57.ஸ்ரீ உத்தவ கீதை -2
உத்தவரென்னும் உத்தம பக்தர் !
ஸ்ரீ உத்தவர் தீவிர பக்திமான். மஹா பாக்யசாலி. பகவானுடன் கூடவே இருந்து தொண்டு செய்யும் பேறு பெற்றவர். அதோடு பகவான் உபயோகித்த பொருள்களையே உபயோகித்து ஆனந்தம் கண்டவர். இதை அவரே சொல்கிறார்:
त्वयोपभुक्तस्रग्गन्धवासोऽलंकारचर्चिताः।
उच्छिष्टभोजिनो दासास्तव मायां जयेमहि।।46।।
त्वयोपभुक्तस्रग्गन्धवासोऽलंकारचर्चिताः।
उच्छिष्टभोजिनो दासास्तव मायां जयेमहि।।46।।
த்வயோபபுக்த ஸ்ரக்கந்த வாஸோ அலங்காரசர்சிதா :
உச்சிஷ்ட போஜினோ தாஸாஸ் 11.6.46
தாங்கள் உபயோகித்த மாலை, சந்தனம், ஆடை அலங்காரப் பொருள்களை தங்கள் அருளாக நினைத்து நாங்கள் உபயோகித்தோம்.
பகவான் அருளில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை ! முனிவர்கள் தவம், விரதம் என முயற்சிகள் மேற்கொண்டு உடலை வருத்தி பகவானை அடைய முயல்கிறார்கள். ஆனால் நாங்கள் உங்கள் கதைகளையே பேசிக்கொண்டிருக்கிறோம். அதனால் மாயையைக் கடந்து விடுவோம்
என்கிறார்!
वयं त्विह महायोगिन्भ्रमन्तः कर्मवर्त्मसु।
त्वद्वार्तया तरिष्यामस्तावकैर्दुस्तरं तमः।।48।।
स्मरन्तः कीर्तयन्तस्ते कृतानि गदितानि च।
गत्युत्स्मितेक्षणक्ष्वेलि यन्नृलोकविडम्बनम्।।49।।
வயம் த்விஹ மஹாயோகின் ப்ரமந்த : கர்மவர்த்மஸு
த்வத் வார்த்தயா தரிஷ்யாமஸ் தாவகைர் துஸ்தரம் தம : 11.6.48
ஸ்மரன்த கீர்தயன்தஸ்தே க்ருதானி க்ருதானி கதிதானி ச
கத்யுத்ஸ்மி தேக்ஷணக்ஷ்வேலி யன்ன்ருலோக விடம்பனம் 11.6.49
மஹா யோகீஶ்வரரே ! நாங்களோ இங்கே கர்மமார்கத்திலேயே சுழன்றுகொண்டிருக்கிறோம். [ விரதம், தவம் எல்லாம் நாங்கள் செய்யவில்லை ]ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். இம்மண்ணுலக மக்களை ஏமாற்றும் விதமாக உள்ள தங்கள் நடை, புன்சிரிப்பு, பார்வை, பரிகாசம் முதலிய உங்கள் செயல்களையும், உபதேசங்களையும் நினைத்துக்கொண்டும் கீர்த்தனம் செய்துகொண்டும் இருப்பதால் , கடப்பதற்கு அரிதான இருள்கவ்விய மாயையை தங்களுடைய ஒரு சொல்லினாலேயே கடந்துவிடுவோம். [ விரதம், தவம் எல்லாம் எங்களுக்கு எதற்கு? ]
எத்தகைய தீவிரமான பக்தி இங்கே தெரிகிறது! இதை பகவானே அங்கீகரித்திருக்கிறார் ! இது பாகவதத்தில் ஓரிடத்தில் வெளியாகிறது.
உத்தவர் தங்கிவிட்டாரே!
உத்தவர் தங்கிவிட்டாரே!
'வ்ருஷ்ணி குலத்தவர்கள் அனைவரும் இறந்துபட, பகவானும் இவ்வுலகை நீத்தார். அந்நிலையில், உத்தவர் மட்டும் எவ்வாறு இங்கேயே தங்கிவிட்டார் ' என பரீக்ஷித் மஹாராஜா ஸ்ரீ ஶுக ப்ரஹ்மத்தைக் கேட்கிறார். அதற்கு ஸ்ரீ ஶுகர் பதில் சொல்கிறார் :
ப்ரஹ்ம ஶாபாபதேஶேன காலேனாமோகவாஞ்சித :
ஸம்ஹ்ருத்ய ஸ்வகுலம் நூனம் த்யக்ஷ்யந்தே ஹமசிந்தயத் 3.4.29
பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் ஸத்ய சங்கல்பர்; நினைத்ததை முடிப்பவர். ப்ராஹ்மண சாபம் என்பதை சாக்காகக் கொண்டு, தன் குலத்தையே அழித்து, தானும் இந்நிலவுலகை விடுத்துச் செல்லும்போது, இவ்வாறு எண்ணினார் போலும்.
