Thursday, 7 July 2016

38. கலிகாலம் நம்ம கிரகச்சாரம் ?


38. கலிகாலம் நம்ம கிரகச்சாரம்?

"உள்ளே விகாரம்  வெளியே அபாரம்
உலகெல்லாம் வீண் டம்பாசாரம்......
டிப்புடாப்பு டகல்டூப்பு டமாரம்
கலிகாலம் நம்ம கிரகச்சாரம் "

என்று 60 வருஷங்களுக்குமுன் தஞ்சை ராமையதாஸ் ஒரு சினிமா பாடலில் சில வரிகள் எழுதினார்! இது ஒரு வேஷதாரி பிச்சைக்கார கோஷ்டி பாடும் பாடலாக வரும்.


சரித்திரத்தைப் பார்த்தால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலத்திலும் சில அறிஞர்களும் ஞானிகளும் "காலம் கெட்டுவிட்டது " என்றே சொல்லி வந்திருக்கிறார்கள். அதற்கு பலவித காரணங்களைச் சொல்வார்கள். சிலர்  கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்பார்கள் ; சிலர் மக்கள் குணம்கெட்டு அலைகிறார்கள் என்பார்கள்; சிலர் அரசன் மதியிழந்துவிட்டான் என்பார்கள். 2000 வருஷங்களுக்கு முந்திய ரோம சாம்ராஜ்யத்தில்  " ஐயோ! இந்தியாவிலிருந்து உல்லாசப் பொருள்களை இறக்குமதிசெய்து , அதற்கு விலையாக நமது தங்கம் போகிறது; கஜானாவே காலியாகிறது " என்று அரசியல்வாதிகள் அலறினார்கள்!



By the time of Augustus up to 120 ships set sail every year from Myos Hormos to India. Rome used so much gold for that trade, and apparently recycled by the Kushans for their own coinage, that Pliny (NH VI.101) complained about the drain of specie to India:
"India, China and the Arabian peninsula take one hundred million sesterces from our empire per annum at a conservative estimate: that is what our luxuries and women cost us. For what percentage of these imports is intended for sacrifices to the gods or the spirits of the dead?" 
From: www.newworldencyclopedia.com.





புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய தங்க நாணயங்கள். 37-78 AD
By Uploadalt (Own Work, Photographed at British Museum) CC BY-SA 3.0 creativecommons via Wikimedia Commons.


 18வது நூற்றாண்டு ஃப்ரான்ஸ் நாட்டில் "பிரபுக்கள் வரி செலுத்துவதில்லை; மத குருமார்கள் பிரார்த்தனை செய்வதில்லை; இரண்டு சுமையும் பொதுமக்கள் மீதே விழுகிறது " என்று சிலர் புரட்சி செய்தார்கள். புரட்சி என்ற பெயரில் வன்முறை பரவியது; பலர் உயிரிழந்தனர். பிறகு நிலை மேலும் மோசமாகியது!

கடந்த 300 வருஷங்களாக  "முன்னேற்றம் " என்ற முனைப்பு நம்மைப் பிடித்து ஆட்டி வருகிறது. எது முன்னேற்றம், எப்படி முன்னேறுவது என்பதில் கருத்தொருமை இல்லை. இருப்பதை மாற்றுவதே முன்னேற்றம் என்ற நிலை உருவாகிவிட்டது.

  • My attitude toward progress has passed from antagonism to boredom. I have long ceased to argue with people who prefer Thursday to Wednesday because it is Thursday.” G.K.Chesterton– New York Times Magazine, 2/11/23


 'இயற்கை நியதி, கடவுள் அமைத்த ஏற்பாடு என்றெல்லாம் எதுவும் இல்லை; எல்லாம் மனிதன் உருவாக்கியதுதான்; மனித  முயற்சியினால் வருவதுதான், நம்மால் முடியாதது எதுவும் இல்லை; நம் முயற்சிக்கு எல்லையே இல்லை ' என்பது முன்னேற்ற வாதிகளின் அடிப்படைக் கருத்து.







