49.கீதை என்னும் பொக்கிஷம் -11
ஸ்ரீ பகவான் விளக்கிய விபூதிகளைக் கேட்டான் அர்ஜுனன். அவர் காட்டிய விஶ்வரூப நிலையைப் பார்த்தான். இப்பொழுது ஒரு புதிய சந்தேகம் அவனுக்கு வந்துவிட்டது ! இவ்வளவு மஹிமை பொருந்திய பகவானை எப்படி வழிபடுவது ? மூன்று உலகங்களையும் தன்னுள் அடக்கி, விரிந்து பரந்து நிற்கும் பகவானை எப்படி ஒரு சிறிய உருவில் அடக்கி - சகுணமாக - பூஜிக்க முடியும்? இந்த சந்தேகத்தையும் பகவானிடமே நேரடியாகவே கேட்கிறான்.
ஸகுண - நிர்குண உபாசனை
अर्जुन उवाच
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते।
येचाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः।।12.1।।

யேவம் ஸதத யுக்தா யே பக்தாஸ்வாம் பர்யுபாஸதே
யே சாப்யக்ஷரம் அவ்யக்தம் தேஷாம் கே யோக வித்தமா : 12.1
அர்ஜுனன் கேட்கும் இந்தக் கேள்வி முக்கியமானது. தங்களை மேதாவிகள் என்று கருதும் பலர். புத்தகப்படிப்பு படித்த பலர், இந்தக் கேள்வியை இன்னமும் எழுப்பிவருகிறார்கள். பகவான் அன்றே பதில்சொல்லிவிட்டார். இந்த மேதாவிகளுக்கு மண்டையில் ஏறாது!
श्री भगवानुवाच
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः।।12.2।।
மய்யாவேஶ்ய மனோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே
ஶ்ரத்தயா பரயோபே தாஸ்தே மே யுக்த தமா மதா : 12.2
[ இங்கும் பகவான் 'மே மதா : ' =என்னுடைய கருத்து என்று ஆணித்தரமாகச் சொல்வது குறிப்பிடத் தக்கது. ]
ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम्।।12.3।।

யே த்வக்ஷரம் அனிர்தேஶ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச கூடஸ்தம் அசலம் த்ருவம் 12.3
ஸந்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய:
தே ப்ராப்னுவன் தி மாமேவ ஸர்வபூத ஹிதே ரதா : 12.4
क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम्।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते।।12.5।।
க்லேஶோஅதிகதரஸ் தேஷாம் அவ்யக்தாஶக்த சேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர் துக்கம் தேஹவத்பிர் அவாப்யதே 12.5
இதைவிட நேராக, எளிமையாக இதை விளக்க முடியாது ! பகவானுக்கு எல்லாரும் சமம், எல்லா மார்கமும் ஒன்றே. ஆனால் சாதகருக்கு அவர்கள் தகுதியைப் பொறுத்து பல வழிகள் தேவைப்படுகின்றன. ஆகவே சகுண உபாஸனை நமது வசதிக்காகவே அமைந்தது.
நாம் ஏதோ பூஜை, ஜபம், த்யானம் என்று உட்காருகிறோம். ஒரு கொசுவோ, எறும்போ கடித்தால் தாங்கவில்லை! மனமும் கையும் அந்த இடத்திற்குப் போகிறது! பின் நாம் எப்படி அந்த அவ்யக்தப் பரம்பொருளை த்யானிக்க முடியும்? நமது நினவு உடலைச் சுற்றியே வருகிறது ! "சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத " என்றார் அருணகிரிநாதர்.
உருவ-அருவ வழிபாடு என்னும் பிரச்சினை இங்கிலீஷ் படிப்பு வந்தபிறகு அதிகரித்தது. ஸ்ரீ ராமக்ருஷ்ணர் காலத்தில் படித்த இளைஞர்கள் அனைவரும் அருவ வழிபாடு என்றே பிதற்றி வந்தனர். விவேகானந்தரும் பிறரும் இப்படித்தான் இருந்தனர். ஸ்ரீ ராமக்ருஷ்ணரை நேரில் பார்த்த பிறகுதான் சகுண உபாசனையின் மஹத்வம் அவர்களுக்குத் தெரிந்தது. ஸ்ரீ ராமக்ருஷ்ணர் இந்த விஷயங்களை அழகாக விளக்கினார்.
