54. கீதையின் முக்கிய ஶ்லோகங்கள் ?
ஸ்ரீமத் பகவத் கீதையில் 700 ஶ்லோகங்கள் இருக்கின்றன. இவற்றில் 569 ஶ்லோகங்கள் பகவான் வாக்காக இருப்பவை. இவற்றில் எவற்றை நாம் முக்கியமானதெனச் சொல்ல முடியும்? அப்படிச் சொல்ல நமக்கு என்ன யோக்யதை இருக்கிறது ?
கீதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்து ஒருசில ஶ்லோகங்கள் அருமையானதெனவோ, முக்கியமானதாகவோ தோன்றும். இது இயற்கையே.
கீதையின் ஸாரம்
ஒரு சமயம் பகவான் ஸ்ரீ ரமணர் முன்னிலையில் இது பற்றிய பேச்செழுந்தது. '700 ஶ்லோகத்தையும் தினமும் பாரயணம் செய்வது சிரமாக இருக்கிறது; ஏதாவது ஒரு ஶ்லோகத்தை கீதையின் சாரமாகச் சொல்லக்கூடாதா ' என்று ஒருவர் கேட்டார். ஸ்ரீ ரமணர் 10வது அத்யாயத்தின் 20வது ஶ்லோகத்தை எடுத்துச் சொன்னார் :
अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च।।10.20।।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च।।10.20।।
அஹம் ஆத்மா குடாகேஶா ஸர்வபூதாஶயஸ்தித:
அஹம் ஆதிஶ்ச மத்யம் ச பூதானாம் அன்த ஏவ ச
குடாகேஶா ! நான் எல்லா உயிரினங்களின் இதயத்திலும் ஆத்மாவாக இருக்கிறேன். உயிரினங்களுக்கெல்லாம் ஆதியாகவும், நடுவாகவும், முடிவாகவும் நானே இருக்கிறேன்.
பின்னர், பக்தர்களின் வேண்டுகோளுக்கிசைந்து, 42 ஶ்லோகங்கள் பொறுக்கியெடுத்து, அவற்றை ஒரு வரிசையில் அமைத்தார். காந்திஜியும் 42 ஶ்லோகங்கள் தேர்ந்தெடுத்தார் ! 17 ஶ்லோகங்கள் இவை இரண்டிலும் பொதுவாக வருகின்றன !
பகவான் சொன்னது அத்தனையுமே முக்கியமானவைதாம். இருந்தாலும் பலவிஷயங்கள் பொதுவாகச் சொன்னவை. ஆத்ம சாதனைக்கென அவர் உபதேசித்தவை ஆத்மா பற்றியவை, கர்மம் பற்றியவை, யோகம் பற்றியவை, ஞானம் பற்றியவை மற்றும் பக்தி பற்றியவை எனலாம். இதில் பக்தி பற்றியவையே மிக அதிகம்- சுமார் 150. இவற்றிலும் பகவான் தன்னை முன்னிலைப்படுத்திச் சொன்னவை சுமார் 50.
ஹிந்து மத நூல்கள் வேறு எதிலும் இல்லாதபடி, கீதையில் பகவான் தன் பெயரிலேயே சாதனை நெறிகளை விளக்கியிருக்கிறார்.
தன் முடிந்த முடிபாகச் சில விஷயங்களைச் சொல்லி யிருக்கிறார்.
நாம் முக்கியமென சிலவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், இவற்றைத் தேர்ந்தெடுப்பது தானே முறையாகும் ?
பகவான் எந்த சாதனையையும் நிராகரிக்கவில்லை.. ஆனால் தன் கருத்து என்னும்போது பக்தியையே குறிப்பிட்டுச் சொல்கிறார். இந்த வகையில் அவர் வாக்கில் வந்த சில ஶ்லோகங்கள் / வாக்யங்கள் மிக முக்கியமானவை.அவற்றை நாம் கீழே தருகிறோம். விருப்பம் உள்ளவர்கள் இவற்றை மனப்பாடம் செய்துகொள்ளலாம்.
1. युक्त आसीत मत्परः।
யுக்த ஆஸீத மத் பர 2.61, 6.14.
என்னையே மேலான கதியாகக் கொண்டு நிலைபெற்று இருக்கவேண்டும்.
2. जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन।।4.9।।
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுன 4.9
அர்ஜுனா ! என்னுடைய பிறப்பும் செயலும் தெய்வீகமானவை- ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவை. இதை உள்ளபடி அறிபவன் உடலைத் துறந்து பின் மறுபிறப்பு எய்துவதில்லை. என்னையே அடைந்து விடுகிறான்.
3. भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम्।
सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति।।5.29।।
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வலோக மஹேஶ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம் ஞாத்வா மாம் ஶான்தி ம்ருச்சதி 5.29
எல்லா யாகங்களையும் தவங்களையும் ஏற்றுக்கொள்பவன் நானே என்றும், அகில உலகத்திற்கும் மேலான ஈஶ்வரன் நான் என்றும், எல்லாப் பிராணிகளிடமும் அருள் உடையவன் என்றும் என்னை அறிந்து என் பக்தன் மேலான அமைதியை அடைகிறான்.
4. यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति।
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति।।6.30।।
யோ மாம் பஶ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஶ்யதி
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி 6.30
எவன், எல்லா சராசரங்களிலும் நானே வ்யாபித்திருப்பதாகப் பார்க்கிறானோ, எல்லா சராசரங்களும் என்னில் ( என்னுள் ) அடங்கி இருப்பதாகப் பார்க்கிறானோ, அவனுக்கு நான் காணாமல் போவதில்லை; அவனும் எனக்குக் காணப்படாமல் போவதில்லை. [ எல்லாம் வாசுதேவனே என்பதன் தாத்பர்யம் இது - வாஸுதேவ: ஸர்வம் இதி . ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ]
5. दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते।।7.14।।
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யன்தே மாயாமேதாம் தரன்தி தே 7.14
முக்குணமயமான இந்த என்னுடைய தெய்வீக மாயை கடப்பதற்கு அரியது. எவர்கள் என்னையே புகலாகக் கொள்கிறார்களோ அவர்கள் இந்த மாயையைக் கடந்துவிடுகிறார்கள்.
[இந்த ப்ரபஞ்சம் வாஸுதேவமயமாக இருந்தபோதிலும், முக்குண வசப்பட்ட நமக்கு அதை உணர முடிவதில்லை. பக்தர்களே பகவானுடைய அருளால் அதை உணர்கிறார்கள். ]
6. अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम्।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः।।8.5।।
அன்த காலேச மாமேவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ச மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஶய : 8.5
மரண சமயத்தில் எந்த மனிதன் என்னையே நினைத்துக்கொண்டு சரீரத்தை விடுகிறானோ, அவன் என் ஸ்வரூபத்தையே அடைகிறான். இதில் சிறிதுகூட சந்தேஹம் இல்லை.
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர 8.7
ஆகையால் நீ எல்லா காலங்களிலும் (இடைவிடாது ) என்னையே நினைத்துக்கொண்டிரு.
7. मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम्।
नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः।।8.15।।
மாமுபேத்ய புனர்ஜன்ம து:காலயம் அஶாஶ்வதம்
நாப்னுவன் தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம கதாம். 8.15
என்னை அடைதலாகிய அந்த உயர்ந்த ஸித்தியை அடைந்துவிட்ட மஹாத்மாக்கள் , துன்பங்களுக்கு உறைவிடமானதும் நிலையில்லாததுமான மறுபிறவியை அடைவதில்லை.
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते।।8.16।।
மாமுபேத்ய து கௌன்தேய புனர்ஜன்ம ந வித்யதே 8.16
குன்தி மகனே ! என்னை அடைந்த பிறகு மறுபிறவி கிடையாது.
8.अनन्याश्िचन्तयन्तो मां ये जनाः पर्युपासते।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्।।9.22।।
அனன்யாஶ் சிந்தயந்தோமாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம். 9.22
வேறு சிந்தனை இல்லாமல், எவ்விதப் பயனையும் எதிர்பார்க்காமல் எவர்கள் என்னையே உபாசிக்கின்றனரோ, அவர்களுக்கு வேண்டியதைத்தந்து அதைக் காக்கும் பொறுப்பையும் நானே வஹிக்கிறேன்.
9.कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति।।9.31।।
கௌன்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி 9.31
கௌன்தேய ! என் பக்தர்கள் அழிவடைவதில்லை என்று ப்ரதிக்ஞை செய்கிறேன் !
10.अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम्।।9.33।।
அனித்யம் அஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வமாம் 9.33
சுகமற்றதும் நிலையில்லாததுமான இந்த உலகை (பிறப்பை ) அடைந்த நீ எப்போதும் என்னை வழிபடுவாயாக.
11.मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः।।9.34।।
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்யைவம் ஆத்மானம் மத்பராயண : 9.34
என்னிடமே மனதை நிலை நிறுத்து. என் பக்தனாக ஆகிவிடு. என்னையே பூஜிப்பவனாக ஆகிவிடு. என்னையே நமஸ்கரி. இவ்விதம் புலன்களை என்னிடம் ஈடுபடுத்தி, என்னையே அடையத்தக்க உயர்ந்த கதியாகக் கருதி என்னையே அடைவாயாக.
12.तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम्।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते।।10.10।।
தேஷாம் ஸதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயான்தி தே 10.10
எப்பொழுதும் என்னிடமே ஈடுபட்ட மனமுடையவர்களும், பக்தியுடன் வழிபடுகின்றவர்களுமான பக்தர்களுக்கு, அவர்கள் எந்த புத்தியோகத்தின் மூலம் என்னை அடைவார்களோ அதை நானே அளிக்கிறேன்.
