56. ஸ்ரீ உத்தவ கீதை - 1
இந்த வண்டிச்சக்கரத்தில்தான் எத்தனை மரபு விஞ்ஞான அறிவு புதைந்து கிடக்கிறது! மேலும் வியக்க வைக்கும் விவரத்திற்கு: chenthalaykuruvi.blogspot.in பார்க்க, நன்றி
ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ உத்தவ கீதை இரண்டுமே ஒரு நெருக்கடியில் எழுந்தவை. முன்னதில் அர்ஜுனனுக்கு தர்மத்தைப் பற்றிய குழப்பம்; பாபம் நேர்ந்துவிடுமோ என்கிற பயம். பின்னதில், உத்தவருக்கு பகவான் இந்த பூமியை விட்டுச் சென்றபின் எப்படி வாழ்வது என்ற கவலை. இருவரும் பகவானையே நாடுகின்றனர்.
மரபும் கல்வியும்
அர்ஜுனன் அதுவரை தன் பக்தியை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. க்ருஷ்ணருக்குத் தோழனாகவும் உறவினனாகவுமே பழகியவன். போர்முனையில் பகவானைக் கண்டுகொண்டான். உத்தவரோ, உறவினராக இருந்தும், க்ருஷ்ணரை பகவானாகவே பார்த்துப் பழகியவர். இருவருமே மரபு வழியில் கற்றுத் தேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களிலிருந்தே பகவான் விளக்குகிறார்.
இன்று இந்த மரபு வழிக் கல்வி அருகிவிட்டது- கருகி விட்டது எனலாம்.#
ஆங்கில வழிக் கல்விகற்கும் இன்றைய ஹிந்து இளைஞர்களுக்கு நமது மதத்தின் அடிப்படை விஷயங்கள் எதுவுமே தெரியாது ! இவற்றைப் போதிக்கும் பிற சாதனங்களும் நடைமுறையில் இல்லை. நிலைமை வருடாவருடம் மேலும் சீர்கெட்டு வருகிறது. எந்த விஷயமும் வெளி நாட்டினரின் ( அன்னிய மதத்தவரின் ) கருத்துப்படியே விளக்கப்படுகிறது. நமக்குள்ளும் வாத-ப்ரதிவாதங்களே மிகுந்துவிட்டன. இத்தகைய வர்களுக்கு இந்த இரண்டு கீதைகளும் இரு கண்கள் போலவாகும். இவற்றைப் பயில ஆரம்பித்தால், சினிமாவில் flashback போன்று எல்லா விஷயங்களும் தெரியவரும்.
# There are two aspects here. One is traditional method of learning such as gurukula and without reference to books. Today, even Vedic patashalas use printed books !
(This is a common enough scene in almost all Veda Patashalas. So I do not hold it against this particular institution. That is why I am not furnishing its name! )
The Second aspect is traditional subjects, besides Veda. There are innumerable such subjects of which educated Indians do not even know ! Many of our own ideas are coming back to us with new names and labels, and we pay for them!
Dr.Rajendraprasad, President being shown some rare manuscripts at Saraswati Mahal Library, Tanjore. August, 1958
கலிகாலம் என்னும் நெருக்கடி
Dr.Rajendraprasad, President being shown some rare manuscripts at Saraswati Mahal Library, Tanjore. August, 1958
கலிகாலம் என்னும் நெருக்கடி
அர்ஜுனனுக்கு ஒருவித நெருக்கடி. ஆனால் உத்தவருக்கும் நமக்கும் இன்னொருவிதமான நெருக்கடி ! அதுதான் கலிகாலம் ! ஆகவே பகவான் ஒருவித அவசரச் செய்தியைத்தான் சொல்கிறார் !
यर्ह्येवायं मया त्यक्तो लोकोऽयं नष्टमङ्गलः।
भविष्यत्यचिरात्साधो कलिनाऽपि निराकृतः।।4।।
भविष्यत्यचिरात्साधो कलिनाऽपि निराकृतः।।4।।
யர்ஹ்யேவாயம் மயா த்யக்தோ லோகோயம் நஷ்டமங்கல :
பவிஷ்யத்யசிராத் ஸாதோ கலினாபி நிராக்ருத: 11. 7.4
ஸாது உத்தவரே ! நான் இந்த உலகை விட்டு நீங்கியதும் மங்களமும் மறைந்துவிடும். பின்னர் சீக்ரமே கலியினால் ஆக்ரமிக்கப்படும்.
