59. ஸ்ரீ உத்தவ கீதை -4
ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் உத்தவர் சம்பந்தப்பட்ட ஒரு ரஸமான இடம் வருகிறது.
ஸ்ரீ க்ருஷ்ணர் திடீரென வ்ரஜபூமியை விட்டுக் கிளம்பவேண்டி வந்தது. கோபியர் அதைத்தடுக்க முயன்றும் பலனில்லை. "சீக்கிரமே திரும்பி வருவேன் " என க்ருஷ்ணர் ஆறுதல் சொன்னார். ( 10.39.35 ) ஆனால் அவர் திரும்பி வரவேயில்லை.
Gopis trying to prevent the chariot from taking Krishna-Balarama from Brindavan!
from: krishnabook.com. Grateful thanks.
உத்தவர் நந்தகோகுலம் வருதல்
உத்தவர் நந்தகோகுலம் வருதல்
நந்தர், யஶோதை, கோப-கோபியர் படும் துயரம் க்ருஷ்ணருக்கு நன்கு தெரியும். அதனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தன்பிரிய நண்பரும் பக்தருமான உத்தவரை அனுப்புகிறார். இதற்கு வேறு இரண்டு ஆழ்ந்த காரணங்களும் இருக்கின்றன.
1. தான் அனைவரின் ஆத்மாவாக இருப்பவர். ஆகவே இவர் யாரையும் விட்டு நீங்குவதில்லை ! ஆனால் உயிர்கள் இதை உணர்வதில்லை. உடலளவில் தொலைவில் இருப்பதன் நோக்கம் , அவரையே தொடர்ந்து நினைத்து, மனத்தளவில் அவரை நெருங்கி நிற்பதற்கே ஆகும். இதை வ்ரஜவாசிகளை உணரவைக்கவேண்டும். [10.47.34 ]
2.உத்தவர் சிறந்த பக்திமான். ஆனால் அவர் கற்றறிந்தவர்.
" வ்ருஷ்ணி வம்சத்தில் தோன்றியவர்களுள் ஶ்ரேஷ்டரான உத்தவர் சிறந்த மந்திரி; க்ருஷ்ணரின் அன்புக்குரிய நண்பர்; ப்ருஹஸ்பதியின் நேர் சீடர்; புத்திமான்களில் சிறந்தவர் " என ஸ்ரீ ஶுகர் கூறுகிறார். ( 10.46.1 ) அப்படிப்பட்டவரின் பக்தி சாஸ்த்ரோக்தமானது (வைதி பக்தி ). அவர் கோபியரின் பக்தியை அறியார். அதை அவரை உணரச்செய்யவேண்டும் என பகவான் நினைத்திருக்கலாம்.
Uddhava in Brindavan! This beautiful picture is from ISKCON sources. Infinite thanks.
உத்தவர் கோகுலம் வருகிறார். அங்கு அனைவரும் க்ருஷ்ணரையே ஸதாகாலமும் நினத்து வாழ்ந்து வருவதைப் பார்த்து வியக்கிறார். க்ருஷ்ணரின் பரமாத்ம நிலையை விளக்கிச் சொல்கிறார்; ஆனால் கோகுல வாசிகளின் தூய பக்தி அவரைக் கவர்கிறது. அவர் வியக்கிறார்.
அஹோ பூயம் ஸ்ம பூர்ணார்தா பவத்யோ லோகபூஜிதா :
வாஸுதேவே பகவதி யாஸார்பிதம் மன : 10.47.23
உங்கள் மனம் இவ்வாறு பகவான் வாஸுதேவனிடமே பூர்ணமாக அர்பணிக்கப்பட்டிருக்கிறதே ! ஆஹா ! இதுவன்றோ பாக்யம் ! உலகம் உங்களைப் பாராட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது !
தான வ்ரத தபோஹோம ஜப ஸ்வாத்யாய ஸம்யமை :
ஶ்ரேயோபிர் விவிதைஶ்சான்யை : க்ருஷ்ணே பக்திர்ஹி ஸாத்யதே 10.47.24
தானம், வ்ரதம், தவம், ஹோமம், ஜபம், வேதாத்யயனம், புலனடக்கம் என்று பல உயர்ந்த நியமங்களால் க்ருஷ்ணபக்தி அடையப்படுகிறது.
