48.கீதை என்னும் பொக்கிஷம்-10
ஸ்ரீ பகவான் " நான் சொல்லும் உயர்ந்த ரஹசியத்தை அசூயை இல்லாமல் கேள் ' என்று சொல்லி பக்தியின் லக்ஷ ணங்களை "ராஜ வித்தை, ராஜ ரஹஸ்யம் " என்று விவரித்தார். அர்ஜுனன் மஹா பக்தன். அவனுக்கு மேலும் சொல்லவேண்டுமென்று ஆசை! அதனால் மீண்டும் தொடர்கிறார்.
श्री भगवानुवाच
भूय एव महाबाहो श्रृणु मे परमं वचः।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया।।10.1।।
பூய ஏவ மஹாபாஹோ ஶ்ருணு மே பரமம் வச
யத்தேஅஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித காம்யயா 10.1
பெருந்தோள் படைத்தவனே! என்னிடம் ப்ரியம் கொண்டவனான உனக்கு உன் நன்மைக்காக மீண்டும் சொல்வேன். என்னுடைய அந்த உயர்ந்த வார்த்தைகளைக் ( மே பரமம் வச ) கேள்.
பகவான் பக்தி பற்றிச் சொல்லும் அடைமொழிகளைக் கவனிக்கவேண்டும். குஹ்ய தமம் (9.1), ராஜவித்யா, ராஜகுஹ்யம்,
பவித்ரம் , உத்தமம், தர்ம்யம், அவ்யயம் (9.2 ) என்று முன்பு சொன்னார். இங்கு என் உயர்ந்த வார்த்தை என்கிறார். பின்பு மேலும் கூறுவார்.
न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः।।10.2।।
ந மே விது: ஸுரகணா : ப்ரபவம் ந மஹர்ஷய:
அஹமாதிர் தேவானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஶ : 10.2
என்னுடைய தோற்றத்தை [ ஆத்ம மாயையினாலே அவதாரமாக வெளிப்படுவதை ] தேவ கணங்கள் அறியமாட்டார்கள். மஹரிஷிகளும் அறியமாட்டார்கள். ஏனினில் நானே எல்லாவகையிலும் தேவர்களுக்கும் மஹரிஷிகளுக்கும் ஆதிகாரணம் ஆவேன்.
यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम्।
असम्मूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते।।10.3।।
யோ மாம் அஜம் அனாதிம் ச வேத்தி லோக மஹேஶ்வரம்
அஸம்மூட : ஸ மர்த்யேஷு ஸர்வபாபை : ப்ரமுச்யதே 10.3
எவன் என்னை பிறப்பற்றவன், அநாதியானவன், ப்ரபஞ்சத்துக்கெல்லாம் தலைவன் என்று உள்ளபடி அறிகிறானோ அவன் மனிதர்களில் மிகவும் அறிவாளி. அவன் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் அவதாரமாக வந்த பகவானை அறிவதில்லை. ஏதோ மனிதன் என்றே நினைக்கிறார்கள். இதை 7.24, 25 லும், 9.11லும் சொன்னார்.
gs.nirdeshak.com
gs.nirdeshak.com
பகவானைப்பற்றி அறிய ஓரளவாவது அவரது விபூதிகளைத் [மஹிமைகளைத்] தெரிந்துகொள்ள வேணும்.
बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च।।10.4।।
अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः।।10.5।।
बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च।।10.4।।
अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः।।10.5।।
புத்திர் ஞான ஸம்மோஹ : க்ஷமா ஸத்யம் தம: ஶம:
ஸுகம் து:கம் பவோஅபாவோ பயம் ச அபயமேவ ச 10.4
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தானம் யஶோஅயஶ:
பவந்தி பாவா பூதானாம் மத்த ஏவ ப்ருதக்விதா : 10.5
நல்ல புத்தி (தீர்மானம் செய்யும் திறன் ), ஞானம், மோஹமின்மை, பொறுமை, ஸத்யம், புலனடக்கம், மனவடக்கம், இன்ப-துன்பம், தோற்றம்-மறைவு, பயம்-பயமின்மை, அஹிம்ஸை, ஸமபாவனை, மகிழ்ச்சி, தவம், தானம், கீர்த்தி-அபகீர்த்தி - உயிர்களிடம் காணப்படும் இத்தகைய (வேறுபட்ட ) குணாதிசயங்கள் என்னிடமிருந்தே உண்டாகின்றன.
महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः।।10.6।।
மஹர்ஷய : ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா
மத்பாவா மானஸாஜாதா யேஷாம் லோக இமா : ப்ரஜா : 10.6
உலகில் உள்ள ப்ரஜைகள் அனைவரும் எவரிடமிருந்து உண்டானார்களோ அந்த ஏழு மஹரிஷிகளும், அவர்களுக்கும் முந்திய [சனகர் முதலிய ] நான்கு முனிவர்களும், அவ்வாறே [ ஸ்வாயம்புவர் முதலிய பதிநான்கு ] மனுக்களும் என் ஸங்கல்பத்தினாலேயே தோன்றியவர்கள்.
एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः।।10.7।।
ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்வத:
ஸோஅவிகம்பேன யோகேன யுஜ்யதே நாத்ர ஸம்ஶய : 10.7
எவன் என்னுடைய இந்த மஹிமையையும் யோக சக்தியையும் உள்ளபடி அறிகிறானோ அவன் நிலைத்த பக்தியோகத்துடன் கூடியவனாக ஆகிறான். இதில் கொஞ்சமும் சந்தேஹமில்லை.
இதை அறிந்தவன் என்ன செய்கிறான் ?
अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः।।10.8।।
अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः।।10.8।।
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த : ஸர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜன்தே மாம் புதா பாவ ஸமன்விதா : 10.8
நானே உலகமனைத்தும் தோன்றுவதற்குக் காரணம், என்னாலேயே அகில உலகமும் இயங்குகிறது என்பதை அறிந்த, பக்தியும் நம்பிக்கையும் கொண்ட அறிஞர்களான பக்தர்கள் என்னையே வழிபடுகிறார்கள்.
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।
மச்சித்தா மத்கதப்ராணா போதயன்த பரஸ்பரம்
கதயன்தஶ்ச மாம் நித்யம் துஷ்யன்தி ச ரமன்தி ச 10.9
என்னையே நினைத்துக்கொண்டிருப்பவர்களும், என்னிடத்தில் உயிரை வைத்தவர்களும் (ஆகிய பக்தர்கள் ) தங்களுக்குள் என்னைப்பற்றி விளக்கிக்கொண்டும், என் ப்ரபாவங்களைப் பேசிக்கொண்டும் எப்பொழுதும் மகிழ்சி நிரம்பிய மனத்துடன் என்னிடமே இன்புறுகிறார்கள்.
இதை நாம் உலகியலிலும் பார்க்கிறோம். சிகரெட் பிடிப்பவனானாலும் சரி, மது அருந்துபவனானாலும் சரி, சீட்டாடிகளும் சரி, நான்குபேர் சேர்ந்தே மகிழ்கிறார்கள். அதற்காகவே 'கிளப் ' முதலிய வசதிகளை வைத்திருக்கிறார்கள்.
பக்தியும் உன்னத போதைதான் ! இதைக் கண்டவர்களும் நான்குபேருடன் கூடிக் கொண்டாடுகிறார்கள் ! பஜனை, நாம ஸங்கீர்த்தனம் , ஸ்தல யாத்திரை போன்றவை இப்படித் தோன்றியவையே . ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகைகள் பாடுகிறார்கள்:
तव कथामृतं तप्तजीवनं
कविभिरीडितं कल्मषापहम् ।
श्रवणमङ्गलं श्रीमदाततं
भुवि गृणन्ति ते भूरिदा जनाः ॥ ९
தவகதாம்ருதம் தப்த ஜீவனம் கவிபிரீடிதம் கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் ஸ்ரீமதாததம் புவி க்ருணன்தி தே பூரிதா ஜனா :
உமது கதை என்னும் அமுதம் முத்தாபங்களால் வாடியவரை வாழவைப்பது. கவிகள் துதிப்பது. பாவத்தைப் போக்குவது. கேட்க இனியது. மங்களம் தருவது. திருவளிப்பது. எங்கும் பரவியது. இதைச் சொல்பவர்களே இப்பூவுலகில் மிகவும் புண்யசாலிகள்.
ஸ்ரீமத் பாகவதம். 10.33.9
Sri Chaitanya Mahaprabhu
ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் பாடுகிறார் :
ஹரிதாஸுலு வெடலெ முச்சட
ஆனந்தமாயெ தயாளோ
ஹரி கோவிந்த நரஹரி ராம க்ருஷ்ணாயனி
வருஸக நாமமு கருணதோ ஜேயுசு
சக்கனி ஹரிசே ஜிக்கிதி மனி மதி
ஜொக்குசு நாமமே திக்கனி பொகடுசு
ஹரிதாஸுலு...........