மஹரிஷி-ஞானியாகத்திகழ்ந்த பகவான் ஸ்ரீ ரமணர் இந்த "நான் யார் " என்று விசாரிக்கும் மார்கத்தையே போதித்தார்.
[ஆனால், இது 'நேதி" மார்கமல்ல ] அவரும் இறுதிவரை 54 ஆண்டுகள் அருணாசலத்திலேயே இருந்து, அருணகிரியின் சகுணபக்தியை வளர்த்தார் ! அனன்ய பக்தி என்பதற்கு இது உயர்ந்த எடுத்துக்காட்டு!
இங்கு கீதையில் பகவான் சகுண பக்தியையே நிச்சயமாக உயர்ந்ததாகக் கூறுகிறார்.
கீதையில் சில இடங்களில் அவர் நிர்குணப்ரஹ்ம உபாசனை பற்றிச் சொல்லியிருக்கிறார். உ..ம்: 5.17, 5.26, 6.24-29. 8.11-13 . ஆனால் சகுண உபாசனை 2 வது அத்யாயம் முதல் அனேகமாக ஒவ்வொரு அத்யாயத்திலும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 9.34ல் இதை முக்யமாகச் சொல்லியிருக்கிறார் . 11ம் அத்யாயம் பூராவுமே சகுண வழிபாட்டுத் தத்துவம் தானே! அதன் கடைசியில் "மத் கர்ம க்ருத் " என்று விசேஷமாக முடித்திருக்கிறார் ! 'இதுவே என்னுடைய கொள்கை' என்று 12.2ல் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்.
பகவான் அநுக்ரஹம்
ஸ்ரீ பகவான் தொடர்கிறார் :
ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते।।12.6।।
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா :
அனன்யேனைவ யோகேன மாம் த்யாயன்த உபாஸதே 12.6
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम्।।12.7।।
தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி நசிராத் பார்த்த மய்யாவேஶித சேதஸாம் 12.7
பகவானை வழிபடும் உபாயங்கள்
मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः।।12.8।।
மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஶய
நிவஸிஷ்யாமி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஶ்ய : 12.8
अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम्।
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय।।12.9।।
அத சித்தம் ஸமாதாதும் ந ஶக்னோஷி மயி ஸ்திரம்
அப்யாஸ யோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்ஜய 12.9
अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव।
मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि।।12.10।।
அப்யாஸேப்ய அஸமர்த்தோஸி மத்கர்ம பரமோ பவ
மதர்தமபி கர்மாணி குர்வன் ஸித்திம் அவாப்ஸ்யஸி 12.10
अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः।
सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्।।12.11।।
அதைததப்யஶக்தோஸி கர்தும் மத்யோக மாஶ்ரித :
ஸ்ர்வகர்ம ஃபலத்யாகம் தத: குரு யதாத்மவான் 12.11
श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्ध्यानं विशिष्यते।
ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम्।।12.12।।
ஶ்ரேயோஹி ஞானமப்யாஸாத் ஞானாத் த்யானம் விஶிஷ்யதே
த்யானாத் கர்மஃபலத்யாக ஸ்த்யாகாத் ஶாந்திரனன் தரம் 12.12
இங்கு பகவான் நம் கையைப்பிடித்து, படிப்படியாக அழைத்துச் செல்கிறார் !
பகவானுக்குப் பிடித்த பக்தர்கள் !