விஞ்ஞானம், தொழில் நுட்பம், பொருளாதார வளர்ச்சி என்பவை இதன் அடிப்படைக் கருவிகள். வியக்க வைக்கும் விஞ்ஞான வளர்ச்சி, திகைக்க வைக்கும் தொழில் நுட்பங்கள் , பெருகிவரும் கல்வி வசதிகள், மருத்துவ முன்னேற்றம், வாழ்க்கையை வளமாக்கும் பலவித சாதனங்கள், பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் புள்ளி விவரங்கள் என்று முன்னேற்ற வாதிகள் முழங்குகிறார்கள். மீடியாகாரர்கள் இவர்களுக்கு ஒத்து ஊதுகிறார்கள்,  தூபம் போடுகிறார்கள்.


ஆனால் இது ஒவ்வொன்றையும்  கூர்ந்து, ஆழ்ந்து பார்க்கும் அறிஞர்கள் இதில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்:

  • அண்டகோளத்தை ஆராயும் விஞ்ஞானிகள், அது முடிவில்லாமல்  போவதைக்கண்டு  வியக்கிறார்கள்.
Wikimedia commons.

  • அணுவை ஆராயும் விஞ்ஞானிகள் , அதற்குள் 'பொருள்' என்று எதுவும் இல்லை; எல்லாம் 'சக்தி'யின் வெளிப்பாடு என்று உட்கார்ந்துவிட்டார்கள்.
  • Matter and Energy really aren’t in the same class and shouldn’t be paired in one’s mind.
  • Matter, in fact, is an ambiguous term; there are several different definitions used in both scientific literature and in public discourse.  Each definition selects a certain subset of the particles of nature, for different reasons.  Consumer beware!  Matter is always some kind of stuff, but which stuff depends on context.
  • Energy is not ambiguous (not within physics, anyway).  But energy is not itself stuff; it is something that all stuff has.  
From: https://profmattstrassler.com.

  • மேலாகப் பார்த்தால், மருத்துவம் 'முன்னேறி' யிருக்கிறது: வியாதிகளுக்குப் புதிய அணுகுமுறைகள், சிகிச்சை முறைகள் என்று பெருகியிருக்கிறது. ஆனால், அவை பலருக்கும் எட்டாத விலையில் இருக்கின்றன. ஹ்ருதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் எடை கூடுதல் போன்ற 'நாகரீக' வியாதிகள் பெருகிவருகின்றன. புற்று நோயும் பரவலாக இருக்கிறது. இன்னும் புதிய  நோய்கள் கிளம்பிய வண்ணமிருக்கின்றன. இவற்றின் காரணமும், அதற்கான சரியான மருந்தும் யாருக்கும் தெரியவில்லை. பல நோய்களுக்கு இவர்கள் கொடுத்த " ஆன்டிபயோடிக்" மருந்துகள் அந்நோய்க் கிருமிகளுக்கு சத்துணவாக மாறிவிட்டன, இனி இம்மருந்துகள் வேலை செய்யா என்ற பயங்கர நிலை உருவாகிவிட்டது.

We may live longer but we also get more ill than ever -- and then there's the threat of antibiotic resistant bacteria. What are the challenges to modern medicine? We asked the scientists. (Photo: Colourbox
From: sciencenordic.com



  •  இவற்றில் எந்த  நோயையும் தடுக்கும் அறிவோ, ஆற்றலோ, அக்கறையோ யாருக்கும் இல்லை! இது தவிர , இத்துறையில் பல தில்லுமுல்லுகள். என்ன கேவலம்! மருத்துவர்களா இவர்கள்,,  மதி கெட்ட ஜென்மங்கள் !
  • கல்வி பெருகிவிட்டது, உண்மை.  தடுக்கி விழுந்தால், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ! பாதிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு சரியாக எழுதப் படிக்கவே தெரியவில்லை! இந்தியப் பட்டதாரிகளில் (இஞ்சினீயர் உட்பட) பாதிப்பேர் எந்த வேலைக்கும் தகுதியற்றவர்கள்  என்று  பத்திரிகைகளிலேயே வந்துவிட்டது! எந்த பட்டத்தையும் யாரும் இன்று அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை!

