88. திரை இசையில் ஹிந்துத்வா !
தலைப்பைக் கண்டு செக்யூலர் வாதிகளுக்கு ஷாக் அடிக்கிறதா?
இங்கு ஹிந்துமதம் பற்றிப் பேசவில்லை. இந்தியா- பாரதம்- பற்றியே பேசுவோம் ! ஆம், 'ஹிந்த்' என்பது இந்தியாவே ! பாரத நாட்டிற்கு இதுவே
அந்நியர் இட்ட பெயர். ஹிந்து என்பது பிறகு நமது தர்மத்திற்கும் ஆகிவிட்டது.
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं
ஜின்ஹே நாஜ் ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை ?
ज़रा मुल्क के रहबरों को बुलाओ
ஜரா முல்க் கே ரஹபரோ (ன்) கோ புலாவோ
இங்கு கவிஞர் ஸாஹிர் லுதியான்வி ஹிந்த் என்பதை இந்தியா என்னும் பொருளில் தான் சொல்கிறார்:
இந்தியா என்பதில் பெருமை கொண்டவர்கள் -
அவர்கள் இப்போது எங்கே ?
தேசத்தை வழி நடத்திச் செல்பவர்கள் எங்கே -
அவர்களைச் சற்றே கூப்பிடு !
எனவே, ஹிந்துத்வா என்பதற்கு 'இந்தியத்தன்மை' என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.
இந்தியத்தன்மை என்று ஒன்று இருக்கிறதா ?
ஒவ்வொரு நாடும் ஒரு விதம் !
உலக சரித்திரம் ஊன்றிப் பயில்பவர்களுக்கு ஒரு விஷயம் புலனாகும்: ஒவ்வொரு நாட்டிற்கும், பூமிக்கும் ஒரு குறிப்பிட்ட சிறப்பு- இலக்கணம் உண்டு. மேலை நாடுகள் என்று சொல்கிறோம்; ஐரோப்பாவில் பல நாடுகள்; பொதுவாக கிறிஸ்தவ மதம் என்று இருந்தாலும், ஒவ்வொரு நாடும் ஒருவிதமாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் பண்பட்டவை. ஒவ்வொரு விதத்தில் சிறந்தவை- ஆனால் ஒன்று போல் இல்லை !
இங்கு கீழை நாடுகளும் அப்படியே. ஒவ்வொன்றிற்கும் தனிக்குணாதிசயம் இருக்கிறது. ஆனால் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததால் அவர்கள் தனித்தன்மையை இழந்து வருகிறார்கள். இன்று வேகமாகப் பரவிவரும் அமெரிக்க வாழ்க்கைமுறையும் வியாபாரக் கண்ணோட்டமும் , விளம்பரப் பேயும் மக்களை ஒரே மாதிரி நடத்திச் செல்கின்றன, ஒரு சமூகத்தின்- நாட்டின் தனித்தன்மை அழிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஒரே மாதிரி 'மாக்களா'கி வருகின்றனர்.
இந்தியத் தன்மை !
இந்தியாவின் தனித்தன்மை எதில் இருக்கிறது ? குறிப்பாக மூன்று விஷயங்கள் சொல்லலாம்:
- தெய்வ நம்பிக்கை
- மறுபிறவியில் நம்பிக்கை
- தாய்மைக்குத் தரும் மதிப்பு.
இன்று உலகில்- குறிப்பாக மேலை நாடுகளில்- படித்த மக்களிடையே கிறிஸ்துவ மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. "கடவுள்" என்று நம்புபவர்கள் கூட , அம்மதத்தின் ஆதாரக்கொள்கைகளை ஏற்பதில்லை. இவை விஞ்ஞானத்திற்கு எதிராக இருப்பதே முக்கிய காரணம். விஞ்ஞானமோ, இந்த உலகின் அடிப்படை உண்மை என்ன என்று தெரியாமல் தடுமாறுகிறது ; ஆனாலும் அதன்பெயரில் கடவுள் நம்பிக்கை கெட்டுவிட்டது. இது கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கே முற்றும் பொருந்தும்.
.
ஹிந்து மதம் அடிப்படையிலேயே விஞ்ஞானமய மானது. இந்தியாவில் அனேகமாக ஒவ்வொருவரும் ஓரளவுக்காவது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
மறுபிறவி உண்மை இந்தியாவின் அசைக்கமுடியாத ஆணிவேர். மேலை நாடுகளில் விஞ்ஞான ஆராய்ச்சியினால் இதன் உண்மை ஓரளவு மதிக்கப்பட்டு வருகிறது. .