பக்தி என்று சொன்னாலும் பக்தர்கள் எல்லோரும் ஒரே இயல்பு படைத்தவர்களல்ல. அதனால் பகவான் தனக்குகந்த பல்வகைப்பட்ட பக்தர்களைப்பற்றிச் சொல்கிறார். இதிலிருந்து, பக்தர்களுக்கு இத்தகைய குணங்கள் அவசியம் என்பது தெரிகிறது. [நாம் தான் பக்திசெய்கிறோமே, வேறு என்ன செய்தால் என்ன என்ற புத்தியுடன் இருக்கக்கூடாது. ]
अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च।
निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी।।12.13।।
सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः।।12.14।।
அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிர் அஹங்கார : ஸம து:க ஸுக க்ஷமீ 12.13
ஸன்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஶ்சய:
மய்யர்பித மனோ புத்திர் யோ மத் பக்த: ஸ மே ப்ரிய : 12.14
यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः।।12.15।।
யஸ்மான்னோத் விஜதே லோகோ லோகான்னோத் விஜதே ச ய :
ஹர்ஷாமர்ஷபயோத் வேகைர் முக்தோ ய் : ஸ ச மே ப்ரிய : 12.15
अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः।।12.16।।
அநபேக்ஷ: ஶுசிர் தக்ஷ உதாஸீனோ கதவ்யத :
ஸர்வாரம்ப ப்ரித்யாகீ யோ மத் பக்த : ஸ மே ப்ரிய : 12.16
[ ஸர்வாரம்ப பரித்யாகீ = இது முக்கியமான கருத்து. நமக்கு என்று ஏற்பட்ட கர்மம் தவிர ( நியதம் கர்ம, கார்யம் கர்ம ) பிற கர்மங்களை நாமே வலிய மேற்கொள்ளலாகாது.]
यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति।
शुभाशुभपरित्यागी भक्ितमान्यः स मे प्रियः।।12.17।।
யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஶோசதி ந காங்க்ஷதி
ஶுபாஶுப பரித்யாகீ பக்திமான்யே ஸ மே ப்ரிய : 12.17
समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः।
शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः।।12.18।।
ஸம: ஶத்ரௌ ச மித்ரே ச ததா மானோபமானயோ :
ஶீதோஷ்ண ஸுகது:கேஷு ஸம ஸங்க விவர்ஜித : 12.18
तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येनकेनचित्।
अनिकेतः स्थिरमतिर्भक्ितमान्मे प्रियो नरः।।12.19।।
துல்ய நிந்தா ஸ்துதிர் மௌனி ஸன்துஷ்டோ யேன கேநசித்
அனிகேத: ஸ்திரமதிர் பக்திமான் மே ப்ரியோ நர : 12.19
ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः।।12.20।।
யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே
ஶ்ரத்ததானா பத பரமா பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா : 12.20
தர்ம்யாம்ருதம் = தர்ம்ய அம்ருதம்.
தர்மத்திலிருந்து விலகாதது, அமரத்தன்மை வாய்ந்தது (அழியாதது ).
தர்மம் தெரியாது குழம்பிய அர்ஜுனன் நல்லவழி கேட்டான் ( யத் ஶ்ரேய :) இங்கு பகவான் அவனுக்கு அமரத்வம் தரும் பாதையை- பக்தி மார்கத்தை உபதேசிக்கிறார் ! அதுவும் ஸகுண பக்தியை சிலாகித்துச் சொல்கிறார் !
தர்ம்யாம்ருதம் என்பது பக்தி நெறிக்கு பகவான் தரும் மற்றொரு அடைமொழி! அழிவே இல்லாத பாதை ! "ந மே பக்த ப்ரணஸ்யதி " என்று சொன்னாரல்லவா !
இத்தகைய அரிய விஷயங்கள் அடங்கிய அத்யாயத்திற்கு "பக்தி யோகம் " என்ற பெயர் அமைந்திருப்பது எவ்வளவு அருமை ! !
இவ்விதம் எவர்கள் உங்களிடம் நிலைபெற்ற மனத்தினராய் எப்பொழுதும் உங்களையே உபாஸிக்கின்றனரோ , மேலும் எவர்கள் உங்களை உருவமற்ற, அழிவற்ற நிலையில் ( கண்ணுக்கும் இந்திரியங்களுக்கும் புலனாகும் சகுணமாக இல்லாமல், அருவமாக ) வழிபடுகின்றனரோ இவ்விரு வகையினரில் யோகத்தை நன்குணர்ந்தவர்கள் யார் ?
அர்ஜுனன் கேட்கும் இந்தக் கேள்வி முக்கியமானது. தங்களை மேதாவிகள் என்று கருதும் பலர். புத்தகப்படிப்பு படித்த பலர், இந்தக் கேள்வியை இன்னமும் எழுப்பிவருகிறார்கள். பகவான் அன்றே பதில்சொல்லிவிட்டார். இந்த மேதாவிகளுக்கு மண்டையில் ஏறாது!