According to Aspiring Minds National Employability Report, which is based on a study of more than 1,50,000 engineering students who graduated in 2015 from over 650 colleges, 80% of the them are unemployable. PTI, January 24, 2016.
According to Varun Aggarwal, CTO and co-founder of employability evaluation company Aspiring Minds, most engineering-graduates in India lack basic numerical, logical and communication skills, which impacts their employability
"In IT industry, if you write a program of 15-20 lines, companies will hire you. Similarly, in the electronics industry, if you know the application of basic Kirchhoff's law and assemble a circuit accordingly, the industry recruits you. But students are unable to perform even when tested on such basic parameters," Aggarwal told Business Today in an interview. [ Business Today, February 22, 2016 ]


  •  நமது வசதிகளைப் பெருக்கி, உழைப்பைக் குறைக்கும் பல சாதனங்கள் பெருகிவிட்டது உண்மைதான். ஆனால் இதன் பின் விளைவுகள் என்ன?  நாம் இச்சாதனங்களுக்கு அடிமையாகிவிட்டோம். குளிக்கும்போதும் செல்ஃபோன்! அவற்றின் தீய விளைவுகளைக் கண்டுகொள்வதில்லை.அவற்றை  மீண்டும் மீண்டும் வாங்க  [புதிய மாடல் ] மேலும் மேலும் சம்பாதிக்கவேண்டிய  நிலை. அவை பழுதுபட்டால் அதனால் விளையும் நஷ்டம் ஒரு புறம் இருக்க, அவற்றைத் தூக்கியெறிவதால்  சமூகத்திற்கு  நேரும் கேடு- இவற்றை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

In far-flung, mostly impoverished places like Agbogbloshie, Ghana; Delhi, India; and Guiyu, China, children pile e-waste into giant mountains and burn it so they can extract the metals — copper wires, gold and silver threads — inside, which they sell to recycling merchants for only a few dollars. In India, young boys smash computer batteries with mallets to recover cadmium, toxic flecks of which cover their hands and feet as they work. Women spend their days bent over baths of hot lead, “cooking” circuit boards so they can remove slivers of gold inside. Greenpeace, the Basel Action Network and others have posted YouTube videos of young children inhaling the smoke that rises from burned phone casings as they identify and separate different kinds of plastics for recyclers. It is hard to imagine that good health is a by-product of their unregulated industry.
- Report from New York Times, May 4, 2013.

Discarded mobile phones for landfills? 

யாதனின் யாதனின் நீங்கியான்  நோதல்
அதனின் அதனின் இலன்

என்று வள்ளுவர் பிரான் சொன்னது சமூகத்திற்கும் எவ்வளவு பொருந்தும்!


  • விஞ்ஞானம், தொழில் நுட்பம் என்பவை முக்காலும் ராணுவத்திற்கு உதவும் வகையிலேதான் உருவாயின. பல நாடுகளின் பொருளாதாரமும் இத்துடன் சம்பந்தப்பட்டதுதான். 



















 இதை அன்றைய அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவர்  "Military Industrial Complex " என்று  1961ல் குறிப்பிட்டார்.. இன்றும் இந்த நிலை மாறவில்லை.







This conjunction of an immense military establishment and a large arms industry is new in the American experience. The total influence — economic, political, even spiritual — is felt in every city, every statehouse, every office of the federal government. We recognize the imperative need for this development. Yet we must not fail to comprehend its grave implications. Our toil, resources and livelihood are all involved; so is the very structure of our society. In the councils of government, we must guard against the acquisition of unwarranted influence, whether sought or unsought, by the military–industrial complex. The potential for the disastrous rise of misplaced power exists, and will persist. We must never let the weight of this combination endanger our liberties or democratic processes. We should take nothing for granted. Only an alert and knowledgeable citizenry can compel the proper meshing of the huge industrial and military machinery of defense with our peaceful methods and goals so that security and liberty may prosper together.


இத்தகைய விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியினால் இறுதியாக என்ன சாதித்திருக்கிறார்கள் ?