.
உலகில் இந்தியா போன்று வேறு எந்த நாடும் தாய்மையை தெய்வீகமாகப் போற்றவில்லை! தெய்வத்தைத் தாயாக வழிபடவில்லை !
जननी जन्मभूमिश्- च स्वर्गादपि- गरीयसी
ஜனனீ ஜன்மபூமிஶ்ச ஸ்வர்காதபி கரீயஸீ
பெற்ற தாயும் பிறந்த பூமியும் ஸ்வர்கத்தைக் காட்டிலும் உயர்ந்தவை!
- இதை ராமர் சொல்கிறார். இதற்குமேல் என்ன சொல்ல ?
நாம் நாட்டையே தாய்நாடு என்கிறோம் !
இந்த மூன்று விஷயங்களும் நமது ஹிந்திப் படப் பாடல்களில் பயின்று வருகின்றன ! புராணப்படம் என்று இல்லை- நவீன சமூகப்படங்களிலும் இவை பற்றிப் பல பாடல்கள் இருக்கின்றன. சிலவற்றை இங்கு பார்ப்போம்.
தெய்வ நம்பிக்கை
ஜின் ந ஜின் ஜின் ஜின் ந ரா ஆண்டவன்- உன் கூட இருக்கிறான்அவனே உன்னைக் காப்பாற்றுகிறான்
जीवन से न हार ओ जीनेवालेबात मेरी तू मान अरे मतवालेहर गम को तू अपना करदिल का दर्द छुपा करबढ़ता चल तू लहराकरदुनिया के सुख दुःख को बिसरा करजीवन से न हार ओ जीनेवालेबात मेरी तो मान अरे मतवाले
ஜீவன் ஸே ந ஹார் ஓ ஜீனேவாலேபாத் மேரீ தூ மான் அரே மத்வாலேஹர் கம் கோ தூ அப்னா கர்தில் கா தர்த் சுபா கர் பட்தா சல் தூ லஹ்ராகர்துனியா கே ஸுக்-துக் கோ பிஸ்ரா கர்
வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு மனம் தளராதேமக்களே , நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்வரும் கஷ்டத்தை எற்றுக்கொள்-உன் மன வருத்தத்தை வெளியில் காட்டாதேஊக்கத்துடன் முன்னேறிச் செல்
ஜீவன் ஸே ந ஹார் ஓ ஜீனேவாலே .........
साथ तेरे है ऊपर वाला वही है तेरा रखवालाஸாத் தேரே ஹை ஊபர்வாலா வஹீ ஹை தேரா ரக்வாலாவாழ்க்கையில் தோல்வியால் தளராதேஆண்டவன் - அவன் உன்னோடு இருக்கிறான்அவனே உன்னைக் காப்பாற்றுகிறான்.
सुख दुःख है जीवन के दो पैराहेधुप कभी तो कभी घनेरे सायेजो सूरज अंधियारे में खो जाएवही लौटकर नया सवेरा लायेतो बढ़ता चल तू लहराकरदुनिया के सुख दुःख को बिसरा करजीवन से न हार ओ जीनेवालेஸுக்-துக் ஹை ஜீவன் கே தோ பைராஹேதூப் கபீ தோ கபீ கனேரே ஸாயேஜோ ஸூரஜ் அந்தியாரே மே கோ ஜாயேவஹீ லௌட் கர் நயா ஸவேரா லாயேதோ பட்தா சல் தூ லஹரா கர்துனியா கே ஸுக்-துக் கோ பிஸ்ரா கர்ஜீவன் ஸே ந ஹார் ஓ ஜீனேவாலே.......
ஸுக-துக்கம் என்பது வாழ்க்கையின் இரு நிலைகள் !வெளிச்சம் ஒரு சமயம் அடர்ந்த நிழலாகிறதுசூர்யன் இருளில் மறைந்துவிடுகிறதுஅதுவே புதிய காலைப்பொழுதாகத் திரும்பி வருகிறது!எனவே நீ ஊக்கத்துடன் முன்னேறிச் செல்உலகின் சுக-துக்கங்களை மறந்துவிட்டுச் செல்வாழ்க்கையில் தோல்வியைக்கண்டு தளராதே !
