44. கீதை என்னும் பொக்கிஷம்-6
பகவானும் உலகமும்
ஸ்ரீ பகவான் எவ்வாறு பர, அபர ப்ரக்ருதியாகி உலகை வ்யாபித்திருக்கிறார் ; அப்படியிருந்தும் அதற்குக் கட்டுப்படவில்லை என்பதை விளக்கினார். ப்ரக்ருதி என்பது வெளியுலகில் மட்டும் இல்லை; மனம், புத்தி, அஹங்காரம் என்று மனித இயற்கையிலும் கலந்து, முக்குணங்களாகி விருப்பு- வெறுப்பு என்ற இரட்டை மோஹத்தால் நம்மை அபரப்ரக்ருதியுடன் இணைத்து பந்தப்படுத்துகிறது! இதை ஸ்ரீமத் பாகவதம் இரண்டு ஶ்லோகங்களில் விளக்குகிறது.
ஸ ஏவேதம் ஸஸர்ஜாக்ரே பகவான் ஆத்ம மாயயா
ஸதஸத் ரூபயா சாஸௌ குணமய்யாகுணோ விபு :
எங்கும் பரவி நிறைந்து விளங்கும் பகவானான வாஸுதேவன் , முக்குணங்களுக்கு ஆட்படாதவராக தனித்து இருந்த போதிலும், முக்குண வடிவானதும், காரிய-காரண வடிவமானதுமான தன்னுடைய மாயையினால் முதலில் இந்த உலகைப் படைத்தார்.
தயா விலஸி தேஷ்வேஷு குணேஷு குணவானிவ
அன்த: ப்ரவிஷ்ட ஆபாதி விஞ்ஞானேன விஜ்ரும்பித:
அந்த மாயையால் உண்டான எல்லாப் பொருள்களிலும் பகவானே உட்புகுந்து நிறைந்து விளங்குவதால் குணமுள்ளவன்போல் தோற்றமளிக்கிறான். உண்மையில் அவன் முற்றிலும் நிறைவான ஞானானந்தச் செறிவானவன்.
ஸ்ரீமத் பாகவதம் 1.2. 30,31.
உலகம் பொய்யானதா ?
இவ்வாறு உலகம் பகவானிடமே தோன்றி, நிலைத்து பின் ப்ரளயத்தில் ஒடுங்கிவிடுகிறது- லயமடைகிறது. . பிறகு மீண்டும் தோன்றுகிறது. இதனால் உலகம் ஸ்திரத்தன்மையற்றது- நிலையில்லாதது என்று சொல்கிறோம். இதைவைத்தே சிலர் நாம் காணும் இந்த உலகம் அஸத்யம் என்பர். இவர்கொள்கைப்படி what is not permanent is not real. ஆனால், பகவான் பரம ஸத்யம்- அவரிலிருந்து தோன்றிய இந்த உலகம் எப்படி அஸத்தியமாகும் ? இதில் பகவான் விளங்குகின்றாரே ! Ishavasyam idam sarvam.விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா? உலகம் தோன்றி மறைவது உண்மைதான்; ஆனால் இப்படித் தோன்றி மறைவது என்பது முடிவில்லாமல் நிகழ்வது- ஆதி அன்த மில்லாதது ! இது சாஸ்வதம்- permanent அல்லவா? இந்த உலகம் நிலையில்லாதது என்பதை பகவானே சொல்கிறார். ஆனால், அதனால் இது 'பொய்' என்று சொல்லவில்லை!
துக்காலயம் அஶாஸ்வதம் ....... 8.15
ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி ........ 9.3
அநித்யம் அஸுகம் லோகே ........ 9.33
ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் .......... 12. 7
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி துக்க
தோஷானு தர்ஶனம் ........ 13.8
ஜன்ம ம்ருத்யு ஜரா துக்கைர் .......... 14. 20
நிலையில்லாததை வைத்து நிலையானதைத் தேடு !
நமது சாஸ்திரங்கள் அனைத்தும் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை என்று விவரிக்கின்றன. வாழ்க்கை மரணத்தில் நிற்கிறது ;ஆனால் அத்துடன் முடிவதில்லை. மீண்டும் பிறவி வருகிறது. இந்தச் சுழலிலிருந்து விடுபடுவதே லக்ஷ்யம். அழியும் உடலைக்கொண்டே அழியாத பேற்றை அடையவேண்டும்.