பகவத்யுத்தமஶ்லோகே பவதீபிரனுத்தமா
பக்தி : ப்ரவர்திதா திஷ்ட்யா முனீனாமபி துர்லபா 10.47.25
அஞ்ஞானத்தை அகற்றும் பெருமையுடைய பகவானிடம் முனிவர்களாலும் எளிதில் பெறமுடியாத சிறந்த பக்தியை நீங்கள் கொண்டுள்ளீர்கள். அதுவன்றோ உங்கள் பாக்யம் !
திஷ்ட்யா புத்ரான் பதீன் தேஹான் ஸ்வஜனான் பவனாதி ச
ஹித்வா ஆவ்ருணீத யூயம் யத் க்ருஷ்ணாக்யம் புருஷம் பரம் 10.47.26
மனைவி-மக்கள், கணவர், உடல், உற்றர்-உறவினர்,வீடு-வாசல் என்ற பாசங்களை விட்டு, க்ருஷ்ணன் என்ற பரம புருஷனையே விரும்பி அடைந்துள்ளீர்கள்! இது எவ்வளவு பெரும் பேறு !
உத்தவர் தான் கொண்டுவந்த செய்தியைச் சொல்கிறார். ஆனால் அங்கு கண்ட ப்ரேம பக்தி அவரை ஆட்கொள்கிறது ! அவர் கோபியருக்கு நமஸ்காரம் செய்கிறார் ! பிறகு சொல்கிறார் :
ஏதா : பரம் தனுப்ருதோ புவிகோபவத்வோ
கோவிந்த ஏவ நிகிலாத்மனி ரூடபாவா :
வாஞ்சந்தியத் பவபியோ முனயோ வயம் ச
கிம் ப்ரஹ்மஜன்மபிரனந்த கதாரஸஸ்ய 10.47.57
அனைத்து ஜீவன்களின் ஆன்மாவாக விளங்கும் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்திலேயே அசைவற்ற ப்ரேமபக்தி இருக்கவேண்டுமென , உலகியலைக் கண்டு அச்சம்கொண்ட முமுக்ஷுக்களும், முனிவர்களும் பக்தர்களான நாங்களும் வேண்டிக்கொள்கிறோம். அப்படியிருக்க, அத்தகைய ப்ரேமபக்தியைக் கொண்ட இந்த கோபிகைகளன்றோ இவ்வுலகில் பிறவியெடுத்ததன் பயனைப் பெற்றவர்கள் ! பகவானின் கதாம்ருதத்தைப் பருகியவனுக்கு ப்ராஹ்மணப் பிறவியினால்தான் ஆவதென்ன !
ஆஸாமஹோ சரணரேணு ஜுஷாமஹம் ஸ்யாம்
வ்ருந்தாவனே கிமபி குலமலதௌஷதீனாம்
யாதுஸ்த்யஜம் ஸ்வஜனமார்யபதம் ச ஹித்வா
பேஜார்முகுந்த பதவீம் ஶ்ருதிபிர் விம்ருக்யாம் 10.47.61
அரிய சுற்றத்தையும் பெரியவர்களின் அற நெறிகளையும் விட்டுவிட்ட கோபிகைகள், வேதங்கள் தேடிக் காணக்கிடைக்காத ஸ்ரீ க்ருஷ்ணனின் பதவியை (பக்தியை ) அடைந்தனர்.
அவர்களது பாத தூளியைப் பெறும் பாக்யம் பெற்ற ப்ருந்தாவனத்தில் புல், புதர், செடி, கொடி ஆகிய இவற்றில் ஒன்றாக நான் ஆகக் கூடாதா? ##
வந்தே நந்த வ்ரஜஸ்த்ரீணாம் பாதரேணுமபீக்ஷ்ணஶ :
யாஸாம் ஹரிகதோத்கீதம் புனாதி புவனத்ரயம் 10.47.63
நந்தகோகுலத்துப் பெண்களின் பாத தூளியை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன். க்ருஷ்ணலீலையைப் பற்றிய அவர்களின் கானம் மூன்று லோகங்களையும் புனிதமாக்குகிறது!
## ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் இதை வைத்து ஒரு பாடல் இயற்றினார்.
புல்லாய் பிறவி தரவேணும் கண்ணா
புனிதமான பல கோடி பிறவி தந்தாலும்
ப்ருந்தாவனம் இதிலொரு புல்லாய் ....... ||
புல்லாகினும் நெடுநாள் நில்லாது ஆதலினால்
கல்லாய் பிறவி தரவேணும் - ஒருசிறு கல்லாய்''''
தவமிகு சுரரொடு முனிவரும் இயலா
தனித்த பெரும் பேறடைவேனே!
எவ்வுயிர்க்கும் உள்கலக்கும் இறைவனேயமுனைத் துறைவனே எனக்கும் ஒரு
புல்லாய்ப் பிறவி தர வேணும்.
இத்தகைய பெருமை வாய்ந்த உத்தவர் பகவானின் இறுதி உபதேசத்தைப் பெறும் பாக்யம் பெற்றார் ! அதுவும் பக்திபற்றியே அமைந்தது.
Indigenous Gujarat cows grazing. Such scenes have become rare due to monstrous economic development @ crass commercialisation. Indigenous cows are also becoming extinct.
picture from: www.biodiversityofindia.org
பகவான் பக்திக்கு மட்டுமே கட்டுப்பட்டவர் !

சிலருக்கு பக்தியென்பது இயற்கையாகவே வருகிறது. இது பூர்வபுண்ணியம். ஆனால் தர்ம- ஆன்மீக விஷயத்தில் நாம் முயற்சி.செய்தே தீரவேண்டும். அத்தகைய முயற்சிகளுள் ஒன்று ஸத்ஸங்கம்= தூயோர்களின் உறவை நாடுதல். பக்தி மார்கத்தில் இது சிறந்த இடத்தைப் பெறுகிறது.
श्रीभगवानुवाच।
प्रायेण भक्तियोगेन सत्सङ्गेन विनोद्धव।
नोपायो विद्यते सध्र्यङ् प्रायणं हि सतामहम्।।48।।
ப்ராயேண பக்தியோகேன ஸத்ஸங்கேன வினோத்தவ
நோபாயோ வித்யதே ஸத்ரயங் ப்ராயணம் ஹி ஸதாமஹம் 11.11.48
न रोधयति मां योगो न सांख्यं धर्म एव च।
न स्वाध्यायस्तपस्त्यागो नेष्टापूर्तं न दक्षिणा।।1।।
ந ரோதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம ஏவ ச
ந ஸ்வாத்யாயஸ் தபஸ் த்யாகோ ந இஷ்டாபூர்தம் ந தக்ஷிணா 11.12.1
व्रतानि यज्ञश्छन्दांसि तीर्थानि नियमा यमाः।
यथावरुन्धे सत्सङ्गः सर्वसङ्गापहो हि माम्।।2।।
வ்ரதானி யஜ்ஞஶ்சந்தாம்ஸி தீர்த்தானி நியமா யமா
யதா வருந்தே ஸத்ஸங்க : ஸர்வஸங்காபஹோ ஹி மாம் 11.12.2
சத்திணக்கத்தினால் சார்பகலும் - பகவான் ஸ்ரீ ரமணர்,
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு - குறள் 350 ]
பகவான் இங்கு எடுத்துக்காட்டாக பல பெயர்களைச் சொல்கிறார்.
केवलेन हि भावेन गोप्यो गावो नगा मृगाः।
येऽन्ये मूढधियो नागाः सिद्धा मामीयुरञ्जसा।।8।।
கேவலேன ஹி பாவேன கோப்யோ காவோ நகா ம்ருகா
யே அன்யே மூடதியோ நாகா : ஸித்தா மாமீயுரஞ்ஜஸா 11.12.8
பக்தியே வேண்டியது
तस्मात्त्वमुद्धवोत्सृज्य चोदनां प्रतिचोदनाम्।
प्रवृत्तं च निवृत्तं च श्रोतव्यं श्रुतमेव च।।14।।
தஸ்மாத் தவமுத்த வோத்ஸ்ருஜ்ய சோதனாம் ப்ரதிசோதனாம்
ப்ரவ்ருத்தம் ச நிவ்ருத்தம் ச ஶ்ரோதவ்யம் ஶ்ருதமேவ ச 11.12.14
मामेकमेव शरणमात्मानं सर्वदेहिनाम्।
याहि सर्वात्मभावेन मया स्या ह्यकुतोभयः।।15।।
மாமேகமேவ ஶரணமாத்மானம் ஸர்வதேஹினாம்
யாஹி ஸர்வாத்ம பாவேன மயா ஸ்யா ஹ்யகுதோ பய : 11.12.15
இது பகவான் அர்ஜுனனுக்குப் பல இடங்களில் கூறிய அறிவுரை. குறிப்பாக, பகவத் கீதையில் 18.62, 65, 66 வது ஶ்லோகம் பார்க்கவும்.