बहती नदिया तुझको याद दिलायेसमय जो जाए कभी लौट न आयेदीप तो वो जो हवा में जलता जाएखुदको जलाकर जग को राह दिखाएतो बढ़ता चल तू लहराकरदुनिया के सुख दुःख को बिसरा करजीवन से न हार ओ जीनेवालेसाथ तेरे है ऊपर वाला वही है तेराபஹதீ நதியா துஜ்கோ யாத் திலாயேஸமய் ஜோ ஜாயே கபீ லௌட் ந ஆயேதீப் ஜோ வோ ஜோ ஹவா மே ஜல்தா ஜாயேகுத்கோ ஜலாகர் ஜக் கோ ராஹ் திகாயேதோ பட்தா சல் தூ லஹ்ராகர்துனியா கே ஸுக்-துக் கோ பிஸ்ரா கர்ஜீவன் ஸே ந ஹார் ஓ ஜீனேவாலேஸாத் தேரே ஹை ஊபர்வாலா வஹீ ஹை தேரா ரக்வாலா
ஓடும் நதி - அது உனக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறது - -சென்று விட்ட பொழுது ஒருபோதும் திரும்பி வராது !காற்றில் எரிந்து அணையும் அந்த விளக்கு -தானே எரிந்து உலகத்திற்கு வழிகாட்டுகிறது!(எனவே) நீ ஊக்கத்துடன் முன்னேறிச் செல்உலகத்தின் ஸுக-துக்கத்தை மறந்துவிடு !வாழ்க்கையில் தோல்வியைக்கண்டு மனம் தளராதேஆண்டவன் உன்னோடு இருக்கிறான்அவனே உன்னைக் காப்பாற்றுகிறான் .
[இந்த அருமையான பாடல் Door Ka Rahi என்ற படத்தில் (1971) இடம் பெற்றது, எழுதியவர் A.Irshad. அவரது ஃபோட்டோ கிடைக்கவில்லை. இசை அமைத்துப் பாடியவர் கிஷோர்குமார். வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கும் அருமையான படம்.]
மறு பிறவி
மறு பிறவி பற்றி பல படங்கள் வந்து விட்டன. ஆனால் இந்தப்பொருள் பற்றி ஓரிரண்டு பாடல்களே பிரபலமாயின. மதுமதி படத்தில் இரண்டே வரிகளில் இந்த விஷயத்தைத் தொட்டுக்காட்டினார் ஶைலேந்த்ரா.
वो आसमाँ झुक रहा है ज़मीं पर ये मिलन हमने देखा यहीं पर (२) मेरी दुनिया, मेरे सपने, मिलेंगे शायद यहीं
ஓ ஆஸ்மா(ன்) ஜுக் ரஹா ஹை ஜமீ(ன்) பர்ஏ மிலன் ஹம்னே தேகா யஹீ பர்மேரீ துனியா, மேரீ ஸப்னே மிலேங்கே ஷாயத் யஹீ
அதோ, அந்த வானம் பூமியைத் தீண்ட வருகிறது!இந்த சந்திப்பை இதே இடத்தில் நாம் பார்த்திருக்கிறோம்!என் உலகம். என் கனவு - இங்கேயே நிறைவேறிவிடும்!
சில சமயம் சில இடங்களைப் பார்த்தாலோ, சில பேரைப் பார்த்தாலோ எங்கோ, எப்போதோ தெரிந்தது போல் தோன்றுகிறது! சிலரைக் கண்டால் உடனே பிடித்துப் போகிறது- சிலரைக் கண்டால் பயம், வெறுப்பு வருகிறது! இதெல்லாம் பூர்வ ஜன்ம வாசனை என்று இன்றைய மேலை நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் சொல்கின்றனர், நமக்கு இதெல்லாம் ஸர்வ சகஜம். இதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் நம் கவிஞர் !மற்றொரு பாடலில் இதை ஒரு கவிஞர் அருமையாகச் சொல்கிறார்.
