கவிஞர்களும் வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்து பார்க்கிறார்கள். சில ஞானிகள் கவிகளாகவும் இருக்கிறார்கள்; சில கவிகள் தத்துவத்தையும் தொடுகிறார்கள். இவை இலக்கியமாக அமைந்து நமக்கு களிப்பூட்டுகின்றன, அறிவு புகட்டுகின்றன. நமது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இத்தகையனவே. ஆனால் அவை 'கன ரகம்'. படிப்பதற்குப் பொறுமை வேண்டும். புரிந்து கொள்ள ஓரளவு மொழிப்பயிற்சி இருக்கவேண்டும்; இலக்கிய மரபும் தெரிந்திருக்கவேண்டும்.
இதையே நாம் கதை, நாடகம் , கவிதை வாயிலாகப் படிக்கும்போது புரிந்துகொள்வதும் ரசிப்பதும் எளிதாகிறது. ஆனாலும் வாழ்க்கை என்னும் புதிரை முழுதும் அவிழ்க்க இயல்வதில்லை! நீச்சல் பற்றி ஆயிரம் படித்தாலும் நீரில் இறங்குவதாகுமா ?வாழ்க்கையை அனுபவித்துத்தான் அறிந்துகொள்ள முடியும்.
எல்லா ஞானிகளும் சிறந்த கவிகளும் சொல்வது ஒன்றே - வாழ்க்கை ஒரு கலப்பு வித்தை ; நல்லது-கெட்டது, இன்ப-துன்பம், ஏற்றம்-தாழ்வு என்று கலந்துதான் வருகிறது. இதைப் புரிந்துகொண்டால் வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளலாம்.
ஷேக்ஸ்பியர் வாழ்க்கையைப் பல நிலைகளில் படமெடுத்ததுபோல் பாடியிருக்கிறார்.
The web of our life is of a mingled yarn,
good and ill together.
[ All's Well That ends Well ]
And so, from hour to hour, we ripe and ripe,
And then, from hour to hour, we rot and rot;
And thereby hangs a tale.
[ As You Like It.]
The time of life is short!
To spend that shortness basely were too long.
[Henry IV, Part 1]
That sometimes hath the brightest day a cloud;
And after summer evermore succeeds
Barren winter with his wrapping nipping cold:
So cares and joys abound, as seasons fleet.
[Henry IV, Part 2 ]
இந்த கடைசி பகுதியைப் பாருங்கள் -இது ஏதோ 'மூட் ' சரியில்லாத சமயத்தில் எழுதியிருக்க வேண்டும் ! நடுக்கும் குளிர்காலம் கோடை காலத்தைத் தொடர்ந்து வருகிறது என்கிறார். இதையே திருப்பிப் போட்டால், நடுக்கும் குளிருக்குப் பிறகு வசந்தமும் கோடையும் வருகிறது எனச்சொல்லலாமே ! இப்படித்தான் கவிகள் நம்மை சீண்டுகிறார்கள்.
கஷ்டம் வரும் சமயத்தில் பாடி வாழ்வே மாயம் என்பார்கள்.
Out, Out, brief candle!
Life is but a walking shadow - .....
It is a tale
Told by an idiot, full of sound and fury
Signifying nothing.
[Macbeth ]
கவிஞர் லாங்க்ஃபெல்லோ Henry Wadsworth Longfellow இதற்கு பதில் சொல்கிறார் :
Tell me not, in mournful numbers,
Life is but an empty dream!
For the soul is dead that slumbers,
And things are not what they seem.
Life is real! Life is earnest!
And the grave is not its goal;
Dust thou art, to dust returnest,
Was not spoken of the soul.
இப்படிக் கவிகள் வார்த்தையில் விளையாடுகிறார்கள், தத்துவத்தில் திளைக்கிறார்கள். நம் ஹிந்தித் திரைக் கவிகள் ஒன்றும் சளைக்கவில்லை
ஃஜிந்தகீ கைஸீ ஹை பஹேலி
படம் ஆனந்த், 1971 Anand
கவி : யோகேஷ்
From : YouTube,
ज़िन्दगी कैसी है पहेली हाय
कभी तो हँसाए, कभी ये रुलाये
ஃஜிந்தகீ கைஸீ ஹை பஹேலீ ஹாய்
கபீ தோ ஹஸாயே, கபீ தோ ருலாயே
ஹாய் ! வாழ்க்கை தான் எப்படிப்பட்ட புதிர்!