मामेकमेव शरणमात्मानं सर्वदेहिनाम्।
याहि सर्वात्मभावेन मया स्या ह्यकुतोभयः।।15।।
ஏதாவான் யோக ஆதிஷ்டோ மச்சிஷ்யை : ஸனகாதிபி :
ஸர்வதோ மன ஆக்ருஷ்ய மய்யத்தாஆகவேஶ்யதே யதா 11.13.14
இதுவும் பகவத் கீதையில் வரும் அதே உரை, யுக்த ஆஸீத மத் பர, மன்மனா பவ, மய்யாவேஶ்ய மனோ புத்தி போன்ற ஶ்லோகங்களைப் பார்க்கவும்.
பக்தியின் மேன்மை
बाध्यमानोऽपि मद्भक्तो विषयैरजितेन्द्रियः।
प्रायः प्रगल्भया भक्त्या विषयैर्नाभिभूयते।।18।।
பாத்யமானோபி மத்பக்தோ விஷயை ரஜிதேந்த்ரிய :
ப்ராய: ப்ரகல்பயா பக்த்யா விஷயைனாபிபூயதே 11.14.18
यथाग्निः सुसमृद्धार्चिः करोत्येधांसि भस्मसात्।
तथा मद्विषया भक्तिरुद्धवैनांसि कृत्स्नशः।।19।।
யதாக்னி: ஸுஸம்ருத்தார்ச்சி : கரோத்யேதாம்ஸி பஸ்மஸாத்
ததா மத் விஷயா பக்திருத்த வைனாம்ஸி க்ருத்ஸ்னஶ : 11.14.19
न साधयति मां योगो न सांख्यं धर्म उद्धव।
न स्वाध्यायस्तपस्त्यागो यथा भक्तिर्ममोर्जिता।।20।।
ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ
ந ஸ்வாத்யாயஸ் தபஸ் யாகோ யதா பக்திர் மமோர்ஜிதா 11.14.20
भक्त्याहमेकया ग्राह्यः
பக்த்யாஹமேகயா க்ராஹ்ய : 11.14.21
Arjuna tree. from: www.theayurveda,org
இவ்வாறு உத்தவ கீதை பக்தியின் மேன்மையையே பேசுகிறது. பகவத் கீதையைப்போலவே இங்கும் பகவான் வேறு சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். ஆனால் கடைசியில் எதுவும் பக்திக்கு ஈடாகாது என நேரடியாகவே சொல்கிறார். இங்கு வரும் ஶ்லோகங்களுக்கு ஈடாக பகவத்கீதையிலிருந்து எடுத்துக்காட்டலாம். கட்டுரை விரியும் என்பதால் அதைச் செய்யவில்லை.
Thanks to: www,desicolours,com
श्रीभगवानुवाच।
प्रायेण भक्तियोगेन सत्सङ्गेन विनोद्धव।
नोपायो विद्यते सध्र्यङ् प्रायणं हि सतामहम्।।48।।
ப்ராயேண பக்தியோகேன ஸத்ஸங்கேன வினோத்தவ
நோபாயோ வித்யதே ஸத்ரயங் ப்ராயணம் ஹி ஸதாமஹம் 11.11.48
உத்தவரே ! ஸத்ஸங்கத்தினால் வரும் பக்தியோகம் தவிர, சம்சாரக் கடலைக் கடற்பதற்கான வேறு வழிகளில்லை என்பது என் முடிவான கருத்து. ஏனெனில் ஸாதுக்களின் உயர்ந்த புகலிடமாக நான் இருக்கிறேன்.