वफ़ा के दीप जलाए हुए निगाहों में
भटक रही हो भला क्यों उदास राहों में
तुम्हें ख्याल है तुम मुझसे दूर हो लेकिन
मैं सामने हूँ, चली आओ मेरी धुन में
வஃபா கே தீப் ஜலாயே ஹுவே நிகாஹோ(ன்) மே
படக் ரஹீ ஹோ பலா க்யூ உதாஸ் ராஹோ மே
துமே கயால் ஹோ தூ முஜ்ஸே தூர் ஹோ லேகின்
மை ஸாம்னே ஹூ(ன்), சலீ ஆவோ மேரீ துன் மே
விசுவாசம் என்னும் தீபம் கண்ணில் ஜொலிக்க
நம்பிக்கை இன்மை என்ற இந்தப் பாதையில் ஏன் உழல்கிறாய் ?
என்னிடமிருந்து தூரத்தில் இருக்கிறாய் என நினைக்கிறாய் -
நான் எதிரிலேயே இருக்கிறேன்-
என் பாடலைக் கேட்டு இங்கே வரவும்!
सौ बार जनम लेंगे, सौ बार फ़ना होंगे
ऐ जाने वफ़ा फिर भी हम तुम ना जुदा होंगे
ஸௌ பார் ஜனம் லேங்கே , ஸௌபார் ஃபனா ஹோங்கே
யே ஜானே வஃபா ஃபிர் பீ ஹம் தும் நா ஜுதா ஹோங்கே
நூறு முறை நாம் பிறவி யெடுப்போம் -
நூறு முறை நாம் இறந்து போவோம் !
ஆனாலும் நாம் பிரியமாட்டோம்!
किस्मत हमें मिलने से रोकेगी भला कब तक
इन प्यार की राहों में भटकेगी वफ़ा कब तक
कदमों के निशाँ खुद ही मंजिल का पता होंगे
सौ बार जनम लेंगे...
किस्मत हमें मिलने से रोकेगी भला कब तक
इन प्यार की राहों में भटकेगी वफ़ा कब तक
कदमों के निशाँ खुद ही मंजिल का पता होंगे
सौ बार जनम लेंगे...
கிஸ்மத் ஹமே மில்னே ஸே ரோகேகீ பலா கப் தக்
இன் ப்யார் கீ ராஹோ(ன்) மே படகேகி வஃபா கப் தக்
கத் மோ)ன்) கா நிஷா(ன்) குத் ஹீ மஞ்சில் கா பதா ஹோகா
விதி எவ்வளவு நாள்தான் நம்மைப் பிரித்து வைக்கும்?
எவ்வளவு நாள் விசுவாசம் தடுமாறி நிற்கும்?
நமது காலடித் தடங்கள் - அவையே லக்ஷியத்தின் முகவரியாகும்!
MythFox. From YouTube.
கத் மோ)ன்) கா நிஷா(ன்) குத் ஹீ மஞ்சில் கா பதா ஹோகா - என்ன அருமையான வரி!
கத் மோ)ன்) கா நிஷா(ன்) குத் ஹீ மஞ்சில் கா பதா ஹோகா - என்ன அருமையான வரி!
இதுதான் 'ஹிந்துத்வா'! மறுபிறவியில் நம்பிக்கை இருப்பதால்தான் இங்கு உறவுகள் சீராக இருக்கின்றன! இது ஒரு 'காதல்' பாட்டுதான் -ஆனால் பிறவி அலைமீது நம்பிக்கை வைத்துப் பாடியது. தற்காலச் சினிமாவில் காதல் கத்திரிக்காய் வியாபாரம் போல் சித்தரிக்கப்படுகிறது. இது இந்தியப் பண்பாட்டிற்கே, தமிழ்ப் பண்பாட்டிற்கே செய்யும் துரோகமாகும். நமது சங்க இலக்கியம் படித்தவர்களுக்கு- தொல்காப்பியம், குறள் படித்தவர்களுக்கு- காதலின் அருமை புரியும். அதுவும் ஊழ்வினை வயப்பட்டதே ! கயவர்கள் கவர்ச்சிக்கு இடும் பெயரல்ல! இதை எவ்வளவு அருமையாக விளக்கிவிட்டார் கவிஞர் !
இதை எழுதியவர் அஸத் போபாலி. Asad Bhopali. மறு பிறவி பற்றி இப்படி எழுதியவர் முஸ்லிம் என்றால் நம்ப முடிகிறதா ! இதுவே ஹிந்துத்வா! பொதுவான இந்தியப் பண்பாடு! படம்: உஸ்தாதோ (ன்) கே உஸ்தாத், Ustadon Ke Ustad. 1963.
