2. அருணகிரிநாதர் காட்டிய பாதை
Annamalai Hill and Temple.
By Govind Swamy (Own work) CC BY-SA 3,0 creativecommons via Wikimedia commons.
அருணகிரி நாதர் அருள் பெற்ற இடம்.
பல கடவுள்கள், பல கொள்கைகள்!
நமது ஹிந்து மதம் அ நாதி காலமாக இருந்து வருவது. பலவித கருத்துக்கள், கொள்கைகள், வழிபடும் தெய்வங்கள். வழிபாட்டு முறைகள், சாதனை நெறிகள் ஆகியவை தொன்றுதொட்டே இருந்துவருகின்றன. நமது ஞானிகள் ஆத்ம அனுபவத்தையே வற்புறுத்தினார்கள்'. அதனால் கொள்கைகளை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. எந்த ஒரு நிலையையும் அழிக்கவில்லை.அனுபவம் இல்லாதவர்கள் தான் ஏதோஒரு கொள்கையைப் பிடித்துக்கொண்டு கூத்தாடுகிறார்கள்.
உள்ளதாம் பொருள் ஒன்றுதான். அதைத்தேடி உணர்ந்து ஓதுவது வேதம். 'உள்ளது ஒன்றே; ஞானிகள் அதைப் பலபெயரிட்டு வழங்குகிறார்கள்' ஏகம் ஸத், விப்ரா பஹுதா வதன்தி' என்று வேதம் முழங்குகிறது. ஆனாலும் நாளடைவில் பெயரைக் கொண்டும், அதன் மீது எழுந்த கருத்துக்களைக் கொண்டும் பூசல்கள் தோன்றிவிட்டன.
உப நிஷதங்கள், ப்ரஹ்ம ஸூத்ரம், பகவத் கீதை ஆகிய மூன்றும் நம் மதத்திற்கு ஆதார மான நூல்கள். இவற்றை 'ப்ரஸ்தான த்ரயம்' என்பார்கள். ஆனால் இவற்றிற்கு பெரியவர்கள் அளித்த வ்யாக்யானத்தின் மீதே பலவிதமான தத்துவக் கோட்டைகள் எழுப்பப் பட்டு விட்டன. சிவ,விஷ்ணு, சக்தி ஆகிய தெய்வங்களை வைத்தும், த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய தரிசனங்களை வைத்தும் சர்சைகளும் பூசல்களும் நிகழ்ந்தவண்ணமாகவே இருக்கிற்து. இவை ஒவ்வொன்றிற்குள்ளும் எத்தனையோ பிரிவுகள்! தலை சுற்றும்!
ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று நாம் சொல்லிக் கொண்டாடினாலும், அவர்களும் சிவவிஷ்ணு பேதத்திற்கு உட்பட்டே இருந்தார்கள். த்வேஷம் என்று இல்லாவிட்டாலும், பேதம் நிச்சயமாக இருந்தது.. முதல் மூன்று ஆழ்வர்கள் ஓரளவு சமரச பாவம் கொண்டிருந்தனர்., பிற்பாடு இந்த நிலை நீடிக்கவில்லை.
ஆனால் சைவ மரபில் வந்த பட்டினத்தார், தாயுமான ஸ்வாமிகள், வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் போன்ற மஹான்கள் எல்லா சமய, தத்துவ நிலைகளையும் கடந்து மிகவுயர்ந்த மோனப்பெருவெளி நிலையை அடைந்தார்கள். அண்மைக் காலத்தில் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள் ஆகியவரிடத்தில் இந்த நிலையைப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் முன்னோடியாக தமிழ் நாட்டில் திகழ்ந்தவர் அருணகிரிநாத ஸ்வாமிகள்.
