Saturday, 23 July 2016

51. கீதை என்னும் பொக்கிஷம் -13



51. கீதை என்னும் பொக்கிஷம்- 13





ஸ்ரீ பகவானை  'அன்தர்யாமி ' என்கிறோம். எல்லா உயிர்களுக்குள்ளும் உறைபவர், ஆனால் நாம் கண்ணால் பார்க்க முடியாது. அதேபோல்  உலகெங்கிலும் நிறைந்து விளங்குபவர் , அதனால் "வாசுதேவன் " என்கிறோம். இதையும் நாம் உணர்வதில்லை. அதேபோல் பக்தியும்  எல்லா ஆத்ம சாதனைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது; அதுவே ப்ரதான சாதனையாகவும் இருக்கிறது. இதையே பகவான் விளக்கிவருகிறார். கர்மா சாதனைதான் - ஆனால் அதை பகவானுக்கு அர்ப்பணிக்கவேண்டும். இல்லையென்றால்  அது ஸம்ஸாரச் சுழலில் மாட்டிவிடும்.  ஞான நெறியும் வழிதான் - ஆனால் பகவானை அறிவதே பரம ஞானம். இதையெல்லாம் தெரிந்துகொண்டால், பின் நேராக ஏன் பகவானையே பிடித்துக்கொள்ளக் கூடாது? ஏன் கர்மம், ஞானம் என்று அலையவேண்டும் ? கனியிருப்பக் காயை ஏன் தேடவேண்டும் ?  இதையே நமக்கு முடிந்த முடிவாகக் கூறுகிறார் பகவான்.


கர்மங்களைச் செய்யலாம் - ஆனால் ஸாத்வீக கர்மங்களை மட்டும்  பகவானின் ஆராதனையாகச்  செய்யவேன்டும்.

यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम्।

स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः।।18.46।।


யத: ப்ரவ்ருத்திர் பூதானாம் யேன ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ :                   18.46

எந்தப் பரம்பொருளிலிருந்து ஸகல உயிர்களும் உண்டாயினவோ, எந்தப் பரமாத்மாவினால் இந்த உலகம் முழுதும் நிறைந்துள்தோ, அந்த பரமாத்மாவை தனக்கு இயல்பாக நேர்ந்த கடமைகளினால்  வழிபட்டு மனிதன் பரம ஸித்தியை அடைகிறான்.

அதேபோல ஞானயோகத்தில் முயற்சிப்பவனும் சில ஒழுக்கங்களைப் பின்பற்றவேண்டும் என்று ஶ்லோகம் 18.51-53ல் விளக்கி, பின் சொல்கிறார் :

ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति।

समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्।।18.54।।


ப்ரஹ்மபூத ப்ரஸன்னாத்மா  ந ஶோசதி ந காங்க்ஷதி
ஸம ஸர்வேஷு  பூதேஷு  மத் பக்திம் லபதே பராம்                      18.54

மனத்தெளிவுற்று  ப்ரஹ்மத்தில் ஒன்றிய அவன் எதற்கும் வருந்துவதில்லை, எதையும்  எதிர்பார்ப்பதும் இல்லை. அனைத்து உயிர்களிடமும்  ஸமபாவனையுடன்  இருந்துகொண்டு என்னுடைய உயர்ந்த பக்தியைப் பெறுகிறான். 

இங்கு பகவான் "லபதே பக்திம் பராம் " =பராபக்தியை அடைகிறான் 
என்கிறார். இது முக்கியமானது. பராபபக்தி என்பது பக்தியிலேயே  மிக உயர்ந்த நிலை. அதற்குமேல்  எதுவும் இல்லை. 

" ஸா து கர்ம ஞான யோகேப்யோப் யதிகதரா " என்பது நாரத பக்தி ஸூத்ரம். அதாவது, இது, கர்மம், ஞானம், யோகம் ஆகியவற்றினும் உயர்ந்த நிலை.  இதுவே கோபிகைகளின் நிலை.








भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः।

ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्।।18.55


பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஶ்சாஸ்மி  தத்வத:
ததோ மாம் தத்வதோ ஞாத்வா விஶதே  ததனன்தரம்                    18.55

அந்தப் பக்தியின் மூலம்  அவன் என்னை யார் , எத்தன்மையானவன் என்று  உள்ளவாறு அறிந்து கொள்கிறான்.  அதனால் அக்கணமே என்னிடம் ஐக்யமாகிறான். 


सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः।

मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम्।।18.56।।

ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத் வ்யபாஶ்ரய :
மத் ப்ரஸாதாத் அவாப்னோதி  ஶாஶ்வதம் பதம் அவ்யயம்             18.56


என்னையே புகலாகக் கொண்டவன் எல்லா கர்மங்களையும் எப்பொழுதும் செய்துகொண்டிருந்தாலும் எனது அருளால்  என்றும் நிலையான  அழியாத அந்தப் பரம பதத்தை அடைகிறான்.

चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः।

बुद्धियोगमुपाश्रित्य मच्चित्तः सततं भव।।18.57।।


சேதஸா ஸர்வ கர்மாணி  மயி ஸன்யஸ்ய மத பர :
புத்தியோக முபாஶ்ரித்ய   மத் சித்த: ஸததம் பவ                            18.57


ல்லாக் கர்மங்களையும் மனப்பூர்வமாக  என்னிடம் அர்ப்பணம் செய்து, புத்தியோகத்தை மேற்கொண்டு  (புத்தியை பகவானிடத்தில் நிலைக்கச்செய்து ), என்னையே  அடைக்கலமாகக் கொண்டு எப்பொழுதும் என்னிடமே மனதை  ஈடுபடுத்தியவனாக இரு.


मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि।

अथ चेत्त्वमहङ्कारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि।।18.58।।

மத் சித்த : ஸர்வ துர்காணி மத் ப்ரஸாதாத்  தரிஷ்யஸி
அத சேத்வமஹங்காரான்ன  ஶ்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி            18.58


இவ்வாறு என்னிடமே மனம் பதித்தவனாக (இருந்தால் ) என் அருளால் எல்லா கஷ்டங்களையும் தாண்டிவிடுவாய். ஆனால் அஹங்காரத்தினால் என் சொற்களைக் கேட்காவிட்டால்  அழிந்துபோவாய். 


ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति।

भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया।।18.61।।


ஈஶ்வர: ஸர்வபூதானாம்  ஹ்ருத்தேஶே  அர்ஜுன திஷ்டதி
ப்ராமயன்  ஸர்வபூதானி   யன்த்ர ரூடானி  மாயயா                          18.61

அர்ஜுனா ! இந்த உடல் என்கிற யந்திரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட அனைத்துப்  பிராணிகளையும்  பகவான் தன்னுடைய மாயாஸக்தியினால்  சுழலச்செய்துகொண்டு, அனைத்துப் பிராணிகளின் இதயத்திலும்  அமர்ந்திருக்கிறார்.


तमेव शरणं गच्छ सर्वभावेन भारत।

तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्।।18.62।।


தமேவ ஶரணம் கச்ச  ஸர்வபாவேன பாரத
தத் பரஸாதாத் பராம் ஶாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி ஶாஶ்வதம்   18.62

பரத குலத்தில் சிறந்தவனே ! நீ எல்லாவகையிலும்  அந்த  ஈஶ்வரனையே  ஶரணமடைவாயாக. அந்தப் பரமாத்மாவின் அருளால் நீ மேலான  ஶாந்தியையும்  நிலையான பரம பதத்தையும்  அடைவாய்.


इति ते ज्ञानमाख्यातं गुह्याद्गुह्यतरं मया।

विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु।।18.63।।


இதி தே ஞானமாக்யாதம்  குஹ்யாத் குஹ்யதரம்  மயா
விம்ருஶ்யைததஶேஷேண  யதேச்சதி ததா குரு                             18.63

இவ்வாறு ரஹஸ்யங்களுக்கெல்லாம் ரஹஸ்யமான ஞானம் என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. இதை நன்றாக ஆலோசித்து உனக்கு எது இஷ்டமோ அதைச் செய்.