..........................मया त्यक्ते महीतले।
जनोऽधर्मरुचिर्भद्र भविष्यति कलौ युगे ।।5।।
जनोऽधर्मरुचिर्भद्र भविष्यति कलौ युगे ।।5।।
......................................மயா த்யக்தே மஹீதலே
ஜன : அதர்ம ருசிர் பத்ர பவிஷ்யதி கலௌ யுகே 11.7.5
நல்லவனே ! கலியுகத்தில் மக்கள் அதர்மத்தில் பற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிலேச்ச ஆதிக்கம்
இது ஒரு முக்கிய விஷயம். கலியுகம் அதர்மத்தில் பற்றுக்கொண்டிருக்கும் என்றால் , பகவானின் அவதாரம் வீணா? இங்கு ஒரு சூக்ஷ்ம விஷயம் வருகிறது. கலியுகத்தில் சமூகம் பொதுவாக அதர்மத்தில் ருசியுள்ளதாகத்தான் இருக்கும் ! ஆனால் நல்லவர்களுக்கு பகவானின் வாக்கு என்றும் வழிகாட்டும். அதனால் தான் ஸ்ரீமத் பாகவதத்தை பகவானின் வாக்குரூப [வாங்மய ] அவதாரமாகக் கொள்கிறோம் ! பகவான்- பாகவதம்- பக்தன் இவற்றை ஒன்றாகவே கண்டார் ஸ்ரீ ராமக்ருஷ்ணர்! இந்த உத்தவ கீதையும் பாகவதத்தின் ஒரு பகுதியே !
நமது நாடு மிலேச்சர்களின் நேரடி ஆதிக்கத்திலிருந்துவிட்டு இப்போது மிலேச்சர்களின் கொள்கைகளைப் பின்பற்றும் கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் வந்துவிட்டது . நம்மவர்களே மிலேச்சர்களாகிவிட்டார்கள்.
[ All the ideals of India today are of foreign ( ie mleccha ) origin viz democracy, socialism, secularism, globalisation, etc. There is not a single Indian ideal in the present Indian Constitution- except the name Bharat ! In the name of secularism, all governments are interfering increasingly with Hindu beliefs and customs and practices, while leaving other religions free. ]
ஹிந்து தர்மத்தைக் காக்கக்கூடிய எந்த க்ஷத்ரிய வம்ச பரம்பரையும் இன்று இல்லை ! இந்தியா இன்று ஹிந்து நாடாக இல்லை ! இது மத சார்பற்ற நாடாகிவிட்டது ! இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் பகவான் 5000 வருஷங்களுக்குமுன் சொன்னது எவ்வளவு தூரம் நிஜமாகிவிட்டது என்பது தெரியும்! ஆகவே நாம் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய தர்மத்தையே பகவான் இங்கு சொல்கிறார்.
உய்யும் வழி
यदिदं मनसा वाचा चक्षुर्भ्यां श्रवणादिभिः।
नश्वरं गृह्यमाणं च विद्धि मायामनोमयम्।।7।।
नश्वरं गृह्यमाणं च विद्धि मायामनोमयम्।।7।।
யதிதம் மனஸா வாசா சக்ஷுர்ப்யாம் ஶ்ரவணாதிபி :
நஶ்வரம் க்ருஹ்யமாணம் ச வித்தி மாயாமனோமயம் 11.7.7
மனம், வாக்கு, கண்கள், செவி முதலிய புலன்கள் வழியாக எவை கிரஹிக்கப்பட்டு அனுபவிக்கப்படுகின்றனவோ அவை அழியும் தன்மை உடையவை என்றும் மனதின் மாயையால் தோன்றுபவை என்றும் அறிந்துகொள்.
पुंसोऽयुक्तस्य नानार्थो भ्रमः स गुणदोषभाक्।
कर्माकर्मविकर्मेति गुणदोषधियो भिदा।।8।।
कर्माकर्मविकर्मेति गुणदोषधियो भिदा।।8।।
பும்ஸோஅயுக்தஸ்ய நானார்தோ ப்ரம: ஸ குணதோஷபாக்
கர்ம அகர்ம விகர்மேதி குணதோஷதியோ பிதா 11.7.8
மனத்தெளிவு இல்லாதவனுக்குத்தான் பலவகை என்ற மயக்கமும், குண-தோஷம் என்ற பாகுபாடும் ஏற்படுகின்றன. செய்யவேண்டிய கர்மா (கர்ம) , விலக்கப்பட்ட கர்மா (அகர்ம ) செய்யவேண்டியதைச் செய்யாமல்விட்ட தவறு ( விகர்ம ) என்ற விதிமுறைகள் இவர்களுக்காகச் சொல்லப்பட்டுள்ளன.