13.भक्त्या त्वनन्यया शक्यमहमेवंविधोऽर्जुन।
ज्ञातुं दृष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परंतप।।11.54।।
பக்த்யா த்வனன்யயா ஶக்ய அஹம் ஏவம் விதோர்ஜுன
ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரன்தப 11.54
அர்ஜுனா ! இவ்விதம் அனன்யபக்தி ஒன்றினால் மட்டுமே நான் காணப்படக் கூடியவன். தத்வரீதியாக என்னை அறியவும் கூடும். என்னோடு ஒன்றிவிடவும் முடியும்.
14.तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम्।।12.7।।
தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி நசிராத் பார்த மய்யாவேஶித சேதஸாம் 12.7
என்னிடம் மனதை ஈடுபடுத்தியவர்களான பக்தர்களை சீக்கிரமாகவே இந்த மரண வடிவான ஸம்ஸாரத்திலிருந்து கரையேற்றுபவனாக நான் ஆகிறேன்.
15.मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः।।12.8।।
மய்யேவ மன ஆதத்ஸ்வ பயி புத்திம் நிவேஶய
நிவஸ்சிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஶம்ஶய : 12.8
என்னிடமே மனதை நிலைக்கச்செய். என்னிடமே புத்தியை ஈடுபடுத்து. அதன்பிறகு என்னிடமே வாழ்வாய். இதில் சிறிதும் சந்தேஹமில்லை.
16.भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः।
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्।।18.55।।
பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஶச்சாஸ்மி தத்வத:
ததோமாம் தத்வதோ ஞாத்வா விஶதே ததனன்தரம் 18.55
பக்தியின் மூலமாகவே அவன் என்னை யார் என்றும் , எத்தன்மையானவன் என்றும் உள்ளபடியே அறிகிறான். அவ்வாறு அறிந்து அக்கணமே என்னுடன் ஐக்யமாகிறான்.
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते।।13.18।।
மத் பக்த ஏதத் விஞ்ஞாய மத்பாவாய உபபத்யதே 13.18
என்னுடைய பக்தன் இதை உள்ளபடி அறிந்து என்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறான்.
17.तमेव शरणं गच्छ सर्वभावेन भारत।
तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्।।18.62।।
தமேவ ஶரணம் கச்ச ஸர்வபாவேன பாரத
தத் ப்ரஸாதாத் பராம் ஶான்திம் ஸ்தானம் ப்ராப்யஸி ஶாஶ்வதம். 18.62
பரத குலத்தவனே ! நீ எவ்வகையாலும் அந்த பரமேஶ்வரனையே ஶரணமடைவாயாக. அவர் அருளால் நீ உயர்ந்த அமைதியையும் ஶாஶ்வதமான பரமபதத்தையும் அடைவாய்.
18.मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे।।18.65।।
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே 18.65
நீ என்னிடமே மனதை நிலை நிறுத்து. என்பக்தனாகிவிடு. என்னையே வழிபடு. என்னையே நமஸ்கரி. இவ்வாறு நீ என்னையே அடைவாய். இதை நான் ப்ரதிக்ஞை செய்கிறேன். நீ என் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.
19.सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज।
अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः।।18.66।।
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச : 18.66
தர்மங்கள் ( உனக்கேற்பட்ட கர்மங்கள் ) அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, என் ஒருவனையே ஶரணமாக அடைவாயாக.நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.
இதுவரை பகவான் நம் ஒவ்வொருவரின் சாதனைக்கான முறைகளைக் கூறினார். இனி, சமுதாயம் முழுமைக்குமான ஒரு அரிய செய்தியைச் சொல்கிறார் . இந்த நம்பிக்கையே துஷ்டர்களின் கொடுமையைத் தாங்கும் சக்தியை நமக்குத் தருகிறது !
20.यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।
अभ्युत्थानमधर्मस्य तदाऽऽत्मानं सृजाम्यहम्।।4.7।।
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் 4.7
பாரத ! எப்பொதெல்லாம் தர்மத்திற்குக் குறைவு நேர்ந்து அதர்மம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் நான் என்னைப் படைத்துக்கொள்கிறேன். [காணுமாறு வெளிப்படுகிறேன். ]
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे।।4.8।।
धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे।।4.8।।
பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே 4.8.
ஸாதுக்களைக் காப்பதற்கும் துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் ஸம்பவிப்பேன். [அவதரிப்பேன் ]
The importance of these 25 slokas consists in the fact that each one of them contains an assertion and an assurance. They directly relate to our Liberation or Realisation. They give us immense hope and confidence. Bhagavan did not come to teach us some technical doctrine or complicated philosophy. He came to show us the way to Liberation. Nay, He came to show that reaching/realising Him is Liberation and the Supreme felicity. This is the message contained in the slokas selected above.
No comments:
Post a Comment