சில சமயம் சிரிக்கவைக்கிறது, சில சமயம் அழவைக்கிறது!
कभी देखो मन नहीं जागे, पीछे-पीछे सपनों के भागे
एक दिन सपनों का राही, चला जाये सपनो के आगे कहाँ
ज़िन्दगी कैसी है पहेली...
கபீ தேகோ மன் நஹீ ஜாகே,
பீசே பீசே ஸப்னோ(ன்) கே பாகே
ஏக் தின் ஸப்னோ(ன்) கா ராஹீ,
சலா ஜாயே ஸப்னோ(ன்) கே ஆகே, கஹான்?
சில சமயம் பாருங்கள், நமது மனம்-புத்தி விழிப்படைவதில்லை!
அப்போது நாம் ஏதோ கனவுகளின் பின்னால் ஓடுகிறோம்!
இப்படிக் கனவு காண்பவன் ஒரு நாள்
கனவுகளைத் தாண்டிப் போய்விடுகிறான்?
ஆனால் எங்கே ?
जिन्होंने सजाये यहाँ मेले, सुख-दुःख संग-संग झेले
वही चुनकर खामोशी, यूँ चले जाएँ अकेले कहाँ
ज़िन्दगी कैसी है पहेली
ஜின்ஹோனே ஸஜாயே யஹா(ன்) மேலே,
ஸுக்-துக் ஸங்க் -ஸங்க் ஃஜேலே
வஹீ சுன் கர் காமோஷீ,
யூ(ன்) சலே ஜாயே அகேலே, கஹான் ?
மக்கள் இங்கே கூட்டம் கூடிக் கும்மாளம் அடிக்கிறார்கள்.
ஸுக-துக்கங்களில் உடன் இருக்கிறார்கள்
அவர்களே ஒரு நாள் அமைதியைத்தேடி தனியாகப் போய்விடுகிறார்கள்
ஆனால் எங்கே ?
எங்கே ? இதுதான் புதிர்!
ஃஜிந்தகீ கைஸீ ஹை பஹேலீ
வாழ்க்கையை விட்டு, வெறுத்து ஓடினால் சம்ஸாரம் சரியாகிவிடுமா?
ஸம்ஸார் ஸே பாகே ஃபிர்தே ஹோ
கவி: ஸாஹிர் லுதியான்வி
படம் :சித்ரலேகா 1964 Chitralekha
Sसंसार से भागे फिरते हो भगवान को तुम क्या पायोगेइस लोग को भी अपना न सके उस लोक में भी पछताओगेसंसार से भागे फिरते होஸம்ஸார் ஸே பாகே ஃபிர்தே ஹோபகவான் கோ தும் க்யா பாவோகேஇஸ் லோக் கோ பீ அப்னா ந ஸகேஉஸ் லோக் மே பீ பச்தாவோகேஸம்ஸார் ஸே பாகே ஃபிர்தே ஹோ
வாழ்க்கையை வெறுத்து ஓடுகிறாய்நீ கடவுளை அடைந்து விடுவாயா, என்ன ?இந்த உலகத்திலேயே உன்னால் சரியாக வாழமுடியவில்லைஅந்த உலகத்திலும் நீ பச்சாத்தாபப் படுவாய் !வாழ்க்கையை வெறுத்து ஓடுபவனே !
ये पाप है क्या ये पुण्य है क्या रीतो पर धर्म की मोहरे है २रीतो पर धर्म की मोहरे है हर युग में बदलते धर्मो कोकैसे आदर्श बनाओगेसंसार से भागे फिरते होயே பாப் ஹை க்யா யே புண்ய ஹை க்யாரீதோ பர் தர்ம் கீ மோஹரே ஹைரீதோ மே தர்ம் கீ மோஹரே ஹைஹர் யுக் மே பதல்தே தர்ம் கோகைஸே ஆதர்ஷ் பனாவோகேஸம்ஸார் ஸே பாகே ஃபிர்தே ஹோ
இந்த பாபம் என்பது என்ன , புண்ணியம் என்பது என்ன ?உலக நியதிகளின் மேல் மதம் என்ற முத்திரை இருக்கிறது.யுகம்தோறும் தர்மம் மாறுகிறது- இதில் எதை எப்படி சரியானது என்று கொள்வாய்?