श्री भगवानुवाच
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः।।12.2।।
மய்யாவேஶ்ய மனோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே
ஶ்ரத்தயா பரயோபே தாஸ்தே மே யுக்த தமா மதா : 12.2
என்னிடத்தில் மனதை நிலை நிறுத்தி, ஒருமுகமாக, ஶ்ரத்தையுடன் என்னை உபாசிக்கும் பக்தர்கள் யோகிகளிலேயே மேலானவர்கள் என்று நான் கருதுகிறேன்.
[ இங்கும் பகவான் 'மே மதா : ' =என்னுடைய கருத்து என்று ஆணித்தரமாகச் சொல்வது குறிப்பிடத் தக்கது. ]
ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम्।।12.3।।
ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम्।।12.3।।
யே த்வக்ஷரம் அனிர்தேஶ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச கூடஸ்தம் அசலம் த்ருவம் 12.3
ஸந்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய:
தே ப்ராப்னுவன் தி மாமேவ ஸர்வபூத ஹிதே ரதா : 12.4
ஆனால் எவர்கள் இந்த்ரியக்கூட்டத்தை நன்கு அடக்கி, புத்திக்கு அப்பாற்பட்டதும், எங்கும் நிறைந்ததும், சொற்களால் விவரிக்கமுடியாததும், என்றும் மாறாது இருப்பதும்,நித்யமானதும், அசையாததும், இயக்கமற்றதும்,உருவமற்றதும் அழிவற்றதுமான பொருளையே நன்கு த்யானிக்கின்றனரோ, எல்லா உயிர்களின் நன்மையைக் கோருபவர்களுமாகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்.
क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम्।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते।।12.5।।
க்லேஶோஅதிகதரஸ் தேஷாம் அவ்யக்தாஶக்த சேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர் துக்கம் தேஹவத்பிர் அவாப்யதே 12.5
உருவமற்ற பொருளில் நாட்டம்கொண்ட அவர்களுக்கு சிரமம் அதிகமாகும். ஏனினில் உடலில் பற்றுள்ளோரால் அந்த அவ்யக்த மார்கம் மிகுந்த சிரமத்துடன் அடையப்படுவதன்றோ ?
இதைவிட நேராக, எளிமையாக இதை விளக்க முடியாது ! பகவானுக்கு எல்லாரும் சமம், எல்லா மார்கமும் ஒன்றே. ஆனால் சாதகருக்கு அவர்கள் தகுதியைப் பொறுத்து பல வழிகள் தேவைப்படுகின்றன. ஆகவே சகுண உபாஸனை நமது வசதிக்காகவே அமைந்தது.
நாம் ஏதோ பூஜை, ஜபம், த்யானம் என்று உட்காருகிறோம். ஒரு கொசுவோ, எறும்போ கடித்தால் தாங்கவில்லை! மனமும் கையும் அந்த இடத்திற்குப் போகிறது! பின் நாம் எப்படி அந்த அவ்யக்தப் பரம்பொருளை த்யானிக்க முடியும்? நமது நினவு உடலைச் சுற்றியே வருகிறது ! "சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத " என்றார் அருணகிரிநாதர்.
உருவ-அருவ வழிபாடு என்னும் பிரச்சினை இங்கிலீஷ் படிப்பு வந்தபிறகு அதிகரித்தது. ஸ்ரீ ராமக்ருஷ்ணர் காலத்தில் படித்த இளைஞர்கள் அனைவரும் அருவ வழிபாடு என்றே பிதற்றி வந்தனர். விவேகானந்தரும் பிறரும் இப்படித்தான் இருந்தனர். ஸ்ரீ ராமக்ருஷ்ணரை நேரில் பார்த்த பிறகுதான் சகுண உபாசனையின் மஹத்வம் அவர்களுக்குத் தெரிந்தது. ஸ்ரீ ராமக்ருஷ்ணர் இந்த விஷயங்களை அழகாக விளக்கினார்.
"As you recall your father by his photograph, so likewise the worship of the image reveals in a flash the nature of Reality.
"Do you know what God with form is like ? Like bubbles rising on an expanse of water, various divine forms are seen to rise out of the great Akasa of Consciousness. The Incarnation of God is one of these forms. The primal energy sports, as it were, through the activities of a Divine Incarnation.