तस्माद्युक्तेन्द्रियग्रामो युक्तचित्त इदं जगत्।
आत्मनीक्षस्व विततमात्मानं मय्यधीश्वरे।।9।।
தஸ்மாத் யுக்தேந்த்ரியக்ராமோ யுக்த சித்த இதம் ஜகத்
ஆத்ம நீக்ஷஸ்வ விததமாத்மானம் மய்யதீஶ்வரே 11.7.9
ஆகவே, புலன்களையும் சித்தத்தையும் வசப்படுத்தி இந்த ஜகத் முழுவதையும் உன்னில் (ஆத்மாவில் ) காண்பாயாக. ஈஸ்வரனான என்னிடம் உன் ஆத்மாவைப் பார். [ நான் இவ்வுலகமாக விளங்குகிறேன் என்பதை உணர்ந்துகொள். ]
ज्ञानविज्ञानसंयुक्त आत्मभूतः शरीरिणाम्।
आत्मानुभवतुष्टात्मा नान्तरायैर्विहन्यसे।।10।।
ஞானவிஞ்ஞான ஸம்யுக்த ஆத்மபூத: ஶரீரிணாம்
ஆத்மானுபவ துஷ்டாத்மா நான் த ராயைர் விஹன்யஸே 11.7.10
உடலைத் தாங்கியுள்ள எல்லாவற்றினுள்ளும் ஆத்மாவாக இருப்பது நானே என்று ஞான- விஞ்ஞானத்தோடு அறிந்துகொண்டு, தன் ஆத்மாவிலேயே ஆனந்தித்துக்கொண்டிருந்தால் இடையூறுகளால் துன்பப்படமாட்டாய்.
सर्वभूतसुहृच्छान्तो ज्ञानविज्ञाननिश्चयः।
पश्यन्मदात्मकं विश्वं न विपद्यते वै पुनः।।12।।
ஸர்வபூத ஸுஹ்ருத: ஶாந்தோ ஞான விஞ்ஞான நிஶ்சய :
பஶ்யன் மதாத்மகம் விஶ்வம் ந விபத்யேத வை புன : 11.7.12
எல்லா உயிர்களிடமும் அன்புகொண்டு, மனதில் எப்போதும் சான்தியுடனிருந்து, பரமாத்ம தத்துவத்தில் உறுதியாக நிலைபெற்று , இந்த விஶ்வம் முழுவதையும் என் வடிவமாகவே காண்பவன் எவனோ அவன் பிறப்பு-இறப்பு என்னும் சுழலில் மீண்டும் சிக்குவதில்லை.
பகவத்கீதையில் சொன்ன விஷயங்கள் எப்படி இங்கு வருகின்றன ! ஆனால் அங்கு சொன்னதற்கும் இங்கு சொல்வதற்கும் வித்தியாசமிருக்கிறது. அர்ஜுனன் க்ஷத்ரிய வீரன். அவனுக்கேற்ற முறையில் அங்கு சொன்னார். இங்கு உத்தவர் ஏற்கெனவே பக்தி நெறியில் செல்பவன். அதனால் எடுத்த எடுப்பிலேயே விஷயத்திற்கு வந்துவிடுகிறார்- பீடிகை எதுவும் இல்லை !
குறிப்பு:
இங்கு தரும் ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்கள் gita supersite என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இது ஓர் அருமையான அமைப்பு.
தமிழ் கீதா ப்ரஸ் கோரக்பூர் அவர்களின் பதிப்பு.
இவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
There is no consensus in any democratic country on any important matter, leave alone Dharma or religion. There are any number of fringe movements which hoist up any subject as a matter of human,, natural or fundamental right. No one talks of obligations or duties except to submit to state secular laws, where one cannot escape or avoid it ! It is therefore in vain for people to expect Dharma to prevail in the public sphere. This is the shape of Kali yuga. The most we can pray for is the strength to follow what we know as Dharma in the private sphere.
No comments:
Post a Comment