न रोधयति मां योगो न सांख्यं धर्म एव च।
न स्वाध्यायस्तपस्त्यागो नेष्टापूर्तं न दक्षिणा।।1।।
ந ரோதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம ஏவ ச
ந ஸ்வாத்யாயஸ் தபஸ் த்யாகோ ந இஷ்டாபூர்தம் ந தக்ஷிணா 11.12.1
யோகம், ஸாங்க்யம், தர்மம், ஸ்வாத்யாயம், தவம், த்யாகம் , இஷ்டா-பூர்த்தம், தக்ஷிணை ஆகிய எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது.
व्रतानि यज्ञश्छन्दांसि तीर्थानि नियमा यमाः।
यथावरुन्धे सत्सङ्गः सर्वसङ्गापहो हि माम्।।2।।
வ்ரதானி யஜ்ஞஶ்சந்தாம்ஸி தீர்த்தானி நியமா யமா
யதா வருந்தே ஸத்ஸங்க : ஸர்வஸங்காபஹோ ஹி மாம் 11.12.2
வ்ரதங்கள், யாக-யஜ்ஞங்கள், வேத மந்திரங்கள், புண்ய தீர்த்தங்கள், யம-நியமங்கள் என்பனவும் ஸத்ஸங்கத்தைப்போல என்னை வசப்படுத்தமாட்டா. ஏனென்றால் ஸத்ஸங்கத்தால் எல்லாப் பற்றுகளும் நீங்கிவிடுகின்றன.[ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் = ஸத்ஸங்கத்தினால் பற்றற்ற நிலை ஏற்படும் --ஸ்ரீ சங்கரர், பஜகோவிந்தம்.
சத்திணக்கத்தினால் சார்பகலும் - பகவான் ஸ்ரீ ரமணர்,
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு - குறள் 350 ]
பகவான் இங்கு எடுத்துக்காட்டாக பல பெயர்களைச் சொல்கிறார்.
केवलेन हि भावेन गोप्यो गावो नगा मृगाः।
येऽन्ये मूढधियो नागाः सिद्धा मामीयुरञ्जसा।।8।।
கேவலேன ஹி பாவேன கோப்யோ காவோ நகா ம்ருகா
யே அன்யே மூடதியோ நாகா : ஸித்தா மாமீயுரஞ்ஜஸா 11.12.8
கோபிகைகள், பசுக்கள், மரங்கள் (யமளார்ஜுனம்) , மான்கள் முத்லியவை பக்தி 'பாவம்' ஒன்றினாலேயே என்னை அடைந்தார்கள். அறிவு மழுங்கிய காளிய சர்ப்பம் போன்றவர்களும் என்னை அடைந்தார்கள். (இவர்கள் அனைவரும் கோகுல வாசிகள் !) வேறு பலரும் ப்ரேம பக்தியினாலே என்னை அடைந்தார்கள்.
பக்தியே வேண்டியது
तस्मात्त्वमुद्धवोत्सृज्य चोदनां प्रतिचोदनाम्।
प्रवृत्तं च निवृत्तं च श्रोतव्यं श्रुतमेव च।।14।।
தஸ்மாத் தவமுத்த வோத்ஸ்ருஜ்ய சோதனாம் ப்ரதிசோதனாம்
ப்ரவ்ருத்தம் ச நிவ்ருத்தம் ச ஶ்ரோதவ்யம் ஶ்ருதமேவ ச 11.12.14
मामेकमेव शरणमात्मानं सर्वदेहिनाम्।
याहि सर्वात्मभावेन मया स्या ह्यकुतोभयः।।15।।
மாமேகமேவ ஶரணமாத்மானம் ஸர்வதேஹினாம்
யாஹி ஸர்வாத்ம பாவேன மயா ஸ்யா ஹ்யகுதோ பய : 11.12.15
ஆதலினால் உத்தவரே, உலகவாழ்க்கை-துறவு, இவ்வுலகு-அவ்வுலகு, கேட்பது-கேட்கப்பட வேண்டியது, ஆகிய எல்லாவற்ரையும் விட்டுவிட்டு, ஸகல ப்ராணிகளுக்கும் புகலிடமான என்னை மட்டுமே ஒன்றிய மனத்துடன் ஶரணம் அடைவாய். அப்போது, எதைப்பற்றியும், எதனாலும் உனக்குப் பயமேற்படாது.