" One ultimately discovers God by trying to know who this 'I' is. Is this 'I' the flesh, the bones, the blood, or the marrow ? Is it the mind or the buddhi ? Analysing thus, you realise at last that you are none of these. This is called the process of 'Neti, neti', 'Not this, not this.' One can neither touch nor comprehend the Atman. "-The Gospel of Sri Ramakrishna. January1, 1883.
மஹரிஷி-ஞானியாகத்திகழ்ந்த பகவான் ஸ்ரீ ரமணர் இந்த "நான் யார் " என்று விசாரிக்கும் மார்கத்தையே போதித்தார்.
"சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமானதாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை யடையத் தன்னைத்தா னறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்."
[ஆனால், இது 'நேதி" மார்கமல்ல ] அவரும் இறுதிவரை 54 ஆண்டுகள் அருணாசலத்திலேயே இருந்து, அருணகிரியின் சகுணபக்தியை வளர்த்தார் ! அனன்ய பக்தி என்பதற்கு இது உயர்ந்த எடுத்துக்காட்டு!
இங்கு கீதையில் பகவான் சகுண பக்தியையே நிச்சயமாக உயர்ந்ததாகக் கூறுகிறார்.
கீதையில் சில இடங்களில் அவர் நிர்குணப்ரஹ்ம உபாசனை பற்றிச் சொல்லியிருக்கிறார். உ..ம்: 5.17, 5.26, 6.24-29. 8.11-13 . ஆனால் சகுண உபாசனை 2 வது அத்யாயம் முதல் அனேகமாக ஒவ்வொரு அத்யாயத்திலும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 9.34ல் இதை முக்யமாகச் சொல்லியிருக்கிறார் . 11ம் அத்யாயம் பூராவுமே சகுண வழிபாட்டுத் தத்துவம் தானே! அதன் கடைசியில் "மத் கர்ம க்ருத் " என்று விசேஷமாக முடித்திருக்கிறார் ! 'இதுவே என்னுடைய கொள்கை' என்று 12.2ல் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்.
பகவான் அநுக்ரஹம்
ஸ்ரீ பகவான் தொடர்கிறார் :
ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते।।12.6।।
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா :
அனன்யேனைவ யோகேன மாம் த்யாயன்த உபாஸதே 12.6
என்னையே பரம கதியாகக் கொண்டு. எந்த பக்தர்கள் எல்லாக் கர்மங்களையும் என்னிடமே அர்பணம் செய்து , அனன்யமான பக்தியில் ஒன்றி, என்னையே த்யானித்து உபாசிக்கின்றார்களோ --
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम्।।12.7।।
தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி நசிராத் பார்த்த மய்யாவேஶித சேதஸாம் 12.7
அர்ஜுனா! இவ்விதம் என்னிடம் தீவிர பக்தி செய்யும் அவர்களை சீக்கிரமாகவே இந்த மரணவடிவான ஸம்ஸாரக் கடலிலிருந்து கரை ஏற்றுகிறேன்.
பகவானை வழிபடும் உபாயங்கள்
मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः।।12.8।।
மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஶய
நிவஸிஷ்யாமி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஶ்ய : 12.8
என்னிடமே மனதை நிலை நிறுத்து. என்னிடமே புத்தியை ஈடுபடுத்து. அதன்பின் என்னிடமே வாழ்வாய். இதில் சிறிதும் சந்தேகமில்லை.
(8.7, 9.34 பார்க்க )
अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम्।
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय।।12.9।।
அத சித்தம் ஸமாதாதும் ந ஶக்னோஷி மயி ஸ்திரம்
அப்யாஸ யோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்ஜய 12.9
தனஞ்ஜயா! அப்படி மனதை என்னிடம் நிலைபெறவைக்க சக்தியற்றவனானால், அப்யாஸ யோகத்தினால் என்னை அடைய விரும்பு. [மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும் )
अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव।
मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि।।12.10।।
அப்யாஸேப்ய அஸமர்த்தோஸி மத்கர்ம பரமோ பவ
மதர்தமபி கர்மாணி குர்வன் ஸித்திம் அவாப்ஸ்யஸி 12.10
இவ்வாறு அப்யாஸம் செய்யவும் திறமையில்லாவிட்டால், கர்மங்களை எனக்காகவே செய்பவனாக ஆவாய். கர்மங்களை எனக்காகவே செய்வதாலும் (என்னை அடைவது என்ற ) சித்தியை அடைவாய்.
अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः।
सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्।।12.11।।
அதைததப்யஶக்தோஸி கர்தும் மத்யோக மாஶ்ரித :
ஸ்ர்வகர்ம ஃபலத்யாகம் தத: குரு யதாத்மவான் 12.11
இதைக்கூட உன்னால் செய்யமுடியாவிட்டால், என்னிடம் சரணடைவதிலேயே நாட்டமுள்ளவனாய், மனதை யடக்கி, செய்யும் கர்மங்களின் பலனை எனக்கு அர்ப்பணம் செய்வாயாக.
श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्ध्यानं विशिष्यते।
ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम्।।12.12।।
ஶ்ரேயோஹி ஞானமப்யாஸாத் ஞானாத் த்யானம் விஶிஷ்யதே
த்யானாத் கர்மஃபலத்யாக ஸ்த்யாகாத் ஶாந்திரனன் தரம் 12.12
அப்யாஸத்தைவிட ஞானம் சிறந்ததாம்; ஞானத்தைவிட த்யானம் உயர்ந்தது; த்யானத்தைவிட கர்மஃபலனைத் துறப்பது சிறந்ததாம். அந்தத் த்யாகத்தினால் உடனேயே மேலான ஶாந்தி கிடைக்கும்.
இங்கு பகவான் நம் கையைப்பிடித்து, படிப்படியாக அழைத்துச் செல்கிறார் !
பகவானுக்குப் பிடித்த பக்தர்கள் !
பக்தி என்று சொன்னாலும் பக்தர்கள் எல்லோரும் ஒரே இயல்பு படைத்தவர்களல்ல. அதனால் பகவான் தனக்குகந்த பல்வகைப்பட்ட பக்தர்களைப்பற்றிச் சொல்கிறார். இதிலிருந்து, பக்தர்களுக்கு இத்தகைய குணங்கள் அவசியம் என்பது தெரிகிறது. [நாம் தான் பக்திசெய்கிறோமே, வேறு என்ன செய்தால் என்ன என்ற புத்தியுடன் இருக்கக்கூடாது. ]
अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च।
निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी।।12.13।।
सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः।।12.14।।
அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிர் அஹங்கார : ஸம து:க ஸுக க்ஷமீ 12.13
ஸன்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஶ்சய:
மய்யர்பித மனோ புத்திர் யோ மத் பக்த: ஸ மே ப்ரிய : 12.14
எவன் எல்லா உயிர்களிடமும் வெறுப்பிலாதவனாய், சினேக பாவம் கொண்டு, கருணையுடையவனாய், 'நான், எனது' என்ற எண்ணமில்லாதவனாய், ஸுக-துக்கத்தைச் சமமாகக் கருதுபவனாய், பொறுமை உடையவனாய், எப்போதும் த்ருப்தியுள்ளவனாய், யோகத்தில் நாட்டம் கொண்டு மனதை அடக்கியவனாய், திட நிச்சயம் உடையவனாய், மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவனாய் , என்னிடம் பக்தியுள்ளவனாய் இருக்கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.
यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः।।12.15।।
யஸ்மான்னோத் விஜதே லோகோ லோகான்னோத் விஜதே ச ய :
ஹர்ஷாமர்ஷபயோத் வேகைர் முக்தோ ய் : ஸ ச மே ப்ரிய : 12.15
எவனிடமிருந்து உலகத்திற்குத் துன்பமில்லையோ, எவன் உலகத்தால் துன்பமடைவதில்லையோ, எவன் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி முதலியவற்றினின்று விடுபட்டவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்.
अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः।।12.16।।
அநபேக்ஷ: ஶுசிர் தக்ஷ உதாஸீனோ கதவ்யத :
ஸர்வாரம்ப ப்ரித்யாகீ யோ மத் பக்த : ஸ மே ப்ரிய : 12.16
எவன் எதையும் வேண்டாதவனோ, தூய்மை உள்ளவனோ, எந்த பக்ஷத்தையும் சாராதவனோ, மனதில் துக்கமில்லாதவனோ, அனாவசிய கர்மங்களை (காம்ய கர்மங்களை ) துறந்தவனோ, அத்தகைய என் பக்தன் எனக்குப் பிரியமானவன்.