ये भोग भी इक तपस्या है तुम त्याग के मारे क्या जानो २तुम त्याग के मारे क्या जानो अपमान रचेता का होगारचना को अगर ठुकराओगेसंसार से भागे फिरते होயே போக் பீ எக் தபஸ்யா ஹைதும் த்யாக் கே மாரே க்யா ஜானோஅபமான் ரசேதா கா ஹோகாரசனா கோ அகர் டுக்ராவோகே
இந்த உலகின் நன்மை-தீமைகள் கூட ஒருவித தபஸ் ஆகும்சன்யாஸப்பித்து பிடித்தவனே, உனக்கு என்ன தெரியும் ?சிருஷ்டியை நிராகரித்து ஓடுபவன்சிருஷ்டி கர்த்தாவையே அவமதிக்கிறான் !
हम कहते है ये जग अपना है तुम कहते हो झूठा सपना है २तुम कहते हो झूठा सपना है हम जनम बिता कर जायेगेतुम जनम गँवा कर जायोगे
ஹம் கஹதே ஹை யே ஜக் அப்னா ஹைதும் கஹ்தே தோ ஃஜூட் ஸப்னா ஹைஹம் ஜனம் பிதாகர் ஜாயேங்கேதும் ஜனம் கவா கர் ஜாவோகே
இந்த உலகம் நமது என்கிறேன் நான்நீயோ இது ஒரு பொய்யான கனவு என்கிறாய் !நான் இந்த ஜன்மத்தில் நல்லவிதமாக வாழ்வேன்நீ வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வாய் !
संसार से भागे फिरते होभगवान को तुम क्या पायोगेसंसार से भागे फिरतेஸம்ஸார் ஸே பாகே ஃபிர்தே ஹோபகவான் கோ தும் க்யா பாவோகேஸம்ஸாரத்திலிருந்து வெறுத்து ஓடுபவனே !நீ என்ன கடவுளை அடைந்து விடுவாயா ?
இது முதல் பார்வையில் ஏதோ Hedonistic தத்துவம் போலத்தோன்றும். ஆழ்ந்து படித்தால் இதன் அருமை புரியும். இது ஒரு tremendous பாட்டு.பகவத் கீதையின் தத்துவம் முழுதும் இதில் அடங்கியிருக்கிறது!
அங்கும் அர்ஜுனன், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடப்போகிறேன் சன்னியாசி ஆகிவிடுகிறேன் என்கிறான்; தர்மம் பற்றி என் மனது குழம்பியிருக்கிறது என்கிறான்! க்ருஷ்ணர் அவனை விடுவதில்லை! அவனுக்கு தர்மம் பற்றிச் சொல்கிறார். எல்லாவற்றிலும் உயர்ந்த தர்மத்தையும் போதிக்கிறார் ! எப்படி வாழவேண்டும் என்று சொல்லித் தருகிறார் . வாழ்க்கையை வெறுத்து ஓடு என்று சொல்லவில்லை ! வாழ்க்கையில் வைராக்யம் என்பது வேறு, வெறுப்பு என்பது வேறு ! வாழ்வாங்கு வாழும் தத்துவத்தையே நமது அற நூல்கள் சொல்கின்றன. இதையே இங்கு கவிஞர் வேறு விதமாகச் சொல்கிறார். போலி ஸன்யாசிகளைச் சாடுகிறார். உண்மை ஸன்யாஸம், த்யாகம் இவற்றை கீதை விளக்குகிறது ! உலகம் மாயை என்பது வறட்டு வேதாந்தம் .
இந்த உலகம் நிலையான தல்ல- எல்லாம் மாறுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லாமலில்லை! [vyavaharika satyam ] இது இன்றைய பௌதிக விஞ்ஞானத்தில் Particle physics நன்கு விளங்கும். பருப்பொருள் Matter என்று ஒன்று இல்லை- எல்லாம் சக்தி மயம் Energy என்பது தான் இன்றைய அறுதி விஞ்ஞானம்! ஆனால் சுவற்றில் மோதினால் வலிக்கிறதே ! இந்த தன்மைதான் "மாயை ". இதற்கு பொய் என்று பொருளில்லை. உலகம் மாயை-பொய் என்று வெறுத்து ஓடுபவன் இங்கும் வாழவில்லை, அங்கும் அமைதி காணமாட்டான். எவ்வளவு அருமையாகச் சொல்கிறார் நம் கவிஞர் ! அவருக்கு சலாம் போடுவோம் !