தயாளனே ! ஹரிதாஸர்கள் சேர்ந்து வீதியில் வரும் காட்சி பேரானந்தம் அளிக்கிறது. " ஹரி, கோவிந்த, நரஹரி, ராமக்ருஷ்ண " என்று வரிசையாகத் திரு நாமங்களை மனம் உருகி ஸங்கீர்தனம் செய்துகொண்டு வருகிறார்கள். பகவானுடன் நன்கு ஒன்றுகூடினோமென்று மதிமயங்கி, அவன் நாமமே கதி என்று புகழ்ந்து ஸங்கீர்த்தனம் செய்துவரும் காட்சி பேரானந்தம் தருகிறது. [ தானும் அவர்களுடன் சேர்ந்து வருவதாகப் பாடுகிறார் ஸ்வாமிகள். ]
இவ்வாறு, பகவானுடைய மஹிமையை உணர்ந்தவர்கள் பரஸ்பரம் கூடிப் பாடியாடுகிறார்கள்.
Contemporary scene ! The 'spirit' of God's names is infectious !
பகவான் இவர்களுக்கு என்ன செய்கிறார் ?
तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम्।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते।।10.10।।
தேஷாம் ஸதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்
ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயான்தி தே 10.10
எப்பொழுதும் என்னிடமே ஈடுபடுகின்றவர்களும், பக்தியுடன் என்னை வழிபடுபவர்களுமாகிய அவர்களுக்கு, எந்த புத்தியோகத்தின் மூலம் என்னை அடைவார்களோ அதை நான் அளிக்கிறேன்.
तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता।।10.11।।
தேஷாமேவானு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தம:
நாஶயாம் ஆத்மபாவஸ்தோ ஞானதீபேன பாஸ்வதா 10.11
அவர்களுக்கு அருள்புரிவதற்காக, அவர்கள் மனதில் நிலைபெற்று , அறியாமையால் தோன்றிய இருளை ஞானமென்னும் தீபத்தின் ஒளியால் நானே அழிக்கிறேன்.
இதுவரை பகவான் அங்கங்கே தன் மஹிமைகளை ஓரளவுக்கு சொல்லிவந்தார். அர்ஜுனனுக்கு க்ருஷ்ணனே பகவான் - பரம்பொருள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. பகவானின் பெருமையை மேலும் அறியவேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. "ஜனார்தனா ! உங்கள் விபூதியை விஸ்தாரமாகக் கூறவேண்டும் " என்று கேட்டுக்கொள்கிறான். பகவானும் தன் விபூதிகளைச் சொல்கிறார்.
இங்கு, விபூதி என்பது என்ன ? இந்த உலகமே பகவான் படைப்பு என்றால், அதுவே அவர் விபூதிதானே ! ஆனாலும் சில இடத்தில் சில பொருட்கள் சிறப்பு பெறுகின்றன. தண்ணீர் எல்லா இடத்தில் இருந்தாலும் சில தண்ணீரையே குடிக்கப் பயன்படுத்துகிறோம்; சிலதை கை, கால் கழுவ மட்டுமே பயன்படுத்துகிறோம். சில நீரை ஸ்வாமி பூஜைக்கு வைத்துக்கொள்கிறோம். அந்த வகையில் சில இடங்களில், சில பொருள்களில் பகவானின் வெளிப்பாடு சிறப்பானதாகக் கொண்டாடுகிறோம்.
பகவானும் தன் விபூதிகள் சிலவற்றைச் சொல்கிறார். ஆனால் இவற்றுக்கு எல்லையே இல்லை.
नास्त्यन्तो विस्तरस्य मे।।10.19।।
நாஸ்த் யன்தோ விஸ்தரஸ்ய மே 10.19
என்னுடைய விரிவுக்கு முடிவே இல்லை.
यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम्।।10.41।।
யத்யத்விபூதி மத்ஸத்த்வம் ஸ்ரீமதூரிஜிதமேவ வா
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம்ஶ ஸம்பவம். 10.41
எது எது சிறப்புடையதோ, ஒளிபொருந்தியதோ, சக்தி படைத்ததோ அந்தப் பொருள் எல்லாம் என்னுடைய ஶக்தியின் அம்ஶத்தின் ஒரு பகுதியின் வெளிப்பாடே என்று தெரிந்துகொள்.
अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन।
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत्।।10.42।।
அதவா பஹுனை தேன கிம் ஞாதேன தவார்ஜுன
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நம் ஏகாம்ஶேன ஸ்திதோ ஜகத். 10.42
மேலும் அர்ஜுனா ! இவ்வாறு அதிகம் தெரிந்துகொள்வதால் உனக்கு என்ன லாபம் ? நான் இந்த உலகனைத்தையும் என்னுடைய ஒரு அம்ஸத்தினால் தாங்கிவருகிறேன்.
பகவான் விவரித்த விபூதிகளில் மிக முக்கியமான ஒன்று - என்றும் நாம் மறக்கக்கூடாதது:
अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च।।10.20।।
அஹம் ஆத்மா குடாகேஶ ஸர்வபூதாஶயஸ்தித:
அஹமாதிஶ்ச மத்யம் ச பூதானாம் அன்த ஏவ ச 10.20
குடாகேசா ! (தூக்கத்தை வென்றவனே ) நான் எல்லாப் ப்ராணிகளின் இதயத்திலும் ஆத்மாவாக இருக்கிறேன். உயிரினங்களுக்கெல்லாம் ஆரம்பமாகவும், நடுவாகவும், முடிவாகவும் நானே இருக்கிறேன்.
[13.17ம், 15.15ம் , 18.61ம் பார்க்க ]
பகவான் எல்லா ப்ராணிகளின் இதயத்தில் இருக்கிறர் என்பதை உணர்ந்த மனிதன் எதற்காவது கெடுதல் செய்ய நினைப்பானா ? எதையாவது உதாசீனம் செய்வானா ? இந்த ஒரு எண்ணமே நம்மை நல்வழிப்படுத்தப் போதுமான அருமருந்தாகும் !
பகவானுடைய விபூதிகளைத் தெரிந்துகொள்வதென்பது நமக்கு சாத்தியமில்லை. பீஷ்மர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ஓரளவுக்கு விவரிக்கிறார். ஆனால் எல்லையில்லாத பகவானின் பெருமைக்குமுன் இவையெல்லாம் எம்மாத்திரம் !
பகவானுடைய விபூதிகளை பகவான் வாயிலாகவே கேட்ட அர்ஜுனனுக்கு இப்போது ஒரு புதிய ஆசை முளைக்கிறது. இத்தகைய மஹிமைகளைத் தாங்கிய பகவானின் உருவம் எப்படி இருக்கும்? அதைப் பார்க்க ஆசைப்படுகிறான். பகவானிடமே கேட்கிறான் : 'அதைப் பார்க்க என்னால் முடியும் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு காண்பிக்கவேண்டும் '.
பகவான் தன் விஶ்வரூப தரிசனத்தைக் காட்டுகிறார். அதை ஊனக்கண்ணால் பார்க்கமுடியாது என்பதால் அர்ஜுனனுக்கு திவ்ய த்ருஷ்டியையும் தருகிறார். இந்த அற்புதத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஒரு பக்கம் ஆனந்தம்- இன்னொரு பக்கம் பயங்கரம். ஜனனமும் மரணமும் ஒவ்வொரு வினாடியும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அமைதியான நதி, அழகிய வனம், உயர்ந்த மலை , அழகிய மலர்கள், நிலவின் ஒளி என்று கண்டு ஆனந்தப்படுகிறோம். மறு பக்கம் வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை குமுறுவது என்று கண்டு பயப்படுகிறோம். இப்படி எத்தனை யுகங்களைத் தாங்கியவர் பகவான்- ஸஹஸ்ரகோடி யுக தாரணர் ! எல்லாவற்றையும் தோற்றுவிக்கிறார், அழிக்கிறார் ! இதை ஒரு ஶ்லோகம் அழகாகச் சொல்கிறது:
एको विष्णुर्महद्भूतं पृथग्भूतान्यनेकशः ।
त्रींल्लोकान्व्याप्य भूतात्मा भुङ्क्ते विश्वभुगव्ययः ॥
ஏகோவிஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான் அனேகஶ :
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஶ்வ புகவ்யய :
எங்கும் பரவி நிற்கின்ற பரம்பொருளான பகவான் உலகமனைத்திற்கும் மூலக்கருவான மஹத்தாக ஆனார். பலவாகப் பிரிந்து தனித்தனி வடிவங்கள் பெற்று மூவுலகத்தையும் நிரப்பினார். அவரே தோன்றி ஒவ்வொரு பொருளின் ஆத்மாவாகியுள்ளார். அவற்றிலிருந்து விலகாதவராக, சிறிதும் மாறுபடாதவராக விரிந்த இந்த உலகை அனுபவிப்பவராக இருக்கிறார். உலகங்களைத் தன்னுள் அடக்கிக்கொள்கிறார். [ ஶ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவர் அவரே.] {அமரர் சி.வெ. ராதாக்ருஷ்ண சாஸ்திரிகள் உரை.}
இந்த ஒரு ஶ்லோகமே விஶ்வரூபத்தின் இயல்பை நன்கு விளக்குகிறது.