இதை பாகவதம் சொல்கிறது,
ஏதத் வித்வான் புரா ம்ருத்யோரபவாய கடேத ஸ:
அப்ரமத்த இதம் ஞாத்வா மர்த்ய மய்யர்த்த ஸித்திதம். 11.20.14
இந்த மனித சரீரம் அழியும் தன்மை உடையது என்பது உண்மைதான். என்றாலும் இதன் மூலமாகத்தான் பரமாத்மாவை அடைய முடியும். ஆகவே ஞானமுள்ள ஒருவன் மரணம் ஏற்படுவதற்கு முன்னதாகவே கவனத்தோடு ஆத்மஸாதனை புரிந்து அதனால் பிறப்பு- இறப்புச் சுழலிலிருந்து விடுதலைக்கான வழியைக் காண வேண்டும்.
ஏஷா புத்திமதாம் புத்திர் மனீஷா ச மனீஷிணாம்
யத் ஸத்ய மன்ருதேனேஹ மர்த்யேனாப்னோதி மாம்ருதம். 11.29.22
அழியுந்தன்மையுடைய , நிலையற்ற இந்த உடலைக்கொண்டுதான் அழியாதவரும் ஸத்யமானவருமான என்னை அடைய முடியும். இதுதான் புத்திமான்கள், முனிவர்களின் துணிபு.
[ இவை இரண்டும் உத்தவ கீதையில் பகவான் வாக்கு.]
இதை எப்படி சாதிப்பது என்று பகவான் கீதையில் நமக்கு விளக்கமாகச் சொல்கிறார்..
பகவானும் இதர தேவதைகளும்
பகவான் பரம்பொருள். அவரையே வழிபடவேண்டும். ஆனாலும் அவரை பஜிக்காமல் பிறரை வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நேரும் ?
काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः।
क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा।।4.12।।
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர் பவதி கர்மஜா 4.12
கர்மங்களின் பலனில் இச்சை கொண்டவர்கள் தேவதைகளை வழிபடுவார்கள். ஏனெனில் மனித உலகில் கர்மங்களின் பலன் விரைவில் கிடைத்துவிடுகிறது.
कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः।
तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया।।7.20।।
காமைஸ்தைஸ்தைர் ஹ்ருதஞானா : ப்ரபத்யன்தே அன்யதேவதா :
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா : ஸ்வயா 7.20
அந்தந்த போகப்பொருட்களில் உள்ள ஆசையினால் அறிவிழந்தவர்கள்தத்தம் இயல்பினால் தூண்டப்பட்டு அந்தந்த நியமங்களை மேற்கொண்டு மற்ற தேவதைகளை வழிபடுகிறார்கள்.
यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्।।7.21।।
யோயோ யாம் யாம் தனும் பக்த: ஶ்ரத்தயா அர்சிதுமிச்சதி
தஸ்ய தஸ்ய அசலாம் ஶ்ரத்தாம் தாமேவ விததாம் யஹம் 7.21
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவதையை ஶ்ரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அந்தந்த பக்தனுக்கு அந்த தேவதைகளிடம் ஶ்ரத்தையை நான் அசையாததாகச் செய்கிறேன்.
स तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते।
लभते च ततः कामान्मयैव विहितान् हि तान्।।7.22।।
ஸ தயா ஶ்ரத்தயா யுக்தஸ்தஸ்ய ஆராதனம் ஈஹதே
லபதே ச தத: காமான் மயைவ விஹிதான் ஹி தான். 7.22
அந்த மனிதன் அந்த ஶ்ரத்தையுடன் கூடியவனாக அந்த தேவதையின் பூஜையைச் செய்கிறான். அந்த தேவதையிடமிருந்து என்னாலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அந்த விரும்பிய போகங்களை அடைகிறான். இதில் சந்தேஹமில்லை.