தத்துவங்களினால் குழப்பம்
தத்துவப் பூசல்களில் ஈடுபடாமலும், சமய வம்பு தும்புகளில் சிக்காமலும் எல்லாவற்றிலும் சமரச நிலையில் இருந்தவர் அருணகிரி நாதர். முருகரால் ஆட்கொள்ளப்பட்டு மிகத்தீவிர முருக பக்தராக இருந்தாலும் பிற தெய்வங்களை நிந்திக்காதது மட்டுமில்லை- அவர்களை மனமார ,வாயாரப் புகழ்ந்தும் பாடியிருக்கிறார். இதிலிருந்தே அவர் உண்மையாகவே கடவுள் அனுபவம் அடைந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
உயிர், , இறைவன்- உலகம்- ஜீவ, ஈச்வர, ஜகத்- என்ற இந்த மூன்று விஷயங்களை வைத்துத்தான் அத்தனை தத்துவ வாதங்களும் தோன்றியுள்ளன. அறிவுள்ள மனிதன் கற்பனைக் குதிரையிலேறி அதைத் தட்டிவிட்டால், அது வாயுவேகம், மனோவேகத்தில் சென்று பல கற்பனைக் கோட்டைகளைச் சிருஷ்டி செய்கிறது! இதற்கு முடிவே இல்லை. இதில் எதுவும் முழுப் பொய்யுமல்ல; முழு உண்மையுமல்ல! இது அத்தனையும் "உள்ள" பொருளைப்பற்றிய நமது கருத்துக்களே தவிர, உள்ள பொருளே அல்ல! உள்ள பொருள் மனதிற்கும் வாக்குக்கும் எட்டாதது என்றே ஞானிகள் அனைவரும் கூறுகின்றனர். அதை அனுபவத்தில் அறிந்துகொள்ளவேண்டும்.
"அவ்வாறறிவார் அறிகின்றதலால் எவ்வாறொருவர்க் கிசைவிப்பதுவே" என்கிறார் அருணகிரி நாதர். பகவான் ரமணர் இதை இவ்வாறு சொன்னார்:
உள்ளதலது வுள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொருள்
உள்ளலற வுள்ளத்தே வுள்ளதால்--உள்ளமெனும்
உள்ள பொருள் வுள்ளல் எவன் வுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ளல் உணர்.
(உள்ளது நாற்பது, மங்கலம்-1.)
தத்துவக் கணக்குகள்
இந்த உலகம் இத்தனை தத்துவங்களால் ஆனது என்று பல விதமாகக் கணக்கிடுகின்றனர். 24 தத்துவம். 36 தத்துவம், 96 தத்துவம் என்று பல விதமாகச் சொல்லுகிறார்கள். அருணகிரி நாதர் நம் வகையைச் சார்ந்தவர் போலும்! அவருக்கு இந்தக் கணக்கெல்லாம் வராது போலும்! 'ஆண்டவனே! நீ எல்லாவிதமான கணக்கு வழக்கிற்கும் அப்பாற்பட்டவன் இல்லையா! அந்த பொருளை நீ தரவேண்டும்' என்று வேண்டிக் கொள்கிறார்!
ஆறாறையும் நீத் ததன் மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறு மாறுளதோ
(கந்தரனுபூதி)
நாலான வேத நூலாகமாதி
நான் ஓதினேனும் இலை வீணே
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில்
ஞானோபதேசம் அருள்வாயே
(விராலிமலைத் திருப்புகழ்)
தெய்வ அருளை விழைபவர்கள் இந்தத் தத்துவக் கணக்கு வழக்கை எல்லாம் விட்டுத் தொலைக்க வேண்டும்! நம் கணக்கை எல்லாம் நம் சாமியே வைத்துக் கொள்கிறார்!
தகப்பன் சாமி என வரு பெருமாளே!- புவிதனில்
எனக்குண்டாகு பணிவிடை
கணக்குண்டாதல் திருவுளம் அறியாதோ!
நாம் தத்துவ வாதம் என்னும் பாழுங்கிணற்றில் விழாமல் இருக்கவேண்டும்.
யோகம் எத்தனை யோகமோ!
யோகம் என்பது நமது ஆஸ்தீக தரிசனங்கள் ஆறில் ஒன்றாகும். இதை வகுத்துத் தந்தவர் பதஞ்சலி முனிவர். ஆனால் அவர் வகுத்தமுறை ராஜயோகம் எனப்படும். ஸ்வாமி விவேகானந்தர் இதைப்பற்றி அமெரிக்காவில் பேசியபிறகு இந்தியாவிலும் படித்த வர்கத்தினரிடையே இது ப்ரபல மடைந்துவிட்டது. ஆனால், இது தவிரவும், கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம். என்ற முப்பெரும் பிரிவுகளும் உள்ளன. ஆனால் இன்று யோகம் என்கிற பொதுப்பெயரால் உலகம் முழுவதும் பரவி வருவது ஹடயோகம் என்ற பிரிவாகும். உடலை வலுப்படுத்துவதைக் குறியாகக்கொண்ட இதில் பல ஆசனங்களும் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி முறைகளும் அடங்கும்.