இங்கும் பகவான் குஹ்யாத் குஹ்யதரம் = ரஹஸ்யங்களுக்கெல்லாம் உயர்ந்த ரஹஸ்யம் என்று சொல்கிறார்.!

"உன் இஷ்டப்படியே செய் " என்று சொல்லிவிட்டாலும், பகவான் அத்துடன் நிற்கவில்லை. அர்ஜுனன் பகவானிடம் விஶ்வாஸம் உள்ளவன் . அதனால் மீண்டும் சொல்கிறார்.



सर्वगुह्यतमं भूयः श्रृणु मे परमं वचः।

इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम्।।18.64।।

ஸர்வ குஹ்ய தமம் பூய: ஶ்ருணு மே பரமம் வச :
இஷ்டோஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி  தே ஹிதம்               18.64


எல்லா ரஹஸ்யங்களிலும் உயர்ந்த ரஹஸ்யத்தை , என்  மேலான வார்த்தையை மீன்டும்  கேள்.  நீ எனக்கு அன்பனாக இருக்கிறாய். அதனால் உனக்கு நன்மை தரும் இந்த உரையைக் கூறுவேன்.

இது ஸர்வ குஹ்ய தமம் ! பரமம் குஹ்யம் என்று மீண்டும் 18.68ல் சொல்லுவார் .


मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।

मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे।।18.65।।


மன் மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம்தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே             18.65


உன் மனதை என்னிடமே நிலைக்கவை. என் பக்தனாகிவிடு.  என்னையே வழிபடு,  என்னையே  நமஸ்கரி.  அதானால் நீ என்னையே அடைவாய்.  நீ எனக்கு ப்ரியமானவன். சத்தியமாக பிரதிக்ஞை செய்கிறேன்.

सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज।

अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः।।18.66।।


ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:           18.66


எல்லா தர்மங்களையும் அறவே விட்டுவிட்டு, என் ஒருவனையே  ஶரணமாக அடைவாயாக.  நான் உன்னை பாபங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பேன்.  வருந்தாதே.


இதுவே பகவான் இறுதியில் கூறும் உயர்ந்த அறிவுரை. ஆனால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேணும்.





தர்மம் கர்மம் வாயிலாகச் செய்வது. தர்மத்தை விடவேண்டும் என்றால் கர்மத்தை விடவேண்டும்.  ஆனால் உடல் படைத்தவன் கர்மத்தை விட இயலாது. அதனால், இந்த ஶ்லோகத்தின் உண்மையான பொருள், தனக்கேற்பட்ட இயல்பான கர்மங்களை பகவான் ஆராதனையாக, அவருக்கு அர்ப்பணமாகச் செய்து, அதன் பலன்களையும் அவருக்கே அர்பணிக்க வேண்டும். ( ஶ்லோகங்கள் 46, 56 , 57 ).பகவானையே  ஓரே புகலாகக்  கொள்ளவேண்டும். 

இவ்வாறு கீதை என்னும் உயர்ந்த உபனிஷதமாகவும், யோக ஶாஸ்திரமாகவும் , ப்ரஹ்ம வித்தையாகவும்  அமைந்துள்ள பகவானது மொழிகள்  பக்தியோகத்தின் உயர்ந்த ரஹசியங்களை நமக்கு உணர்த்துகின்றன. கீதையின் ஹ்ருதயம் பக்தியே என்பது இதனால் விளங்கும். 

இவ்வாறு அன்று  அர்ஜுனனுக்கு கீதையைச் சொன்ன பகவான் இன்று நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

பார்த்தன் தேரில்  நல்வார்த்தை யாலவன்
ஆர்த்தி போக்கருள் மூர்த்தி காக்கவே.

- பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய மங்கல ஶ்லோகம்.



.NOTE:

1. Pictures of Krishna-Arjuna are taken from ISKCON sources. My pranams to them.
2. The Tamil meaning of the slokas here is based on the works of Gita Press, Gorakhpur ( commentary of Sri Jayadayal Goyandka ) and Anna Subrahmanya Iyer ( RK Math, Chennai. ) My pranams to them. [ The connecting and other comments are based on my study and understanding. I crave the indulgence of learned readers. ]

No comments:

Post a Comment