[ யார் எந்த தேவதையை வழிபட்டாலும் அதற்கு பலன் தருவது ஸ்ரீ பகவான் தான். ]
अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम्।
देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि।।7.23।।
அன்தவத்து ஃபலம் தேஷாம் தத்பவத் அல்ப மேதஸாம்
தேவான் தேவயஜோ யான்தி மத் பக்தா யான்தி மாம் அபி. 7.23
ஆனால் சிற்றறிவு படைத்தவர்களாகிய அவர்கள் பெறும் அப்பலன்அழிவுடையதாக ஆகிறது. தேவதைகளைப் பூஜிப்பவர்கள் (அந்த) தேவதைகளை அடைகிறார்கள். என்னுடைய பக்தர்கள் என்னையே அடைகிறார்கள்.
येऽप्यन्यदेवता भक्ता यजन्ते श्रद्धयाऽन्विताः।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम्।।9.23।।
யேஅப்யன்யதேவதா பக்தா யஜந்தே ஶ்ரத்தயான்விதா :
தேஅபி மாம் ஏவ கௌந்தேய யஜன்தி அவிதி பூர்வகம் 9.23
எந்த பக்தர்கள் ஶ்ரத்தையோடு இருந்தாலும் அன்ய தேவதைகளை பூஜிக்கிறார்களோ அவர்களும் என்னையே வழிபடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய வழிபாடு விதிமுறைப்படி இல்லை. [ அறியாமையால் அமைந்தது.]
अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते।।9.24।।
அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபு ரேவச
ந து மாமபி ஜானன்தி தத்வே நாதஶ்ச்யவன்தி தே 9.24
ஏனெனில் எல்லா யாகங்களையும் ஏற்றுக்கொள்பவனும், எல்லா தேவர்களுக்கும் ப்ரபுவும் நானே. அனால் அவர்கள் என்னை இவ்வாறு அறிவதில்லை. ஆதலால் வீழ்ச்சி அடைகிறார்கள்.
यान्ति देवव्रता देवान् पितृ़न्यान्ति पितृव्रताः।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्।।9.25।।
யான்தி தேவவ்ரதா தேவான் பித்ரூன் யான்தி பித்ருவ்ரதா
பூதானி யான்தி பூதேஜ்யா யான்தி மத்யாஜின: அபி மாம். 9.25
தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்.பித்ருக்களை வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள்.பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களை அடைகிறார்கள்.ஆனால் என்னை வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள்.
இதுவே உத்தம கதி, ஏனெனில் பகவானை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते।।8.16।।
மாம் உபேத்ய து கௌன்தேய புனர்ஜன்ம ந வித்யதே 8.16
குன்தி புத்ரனே! என்னை அடந்தபின்னர் மறுபிறவி கிடையாது.
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम।।8.21।।
யம் ப்ராப்ய ந நிவர்தன்தே தத் தாம பரமம் மம 8.21
எதை அடைந்தபிறகு மனிதன் திரும்புவதில்லையோ அது எனது பரம பதம்..
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम।।15.6।।
யத் கத்வா ந நிவர்தன்தே தத் தாம பரமம் மம 15.6
எதை அடைந்தபிறகு மனிதர் திரும்புவதில்லையோ அது என்னுடைய பரம பதம்.
சதா காலமும் பகவானையே நினைக்கவேண்டும்
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम्।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः।।8.5।।
அன்தகாலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய : ப்ரயாதி ஸ : மத் பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஶ்ய : 8.5
மரண காலத்திலும் எந்த மனிதன் என்னையே நினைத்துக்கொண்டு சரீரத்தைவிட்டுக் கிளம்புகிறானோ, அவன் என் ஸ்வரூபத்தையே அடைகிறான். இதில் சிறிதும் சந்தேஹம் இல்லை.
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम्।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः।।8.6।।
யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யன்தே கலேவரம்
தம் தமேவைதி கௌன்தேய ஸதா தத் பாவ பாவித: 8.6
குன்தியின் மைந்தனே ! மனிதன் கடைசிக் காலத்தில் எதை எதை நினைத்துக்கொண்டு உடலை விடுகிறானோ அதையே அடைகிறான். ஏனெனில் அவன் எப்பொழுதும் அதே சிந்தனையில் இருந்திருக்கிறான்.