( இதே படம் தமிழில் வல்லவனுக்கு வல்லவன் என்று வந்தது.1965. அதில் எல்லாம் ஹிந்தி பாடல் மெட்டே. இந்தப் பாடல் வந்த இடத்தில் "ஓராயிரம் பார்வையிலே " என்ற பாடல் இடம் பெற்றது. ) பிறவி எங்கே, பார்வை எங்கே !
தாய்மை
தாய்மையின் சிறப்பைப் பற்றி எவ்வளவோ எழுதிவிட்டார்கள்.
" இந்தியாவில் பெண்மை தாய்மை என்ற நிலையில் முழு மதிப்பும் பெறுகிறது " என்றார் ஸ்வாமி விவேகானந்தர். இது உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத சிறப்பு. பெண்மையைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் தாய்மையைப் போற்றுவதில்லை! பெண்மை தாய்மையில் நிறைவு பெறுகிறது என்று நம்பவில்லை, இதைப் பற்றிப் பல பாடல்கள் இருந்தாலும், ஒரு சிறந்த பாடலைப் பார்ப்போம்.
Almostallthetruth.com
उस को नहीं देखा हमने कभी
पर इसकी ज़रूरत क्या होगी
ऐ माँ, ऐ माँ तेरी सूरत से अलग
भगवान की सूरत क्या होगी, क्या होगी
उस को नहीं देखा हमने कभी…
पर इसकी ज़रूरत क्या होगी
ऐ माँ, ऐ माँ तेरी सूरत से अलग
भगवान की सूरत क्या होगी, क्या होगी
उस को नहीं देखा हमने कभी…
உஸ் கோ நஹீ தேகா ஹம்னே கபீ
பர் ஈஸ்கீ ஜரூரத் க்யா ஹோகீ
ஏ மா, ஏ மா தேரீ ஸூரத் ஸே அலக்
பகவான் கீ ஸூரத் க்யா ஹோகீ, க்யா ஹோகீ
உஸ் கோ நஹீ தேகா ஹம்னே கபீ
அவரை நாம் ஒருபோதும் பார்த்ததில்லை!
ஆனால் பார்க்கவேண்டிய அவசியம்தான் என்ன?
அம்மா, அம்மா - உன் முகத்திலிருந்து வித்தியாசமாகவா
கடவுளின் முகம் இருக்கப்போகிறது!
வித்தியாசமாகவா இருக்கப்போகிறது!
நாம் அவரை என்றும் பார்த்ததில்லை !
इनसान तो क्या देवता भी
आँचल में पले तेरे
है स्वर्ग इसी दुनिया में
कदमों के तले तेरे
ममता ही लुटाये जिसके नयन, हो…
ममता ही लुटाये जिसके नयन
ऐसी कोई मूरत क्या होगी
ऐ माँ, ऐ माँ तेरी…
आँचल में पले तेरे
है स्वर्ग इसी दुनिया में
कदमों के तले तेरे
ममता ही लुटाये जिसके नयन, हो…
ममता ही लुटाये जिसके नयन
ऐसी कोई मूरत क्या होगी
ऐ माँ, ऐ माँ तेरी…
இன்ஸான் தோ க்யா தேக்தா பீ
ஆன்சல் மே பலே தேரே
ஹை ஸ்வர்க் இஸீ துனியாமே
கத்மோ கே தலே தேரே
மம்தா ஹீ லுடாயே ஜிஸ்கே நயன், ஹோ...
மம்தா ஹீ லுடாயே ஜிஸ்கே நயன்
ஐஸீ கோயீ மூரத் க்யா ஹோகீ
ஏ மா, ஏ மா, தேரீ ஸூரத்.....
மனிதனால் என்னதான் பார்க்க முடியும்?
உன் முந்தானையில் வளர்ந்தது போதாதா?
உன் காலடியில் இந்த பூமியிலேயே
ஸ்வர்கம் இருக்கிறது. வேறு என்ன பார்க்க வேண்டும்?
தாய்மையைக் காட்டும் அந்தக் கண்கள் -
அதைப்போன்ற வேறு மூர்த்தி ஏது இருக்கும்?