அஸ்மால்லோகாதுபரதே மயி ஞானம் மதாஶ்ரயம்
அர்ஹத் யுத்தவ ஏவாத்தா ஸம்ப்ரத்யாத்மவதாம் வர : 3.4.30
நான் இவ்வுலகை விட்டுச் செல்கையில் என்னைப் பற்றிய தத்துவ ஞானத்தைப் பெற, ஆத்ம ஞானம்பெற்ற உத்தவர் ஒருவர்தான் தகுதியானவர்.
நோத்தவோண்வபி மன்யூனோ யத்குணைர் நார்தித: ப்ரபு
அதோ மத்வயுனம் லோகம் க்ராஹயன்னிஹ திஷ்டது 3.4.31
அவர் எனக்கு எவ்வகையிலும் குறைந்தவரல்லர். அவர் தன்னைத்தானே வெற்றிகொண்டவர்; புலனடக்கமுள்ளவர் ; உலக இன்பங்களைக்கண்டு மனம் சஞ்சலிக்காதவர்; ஆகவே என்னைப்பற்றி விளக்கிக்கொண்டு அவர் இங்கேயே இருக்கட்டும்.
இத்தகைய உத்தமருக்கு பகவானின் இறுதி உபதேசம் கிடைத்ததோ, அதற்கு அவர் பெயரே அமைந்ததோ அதிசயமா என்ன !
பகவத் கீதையில் பல விஷயங்களுக்கு நடுவில் பக்தியே ப்ரதானம் என்று நிறுவவேண்டியதாக இருந்தது. உத்தவகீதையிலோ, பக்திதவிர பிறவிஷயங்களுக்கு இடமே இல்லை! பகவான் ஒருவரே நிஜம்- உலகை பகவான் மயமாகப் பார்க்கவேண்டும் என்பதே பக்தன் மேற்கொள்ளவேண்டிய நிலை.
Krishna kirtan in Sofia, Bulgaria September,2015.
ISKCON sources.
கர்மக் கடலில் முழுகாதே
உலகில் வாழவேண்டியவன் ஏதோ ஒரு கர்மத்தில் ஈடுபட்டே தீரவேண்டிய நிலை இருக்கிறது. இதை ஒழுங்கு படுத்தவே வர்ணாசிரம ஆசாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் கர்மத்திலேயே ஈடுபடலாகாது.
பகவான் சொல்கிறார் :
श्रीभगवानुवाच।
निवृत्तं कर्म सेवेत प्रवृत्तं मत्परस्त्यजेत्।
जिज्ञासायां संप्रवृत्तो नाद्रियेत्कर्मचोदनाम्।।4।।
நிவ்ருத்தம் கர்ம ஸேவேத பரவ்ருத்தம் மத்பரஸ் த்யஜேத்
ஜிஞ்ஞாஸாயாம் ஸம்பரவ்ருத்தோ நாத்ரியேத் கர்மசோதனாம் 11.10.4
என்னிடம் நிலைபெற்றுள்ள மனிதன் ஆன்மீக மேன்மைக்கான கர்மங்களையே செய்யவேண்டும். உலகாயத செயல்களைத் துறக்கவேன்டும். பரம்பொருளை அறிய நாட்டம் கொண்டவன் பலன்களை அளிக்கும் (பிறவிக்கு ஹேதுவான ) கர்மாவில் ஈடுபடலாகாது. "செய் " என்று சொல்லும் ஶாஸ்திர வார்த்தைகளை மதிக்கக்கூடாது.
याभिर्भूतानि भिद्यन्ते भूतानां मतयस्तथा।
यथाप्रकृति सर्वेषां चित्रा वाचः स्रवन्ति हि।।7।।
யாபிர் பூதானி பித்யன்தே பூதானாம் மதயஸ்ததா
யதாப்ரக்ருதி ஸர்வேஷாம் சித்ரா வாச : ஸ்ரவன்தி ஹி 11.14.7
அவரவர்களுடைய இயல்பு, அறிவு ஆகியவற்றின் வேறுபாடு காரனமாக பற்பல கொள்கைகள் தோன்றின. யுக்திவாதங்கள் பெருகத் தொடங்கி
मन्मायामोहितधियः पुरुषाः पुरुषर्षभ।
श्रेयो वदन्त्यनेकान्तं यथाकर्म यथारुचि।।9।।
மன்மாயா மோஹிததிய : புருஷா : புருஷர்ஷப
ஶ்ரேயோ வதந்த்யனேகாந்தம் யதாகர்ம யதாருசி 11.14.9
புருஷர்களில் சிறந்த உத்தவரே ! அவர்கள் என் மாயையினால் மனம் மயங்கி, எந்தக் கர்மாவில் ருசியுள்ளதோ அதையே மோக்ஷ ஸாதனமாகக் கூறத் தொடங்கினார்கள் !