இந்த மூச்சுப் பயிற்சியைப் பற்றி நம்மவரிடையே பல வினோதமான கருத்துக்கள் உண்டு. 'ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக இத்தனை மூச்சு விடுகிறான், அந்த எண்ணிக்கையைக் குறைத்தால் அவன் வாழ் நாளை நீடிக்கச் செய்யலாம்' என்னும் எண்ணம் அல்லது கணக்குதான் இங்கும் வேலை செய்கிறது!
கால் பிடித்துமூலக் கனலை மண்டலத்தின்
மேலெழுப்பின் தேகம் விழுமோ பராபரமே
-------தாயுமானவர்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றைப் பிடிக்கும் குறியதுவாமே
------------திருமூலர், திருமந்திரம்
திருமூலர் காலத்தினால் முற்பட்டவர். அவர் பெயரில் வழங்கும் திருமந்திரம் சைவத்திருமுறைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது பலவகையிலும் பொருளால் வேறுபடுகிறது.. மூவர் தேவாரமும் திருவாசகமும் தெய்வ அருளைப்பற்றி மட்டுமே பேசுகின்றன. வேறுவிதமான மந்திர, தந்திரங்களுக்கு அவற்றில் இடமில்லை. மேலும் அவை அம்மையை அப்பனுடன் சேர்த்தே சொல்லுகின்றன- தனியான தேவி வழிபாடு அவற்றில் இல்லை. இந்த விஷயங்களில் திருமந்திரம் முற்றும் மாறுபடுகிறது. மேலும் திருமந்திரத்தின் மொழி நடையும், பொருள் செறிவும் ஒரே சீராக இல்லை. பல சொற்கள் சங்கேதக் குறிகளாக உள்ளன. அவற்றுக்கு நேரடியாகப் பொருள் காண முடியாது. இதனாலெல்லாம், இதில் வருவதை அப்படியே எற்றுக் கொள்வது சிரமம்.
ஞானியான தாயுமானவர் மூச்சைப்பிடித்து , தேகம் விழுவதைத் தடுப்பதைப் பற்றிப் பாடினார் என்பதே ஆச்சரியமான விஷயம்! இப்படி 'தேகம் விழுமோ' என்று கேட்டவர்களின் தேகமும் விழுந்துதானே விட்டது!
அருணகிரி நாதர் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை.இவர்களைப் பார்த்து அருணகிரி பரிதாபப் படுகிறார்!
காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதன் மிக எளிதே விழிநாசிவைத்து
மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே.
(கந்தரலங்காரம்)
தான் இத்தகைய "அசட்டு யோகி யாகாமல்" இருக்கவேண்டும் என்று ஒரு பாடலில் வேண்டிக் கொள்கிறார்.
வீண் வாதங்கள்
ஹட யோகத்தை நிராகரித்த அருணகிரி, மற்ற யோகங்களைப் பற்றியும் உஷாராகவே இருக்கிறார்.இறைவனை அடைவது ஒன்றே குறிக்கோள். எனின், நேரான வழியை விட்டு ஏன் போகவேண்டும்?
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக்
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ்
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய்
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய்
களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக்
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ்
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய்
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய்
மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே(வயலூர் திருப்புகழ்)
முருகன் அருளிய ஞானம்
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்
(மதுரைத் திருப்புகழ்)
பக்தியே நேர் வழி
இதற்கெல்லாம் ஆதாரமாயிருந்தது எந்த மந்திர தந்திரமும் இல்லை. அருணகிரி நாதரின் ஒரே வழி நேரான பக்தி ஒன்றுதான்.
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
பக்திசெய்து முக்தி பெறுவது ஒன்றே அருணகிரி அறிந்த தந்திரம்,, ஜால வித்தை!
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றி லேன்
புத்தியினாலே நம் சுவாமி தாள்களில் பக்தியைப் பற்ற வேண்டும் அந்த பக்தியே முக்தியில் சேர்க்கும்.
ஆனால் இதுவும் தவறுதான், முக்தியில் சேர்ப்பதாவது! பக்தியே தான் .முக்தி.
இதுதான் அருணகிரி நாதரின் முடிந்த கருத்து! ஏனெனில் இது நமது ஸ்வாமியே சொல்லிக் கொடுத்த பாடம்!
ஆன பயபக்தி வழிபாடு பெரு முக்தி யது
வாக நிகழ் பத்த சன வாரக்காரனும்
அநுபூதி அடைவித்ததொரு பார்வைக்காரனும்
மேதகு குறத்தி திரு வேளைக்காரனே.
அவர் அத்துடன் நிற்கவில்லை. நமக்குத் தேவையானதனைத்தையும் அவரே அறிவித்தார்!