क्यों धूप जलाये दुखों की
क्यों ग़म की घटा बरसे
ये हाथ दुआओं वाले
रहते हैं सदा सर पे
तू है तो अंधेरे पथ में हमें, हो…
तू है तो अंधेरे पथ में हमें
सूरज की ज़रूरत क्या होगी
ऐ माँ, ऐ माँ तेरी…
क्यों ग़म की घटा बरसे
ये हाथ दुआओं वाले
रहते हैं सदा सर पे
तू है तो अंधेरे पथ में हमें, हो…
तू है तो अंधेरे पथ में हमें
सूरज की ज़रूरत क्या होगी
ऐ माँ, ऐ माँ तेरी…
க்யூ(ன்) தூப் ஜலாயே துகோ(ன்0 கீ
க்யூ கம் கீ கடா பர்ஸே
யே ஹாத் துவாவோ வாலே
ரஹதே ஹை ஸதா ஸர் பே
தூ ஹை தோ அந்தேரே பத் மே ஹமே, ஹோ..
தூ ஹை தோ அந்தேரே பத் மே ஹமே
ஸூரஜ் கீ ஜரூரத் க்யாஹோகி
ஏ மா, தேரீ ஸூரத்....
துக்கம் என்ற தூபத்தை ஏன் ஏற்றவேண்டும் ?
கஷ்டம் என்று ஏன் கண்ணீர் விடவேண்டும்?
தலைமீது சதா கைகூப்பித் தொழுகிறீர்கள் -
நீங்கள் இருண்ட பாதையில் செல்கிறீர்கள்.
எங்களுக்கு சூரிய ஓளிக்கு என்ன அவசியம் வந்தது?
அம்மா, உன் முகத்தைவிட
பகவானின் முகம் வேறாகவா இருக்கும்?
कहते हैं तेरी शान में जो
कोई ऊँचे बोल नहीं
भगवान के पास भी माता
तेरे प्यार का मोल नहीं
हम तो यही जाने तुझसे बड़ी, हो…
हम तो यही जाने तुझसे बड़ी
संसार की दौलत क्या होगी
ऐ माँ, ऐ माँ तेरी…
कोई ऊँचे बोल नहीं
भगवान के पास भी माता
तेरे प्यार का मोल नहीं
हम तो यही जाने तुझसे बड़ी, हो…
हम तो यही जाने तुझसे बड़ी
संसार की दौलत क्या होगी
ऐ माँ, ऐ माँ तेरी…
கஹதே ஹை தேரீ ஷான் மே ஜோ
கோயீ ஊஞ்சே போல் நஹீ
பகவான் கே பாஸ் பீ மாதா
தேரே ப்யார் கா மோல் நஹீ
ஹம் தோ யஹீ ஜானே துஜ்ஸே படீ, ஹோ....
ஸம்ஸார் கீ தௌலத் கயா ஹோகீ
யே மா, யே மா, தேரீ ஸூரத்.......
உன்னுடைய மஹிமையைவிட
உயர்ந்த வார்த்தை எதுவும் இல்லை என்கிறார்கள்
அம்மா! பகவானிடம் கூட
உன் அன்பிற் கேற்ற மதிப்பு இல்லை!
இந்த உலகின் செல்வமெல்லாம் -
உன்னைவிடப் பெரியதில்லை என்பதை நாம் அறிவோம்!
அம்மா, உன்முகத்தைவிட
பகவானின் முகம் என்ன வேறாகவா இருக்கப்போகிறது?
தாயின் பெருமை பற்றி இதைவிடச் சிறந்த பாடல் இருந்தால் சொல்லுங்கள் !
இதை எழுதியவர் மஜ்ரூ சுல்தான்புரி- இவரும். முஸ்லிம் கவிஞர், படம் Dadi Maa.1966
ஹிந்துத்வா எந்த அளவுக்கு இந்த மண்ணில் ஊறியிருக்கிறது ! அரசியல் அசிங்கங்கள் குட்டை குழப்புகின்றன !
[ மேலை நாகரீகத்தின் பிடியில் இந்தியாவிலும் நிலைமை மாறிவருகிறது.]
ஹிந்துத்வா எந்த அளவுக்கு இந்த மண்ணில் ஊறியிருக்கிறது ! அரசியல் அசிங்கங்கள் குட்டை குழப்புகின்றன !
[ மேலை நாகரீகத்தின் பிடியில் இந்தியாவிலும் நிலைமை மாறிவருகிறது.]
No comments:
Post a Comment