आद्यन्तवन्त एवैषां लोकाः कर्मविनिर्मिताः।
दुःखोदर्कास्तमोनिष्ठाः क्षुद्रानन्दाः शुचार्पिताः।।11।।
ஆத்யந்த வந்த ஏவைஷாம் லோகா: கர்மவினிர்மிதா :
து:கோதர்காஸ்தமோ நிஷ்டா : க்ஷூத்ரானந்தா ஶுசார்பிதா : 11.14.11
இவர்களால் சொல்லப்பட்ட கர்மாக்களுக்குரிய மேலுலகங்கள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் இந்த சுகங்களுக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு. அந்த சுகமும் அற்பமானது. அந்த அனுபவத்திற்குப்பின் துக்கம் ஏற்படுகிறது. அஞ்ஞானம் சூழ்ந்துகொள்கிறது. துன்பத்தில் தடுமாறுகிறார்கள்.
तावत्प्रमोदते स्वर्गे यावत्पुण्यं समाप्यते।
क्षीणपुण्यः पतत्यर्वागनिच्छन्कालचालितः।।26।।
தாவத் ப்ரமோததே ஸ்வர்ககே யாவத் புண்யம் ஸமாப்யதே
க்ஷீண புண்ய : பதத்யர்வாக நிச்சன் காலசாலித : 11.10.26
புண்ணியம் உள்ளவரை ஸ்வர்கத்தில் இன்பங்களை அனுபவிக்கிறான். புண்ணீயம் தீர்ந்ததும் , அவன் விரும்பாவிட்டாலும் காலம் அவனைக் கீழே தள்ளிவிடுகிறது!
आज्ञायैवं गुणान्दोषान्मयादिष्टानपि स्वकान्।
धर्मान्संत्यज्य यः सर्वान्मां भजेत स सत्तमः।।32।।
ஆஜ்ஞாயைவம் குணான் தோஷான் மயாஅதி ஷ்டானபி ஸ்வகான்
தர்மான் ஸந்த்யஜ்ய ய: ஸர்வான் மாம் பஜதே ஸ ஸத்தம : 11.11.32
நலன் தரும் கர்மங்கள் என என்னால் சொல்லப்பட்டவைகூட , என்னிடம் தீவிர பக்திக்கு தடையாக இருப்பதாகக் கருதி, எல்லா தர்மங்களையும் முற்றிலுமாகத் த்யாகம் செய்துவிட்டு என்னையே வழிபடும் பக்தன் மிகவும் உத்தமமானவன்.
मर्त्यो यदा त्यक्तसमस्तकर्मा
निवेदितात्मा विचिकीर्षितो मे।
तदाऽमृतत्वं प्रतिपद्यमानो
मयाऽऽत्मभूयाय च कल्पते वै।।34।।
மர்த்யோ யதா த்யக்த ஸமஸ்த கர்மா
நிவேதிதாத்மா விசிகீர்ஷிதோ மே
ததாம்ருதத்வம் ப்ரதிபத்யமானோ
மயா ஆத்மபூதாய ச கல்பதே வை 11.29.34
எப்போது ஒருவன் எல்லாக் கர்மங்களையும் துறந்துவிட்டு என்னையே சரணடைகிறானோ, அப்போதுதான் நான் அவனை மேன்மைப்படுத்துகிறேன். அமரத்வம் அடைந்த அவன், என்னுடன் ஐக்யமாவதற்குத் தகுதிபெறுகிறான்.
பகவானைக் கொண்டாடவேண்டும் !
Jagannath Festival in Stockholm, Sweden. 2014.
Picture from ISKCON sources
तस्माज्जिज्ञासयात्मानमात्मस्थं केवलं परम्।
संगम्य निरसेदेतद्वस्तुबुद्धिं यथाक्रमम्।।11।।
தஸ்மாத் ஜிஞ்ஞாஸயா ஆத்மானமாத்மஸ்தம் கேவலம் பரம்
ஸங்கம்ய நிரஸேதே தத்வஸ்து புத்திம் யதாக்ரமம் 11.10.11
ஆதலினால், ஆன்ம நாட்டம் உள்ளவன், அனாத்மப் பொருள்கள் சத்தியம் என்ற எண்ணத்தை விவேகத்தால் விட்டுவிட்டு, தனக்குள் விளங்குவதான தனிப்பெரும் பொருளான ஆத்மாவைக் கண்டறிய வேண்டும்.