[ ஸர்வாரம்ப பரித்யாகீ = இது முக்கியமான கருத்து. நமக்கு என்று ஏற்பட்ட கர்மம் தவிர ( நியதம் கர்ம, கார்யம் கர்ம ) பிற கர்மங்களை நாமே வலிய மேற்கொள்ளலாகாது.]
यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति।
शुभाशुभपरित्यागी भक्ितमान्यः स मे प्रियः।।12.17।।
யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஶோசதி ந காங்க்ஷதி
ஶுபாஶுப பரித்யாகீ பக்திமான்யே ஸ மே ப்ரிய : 12.17
எவன் எதற்காகவும் மகிழ்வதில்லையோ, எதையும் வெறுப்பதில்லையோ, எதற்காகவும் துயரப்படுவதில்லையோ, எதற்கும் ஆசைப்படுவதில்லையோ, நல்லது-தீயது ஆகிய கர்மங்கள் அனைத்தையும் துறந்தவனோ - அத்தகைய பக்தன் எனக்குப் பிரியமானவன்.
समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः।
शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः।।12.18।।
ஸம: ஶத்ரௌ ச மித்ரே ச ததா மானோபமானயோ :
ஶீதோஷ்ண ஸுகது:கேஷு ஸம ஸங்க விவர்ஜித : 12.18
எவன் எதிரிகளிடமும் நண்பர்களிடமும், மான- அவமானம் நேரும்போதும், தட்ப-வெப்பத்திலும், ஸுக-துக்கத்திலும் ( ஆகிய இரட்டைகளில் ) ஸம புத்தியுள்ளவனோ, பற்றுக்களைத் துறந்தவன் எவனோ -
तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येनकेनचित्।
अनिकेतः स्थिरमतिर्भक्ितमान्मे प्रियो नरः।।12.19।।
துல்ய நிந்தா ஸ்துதிர் மௌனி ஸன்துஷ்டோ யேன கேநசித்
அனிகேத: ஸ்திரமதிர் பக்திமான் மே ப்ரியோ நர : 12.19
இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாக மதிப்பவனோ, மௌனியும், எதிலும் ஸன்தோஷம் அடைபவனும், தனக்கென இருப்பிடம் இல்லாதவனும், திடசித்தம் உடையவனும் ஆகிய அந்த பக்திமான் எனக்குப் பிரியமானவன்.
ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः।।12.20।।
யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே
ஶ்ரத்ததானா பத பரமா பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா : 12.20
ஆனால் எவர்கள் என்னிடம் ஶ்ரத்தையுடன், என்னையே மேலான கதியாகக் கொண்டு இங்கு கூறப்பட்ட தர்மமயமாகிய அமிர்தத்தை நன்கு அனுஷ்டிக்கிறார்களோ அந்த பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
தர்ம்யாம்ருதம் = தர்ம்ய அம்ருதம்.
தர்மத்திலிருந்து விலகாதது, அமரத்தன்மை வாய்ந்தது (அழியாதது ).
தர்மம் தெரியாது குழம்பிய அர்ஜுனன் நல்லவழி கேட்டான் ( யத் ஶ்ரேய :) இங்கு பகவான் அவனுக்கு அமரத்வம் தரும் பாதையை- பக்தி மார்கத்தை உபதேசிக்கிறார் ! அதுவும் ஸகுண பக்தியை சிலாகித்துச் சொல்கிறார் !
தர்ம்யாம்ருதம் என்பது பக்தி நெறிக்கு பகவான் தரும் மற்றொரு அடைமொழி! அழிவே இல்லாத பாதை ! "ந மே பக்த ப்ரணஸ்யதி " என்று சொன்னாரல்லவா !
இத்தகைய அரிய விஷயங்கள் அடங்கிய அத்யாயத்திற்கு "பக்தி யோகம் " என்ற பெயர் அமைந்திருப்பது எவ்வளவு அருமை ! !
No comments:
Post a Comment