Friday, 22 July 2016

50. கீதை என்னும் பொக்கிஷம் -12



50. கீதை என்னும் பொக்கிஷம்-12

ஸ்ரீ பகவான் ஸகுண உபாசனையையே சிலாகித்துச் சொன்னார். ஏனெனில் அதுதான் எளியது. உடல் பற்று அறவே நீங்காதவர்களுக்கு  நிர்குண உபாசனை  சாத்தியமில்லை. நிர்குண வழியை சாங்க்யம்- ஞான யோகம் என்று சொல்வார்கள். பகவான் ஞானமார்கத்தைப் புறக்கணிக்கவில்லை. அதன் தன்மையையும் அதற்கான சாதனங்களையும் விளக்கிச் சொல்கிறார். இதன் முதல் படி, உடல் வேறு, அதனுள் இயங்கும் ஆத்மா வேறு [ ஆத்ம- அனாத்ம விவேகம், அதாவது  தேஹாத்ம புத்தியை விடுதல்.] இதை க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ  விபாக யோகம் என்னும் 13ம் அத்யாயத்தில் சொல்கிறார்.










ஆனால் இந்த ஸாதனை எளிதானதல்ல. ஸ்ரீ ராமக்ருஷ்ணர்  இதை விளக்கியுள்ளார்.














" The path of knowledge is very difficult. One cannot obtain knowledge unless one gets rid of the feeling that one is the body. In the Kaliyuga the life of man is centered on food. He cannot get rid of the feeling that he is the body and the ego. Therefore the path of devotion is prescribed for this cycle. This is an easy path. You will attain God if you sing His name and glories  and pray to  Him with a longing heart. There is not the least doubt about it. "

The Gospel of Sri Ramakrishna, December 14, 1882.



 ஆனால், ஞான ஸாதனை செய்பவனுக்கும்  பக்தி அவசியம்.

ஞானத்தின் படிகள்


मयि चानन्ययोगेन भक्ितरव्यभिचारिणी।

विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि।।13.10।।


மயி ச  அனன்ய யோகேன  பக்திரவ்யபிசாரிணீ
விவிக்த தேஶ ஸேவித்வ  மரதிர் ஜன ஸம்ஸதி                    13.10


 வேறு எதையும் நினைக்காது என்னிடத்தில் ஒன்றிய நிலை, பிறழாத பக்தி, தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு,  ஜனக்கூட்டத்தில் வெறுப்பு -


अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम्।

एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोन्यथा।।13.11।।



அத்யாத்ம ஞான நித்யத்வம்  தத்வஞானார்த்த தர்ஶனம்
ஏதத் ஞானமிதி  ப்ரோக்தம்  அஞ்ஞானம் யததோஅன்யத :        13.11


அத்யாத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்திருத்தல், உண்மை ஞானத்தைப் பற்றிய ஆராய்ச்சி, - இவை ஞானம் எனப்படும். இதனினும் வேறுபட்டது அஞ்ஞானம் என்றும் சொல்லப்பட்டது.



अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम्।

भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च।।13.16।।



அவிபக்தம் ச பூதேஷு  விபக்த மிவ ச ஸ்திதம்
பூத பர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு  ப்ரபவிஷ்ணு  ச                13.16


பொருள்களில் பிரிவுபடாததாயினும் பிரிவுபட்டதுபோல்  நிற்பதாயும், தாங்குவதாயும், விழுங்குவதாயும் படைப்பதாயும் அது (பரம்பொருள் ) அறியத்தக்கது.

[ ஆகாசம்  எங்கும் ஒன்றுபோல் விரிந்து விளங்குகிறது. ஆனால் ஒரு பானை, குடம் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் தனித்தனியாக இருப்பது போல் தோன்றுகிறது! ]



ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते।

ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्।।13.17।।


ஜ்யோதிஷாமபி  தஜ்ஜ்யோதிஸ்தமஸ : பரமுச்யதே
ஞானம் ஞ்யேயம் ஞானகம்யம்  ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்.    13.17

அந்தப் பரம்பொருள் ( ப்ரஹ்மம் ) ஒளிகளுக்கெல்லாம் ஒளிதருவது;  மாயைக்கு அப்பாற்படது; ஞான வடிவானது; அறியப்படவேண்டியது; தத்வ ஞானத்தினால் அடையக்கூடியது . எல்லோருடைய ஹ்ருதயத்திலும் சிறப்பாக விளங்குவது என்று சொல்லப்படுகிறது. 