இது பகவான் அர்ஜுனனுக்குப் பல இடங்களில் கூறிய அறிவுரை. குறிப்பாக, பகவத் கீதையில் 18.62, 65, 66 வது ஶ்லோகம் பார்க்கவும்.
मामेकमेव शरणमात्मानं सर्वदेहिनाम्।
याहि सर्वात्मभावेन मया स्या ह्यकुतोभयः।।15।।
ஏதாவான் யோக ஆதிஷ்டோ மச்சிஷ்யை : ஸனகாதிபி :
ஸர்வதோ மன ஆக்ருஷ்ய மய்யத்தாஆகவேஶ்யதே யதா 11.13.14
மனதை எல்லாவிஷயங்களிலிருந்தும் மீட்டு, என்னிடத்திலேயே முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இந்த யோகத்தை என் சீடர்களான ஸனகர் முதலியோர் உபதேசித்திருக்கிறார்கள்.
இதுவும் பகவத் கீதையில் வரும் அதே உரை, யுக்த ஆஸீத மத் பர, மன்மனா பவ, மய்யாவேஶ்ய மனோ புத்தி போன்ற ஶ்லோகங்களைப் பார்க்கவும்.
பக்தியின் மேன்மை
बाध्यमानोऽपि मद्भक्तो विषयैरजितेन्द्रियः।
प्रायः प्रगल्भया भक्त्या विषयैर्नाभिभूयते।।18।।
பாத்யமானோபி மத்பக்தோ விஷயை ரஜிதேந்த்ரிய :
ப்ராய: ப்ரகல்பயா பக்த்யா விஷயைனாபிபூயதே 11.14.18
மனதை அடக்க இயலாமல் என் பக்தன் உலக இன்பங்களில் ஈடுபட்டாலும், அவன் அதிலேயே ஆழ்ந்து போய்விடுவதில்லை. என்னிடம் உள்ள பக்தியினால் அவனுடைய போக இச்சை விலகிப்போய்விடுகிறது.
यथाग्निः सुसमृद्धार्चिः करोत्येधांसि भस्मसात्।
तथा मद्विषया भक्तिरुद्धवैनांसि कृत्स्नशः।।19।।
யதாக்னி: ஸுஸம்ருத்தார்ச்சி : கரோத்யேதாம்ஸி பஸ்மஸாத்
ததா மத் விஷயா பக்திருத்த வைனாம்ஸி க்ருத்ஸ்னஶ : 11.14.19
உத்தவரே ! பெரிய அக்னி விறகுக்கட்டைகளைச் சாம்பலாக்கி விடுவதைப்போல, என்னிடம் கொண்டுள்ள பக்தி பாவக்குவியல்களை முற்றிலுமாகப் பொசுக்கி விடுகிறது.
न साधयति मां योगो न सांख्यं धर्म उद्धव।
न स्वाध्यायस्तपस्त्यागो यथा भक्तिर्ममोर्जिता।।20।।
ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ
ந ஸ்வாத்யாயஸ் தபஸ் யாகோ யதா பக்திர் மமோர்ஜிதா 11.14.20
உத்தவரே ! யோகம், ஸாங்க்யம், தர்மானுஷ்டானம், வேதாத்யயனம், தவம், த்யாகம், ஆகியவை என்னிடம் பக்தி செலுத்துவதால் உண்டாகும் சௌக்யத்தைக் கொடுப்பதில்லை.
भक्त्याहमेकया ग्राह्यः
பக்த்யாஹமேகயா க்ராஹ்ய : 11.14.21
ஶ்ரத்தையால் கூடிய பக்தியினால் மட்டுமே என்னை அடையமுடியும்.
Arjuna tree. from: www.theayurveda,org
இவ்வாறு உத்தவ கீதை பக்தியின் மேன்மையையே பேசுகிறது. பகவத் கீதையைப்போலவே இங்கும் பகவான் வேறு சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். ஆனால் கடைசியில் எதுவும் பக்திக்கு ஈடாகாது என நேரடியாகவே சொல்கிறார். இங்கு வரும் ஶ்லோகங்களுக்கு ஈடாக பகவத்கீதையிலிருந்து எடுத்துக்காட்டலாம். கட்டுரை விரியும் என்பதால் அதைச் செய்யவில்லை.
Thanks to: www,desicolours,com
No comments:
Post a Comment