न कुर्यान्न वदेत्किंचिन्न ध्यायेत्साध्वसाधु वा।
आत्मारामोऽनया वृत्त्या ।।17।।
ந குர்யான்ன வதேத் கிஞ்சின்ன த்யாயேத் ஸாத்வஸாது வா
ஆத்மாராமோ அனயா வ்ருத்யா 11.11.17
நல்லதோ, கெட்டதோ - எதையும் செய்யாமலும், பேசாமலும், நினையாமலும் இருக்கவேண்டும். தன் ஆத்மாவிலேயே ஆழ்ந்து ஆனந்தம் காணவேண்டும்.
शब्दब्रह्मणि निष्णातो न निष्णायात्परे यदि।
ஶப்தப்ரஹ்மணி நிஷ்ணாதோ ந நிஷ்ணாயாத் பரே யதி 11.11.18
பரப்ரஹ்ம அனுபவம் இல்லையானால், வேதங்களைக் கற்றறிந்தவருக்கு அதனால் என்ன பயன் ?
यस्यां न मे पावनमङ्ग कर्म
स्थित्युद्भवप्राणनिरोधमस्य।
लीलावतारेप्सितजन्म वा स्याद्
बन्ध्यां गिरं तां बिभृयान्न धीरः।।20।।
யஸ்யாம் ந மே பாவனமங்க கர்ம
ஸதித்யுத்பவ ப்ராண நிரோதமஸ்ய
லீலாவதாரேப்ஸித ஜன்ம வா ஸ்யாத்
வந்த்யாம் கிரம் தாம் பிப்ருயான்ன தீர : 11.11.20
என்னுடைய அவதார லீலைகள் புனிதமானவை. இந்த உலகைப் படைத்துக் காத்து, அழிக்கும் அற்புத சக்தியுள்ளவை. இவற்றைப் போற்றாத பேச்சுக்கள் வீணானவயே. புத்தியுள்ளவன் இத்தகைய வீண்பேச்சில் ஈடுபடலாகாது.
एवं जिज्ञासयाऽपोह्य नानात्वभ्रममात्मनि।
उपारमेत विरजं मनो मय्यर्प्य सर्वगे।।21।।
ஏவம் ஜிஞ்ஞாஸ யாபோஹ்ய நானாத்வப்ரமமாத்மனி
உபாரமேத விரஜம் மனோ மய்யர்ப்ய ஸர்வகே 11.11.21
இவ்விதம் உண்மையை உணர்ந்து, ஆன்மாக்கள் பல என்ற ப்ரமையை விட்டொழித்து, தூய்மையராகி, எங்கும் நிறைந்த என்னிடமே மனதை அர்ப்பிக்க வேண்டும். மற்ற சிந்தனை- செயல்களிலிருந்து விடுபடவேண்டும்.
श्रद्धालुर्मे कथाः श्रृण्वन्सुभद्रा लोकपावनीः।गायन्ननुस्मरन्कर्म जन्म चाभिनयन्मुहुः।।23।।
ஶ்ரத்தாலுர்மே கதா: ஶ்ருண்வன் ஶுபத்ரா லோகபாவனீ :
காயன் அனுஸ்மரன் கர்ம ஜன்ம சாபி நயன் முஹு : 11.11.23
ஶ்ரத்தையுடன் கூடிய பக்தர்கள், மிகவும் மங்களமானவையும், உலகத்தைப் புனிதப் படுத்துபவையுமான என்னுடைய கதைகளைக் கேட்டும், பாடியும், நினைத்தும் பார்க்கவேண்டும். என்னுடைய அவதாரங்களை அடிக்கடி கொண்டாடவேண்டும்.
Hare Krishna Rath Yatra in London: June 2012.
Picture from ISKCON, UK. thanks.
இங்கு பகவான் சொல்பவை பகவத் கீதையில் வரும் கருத்துக்களின் மறு பதிப்பாக இருப்பதை உணரலாம்!
நாம் வைதீக வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டாலும், இன்று நாம் எவ்வளவு பண்டிகைகள் கொண்டாடுகிறோம் ! இவையெல்லாம் பல ரூபங்களில் பகவானின் லீலைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சிகளே ! எல்லாம் பாகவத தர்மத்தை அனுசரிப்பவையே !
No comments:
Post a Comment