ப்ரஹ்மம், ப்ரஹ்மம் என்று உலகெங்கிலும்  தேடி அலைகின்றனர் ! அந்த ப்ரஹ்மமோ நம் இதயத்திலேயே இருக்கிறது !  " ஶரீரஸ்த: " என்று  13.31ல் சொல்கிறார். அதை  ஸகுண உபாசனையினாலே எளிதில் அறியலாம்! 

திருமூலர் சொல்கிறார்:  


“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”


ராஜா ரவிவர்மா ஓவியம்
பகவானை அறிவதே  உத்தம ஞானம்


इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः।

सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च।।14.2।।
இதம் ஞானம் உபாஶ்ரித்ய மம ஸாதர்ம்யம்  ஆகதா :
ஸர்கேபி நோபஜாயன்தே  ப்ரலயே ந வ்யதன்தி  ச                   14.2
ந்த ஞானத்தை அறிந்து பின்பற்றியவர்கள்  என் ஸ்வரூபத்தை யடைந்து  படைப்பின் ஆரம்பத்தில் பிறப்பதுமில்லை; ப்ரளயகாலத்தில் துன்பமடைவதும் இல்லை.
பகவான், ஜீவன் எப்படி ப்ரக்ருதி சம்பந்தப்பட்டு, முக்குணங்களால் கட்டுப்படுகிறது என்றும் இக்குணங்களிலிருந்து எப்படி மீள்வது ( குணாதீதனாவது ) என்றும் விளக்குகிறார்.  செயல்கள் அனைத்திற்கும் குணங்களே அடிப்படையாக அமைகின்றன; ஆத்மா சம்பந்தப் படுவதில்லை என்று அறிவதே ஞானம். இந்த ஞானம் பெற்றவன் பகவானை அடைகிறான்.


கர்தா என்ற எண்ணமே பிறவிக்குக் காரணம்


नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति।

गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति।।14.19।।



நான்யம் குணேப்ய : கர்தாரம்  யதா த்ரஷ்டானு பஶ்யதி
குணேப்யஶ்ச பரம் வேத்தி  மத் பாவம் ஸ : அதி கச்சதி                14.19


எப்போது, பார்ப்பவன் குணங்களைத் தவிர வேறு கர்தாவைக் காண்பதில்லையோ,  குணங்களுக்கு அப்பாற்பட்ட என்னையும் அறிகிறானோ,  அப்போது அவன் என் ஸ்வரூபத்தை அடைகிறான்.

இதையே பகவான் முன்பும் சொன்னார்.


प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः।

अहङ्कारविमूढात्मा कर्ताऽहमिति मन्यते।।3.27।।



ப்ரக்ருதே : க்ரியமாணானி  குணை : கர்மாணி ஸர்வஶ :
அஹங்கார விமூடாத்மா  கர்தாஹமிதி மன்யதே                           3.27


எல்லாக் கர்மங்களும் எல்லாவிதத்திலும் ப்ரக்ருதியின் குணங்களால் செய்யப்படுகின்றன.  ஆனால் அஹங்காரத்தால்  அறிவு மழுங்கியவன் "நானே கர்தா " என்று எண்ணுகிறான்.


தான் கர்தா என்ற இந்த எண்ணமே - கர்த்ருத்வமே- கர்மத்தளைக்கும், பிறவிக்கும் காரணமாகிறது.


குணங்களைக் கடப்பது எப்படி ?


गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान्।

जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते।।14.20।।



குணானேதானதீத்ய  த்ரீன் தேஹி தேஹஸமுத்பவான் 
ஜன்ம ம்ருத்யு ஜராது:கைர்  விமுக்தோ அம்ருத மஶ்னுதே           14.20

[இந்த உடல் தானன்று என்று உணர்ந்த புருஷன் ] உடல் தோன்றுவதற்கு ( பிறவிக்கு ) க் காரணமான  இந்த மூன்று குணங்களையும் கடந்து , பிறப்பு- இறப்பு- மூப்பு   ஆதிய துன்பங்களிலிருந்து விடுபட்டு, அமரத்தன்மையை எய்துகிறான்.

मां च योऽव्यभिचारेण भक्ितयोगेन सेवते।

स गुणान्समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते।।14.26।।



மாம் ச  யோஅவ்யபிசாரேண  பக்தியோகேன ஸேவதே
ஸ குணான் ஸமதீத்யைதான்  ப்ரஹ்மபூதாய கல்பதே                 14.26

எவன் வேறு எதிலும் நாட்டமில்லாமல் ஒன்றிய பக்தியோகத்தினால்  என்னை  இடைவிடாது வழிபடுகின்றானோ அவன் இந்த மூன்று குணங்களையும் முற்றிலுமாகக் கடந்து  ப்ரஹ்மத்தை அடையத் தகுதி பெறுகிறான். 

பகவானே அந்த ப்ரஹ்மம் !

ब्रह्मणो हि प्रतिष्ठाऽहममृतस्याव्ययस्य च।

शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च।।14.27।।



ப்ரஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்   அம்ருதஸ்யாவ்யயஸ்ய ச
ஶாஶ்வதஸ்ய ச தர்மஸ்ய  ஸுகஸ்யை கான் திகஸ்ய  ச           14.27


ஏனெனில், ப்ரஹ்மத்திற்கும், அழியாத மோக்ஷத்திற்கும், தர்மத்திற்கும், சீரான ஸுகத்திற்கும் உறைவிடம் நானே ஆவேன் அன்றோ ?

ஞானமென்றால்  ஏதோ கண்ணைமூடி எங்கோ அமர்வது என்று நினைப்பவர்களுக்கு இது சரியான பாடம். ஞானம் பகவானுக்கு / பக்திக்கு அன்னியமில்லை ! பகவானை அறிவதே  உண்மை ஞானம் ! எங்கே சுற்றியும் ரங்கநாதா!

இந்த உலகிற்கு பகவானே  காரணம். ப்ரக்ருதி அவர் கருவி. இதை அறிந்துகொள்வதே ஞானம்.  


ततः पदं तत्परिमार्गितव्य

यस्मिन्गता न निवर्तन्ति भूयः।

तमेव चाद्यं पुरुषं प्रपद्ये

यतः प्रवृत्तिः प्रसृता पुराणी।।15.4।।


தத : பதம் தத் பரிமார்கிதவ்யம் 
 யஸ்மின் கதா ந நிவர்தன்தி பூய:
தமேவ சாத்யம் புருஷம்  ப்ரபத்யே 
 யத : பரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணி                                           15.4

எந்த பரமபுருஷணிடமிருந்து பழமையான இந்த ஸம்ஸாரம் பெருகியதோ  அவனைச் சரணடைகிறேன் என்று உறுதியோடு  நிச்சயித்து, எங்கே சென்ற மனிதர்கள் மீண்டும் ஸம்ஸாரத்திற்குத்  திரும்பிவருவதில்லையோ அந்த வழியையே தேடவேண்டும். 



மீராபாய்

न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः।

यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम।।15.6।।



ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஶஶாங்கோ  ந பாவக :
யத் கத்வா ந நிவர்தன்தே  தத் தாம பரமம் மம                            15.6

எதை அடைந்த பிறகு மனிதர்கள் ஸம்ஸாரத்திற்குத் திரும்புவதில்லையோ அந்தப் பரம பதத்திற்கு சூரியனோ, சந்திரனோ, அக்னியோ ஒளிதருவதில்லை. ( அவை பகவானாலேயே ஒளி பெறுகின்றன - கடோபனிஷதம் 2.2. 15, முண்டகோபனிஷதம் 2.2.10 )அதுவே எனது பரமபதம் (உயர்ந்த இடம் ).

अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः।

प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम्।।15.14।।


அஹம் வைஶ்வானரோ  பூத்வா  ப்ராணினாம் தேஹமாஶ்ரித :
ப்ராணாபான ஸமாயுக்த : பசாம்யன்னம்  சதுர்விதம்                  15.14


நானே எல்லா உயிரினங்களின் உடலில் உறைந்து, ப்ராண- அபான வாயுக்களுடன் சேர்ந்து, வைஶ்வானரன் என்ற அக்னியாக  ஆகி, நான்கு வகையான உணவையும் ஜீரணிக்கிறேன். 

सर्वस्य चाहं हृदि सन्निविष्टो

मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च।

वेदैश्च सर्वैरहमेव वेद्यो

वेदान्तकृद्वेदविदेव चाहम्।।15.15।।



ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்ட:
மத்த : ஸ்ம்ருதிர் ஞானமபோஹனம்
வேதைஶ்ச  ஸர்வை: அஹமேவ  வேத்யோ
வேதாந்தக்ருத்  வேத விதேவ சாஹம்                                         15.15


நானே எல்லா  ப்ராணிகளின் ஹ்ருதயத்திலும்  புகுந்துள்ளேன். நினைவும், அறிவும், மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவன் நானே. வேதாந்தத்தைச்  செய்தவனும் , வேதத்தை உணர்ந்தவனும் நானே.

பகவானே புருஷோத்தமன்






यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः।

अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः।।15.18।।


யஸ்மாத் க்ஷரமதீதோஅஹம்  அக்ஷராதபி  சோத்தம
அதோஸ்மி  லோகே வேதே ச ப்ரதித : புருஷோத்தம :                15.18

எக்காரணத்தினால் நான் அழியக்கூடிய ஜடவர்கத்திற்கு  அப்பாற்பட்டவனாகவும் , அழியாத =அக்ஷர ஜீவாத்மாவைக் காட்டிலும் சிறந்தவனாகவும் உள்ளேனோ, அக்காரணத்தினால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று  புகழ் பெற்றுள்ளேன்.


यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम्।

स सर्वविद्भजति मां सर्वभावेन भारत।।15.19।।


யோமாமேவம் அஸம்மூடோ  ஜானாதி  புருஷோத்தமம்
ஸ : ஸர்வவித் பஜதி மாம் ஸர்வபாவேன பாரத                          15.19
பரதகுலத்தோன்றலே ! எவன் மதிமயக்கம் இல்லாமல் என்னை இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ அவன் அனைத்தும் அறிந்தவனாய், எல்லாவிதமாகவும் எப்போதும் என்னையே வழிபடுகிறான். 


इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयाऽनघ।

एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत।।15.20।।


இதி குஹ்யதமம் ஶாஸ்த்ரம் இதமுக்தம்  மயானக
ஏதத் புக்தவா புத்திமான் ஸ்யாத் க்ருதக்ருத்யஶ்ச பாரத               15.20
பாவமற்றவனே ! பரதகுலத்தில் சிறந்தவனே !  இவ்வாறு உத்தமான ரஹஸ்யம் என்னால் கூறப்பட்டது. இதை  அறிந்தவன் புத்திமானாகவும் செய்யவேண்டிய கர்மத்தைச்  செய்து முடித்தவனாகவும் ஆகிறான். 



பாஹரி சித்திரம்

ஞானம் பற்றிப்  பேசும்போதும் பகவான் ஸகுண பக்தியையே  சொல்லி முடிக்கிறார் ! இங்கும் குஹ்ய தமம் = மிக உயர்ந்த ரஹசியம் என்று பக்தியைச் சொல்லிபிருப்பது குறிப்பிடத்தக்கது.  பகவானைப் புருஷோத்தமன் என அறிந்து ஸதா அவனையே வழிபடுபவனே  புத்திமான் என்றான பிறகு, இதைவிட உயர்ந்த தத்துவம் வேறு என்ன இருக்கிறது ?


ப்















No comments:

Post a Comment