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च।
मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयम्।।8.7।।
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அனுஸ்வர யுத்ய ச
மய்யர்ப்பித மனோ புத்திர் மாமேவைஷ்யஸி அஸம்ஶயம் 8.7
அதனால் நீ எல்லா காலத்திலும் ( இடைவிடாது) என்னையே நினைத்துக்கொண்டிரு. போரும் புரிவாயாக. இவ்விதம் மனம், புத்தியை என்னிடம் அர்ப்பணம் செய்து சந்தேஹமின்றி என்னையே அடைவாய்.
அப்யாஸ யோகம் !
இந்த நிலையை எப்படி அடைவது ?
இதற்கு பயிற்சி செய்யவேண்டும்.
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना।
परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन्।।8.8।।
அப்யாஸயோக யுக்தேன சேதஸா நான்யகாமினா
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தா அனுசின்தயேத். 8.8
பார்த்தா! இடைவிடாத பயிற்சியாகிய யோகத்தில் ஈடுபட்டு , வேறு எதையும் நினைக்காமல், மனதினால் திவ்ய பரம புருஷனாகிய பகவானையே நினைத்து அந்தப் பரம்பொருளையே அடைகிறான்.
प्रयाणकाले मनसाऽचलेन
भक्त्या युक्तो योगबलेन
परं पुरुषमुपैति दिव्यम्।।8.10।।
ப்ரயாண காலே மனஸா அசலேன
பக்த்யா யுக்தோ யோகபலேன.........
பரம் புருஷம் உபைதி திவ்யம் 8.10.
மரண சமயத்தில் , மனதில் சஞ்சலமில்லாமல், யோகவலிமையால், பக்தியோடுகூடிய அவன் அந்தத் திவ்ய பரம புருஷனை அடைகிறான்.
வேறு எதிலும் நாட்டமில்லாத (அனன்ய ) பக்தி அவசியம்
பகவானை பக்தியினால் மட்டுமே அடைய முடியும்
अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः।
तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः।।8.14।।
அனன்ய சேதஸா ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஶ :
தஸ்யாஹம் ஸுலப : பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின: 8.`14
பார்த்தா! எவன் வேறு சிந்தனையில்லாமல் இடைவிடாமல் என்னை நினைக்கிறானோ , எப்போதும் என்னிடம் ஒன்றிவிட்ட அந்த யோகி என்னை எளிதில் அடைய முடியும்.
पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया।
यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम्।।8.22।।
புருஷ: ஸ பர: பார்த்த பக்த்யா லப்யஸ்த்வனன்யய
யஸ்யான்தஸ்தானி பூதானி யேன ஸர்வமிதம் ததம் 8.22
பார்த்தனே ! எல்லா பொருள்களும் எந்த பரமாத்மாவினுள் இருக்கின்றனவோ. எந்த பராமாத்மாவினால் இந்த அகில உலகமும் நிறைந்து இருக்கிறதோ அந்தப் பரம புருஷன் வேறு எதிலும் நாட்டமில்லாத பக்தியினாலேயே அடையத்தக்கவர்.
இதையே பின்னால் மேலும் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்.
नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया।
शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा।।11.53।।
நாஹம் வேதைர் ந தபஸா ந தானேன ந சேஜ்யயா
ஶக்ய யேவம் விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவானஸி மாம் யதா 11.53
நீஎன்னை எவ்விதம் கண்டாயோ அப்படி என்னை வேதங்களைக் கற்பதால் காணமுடியாது. தவத்தினாலும் காணமுடியாது. தானத்தினாலும் காணமுடியாது. யாகம் செய்வதாலும் காண இயலாது.[ தானம், யஜ்ஞம், தபஸ் ஆகியவற்றை விடக்கூடாது என்று பின்னர் சொல்லுவார். இருந்தாலும் அவற்றால் பகவானைக் காண இயலாது ]
भक्त्या त्वनन्यया शक्यमहमेवंविधोऽर्जुन।
ज्ञातुं दृष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परंतप।।11.54।।
பக்த்யா த்வனன்யயா ஶக்ய அஹம் ஏவம் விதோர்ஜுன
ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரன்தப. 11.54
எதிரிகளை வாட்டுபவனே! அர்ஜுனா ! வேறொன்றை நாடாத அனன்ய பக்தியினால் மட்டுமே என்னைக் காணவும் , தத்வரீதியாக ( உள்ளபடி ) அறியவும், என்னில் ஒன்றிவிடவும் இயலும்.
मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः।
निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव।।11.55।।
மத்கர்ம க்ருத் மத்பரமோ மத்பக்த : ஸ்ங்க வர்ஜித :
நிர்வைர ஸர்வபூதேஷு ய : ஸ மாமேதி பாண்டவ 11.55
அர்ஜுனா ! எவன் (இன்றியமையாத ) கர்மங்களை எனக்காகவே செய்வானோ, என்னையே அடையத்தக்க மேலான கதியாகக் கொள்வானோ, என்னிடம் பக்தி பூண்டவனோ, பற்றற்றவனோ, உயிரினங்கள் அனைத்திடமும் பகைமை இல்லாதவனோ அந்த பக்தனே என்னை அடைகிறான்.
இன்றியமையாத கர்மங்களை பகவானுக்காகவே செய்வது : இது கர்ம யோகம். கர்மம் தானாகப் பலன் தருவதில்லை. பகவான் தான் பல தாதா.
பகவானையே அடையத்தக்க மேலான கதியாகக் கொள்வது ( மத் பரமோ ): ஞானம். பகவானைவிட மேலான பொருள் இல்லை.
இவற்றுடன் பக்தியும் அவசியம். ( மத் பக்த )
பகவான் உலகில் உறைந்திருக்கிறார் என்று அறிந்தவன், எந்த உயிரிடமாவது பகைமை கொள்வானா ?
அதனால் எல்லாவற்றுக்கும் பகவானிடம் கொள்ளும் பக்தியே ஜீவாதாரம்- உயிர் நாடி.
அர்ஜுனன் தீவிர பக்தன். அதனால்தான் அவனை நாம் ப்ரஹ்லாதன், நாரதர், வ்யாசர் ஆகியோருடன் சேர்த்து ஸ்மரணை செய்கிறோம்.
பகவானை அடைந்தபின் மறுபிறவி இல்லை !
मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम्।
नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः।।8.15।।
மாமுபேத்ய புனர்ஜன்ம து:காலயம் அஶாஶ்வதம்
நாப்னுவன்தி மஹாத்மான : ஸம்ஸித்திம் பரமாம் கதா. : 8.15
மஹாத்மாக்கள் பரம கதியாக என்னை அடைதலாகிய உயர்ந்த ஸித்தியை அடைந்தபின், துக்கத்திற்கு உறைவிடமானதும், நிலையற்றதுமான மறுபிறவியை அடைவதில்லை.
आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन।
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते।।8.16।।
ஆப்ரஹ்ம புவனால்லோகா : புனராவர்தினோர்ஜுன
மாமுபேத்ய து கௌன்தேய புனர்ஜன்ம ந வித்யதே 8.16
அர்ஜுன! ப்ரஹ்மலோகம் வரையிலான எல்லா உலகங்களும் திரும்பத் திரும்ப வரும் இயல்பை உடையன. கௌன்தேய ! ஆனால் என்னை அடைந்தபிறகு மறுபிறவி கிடையாது.
எவ்வளவு அரிய பெரிய விஷயங்களை பகவான் எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட்டார் ! பகவானே பரம்பொருள். அவரை அடைவதே உயர்ந்த ஸித்தி. அதுவே பரம பதம். அதை அடைந்தபிறகு மறுபிறவி இல்லை, அவரைத் தூய பக்தி ஒன்றினால்தான் அடைய முடியும். எந்த சாதனையைச் செய்து, எந்த தேவதையை வழிபட்டாலும் இந்த துக்கமயமான ஸம்ஸாரத்திற்கே திரும்பவேண்டும். ப்ரஹ்மலோகம்கூட இதற்கு விலக்கல்ல. பகவான் ஒருவரே கதி. அவரை இடைவிடாது நினைப்பதையே அப்யாசமாகக் கொள்ள வேண்டும்!
No comments:
Post a Comment