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறி என இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியனும்
வேடிச்சி காவலனே.
வயலூர்ப் பெருமான்.
பொறுமையும் ஒழுக்கமும் இல்லாதவர்களும், ஆடம்பர மாக ஆரவாரத்துடன் தர்க்கம் புரிகின்றவர் களுமான மனிதர் களினால் சோர்வு அடைந்து மடிந்துபோகாமல் இருக்கவேண்டும்.இத்தகைய ஞானத்தைக் கேட்ட அருணகிரியாருக்கு முருகன் அருள் செய்தான்! ஞானம் வழங்கினான்! அதை ஒரு பாடலில் சொல்கிறார்!
மந்திர வாதம் செய்யும் இழிந்த நிலையில் உள்ளவர்கள் பலவிதமான சாகசப் பேச்சுக்களைப்பேசி. கொண்டாட்டம் போட்டு பலவித கர்மங்களில் ஈடுபடுத்துகின்றனர்.. இவற்றில் சிக்கி மடியாமல் இருக்கவேண்டும்.
பல மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் தத்தமக்குரிய ஆசாரக் கட்டுப்பாடுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவற்றில் சிக்கி மடியாமல் இருக்கவேண்டும்.
உருவ வழிபட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் சரியை, கிரியை, யோகம், என்று பல நியமங்களைப் பின் பற்றுகிறார்கள். இவற்றிலும் சிக்கி மடியாமல் இருக்கவேண்டும்.இவ்வாறு இத்தகைய சலனங்கள் எதுவும் இல்லாமல் நேரான ஞானத்தை வயலூரில் வாழும் தேவர் தம்பிரானே, நீ எனக்கு அருள்வாயாக.
முருகன் அருளிய ஞானம்
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்
(மதுரைத் திருப்புகழ்)
மிகுந்த கூச்சல்போட்டு, இரைந்துபேசி கண்ட கண்ட பேர்களுடன் சமயக்குற்றங்களைப்பற்றி வாதச்சண்டையிடுவோர்கள்உரத்த குரலில் குற்றம் குறையுள்ள பேச்சுக்களை கோபம் மிகுந்த சொற்களினாலே பேசுகிறார்கள். அவற்றுக்கு ஆதரமானவை பொய்ச்சாத்திர நூல்கள். .
இத்தகைய நிலை எனக்கு ஏற்படாமல் அவையெல்லாம் ஒழிந்துவிட்டன .என்மீதான ஐம்புலன்களின் ஆதிக்கமும் நீங்கி விட்டது.. (என்மீது அவற்றின் செயல்கள் நீங்கி விட்டன)மேலும், என்றுமே ஓய்வில்லாமல் அலையும் மனமாகிய அந்தக்கரணமும் செயல் அற்று ஓய்ந்து விட்டது.
நீ செய்து அருளிய உபதேசத்தின் பெருமையைத்தான் என்னென்று சொல்லுவது! ஒரே ஆச்சரியம்!
பக்தியே நேர் வழி
இதற்கெல்லாம் ஆதாரமாயிருந்தது எந்த மந்திர தந்திரமும் இல்லை. அருணகிரி நாதரின் ஒரே வழி நேரான பக்தி ஒன்றுதான்.
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
பக்திசெய்து முக்தி பெறுவது ஒன்றே அருணகிரி அறிந்த தந்திரம்,, ஜால வித்தை!
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றி லேன்
புத்தியினாலே நம் சுவாமி தாள்களில் பக்தியைப் பற்ற வேண்டும் அந்த பக்தியே முக்தியில் சேர்க்கும்.
ஆனால் இதுவும் தவறுதான், முக்தியில் சேர்ப்பதாவது! பக்தியே தான் .முக்தி.
இதுதான் அருணகிரி நாதரின் முடிந்த கருத்து! ஏனெனில் இது நமது ஸ்வாமியே சொல்லிக் கொடுத்த பாடம்!
ஆன பயபக்தி வழிபாடு பெரு முக்தி யது
வாக நிகழ் பத்த சன வாரக்காரனும்
அநுபூதி அடைவித்ததொரு பார்வைக்காரனும்
மேதகு குறத்தி திரு வேளைக்காரனே.
அவர் அத்துடன் நிற்கவில்லை. நமக்குத் தேவையானதனைத்தையும் அவரே அறிவித்தார்!
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறி என இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியனும்
வேடிச்சி காவலனே.
No comments:
Post a Comment