- பல நாடுகள் அணு, ஹைட்ரஜன் ஆயுதங்களைக் குவித்து
வைத்திருக்கின்றன.
- பல நாடுகள் சமாதானத்திற்கு அணு என்ற பெயரில் அணுமின் நிலையங்களை அமைத்திருக்கின்றன. இவற்றிலிருந்து வரும் கதிரியக்க அபாயம் பற்றி யாரும் மக்களுக்குச் சொல்வதில்லை. இவற்றிலிருந்து வெளிவரும் கழிவுப் பொருள்கள் [  Atomic waste ]  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தன்மை கொண்டதாக இருக்கின்றன. இவற்றை எப்படி சமனம் செய்வது அல்லது பாதுகாத்து வைப்பது என்று எந்த விஞ்ஞானிக்கும் தெரியாது! இதற்கான வழி இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இருந்தாலும் விஞ்ஞானி என்ற போர்வைக்குள் பதுங்கிய இந்தப் பேய்கள் மேலும் மேலும் அணுமின் உலைகளை சிபாரிசு செய்கிறார்கள்.



ஜப்பானில் மக்கள் அணுமின் உற்பத்திக்கு எதிராக நடத்திய போராட்டம். 2011.


இத் துறையில் சம்பந்தப்பட்ட 'விஞ்ஞானி'களில் பெரும்பாலோர் இதில் தொடர்புடைய கம்பெனிகளின் கைக்கூலிகளாக இருக்கின்றனர். அரசியல்வாதிகளோ லஞ்ச நாயகர்கள். படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக்கூட  அணுசக்தியின் அபாயங்கள் பற்றிய விவரங்கள் தெரியாது.
Nuclear Power reactors release radioactivity to the air and the water on anongoing basis, even with no accident. These routine and intermittent releases of radioactivity are like a dirty secret, since they are quietly allowed by the federal regulator. It would not be possible to run the reactor without them. Such releases contribute to radiation exposures in communities both near and far from the site. Radiation standards are being consistently relaxed to allow older, leakier reactors to continue to operate

Every radiation exposure increases our risk of cancer. Nuclear energy requires that many communities be exposed as uranium is processed to fuel and fuel is used to produce waste. Many workers are contaminated and sometimes their families are exposed.
From:www.nirs.org.



- விவசாயம், உணவுப்பொருள்கள் விஷயத்தில் பல ஆயிரக்கணக்கான  செயற்கை ரசாயனப் பொருள்கள்  புகுந்துவிட்டன. இவை ஒவ்வொன்றிற்கும் சீரியசான பின்/பக்க விளைவுகள்  இருக்கின்றன;ஆனால் இவை மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. உலக அளவில் விவசாயம் சில கம்பெனிகளின் பிடியில் அடங்கிவிட்டது. இந்தியாவிலும் இந்த நிலை உருவாகிவருகிறது. 



Monsanto என்ற விவசாய-ரசாயனக் கம்பெனிக்கு எதிராக உலக அளவில்  மக்கள் போராடிவருகின்றனர். 



- நிலம், நீர், காற்று: எவையின்றி மனிதன் வாழமுடியாதோ அவை  நச்சுப்பொருள்களினால் நிறைக்கப்பட்டு விட்டன. இது தினமும் நடக்கிறது. மக்களோ மழையில் நனைந்தும் சொரணையில்லாமல் இருக்கும் எருமைபோல் இருக்கிறார்கள். நச்சுப்படுத்தும் பொருள்களின்  உற்பத்தி வளர்ச்சி என்ற பெயரில் நாளும் பெருகிவருகிறது.





இது தவிர, இன்றைய தொழில், பொருளாதார, வாழ்க்கை முறைகளினால் உலகின் சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.  இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பல நாடுகளுக்கு அழிவு ஏற்படும்  நிலை ; மழை, நீர்வளம் இவற்றில் மாறுபாடுகள்; உணவு உற்பத்தியில் தாக்கம் ஆகிய பல அபாயங்கள்  உருவாகியிருக்கின்றன. 



வெப்ப நிலையில் காணும் மாற்றங்களைக் குறிக்கும் படம். 1880க்குப் பின் 2015ம் வருஷம் தான் மிக அதிக அளவு வெப்பம் கொண்டதாக இருந்தது.

Picture from NASA/NOAA, January20, 2016.

இப்படிப் பல துறைகளிலும் நடப்பதைப் பார்த்தால்,  " உள்ளே விகாரம், வெளியே அபாரம் " என்று  தஞ்சை ராமையதாஸ் எழுதியது  இன்று தமாஷாகவா தோன்றுகிறது?

No comments:

Post a Comment