ISKCON
இதைப்பார்த்த அர்ஜுனனுக்கு பயம் மேலிடுகிறது, உடல் நடுங்குகிறது. அதுவரை க்ருஷ்ணன் தன் உறவினன் , சகா என்று இருந்தவன் இப்போது அவருடைய ஈஶ்வரத்தன்மையைக் கண்டு வியக்கிறான். ' பகவானே, உன் பெருமையை அறியாமல் நான் என்னென்னவோ பெயர் சொல்லி அழைத்தேன்; எல்லாவற்றையும், தந்தை தன் மகனின் குற்றத்தை மன்னிப்பதுபோல மன்னித்தருளவேண்டும் ' என்று சொல்லி அவர் காலில் விழுகிறான். இந்தப் பயங்கர விஶ்வரூபத்தை மறைத்துக்கொண்டு மீண்டும் பழைய சௌம்ய ரூபத்தையே காட்டவேண்டும் என்று வேண்டுகிறான். பகவானும் அவ்வாரே செய்கிறார்.
அர்ஜுனன் ரிஷி-முனி யல்ல, வேதவித்தல்ல, ஞானியல்ல, பண்டிதனல்ல. பின் எப்படி இந்தக் காட்சி அவனுக்குக் கிடைத்தது? அவன் பக்தன்: 'இஷ்டோஸி, ப்ரியோஸி ' என்று பகவானே சொல்லுவார். இதுவே பக்தியின் பெருமை. இதை பகவானே சொல்கிறார்.
नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया।
शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा।।11.53।।
நாஹம் வேதைர் ந தபஸா ந தானேன ந சேஜ்யயா
ஶக்ய ஏவம் விதோ த்ரஷ்டும் த்ருஷ்வானஸி மாம் யதா 11.53
நீ எவ்விதம் என்னைப் பார்த்தாயோ அவ்விதமாக என்னை வேதத்தைக் கற்பதால் காணமுடியாது; தவத்தினாலும் காணமுடியாது. தானத்தினாலும் யஜ்ஞத்தினாலும் காணமுடியாது.
भक्त्या त्वनन्यया शक्यमहमेवंविधोऽर्जुन।
ज्ञातुं दृष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परंतप।।11.54।।
பக்த்யா த்வனன்யயா ஶக்ய அஹம் ஏவம்விதோ அர்ஜுன
ஞாதும் த்ரஷ்டும் தத்வேன ப்ரவேஷ்டும் ச பரன்தப 11.54
அர்ஜுனா ! எதிரிகளை வாட்டுபவனே ! இவ்விதம் என்னை அனன்ய பக்தி ஒன்றினால்தான் காணமுடியும் , அறிய முடியும் , ஐக்ய பாவத்தால் என்னுடன் ஒன்றிவிடவும் முடியும்.
मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः।
निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव।।11.55।।
மத்கர்மக்ருத் மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித :
நிர்வைர ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ 11.55
எவன் எல்லாக் கர்மங்களையும் எனக்காகவே செய்வானோ, என்னையே அடையத்தக்க மேலான கதியாகக் கொள்வானோ, எவன் என்னிடம் பக்தி பூண்டவனோ, பிற பற்றுக்கள் அற்றவனோ, உயிர்களிடம் பகைமை இல்லாதவனோ அவன் என்னையே அடைகிறான்.
இவ்வாறு, விஶ்வரூப தர்சனம் அளிக்கும் போதும் பகவான் பக்தியையே கொண்டாடுகிறார் !
NOTE:
1, The Gita Slokas in Sanskrit are taken from www,gitasupersite.iitk.ac.in. Gratefully acknowledged.
2. The Tamil meanings given here are based on the editions of Gita Press, Gorakhpur, and Anna Subramanya Iyer ( RK Math, Chennai,) I openly acknowledge them and offer my pranams.
No comments:
Post a Comment