இதற்கு இசையமைத்தவர் ரோஷன்.
உண்மையாக இருந்தாலும் இந்த உலகம் நிலையில்லாதது. இதைப்புரிந்துகொண்டு வாழவேண்டும். இங்குதான் நாம் தவறு செய்கிறோம்!இதை ஒரு பாடலில் சொல்கிறார் ஶைலேந்த்ரா..
இக் ஆயே இக் ஜாயே முஸாஃபிர்கவி : ஶைலேந்த்ராபடம்: முஸாஃபிர் 1957
इक आये इक जाए मुसाफिर दुनिया इक सरायइक आये इक जाए मुसाफिर दुनिया इक सराय रे इक आये.......ஏக் ஆயே ஏக் ஜாயே முஸாஃபிர் துனியா ஏக் ஸராய் ரேஏக் ஆயே ஏக் ஜாயே முஸாஃபிர்துனியா ஏக் ஸராய் ரே ஏக் ஆயே.........
வழிப்போக்கன்- ஒருவன் வருகிறான், ஒருவன் போகிறான்இந்த உலகம் ஒரு வழிப்போக்கன் தங்கும் இடம்!ஒருவன் வருகிறான், ஒருவன் போகிறான்..........
अलबेले अरमानो के तूफ़ान लेकर आयेनादान सो बरस के सामान लेकर आयओरे धूल उडाता जाएइक आये इक जाए मुसाफिर दुनिया इक सराय रे इक आये...........அல்பேலே அர்மானோ(ன்) கீதூஃபான் லேகர் ஆயே !நாதான் சௌ பரஸ்கேஸாமான் லேகர் ஆயேஔர் தூல் உடாதா ஜாயேஏக் ஆயே ஏக் ஜாயே முஸாஃபிர்........
அழகிய ஆசைகள் என்னும் புயலை ஏந்தி வருகிறான் நூறு ஆண்டுகளுக்கு என்று வேண்டாத சாமான்களைக் கொண்டு வருகிறான்!போகும்போது வெறும் புழுதிதான் கிளம்புகிறது!வழிப்போக்கன் - ஒருவன் வருகிறான், ஒருவன் போகிறான்
दिल की जुबा अपनी है दिल की नज़र भी अपनीपल भर में अनजाने से पहचान भी हो जाएपहचान दो घडी की बन प्यार मुस्कुरायेदो दिन की ज़िन्दगी रंग लायेइक आये इक जाए मुसाफिर दुनिया इक सराय रे इक आये.........इक आये इक जाए मुसाफिर दुनिया इक सराय रे इक आये इक जाए
தில் கீ ஃஜுபான் அப்னீ ஹைதில் கீ நஃஜர் பீ அப்னீபல் பர் மே அஞ்சானே ஸே பஹசான் பீ ஹோ ஜாயேபஹசான் தோ கடீ கீ பன் ப்யார் முஸ்குராயேதோ தின் கீ ஃஜிந்தகீ ரங்க் லாயேஏக் ஆயே ஏக் ஜாயே முஸாஃபிர்..........
மனதில் அன்பு என்னும் மொழியில் பேசுஅன்பு என்னும் பார்வையில் பார்!ஒரு க்ஷணத்தில் முன்பின் தெரியாதவர்களிடத்திலும்அறிமுகமாகிவிடும் !அந்த குறுகிய அறிமுகமே பின்பு அன்பாக மலரும்!குறுகிய வாழ்க்கையும் இங்கு நிறைந்து விளங்கும்!ஒருவன் வருகிறான், ஒருவன் போகிறான் !இந்த உலகம் ஒரு வழிப்போக்கன் தங்கும் இடம் !
யோசிக்கவேண்டிய விஷயம் தானே ![ இதே பொருளில் வேறு ஒரு பாடலும் இருக்கிறது, "சுரங்க் " ( சுரங்கம் ) என்ற 1953 படத்தில் வந்த பாடல்:jisko toone ghar samjha yeh duniya musaafirkhana haibaari baari ik din sab ko chhod ke ye ghar jaana haiஆனால் ஶைலேந்த்ராவின் பாடலில் நயம் இருக்கிறது.. அழுகை மயமாக இல்லை! ]
eraeravi.blogspot.in
No comments:
Post a Comment